World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

Threats of a new military coup in Fiji

பிஜியில் ஒரு புதியதொரு இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பின் அச்சுறுத்தல்கள்

By Frank Gaglioti
11 August 2005

Use this version to print | Send this link by email | Email the author

2000ல் ஒரு ஆட்சிகவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்த ஐந்தாண்டுகளுக்கு பின்னர், இந்த சிறிய தீவில் ஒரு முழுமையான அரசியல் நெருக்கடி ஏற்படக்கூடும் என்று அச்சுறுத்துகின்ற வகையில் பிஜி நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் விவாதிக்கப்பட்டு வருகிறது. 2000ல் நடைபெற்ற நாட்டு துரோகத்திற்காக தற்போது ஆயுள்சிறை தண்டனை பெற்றுவரும் ஆட்சி கவிழ்ப்பு தலைவர் ஜோர்ஜ் ஸ்பைட் உட்பட, ஆட்சி கவிழ்ப்பில் சம்மந்தப்பட்டவர்களுக்கு பொது மன்னிப்பு தரவேண்டும் என்ற ஒரு முன்மொழிவை உள்ளடங்கிய சமரச இணக்கம், சகிப்புத்தன்மை மற்றும் ஐக்கியத்திற்கான மசோதாவின் முக்கிய கூறுபாடு கசப்பான கருத்து வேறுபாடுகளை கிளறிவிட்டிருக்கிறது.

2000 மே இல், ஸ்பெய்டும் ஒரு சில துப்பாக்கி ஏந்திய நபர்களும் நாடாளுமன்ற கட்டிடத்தை கைப்பற்றி, பிரதமர் மஹேந்திர சவுத்திரி தலைமையிலான தொழிற்கட்சி அரசாங்கத்தை ஏறத்தாழ இரண்டு மாதங்கள் பிணைக்கைதிகளாக பிடித்துக்கொண்டனர். ஸ்பெய்ட் தனது சொந்த அரசாங்கத்தை அமைப்பதற்கு தவறிவிட்டாலும், இந்திய இனத்தை சேர்ந்த சவுத்திரிக்கு பதிலாக பிஜியன் இன ஸ்தாபனங்களின் ஆதரவோடு இன்றைய பிரதமரான Laisenia Qarase மாற்றம்செய்யப்பட்டு ஆட்சிக்கவிழ்ப்பின் வகுப்புவாத நோக்கத்திற்கு ஆதரவான ஒரு நிர்வாகம் அமைக்கப்பட்டது.

ஸ்பைட்டும் அவரோடு சேர்ந்து சதிசெய்த பலரும் விசாரிக்கப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டனர். ஆனால் அந்த ஆட்சிக்கவிழ்ப்பு வருவதற்கு காரணமாக இருந்த எந்த பதட்டங்களுக்கும் தீர்வு காணப்படவில்லை. இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மசோதா குராசி பிஜி மேலாதிக்கவாதிகளை ஆதரித்து அவர்களுக்கு தூண்டுகோலாக அமைந்திருக்கிறது. நாட்டில் ஆழமாக நிலவுகின்ற சமூக நெருக்கடிகளை தீர்த்து வைப்பதற்கு இயலாத ஆளும்தட்டின் பிரிவுகள் திரும்பத் திரும்ப இந்தியர்கள் இனத்தவர் மீது கடும் வெறுப்பை கிளறி விடுகின்றனர். இவர்கள் மக்கள் தொகையில் பாதிப்பேராக உள்ளதுடன், தங்களது சொந்த கொள்கைகள் தோல்வியடைந்து விட்டதிலிருந்து மக்களது கவனத்தை திசை திருப்புவதற்கு வகுப்புவாதத்தை பாவிக்கின்றனர்.

இந்த மசோதாவிற்கு அரசியல் ஸ்தாபனத்தின் பிரிவுகளும் அரசு சாதனங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏனென்றால் அத்தகைய நகர்வு அரசியலில் ஸ்திரமற்றதன்மையும், வெளிநாட்டு முதலீட்டாளர்களும் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற பிராந்திய வல்லரசுகளும் தங்களை அந்நியப்படுத்துவிடும் என்றும் ஆழமாக கவலையடைந்துள்ளனர். சென்ற மாதம், பிஜி இராணுவ தளபதி பிராங்க் பைனிமாராமா அந்த சட்டத்தை கண்டித்துடன் அது நிறைவேற்றப்படுமானால் அரசாங்கத்திற்கு எதிராக இராணுவம் நடவடிக்கை எடுக்க முயலும் என்று எச்சரித்தார். அவர் நாடாளுமன்ற குழுவிற்கு தாக்கல் செய்த எட்டுப்பக்க மனுவில் இந்த அச்சுறுத்தல்கள் அடங்கியிருந்துடன் அவற்றின் சில பகுதிகள் ஜூலை 12ல் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தன.

தமது மனுவில் பைனிமராமா அந்த மசோதா "ஊழல் மலிந்த குறுகலான நோக்கத்தைகொண்ட'' தயாரிப்பு என்று வர்ணித்தார். "நாட்டில் ஸ்திரமற்றதாக்க முயலுகின்ற எவருக்கும் ஜோர்ஜ் ஸ்பைட்டுக்கு ஏற்பட்ட நிலைதான் உருவாகும்... இப்போது நுக்குலா [சிறை தீவு] நிரம்பிவிட்டது, மற்றும் தேவைப்பட்டால் ஸ்திரமற்றதாக்க விளைவிக்க விரும்புவோர்க்கு நுக்குலாவிற்கு அருகிலுள்ள தீவை நிரப்புவதற்கு பயன்படுத்தவோம்". என்று அவர் குறிப்பாக அரச வழக்கு தொடுனர் Qoriniasi Baleயும், சமரச இணக்க அமைச்சக தலைமை நிர்வாகி Apisalome Tudreu யையும் நாட்டை ஸ்திரமற்றதாக்க இயங்கி வருவதாக சுட்டிக்காட்டினார்.

பைனிமாரமா அறிக்கைக்கு அரசாங்கத்திலிருந்து ஒரு ஆத்திரமான பதில் வந்தது. ஆனால் அது அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை. அது எதைக்காட்டுகிறது என்றால் இராணுவ தளபதிக்கு கணிசமான ஆதரவு இராணுவத்தில் மட்டுமல்ல, ஆனால் பரந்தரீதியாக ஆளும் வட்டாரங்களிலும் நிலவுகிறது என்பதைத்தான். உள்விவகாரங்கள் அமைச்சர் ஜோசபா வோசனிபோலா மிகவும் நொண்டிச்சாக்காக" எங்களது இராணுவ அமைப்புக்கள் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம், ஆனால் அதன் இன்றைய தலைமை சந்தேகத்திற்குரியது" என்று அறிவித்தார்.

அடுத்தநாள், பிஜி பத்திரிகைகள் பைனிமராமா மனுவில் அதைவிட கடுமையான கருத்து வேறுபாடுகளுக்கு இடமளிக்கும் பகுதியை வெளியிட்டன." RFMF என்கிற [ராயல் பிஜி இராணுவப்படை] இந்த மசோதா நிறைவேறாமல் தடுக்க வேண்டும் அல்லது அது நிறைவேற்றப்பட்டால் அந்த அரசாங்கத்தை ஒழித்துக்கட்ட வேண்டும். இந்த அரசாங்கம் இல்லாமல் நாம் மீண்டுவிட முடியும். ஆனால், இந்த மசோதாவிலிருந்து நாம் மீளவே முடியாது" என்று அது வெளிப்படையாக கூறியிருந்தது.

அமெரிக்க தூதர் டேவிட் லியோன் உடனடியாக ஒரு கூர்மையான கண்டனத்தை தெரிவித்தார், "முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக முறையில் அமைந்த ஒரு அரசாங்கம் நாடாளுமன்றத்தில் ஒரு மசோதாவை முன்மொழிகின்ற அதன் அதிகாரங்களுக்கு எதிராக அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்ட நடவடிக்கை எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று அறிவித்தார். அதே நேரத்தில், அந்த மசோதாவிற்கு அமெரிக்காவின் எதிர்ப்பை அவர் மீண்டும் வலியுறுத்திக் கூறுகையில், அது எதிர்காலத்தில் குழப்பத்திற்கு இட்டுச்செல்லும் என்று கூறினார்.

நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் பில் கொவ் அதேபோன்றதொரு அறிக்கையை வெளியிட்டார் மற்றும் ஜூலை 27ல், ஆஸ்திரேலிய அரசாங்கம் சுற்றுலா பயணிகளுக்கு பிஜியை சுட்டிக்காட்டி ஒரு எச்சரிக்கை வெளியிட்டது, அதில் "பிஜியில் 2000ல் நடைபெற்ற ஆட்சிக்கவிழ்ப்பு தொடர்பான சமரச இணக்கம், சகிப்புத்தன்மை, ஐக்கியத்திற்கான மசோதா ஆகியவற்றின் கருத்து வேறுபாடுகள் சுற்றிலும் பதட்டங்கள் தோன்றியுள்ளன" என்று குறிப்பிட்டுள்ளது.

இந்த நாட்டில் தங்களது கணிசமான மூலோபாய மற்றும் பொருளாதார நலன்களுக்கு அச்சுறுத்தலாக உருவாகியுள்ள அரசியல் ஸ்திரமற்றதன்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற வகையில் ஸ்பைட் மீதும், மற்றும் இதர இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதிகாரர்கள் மீதும் வழக்கு தொடரப்பட வேண்டுமென்று கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக ஆஸ்திரேலியாவும், நியூஸிலாந்தும் வற்புறுத்தி வந்தன. பிஜியில் முக்கிய பதவிகளில் ஆஸ்திரேலிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று குராசியை கன்பேரா வற்புறுத்தி வந்தது. பிஜியின் போலீஸ்கமிஷனராக பணியாற்றி வருகிற ஒரு முன்னாள் ஆஸ்திரேலிய போலீஸ் அதிகாரியான ஆண்ரூ ஹூக்ஸ், பொது மன்னிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் தான் இராஜினாமா செய்துவிடுவதாக கோடிட்டுக் காட்டியுள்ளார்.

தமது அரசாங்கம் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் என்று அமெரிக்காவிற்கு மீண்டும் உறுதியளிக்க குராசி முயன்றிருக்கிறார். அவர்கள் நமது சிந்தனையுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் அதை நாம் மரியாதையோடு சகிப்புத் தன்மையோடும் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கேட்க வேண்டும். போலீஸ் மற்றும் தலைமை பொது வழக்கு தொடுனர், நீதிமன்றங்களின் சுதந்திரத்திலோ மற்றும் அதிகாரத்திலோ எந்தவிதமான தலையிடும் இருக்காது, இருக்க முடியாது'' என்று அவர் கூறினார்

தேசிய பாதுகாப்பு சபையில் ஜூலை 18ல் குராசி கூட்டத்தை நடத்தினார். அதில் பாலே, வோஸனிபோலா, நிதியமைச்சர் ஜோன் குப்வாபோலா வெளியுறவு அமைச்சர் காலியோபட்டே தவோலா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், பயனிமராமா மற்றும் ஹீயுகஸ் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்படவில்லை. கூட்டத்தை தொடர்ந்து ஒரு அறிக்கையை குராசி வெளியிட்டார். "நாட்டின் நிலவரம் ஸ்திரத்தன்மையுடன் உள்ளது என்று இராணுவத்தினரும், போலீசாரும் தந்திருக்கின்ற உறுதி மொழிகளை மீண்டும் வலியுறுத்திக்கூற நான் விரும்புகிறேன்" என அவர் அறிவித்தார்.

அந்த பொதுமன்னிப்பு மசோதாவை நிறைவேற்றுவதில், குராசி உறுதியாக இருக்கிறார் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. அந்த சட்டம் 2006 தேர்தல்களுக்கு அவரது தேர்தல் பிரசாரத்தின் ஓர் அங்கமாக இருப்பது மட்டுமல்லாமல், ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் பங்கெடுத்துக்கொண்ட மற்றவர்கள் தொடர்பான விசாரணைகள் உண்மையிலேயே அந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியை தூண்டிவிட்டவர்களை அம்பலப்படுத்துவதாக அச்சுறுத்திக்கொண்டிருப்பதால், அந்த விசாரணைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் அவர் விரும்புகிறார். சென்ற ஆண்டு, பிஜியின் துணை ஜனாதிபதி Ratu Jope Seniloli யும் கீழ்சபை துணை சபாநாயகர் உட்பட நான்கு இதர முன்னணி அரசியல் தலைவர்களும் நாட்டிற்கு துரோகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலும், மரண தண்டனைக்குரிய குற்றத்தை புரிவதற்கு ஒரு சட்டவிரோதமான உறுதிமொழி எடுத்துக்கொண்டார்கள் என்ற அடிப்படையிலும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அந்த மசோதாவிற்காக குராசி தீவிரமாக ஆதரவு திரட்டி வருகிறார். சென்ற மாதம் பாரம்பரிய பிஜி இனத்தலைவர்களின் பெரும் குழு (Great Council of Chiefs) அந்த மசோதாவை ஏற்றுக்கொண்டது. அதே போன்று 14 மாகாண சபையிலும் அந்த மசோதாவை ஏற்றுக்கொண்டது.

தொழிற்கட்சி தலைவரான சவுத்திரி அக்குழுவை விமர்சித்தார். "அதன் தலைவர்கள் பிரச்சனையை முறையாக ஆராய தவறிவிட்டனர் மற்றும் இது பிஜியின் எதிர்காலத்திற்கு நன்மை பயப்பதாக அமையவில்லை" என்று அறிவித்தார். ஆனால் தொழிற்கட்சி அப்பட்டமான ஜனநாயக விரோத சட்டத்திற்கு எதிராக எந்தவிதமான திட்டமிட்ட ஒருங்கிணைந்த திட்டமிடலையும் நடத்தவில்லை.

இராணுவத் தளபதி பைனிமராமா, Great Council அந்த மசோதாவை ஆதரிக்க கூடாது என்று ஏற்றுக்கொள்ளச் செய்ய முயன்றார் அவர் குறிப்பிட்டார் 2000 ஆட்சி கவிழ்ப்பை நியாயப்படுத்தினால் அது சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் அமைப்புக்களை பலவீனப்படுத்திவிடும். இன்றைய தினம் நாம் காண்கின்ற பிஜியை மீண்டும் உருவாக்குவதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் அனைத்து நல்ல பணிகளையும் சீர்குலைப்பதாக அமைந்துவிடும் என்று அவர் கூறினார். Great Council அந்த சட்டத்தை ஆதரித்த பின்னரும் அவர் மீண்டும் அதை கண்டித்தார். "அந்த நடவடிக்கைகள் சட்ட பூர்வமாகவும் தார்மீக நெறிப்படியும் தனிமனித ஒழுக்க நெறிப்படியும் தவறானது" என்று கண்டித்தார்.

தலைநகர் சுவாவில் கொந்தளிப்பு அதிகரித்துள்ளது. இந்த மசோதா ஏற்கனவே முதலாவது கட்ட விவாதத்தை முடித்துவிட்டது மற்றும் இந்த ஆண்டு பிற்பகுதியில் வாக்கெடுப்பு நடைபெறவிருக்கிறது. சென்ற வாரம், நாடாளுமன்ற கட்டிட வளாகத்தை சுற்றி போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது, சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன, சாதாரண உடுப்புகளில் அதிகாரிகளும் அதிரடிப்படைப்பிரிவினரும் அந்தப் பகுதிக்குள் சுற்றி வருகின்றனர்.

இந்த சட்டம் நிறைவேற்பப்பட்டுவிடுமானால், உடனடியாக ஒரு அரசியல் நெருக்கடி வெடிக்கும். "இப்படித்தான் உள்நாட்டு போர்கள் உருவாகின்றன மற்றும் அத்தகையதொரு மோதலின் சாத்தியமான விளைவுகள் குறித்து பொதுமக்கள் நன்றாகவே அறிந்திருக்கின்றனர். அத்தகையதொரு மோதலால் பேரழிவு தவிர வேறு ஒன்றும் நடக்காது" என்று Fiji Sun பத்திரிகை ஒரு தலையங்கத்தில் எச்சரித்திருக்கிறது.

Top of page