World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Palestinian activist Sami Al-Arian acquitted on charges in Florida

பாலஸ்தீனிய நடவடிக்கையாளர் சமி அல்-அரியன் புளோரிடாவில் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை

By Joe Kay
8 December 2005

Use this version to print | Send this link by email | Email the author

தெற்கு புளோரிடா பல்கலைக்கழகத்தின் முன்னாள் கணணி அறிவியல் பேராசிரியராக இருந்த சமி அல்-அரியன் பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத்திற்கு ஆதரவு கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டமை தொடர்பான 17 குற்றச்சாட்டுக்களில் 8 ல் குற்றவாளி இல்லை என்று டிசம்பர் 6 ல் ஜூரிகள் முடிவு செய்தனர். மீதமிருக்கும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஜூரிகளிடையே முட்டுக்கட்டை நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த ஜூரிக்களின் முடிவு அரசாங்கத்திற்கு ஓரு குறிப்பிடத்தக்க அளவிற்கும் பெரும்பாலும் எதிர்பார்க்கப்படாத தோல்வியாகும். அமெரிக்க மக்களையும், அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களையும் வேவு பார்ப்பதற்கு தேசபக்த சட்டத்தை பயன்படுத்துவதற்கு ஒரு சோதனை வழக்காக அல்-ஆரியன் வழக்கை அது கருதியது. அரசியல் எதிர்ப்பை குற்றவியலாக்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முயற்சியின் ஒரு பெரிய பகுதியாகவும் அது அமைந்தது. அல்-அரியன் தனது வழக்கை பேச்சுரிமைக்கான அடிப்படை அரசியலமைப்பு உரிமையில் நடத்தினார். ''பயங்கரவாதத்தின் மீதான போர்'' என்றழைக்கப்படுவதை ஒரு சாக்குப் போக்காக பயன்படுத்திக்கொண்டு அதை அரசாங்கம் திட்டமிட்டு கீழறுக்க முயன்று வருகிறது.

இந்த வழக்கு பற்றி கருத்து தெரிவித்த அல்-அரியனின் வக்கீல்களில் ஒருவரான லிண்டா மோரினோ ''தொடக்கத்திலிருந்தே இந்த வழக்கு ஒரு அரசியல் நோக்கம் கொண்டதை அறங்கூறாயம் (jury) அதை உணர்ந்து கொண்டது'' என்று குறிப்பிட்டார்.

அவரோடு சக குற்றம் சாட்டப்பட்டிருந்த ஹாதிம் நாஜி ஃபரிஸ் 33 குற்றச் சாட்டுக்களில் 25 லிருந்து விடுதலை செய்யப்பட்டார். மீதமுள்ளவை தொடர்பாக ஜூரிகளிடையே முட்டுக் கட்டை ஏற்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் சக குற்றச்சாட்டாளர்களான சமி தாஹா ஹம்மோதுஜே மற்றும் காசன் சையத் பாலட் ஆகிய இருவரும் எல்லா குற்றச் சாட்டுக்களிலிருந்தும் விடுதலை செய்யப்பட்டனர். விசாரணைக் கட்டம் முடிந்ததும் ஜூரிக்கள் 13 நாட்கள் ஆராய்ந்து முடிவிற்கு வந்தனர்.

வெளிநாடுகளில் மக்களை கொலை செய்வதற்கும் ஊனப்படுத்துவதற்கும் சதிகள் நடத்தப்பட்டன என்ற ஒரு குற்றச்சாட்டு உட்பட, விடுதலை செய்யப்பட்டிருக்கும் அல்-அரியனின் எதிர்காலம் நிச்சயமற்றதாக உள்ளது. முட்டுக்கட்டை நிலையில் உள்ள குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக ஒரு மறு விசாரணை கேட்பதா இல்லையா என்பதை அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை. அதில் ஒன்றுக்கு ---பயமுறுத்தி பணம் பறித்தல்களுக்கான சதி ஆலோசனை---- கணிசமான சிறைத் தண்டனை உண்டு. ஆகவே, விசாரணை முடிவை பொருட்படுத்தாமல் அவர் சிறையில் தொடர்ந்து வைக்கப்பட்டிருப்பார் இதற்கிடையில், உள்நாட்டு பாதுகாப்புத் துறை அவரை நிரந்தர குடியிருப்பு அந்தஸ்த்திலிருந்து நீக்கிவிட்டு நாடு கடத்துவதற்கு முயன்று வருகிறது.

அல்-ஆரியன் வழக்கு பல்வேறு வகைப்பட்ட வழிகளில் ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதலை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அரசியல் நம்பிக்கையை குற்றமயமாக்க முடியும் என்ற அடிப்படையான கருத்துடன் இணைத்து அரசாங்கம் ஒரு தசாப்தத்திற்கு மேற்பட்ட காலாமாக பாரியளவிற்கு வேவு பார்க்கும் பிரச்சாரத்தை அதிகரித்து வந்தது. 21,000 மணி நேரத்திற்கு மேற்பட்ட தொலைபேசி உரையாடல்களையும் அது சேகரித்தது. அத்துடன் மின்னஞ்சல்கள் மற்றும் தொலை நகல்களை (Faxes) கண்காணித்து வந்தது. அவரது வீட்டில் இரண்டு முறை FBI திடீர் சோதனைகள் நடத்தி அவரது சொந்த உடைமைகளை பறிமுதல் செய்தது. விசாரணையின் போது அவருக்கு எதிராக இந்த சான்றுகள் அனைத்தையும் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் முயன்றது.

ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் அல்-அரியன் சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அதில் பெரும்பகுதி தனிமைச் சிறையில் இருந்தார். தனது வக்கீல்களை அணுகுவது கட்டுப்பத்தப்பட்டிருப்பதாக அவர் புகார் கூறினார். தனது தரப்பை பாதுகாத்துக்கொள்ள முயன்ற காலத்தில் கூட தனக்கு சட்டபூர்வமான விவரங்கள் மறுக்கப்பட்டன என்று கூறிய அவர், அடிக்கடி ஆடைகளை களைந்து விட்டு சோதனைகள் நடத்தப்பட்டதாகவும் கூறினார்.

அரசாங்கம் அறிமுகப்படுத்திய மலையளவு உடலியல் ரீதியான சான்றுகள் இருந்தபோதிலும் ---- அரசாங்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகளை மட்டுமே பொறுக்கியெடுத்து அரபு மொழியில் மொழி பெயர்த்து விசாணையின் போது தாக்கல் செய்தது---- அவற்றில் குற்றம் சாட்டப்பட்ட எவருக்கும் எந்த வன்முறைச் செயலோடும் ஒரு தொடர்பு இருந்ததாக எந்த ஆதாரமும் இல்லை.

இஸ்ரேலின் கொள்கையை அவர் வெளிப்படையாக விமர்சித்து வந்தார் என்ற காரணத்திற்காக 10 ஆண்டுகளாக, ஊடகங்களின் சில பிரிவுகளும் சியோனிஸ்ட் அமைப்புக்களும் அல் -ஆரியனை தாக்குதலுக்கு உட்படுத்தின. 1994 ல் PBS ''அமெரிக்காவில் ஜுஹாத்'' என்ற செய்திப்படத்தை வெளியிட்டதை தொடர்ந்து ஆரம்பத்தில் அல்-அரியனுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டன. அதைத்தொடர்ந்து பின்னர் 1995ல் தொடங்கி Tampa Tribune பத்திரிகையாளர் மைக்கல் பெச்சர் ஒரு தொடர் கட்டுரைகளை வெளியிட்டார். Tribune அந்த தேதியிலிருந்து அல்-அரியன் பெயரை குறிப்பிட்டு 700 கட்டுரைகளை வெளியிட்டதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது.

இந்தக் குற்றச் சாட்டுக்கள் தொடக்கத்தில் எழுப்பப்பட்ட நேரத்தில் தெற்கு புளோரிடா பல்கலைக் கழகத்திலிருந்து சம்பளத்துடன் அல்-அரியன் பதவி நீக்கம் செய்யப்பட்டார். எப்படியிருந்தபோதும், ஒரு சுதந்திரமான விசாரணை மூலம் அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கு உண்மையான அடித்தளமில்லை என்று நிரூபிக்கப்பட்டதும் அவர் மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்டார்.

பாலஸ்தீனிய பிரச்சனையில் அவரது வெளிப்படையான கருத்துக்களுக்கு பின்னரும் 1990களின் கடைசியிலும் 2000லும் அல்-அரியன் அரசியலில் தீண்டத்தகாதவராக கருதப்படவில்லை. ஜனாதிபதி கிளின்டன் மற்றும் ஜனாதிபதி புஷ் ஆகிய இருவரையும் அவர் சந்தித்து, அந்த அரசியல் ஸ்தாபனத்தின் பிரிவுடன் தொடர்புகளை வைத்திருந்தார். 2000 தேர்தல் காலத்தில் புஷ்ஷை அவர் ஆதரித்தார்.

எப்படியிருந்தபோதும், 2001 செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு பின்னர் அல்-ஆரியன் மீது தாக்குதல் முடுக்கிவிடப்பட்டது. குறிப்பாக பாக்ஸ் நியூசிற்கு பில் ஓ' ரில்லி (Bill O'Reilly on Fox News) தந்த தீங்கான பேட்டியும் அடங்கும்.

2001 கடைசியில் அரசு இயற்றிய சட்டத்தில் தரப்பட்ட புதிய அதிகாரங்களை பயன்படுத்துவதற்கு அல்-ஆரியன் சிறந்த நபராக கருதப்பட்டார். நிக்ஷன் நிர்வாகத்தில் வெளிநாட்டு புலனாய்வு கண்காணிப்பு நீதிமன்றம் வெளியிடுகின்ற கட்டளைப்படி, இரகசியமாக திரட்டப்படுகின்ற தகவல்களை கிரிமினல் வழக்குகளில் சாட்சியாக பயன்படுத்தப்படுவதற்கு FBI-க்கு தடை விதிக்கும் வகையில் வாட்டர் கேட் மோசடியை தொடர்ந்து சட்டம் இயற்றப்பட்டது. அரசியல் எதிரிகளை அரசாங்கம் வேவு பார்க்கிறது என்று வெளிப்பட்டதை தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் சட்டத்தில் இயற்றப்பட்டன. இரு கட்சி ஆதரவோடு ஏறத்தாழ ஒருமனதாக இயற்றப்பட்ட தேசபக்த சட்டத்தில் இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. இப்படி தகவல்களை பகிர்ந்து கொள்வது அரசியல் சட்டத்திற்கு உடன்பாடானது என்று மத்திய மேல் முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர் மூன்று மாதங்களில் 2003 பெப்ரவரியில் அல்-அரியன் கைது செய்யப்பட்டார்.

''பயங்கரவாதத்தின் மீதான போரில்'' ஒரு பெரிய முன்னேற்றம் என்று புஷ் நிர்வாகம் அவர் கைது செய்யப்பட்டதை பறை சாற்றியது. அப்போது பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத்தின் ''வட அமெரிக்கத் தலைவர்'' அல்-ஆரியன் என்று அட்டர்னி ஜெனரலாக இருந்த ஜோன் ஆஷ்கிராப்ட் நம்ப முடியாத ஒரு கூற்றை தெரிவித்தார். ''பயங்கரவாத தாக்குதலை நடத்துபவர்கள் மற்றும் தெரிந்தே நிதி உதவி கொடுக்கின்ற அல்லது பயங்கரவாத அமைப்புக்களை மேற்பார்வையிடுபவர்கள் இவர்களுக்கு இடையில், அமெரிக்கா எந்த வகையிலும் வேறுபடுத்தி பார்க்காது" என்பதை அல்-அரியன் கைது எடுத்துக்காட்டுவதாக ஆஷ்கிராப்ட் குறிப்பிட்டார்.

அல்-ஆரியன் கைது செய்யப்பட்ட ஒரு வாரத்திற்கு பின்னர் பல்கலைக்கழகம் அவரை பதவியிலிருந்து நீக்கியது. இது அவருக்கு எதிரான வலதுசாரி பிரச்சாரத்தை தழுவிக்கொள்வதாக அமைந்தது. எந்த விதமான முறையான விசாரணையும் இல்லாமல் பதவி நீக்கம் செய்யக் கூடாது என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் ஆட்சேபனைகள் தெரிவித்த பின்னரும் அல்-அரியன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அவர் கைது செய்யப்பட்ட பின்னர் தான் அவர் மீது பகிரங்கமான அவதூறு முடுக்கிவிடப்பட்டது. 2004-ல் புளோரிடாவில் நடைபெற்ற அமெரிக்க செனட் தேர்தல் போட்டியில் அல்-அரியன் வழக்கு ஒரு மைய விவாதப் பொருளாக்கப்பட்டது. ஜனநாயகக் கட்சி முதற்கட்ட தேர்தர்களிலும் அதற்குப் பின்னர் செனட் போட்டியிலும் USF-ன் முன்னாள் தலைவரான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் வெட்டி காஸ்டர் 1990 களின் நடுப்பகுதியில் குற்றச்சாட்டுக்கள் துவக்கப்பட்ட நேரத்தில் அல்- ஆரியன் கைது செய்ய ஆதரித்த அவர் அந்த நடவடிக்கை எடுக்காதவர்களை கண்டித்தார். இந்த பிரச்சாரத்திற்கு எதிர்பார்த்த விளைவுகள் கிடைத்தன. விசாரணைக்கு முன்னர் நீதிமன்றம் நடத்திய ஒரு கருத்துக் கணிப்பில் அல்-அரியன் நிச்சயமாக குற்றம் செய்திருக்க வேண்டும் அல்லது அவர் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை செய்திருக்கக் கூடும் என்று தம்பாவில் (Tampa) குடியிருக்கும் மக்களில் 60 சதவீதம் பேர் வாக்களித்தனர்.

பாரியளவிற்கான வேவுபார்க்கும் நடவடிக்கை மற்றும் பிரச்சார முயற்சிகளுக்கு அப்பால் அல்-ஆரியன் தவறு எதையும் செய்தார் என்பதற்கு திட்டவட்டமான சாட்சியம் எதுவுமில்லை என்று பெரும்பாலான ஜூரிகள் முடிவிற்கு வந்தனர். பத்திரிகைகளுக்கு தங்களது கருத்துக்களை வெளியிட்ட ஜூரிகளில் மிக பெரும்பாலோர் அவரையும் சக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களையும் எல்லாக் குற்றங்களிலும் இருந்து விடுதலை செய்துவிட வேண்டும் என்று ஜூரிகள் விரும்பினர். ஆனால், இரண்டு அல்லது மூன்று பேர் அதை எதிர்த்தனர். அதனால் ஜூரிகளின் முடிவில் முட்டுக்கட்டை நிலை ஏற்பட்டது.

''எங்களில் பத்து பேர் எல்லா குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுதலை செய்து விட வேண்டும் என்று விரும்பினோம். ஆனால், இரண்டு பேர் எந்த சாட்சியப் படி தண்டிப்பது என்பதை எங்களிடம் சொல்லவில்லை. ஆனால், விடுதலை செய்ய வேண்டும் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை'' என்று ரான் என்று அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு ஜூரி தெரிவித்தார். ஒரு புளோரிடா செய்தி பத்திரிகையான செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் டைம்ஸ் தந்துள்ள தகவலின்படி குறிப்பாக நீதிபதி தந்த கட்டளைகளினால் ஜூரிகள் குறிப்பாக ஈர்க்கப்பட்டனர். ''நமது சட்டம் நம்பிக்கைகளை அல்லது ஒரு அமைப்பில் மட்டுமே உறுப்பினராக இருப்பதை மட்டுமே குற்றமயமாக்கவில்லை. ஒரு அமைப்பின் நியாயமான நோக்கத்தின் மீது அனுதாபம் கொண்ட ஒரு நபர் அந்த நோக்கத்தை சட்ட விரோதமான நடவடிக்கை மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று கருதி செயல்படாத நேரத்தில் சட்டப்படியான பேச்சுரிமை நோக்கங்களை பின்பற்றி வருகிறார் என்பதற்காக அவரை தண்டிக்க முடியாது'' என்று நீதிபதி குறிப்பிட்டார்.

தம்பா டிரிபியூன் ''ஒரு ஜீரி தனது முதல் பெயரை மட்டுமே தந்தார். அரசு தரப்பானது, சதி குற்றச்சாட்டுப் புள்ளிகளை இணைப்பதற்கு தவறிவிட்டது. சாட்சியம் நிரூபிக்காவிட்டால் கூட குற்றம் சாட்டப்பட்டவர்கள் இஸ்லாமிய ஜிஹாத்திற்கு உதவி வருகிறார்கள் என்று அனுமானிக்க விட்டு விட்டார்கள் என Thanh குறிப்பிட்டார். இஸ்லாமிய ஜிஹாத் நிர்வாகக் குழுவில் அல்-அரியன் பணியாற்றினார் என்ற அரசு தரப்புக் கூற்றை அவர் நம்பினாலும் அது தண்டிப்பதற்கு நியாயமான காரணமாகாது'' என்று எழுதியது.

''ஒரு எடுத்துக்காட்டாக கறுப்பு பணத்தை நல்ல பணமாக்கும் கணக்கை குறிப்பிட்டார். பல்வேறு கணக்குகளுக்கு பணம் செல்வதை அவர்கள் காட்டினார்கள் ஆனால்... எந்தப் பயங்கரவாத அமைப்பிற்காவது அது சென்றதா என அவர்கள் காட்டவில்லை என அவர் சொன்னதாக அந்த பத்திரிகை செய்தி வெளியிட்டிருக்கிறது. ''அந்தப் பணம் எகிப்து சென்றிருக்குமானால் அதோடு முடிந்தது. அங்கிருந்து வேறு எங்கு சென்றது என்பது நமக்கு தெரியாது. அரசு தரப்பைச் சேர்ந்தவர்கள் அந்த பணம் சென்ற இடத்தை கண்டுபிடித்தனர் என்று கூறிய அவர் அது அறக்கட்டளைக்கு சென்றது என்பதில் ஜீரிகள் ஏற்றுக்கொண்டனர்.''

அல்-அரியன் தரப்பு வக்கீல்கள் குழு, சாட்சிகளை அழைப்பதில்லை என்று முடிவு செய்தது. அல் - ஆரியன் தனது கருத்துக்களை தெரிவிப்பதற்கு அரசியலமைப்பு உரிமை படைத்தவர் என்ற சாதாரண வாதத்தின் அடிப்படையில் தங்களது தரப்பை அவர்கள் எடுத்துரைத்தனர். அவரது வக்கீல்கள் பாலஸ்தீனிய மக்கள் மிகத் தீவிரமான முறையில் சுரண்டப்படுவதையையும் அல்-அரியனின் அரசியல் நடவடிக்கையையும் இஸ்ரேலின் கொள்கைக்கு அவரது எதிர்ப்பயுைம் எடுத்துரைத்தனர்.

அல்-அரியன் பல்வேறு அறக்கட்டளைகளுக்கு அளித்த நன்கொடைகள் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்டன மற்றும் அல்-அரியன் இந்த தாக்குதல்களுக்கு நிதியளிக்க முயன்றார் என்பதை அரசு தரப்பு நிரூபித்தாக வேண்டும் என்று நீதிபதி ஒரு கட்டளையிட்ட பின்னர் அரசு தரப்பு வழக்கு மிகுந்த சங்கடத்திற்கு உள்ளானது.

விடுதலைகளுக்கு பின்னரும் தெற்கு புளோரிடா பல்கலைக்கழகம் கம்ப்யூட்டர் அறிவியல் பேராசிரியர் பதவி அவருக்கு திரும்பக் கிடைக்காது என அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் "USF சாமி அல்-அரியனின் பதவியை ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே ரத்து செய்துவிட்டது மற்றும் அதை மாற்றுவதற்கு எதையும் நாங்கள் எதிர்பார்க்கவில்லை'' என்று குறிப்பிட்டிருக்கிறது.

இரண்டு அரசியல் கட்சிகளுமே ஆதரித்த ''பயங்கரவாதத்தின் மீதான போர்'' என்றழைக்கப்படுவதில் பல்வேறு அம்சங்கள் அடங்கியிருப்பதை சமி அல்-அரியன் வழக்கு மிகக் கூர்மையாக எடுத்துக்காட்டுகிறது. ஜனநாயக உரிமைகள் மீது நடத்தப்பட்டு வருகின்ற பாரியளவு தாக்குதல் பயங்கரவாதத்தை தடுக்கும் நோக்கம் கொண்டதல்ல. ஆனால், அரசியல் கருத்தை எதிர்ப்பவர்களை பழி வாங்கும் நோக்கம் கொண்டது. அல்-அரியனின் முக்கிய குற்றம் என்னவென்றால், அவர் வெளிப்படையாக இஸ்ரேலின் கொள்கைகளை எதிர்த்தார். இஸ்ரேல் அமெரிக்காவின் நெருக்கமான கூட்டணியாக இருப்பதோடு, குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சிக்காரர்களோடு விரிவான தொடர்புகளையும் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் எதிர்க்கருத்து தெரிவிப்பதை குற்றமயமாக்குவது ஆளும் அமெரிக்க செல்வந்தத் தட்டினரின் கொள்கைகளுக்கு சவால் விடுகின்ற அனைவரையும் உள்ளடக்குகின்ற வகையில் விரிவுபடுத்தப்படும்.

அல்-அரியனின் விடுதலையை வரவேற்க வேண்டும் என்றாலும் ஜனநாயக உரிமைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிராக பொது மக்களது உணர்வு மாறிக் கொண்டு வருகிறது என்பதற்கு ஒரு அடையாளமாக விளங்கினாலும் அரசியல் ஸ்தாபனம் பின்வாங்குகிறது என்பதற்கு எந்த அடையாளமும் இல்லை. இரு கட்சிகளின் மகத்தான ஆதரவோடு தேசபக்த சட்டம் இந்த ஆண்டு இறுதி வாக்கில் புதுபிக்கப்படவிருக்கிறது. அவற்றில் மிகவும் கருத்து மாறுபாட்டுக்குரிய விதிமுறைகள் விரிவுபடுத்தப்படும்.

அல்-அரியனின் தனிப்பட்ட வாழ்வின் எதிர்காலம் இன்னும் நிச்சயமற்றதாக இருப்பது மட்டுமல்லாது அரசாங்கத்தினுடைய நிலைப்பாடு ஜூரிகளால் தள்ளுபடி செய்யப்பட்டதானது, ஜூரிக்கள் எந்த அளவிற்கு நம்ப முடியாதவர்கள் என்று ஆளும் செல்வந்தத் தட்டு எடுத்துக் கொள்ளும் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. இதனால் ஏற்கனவே அரசாங்கம் தொடங்கிவிட்ட ஒரு கொள்கையை மேலும் உந்துதலோடு செயல்படுத்தும். நீதித்துறை பரிசீலனைக்கு வெளியில் கைதிகளை தண்டித்தல் வழக்கு தொடருதல், காவலில் வைத்தல், கைது செய்தல் என்பவற்றையெல்லாம் செயல்படுத்த அரசாங்கம் உந்துதலோடு செயல்படும்.

Top of page