World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Protests against Samsung factory closure

ஜேர்மனி: சாம்சுங் ஆலை மூடலுக்கு எதிர்ப்புக்கள்

By Carola Kleinert and Lucas Adler
3 December 2005

Use this version to print | Send this link by email | Email the author

பேர்லினில் நவம்பர் 27ம் தேதியன்று சாம்சுங் ஆலையின் முன்வாயிலை அடைத்து கிட்டத்தட்ட 800 தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொழிற்சங்க பிரதிநிதிகள் கொடுத்த தகவல்களின்படி, ஒரு நாள் வேலைநிறுத்தம் அதிகாலையில் கடுமையான குளிர் இருந்தபோதிலும் கூட தொடங்கியது. மூன்று பணி நேரத் தொழிலாளர்களும் இதில் பங்கு பெற்றிருந்தனர்.

இந்த ஆண்டு இறுதியில் பேர்லின் ஆலை மூடப்பட இருக்கிறது என்று சாம்சுங் நிர்வாகம் செப்டம்பரில் அறிவித்ததை அடுத்து பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கொரியாவை தளமாகக் கொண்டுள்ள சாம்சுங் அமைப்புக்கள் அப்படியும்கூட, கணினிகளிலும் தொலைக்காட்சி பெட்டிகளிலும் பயன்படுத்தப்படும் கத்தோட் கதிர் மென்குழாய்கள் (cathode-ray tubes -CRTs) தயாரிக்கும் இந்த ஆலையை மூடுவதாக உறுதி பூண்டுள்ளனர்.

மொத்தம் உள்ள 800 வேலைகளில் கிட்டத்தட்ட 750 வேலைகள் இல்லாது போகவிருக்கின்றன. எஞ்சியுள்ள 50 பணியாளர்கள் நிறுவனத்தின் ஐரோப்பிய ஆராய்ச்சி மையம் அல்லது இதன் பணித்துறை, விற்பனைப் பிரிவுகளில் வேலை பெறுவர்.

Tagesspiegel கொடுத்துள்ள தகவல்படி, ஆய்வு மையப் பிரிவு "Organic LED screens (OLEDs) என்று அழைக்கப்படும் திரைத் தயாரிப்புக்கள் வளர்ச்சியில் கவனத்தை ஒருமுகப்படுத்தும்; இதையொட்டி இப்பொழுதுள்ள தட்டை வடிவமைப்புக்கள் காட்சியில் வெற்றிபெறும் மற்றும் தோராயமாக எட்டு ஆண்டு காலத்தில் பெரிய அளவு உற்பத்தியில் நுழையக் கூடும்.

சாம்சுங் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் CRT க்களை உற்பத்தி செய்வது பொருளாதார ரீதியில் இயலாது என்று ஆலை மூடுவதை நியாயப்படுத்தினார். பழைய சீரான CRT க்களுக்கு சந்தையில் சரிவு ஏற்பட்டதால் இந்த நிலை என்றும், தொலைக் காட்சிப் பெட்டிகளில் இப்பொழுது தட்டைத் திரையில் பயன்படுத்தப்படும் "மெலிந்த" குழாய்கள், முந்தைய கத்தோடு கதிர் குழாய்கள் பயன்பாட்டில் இருந்து மாற்றப்பட்டுவிட்டதால் இந்த முடிவு என்றும் கூறப்படுகிறது. சீனா அல்லது இந்தியா போன்ற குறைந்த கூலி உள்ள நாடுகளில் இருந்து CRT க்கள் இறக்குமதி செய்யப்படுவதும் கூட அளவுக்கதிக கொள்திறனுக்கும் விலை வீழ்ச்சிகளுக்கும் வழிவகுத்துள்ளது.

ஆலை மூடல் அறிவிக்கப்பட்டதை உடனடியாகத் தொடர்ந்து Betrebsrat (பணிக்குழு) மற்றும் தொழிற்சங்கம் இரண்டும் சேர்ந்து பேர்லின் நகர மன்றத்திற்கு வெளியே பணியாளர்களின் ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தன. ஒரு வாரம் கடந்த பின்னர் 100 தொழிலாளர்கள் கொரியத் தூதரகத்திற்கு ஒரு மோட்டார் ஊர்வலம் ஒன்றை நடத்தினர். அதற்கு இரண்டு வாரம் கழித்து, பேர்லினின் Potsdamer Platz வில் இன்னும் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அக்டோபர் 28 அன்று, பல பேருந்துக்களில் பேர்லின் ஆலைத் தொழிலாளர்கள், பணியாளர்கள் Frankfurt am Main- ல் உள்ள Schwalbach க்கு ஊர்வலமாகச் சென்று சாம்சுங்கின் ஐரோப்பிய தலைமை அலுவலகத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். நவம்பர் 14ம் தேதி, மற்றும் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது; அப்பொழுது பல மொழிகளிலும் துண்டுப் பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.

நவம்பர் 21ம் தேதி ஒரு ஒரு-நாள் வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது. ஆலைவாயில் முற்றுகைக்கு இரண்டு நாட்கள் முன்னதாக, தொழிற்சங்க ஒற்றுமைக் கூட்டம் தொழிற்சங்க அதிகாரிகள் மற்றும் பேர்லின் நகரக்குழுவின் அரசியல்வாதிகளால் இணைந்து நடத்தப்பட்டது. நவம்பர் 30 அன்று பணியாளர்கள் ஜேர்மன் பாராளுமன்றம் முன் தன்னுடைய குறைகளை முன்வைத்தனர்; டிசம்பர் 6ம் தேதி தொழிலாளர்கள் இன்னும் ஒரு எதிர்ப்பு நடவடிக்கையை, ஆலைவாயில் முன்பு தங்கள் பணியில் அணியும் காலணிகள் குவிப்பு என்னும் முறையில் ஏற்பாடு செய்ய உள்ளன.

இந்த எதிர்ப்புக்களோடு இணைந்த வகையில், Betriebsrat, IG Metall தொழிற்சங்கம் மற்றும் தொழிற்சங்கத்தால் அமர்த்தப்பட்டுள்ள நிர்வாக மேலாண்மை ஆலோசனைப் பிரிவு ஆகியவை ஒன்றாக ஒரு திட்டத்தை அபிவிருத்தி செய்து, CRT க்கள் உற்பத்தியைக் காப்பாற்றி, நாளடைவில் ஆலையை மெல்லிய இழையுடைய குழாய்கள் தயாரிப்பதற்கு ஏற்ப மாற்றும் நுட்பத்தை கூறியுள்ளன. பரந்த அளவில் ஊதிய, வேலைப்பணி சலுகைகள் உள்ளடக்கிய இத்திட்டம் சாம்சுங் நிர்வாகத்தால் நிராகரிக்கப்பட்டது.

சமூக ஜனநாயகக் கட்சியினர், மற்றும் PDS கட்சி, மற்றும் சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் ஆளுமையில் உள்ள பேர்லின் நகர மன்றம், இந்த விவகாரத்தில் குறுக்கிட்டு ஆலையை மூடவேண்டாம் என்று சாம்சுங்கிற்கு அறிவறுத்த முற்பட்டது. முன்னாள் கூட்டாட்சி பொருளாதார மந்திரியான Wolfgang Clement (SPD), மற்றும் பொருளாதாரத் துறை மேல்மன்ற உறுப்பினரான Harald Wolf (PDS) இருவரும் சொந்த முறையிலும் நிர்வாகத்திற்கு கடிதங்கள் எழுதியுள்ளனர். பத்திரிகை தகவல்படி, இவர்களுடைய கடிதத்திற்கு பதில் கூட வரவில்லை.

நவம்பர் மாத நடுவில் தொடர்ச்சியான ஆர்ப்பாட்டங்கள், பல பணிநேரக் கூட்டங்கள் ஆகியவற்றால் உற்பத்தி நிறுத்தப்பட்டது.

சாம்சுங் ஆலை இப்பொழுதுள்ள கிழக்கு பேர்லின் பகுதியில் ஒரு நீண்டகால தொழில்முறை உற்பத்தி வரலாறு உள்ளது. 1887ம் ஆண்டு AEG தன்னுடைய முதல் ஆலையை இங்கு நிறுவியது. 1915க்கும் 1917க்கும் இடையே AEG இன்னும் அதிகமான ஆலைகளை நிறுவியது. 1938க்குப் பின்னர் Telefunken CRT க்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின், அங்கு செயல்பட்டு வந்த ஒரு மின்னணுவியல் ஆய்வுக் கூடம், அதையும் தவிர சோவியத் நிறுவனமான SAG, CRT க்களை உற்பத்தி செய்து வந்தன. 1952ம் ஆண்டு, சோவியத் நிறுவனம் கிழக்கு ஜேர்மனிய அரசாங்கத்தின் சொந்தத் தொழில் நிறுவனமாயிற்று.

1960 களில், கிழக்கு ஜேர்மனியில் இந்த ஆலை அதன் தொலைக்காட்சி பொறியியல் நுட்பத்திற்காக நன்கு அறியப்பட்டிருந்தது. 1984ம் ஆண்டில் இருந்து இது வண்ண CRT க்களைத் தயாரித்து வந்தது. 1990ல் பேர்லின் சுவர் பொறிந்த பின், இந்த இடம் Upper Spree Cable Works, ஒரு டிரான்ஸ்பார்மர் ஆலை, உருக்கு ஆலை, பகுதிப் பொருட்கள் உற்பத்தி செய்யும் ஆலை, வானொலி, தொலைத் தொடர்பு நுட்பக் கருவிகள் ஆலை ஆகியவற்றைக் கொண்டிருந்தது. இந்த நிறுவனங்கள் அனைத்தும் மொத்தத்தில் 40,000 தொழிலாளர்களுக்கும் மேலாகக் கொண்டிருந்தன.

1993ம் ஆண்டில் சாம்சுங் CRT ஆலையை வாங்கியது; அப்பொழுது அந்த ஆலை திவாலாகும் நிலையில், ஒரு பெயரளவு 1 deutschemark தொகைக்காக இருந்தது. பல ஆண்டுகளில் சாம்சுங் அரசு நிதியமாகக் கிட்டத்தட்ட 30 மில்லியன் யூரோக்களைப் பெற்று தொழில் இடத்தைத் தக்க வைத்துக் கொண்டு உற்பத்தி ஆலைக்கான முதலீட்டையும் வழங்கியது. முன்னாள் கிழக்கு ஜேர்மன் காலத்தில், தொலைக்காட்சி பொறியியல் ஆலை 9,000 தொழிலாளர்களைக் கொண்டிருந்தது; இன்று 800 வேலைகள்தான் எஞ்சியுள்ளன. சாம்சுங் ஆலை முடப்படுவது அளிப்பு சங்கிலியில் இன்னும் 250 வேலைகளை நீக்கிவிடும்.

பல நேரமும், Betriebsrat மற்றும் IG Metal கொடுத்த அழுத்தத்தால், இங்கிருந்த பணியாளர்கள் ஊதியக் குறைப்பை ஏற்றிருந்தனர். மார்ச் மாதத்தில் தொழிற்சங்க மற்றும் பணிக்குழு ஒரு 12 சதவிகித ஊதியக் குறைப்பை, வேலைகள் இழப்பு ஏற்படாமல் இருப்பதற்காக ஏற்றுக் கொண்டது.

Betriebsrat கருத்தின்படி இந்த ஆலை ஆண்டு ஒன்றிற்கு 30 மில்லியன் CRT க்களை உற்பத்தி செய்கிறது; 2004ம் ஆண்டு 26 யூரோ மில்லியன் இலாபத்தை ஈட்டியது. பேர்லின் ஆலையில் கிடைத்த இலாபத்தை ஒட்டி சாம்சுங் ஒரு புதிய ஆலையை ஹங்கேரி நாட்டில் தொடங்க முடிந்தது; அங்கு இப்பொழுது 20 மில்லியன் CRT க்கள் ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி செய்யப்படுகின்றன.

பேர்லினில் நிகழ்ந்த உற்பத்தி இப்பொழுது போலந்து அல்லது ஹங்கேரிக்கு மாற்றப்படும்; அங்கு சாம்சுங் ஜேர்மனிய தொழிலாளர் செலவினங்களில் நான்கில் ஒரு பங்கைத்தான் கொடுக்கும்; அதாவது மாதத்திற்கு கிட்டத்தட்ட 400 யூரோக்கள் ஆகும். இன்னும் கூடுதலான வகையில் பேர்லின் ஆலைக்கு அரசாங்க நிதி இல்லை என்பது அங்கு ஆலையைத் தொடர்வதில் சாம்சுங்கிற்கு அக்கறை இல்லை என்று ஆகியுள்ளது.

1989ல் இருந்து கிட்டத்தட்ட 300,000 தொழிற்துறை வேலைகள் பேர்லினில் குறைக்கப்பட்டு விட்டன, அதேவேளை கடந்த 10 ஆண்டுகளில் பணித் துறையில் 70,000 வேலைகள்தான் தோற்றுவிக்கப்பட்டன.

சாம்சுங் ஆலை மூடுதலைத் தவிர, ஜப்பானிய வீடியோ உதிரிப்பாக உற்பத்தியாளர்களான JVC யும் தன்னுடைய ஆலையை மூட உள்ளது (235 வேலைகளில் 225 இழப்பிற்கு உட்படுகின்றன.) கட்டிட அமைப்புக் கருவிகள் தயாரிப்பு நிறுவனமான CNH இந்த ஆண்டு இறுதிக்குள் மூடப்பட இருக்கிறது. 2006 இறுதிக்குள் Siemens, ரயில் பெட்டித் தயாரிப்பு நிறுவனம் Bombardier மற்றும் அலுவலகப் பொருட்கள் தயாரிப்பாளர் Herlitz ஆகியவையும் வேலை இழப்பை திணித்துவிடும். Reemstma என்னும் சிகிரெட் தயாரிப்பு நிறுவனத்தில் வேலைபார்க்கும் ஊழியர்கள், Daimler Chrysler, Telecom இவற்றில் உள்ள ஊழியர்களின் எண்ணிக்கையும் குறையும். அரசாங்கத்தின் நிறுவனமான Deutsche Bahn இரயில் நிறுவனமும் அதன் தலைநகரை பேர்லினில் இருந்து ஹம்பேர்க்கு மாற்ற இருப்பதாகக் கூறியுள்ளது; இதையொட்டி தலைநகரத்தில் 1000 வேலைகளுக்கு மேல் இழக்கப்பட்டுவிடும்.

அக்டோபர் மாதம் அதிகாரபூர்வமாக 304,000 பதிவுசெய்யப்பட்ட வேலை தேடுவோர் பேர்லினில் இருந்தனர்; இது வேலையின்மை விகிதத்தை 18.1 என்று காட்டியது; இது கிழக்கு ஜேர்மனிய மாநிலங்களான Saxony Anhalt, Mecklenburg Pomerania விற்கு அடுத்த படியாக மோசமான சதவிகிதமாகும். நிதிப்பிரிவு செனட் உறுப்பினர் Thilo Sarrazin (SPD), "வேலையின்மை விகிதம் 15ல் இருந்து 17 சதவிகிதத்திற்குள் இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்" என்று கூறினார். எஞ்சியுள்ள 97,000 தொழில் துறை வேலைகளையாவது தக்கவைத்துக் கொள்ள முயற்சிகள் வேண்டும் என்பதைத்தான் எதிர்பார்க்கலாம் என்று அவர் கூறினார்.

சாம்சுங்கை பொறுத்தவரையில், பேர்லின் நகர மேயரான Wowereit அதன் உற்பத்தி வசதிகளை தக்க வைக்கும் வகையில் நிறுவனத்திற்கு நிதிய உதவிகளைத் தொடர்ந்து அளிக்க வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளார். அவ்வளவு பணத்திற்கு ஏற்கனவே பெரும் கடனில் மூழ்கியுள்ள நகர அரசாங்கம் எங்கு போகும் என்பது பற்றி அவர் விவரிக்கவில்லை. ஆனால் இன்னும் கூடுதலான வகையில் சமூகப் பணிகளைக் குறைத்து அப்படி நிதி உதவிகள் கொடுக்கப்படும் என்பது தெளிவாகும்.

SPD, PDS இரண்டும் அரசாங்க உதவியை மில்லியன் கணக்கில் எடுத்துக் கொண்ட பின்னர், சாம்சுங் உதவித்தொகை வரவில்லை என்றவுடன் இடத்தை விட்டு நீங்குவதாகக் கூறியுள்ளது பற்றிப் "பெரும் சீற்றத்தைக்" காட்டியுள்ளன. ஆனால் அவற்றின் சீற்ற உணர்வு வேலையின்மையினால் அச்சுறுத்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக இல்லை. நகரத்தின் சொந்த நிறுவனங்களிலேயே பல ஆண்டுகளாக தொடர்ந்து சிக்கன நடவடிக்கைகள் வந்ததால் 10,000 வேலையிழப்புக்கள் ஏற்பட்டதற்கும் பேர்லின் செனட் மன்றம் அசட்டைத்தனத்தைத்தான் காட்டியுள்ளது.

தொழிற்சங்கங்களின் தேசியப் பார்வை மற்றும் இலாபமுறைக்கு தயக்கமற்ற பாதுகாப்பு கொடுத்தல் ஆகியவை நீண்ட காலத்திற்கு முன்னரே அவர்களை வேலையளிப்போர், அரசியல்வாதிகளுக்கு குற்றம்புரிவதில் துணை நிற்பவர்களாக ஆக்கிவிட்டன. ஜேர்மனிய தொழிலின் போட்டித்தன்மை அதிகரிக்கப்பட வேண்டும் என்று வாதிடும் அரசியல்வாதிகளுடன் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரும் நிர்வாகத்திற்கு ஆலோசகர்களாக போய்விட்டார்களே ஒழிய தொழிலாளர்கள் நலன்களைக் காப்பதில் அக்கறையைக் காட்டவில்லை.

சாம்சுங்கின் பேர்லின் ஆலை "தப்ப வேண்டும்" என்ற கருத்துரை Betriebsrat உடைய தலைவரான Wolfgang Kibbbel ஆலும் கூறப்படுகிறது. அவர் இதற்காக 5 மில்லியன் யூரோக்கள் முதலீடு செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறார். பேர்லின் நகர மேயரான Wowereit நிதி ஆதரவினை நீட்டிப்பதற்கான சாத்தியத்தை விலக்கிவிடவில்லை. ஆனால் நிர்வாகம் இத்தகைய ஊக்கக் கருத்துக்களை அதிகம் பொருட்படுத்தவில்லை.

Samsung Electronics Co. Ltd.ல் பேர்லின் தொழிலாளர் தொகுப்பு 2004ல் 10.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிகர லாபம் தரும் கணினி, தொலைத் தொடர்பு, டிஜிடல் முறை மற்றும் தொழில்நுட்ப செயற்பாடுகளில் 55.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் விற்பனை மதிப்புடைய நாடுகடந்த நிறுவனத்தின் போட்டியை எதிர்கொள்ளுகிறது. இந்த நிறுவனம் 113,600 தொழிலாளர்களை உலகெங்கும் 90 இடங்களில், 48 நாடுகளில் கொண்டுள்ளது.

1997ம் ஆண்டு கொரியா ஆசியப் பொருளாதார நெருக்கடியின் மையச் சுழலில் சிக்கியிருந்தபோது, நிர்வாகம் அதன் வணிகத்தை மறுசீரமைத்தது. மறுசீரமைத்தல், முக்கிய பகுதிகளில் கவனக்குவிப்பு என்று கூறப்பட்ட முறை சாம்சுங்கை உலகின் டிஜிட்டல் தொலைக்காட்சி, நினைவாற்றல் சில்லுகள், செல்லிடத் தொலைபேசிகள், தட்டை LCD அமைப்பு இவற்றில் மூன்றாம் இடத்திற்குக் கொண்டு வந்தது. உலகம் முழுவதும் வேறு 9 நிறுவனங்கள்தான் இதன் நிகர வருமானத்திற்கு இணையாக 20004ல் வரமுடிந்தது (10பில்லியன் அமெரிக்க டாலர்கள் அல்லது அதற்கும் கூடவே). மெல்லிய CRT க்கள் ஐரோப்பாவில் விற்கப்படுவதை ஆண்டு ஒன்றுக்கு 4 மில்லியன்கள் அதிகரிக்க 2008க்குள் இயலவேண்டும் என்று சாம்சுங் விழைகிறது. ஆனால் உற்பத்தியோ ஆசியாவில் நடத்தப்படும்.

உற்பத்தி பூகோளமயமாக்கப்படுதல் என்பது சர்வதேச நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றலாம் என்று ஆகியுள்ளது. தேசிய எல்லைகள் இதில் அதிக பங்கைக் கொள்ளவில்லை. குறுகிய கால அளவு என்றால் கூட இலாபத்தை அதிகமாக்க வேண்டும் என்பதுதான், எந்த இடத்தில் ஆலை என்பதை நிர்ணயிக்கிறது. ஊதியங்களும், வரிகளும் குறைவாக எங்கு உள்ளது, எங்கு தொழிலாளர்களுக்கு உரிமைகள் குறைவாக உள்னவோ, அவையெல்லாம் ஆலை நிறுவப்படுவதற்கு உகந்த இடமாகக் கொள்ளப்படுகின்றன.

SPD, PDS ஐப் போலவே, தொழிற்சங்கங்களும் இத்தகைய சர்வதேசச் செயற்பாடுகள் உடைய நிறுவனங்களை எதிர்ப்பதில்லை. சக்திவாய்ந்த சர்வதேச நிறுவனங்களின் அழுத்தத்தை ஒட்டி, இவையும் தங்கள் இடங்கள் மிக நன்மை பயக்கக்கூடியதாக (நிறுவனத்திற்கு) உள்ளதா என்று முன்னிலைப்படுத்த ஒழுங்கு செய்கின்றனர் மற்றும் தொழிலாளர்கள் மீது அதிகரித்த அளவில் கடுமையான தாக்குதல்களை நடத்தத் தயாராக உள்ளனர்.

கொரிய நிர்வாகம் தன்னுடை ஆலையை ஆண்டு இறுதிக்குள் மூடும் திட்டத்தை செயல்படுத்துமேயாயின், Betriebsrat மற்றும் தொழிற்சங்கம் தோல்விக்குத் தயார் செய்து இராஜினாமா செய்துவிடும். ஒரு தற்காலிகத் தீர்வு கிடைக்குமேயானால், அவை நிர்வாகத்தின் ஊதியக் குறைப்புக் கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தும்.

சாம்சுங்குடன் நடக்கும் போராட்டத்தில் தொழிலாளர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய, மற்ற ஆலைகளிலும் தொழிலாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய படிப்பினை, பழைய தொழிலாளர்கள் அமைப்புக்களுடனும் அவற்றின் தேசிய முன்னோக்குடனும் முற்றிலும் முறித்துக் கொள்வதாகும். உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களை ஒரு சோசலிச வேலைத் திட்டத்திற்கான போராட்டத்தில் ஐக்கியப்படுத்தும், ஒரு சர்வதேச முன்னோக்கிற்கு உழைக்கும் மக்கள் கட்டாயம் திரும்ப வேண்டும்.

Top of page