World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Amid "civil war" warnings, Rumsfeld flies to Iraq

"உள்நாட்டுப்போர்" எச்சரிக்கைகளுக்கு மத்தியிலே ரம்ஸ்பெல்ட் ஈராக்கிற்கு பறக்கிறார்

By Bill Van Auken
30 July 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கில் மோதல்களுக்கு தீர்வுகாண வழி கண்டுபிடிக்க முடியாத நிலையிலும் அங்கு அமெரிக்க ஆதரவு ஆட்சி ஸ்திரமற்றதாக இருப்பதாலும் வாஷிங்டனில் வளர்ந்து கொண்டிருக்கின்ற கவலைகளுக்கு மத்தியில், பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட் புதன்கிழமையன்று ஈராக்கிற்கு அவசர விமானப் பயணம் ஒன்றை மேற்கொண்டார்.

இத்தகைய அறிவிக்கப்படாத உயர் பாதுகாப்பு பயணங்கள் ஈராக்கிற்கு மேற்கொள்ளப்படுவது ஏறத்தாழ வழக்கமான நடவடிக்கையாக அமைந்துவிட்டது. சென்ற மே மாதத்தில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலிசா ரைஸ் ஒரு பயணத்தை மேற்கொண்டார் --அந்த நாட்டிற்குள் ஒரு போர் தலைகவசமும், துப்பாக்கி துளைக்காத உள்கவசமும் அணிந்து நுழைந்தார். இது பிரதமர் இப்ராஹீம் ஜாப்பரி தலைமையிலான இடைக்கால அரசாங்கம் ஒரு நிரந்தர ஈராக் ஆட்சியை உருவாக்கும் நடைமுறையில் சுன்னி முஸ்லீம் செல்வந்தத்தட்டு சக்திகளை கொண்டுவர வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவாகும்.

இதைப்போன்றதோர் பணிக்காக ஒரு மாதத்திற்கு முன்னர்கூட ரம்ஸ்பெல்ட் அந்த நாட்டிற்கு வந்திருக்கிறார்----ஜாபரியும், ஷியாக்கள் மேலாதிக்கம் செலுத்தும் ஆட்சியும் பென்டகன் பயிற்சி கொடுத்து பணியில் அமர்த்துவதற்கு முயன்று கொண்டுள்ள முன்னாள் பாத்திஸ்ட் அதிகாரிகளை ஈராக் படைகளிலிருந்து களையெடுக்க வேண்டாம் என்பதை ஏற்கச்செய்யும் முயற்சியாகும்.

போர் ஆரம்பித்த பின்னர் அவரது பத்தாவதும் இந்த ஆண்டு மூன்றாவதுமான அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சரின் கடைசி பாக்தாத் விஜயமும் அதே போன்ற வகையை சார்ந்தது. ஈராக்கிற்கு ஒரு புதிய அரசியலமைப்பை நகலை உருவாக்கிக் கொண்டுள்ள குழு தனது ''பணியைத் தொடர்ந்து செய்ய வேண்டும்'' என்றும் மற்றும் ஆகஸ்ட் 15 காலக்கெடுவிற்கு மேலும் ஆறு மாதம் நீடிக்க வேண்டுமென்று கோருவதற்கு எதிராக எச்சரிக்கை செய்வதற்கும் அவர் வந்தார். அது, இந்த ஆண்டு இறுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள தேர்தல் அட்டவணையை தள்ளிப்போட்டுவிடும். அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்படுமானால், அக்டோபரில் பொதுவாக்கெடுப்பு நடத்தவும், டிசம்பரில் புதிய அரசாங்கத்தை தேர்ந்தெடுக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.

இந்த செயற்கையாக திணிக்கப்பட்ட காலக்கெடுக்கள் வாஷிங்டனுக்கு கிடைத்திருக்கின்ற வெகுசில வெற்றி தருகின்ற நடவடிக்கைகளில் ஒன்றாகும். ஈராக்கில் இன்றைக்கு நிலவுகின்ற சூழ்நிலைகளில் அது தனது இராணுவ ஆக்கிரமிப்பிற்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பை அடக்கவும் முடியவில்லை, அல்லது போரினால் சீர்குலைந்துவிட்ட நாட்டை மறுசீரமைப்பு செய்வதில் குறைந்தபட்ச முன்னேற்றத்தைக்கூட காண முடியவில்லை.

என்றாலும், அரசியலமைப்பை உருவாக்கிக்கொண்டிருப்பவர்களிடையே, ஷியா மத அடிப்படையிலான கட்சிகளின் பெரும்பான்மைக்கும், குர்திஸ் மற்றும் சுன்னி குழுக்களிடையே கூர்மையான பிளவுகள் தோன்றியுள்ளன. காலக்கெடுவிற்கு இன்னும் இரண்டு வாரங்கள் கூட இல்லாத நிலையில், அவர்களுக்கிடையில் தங்களது நாட்டை எப்படி அழைப்பது என்பதில் கூட உடன்பாடு ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது, கூட்டாட்சி, மத சட்டத்தின் பங்கு மற்றும் மகளிர் உரிமைகள் போன்ற சிக்கலான பிரச்சனைகள் குறித்து கேட்கவே வேண்டாம்.

பாக்தாத்திற்கு வரும் வழியில் விமானத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த ரம்ஸ்பெல்ட் "நாங்கள் எந்த தாமதத்தையும் விரும்பவில்லை. தேவையான சமரசங்களை செய்து கொண்டு அவர்கள் அந்தப் பணியை தொடர்ந்து நடத்த வேண்டும். அப்படிச் செய்வதுதான் அரசியல். எந்தத் தயக்கம் காட்டப்பட்டாலும் தேவையான வேகத்திற்கு அது தீங்குபயப்பதாக அமையும். நாம் நாட்டில் படைகளை வைத்திருக்கிறோம். மக்கள் கொல்லப்படுகிறார்கள்" என்று கூறினார்.

உண்மையிலேயே அப்படித்தான் செய்கிறார்கள். சென்றமாதம் தினசரி பன்முகதாக்குதல்கள் நடந்தன, பல தற்கொலை குண்டு வெடிப்புக்கள் சம்மந்தப்பட்டிருந்தன. ஜூலை மாதம் மட்டுமே நூற்றுக்கணக்கான ஈராக்கியர் வாழ்வு பலியாயிற்று. அண்மையில் வெளிவந்த ஒரு செய்தியின்படி, பாக்தாத் பிணவறையில் ஒரு நாளைக்கு 30 உடல்கள் வந்தன, அவை அனைத்துமே ஏறத்தாழ வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள். இதுவரை இந்த மாதத்தில், 46 அமெரிக்க துருப்புக்கள் கொல்லப்பட்டிருக்கின்றன----அவர்களில் மூன்று பேர் ரம்ஸ்பெல்ட் பாக்தாத்தில் இருந்த நாளில் இறந்தனர்----படையெடுப்பு தொடங்கியது முதல் மொத்தம் 1,790 அமெரிக்க துருப்புக்கள் மடிந்திருக்கின்றன.

அப்படியிருந்தும், ரம்ஸ்பெல்டின் கட்டளை ஒருபுறம் இருந்தாலும், அமெரிக்க படையெடுப்பினாலும் ஆக்கிரமிப்பினாலும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இரத்தக்களரி படுதோல்வியிலிருந்து ஈராக்கை மீட்பதற்கு ஏற்கத்தக்க அரசியல் சமரசம் எதுவுமில்லை.

ஈராக்கில் ஆயுதந்தாங்கிய வன்முறை சிவிலியன்கள் மீது தாக்குதலாக அதிகரித்து வருகிறது. குண்டு வெடிப்புக்களால் குறிப்பாக ஷியா மக்களிடையே பலியாகின்றவர்களது எண்ணிக்கை வளர்ந்து வருகிறது. இதற்கிடையில், ஷியா குடிப்படைகள் ஏற்பாடு செய்துள்ள கொலை வெறிக்குழுக்கள் சுன்னி சிவிலியன் தலைவர்களுக்கு எதிராக பழிவாங்கும் கொலைகளை செய்துவருவதாக பல்வேறு செய்திகள் வந்திருக்கின்றன.

அரசியலமைப்பை உருவாக்குகின்ற குழுவில் சுன்னி பிரதிநிதிகளை சேர்த்துக்கொள்ள வேண்டுமென்று ஜாபரி அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகள் சென்றவாரம் நிலைமுறிவுற்றன. அரசியலமைப்பில் சேர்த்துக்கொள்ளப்பட்ட 15 சுன்னி உறுப்பினர்களில் இரண்டு பேர் சக மதத்தினரின் பகிஸ்கரிப்பினால் ஆத்தரமூட்டப்பட்டு ஒரு பாக்தாத் தெருவில் ஜூலை 19ல் கொலை செய்யப்பட்டனர்.

செவ்வாயன்று சுன்னி பிரதிநிதிகள் அந்த நடைமுறைக்கு திரும்பினர் என்றாலும் ஒரு அரசியலமைப்பு தொடர்பாக ஒரு உடன்பாடு ஏற்படும் என்ற நிச்சயமில்லை, மற்றும் அத்தகையதொரு ஆவணம் பெருகிவரும் வன்முறையை தீவிரப்படுத்துமே தவிர அடக்கிவிடும் என்பதற்கான வாய்ப்பு அதைவிடக் குறைவாக உள்ளது.

ஈராக் பத்திரிக்கைகளில் எழுதப்பட்டுள்ள அரசியலமைப்பு நகல்கள் சுட்டிக்காட்டுவது என்னவென்றால் அந்த ஆவணம் ஈராக்கை ஒரு ''இஸ்லாமிய குடியரசாக'' பிரகடனப்படுத்தக்கூடும், அதன் மூலம் சட்டங்களை இயற்றுவதற்கு இஸ்லாம் ஒன்றுதான் சட்டபூர்வமான அடிப்படையாக வலியுறுத்தப்பட்டது. அது குடும்ப சட்ட விவகாரங்கள் அனைத்தையும் மத நீதிமன்றங்களின் முடிவிற்கே விடும், அதேநேரத்தில் பெண்கள் உரிமை தொடர்பான வெளிப்படையான குறிப்புக்களை ஒழித்துக்கட்டிவிடும், அதன்மூலம் ஈராக்கில் சமூக முன்னேற்றம் பல தசாப்தங்கள் பின்னோக்கி சென்றுவிடும்.

இதற்கிடையில், குர்து சிறுபான்மையினர், அமெரிக்கா திணித்துள்ள ஒப்புதல் அளிக்கும் நிகழ்ச்சிபோக்கில் எந்த பட்டியல் மீதும் இரத்து அதிகாரத்தைப் பெற்றிருக்கிறது, ஒரு தளர்வான கூட்டாட்சி முறையை அது வலியுறுத்தி வருகிறது. அதன் மூலம் நாட்டின் வடபகுதியில் குர்திஸ் அரசியல்வாதிகளுக்கு ஆக்கபூர்வமான அதிகாரம் வழங்க வகை செய்கிறது. குர்திஸ் தலைமை தனது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் பல இனங்கள் வாழ்கின்ற கிர்குக் நகரத்தையும் சேர்த்துக்கொள்ள முயலுகிறது மற்றும் அந்த பிராந்தியத்தின் எண்ணெய் வளத்தின் கணிசமான கட்டுப்பாட்டை கோரிவருகிறது. அதே போன்றதொரு கட்டுப்பாட்டை ஷியா கட்சிகள் தென்பகுதியில் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய கிழக்கில் ஈராக்கை ஒரு ஜனநாயகத்தின் ஒரு ஒளிவிளக்காக ஆக்கப்போவதாக புஷ் நிர்வாகம் கூறிவந்த வெற்று வாய்வீச்சிற்கு பின்னால், ஆளும் வட்டாரங்களுக்கிடையிலும், இராணுவத்திலும் ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டின் நிலவரம் குறித்து அவநம்பிக்கை குரல் அதிகரித்து வருகிறது.

அப்படித்தான், "அது உள்நாட்டு போராக இருக்குமானால், நமக்கு அது தெரியுமா?" என்ற தலைப்பில் ஜோன் பேர்ன்ஸ் நியூயார்க் டைம்சில் எழுதியிருந்தார்: "28 மாதங்களுக்கு முன்னர் அமெரிக்க துருப்புக்கள் எல்லையை கடந்த தருணத்திலிருந்து அமெரிக்காவின் இந்த முயற்சிக்கு இங்கு நிலவிய சித்திரம் என்னவென்றால், ஈராக் ஹூசேனின் கொடுங்கோன்மையிலிருந்து விடுவிக்கப்பட்டதும், பிளவுபட்ட அரசியலும் மற்றும் பிளவுபட்ட மதமுமாகவே ஈராக் ஆகிவிடக்கூடும்...... அது தவிர்க்க முடியாத அளவிற்கு ஒரு உள்நாட்டு போரில் சிக்கிக்கொள்ளும்...... தற்போது இதற்கு முன்னர் எப்போதும் இருந்ததைவிட இப்போது அந்த பயங்கரம் உண்மையாக மாறிவிடக்கூடிய சாத்தியக்கூறு அதிகமாக உள்ளது.

பேர்ன்ஸ் குறிப்பிட்டிருந்தது என்னவென்றால் வாஷிங்டன் புதிதாக நியமித்துள்ள ஈராக்கிய தூதர் Zalmay Khalilzad, இந்த வாரம் பாக்தாத்திற்கு பறப்பதற்கு முன்னர் ஒரு உரையில் இரண்டுமுறை உள்நாட்டுப்போர் அச்சுறுத்தலை எழுப்பினார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் ஒரு நிர்வாகியாக பணியாற்றிவரும் கலீல்ஷாத், ஹமீத் கர்சாய் அரசாங்கத்தின் அதிகார நாடகத்திற்கு பின்னணியாக உண்மையான அரசியல் அதிகாரத்தை செலுத்தினார். ஈராக் அரசியலமைப்பு விவாதத்தில் அவரே நேரடியாக கலந்து கொண்டார். "நீங்கள் கட்டுகின்ற உள்கட்டமைப்பில் எதிர்காலத்தில் ஒரு உள்நாட்டுப்போரை அல்லது போர் பிரபுக்களை விரும்பவில்லை" என்று அறிவித்தார்.

அத்தகைய கவலைகளை வெளியிடும் கருத்துக்களுக்கு பின்னால், புஷ் நிர்வாகமும் பென்டகனும் ஈராக்கில் பிரித்தாளும் ஒரு வழியாக இன மற்றும் மத பிரிவினைகளை வளர்த்து வருகிறது.

"எப்போதுமே மற்றொரு கிளர்ச்சிக்காரர் இருக்கிறார்"

அந்தக் கட்டுரையை தொடர்ந்து வந்த ஒரு கட்டுரையில் டைம்ஸ் அமெரிக்க இராணுவத்திற்குள் வளர்ந்து வரும் மனமுறிவை எடுத்துக்காட்டியிருக்கிறது. அது "ஒரு மூத்த இராணுவ புலனாய்வு அதிகாரி" சொல்லிய வாசகங்களை குறிப்பிட்டிருக்கிறது, "நாம் ஏராளமான கிளர்ச்சிக்காரர்களை பிடிக்கிறோம் அல்லது கொன்று வருகிறோம். ஆனால் அவர்களுக்கு பதிலாக நாம் அவர்களது நடவடிக்கைகளில் தலையிடுவதற்கு முன்னரே வேகமாக புதியதாக உருவாகிவிடுகிறார்கள். எப்போதுமே மற்றொரு கிளர்ச்சிக்காரர் தயாராக தலையிட்டு நடவடிக்கை எடுப்பதற்கு ஆயத்தமாக இருக்கிறார்."

அந்தக் கட்டுரை அமெரிக்க தளபதிகள் கருத்தை சுட்டிக்காட்டியுள்ளது, அவர்கள் ஒரு நாளைக்கு 65 தாக்குதல்கள் வீதம் அமெரிக்க துருப்புக்கள் மீதும், புதிதாக அமெரிக்காவினால் பயிற்றுவிக்கப்பட்டு தளர்நடை போட்டுக்கொண்டுள்ள ஈராக் பாதுகாப்பு படைகள் மீதும் மாறாமல் தொடர்ந்து தாக்குதல்கள் நடந்து வருகின்றன. என்றாலும், அது சுட்டிக்காட்டியது என்னவென்றால், "அவர்களது படைகள் குறைந்து கொண்டு வருகின்றன என்ற பல மாதங்களாக உறுதிமொழிகள் தரப்பட்ட பின்னரும், கெரில்லாக்களும், பயங்கரவாதிகளும், அமெரிக்கா ஆதரவு பெற்ற இந்த படையினரோடு போரிட்டுக் கொண்டிருக்கின்றனர். அதிக வன்முறையோடும், உறுதியோடும் இதற்கு முன்னர் இல்லாத அளவிற்கு அதிக நுட்பத்தோடும் இங்கே அது வளர்ந்து வருவதாக தோன்றுகிறது.'' என்று குறிப்பிட்டார்.

ஜாபரியின் இடைக்கால அரசாங்கம் எவ்வளவு ஆபத்தான நிலையில் உள்ளது என்பதை தெளிவாக புதன்கிழமையன்று ரம்ஸ்பெல்டுடன் நடத்தப்பட்ட கூட்டு பத்திரிக்கை நிருபர் மாநாடு தெளிவுபடுத்துகிறது. ஈராக் பிரதமர் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பிற்கு விரைவான முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் மற்றும் ஈராக்கிலுள்ள தலைமை அமெரிக்க தளபதி ஜெனரல் ஜோர்ஜ் கேசியிடம் அமெரிக்க துருப்புக்கள் அண்மையில் ஈராக் சிவிலியன்களை கொலை செய்திருப்பது குறித்து புகார் கூறியதாக தெரிவித்தார். என்றாலும், அதே மூச்சில், ஜாபரி மேலும் கூறும்போது, "நமது ஈராக்கிய காலக் கெடுவோடு தொடர்பில்லாத முறையில் திடீரென்று வியப்பூட்டும் வகையில் படைகள் வெளியேறி விட வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை". என்று குறிப்பிட்டார்.

ஆட்டம் கண்டு கொண்டிருக்கும் ஈராக்கின் இடைக்கால அரசு மிகப்பெருமளவிற்கு மக்கள் செல்வாக்கை இழந்துவிட்ட ஆக்கிரமிப்பு படைகளிலிருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாவிட்டால் ஈராக் மக்களின் நம்பகத்தன்மை எதையும் பெற முடியாது, அதே நேரத்தில் அமெரிக்க இராணுவத்தின் பாதுகாப்பில்லாமல் அது பிழைப்பதற்கான வழியுமில்லை.

ஜாபரியின் விமர்சனங்களுக்கு ஜெனரல் கேசி பதிலளித்தபோது, ஈராக்கில் தற்போது பணியாற்றி வருகின்ற 1,38,000 அமெரிக்க துருப்புக்கள் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் ஒரு ''நியாயமான அளவிற்கு கணிசமாக'' குறைத்துக்கொள்ளப்படும் என்று அறிவித்தார்.

அமெரிக்கப் படைகள் அப்படி குறைக்கப்படுவதற்கு கேசி விதித்த நிபந்தனையில் அரசியல் வளர்ச்சிகள் ''ஆக்கபூர்வமாக'' செல்ல வேண்டும், மற்றும் ஈராக் பாதுகாப்பு படைகள் பயன்படுத்தப்படுவதும், பயிற்சியும் முன்னேற வேண்டும்.

சென்ற மாதம், ஈராக்கிலுள்ள ஒரு மூத்த அமெரிக்க தளபதியான லெப்டினட் ஜெனரல். ஜோன் வைன்ஸ் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் சுமார் 20,000 துருப்புக்கள் வரை அடுத்த ஆண்டு குறைக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

இந்த மாதம் பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சகத்தில் ஒரு இரகசிய ஆவணம் கசிந்துள்ளதில் கோடிட்டு காட்டியிருப்பது என்னவென்றால், அடுத்த ஆண்டு வாக்கில் அமெரிக்க துருப்புக்கள் 90,000 அளவிற்கு குறைத்துக்கொள்ளப்படும் என்றதொரு திட்டம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மிகப்பெரும்பாலான இராணுவ ஆய்வாளர்கள் தற்போதுள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளின் எண்ணிக்கை மிக மிக குறைவானது என்றும் அந்த நாட்டை பாதுகாப்பாக வழிநடத்தி செல்வதற்கு போதுமானதல்ல என்று கூறுகின்றனர் மற்றும் நம்பகத் தன்மையுள்ள ஈராக்பிய பாதுகாப்பு படைகளை உருவாக்குவதற்கு பல ஆண்டுகளாகும் மற்றும் அத்தகையதொரு திட்டம் நிறைவேற முடியாதது என்று கருதப்படுகிறது.

தற்போது அமெரிக்க தளபதிகள் ஒப்புக்கொண்டிருப்பது என்னவென்றால், தாங்களே சொந்தத்தில் போரிடுகிற அளவிற்கு 3,000 ஈராக் துருப்புக்கள்தான் வல்லமையுள்ளவை. அவர்கள் சொல்லத்தவறியது என்னவென்றால், இந்த இராணுவப்பிரிவுகள் அனைத்துமே குர்திஸ் peshmerga கெரில்லா இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்களாகும். அவர்களது விசுவாசம் பாக்தாத் ஆட்சிக்கு அல்ல ஆனால் குர்திஸ் தேசியவாத தலைமைக்குத்தான்.

ஈராக்கிலும் அமெரிக்காவிலும் நிலவுகின்ற ஆக்கிரமிப்பிற்கான வெகுஜன எதிர்ப்பை சமாதானப்படுத்தும் நோக்கிலும், அமெரிக்க இராணுவத்தினரிடையே வீழ்ந்துவரும் உற்சாகத்தை ஊக்குவிக்கவும் துருப்புக்கள் குறைப்பு பற்றிய அதிக பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. அப்படியிருந்தும், வாஷிங்டன் ஒரு மூலோபாய மாற்றத்தை கருதி வருகிறது என்பதற்கான அடையாளங்கள் காணப்படுகின்றன.

பாக்தாத்திற்கு செல்லும் வழியில் விமானத்தில் நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கும்போது ரம்ஸ்பெல்ட் அறிவித்தது என்னவென்றால் அமெரிக்க இராணுவம், "தனது வலுவை அவசியமான பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ரோந்து பணிகள் ஆகியவற்றிலிருந்து எதிர்கிளர்ச்சி பக்கம் மாற்றி வருகிறது மற்றும் நேரடியாக ஈராக் பாதுகாப்பு படைகளுடன் மேலும் மேலும் அமெரிக்கப்படைகள் பணியாற்றும். அவர்களுக்கு பயிற்சியளிப்பது, தளவாடங்களை தருவது மட்டுமல்லாமல் அவர்களோடு சேர்ந்து நமது படைகளை அவர்களுடன் பணியாற்றுவோம்".

அத்தகையதொரு மூலோபாயம் அமெரிக்க துருப்புக்கள் நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலிருந்து வெளியேறிச் செல்வதை பார்க்க முடியும், பிரதான சுன்னி மாகாணங்களில் அமைக்கப்பட்டுள்ள பெரிய நிரந்தர இராணுவத் தளங்களுக்கு அவை சென்றுவிடும். அங்கிருந்து கொண்டு, அமெரிக்க துருப்புக்கள் கிளர்ச்சி செய்கின்ற மக்கள் பிரிவுகளுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்பதுடன் ஈராக் பொம்மை பிரிவுகள் மீது தாக்குதல் நடத்துவோருக்கு எதிராகவும் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

ஈராக் ஆட்சியின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், Mowfaq al-Rubaei ரம்ஸ்பெல்ட் புதன்கிழமை பயணத்தின்போது கருத்துத் தெரிவித்தார், ஒரு அமெரிக்க ஈராக் குழு திட்டமிடப்பட்டு வருவதாகவும், அது அமெரிக்க துருப்புக்களிடமிருந்து ஈராக் துருப்புக்கள் வசம் குறைந்தபட்சம் 10 நகரங்கள் மற்றும் சில பாக்தாத் புறநகர்களின் பாதுகாப்புப் பணிகளை ஒப்படைக்கும். ஆரம்பத்தில், இது பெரும்பாலும் வடக்கிலுள்ள குர்து பகுதிகளையும் தெற்கிலுள்ள ஷியா மக்களையும் இன அடிப்படையில் செயல்படும் குடிப்படைகளிடம் ஒப்படைப்பதாக அமையும்.

"ஈராக் கைதிகள் தொடர்பான பொறுப்பை ஈராக் அரசாங்கத்திடம் ஒப்படைத்து விடுவது" பற்றி வாஷிங்டன் தீவிரமாக முயன்று வருவதாகவும் ரம்ஸ்பெல்ட் கோடிட்டுக்காட்டினார். அமெரிக்கப் படைகள் 15,000 திற்கு மேற்பட்ட ஈராக்கியர்களை கைது செய்திருக்கிறது----ஏறத்தாழ அவர்கள் அனைவரும் எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் கூறப்படாமலும், மிகப்பெரும்பாலோர் எந்தவித ஆயுதந்தாங்கிய நடவடிக்கையிலும் சம்மந்தப்பட்டார்கள் என்ற சந்தேகம் இல்லாத நிலையிலும் ---நான்கு பெரிய சிறை முகாம்களில் காவலில் வைத்திருக்கின்றன, மற்றும் பென்டகன் மிகப்பெருமளவிற்கு அமெரிக்க துருப்புக்களை சிறைகாவலர்களாக பயன்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்தக் கைதிகளை ஈராக் ஆட்சியின்வசம் ஒப்படைப்பது அமெரிக்காவின் ஆழமாகிக்கொண்டு வரும் போர்க்குற்றங்களை எடுத்துக்காட்டுகிறது. அபுகிரைப் சிறைச்சாலையிலும் பிற சிறைச் சாலைகளிலும் அம்பலப்படுத்தப்பட்ட சித்திரவதை மற்றும் முறைகேடுகள் அடிப்படையிலேயே "ஈராக்கிய மயமாக்கப்படுகிறது". ஈராக் பாதுகாப்புப்படைகள் கைது செய்கின்றவர்களை சித்திரவதை செய்வதும் கொலை செய்வதும் தொற்று நோய் போல் பரவிக்கொண்டிருப்தாக பெருகிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு அண்மையில் வெளியிட்ட ஒரு அறிக்கையில் ஈராக் பாதுகாப்புப்படைகள் கைது செய்கின்ற கைதிகள் வழக்கமாக கேபிள்களால் தாக்கப்படுகின்றனர், அவர்களது மணிக்கட்டுக்களை சேர்த்து கட்டி நீண்டநேரம் தொங்கவிடப்படுகின்றனர், மற்றும் உடலின் மிக முக்கியமான உறுப்புக்களில் மின்சார அதிர்ச்சிகளை கொடுக்கிறார்கள் என்று தெரிவித்தது. கொலை செய்யப்பட்ட கைதிகளின் உடல்களில் காணப்பட்ட காயங்கள் அவர்களது முழங்காலிலும், தோள்பட்டைகளிலும், முழங்கால்களிலும் மின்சார துளைபோடும் கருவிகளால் துளைபோடப்பட்ட காயங்கள் காணப்படுகின்றன.

வாஷிங்டனுக்கு ஈராக்கிலிருந்து அதன் இராணுவத்தை விலக்கிக்கொள்ளும் நோக்கம் எதுவுமில்லை. தனது இராணுவ வலிமை மூலம் பாரசீக வளைகுடாவில் எண்ணெய் வளம் மிக்க பகுதிகளில் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை வலியுறுத்தி நிலைநாட்ட வேண்டும் என்ற நீண்ட கால திட்டங்களை அடிப்படையாக கொண்டு 2003ல் அந்த நாட்டின் மீது அது படையெடுத்தது. இந்த ஆக்கிரமிப்பினால் வாரத்திற்கு ஒரு பில்லியன் டாலர் செலவானாலும் படிப்படியாக உயிரிழப்பு அதிகரித்து வந்தாலும் இந்த நோக்கத்தை அது கைவிட்டுவிடவில்லை.

ஈராக் இடைக்கால அரசுடன் தான் மேற்கொண்டுள்ள பேச்சுவார்த்தைகளில் ஒரு புதிய உடன்படிக்கைக்கான பிரச்சனையும் அடங்கியிருப்பதாக ரம்ஸ்பெல்ட் கோடிட்டு காட்டினார்---- மற்றொரு ஐக்கிய நாடுகள் சபை தீர்மானத்தின் மூலமோ, அல்லது பாக்தாத்திற்கு வாஷிங்டனுக்குமிடையில் ஒரு இருதரப்பு "படை அந்தஸ்து உடன்படிக்கை" செய்து கொள்வது சம்மந்தப்பட்டது. இதன் நோக்கம் என்னவென்றால், அந்த நாட்டில் அமெரிக்க படைகள் காலவரையற்ற எதிர்காலம் வரை நீடிப்பதற்கு சட்டபூர்வமான அங்கீகாரம் வழங்குவதும், போர் குற்றங்கள் தொடர்பான வழக்குகளிலிருந்து தங்களுக்கு சட்டபூர்வமான விதிவிலக்கை உறுதிசெய்துகொள்வதும்தான்.

Top of page