World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Saddam Hussein hearings: a show trial orchestrated in Washington

சதாம் ஹூசேன் விசாரணைகள்: வாஷிங்டனால் உருவாக்கப்பட்ட ஒரு பகட்டாரவார விசாரணை

By Peter Symonds
10 December 2005

Use this version to print | Send this link by email | Email the author

சதாம் ஹுசேன் வழக்கில் இந்த வாரம் நடைபெற்ற மூன்று நாட்களுக்கான விசாரணை மீண்டும் ஒருமுறை மேடையேற்றப்பட்ட வழக்கின் ஏமாற்று மற்றும் சட்டவிரோத தன்மையை எடுத்துக்காட்டிள்ளது.

ஈராக்கில், அமெரிக்காவின் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு நீதிமன்றத்தில் நீதி எதுவும் கிடைப்பதற்கு சாத்தியமில்லை. நீதிபதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து குற்றச்சாட்டுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை மற்றும் திட்டமிடப்பட்ட ஊடக தகவல் அறிவிப்பு வரை விசாரணையின் ஒவ்வொரு அம்சத்தையும் அமெரிக்க அதிகாரிகள் மேற்பார்வையிடுகின்றனர். அமெரிக்க தூதரகத்திலிருந்து செயல்படுகின்ற ஒரு சிறிய அமெரிக்க வக்கீல்கள் பட்டாளம் இந்த வழக்கில் நீதிபதிகளுக்கும் அரசு தரப்பிற்கும் ஆலோசனைகளை கூறி வருகிறது.

இந்த சட்ட மோசடியை கடுமையாக கண்டித்த ஹுசேன்: அமெரிக்கர்கள் உருவாக்கியுள்ள இந்த [நீதிமன்றம்] எப்படி சட்டபூர்வமானதாக இருக்க முடியும்!" என்று வினவினார். தான் தூக்கிலிடப்படுவதற்கு அஞ்சவில்லை என்று அறிவித்த அவர் புதன் கிழமையன்று நடைபெற்ற விசாரணைகளில் கலந்து கொள்ள மறுத்து ''நீதியில்லாத ஒரு நீதிமன்றத்தில் நான் கலந்து கொள்ள முடியாது. நீங்களும் உங்களது அமெரிக்க முகவர்களும் நரகத்திற்குத்தான் செல்வீர்கள்'' என்று அவர் சொன்னார்.

இந்த விசாரணை முடிவு முன்கூட்டியே முடிவு செய்யப்பட்டது என்பதை வலியுறுத்திக் காட்டுகின்ற வகையில் ஹூசைனோடு சேர்த்து குற்றம் சாட்டப்பட்டுள்ளவரும் முன்னாள் புலனாய்வு தலைமை அதிகாரியுமான பார்சான் இப்ரஹீம்-அல்-டிக்கிரட்டி ''நீங்கள் ஏன் எங்களுக்கு உடனடியாக மரணதண்டனையை நிறைவேற்றி விடக்கூடாதா?'' என்று கேட்டார்.

அந்த நீதிமன்றத்தின் அமெரிக்க மனப்போக்குள்ளவர்களுக்கு தெளிவான மூலோபாயம் என்னவெனில், இந்த வழக்கை சுற்றியுள்ள இதர எல்லா பிரச்சனைகளும் வெளிப்படாது இருக்கும்வகையில் சித்திரவதை மற்றும் கொலை தொடர்பான நேரடி சாட்சியங்களின் உணர்வுபூர்வமான தாக்கத்தை பயன்படுத்திக்கொள்வதுதான். விசாரணை நீதிபதி ரிஸ்கார் முஹம்மது அமீன், எதிர்தரப்பு வக்கீல்கள் குழு கண்டன வெளிநடப்பு செய்த பின்னர் அவர்களுக்கு அந்த நீதிமன்றத்தின் சட்டப்பூர்வமான தன்மை தொடர்பாக ஆட்சேபனைகளை எழுப்புவதற்கு ஒரு கால் மணிநேரம் தான் அனுமதித்தார்.

ஹூசைனும் அவருடன் சக குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களும் 1982ல் பிரதான ஷியைட் நகரமான துஜைலில் 148 ஆண்களையும் 20 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருக்கின்றனர். ஈரான் - ஈராக் போருக்கு இடையில் தாவாக் கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் ஹூசைனை படுகொலை செய்வதற்கு ஒரு முயற்சி மேற்கொண்டதை தொடர்ந்து இந்த கொலைகள் நடைபெற்றன.

துஜைல் படுகொலை திட்டமிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது பாக்தாத்திலுள்ள அமெரிக்காவின் பொம்மை ஆட்சியில் ஒரு முன்னணி பங்கு வகிக்கின்ற தாவாக்கட்சியின் அரசியல் தேவைகளுக்கு ஏற்றதாக அது அமைந்திருப்பது மட்டுமல்லாமல், வாஷிங்டனின் நிலைப்பாட்டில், இச்சம்பவத்திற்கும் அன்றைய அமெரிக்க நிர்வாகத்திற்கு எந்த விதமான தெளிவான தொடர்பும் இல்லாதது. தொடக்கத்திலிருந்தே முன்னாள் யூகோஸ்லேவியா ஜனாதிபதி சுலோபோடன் மிலோசிவிக் செய்ததை போன்று சதாம் ஹூசேன் இந்த விசாரணையை பயன்படுத்தி 1998ல் அலாப்ஜாவில் குர்துகள் மீது விஷ குண்டுகளை வீசி தாக்கியது போன்ற பாத்திஸ்ட் ஆட்சியின் குற்றங்களில் அமெரிக்கா உடந்தையாக செயல்பட்டதை அம்பலப்படுத்திவிடக் கூடாது என்பதில் புஷ் நிர்வாகம் கவலை கொண்டிருக்கிறது.

எதிர்பார்த்தபடி ஈராக்கிலும் சர்வதேசரீதியாகவும் செயல்பட்டு வருகின்ற ஊடகங்கள் துஜைல் படுகொலையில் உயிர்தப்பியவர்களது படுபயங்கரமான விவரங்களை முக்கியப்படுத்தி கவனம் செலுத்தியுள்ளன. ஆண்களும், பெண்களும் மற்றும் குழந்தைகளும் கைது செய்யப்படடு மாதம் மற்றும் ஆண்டுக்கணக்கில் சித்திரவதை செய்யப்பட்டும் சில வழக்குகளில் கொல்லப்பட்டும் உள்ளனர். சாட்சிகளில் மிகப் பெரும்பாலோர் திரைக்குப் பின்னால் மின்இலத்திரனியல் கருவிகள் மூலம் தங்கள் குரல்களை மாற்றிக் கொண்டு தங்களது சோதனைகள் பற்றி கொடூரமான விவரங்களை தந்தனர்.

என்றாலும் ஒரு சட்ட நிலைப்பாட்டில் பார்த்தால் சாட்சிகளில் எவரும் நேரடியாக ஹூசேனையோ குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்கள் எவரையோ தொடர்புபடுத்தவில்லை. தான் சித்திரவதை செய்யப்பட்ட நேரத்தில் புலனாய்வுத்தலைவர் இப்ரஹிம் உடனிருந்தார் என்று கூறிய ஒரு மனிதர் அந்த நேரத்தில் தனது கண்கள் கட்டப்பட்டிருந்ததாக ஒப்புக் கொண்டார். ''நான் ஒரு ஜெயிலர் அல்ல நான் ஒரு அரசியல் அதிகாரி'' என்று கூறி இப்ரஹிம் அதில் தமக்கு எந்த சம்மந்தமும் இல்லை என்று திட்டவட்டமாக மறுத்தார்.

குற்றம்சாட்டப்பட்டவரை சிக்கவைப்பதற்கு ''சாட்சி A" யிடம் நயந்து பேசி நிதிபதிகளில் ஒருவர் கேட்டார்: யாருக்கு எதிராக நீங்கள் புகார் கூறுகிறீர்கள்? ''அந்தப் பெண் முதலில் ''சதாம்'' என்று பதிலளித்தார். அதற்குப் பின்னர் ''ஒட்டுமொத்த ஆட்சியும்'' என்று சொன்னார். அதற்குப் பின்னர் மேலும் ''ஜனாதிபதிக்கு (ஹூசேனுக்கு) இதைப்பற்றி எதுவும் தெரியாது. அவர் கவனம் செலுத்தவில்லை மற்றும் ஒவ்வொன்றிற்கும் அவரை பொறுப்பாக்க முடியாது.'' என்றார். ஊடகங்கள் கூட இந்த சாட்சியத்தின் பெரும்பகுதியை ஒன்றிற்கொன்று சம்மந்தமில்லாமலும் முரணானதாகவும் இருப்பதையும் ஒப்புக் கொள்ள வேண்டி வந்தது.

அரசு நடத்துகின்ற அமெரிக்க மேற்பார்வையில் இயங்கும் தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்பில் அல்-ஈராக்கியா நடுநிலையாக நடந்து கொள்வதாக மிகசொற்ப அளவிற்குக் கூட நாடகமாடவில்லை. நடந்து கொண்டிருப்பது ஒரு அரசியல் போலி விசாரணை என்பதை பிரிட்டனை தளமாகக்கொண்ட Guardian இன் பாக்தாத் நிருபர் விளக்கினார்.

''நீதிமன்ற விசாரணை இடைவேளை விடப்படுகின்ற நேரத்தில் எல்லாம் தொலைக்காட்சி திரை சதாமின் முகத்தை காட்டும் பிரச்சார வர்த்தக படங்கள் நிரம்பியிருந்தன. அந்த படத்தின் நடுவிலிருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. முன்னாள் ஜனாதிபதி தனது கையை உறுதியாக காட்டி ஒரு அம்சத்தை வலியுறுத்தும் படங்களோடு சேர்த்து பழைய படங்களை வெட்டி ஒரு கைதி தரையில் கிடப்பதையும் அதே நேரத்தில் ஒரு மனிதன் தளப்பந்து மட்டையை பயன்படுத்தி அவர் மணிக்கட்டுகளை உடைப்பதையும் காட்டினர். ஷியாக்களின் மதரீதியான இறுதி அஞ்சலிகளில் பாடப்படுவது போன்ற ஒரு பாட்டை ஒரு குரல் ஒலித்தது. அது இறைவனின் தீர்ப்பை சதாம் ஹுசேனுக்கு உணர்த்துவதாக அமைந்திருந்தது. 'உங்களது எல்லா குற்றங்களிலிருந்தும் எங்கே நீங்கள் மறைந்து கொள்ளப் போகிறீர்கள்'.''

அமெரிக்காவின் போர்க் குற்றங்கள்

ஹூசேனும் அவரது பாத்திஸ்ட் ஆட்சியும் பல குற்றங்களுக்கு பொறுப்பானவர்கள் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. ஆனால் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் துணை ஜனாதிபதி ரிச்சார்ட் செனி பாதுகாப்பு செயலர் டொனால்ட் ரம்ஸ்ப்ல்ட் ஆகியோருடன் ஒரு நீண்ட வரிசையிலான அமெரிக்க அதிகாரிகளும் ஈராக் மக்களுக்கு எதிரான குற்றங்களை அவர்கள் புரிந்ததற்காக சதாமுடன் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டும்.

ஈரானுடன் ஈராக் போரின் மத்தியில் தனது வாழ்வை முடிக்க முயன்றதற்காக துஜைல் கிராமத்தை தண்டித்ததற்காக ஹூசேன் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இப்போது அதேமாதிரியான நடைமுறைகளை கையாண்டு அமெரிக்க இராணுவம், ஆக்கிரமிப்பிற்கு எதிரான போர் வீரர்களுக்கு தஞ்சமளித்துள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு எதிராக நடத்தி வருகிறது. சென்ற ஆண்டு பல்லூஜா நகரத்தை அமெரிக்க இராணுவம் தரைமட்டமாக்கியபோது நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கவனமான மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. அதேபோன்ற நடவடிக்கைகள் தற்போது நாட்டின் மேற்குப் பகுதியில் ஆயுதந்தாங்கிய கிளர்ச்சிக்காரர்களின் கோட்டைகளாக உள்ள பகுதிகளுக்கு எதிராக அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவும் அதன் ஈராக் கூட்டணியினர்களும் திட்டமிட்டு கைது செய்து சித்திரவதை செய்து மற்றும் அமெரிக்க ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்களை கொலை செய்வதற்கு கொலைக் குழுக்களை அமைத்திருக்கின்றனர் என்பதற்கு பெருகி வரும் சாட்சியம் உள்ளது. ஒவ்வொரு மாதமும் பாக்தாத்தின் பிரதான பிணவறையில் சித்திரவதை மற்றும் தூக்குத் தண்டனை பாணியில் நூற்றுக் கணக்கானோர் கொலை செய்யப்பட்டதற்கான அடையாளச் சின்னங்களை பல சடல்களை காணக்கூடியதாகவுள்ளது. பத்திரிகையாளர்கள் மதகுருமார்கள் மற்றும் அமெரிக்கா ஈராக்கில் இருப்பதை விமர்சிக்கின்ற அரசியல்வாதிகள் ஆகியோருடன் ஹூசேன் தரப்பு வக்கீல்கள் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றனர் அவர்கள் கொலை செய்யப்பட்ட சூழ்நிலைகள் அரசாங்க-சார்பு படைகள் அதில் சம்மந்தப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டுகின்றன.

மேலும் பல ஈராக்கியர்கள் முறையின்றி கைது செய்யப்பட்டு விசாணையின்றி காவலில் வைக்கப்பட்டு மற்றும் அமெரிக்கப் படைகளால் சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர். புஷ் நிர்வாகத்தின் தெளிவான இரட்டை வேடத்தை எடுத்துக்காட்டும் வகையில் ஹூசேன் தரப்பு வக்கீல்கள் சாட்சிகளை பார்த்து அவர்கள் நிர்வாணமாக்கப்பட்டார்களா அல்லது அவர்கள் அபுகிரைப் சிறை சாலையில் இருந்தபோது நாய்களால் அச்சுறுத்தப்பட்டார்களா என்று கேட்டனர். பாக்தாத்திலுள்ள நீதிமன்றத்திலிருந்து துஷ்பிரயோகம் பற்றிய விவரங்கள் ஒளிபரப்பப்பட்டு வருகையில், அமெரிக்க அதிகாரிகள், கைதிகள் "ஒப்படைக்கப்பட்டுள்ள'' CIA இன் உலகம் தழுவிய இரகசிய சிறைச்சாலைகளையும் சித்திரவதை அறைகளையும் பகிரங்கமாக சரியென்றே வாதிட்டு வருகின்றனர்

ஆரம்பத்திலிருந்தே மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு சர்வதேச பொது மன்னிப்பு அமைப்பு மற்றும் பிற சர்வதேச அமைப்புக்கள் அமெரிக்கா நிறுவியுள்ள நீதிமன்றத்தை விமர்சித்து வருகின்றனர். ஹூசேன் விசாரணை சட்டவிரோதமானது என்று கருதப்படும் ஆபத்துக்கள் உள்ளன என்று வாஷிங்டனை எச்சரித்து வருகின்றன. மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு சர்வதேச பொது மன்னிப்பு சபை இரண்டுமே நீண்ட அறிக்கைகளை தயாரித்து சர்வதேச சட்டம் மற்றும் இந்த விசாரணையில் சம்மந்தப்பட்டுள்ள அடிப்படை சட்ட உரிமைகள் எண்ணற்றவை மீறியுள்ளதாக விவரித்திருக்கின்றன.

இப்போது நடைபெறுகின்ற விசாரணை தொடங்கியதும் ஈராக்கிலுள்ள ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் தலைவரான ஜோன் கேசி ''இந்த நடுவர் மன்றம் பற்றி நாங்கள் மிகவும் கவலையடைந்துள்ளோம். இந்த நடுவர் மன்றத்தின் சட்டப்பூர்வமான தன்மை குறித்து ஆராய வேண்டியுள்ளது. பல வட்டாரங்களில் அதற்கு கடுமையான சவால்கள் தோன்றியுள்ளன.... அந்த நடுவர் மன்றம் அமைக்கப்பட்ட சுற்றுசூழல்களின் நிகழ்வுகளுடன் இணைந்து நீதித்துறை நிர்வாகத்தில் காணப்படும் பலவீனங்களும் சர்வதேச தரங்களுக்கு ஏற்ற வகையில் திருப்திகரமான வழக்கை அந்த நடுவர் மன்றம் எந்த காலத்திலும் உருவாக்க முடியாது.'' என நம்புவதாக அறிவித்தார்.

இந்த வார விசாரணைகளை தொடர்ந்து வாஷிங்டனிலும் பாக்தாத்திலும் உள்ள ஆளும் வட்டாரங்களிடையே ஒரு திட்டவட்டமான பரபரப்பு காணப்படுகிறது. ஏனெனில் அந்த விசாரணை அவர்களால் விரும்பப்பட்ட அரசியல் வெற்றியாக அமையவில்லை. ஈராக் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் அந்த விசாரணைகள் நடைபெறுவதையும் ஊடகங்கள் செய்தி வெளியிடுவதையும் கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளுக்கும் அப்பால் ஹூசேன் அந்த சட்ட மோசடி மீதான தனது அவமதிப்பை வெளிப்படுத்துவதை கட்டுப்படுத்த இயலாததுடன், ஹுசேன் அச்சுறுத்தலுக்குள்ளாக மறுத்துவிட்டார். ஈராக் மக்களில் மிகப் பெரும்பாலோர் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு மகத்தான எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அவரின் நிலைப்பாடு அவரது ஆட்சியில் துன்புற்றவர்கள் உட்பட ஈராக் முழுவதிலும் தயக்கத்துடன் எதிரொலித்து கொண்டிருக்கிறது.

துணை ஜனாதிபதி காசி அல்-யாவர் ஹூசேன் அந்த விசாணையை அமெரிக்காவிற்கு எதிரான உணர்வுகளை திரட்டுகின்ற புள்ளியாக மாற்றிவிட்டார் என்பது குறித்து தனது கலவர உணர்வை தெரிவித்துக் கொண்டார். ''இது சதாம் ஹுசேன் உண்மையிலேயே ஒரு பொந்தில் உள்ள ஒரு சுண்டெலியாக இருக்கையில் தன்னை கூண்டில் அடைக்கப்பட்ட ஒரு சிங்கம் என்று காட்டிக் கொள்ளும் ஒரு அரங்காக ஆகிவிட்டது. இந்த நாடகத்தை தயாரித்த புத்திசாலி யார் என்று எனக்கு தெரியாது. இது ஒரு அரசியல் வழக்கு. இது ஒரு நகைச்சுவை நாடகம். இது என்ன என்பது எனக்கு தெரியவில்லை'' என்று அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அமெரிக்காவில் பழமைவாத Stratfor சிந்தனையாளர் குழு, ஈராக்கின் சுன்னி மக்களிடையே ஏற்படுத்தப்பட்டுள்ள ''ஆழமான தாக்கம்'' குறித்து கவலை தெரிவித்திருக்கிறது. ''ஹுசேனுக்காக வாதாடுபவர்கள் திரும்பத் திரும்ப அந்த நீதிமன்றத்தின் சட்டபூர்வமான தன்மையை ஆட்சேபித்திருக்கின்றனர். இந்த விசாரணை ''அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது'' என்று கூறுகின்றனர். 2003 மார்ச்சில் அமெரிக்கா ஈராக் மீது படையெடுத்தது முதல் முன்னாள் பாத்திஸ்ட் அதிகாரிகள் சட்டபூர்வமான நடைமுறைப்படி நடத்தப்படவில்லை மற்றும் கைதிகள் முறைகேடாக நடத்தப்படுவது தொடர்பாக ஈராக் சுன்னிகளிடையே தகவல் தெரிவிப்பதற்கு ஒரு விரிவான பிரசாரம் நடத்தப்பட்டு வருகிறது. ஆளும் அரசாங்கத்திடமிருந்து சுன்னிக்கள் இந்த வகையில்தான் நடத்தப்படுவார்கள் என்பதை ஹுசேனுக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகள் காட்டுவதால் அது சுன்னிகளை தற்போதுள்ள அரசியல் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக நடைபெற்றுக் கொண்டுள்ள பேச்சுவார்த்தைகளில் எதிரான விளைவை ஏற்படுத்தும்.''

வாஷிங்டன் போஸ்டில் எழுதியுள்ள வலதுசாரி விமர்சகர் சார்லஸ் கருத்தாமர் புஷ் நிர்வாகம் ''விசாரணையில் குளறுபடி செய்து விட்டது'' என்று கடுமையாக கண்டித்துள்ளார். ஹூசேனை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்ததற்கான ஒரே நோக்கம் ''போர் கால நீதியை எடுத்துக்காட்டுவதும், இந்த மனிதனினதும் அவரது குழுவினரதும் மிகக் கொடூரமான கொலை வெறியை தோலுரித்து காட்டுவதுதான். மாறாக ''இப்போது நாம் காண்பது புதிய ஈராக்கில் இன்னும் திறமைக் குறைவாக நிலவுகின்ற சட்ட நடைமுறைகளுக்கும், வாழ்நாள் முழுவதும் கொடுங்கோலராக நிலவுகின்ற ஒருவர் பாத்திஸத்தின் பதாகையை பிடித்துக் கொண்டு தமது எதிர்ப்பை தெரிவிப்பதற்கும் இடையில் எம்மால் உருவாக்கப்பட்ட ஒரு உலக அளவிலான அரங்கில் நடைபெறுகின்ற மன உறுதிப்பாட்டிற்கான அரசியல் பரிசோதனையாகும்'' என்று அவர் எழுதியுள்ளார். (அழுத்தம் உரிமையாளரது)

இந்த விசாரணை ஒரு அரசியலில் பேரழிவாக மாறிக் கொண்டு வருகிறது என்ற ஒரு அச்சத்தை இத்தகைய கருத்துக்கள் எதிரொலிக்கின்றன. ஈராக்கின் மீது அமெரிக்கா படையெடுத்ததை சட்டப்பூர்வமாக நியாயப்படுத்துவதற்கு மேலாக, பதவியிலிருந்து விரட்டப்பட்ட ஹுசேன் ஆட்சி பயன்படுத்திய அதே நடைமுறைகளை நிலைநாட்டி வரும் குற்றம்மிக்க ஆக்கிரமிப்பின் தன்மையை பாக்தாத்தில் நடைபெற்றுக் கொண்டுள்ள சட்ட நாடகம் வெளிப்படுத்துகிறது.

Top of page