World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US Congress votes to make Patriot Act permanent

தேசபக்த சட்டத்தை நிரந்தரமாக்குவதற்கு அமெரிக்க நாடாளுமன்றம் வாக்களித்தது

By Bill Van Auken
1 August 2005

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க தேசபக்த சட்டம் என்றழைக்கப்படும் ஒடுக்குமுறை சட்டத்தின் பெரும்பகுதியை நிரந்தர சட்டமாக ஆக்குவதற்கு சென்ற வெள்ளியன்று அமெரிக்க செனட் சபை "ஒருமனதாக சம்மதம்'' தெரிவித்தது.

மக்கள் பிரதிநிதிகள் சபையான கீழ்சபையில் இதேபோன்றதொரு வாக்குப்பதிவு நடைபெற்ற ஒரு வாரத்திற்குள் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டிருப்பது நிரந்தரமாக தேசபக்த சட்டம் இடம்பெறுவதற்கு வகை செய்யும், ஆனால் முக்கியமாக அமெரிக்க அரசாங்கத்திற்கு அது வழங்கும் போலீஸ் - அரசு அதிகாரங்கள் கணிசமான அளவிற்கு விரிவடையும்.

இரண்டு மசோதாக்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை கீழ்சபை-செனட் மாநாட்டு குழு விசாரணைகளில் நீக்கப்படும், அவை தவிர்க்க முடியாத அளவிற்கு "ஒரு சமரசத்தில்" முடியும் அது அமெரிக்க மற்றும் வெளிநாட்டு குடிமக்களை கைது செய்யவும், உளவுபார்க்கவும் எளிதாக வழி வகுக்கும்.

புஷ் நிர்வவாகம் தனது ஒடுக்குமுறை அதிகாரங்களை அதிகரித்துக்கொள்வதற்கு விரும்புகின்ற இதர சட்ட ஷரத்துக்கள் எதிர்வரும் மாதங்களில் தனித்தனியாக ஐயத்திற்கிடமின்றி நிறைவேற்றப்படும்.

எடுத்துக்காட்டாக, செனட் புலனாய்வு குழு ஜூன் மாதம் ஒரு வேறுபட்ட சட்ட வாசகத்தை ஒப்புக்கொண்டது. அது பயங்கரவாதி என்று சந்தேகிக்கப்பட்டு குற்றம் சாட்டப்படுபவர்களின் வர்த்தக மற்றும் தனிப்பட்ட பதிவேடுகளை கோரிப் பெறுவதற்கு மத்திய புலனாய்வுத் துறை ''நிர்வாக ஆணைகளை'' அனுப்புவதற்கு அதிகாரம் தந்திருக்கும்.

இது ஜூரர்களுக்கோ அல்லது நீதிபதிக்கோ சாட்சியத்தை தாக்கல் செய்வதற்கு எந்தவிதமான சட்டபூர்வமான கட்டளையை பெறுவதற்கான எந்த நிபந்தனையையும் தவிர்ப்பதற்கு FBI இற்கு அனுமதி வழங்கும். இந்த மசோதா புலனாய்வு குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, அந்த புலன் விசாரணையில் இருப்பவர்களது மின்னஞ்சல்களை மறித்து படிப்பதற்கு ஒருதலைப்பட்சமான அதிகாரத்தை வழங்கியிருக்கும்.

செனட் குடியரசுக்கட்சி தலைவர்கள் கோடிட்டுக்காட்டியது என்னவென்றால், செனட் நீதி நிர்வாகக் குழு எழுதியுள்ள கருத்து வேறுபாடுகள் குறைந்த சட்ட வாசகத்தை ஏகோபித்த வாக்குப்பதிவு மூலம் நாடாளுமன்றம் கோடைகால விடுமுறைக்கு ஒத்திவைக்கப்படுவதற்கு முன் நிறைவேற்ற வேண்டும் என்ற விருப்பத்தினால் எழுந்தது. அதன்மூலம் புஷ் நிர்வாகத்திற்கு ஒரு வெற்றியின் அடையாளம் வழங்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில், அவர்கள் தெளிவுபடுத்தியிருப்பது என்னவென்றால் புலனாய்வு குழுவிற்கு தலைமை வகிக்கும் கன்சாஸ் குடியரசுக் கட்சிக்காரர் ஆன செனட்டர் பேட் ரொபேர்ட்ஸ் அந்த சட்டத்தை FBI இற்கு அழைப்பு ஆணை அனுப்புகின்ற அதிகாரங்களை விரிவாக்குவதற்கு வகை செய்கின்ற சட்டப்பிரிவுகளை நாடாளுமன்றம் மீண்டும் தனது விவாதங்களை தொடங்குகின்ற போது வலியுறுத்தி நிறைவேற்றக் கருதியிருப்பதாகவும் மற்றும் தலைமையின் ஆதரவை பெறும் என்றும் குறிப்பிட்டார்.

முழு செனட் சபை ஒப்புக்கொண்ட நடவடிக்கையில், தேசபக்த சட்டத்தின் 16 ஷரத்துக்களில் 14 நிரந்தரமாக ஆக்கப்பட்டிருக்கிறது. மீதமிருக்கும் இரண்டு நடவடிக்கைகள் தேவையானபோது ஒட்டுக்கேட்பதை அனுமதிப்பது, மற்றும் மற்றொன்று அரசாங்கம் நூல் நிலையங்கள், புத்தக கடைகள் மற்றும் வர்த்தக அமைப்புகளிலிருந்து தனிப்பட்ட புள்ளிவிவரங்களை கோரி பெறுவதற்கு வகை செய்வது. இவை மேலும் நான்கு ஆண்டுகளுக்கு நீடிக்கும், மேலும் நீடிப்பதற்கு மற்றொரு வாக்களிப்பு தேவைப்படும்.

கீழ்ச்சபையில் ஜூலை 21ல் 257-க்கு 171 என்ற வாக்குப்பதிவில் ஒப்புக்கொள்ளப்பட்ட சட்டம்--- அதே 14 ஷரத்துக்களை நிரந்தரமாக ஆக்கிற்று, என்றாலும், இந்த கடைசி இரண்டு நடவடிக்கைகளை நான்கு ஆண்டுகளுக்கு பதிலாக பத்து ஆண்டுகள் வரை அது நீடித்தது.

கீழ்சபையில், குடியரசுக்கட்சி தலைமை ஒரு அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டு நூலக பதிவேடுகளை பறிமுதல் செய்வதில் அரசாங்கத்திற்கு கட்டுத்திட்டமற்ற அதிகாரங்கள் வழங்குவதை மறுக்கும் மற்றும் அதிக கருத்து வேறுபாடுகளுக்கு இடம் தரும் கண்காணிப்பு தொடர்பான ஷரத்துக்களை பத்து ஆண்டுகளுக்கு பதிலாக நான்கு ஆண்டுகளில் மறுபரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வாக்குப்பதிவிற்கு வகை செய்ய வேண்டும் என்ற ஜனநாயகக் கட்சிக்காரர்கள் தாக்கல் செய்த சட்டத்திருத்தங்களை விவாதிப்பதையும் ஆய்விற்கு எடுத்துக்கொள்வதையும் தடுத்தது.

சென்ற மாதம் கீழ்சபையில் நடைபெற்ற "விவாதத்தின்" குரல் தெளிவுபடுத்தியிருந்தது என்னவென்றால், கீழ்சபையின் நீதித்துறை குழுவின் குடியரசுக்கட்சி தலைவரான சபை உறுப்பினர் F. James Sensenbrenner தனது அதிகாரத்தை பயன்படுத்தி அந்த விவாதத்தை முடித்து வைத்ததுடன், ஜனநாயகக் கட்சிக்காரர்கள் அந்தச் சட்டம் குறித்து சாட்சியத்தை தந்து கொண்டிருக்கும்போதே இடையில் ஒலிபெருக்கிகளை நிறுத்தினர்.

அத்தியாவசிய அரசியல் சட்ட உரிமைகள் மீது ஒட்டுமொத்தமாக தாக்குதல்கள் நடத்துவதற்கு வளர்ந்துவரும் எதிர்ப்பை தணிக்கின்ற வகையில் தேசபக்த சட்டத்தில் பெரும்பாலும் மேற்பூச்சு மாற்றங்கள் சட்டத்தின் செனட் வாசகத்தில் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இந்த கபட நாடகம் விரும்பிய பலனை தந்திருப்பதாக தோன்றுகிறது. குறைந்தபட்சம் சில வட்டாரங்களில் அந்த தாக்கம் ஏற்பட்டிருக்கிறது. அமெரிக்க சிவில் உரிமைகள் யூனியன் செனட் மசோதாவை "சரியான வழியில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை, ஆனால் சிவில் உரிமைகளுக்கும் சிவில் சுதந்திரங்களுக்கும் எல்லா அமெரிக்கர்களுக்கும் முழுமையான பாதுகாப்பு அளிக்க தவறிவிட்டது" என்று வர்ணித்துள்ளது.

"பாதுகாப்புக்கள்" என்றழைக்கப்படுபவை மசோதாவில் சேர்க்கப்பட்டிருப்பது குறைந்தபட்ச பாதுகாப்பிற்கும் குறைவானது, ஓட்டைகள் நிறைந்தது. நடைமுறையில் குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபட்டார்கள் என்று எந்தவிதமான சான்றும் இல்லாத மக்கள் மீது கூட எந்தவிதமான கட்டுத்திட்டமும் இல்லாமல் அமெரிக்க அரசாங்கம் கண்காணிக்க வகை செய்கிறது.

ஆக அமெரிக்க சிவில் உரிமைகள் யூனியனே ஒப்புக்கொண்டிருப்பதைப்போல், "அமெரிக்கர்களின் தனிப்பட்ட மருத்துவ, நிதிநிலைமை மற்றும் நூலக பதிவேடுகளை 215 வது பிரிவுப்படி சோதனை செய்வதற்கான இரகசிய கட்டளைகள் அப்படியே இருக்கும். ஆனால் சில தனிப்பட்டவர்களின் மீதான சில சந்தேகங்களுக்கு வழமையான கோரிக்கை வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது என்றாலும், ஒரு சந்தேகத்திற்குரிய நபரின் ஒரு மிகவும் தளர்வான தொடர்பு கூட அப்பாவி மனிதர்களின் ''பதிவேடுகளை'' அரசாங்கம் பெறுவதற்கு அனுமதிக்கும்."

அதேபோன்று அது குறிப்பிடுவது என்னவென்றால், "213வது பிரிவின் கீழ் "கள்ளத்தனமாகப்பார்ப்பது மற்றும் துருவி ஆராய்வது" ஆகிய அதிகாரங்கள் அரசாங்கத்திற்கு வழங்கப்படுவதற்கான மசோதாவின் அறிவிப்பு காலக்கெடு (ஆரம்பத்தில் ஏழு நாட்கள் என்றும் புதுப்பிக்கப்பட்டால் அது 90 நாட்கள் என்று விதிக்கப்பட்டிருப்பது) வரவேற்கத்தக்கது, ஒரு இடையூறு தருகின்ற ஓட்டை அந்த நிபந்தனைகளை ஒருபுறமாய் தள்ளிவைப்பதற்கு அரசாங்கத்திற்கு அதிகாரமளிக்கின்றது, ஏனென்றால் அந்த வழக்கின் உண்மைகள் ஒரு நீண்ட காலத்திற்கு நியாயப்படுத்தப்படுமானால் காலக்கெடு வற்புறுத்தாமல் விடப்பட முடியும்.

மேலும் புதிய மசோதா FBI சோதனை கட்டளைகளை ஆட்சேபிக்கும் உரிமையை அறிமுகப்படுத்துகிறது--- அதற்கு சட்டம் நீதிமன்ற ஆய்வு இல்லாமல் அனுமதி வழங்குகிறது---- கடன் தொடர்பான அறிக்கைகளை பெறவும், வலைத் தள சேவைகளை வழங்குவோரிடமிருந்து வலைத் தள தகவல் புள்ளி விவரங்களை பெறவும்", நிதி நிலைச்சான்றுகள்" என்றழைக்கப்படுவதை பெறவும் வகை செய்கிறது. என்றாலும், அமெரிக்க சிவில் உரிமைகள் யூனியன் ஒப்புக்கொண்டிருப்பதைப் போல், இந்த சட்டம் "நிரூபிப்பதற்கு சிரமமாக காணப்படும் தன்னிச்சையான நிரந்தர இரகசிய கட்டளையை தன்னகத்தே கொண்டிருக்கிறது". இதில் ஒரு தெளிவான கேள்வி என்னவென்றால், சட்டவிரோத, அரசியல் சட்டத்திற்கு புறம்பான தேடுதல் வேட்டைகள் மற்றும் கண்காணிப்பை எப்படி ஆட்சேபிக்க முடியும், ஏனென்றால் இந்த நடவடிக்கைகளே ஒரு அரசாங்க இரகசியமாக நிலைநாட்டப்பட்டு வருகிறது.

அத்தகைய வெற்று நடவடிக்கைகளை "சரியான வழியில் எடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கை'' என்றழைப்பது அமெரிக்க வரலாற்றிலேயே இதற்கு முன்னர் எப்போதுமே நிறைவேற்றப்பட்டிராத மிக கடுமையான ஒடுக்குமுறை மசோதா ஒரு நிரந்தர சட்டமாக ஆக்கப்பட்டிருப்பது, சிவில் உரிமைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தீவிரப்படுத்துவதை மூடி மறைப்பதற்கு பயன்படுகிறது.

செனட்டில், நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஜனநாயகக் கட்சி தலைமை எதிர்ப்பு எதையும் தெரிவிக்கவில்லை, இது ஆளும் நிர்வாகத்திற்கும் வெகுஜன அமெரிக்க மக்களின் உணர்வுகளுக்கும் இடையில் நிலவுகின்ற மிகப்பெரிய இடைவெளியை மேலும் கோடிட்டுக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

2001 செப்டம்பரில் நாடாளுமன்றத்தில், மூல தேசபக்த சட்டம் மிக வேகமாக கடுமையான விவாதமோ----நாடாளுமன்ற உறுப்பினர்கள் பின்னர் ஒப்புக்கொண்டதைப் போல்---- 343 பக்க ஆவணம் வாசிக்கப்படாமலே நிலைவேற்றப்பட்டது, அந்த சட்டத்திற்கு பரவலான பொதுமக்களது எதிர்ப்பு நிலவியது.

ஏறத்தாழ 400 நகர அரசாங்கங்கள் --மிகப்பெரிய நகரங்கள் உட்பட-- ஏழு மாநில சட்ட மன்றங்கள் தேசபக்த சட்டம் அடிப்படை உரிமைகளை துச்சமாக மதித்து தூக்கி எறிவதாக கண்டித்து தீர்மானங்களை இயற்றின. அப்படியிருந்தும் ஒரு ஜனநாயகக் கட்சி செனட்டர் கூட எதிர்த்து வாக்களிக்காமல் அந்த மசோதா நிரந்தர சட்டமாக்கப்பட்டிருக்கிறது. எதிர்ப்பவர்கள் மற்றும் ஆதரிப்பவர்கள் பெயர்களை பதிவு செய்யாமல் ஒரு விவாதம் கூட இல்லாமல் ஜனநாயகக் கட்சி தலைமை அந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கு "ஒருமனதான சம்மத" முறைக்கு உடன்பட்டிருக்கிறது.

''அனைத்து சமரசங்களையும் போல், அதில் அந்த செனட்டில் இடம்பெற்றிருக்கிற அனைவரும் ஆதரிக்காத ஷரத்துக்களும் இடம்பெற்றிருக்கின்றன. என்றாலும், ஜனநாயக மற்றும் நீதி நிர்வாக குழுவை சார்ந்த குடியரசுக்கட்சி உறுப்பினர்கள் ஒற்றுமை உணர்வோடும் சமரச நோக்கத்தோடும் இந்த மசோதாவிற்கு உடன்பட்டிருக்கின்றனர். மற்றும் அதை நான் வலுவாக ஆதரிக்கிறேன்" என்று Nevada ஜனநாயகக் கட்சி செனட் சபை சிறுபான்மை தலைவர் Hary Reid கூறினார்.

குறிப்பிடத்தக்கது என்னவென்றால், தேசபக்த சட்டத்தை புதுப்பிப்பதற்கான செனட்டில் ஒருமனதாக வாக்குப்பதிவு நடந்தபோது அதன் ஒரு கணிசமான பிரிவு அரசியலமைப்பு நடவடிக்கைக்கு புறம்பாக இருப்பதாக கலிஃபோர்னியாவில் ஒரு அமெரிக்க மத்திய நீதிபதியின் தீர்ப்பு வந்தது. அமைதியான வன்முறைக்கு இடமில்லாத அரசியல் நடவடிக்கையை ஒடுக்குவதற்கும், கிரிமினல் குற்றமாக ஆக்குவதற்கும் அந்த சட்டத்தை எந்த வழியில் பயன்படுத்த முடியும் என்பதில் அந்த தீர்ப்பு கூடிய கவனம் செலுத்தியது.

அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி Audrey B. Collins, லொஸ் ஏஞ்சல்ஸ் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசுத்துறை "பயங்கரவாத அமைப்புக்கள்" என்ற பட்டியலில் சேர்க்க முடிவு செய்யும் எந்த குழுவிற்கும் "நிபுணத்துவ ஆலோசனை அல்லது உதவியை வழங்குகின்ற'' எவருக்கும் தடைவிதிக்கும் சட்டத்தின் ஒரு பிரிவை செல்லாது என்று தள்ளுபடி செய்தார்.

அந்த சட்டம் மிகத் தெளிவில்லாததாக இருப்பதால் அரசியல் சட்டப்படி பேச்சுரிமையின் கீழ் தெளிவாக சம்மந்தப்பட்டிருக்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பவர்களைகூட எதிர்காலத்தில் சிறையில் அடைப்பதற்கு சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டிருப்பதாக நீதிபதி Collins குறிப்பிட்டார். உண்மையான அல்லது திட்டமிட்ட வன்முறை நடவடிக்கை தொடர்பான சாட்சியங்களுக்கு மாறாக அமெரிக்க அதிகாரிகள் இந்த மற்றும் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவி வழங்குவதாக குறிப்பிடும் வழிவகைகளையும் நான்கு வருடத்திற்கு மேலாக பயங்கரவாத வழக்கு என்று அழைக்கப்படுபவற்றிற்கு பயன்படுத்துகின்றனர்.

"அமெரிக்க தேசபக்த சட்டம் நிபுணத்துவ ஆலோசனை மற்றும் உதவியை தடுத்திருப்பதற்கு எந்த வகையான ஆலோசனை மற்றும் உதவி என்ற கட்டுப்பாடு எதையும் விதிக்கவில்லை மற்றும் அதற்கு மாறாக அனைத்து நிபுணத்துவ ஆலோசனை மற்றும் உதவிக்கும் அவற்றின் தன்மையை கருதிப்பார்க்காமல் தடை விதித்திருக்கிறது" என்று Collins தமது தீர்ப்பில் எழுதினார்.

இதன் விளைவு என்னவென்றால், இந்த சட்டம் "அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் முதலாவது திருத்தம் பாதுகாப்பளித்துள்ள பேச்சுரிமை மற்றும் சங்கம் சேரும் உரிமையை" தண்டிக்கிற வகையில் பயன்படுத்த முடியும் என்று மேலும் அவர் கூறியுள்ளார். தேசபக்த சட்டத்தை ஆட்சேபிக்கும் வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள மனித நேய உதவி அமைப்புக்களுக்கு எதிராக சட்ட ஷரத்துக்களை அரசாங்கம் பயன்படுத்துவதற்கு அந்தத் தீர்ப்பு இடைக்கால தடை விதித்திருந்தாலும், அது நாடு முழுவதும் பயன்படுத்தப்படுவதற்கு அந்தத் தீர்ப்பு தடைவிதிக்கவில்லை. இதற்கிடையில், நீதித்துறை அந்தத் தீர்ப்பை ஆராய்ந்து கொண்டிருப்பதாக தெரிவித்தது மற்றும் மேல்முறையீடு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

"இந்தச் சட்டம் எவ்வளவு கடுமையானது என்றால், எங்களது கட்சிக்காரர்கள் இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவி தருவதை ஒரு குற்றமாக ஆக்குகிறது. மேலும் துருக்கியிலுள்ள குர்திஸ் மக்களுக்கு மனித உரிமைகள் அடிப்படையில் உதவி தருவதையும் குற்றச் செயலாக ஆக்குகிறது" என்று அரசியலமைப்பு உரிமைகளுக்கான அமைப்பிற்காக (Center for Constitutional Rights) வழக்கை நடத்திய அட்டர்னி David Cole குறிப்பிட்டார். அரசாங்கத்தின் பரவலான தெளிவில்லாத பயங்கரவாதம் பற்றிய சட்ட விளக்கம் சுதந்திரமான பேச்சுரிமை மீது ஒரு உறையவைக்கும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது" என்று அரசியலமைப்பு உரிமைகளுக்கான அமைப்பு கூறியது.

இந்த வழக்கில் சம்மந்தப்பட்டுள்ள குழுக்களில் மனித உரிமைகள் திட்டமும் (Human Rights Project) அடங்கியிருக்கிறது. அது துருக்கியிலுள்ள குர்திஸ்தான் தொழிலாளர் கட்சிக்கு (PKK) மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கான பயிற்சியை தருவதுடன், தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் இலங்கையில் சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை திரட்டுவதற்கு முயன்றுவருகின்ற தமிழ்- அமெரிக்கர்கள் அமைப்பையும் உள்ளடக்கியதாகும். PKK யும் LTTE யும் அரசுத்துறையின் "பயங்கரவாத அமைப்பு'' பட்டியலில் இடம்பெற்றிருப்பதுடன் வெகுஜன அமைப்புக்களான பாலஸ்தீன ஹமாஸ் (Hamas) மற்றும் லெபனான் ஹெஸ்பொல்லா (Hezbollah) ஆகியவையும் இடம்பெற்றிருக்கின்றன.

Top of page