World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Secularism and the American Constitution

மதச்சார்பின்மையும் அமெரிக்க அரசியலமைப்பும்

By Charles Bogle
18 July 2005

Use this version to print | Send this link by email | Email the author

அண்மைய ஆண்டுகளில், உச்சநீதிமன்ற நீதிபதிகள், அரசியல்வாதிகள் மற்றும் மத பிரமுகர்கள் கடவுளின் வார்த்தைகளின் அடிப்படையிலேயே அமெரிக்க அரசியலமைப்பை உருவாக்கிய பிதாமகன்கள் செயல்பட்டார்கள் என்ற வாதத்தை முன்னெடுத்து வைத்துவருகிறார்கள். ஒரு கிறிஸ்தவ நாட்டினை ஆளுவதற்கான ஒரு கிறிஸ்தவ ஆவணமாக கொள்ளவேண்டும் என நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அர்த்தப்படுத்தினார்கள் என்றும் சிலர் வலியுறுத்துகின்றனர்.

மதத்தையும் அரசையும் தனிமைப்படுத்தி பிரித்து வைக்கும் கொள்கை மீது குடியரசு கட்சிக்காரர்கள் மட்டுமே தாக்குதல் நடத்தவில்லை. 2000 ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக்கட்சி வேட்பாளர் அமெரிக்க அரசியலில் மத அடித்தளம் பற்றி உரத்த குரலில் கருத்துக் கூறினார். 2000, ஆகஸ்ட் 27ல் டெட்ரோய்டில் ஜனநாயக்கட்சி துணை ஜனாதிபதி வேட்பாளர் ஜோசப் லிபர்மேன் உரையாற்றியபோது, முதலாவது சட்டத்திருத்தத்தின் மூலம்: "அரசியலமைப்பு மத சுதந்திரத்திற்கு உத்தரவாதத்தை தருகிறதே தவிர மதத்திலிருந்து விடுதலையை உத்தரவாதப்படுத்தவில்லை". அவருடன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அல் கோர், தான் தேர்ந்தெடுக்கப்பட்டால் "நிர்வாகத்தின் முக்கிய முடிவுகள் ஒவ்வொன்றிற்கு முன்னரும், 'ஏசு கிறிஸ்து என்ன செய்திருப்பார்?' " என்ற கேள்வியை எழுப்பப்போவதாக உறுதிமொழி அளித்திருந்தார். ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் மத நம்பிக்கையில் கோரை, "பின்னுக்கு தள்ளிவிட்டு", மந்திரிசபை கூட்டம் ஒவ்வொன்றும் ஆரம்பிக்கும் நேரத்தில் ஒரு பிராத்தனையை நடத்துகிறார்.

2002 சிக்காக்கோ பல்கலைக்கழக இறையியல் பள்ளியில் ஒரு உரையாற்றிய, உச்ச நீதி மன்ற இணை நீதிபதி ஆண்டனின் ஸ்கேலியா மரண தண்டனை விதிப்பதை ஆதரிக்கின்ற வகையிலும் அரசு விவகாரங்களில் கடவுளின் அதிகாரத்தை நிலை நாட்டுகிற வகையிலும் ரோமானின் 13: 1-4 வசனத்தை மேற்கோள் காட்டினார். "ஒவ்வொரு ஆன்மாவும் உயர் அதிகாரங்களுக்கு கட்டுப்பட்டே ஆக வேண்டும். கடவுளை தவிர வேறெந்த அதிகாரமும் இல்லை; அதிகாரங்கள் அனைத்தும் கடவுளால் கட்டளையிடப்படுகின்றன."

எதிர்காலத்தை வென்றெடுப்பது; அமெரிக்காவுடன் ஒரு 21ம் நூற்றாண்டு ஒப்பந்தம் (Winning the Future: A 21st Century Contract with America) என்ற நூலில் அன்றைய அமெரிக்க கீழ்சபை சபாநாயகர் Newt Gingrich எழுதினார்: "நமது உரிமைகள் நம்மை படைத்தவரிடம் இருந்து வருகின்றன என்பதை மீண்டும் நாம் நிலைநாட்டியாக வேண்டும்" சபையின் நடப்பு பெரும்பான்மைக் கட்சித் தலைவர், டாம் டீலே எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடமின்றி தெளிவாக, "அரசியலமைப்பில் மதத்தையும் அரசையும் பிரித்து வைப்பதாக எதுவுமில்லை, அல்லது அது பற்றி எந்தக் குறிப்பும் இல்லை" (dailydelay.blogspot.com, மார்ச் - 1, 2005) என்று குறிப்பிட்டார்.

குடும்பம் பற்றிய Focus அமைப்பின் தலைவரான டாக்டர் ஜேம்ஸ் டொப்சன் வாதிடுவது என்னவென்றால், "எல்லா சட்டங்களுக்கும் அடிப்படையாக, அமைந்திருக்கிற நமது வரலாற்று ரீதியிலான தார்மீக மரபியத்தை எடுத்துக்காட்டுவதாக பத்து கட்டளைகள் உள்ளன" ("அஸ்திவாரத்தை மீட்போம்: நீதித்துறை கொடுங்கோன்மையை இரத்து செய்வோம்" family.org) அதே கட்டுரையில் டாப்சன் "நமது அரசியலமைப்பு கூறுவது என்னவென்றால், நம்மைப் படைத்தவர் நமக்கு சில, மறுக்க மாற்ற முடியாத உரிமைகளை தந்திருக்கிறார்" என்று தவறான அடிப்படையில், சுதந்திர பிரகடனத்தில் மட்டுமே கண்டுள்ள ஒரு சொற்றோடர் அரசியலமைப்பில் இடம் பெற்றிருப்பதாக கூறுகிறார்.

"மதத்தையும், அரசையும் பிரித்து வைப்பதை புனிதப்படுத்தும் எதுவும், அமெரிக்க அரசியலமைப்பில் இல்லை." என்று டீலேயுடன் கிறிஸ்தவ கூட்டணி மற்றும் 700 குழுத்தலைவர் பேட் ரோபர்ட்சன் உடன்படுகிறார். ("அதிதீவிரவாதத்தின் குரல்கள்: தங்களது சொந்த வார்த்தைகளிலேயே, தீவிர வலதுசாரிகள்" www.notso.com).

அரசியலமைப்பை தெளிவாக படித்தால், மதத்தையும் அரசையும் பிரித்து வைத்திருப்பது தொடர்பான இந்தக் கருத்துக்கள் தவறானவை என்பதை நிரூபிக்க முடியும். "மதத்தை நிறுவுவது தொடர்பாகவோ, அல்லது மத உரிமைகளை சுதந்திரமாக செயல்படுத்துவதையோ கட்டுப்படுத்துவதற்கு நாடாளுமன்றம் எந்தச் சட்டத்தையும் இயற்றக் கூடாது" என்று முதலாவது சட்டத்திருத்தம் கூறுகிறது.

டீலேவும் ரோபர்ட்சனும் வலியுறுத்தியுள்ள அமெரிக்க அரசியலமைப்பில் "மதத்தையும், அரசையும் பிரிப்பது என்பது இந்த அர்த்தத்தில் மட்டும் உண்மையில் "மதத்தையும், அரசையும் பிரிப்பது" என்ற சொற்களை பயன்படுத்தவில்லை. ஆனால், அந்தத் திருத்தம் தெளிவாக, அத்தகையதொரு பிரிவினையை ஏற்படுத்துவதை நோக்கமாக கொண்டதுதான்.

உண்மையிலேயே, இந்தக் கொள்கை, ஏற்கனவே தெளிவாக அரசியலமைப்பின் மூலப்பிரிவுகளில் கோடிட்டுக் காட்டப்பட்டிருக்கிறது. அவை, முதலாவது 10 சட்டத்திருத்தங்களும் நிறைவேற்றப்படுவதற்கு முன்னர் அல்லது, உரிமைகள் பற்றிய பிரகடனம் இயற்றப்படுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்டவை. (1788ல் அரசியல் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்டது, 1791ல் உரிமைகள் பிரகடனம் நிறைவேற்றப்பட்டது) VI ஆவது ஷரத்தில், III ஆவது பிரிவில் மதத்தையும் அரசையும் பிரித்து வைக்கின்ற கொள்கைக்கு வடிவம் தரப்பட்டிருக்கிறது, பொதுப் பதவி வகிப்பதற்கு மதம் தொடர்பான சோதனைகளுக்கு தடைவிதிக்கிறது, "அமெரிக்காவில் எந்த பொது அறக்கட்டளையிலும் அல்லது எந்த பொது அலுவலகத்திலும் பதவி பெறுவதற்கான ஒரு தகுதியாக எந்த மதம் தொடர்பான சோதனையும் நடத்தப்படக்கூடாது." என்று குறிப்பிடுகிறது.

நமது மாற்ற முடியாத உரிமைகளுக்கு மூலமானவர்கள் எம்மை படைத்தவர்கள்தான் என்ற சொல்லு அரசியல் சட்டத்தில் அடங்கியிருப்பதாக டாப்சனின் கூறுவது தற்போதையை ஒரு பிரச்சனைக்கு எதிராக உள்ளது. ''கடவுள்'' என்கிற வார்த்தையோ அல்லது ''படைத்தவர்'' என்கின்ற சொல்லோ அந்த ஆவணத்தில் இடம்பெறவில்லை.

இரண்டு நிறுவன தந்தையர்களுடைய எழுத்து அரசியலமைப்பின் தெளிவான நோக்கத்தை வெளிப்படுத்துகின்றனர். தோமஸ் ஜெபர்சனும், ஜேம்ஸ் மாடிசனும் அறிவுபூர்வமாக மதத்தையும் அரசையும் பிரித்து ஸ்தாபித்தத்தில் மிகவும் பொறுப்புள்ளவர்கள். ஜெபர்சன் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்கள் அடங்கிய ஒரு மத்திய அரசாங்கத்தை விரும்பினார். அவர் ஒரு இயற்கை வழிபாட்டுக்காரர் மற்றும் மாடிசன் ஒரு கிறிஸ்தவர், மத்திய அரசாங்கத்திற்கு அதிகாரம் அதிகம் இருக்க வேண்டும் என்று நினைப்பவர். அவர்கள் இருவருமே மிகுந்த ஈடுபாட்டோடும் பிறர் ஏற்றுக்கொள்ளக்கூடிய அறிவு ஒளி கண்ணோட்டத்தோடும் மனித உரிமைகள், மதச் சார்பற்ற இயற்கைச் சட்டங்களால் முடிவு செய்யப்படுகின்றனவே தவிர எந்தக் கடவுளோ அல்லது மதமோ முடிவு செய்வதில்லை என்று எழுதினார்கள்.

1777ல் ஜெபர்சன் வெர்ஜினியா மாநிலத்தில் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் அல்லது எல்லா மதத்தைச் சேர்ந்த அனைவருக்கும் சரிசமமான சட்டபூர்வ உரிமைகளை உறுதிகளாக தருகின்ற மதச்சுதந்திர மசோதா நகலை ஒரு முன்மொழிவு செய்தார். இந்த மசோதாவில் ஜெபர்சன் வாதிட்டது என்னவென்றால், "நமது சிவில் உரிமைகள் எந்த அளவிற்கு நமது மதம் சம்மந்தப்பட்ட கருத்துக்களோடு ஒன்றி வருகின்றன என்றால், இயற்பியல் அல்லது திரிகோணம் பற்றிய நமது கருத்துக்களுக்கு மேலானவை அல்ல." (The Portable Thomas Jefferson, p. 252) ஸ்கேலியா, கிங்ரிச், டாப்சன் மற்றும் ராபர்ட்சன் நமது உரிமைகள் தொடர்பாக, நம்மை நம்பச் செய்வதற்கு முயற்சிப்பது போன்று அந்த உரிமைகளை கடவுள் நமக்கு தரவில்லை. மாறாக மதத்தாலோ அல்லது அரசாலோ எந்தக் கட்டுப்பாடும் விதிக்காமல் நமது சுதந்திரமான சிந்திக்கும் தன்மையில் இருந்து வருகின்றது."

வெர்ஜினியா மாகாணம் தொடர்பான குறிப்புக்கள் என்ற தலைப்பில் அவர் எழுதிய 1781ம் ஆண்டு நூலில், ஜெபர்சன் முன்னெடுத்து வைக்கின்ற வாதங்கள் 1777 மசோதாவில் அவர் எடுத்து வைத்த தத்துவத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது, அது என்னவென்றால், ''தவறுக்கு'' எதிராக நமது ஒரே உத்திரவாதங்கள் என்னவென்றால் நம்முடைய பகுத்தறிவும் சுதந்திரமான சிந்தனையும்தான். ''கேள்வி XVIIக்கு'' ஜெபர்சன் அளித்த பதில் அன்றைய தினம் வெர்ஜெனியாவில் நிலவிய பொதுச் சட்டம் 1777 இற்கு பதிலளிப்பதாக அமைந்திருந்தது, அந்த சட்டத்தில் கிறிஸ்தவர் அல்லாத ஒரு தனிமனிதர் அல்லது மத நம்பிக்கையற்ற ஒரு தனிமனிதர், மதம் சம்மந்தப்பட்ட, சிவில் அல்லது இராணுவப் பணிகளை ஏற்பதற்கான தகுதியின்மையை உடையவராக ஆகிறார்'' என்று குறிப்பிட்டிருந்தது.

அப்படி அவர் கீழ்கண்ட முறையில் கூறினார். "மற்றவர்களுக்கு தீங்கு செய்கின்ற செயல்களுக்கு மட்டுமே, அரசாங்கத்தின் சட்டபூர்வமான அதிகாரங்கள் செல்லுபடியாகும். ஆனால், எனது பக்கத்து வீட்டுக்காரர் இருபது கடவுள்கள் இருக்கிறார்கள் என்று சொல்லுவதோ அல்லது கடவுளே இல்லை என்று சொல்லுவதோ என்னை எந்தவகையிலும் காயப்படுத்தாது." (The Portable Thomas Jefferson, p. 285). இது மதம் அற்ற ஒரு நிலைக்கு மேலாக, ஒரு மதத்தை அரசாங்கம் தேர்ந்தெடுக்க வேண்டும், அல்லது ஒரு மதத்தை அதாவது கிறிஸ்தவ மதம் மற்ற மதங்களை விட உயர்வானது என்று நம்புகிற ஒருவர், சொல்வது போன்று தோன்றவில்லை.

மத சிந்தனையை கட்டுப்படுத்துவது அல்லது மத சிந்தனைக்கு கட்டளையிடுவது ஒரு தவறு என்று அவர் வாதிட்டதைப்போன்று, ஜெபர்சன் அதே கேள்விக்கு பதிலளிக்கும்போது, அறிவியல் சிந்தனைக்கு கட்டளையிடுவது அல்லது கட்டுப்படுத்துவது சரிசமமான தவறுள்ள நடவடிக்கை என்பதை சுட்டிக்காட்டுகின்ற வகையில் கலிலியோ வழக்கை சுட்டிக்காட்டினார். "பூமி உருண்டையாக இருக்கிறது, என்ற தனது 'தவறை' கைவிடுமாறு கலிலியோ கட்டாயப்படுத்தப்பட்டார்" ஆனால் அந்தத் 'தவறு' பின்னர் உண்மையாக ஆயிற்று என்று ஜெபர்சன் எழுதுகிறார்.

ஜெபர்சன் தனது வாசகர்களுக்கு நினைவுபடுத்தியிருந்தது என்னவென்றால், "இப்போது மிக உறுதியாக, அறிவுபூர்வமாக நிரூபிக்கப்பட்டிருப்பது என்னவென்றால், அரசாங்கம் தலையிட்டு ஒரு தேவையான நம்பிக்கை பற்றி ஒரு பந்தியை உருவாக்கியிருக்க வேண்டும். அவர் தொடர்ந்தும், அதற்கு அரசாங்கத்தின் ஆதரவு மட்டுமே தேவை என கருதுவது பிழையாகும். உண்மை தன் வலுவிலேயே நிற்கும்" (The Portable Thomas Jefferson பக்கம் 286).

இந்த பாராட்டத்தக்க பகுதியில், ஜெபர்சன் எந்த அரசாங்க அல்லது மத கட்டளையையும் விட அறிவுபூர்வமான விமர்சன விசாரணை மேலானதாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் மற்றும் அவற்றிற்கு எந்தவிதமான கட்டுப்பாடும் இருக்கக் கூடாது என்று ஜெபர்சன் வாதிட்டார்.

அரசியலமைப்பு மாநாடு நடந்தபோது ஜெபர்சன் பிரான்சிற்கு அமைச்சராக பணியாற்றி வந்ததால் அவர் அந்த ஆவணத்தில் கையெழுத்திடவில்லை. என்றாலும் மத சுதந்திரத்தை நிறுவும் 1786 வெர்ஜெனியச் சட்டம் 1777ல் ஜெபர்சன் உருவாக்கிய வெர்ஜெனியாவில் மத சுதந்திரம் தொடர்பான மசோதாவை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது, அது பரவலாக "மத்திய கூட்டாட்சி அரசியல் சட்ட மதச்சார்பின்மை விதிகளுக்கு அடிப்படை வழிகாட்டியாக அமைந்தது" என்று கருதப்படுகிறது (சுதந்திர சிந்தனையாளர்கள்: அமெரிக்க மதச்சார்பின்மையின் ஒரு வரலாறு, சூசன் ஜேகோபி பக்கம். 19).

1786 ஆவது ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் ஒரு சுருக்கமான குறிப்பு (1) அரசையும் மதத்தையும் பிரிப்பது தொடர்பான விவாத கருத்து வேறுபாடுகளை கிளறிவிட்டது மற்றும் மோதிக்கொண்டவர்களிடையே மிகப்பெரும் கவலையை உருவாக்கியது மற்றும் (2) தெளிவாக உணர்ந்து திட்டவட்டமான நோக்கத்தோடு மதத்தையும் அரசையும் பிரித்துவைக்கும் கொள்கை உருவாக்கப்பட்டது, என்ற வரலாறு அடங்கியிருக்கிறது.

1777 ஜெபர்சன் மசோதா காலத்தில் வெர்ஜெனியாவில் அதிகாரபூர்வமான தேவாலயம் எபிஸ்கோபல் (Episcopal) தேவாலயமாகும். புரட்சிகர போருக்கு முன்னர், சுதந்திர சிந்தனையாளர்களும் அதிருப்தி கொண்ட எவான்ஞ்செலிக்கல் புரட்டஸ்டாண்டுகளும் (அவர்கள் ஒரு அதிருப்தி கொண்ட சிறுபான்மை தேவாலயம் என்ற முறையில் அதிகாரபூர்வமான ஒரே தேவாலயத்தின் விளைவுகள் குறித்து அஞ்சினர்) ஒரு அதிகாரபூர்வமான தேவாலயத்தை நியமிப்பதை எதிர்த்து வந்தனர். ஆனால் போரின் அவசரநிலை அந்த விவகாரத்தில் முன்னுரிமை பெற்றுவிட்டது.

போரைத் தொடர்ந்து, புதிய ஒரு அரசாங்கத்தை அமைக்கின்ற பணி கையில் எடுத்துக்கொள்ளப்பட்டது, அப்போது சுதந்திர சிந்தனையாளர்களும் எவான்ஞ்செலிக்கல் புரட்டஸ்டாண்டுகளும் ஒரு அதிகாரபூர்வமான மதத்தை நிறுவுவதற்கான தங்களது எதிர்ப்பை புதுப்பித்தனர். ஆனால் மற்றொரு நிலைப்பாடும் அந்த நேரத்தில் முன்னெடுத்து வைக்கப்பட்டது. 1784ல் பேட்ரிக் ஹென்றி ஒரு மசோதாவை வெர்ஜெனியா பொதுசபையில் முன்மொழிவு செய்தார் அது ''கிறிஸ்தவ மதபோதனை, ஆசிரியர்களுக்கு'' ஆதரவு காட்டும் நோக்கில் வெர்ஜெனியா மக்கள் மீது வரிகளை விதிக்க வகை செய்தது.

ஆக ஒரு அதிகாரபூர்வமான மதம் தொடர்பாக அப்போது மூன்று நிலைப்பாடுகள் நிலவின: (1) அரசு ஒரு தனி கிறிஸ்தவ மதத்தை ஆதரிக்க வேண்டும். (2) அவை பொதுவாக கிறிஸ்தவ அமைப்புக்களாக இருந்தால் அவற்றை ஆதரிக்க வேண்டும். மற்றும் (3) அரசு வேறு எந்த மதத்தையும் அல்லது தேவாலயங்களையும் ஆதரிக்க கூடாது.

ஜெபர்சனையும் மற்ற மூன்றாவது நிலைப்பாட்டு ஆதரவாளர்களையும் போல் அரசியலமைப்பின் முதன்மை சிற்பியும் தலைமை பாதுகாவலருமான மத்திய கூட்டாட்சிவாதி ஜேம்ஸ் மாடிசனும் ஆதரித்தார், (அமெரிக்காவில் அறிவு ஒளி, ஹென்றி எப். மே, பக்கம்.96), "மாநில அரசாங்கம் கிறிஸ்தவ மதத்தையோ" அல்லது வேறு எந்த மதத்தையோ ஆதரிக்கின்ற பணியில் ஈடுபடக்கூடாது என்று கூறினார். (Jacoby பக்கம் 19).

மாடிசன் 1785 இல் வெளியிட்ட தமது ''மத மதிப்பீட்டிற்கு எதிரான கண்டனம் மற்றும் நினைவுக் குறிப்பில்'' தனது வாதங்களை மூன்றாவது நிலைப்பாட்டிற்காக எடுத்துரைத்தார், அது சூசன் ஜேகோப்பி கூறியுள்ளபடி "சுதந்திர பிரகடனம் மற்றும் அரசியலமைப்பை போன்று அமெரிக்க வரலாற்றை அறிந்த மாணவர்களுக்கு தெரிந்ததுதான்" (Jacoby-பக்கம் 19).

மாடிசன் வாய்வீச்சில் "கிறிஸ்தவ மதத்தை நிறுவுகின்ற அதே அதிகாரம் படைத்த அமைப்பு மற்ற இதர மதங்களை ஒதுக்கிவிட்டு அதே போன்று கிறிஸ்தவ மதத்திலேயே வேறு அனைத்து பிரிவுகளையும் நீக்கிவிட்டு ஒரே பிரிவை உருவாக்கக் கூடும் என்பது யாருக்குத்தான் தெரியாது?" என்று கேட்டார்.

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து மதம் சுதந்திரமாக செயல்படவேண்டும் என்று வாதிட்டதுடன், மாடிசன் அரசாங்கமும் மதத்திலிருந்து சுதந்திரமாக செயல்பட வேண்டும் என்று வாதிட்டார். "ஒரு சிவில் அரசாங்கம் ஒரு மதத்தை கவனத்திற்கு கொண்டு வரவில்லை என்றால், எப்படி சட்டபூர்வமாக சிவில் அரசாங்கத்தில் மதத்தை நிறுவுவது அவசியமாகும்?" (Jacoby பக்கம் 20).

மாடிசனின் "நினைவுக்குறிப்பு" ஒரு கூட்டணியை உருவாக்குவதில் ஒரு உயர்ந்த முக்கியத்துவமான பங்களிப்பை செய்தது. அந்தக் கூட்டணி, அரசாங்கத்தில் மதத்திற்கு எந்த முக்கியத்துவமும் இருக்கக் கூடாது என்று நம்பிய சுதந்திர சிந்தனையாளர்களுக்கும், பல்வேறு முறைசாராத புரட்டஸ்டண்டு பிரிவுகளுக்கும் இடையில் அவர்கள் சுதந்திர சிந்தனையாளர்களின் அறிவு ஒளி பார்வையை ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அரசாங்கம் மதத்தில் தலையிடாது என்று உறுதிசெய்து கொண்டுவிட்டால், அதனால் தங்களது மதப்பிரிவு நீடித்திருக்க முடியும் என்று உறுதிபட நம்பியவர்களுக்கும் இடையில் உருவாயிற்று. இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டதும், மதச் சுதந்திரத்தை உருவாக்குவதற்கான 1786 வெர்ஜெனியா சட்டம் எளிதாக நிறைவேறிற்று.

மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய மதச்சார்பற்ற ஒரு அரசாங்கத்தை உருவாக்குவதற்கான அடித்தளத்தை 1786 சட்டம் சந்தேகத்திற்கு இடமின்றி உருவாக்கியது. அந்த சட்டம் குறிப்பிடுவது, "வெர்ஜெனியாவின் பொதுசபையில் நிறைவேற்றப்படும் இந்த சட்டம் எந்த மனிதரும் எந்த மதவழிபாடு நடக்கும் இடம் அல்லது அது சம்மந்தமான குருபீடம் ஆகியவற்றிற்கு செல்வதற்கோ அல்லது ஆதரிப்பதற்கோ கட்டாயப்படுத்தக் கூடாது அல்லது அவரை கட்டுப்படுத்தவோ அவருக்கு இடையூறு செய்யவோ அல்லது அவருக்கு சுமையாகவோ அல்லது அவர்களது பொருள்களுக்கு நஷ்டமாகவோ அல்லது அவரது மதக்கருத்துக்கள் அல்லது நம்பிக்கை காரணமாக அவருக்கு எந்த துன்பமும் ஏற்படும் வகையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கக் கூடாது, ஆனால் அனைவரும் தங்களது மதத்தை பரப்ப அதன்மூலம் நிலைநாட்ட தங்களது மதவிவகாரக் கருத்துக்களை நிலைநாட்டிக்கொள்ள அதே நேரத்தில் அவர்களது சிவில் கடமைகள் திறமைகள் எதையும் குறைக்காத வகையில் உரிமைகள் வழங்கப்பட வேண்டும்."

ஜேக்கோபி குறிப்பிட்டிருப்பதைப்போல்,..." மதச்சார்பற்றவர்களுக்கு ஒரு முக்கியமான புள்ளி என்னவென்றால்,-----வெர்ஜினியாவை சேர்ந்த எவரும் பிற மாநிலங்களில் நிலவுகின்ற நடைமுறையோடு ஒப்புநோக்கும்போது, பொதுப்பணிக்கு போட்டியிடுகின்ற எவரும் அல்லது சமமான சிவில் உரிமைகள் கோரும் எவரும் தனது மத நம்பிக்கை பற்றி உறுதிமொழி தரவேண்டியதில்லை" (Jacoby-பக்கம் 24).

"பிற மாநிலங்களில் நடைமுறையில் இருந்தமுறை" அரசியல் சட்ட மாநாட்டிற்கு மதச்சார்பற்ற நிலைக்கு எதிரான வாய்ப்புக்களை தந்தது. அந்த மாநாடு 1787ல் ஒரு கூட்டாட்சி முன்மாதிரி ஆவணத்தை ஆராய்வதற்காக நடத்தப்பட்டது.

எடுத்துக்காட்டாக Massachusetts அரசியலமைப்பு 1780ம் ஆண்டு இயற்றப்பட்டது. அந்த மாநிலம் தனது கிறிஸ்தவ Puritan (பிரித்தானிய கடும்தீவிரவாத புரட்டஸ்தாந்துகள்) பின்னணியை எடுத்துக்காட்டுகின்ற வகையில் கிறிஸ்தவர்களுக்கு மட்டுமே சட்டபூர்வமான சமத்துவத்தை உறுதி செய்து தருகின்ற வகையில் அமைக்கப்பட்டது. மற்றும் அப்போதும் கூட அந்த மாநிலத்தில் பொதுப்பணியாற்ற முன்வருகின்ற கத்தோலிக்கர்கள் போப்பின் அதிகாரத்தை உதறித் தள்ளுமாறு கட்டாயப்படுத்தப்பட்டனர். அந்த Massachusetts 63 நகரங்கள் அதிக கட்டுப்பாடுகளை விதித்தன: புரட்டஸ்டாண்டுகளுக்கு மட்டுமே சட்டபூர்வமான சமத்துவத்தை உறுதி செய்து தர அவர்கள் விரும்பினர். (Jacoby- 25-26).

நியூயோர்க் மாநில அரசியலமைப்பு யூதர்களுக்கு சட்டபூர்வமான சமத்துவத்திற்கு உறுதி செய்து தந்தது. அதே நேரத்தில் கத்தோலிக்கர்களுக்கு அந்த சமத்துவம் மறுக்கப்பட்டது. மேரிலாந்து, யூதர்கள், சுதந்திர சிந்தனையாளர்கள், உருவ வழிபாட்டுக்காரர்கள் ஆகியோருக்கு சம உரிமைகளை வழங்கவில்லை, ஆனால் கத்தோலிக்கர்களுக்கும் புரட்டஸ்டாண்டுகளுக்கும் முழு சிவில் உரிமைகளை வழங்கியது (Jacoby- பக்கம் 26).

இந்த மற்றும் இதர மாநிலங்களை சேர்ந்தவர்களில் இணையான மத அடிப்படை அரசு முறைகளை ஆதரித்தவர்கள் இருந்தார்கள் என்றாலும், இறுதியில் அரசியலமைப்பை நிறுவிய முன்னோடிகள் தங்களது முன்மாதிரியாக வெர்ஜெனியா திட்டம் என்றழைக்கப்பட்ட 1786ம் ஆண்டு மத சுதந்திர சட்டத்தை எடுத்துக் கொண்டனர். ஏனென்றால் அரசியலமைப்பு ஒரு மதச் சார்பின்மை ஆவணமாக இருக்க வேண்டும் என்று கருதியிருந்தனர்.

அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் தெளிவாக தேர்ந்தெடுத்தது, எதை சுட்டிக்காட்டியது என்றால், ஜெபர்சனும் மாடிசனும் தங்களது அறிவு ஒளி மதச்சார்பின்மை முன்னோக்கை எடுத்து வைத்து மதத்தையும் அரசையும் பிரித்துவைக்கும் கருத்தில் தனியாக நிற்கவில்லை. ஆனால் உண்மையிலேயே அரசியலமைப்பை சட்ட மாநாட்டில் நிலவிய சூழ்நிலை என்னவென்றால், ஹென்றி எப். மே கூறியிருந்தபடி "அறிவு வாதமும் நடைமுறைவாதமும் இணைந்திருந்தது." மிக பழமைவாத பிரதிநிதிகளில் பென்சில்வேனியா கவர்னர் மோரிஸ், நமது அறிவுதான் அதிகம் நம்மீது ஆதிக்கம் செலுத்த வேண்டுமே தவிர நமது உணர்வுகளுக்கு முடிந்தவரை குறைந்த முக்கியத்துவம்தான் தர வேண்டும் என்று குறிப்பிட்டார். (The Enlightenment in America, Henry F. May, p. 97).

மாடிசன் தவிர செல்வாக்கு மிக்க கூட்டாட்சி தத்துவவாதிகளான ஜோன் ஆடம்ஸ் மற்றும் ஜோர்ஜ் வாஷிங்டன் ஆகியோர், "மதத்தையும் சிவில் விவகாரங்களையும் பிரித்து வைக்கின்ற ஜெபர்சனின் கருத்துக்களை முழுமையாக பகிர்ந்து கொண்டனர்." (Jacoby- பக்கம் 27). "கடவுள் என்ற சொல்லை நீக்கிவிட்டது, அந்த அரசியலமைப்பு மாநாட்டில் ஒரு பெரிய கருத்து வேறுபாட்டிற்கு காரணமாக அமையவில்லை" (Jacoby பக்கம் - 29).

மாநிலங்கள் அரசியலமைப்பை ஏற்றுக்கொள்வது தொடர்பாக நடைபெற்ற தீவிரமான விவாதங்களில் கடவுள் அல்லது ஏசு கிறிஸ்து பற்றிய குறிப்பு இடம்பெற வேண்டுமா இல்லையா என்பது குறித்து தீவிரமான விவாதம் நடைபெற்றது. நியூயோர்க்கை சேர்ந்த ஒரு கூட்டாட்சிவாதியான மறைதிரு. ஜோன் மேசன் அரசியல் சட்டத்தில் கடவுள்பற்றிய எந்தக் குறிப்பும் இல்லாதது "எந்த சாக்குப்போக்கும் சமாதானபடுத்தவியலாத ஒரு தவறு" என்று குறிப்பிட்டார். (Jacoby-பக்கம் 30) போஸ்டனில் அரசியலமைப்பு அங்கீகாரத்தை எதிர்த்த ஒருவர், அரசியல் சட்டத்தில் கடவுள் குறிப்பிடப்படாவிட்டால் அமெரிக்கா அழிந்துவிடும் என்று ஜோசியம் கூறினார்.

மாநிலங்களில் அரசியலமைப்பை அங்கீகரிப்பதற்காக நடைபெற்ற மாநாடுகளில் கலந்து கொண்ட பல உறுப்பினர்கள் அரசியல் சட்டத்தின் தெளிவான மதச்சார்பின்மை நோக்கம் கண்டு அதிர்ச்சியடைந்து அரசாங்க அதிகாரத்திற்கான மூலாதாரமாக ஏசு கிறிஸ்துவை அல்லது கடவுளை குறிப்பிடும் மதத் தொடர்புடைய திருத்தங்களை முன்மொழிந்தனர். என்றாலும் இறுதியில் அரசியல் சட்டம் ஒரு வெளிப்படையான மதச் சார்பின்மை ஆவணமாக இருக்க வேண்டுமென்று வலியுறுத்தியவர்களால் இந்த முன்மொழிவுகள் தள்ளுபடி செய்யப்பட்டன மற்றும் புதிய குடியரசின் அடித்தளங்கள் மதச் சார்பின்மையாக அமைந்திருக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.

மனித உரிமைகள் பற்றிய மசோதா மீது நடைபெற்ற விவாதத்தில் இந்த நோக்கம் அதைவிட தெளிவாக தெரிந்தது. அரசியலமைப்பிற்கு பல்வேறு திருத்தங்களை கொண்டு வருவது தொடர்பாக முடிவு செய்வதற்கு முன்னால், மக்கள் பிரதிநிதிகள் சபை ஆரம்பத்தில் அரசியலமைப்பின் முன்னுரை வாசகத்தை மாற்றி தெளிவாக அரசாங்கம் மக்களது நன்மைக்காகத்தான் அமைக்கப்பட்டது, மற்றும் அரசாங்கம், தனது அதிகாரத்தை மக்களிடமிருந்து மட்டுமே பெற்றிருக்கிறது என்று குறிப்பிட்டது. (வலியுறுத்தல் இணைக்கப்பட்டது).

இறுதியாக அரசியல் சட்டத்தின் பொது அடிப்படைக்கு மூல சொற்றொடரான "மக்களாகிய நாங்கள்" என்பதே போதுமான ஆதாரம் என்ற அடிப்படையில் இந்தக் கருத்து புறக்கணிக்கப்பட்டது. (அமெரிக்க அரசியலமைப்பு: அதன் மூலங்களும் வளர்ச்சியும், Alfred H. Kelly and Winfred A. Harbison, p. 175).

அமெரிக்காவின் அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் கடவுள் பெயரை அல்லது அவர் தந்த அதிகாரத்தை குறிப்பிடுவதற்கு சர்வசாதாரணமாக தவறிவிட்டார்கள் என்று இன்றைய தினம் வாதிடுகின்ற மத வலதுசாரிகளின் கூற்றுக்களை நொருக்குகின்ற வகையில் கடவுள் பற்றியும் அவரது அதிகாரம் பற்றியும் நடைபெற்ற இந்த தீவிர விவாதங்கள் அமைந்திருக்கின்றன. ஜேக்கோபி, தனது முடிவுரையில் கூறியிருப்பதைப்போல், "அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள் தாங்கள் செய்வதை தெளிவாக அறிந்திருந்தார்கள் மற்றும் அதேபோன்று அவர்களது சக குடிமக்கள் இரண்டு தரப்பினருமே அந்த பிரச்சனையை துல்லியமாக அறிந்திருந்தார்கள்". (Jacoby பக்கம் - 33).

மனிதர்கள் சுதந்திரமாக சிந்திப்பதற்கு அனுமதிக்கப்பட்டால் சமூகம் உட்பட இயற்கை உலகை புரிந்து கொள்ளுகின்ற தன்மையும் அதை ஆளுகின்ற வல்லமையும் சாத்தியமாகும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில்தான் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. மனித இனம் உன்னதமான அல்லது பெரிய சாதனைகளை புரிவதற்கு ஆசை கொள்ள முடியாதா? அப்படியிருக்கும்போது ஏன்? மத வலதுசாரிகளும் அதன் பிரதான அரசியல் நண்பரான குடியரசுக்கட்சியும் அரசியல் சட்டம் பற்றியும் அதை உருவாக்கியவர்களது நோக்கம் பற்றியும் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறது? இந்தப் பொய்கள் எந்த நோக்கத்திற்கு பயன்படுகின்றன?

முதலாளித்துவத்தின் நெருக்கடி உழைக்கும் மக்களது நியாயமான விருப்புகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு பதிலளிக்கின்ற அல்லது குறைந்த பட்சம் திசை திருப்புகின்ற பாரம்பரிய முதலாளித்துவ ஜனநாயக, வழிமுறைகளை பராமரிக்கு முடியாத நிலையை அடைந்துவிட்டது. ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் ஆளும் நிதியாதிக்க செல்வந்தத்தட்டினரின் பிரதிநிதிகளாக செயல்படுகின்ற பிரதான அரசியல் கட்சிகள் பெரும்பாலான மக்களது கவலைகளுக்கு ஈடுகொடுப்பதாக நடிக்கமுடியவில்லை.

அது ஈராக் போராக இருந்தாலும், வேலையிழப்பு அல்லது சமூக சீர்திருத்தங்களை இரத்துச் செய்வதாக இருந்தாலும் மக்களுக்கும் அவர்களது தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குமிடையே இதற்கு முன்னர் எப்போதும் இல்லாத அளவிற்கு இடைவெளி அதிகரித்துள்ளது. முதலாளித்துவ முறைக்கு எதிராக ஒரு புரட்சிகரமான மாற்றத்தை கொண்டுவருவதற்கான போராரட்டத்தின் அவசியத்தை தெளிவாக உணருகின்ற வகையில் தொழிலாள வர்க்கத்தின் விரக்தியும் கோபமும் திரும்பிவிடாது எப்படி கட்டுப்படுத்துவது என்பதில் ஆளும் வட்டாரங்களுக்கிடையில் ஒரு நியாயமான கவலையை இது உருவாக்கிவிட்டது.

அமெரிக்காவில் தொழிற்சங்கங்களின் உடைவும் அமெரிக்க தாராளவாதத்தின் அரசியல் அழுகல் நிலையும் ஜனநாயகத்தின் சீரழிவுற்கு வகை செய்து, ஒரு தீவிர வலதுசாரி சிறுபான்மையை உருவாக்கிவிட்டது. அது மிக பிற்போக்கான மதகொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு மகத்தான சக்தியை பெற்றுள்ளது. முதலாளித்துவ ஜனநாயக ஆட்சி முறைகள் சிதைந்து கொண்டு வருகின்ற சூழ்நிலையில் மற்றும் தொழிலாள வர்க்கம் தனது புரட்சிகர பணிகளை இன்னும் புரிந்து கொள்ளாத நிலையில் இந்தத் தீவிர வலதுசாரி சிறுபான்மையினர் அரசாங்கத்தின் கொள்கைகள் மீது ஒரு ஆளுமை செலுத்தும் அதிகாரத்தை பயன்படுத்தும் நிலைக்கு வந்திருக்கின்றனர்.

அறிவு ரீதியிலான அறிவியல் மற்றும் மனிதநேயக் கொள்கைகள் அடிப்படையில் எதிர்ப்பு எந்த வடிவத்தில் தோன்றினாலும் அதற்கு எதிராக கிறிஸ்தவ வலதுசாரிகள் ஊடகங்கள் கொத்தடிமைத்தனமாக உடந்தையாக செயல்பட்டு வருகின்ற உதவி காரணமாக மிகவும் பிற்போக்குக் கருத்துக்களை வளர்த்து வருகிறார்கள் இதுதான் அமெரிக்க அரசியல் சட்டம் பற்றிய பொய்களின் நோக்கமும் மூலாதாரமும் ஆகும்.

அரசியல் சட்டத்தின் அறிவுஜீவித, அறிவியலின் அறிவுஒளி பாரம்பர்யத்தின் தத்துவார்த்தவேர்கள், அறிவுபூர்வ மற்றும் ஜனநாயக தன்னாட்சி பற்றி மக்களுக்கு அறிவு புகட்டுவதற்கு பதிலாக, அந்த ஆவணத்தில் கண்டுள்ள வெட்கக்கேடான கொத்தடிமை முறை அங்கீகாரம் நீங்கலாக அமெரிக்க மக்களிடம் என்ன கூறப்படுகிறது என்றால் ஒரு கிறிஸ்தவ கடவுளின் அருட்கொடையின் விளைவாகத்தான் தங்களது ஜனநாயக உரிமைகள் கிடைத்திருக்கிறது என்பதுதான்.

தாங்கள் வாழ்கின்ற வசதிகளை மேம்படுத்திக்கொள்ள இயலாத நிலையில் அதற்கான பொருளாதார வசதி அடிப்படையில் அதிகாரங்கள் இல்லாத சூழ்நிலையில் மட்டுமல்ல அதற்கான ஒரு முயற்சியை மேற்கொள்வதற்குக்கூட ஒரு தேவையை உணராத மக்களிடம் தங்களது கருத்தை ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு இதைவிட சிறந்த வழி என்ன? எதிர்காலத்தில் தொழிலாள வர்க்கம் ஆளும் செல்வந்தத்தட்டினரின் பேரழிவு கொள்கைகளை எதிர்பதற்காக ஒரு இயக்கத்தை ஒழுங்கமைத்தால் அதற்கு எதிராக ஒரு ஆவேசம் கொண்ட பிற்போக்கு இயக்கத்தை வளர்ப்பதற்கு இதைவிட சிறந்த வழி என்ன?

1784ல் சுதந்திரப்போர் வீரரான ஈதன் ஏலன் எழுதினார் "நாம் மதகுருக்களின் கொடுங்கோன்மையில் இருக்கும்வரையில், அந்த கொடுங்கோன்மைக்கு எதிரான முறைகளுக்கு ஒத்துவராத இயற்கை மற்றும் அறிவுபூர்வமான சட்டத்தை எந்தக் காலத்திலுமே அவர்கள் தங்களது சொந்த நலன்கருதி தள்ளுபடி செய்துகொண்டே இருப்பார்கள்." (ஜேக்கோபி, பக்கம் 18.)

இன்றைய தினம் அமெரிக்க முதலாளித்துவ வர்க்கம் ஒருகாலத்தில் ஒரு புரட்சிகர வர்க்கமாக இருந்து நிலப்பிரபுத்துவ பிற்போக்குத்தனத்திற்கும், மன்னர் ஆட்சிக்கும் எதிராக போர்புரிந்த தங்களது போராட்ட பாரம்பரியத்தை நீண்டகாலத்திற்கு முன்னரே உதறித்தள்ளிவிட்டது. அது இப்போது சமூக பிற்போக்குத்தனத்தை நியாயப்படுத்தும் ஒரு முயற்சியாகவும், மற்றும் தொழிலாள வர்க்கம் விஞ்ஞானபூர்வமான சோசலிசத்தின் அடிப்படையில் வர்க்கப் போராட்டத்தின் புறநிலை விதிகளையும் தனது சொந்த வரலாற்று பாடங்களையும் புரிந்து கொள்ளாது தடுப்பதற்காகவும் மதத்தின் மிகவும் வலதுசாரி வடிவத்தை முன்னுக்கு கொண்டு வருகின்றது.

See Also :

டெர்ரி ஷியாவோவின் வழக்கும் அமெரிக்காவின் அரசியல், கலாச்சார நெருக்கடியும்

ஷியாவோ வழக்கு: புஷ்ஷும், காங்கிரஸும் விஞ்ஞானத்தையும் அரசியலமைபையும் மிதித்துத் தள்ளுதல்

Top of page