World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : உலக பொருளாதாரம்

Greenspan points to "significant uncertainties" in US economy

அமெரிக்க பொருளாதாரத்தின் "குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மைகளை" கிரின்ஸ்பான் சுட்டிக்காட்டுகிறார்

By Nick Beams
21 July 2005

Use this version to print | Send this link by email | Email the author

நாணய கொள்கை தொடர்பாக நாடாளுமன்றத்திற்கு தாக்கல் செய்யும் அவரது கடைசி அரையாண்டு அறிக்கை என்று கருதப்படக்கூடிய அறிக்கையில் மத்திய வங்கித் தலைவர் அலன் கிரின்ஸ்பான் அவரிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க பொருளாதார நிலவரம் பற்றிய உற்சாகமான மதிப்பீட்டை வெளியிட்டார். அடிப்படைக் கண்ணோட்டம் "தொடர்ந்து ஒரு பொருளாதார வளர்ச்சி பாதையிலும் மற்றும் பணவீக்க அழுத்தங்களை கட்டுப்படுத்துவதாகவும்" அமைந்திருப்பதாக அவர் கூறினார்.

அவரது பதவிக் காலத்தை நீடிப்பதற்கு சட்டம் அறிமுகப்படுத்தப்படாவிட்டால் அடுத்த ஜனவரியில் பதவியிலிருந்து ஓய்வு பெறவிருக்கின்ற கிரின்ஸ்பான், ஆனால் "கவனமான ஆய்வு செய்ய வேண்டிய குறிப்பிடத்தக்க நிச்சயமற்ற தன்மைகள் சில நிலவுவதாக சுட்டிக்காட்டினார்.''

2003ல் உச்ச மட்டத்தை அடைந்த உற்பத்தித் திறன் வளர்ச்சி மந்த நிலையை அடைந்து விட்டதாக தோன்றுகிறது. இதற்கான காரணமும் அது மந்தகதியில் எவ்வளவு நீடிக்கும் என்பதற்கான காலக்கெடுவும் "இன்னும் தெளிவாக இல்லை".

எரிசக்தி விலைகள் பொருளாதார கண்ணோட்டத்தில் ஒரு ''பெரிய நிச்சயமற்ற" நிலையாக அமைந்திருப்பதுடன், தனிப்பட்டவர்கள் செலவிடுவதை "கடுமையாக வெட்டுகின்ற" வகையில் அச்சுறுத்தும் மேலும் பெரிய விலை உயர்வு ஏற்படும்போது, அது பொருளாதார விரிவாக்கத்தின் வேகத்தை குறைக்கும்." நீண்டகால விநியோகத்திற்கான எண்ணெய் எரிவாயு விலைகள் கடந்த ஓராண்டிற்கு மேலாக அன்றாட விலைகளைவிட குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்ந்தே காணப்படுகின்றன." இதில் சந்தையில் பங்கெடுத்துக்கொள்பவர்கள், இப்படி உயர்ந்துகொண்டே செல்லும் எரிசக்தி விலைவாசிகளில், எதிர்வரும் பல ஆண்டுகளுக்கு குறிப்பிடத்தக்க நிவாரணம் கிடைப்பதற்கு சாத்தியம் இல்லை" என்று கருதுகின்றனர்.

மூன்றாவது பெரிய "நிச்சயமற்ற தன்மை'' நீண்டகால வட்டி விகிதங்கள் செயல்படுகின்ற விதமாகும். சென்ற பெப்ரவரியில் கிரின்ஸ்பான் தாக்கல் செய்திருந்த அறிக்கையில் ஒரு உண்மையை சுட்டிக்காட்டியிருந்தார். அது என்னவென்றால், அமெரிக்க மத்திய வங்கி சென்ற ஆண்டு நடுப்பகுதியிலிருந்து குறுகியகால வட்டிவிகிதங்களை இறுக்கத் தொடங்கியது. இது கரூவூலத்தின் கடன் பத்திர மற்றும் பெருநிறுவனங்களின் பத்திரங்களின் நீண்டகால வட்டி விகிதங்கள் எதிர்பார்த்த உயர்விற்கு மாறாக வீழ்ச்சியடைந்தன. இந்த நிகழ்ச்சிபோக்கு கடந்த 6 மாதங்களாக நீடிக்கிறது.

கருவூலம் வெளியிடுகின்ற கடன் பத்திரங்கள், தற்போது பெற்றுத்தருகின்ற வட்டி விகிதம் 2004 இலையுதிர்கால கடைசியில் நிலவியதைவிட சுமார் 50 புள்ளிகள் குறைவாக இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார், அதே நேரத்தில், "முதலீட்டு தரம் வாய்ந்த மற்றும் முதலீட்டு தரத்திற்கு குறைந்த பெருநிறுவன கடன் பத்திரங்கள் பெற்றுத்தந்த வட்டி விகிதங்கள் அதேகால கட்டத்தில் கருவூல பங்குப்பத்திரங்களுக்கு கிடைத்த வட்டிவிகிதங்களைவிட குறைவாகவே இருந்தன". அத்தகையதொரு நடைமுறை" நமது அண்மைகால அனுபவத்தில் இதற்கு முன்னர் கண்டிராத தெளிவானதொரு நிகழ்ச்சியாகும்." என குறிப்பிட்டார்.

இந்த கிரின்ஸ்பான் சென்ற பெப்ரவரியில் வர்ணித்த "புதிருக்கு" அவர் எந்த தீர்வையும் வழங்காவிட்டாலும், மிக முக்கியத்துவம் வாய்ந்த காரணிகளில் ஒன்றான பூகோள முதலீட்டு தேவை பொதுவாக வீழ்ச்சியடைந்து கொண்டு வருவதை குறிப்பிட்டிருக்கிறார்.

ஒட்டுமொத்த பொருளாதாரத்தை கணக்கிட்டு பார்க்கும்போது, அண்மைக்கால புள்ளி விவரங்கள் பெரிய பொருளாதாரங்களில் அண்மை காலத்தில் முதலீட்டிற்கான ஈர்ப்பு குறைந்து கொண்டு வருகிறது என்று அவர் கூறினார்.

இந்த "நோக்க முதலீட்டின் மிருதுவான தன்மை" பெரு நிறுவன செயல்பாட்டிலும் தெளிவாக தெரிகிறது. அமெரிக்காவில் முதலீட்டு செலவினங்கள், "2003ல் பெருநிறுவனங்கள் செலவிட்ட மூலதன செலவின் அளவை விட மிக கணிசமாக'' குறைந்து காணப்படுகிறது. அத்தகையதொரு இயல்நிகழ்ச்சி முதல் தடவையாக 1975ல் நிலவிய கடுமையான மந்தநிலைக்கு பின்னர் காணப்படுகிறது. இந்த அபிவிருத்தி மிகவும் ''வர்த்தக முன்னெச்சரிக்கையின்'' விளைவாகும். அது பங்குச் சந்தை விலை வீழ்ச்சியின் விளைவாகவும் மற்றும் "இந்த தசாப்தத்தின் தொடக்கத்தில் நடைபெற்ற பெருநிறுவன மோசடிகளின் விளைவாகவும்'' இருக்கலாம்.

ஆனால் முதலீடுகளில் ஏற்படுகின்ற வீழ்ச்சி, உற்பத்தி போன்ற பூகோள பொருளாதாரத்தின் முக்கிய பிரிவுகளில் நீண்டகால அடிப்படையில் ஏற்படுகின்ற வீழ்ச்சியை மட்டுமே எதிரொலிப்பது என்று கூறுவது கதையின் சரிபாதிதான். மத்திய வங்கியின் கொள்கைகள் மற்றொரு குறிப்பிடத்தக்க காரணியாகும். அவர் அமெரிக்க மத்திய வங்கி நிர்வாகக் குழு தலைவராக பொறுப்பேற்றதற்கு சற்று பின்னர், 1987 அக்டோபரில் பங்குச் சந்தைகளில் படுவீழ்ச்சி ஏற்பட்டது முதல் கிரின்ஸ்பான் உருவாகிய பிரச்சனைகளை சமாளிப்பதற்கு அமெரிக்காவிற்கு உள்ளேயும் உலக பொருளாதாரத்திலும் பணப்புழக்கத்தை அதிகரிக்கச் செய்ய முயன்றார். இந்தக் கொள்கை குறுகிய கால பிரச்சனைகளை தீர்த்து வைக்கிறது, ஆனால் நீண்டகால அடிப்படையில் பிரச்சனையை அதிகரிக்கிறது.

எடுத்துக்காட்டாக, 1990 களின் நடுவில், அமெரிக்க பங்குச் சந்தையில் எழுச்சி ஏற்பட்டது. பங்குச் சந்தை வீழ்ச்சியினால் ஏற்படுகின்ற விளைவுகளை பற்றி பயந்து இதை நிலைநாட்டுவதற்காக அமெரிக்க மத்திய வங்கி வட்டிவிகிதங்களை குறைத்தது.

அதற்கு முன்னர் அவர் ஒரு ''நீர்குமிழ்'' ஏற்பட்டிருப்பதை ஒப்புக்கொண்டார், அவை "அறிவுக்கு புறம்பான ஆர்வபெருக்கு'' என்று குறிப்பிட்டார், 1966 கடைசியில், கிரின்ஸ்பான் பங்குச் சந்தையின் முதன்மை ஊக்குவிப்பாளராக மாறினார். வரலாற்றுரீதியாக முன்கண்டிராத அளவிற்கு உயர்ந்து---- பங்குச் சந்தையின் மதிப்பு 2000 மார்ச்சில் உள்நாட்டு மொத்த உற்பத்தி 180 சதவீதத்திற்கு சமமாக இருந்தது. இது 1982ல் விலை எழுச்சி தொடங்கியபோது 33% ஆகவே இருந்தது. அந்த ஆண்டு கனணி தொழில்நுட்பத்தால் ஊக்குவிக்கப்பட்ட உற்பத்தித் திறன் உயர்வினால், பங்குகள் விலைகள் உயர்ந்தது.

இறுதியாக நீர்குமிழ் வெடித்தவுடன், கிரின்ஸ்பானின் பதில் என்னவென்றால் ரிசர்வ் வங்கியின் அடிப்படை வட்டி விகிதத்தை 1 சதவீதம் குறைத்தார்கள், 46 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அது குறைந்த அளவிற்கான வட்டி விகிதமாகும், அமெரிக்க பொருளாதார ஸ்திரதன்மையை ஒழுங்குபடுத்துவதற்காக இதைச் செய்தார்.

ஆனால், இதன் விளைவு என்னவென்றால், இந்த நடவடிக்கைகள் ஒரு பண அலையை உருவாக்கி உலக முழுவதும் பல்வேறு நிதிச்சந்தைகளில் இலாபத்தை பெறுவதற்கான வாய்ப்புகளை தேடி பாய்ந்தது. ஒரு சந்தை வீழ்ச்சியடைந்ததும் அல்லது இலாபம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் தீர்ந்துவிட்டதும், அந்த அலை வேறு பகுதிகளுக்கு தாவிற்று. இதனால் இப்போது ஏற்பட்டுள்ள நிலவரம் என்னவென்றால், ஆபத்துக்களை உள்ளடக்கிய கடன் ஏறத்தாழ ஆபத்துக்கள் இல்லாத முதலீடுகள் என்று கருதப்படும், கருவூல கடன் பத்திரங்கள் மற்றும் நீண்டகால அல்லது ஆபத்துக்களை உள்ளடக்கிய முதலீடுகள் என்று கருதப்படும் பெருநிறுவனங்களின் கடன்பத்திரங்கள் ஆகியவற்றிற்கு இடையிலான வித்தியாசம் சுருக்கப்பட்டுவிட்டது.

இந்த நிகழ்ச்சிபோக்கின் மிகக் குறிப்பிடத்தக்க விளைவுகளில் ஒன்று அமெரிக்காவின் வீட்டு சந்தையில் நிலவுகின்ற நீர்குமிழாகும். நீண்டகால வட்டிவிகிதங்கள் வீழ்ச்சியடைந்துவிட்டன, அடமான வட்டி விகிதங்கள் குறைவாக உள்ளன, இதன் விளைவாக இதற்கு முன்னர் இல்லாத அளவிற்கு வீடுகளின் விலைகள் உயர்ந்துவிட்டன. கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்கா முழுவதிலும் சராசரி வீட்டு விலைகள் 50 சதவீதம் அதிகரித்துவிட்டன, சில பிராந்தியங்களில் விலைகள் இரட்டிப்பாகியுள்ளன. 1890 முதல் 2004 வரை ஆண்டிற்கு சராசரியாக 0.4 சதவீதமே உண்மையான உயர்வு இருந்தது இத்துடன் ஒப்புநோக்கத்தக்கது.

1990களில் ஏற்பட்ட பங்குச் சந்தை உயர்வு, ''நீர்குமிழ் தானா'' என்று கூறிவிட முடியாது என்று அவர் சொல்லிவந்ததைப்போல், கிரின்ஸ்பான் "அடிப்படையாக அமைந்துள்ள காரணிகளோடு ஒப்புநோக்கும்போது வீட்டுவிலைகள், சந்தைக்கு மேலாக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றனவா என்பதை அறிந்து கொள்வது சங்கடமானது" என்று வற்புறுத்துகின்றார். என்றாலும், அண்மையில் பரபரப்பாக வீடுகள் கட்டப்பட்டு வருவதும், வீடுகள் விற்பனையும், குறிப்பாக வீடுகளின் விலை கிடுகிடுவென்று உயர்ந்து கொண்டு போவதும் கரூவூலப் பத்திரங்கள் மற்றும் அடமானங்களுக்கு நிலவுகின்ற குறைந்த வட்டி விகிதங்கள் ஒரு பிரதான காரணி என்பதை அவர் ஒப்புக்கொண்டார்.

இந்த "தெளிவான நுரை தள்ளும்" போக்கு வீட்டு சந்தையில் நிலவுவது அடமான சந்தைகளில் அபிவிருத்தியோடு ஒன்றுடன்ஒன்று சம்மந்தப்பட்டதாகும். வட்டிகளை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட கடன்களின் அளவு அதிகரித்ததுடன், ''மாறக்கூடிய அடமான வீதங்களோடு கூடிய மிகவும் வியப்பூட்டும் வடிவக்கடன்கள் வழங்கப்பட்டன.'' இவற்றை சாதாரணமாக தங்களால் வாங்கமுடியாது ''சில குடும்பங்கள்'' புதிய வீடுகளை வாங்கின. இதில் ஆபத்து என்னவென்றால், இத்தகைய வீடுகளை வாங்குபவர்கள் ''பாரதூரமான சம்பவங்களால்'' எளிதில் பாதிக்கப்படுவார்கள். சூழ்நிலைகள் மாறுமென்றால், வீடுகளை வாங்கிய சிலர் வட்டியையே செலுத்த முடியாது.

வீட்டுச் சந்தையில் ஒரு வீழ்ச்சி ஏற்படுமானால், அது உடனடியாக ஏற்கனவே நிதி நெருக்கடியில் உள்ள வீடுகளை வாங்குவோரை மட்டுமே பாதிக்காது, ஒட்டுமொத்த அமெரிக்க பொருளாதாரத்தையே பாதிக்கும். கடந்த ஐந்து ஆண்டுகளில், நுகர்வோர் செலவினங்கள் அதிக அளவிற்கு தளராது இருந்ததற்கு காரணம் வீட்டுக்கடன் மீள்-முதலீடுகளிலிருந்து கிடைத்த பணத்தைக் கொண்டுதான். ஒரு பொருளாதார வீழ்ச்சி அல்லது மந்தநிலையை தொடர்ந்து, நுகர்வோர் செலவினங்கள் பொதுவாக தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருகுவதாலும் ஊதியங்கள் உயர்வதாலும் நிதியுதவியளிக்கப்படுகின்றது. 2000-2001 மந்த நிலையைத் தொடர்ந்து அவ்வாறு இருக்கவில்லை.

இரண்டாவது உலகப்போருக்கு பிந்திய காலத்தில் அமெரிக்க தொழிலாளர் சந்தை தொடர்பான புள்ளிவிவரங்களை பார்த்தால், தொழிலாளர் எண்ணிக்கை உயர்வது மிகக்குறைந்த விகிதமாகவே உள்ளது. 2004 ஜூனில் நிலவியதைவிட இந்த ஜூனில் 1.6 சதவீத அளவிற்குதான் கூடுதல் வேலை வாய்ப்புக்கள் கிடைத்திருக்கின்றன. 2001 நவம்பரிலிருந்து 2004 ஜூன் வரை பொருளாதார மந்தநிலை முடிவிற்கு வந்த காலத்திலிருந்து ஆண்டு சராசரியாக 0.5 சதவீத வேலை வாய்ப்பு உயர்வோடு ஒப்பிடும்போது, இது நிச்சயமாக உயர்வுதான். ஆனால், அதே காலகட்டத்தை இரண்டாவது உலகப்போருக்கு பிந்திய பொருளாதார வளர்ச்சி காலத்தோடு ஒப்பிடும்போது, கடந்த 12 மாதங்களில் வேலை வாய்ப்பு பெருக்க விகிதம் மிகக்குறைவாகவே உள்ளது. இப்போது பொருளாதாரம் முன்னேறிக்கொண்டிருப்பது போன்ற சூழ்நிலைகளில் 43 மாதங்களுக்கு மேல் --- நடைபெறுகின்ற பொருளாதார மறுமலர்ச்சி காலத்தில்----- சராசரியாக வேலை வாய்ப்பு புதிதாக உருவாவது 3.4 சதவீதமாகும். இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இப்போது வேலைவாய்ப்பு பெருகும் இந்த 1.6 சதவீத விகிதம், முந்திய சராசரியைவிட பாதிக்கும் குறைந்ததாகும்.

நாடாளுமன்றத்தில் உரையாற்றிய கிரின்ஸ்பான் இந்த சவால்களுக்கு அப்பாலும், அமெரிக்க பொருளாதாரம், "உறுதியாக காலூன்றி நிற்கிறது" என்று குறிப்பிட்டார். ஆனால் அவரது நம்பிக்கைதரும் கண்ணோட்டத்திற்கு அப்பாலும், எல்லா புள்ளி விவரங்களும் தொடர்ந்தும் சமநிலையற்றதையே கோடிட்டுக் காட்டுகின்றன.