World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

British court martial bares war crimes against Iraqi civilians

ஈராக் மக்களுக்கு எதிரான பாதுகாப்பற்ற போர்க் குற்றத்திற்காக பிரிட்டிஷ் இராணுவத்தினர் மீது இராணுவ நீதிமன்ற விசாரணை

By Mike Ingram
24 January 2005

Use this version to print | Send this link by email | Email the author

சென்ற வாரம் ஜேர்மனியில் மூன்று பிரிட்டிஷ் படையினர் மீது இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது. 2003 மே மாதம் ஈராக்கின் தென்பகுதி நகரமான பாஸ்ராவில் ஒரு பண்டசாலைக்கு வெளியில் ஈராக் சிவிலியன்களை பாலியல் ரீதியில் இழிவுபடுத்துகின்ற வகையில் நடத்தியதாகவும், கேவலமாக நடந்து கொண்டதாகவும் படையினர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இந்த விசாரணை பிரிட்டனின் அபு கிரைப் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. ஈராக்கிலுள்ள அமெரிக்க சிறையில் இதற்கு முன்னர் நடைபெற்ற முறைகேடுகள் அம்பலத்திற்கு வந்ததை நினைவு படுத்துகின்ற வகையில் இந்தக் குற்றச்சாட்டுகள் அமைந்திருக்கின்றன.

கோப்ரல் டானியல் கென்யான் மற்றும் லான்ஸ் கோப்ரல்கள் மார்க்கூலி மற்றும் டாரன் லார்கின், ஆகிய முன்று படையினருக்கு எதிரான வழக்கில், பெரும்பாலும் சூறையாடியதற்காக கைது செய்யப்பட்ட ஈராக் மக்களை தாக்கிய மற்றும் கட்டாயப்படுத்தி பாலியல் நடவடிக்கைகளை தூண்டிவிட்டதைக் காட்டும் புகைப்படங்கள் சாட்சியங்களாக உள்ளன. இங்கிலாந்து, ஸ்டாபோர்டு சயரில் ஒரு புகைப்படக் கடையின் உதவியாளர், தன்னிடம் பெரிதாக்குவதற்கு கொண்டு வரப்பட்ட சிறிய புகைப்படங்களை போலீஸாரிடம் தாக்கல் செய்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் இரண்டுபேர் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மறுத்தனர். அதே நேரத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ள மூன்றாவது சிப்பாய் லான்ஸ் கோப்ரல் லார்க், ஒரு ஈராக் சிவிலியனை தாக்கியதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். ஆனால், அவர் இரண்டு ஈராக் ஆண்களை பலருக்கு முன்னால் ஆடைகளை களையுமாறு கட்டாயப்படுத்தியதாக கூறப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டை மறுத்தார். ஒரு கார்கோ வலையில் கட்டப்பட்ட ஒரு ஈராக்கியரின் கால்களிலும் தோள்பட்டைகளிலும் ஒரு படகில் செல்வதைப்போல் லார்க் ஏறி நின்ற புகைப்படம் தாக்கல் செய்யப்பட்டது. அபு கிரைப் சித்திரவதை வழக்கில் அண்மையில் நடைபெற்ற விசாரணையின்போது ஒரு அமெரிக்க சிப்பாய் குற்றங்களை மறுத்ததைப் போன்று, மேலதிகாரிகளது கட்டளைகளைத்தான் படையினர் நிறுவேற்றுகிறார்கள் என்று இதில் கூறப்பட்டது.

இதுவரை நடந்துள்ள விசாரணைகளில் இருந்து தெரிய வந்திருப்பது என்னவென்றால், மேஜர் டான் டெய்லர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள Camp Bread Basket என்ற ஒரு உதவி முகாமில் இந்த முறைகேடுகள் நடந்திருக்கின்றன என்பதாகும். இந்த நடவடிக்கைகள் ஜெனிவா ஒப்பந்தங்களை மீறுவதாகும். சூறையாடுபவர்களை கைது செய்து அவர்கள் மீது "கடுமையான வேலை வாங்குமாறு" டெய்லர் கட்டளையிட்டார். அந்த முகாமில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ஈராக்கியர்கள், பால் பவுடர்கள் நிரப்பப்பட்ட பெட்டிகளை தங்களது தலைக்கு மேல் தூக்கிச் செல்ல கட்டாயப்படுத்தப்பட்டதை காட்டுகின்றன.

சூறையாடலை கட்டுப்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தோடு எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு "அலிபாபா" நடவடிக்கை என்று பெயரிட்டு முறைகேடு நடத்துவதற்கு உரிய சூழ்நிலையை டெய்லர் உருவாக்கினார் என்று எதிர்தரப்பு வக்கீல்கள் கூறினர். "அது ஒரு பாரியளவு சேமிப்பு கிட்டங்கு. அதில் உணவு, உடைகள் மற்றும் வாகன பாகங்கள் மற்றும் மிகப் பெருமளவில் உணவு தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. ஆனால் 2003 ஏப்ரல் கடைசி வாரங்களில் அந்த முகாமிற்கு உலக உணவு உதவி வந்து சேரத் துவங்கியதும் எங்களுக்கு கொள்ளைக்காரர்கள் மற்றும் சூறையாடுவோருடன் பிரச்சனைகள் தோன்றின" என்று டெய்லர் இராணுவ நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்பார்த்தபடி மூத்த இராணுவ தளபதிகள், குற்றம் சாட்டப்பட்டுள்ள முறைகேடுகள் தவறான தனிநபர்களால் வந்தவை என்றும், அது ஈராக்கில் பிரிட்டிஷ் இராணுவம் அல்லது அதன் பணியை எந்த வகையிலும் இந்த சம்பவங்கள் எதிரொலிப்பதாக இல்லையென்றும் வலியுறுத்திக் கூறினார். அப்படியிருந்தும் தலைமை தாங்கிய அதிகாரிகள் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுவதை அவர்களால் தடுக்க முடியவில்லை. குறிப்பாக, அலிபாபா நடவடிக்கை ஜெனீவா ஒப்பந்தத்திற்கு முரணானது.

இது ஒரு தனிமைபடுத்தப்பட்ட சம்பவம் என்ற கூற்றை மறுக்கின்ற வகையில், ஈராக்கிலுள்ள இராணுவத்திற்கான சட்ட சேவைகள் நிபுணர் லெப்டினட் கேர்னல் நிக்கோலஸ் மெர்சர் அளித்துள்ள சாட்சியம் அமைந்திருக்கிறது. இந்த வழக்கை விசாரித்து வரும் ஏழு அதிகாரிகளைக் கொண்ட வாரியத்தில் சாட்சியமளித்த மெர்சர், கைது செய்யப்பட்ட சிவிலியன்களுக்கு எதிரான முறைகேடுகள் Camp Bread Basket ல் மட்டுமே நடக்கவில்லை. மாறாக, அது மிகப் பரவலாக நடைபெற்றதால் 2003 மே, 20 ல் ஒரு கட்டளை பிறப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது என்று கூறினார். ----விசாரணையில் இருக்கும் சம்பவம் பற்றி தகவல் வந்ததும்--- படையினர்கள் சிவிலியன்களை தாக்குவதற்கு தடைவிதித்து, ''ஈராக்கியர்களை மனிதாபிமானத்தோடும் உயர்நிலையோடும் எல்லா நேரங்களிலும் நடத்துமாறு'' கட்டளையிடப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

"போர்க்களத்தில் இராணுவம் 3,000 போர்க் கைதிகளையும், 1,000 பொது மக்களையும் கைது செய்தபோது, அவர்களோடு எந்த சங்கடமும் ஏற்படவில்லை. ஆனால், ஆக்கிரமிப்பு நிலவரத்திற்கு சென்றதும் மாற்றம் ஏற்பட்டது. அதற்கு பின்னர் இவர்கள் முறைகேடாக நடத்தப்படுவதாக பல குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. அத்துடன் அங்கு பிரச்சனைகள் இருந்தன என்று நாங்கள் கேள்விப்பட்டோம். அது Bread Basket Camp ல் மட்டுமே நடக்கவில்லை'' என்று மெர்சர் கூறினார்.

சதாம் ஹூசேன் ஆட்சியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து ''நூற்றுக்கணக்கான மக்கள் சூறையாடல்களில்'' ஈடுபட்டதை அந்த அதிகாரி விவரமாக விவரித்தார். கைதிகளையும், கைது செய்யப்பட்ட பொது மக்களையும் எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து 10 நிமிட பயிற்சி வீடியோ படம் திரையிட்டு காட்டப்பட்டது உட்பட தெளிவான வழிகாட்டி நெறிமுறைகள் வகுத்தளிக்கபட்டன என்றும் அந்த அதிகாரி கூறினார். அந்த வீடியோ படமும் இந்த விசாரணையில் காட்டப்பட்டது.

கோர்ப்ரல் கென்யோனின் வக்கீல் ஜோசேவ் ஜிரேட், தனது வாதத்தில் அந்த சிப்பாய் தனது மூத்த அதிகாரி விடுத்த கட்டளைகளை ''கைதிகளிடம் கடுமையான வேலை வாங்க வேண்டும்" என்ற உத்தரவை நிறைவேற்றியுள்ளதாக எடுத்துக் கூறினார். எதிர்தரப்பு வாதத்திற்கு அடிப்படையாக, இதுதான் அமையுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. "கென்யான் விசாரணைக் கூண்டில் நிற்பதற்கான காரணம், அலிபாபா நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்ட மேலதிகாரிகள்தான்'' என்று வக்கீல் ஜிரேட் கூறினார்.

"கைதிகளிடம் கடுமையாக வேலை வாங்க வேண்டும்" என்ற டெய்லர் விடுத்த கட்டளையானது, ஜெனீவா ஒப்பந்தத்திற்கு முரணானது என்பதை அரசு தரப்பு வக்கீல்கள் ஒப்புக்கொண்டனர். டெய்லர் ஜெனீவா ஒப்பந்தத்திற்கு முரணாக ஒரு கட்டளை பிறப்பித்திருக்கிறார் என்பது மேலதிகாரிகளுக்கு தெரிந்திருந்தாலும், அவர் மீது அரசியல் நடவடிக்கை எடுப்பதில்லையென்று அவர்கள் முடிவு செய்தனர். நீதிபதியாகவுள்ள வக்கீல் மைக்கேல் ஹண்டர், இராணுவ நீதிமன்றம் ஜெனீவா ஒப்பந்தம் மீறப்பட்டிருப்பதாக கூறப்படுவது குறித்து விசாரிக்க முயலக் கூடாது என்றும், "நாம் இங்கே சர்வதேசச் சட்ட பிரச்சனைகளை முடிவு செய்வதற்காக இல்லை" என்றும் கூறினார்.

இராணுவ நீதிமன்றத்தின் முடிவுகள் எதுவாக இருந்தாலும், அது இந்த முறைகேடுகளின் அடிப்படைக் காரணங்களை கண்டுபிடித்து அதற்கு தீர்வு காண்பதாக அமையப் போவதில்லை. "அலிபாபா" நடவடிக்கைகள் மட்டுமல்லாது ஒட்டு மொத்த போரும், ஈராக் மீதான ஆக்கிரமிப்பும், ஜெனீவா ஒப்பந்தங்களுக்கு முரணானது. இராணுவ நீதிமன்றத்தின் முன் தாக்கல் செய்யப்பட்டுள்ள புகைப்படங்கள் சித்தரிக்கும் கொடூரமான நடவடிக்கைகள், ஒரு சட்ட விரோதமான போரையும் ஈராக் மக்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள கொடூரமான ஒடுக்குமுறைகளையும் எடுத்துக்காட்டும் அடையாளச் சின்னங்களாக உள்ளன.

தெற்கு ஈராக்கிலுள்ள பிரிட்டிஷ் படைகள் ஒரு எதிரி இராணுவத்தை எதிர்கொள்ளவில்லை. ஆனால், தங்களது நாட்டை வெளிநாட்டவர் ஆக்கிரமிப்பு செய்திருப்பதற்கு ஆழ்ந்த எதிர்ப்பை தெரிவிக்கும் மக்களை அது எதிர்கொண்டுள்ளது. இந்த நிலைமையின் கீழ், ஒரு 10 நிமிட வீடியோ விளக்கமானது, போருக்காக மாதக்கணக்கில் உள்ளத்தளவில் தயாரிக்கப்பட்ட துருப்புக்களின் இயல்பை மாற்றிவிட முடியாது.

ஜனவரி 30 ல் நடைபெறவிருக்கும் ஈராக் தேர்தல் நேரத்தில் இந்தப் புகைப்படங்கள் பிரசுரிக்கப்படுவது, ஈராக் தேர்தல்கள் எந்தளவிற்கு வெளிநாட்டு ஆக்கிரமிப்பால் ஜனநாயக விரோத தன்மை கொண்டது என்பதை எடுத்துக்காட்டி கிளர்ச்சிக்கு தூபம் போட்டுவிடும் என்று அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கங்கள் மிகப்பெரும் கவலை கொண்டிருக்கின்றன. அண்மையில் ஒரு பிரிட்டிஷ் இராணுவ தளத்தில் நடைபெற்ற குண்டுத் தாக்குதலில் ஐந்து படையினர்கள் காயமடைந்த நிகழ்ச்சி உட்பட தெற்கு ஈராக்கில் தாக்குதல்கள் முடுக்கிவிடப்பட்டிருப்பதற்கு காரணம், இந்த இராணுவ நீதிமன்ற விசாரணைதான் என்று ஏற்கனவே பழி கூறப்பட்டு வருகிறது. இந்தக் குண்டுத் தாக்குதலுக்கு ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த அபு முஸாப் அல் சர்க்காவி தலைமையிலான குழு பொறுப்பை ஏற்றுக் கொண்டிருக்கிறது. "சிறையிலுள்ள எங்களது சகோதரர்கள் மீது பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு படைகள் தீங்கு விளைவிப்பதற்கு பதிலடியாக" இந்த தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அந்தக்குழு அறிவித்திருக்கிறது.

ஈராக்கிற்கு மேலும் துருப்புக்களை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கைக்கு பிரிட்டனுக்குள்ளேயே எதிர்ப்பு அதிகரிக்கக்கூடும் என்று பிளேயர் அரசாங்கம் இந்த விசாரணை தொடர்பாக அச்சம் கொண்டிருக்கிறது.

ஜனவரி 19 ல் ஒரு சிப்பாய் எல்லைக் காவல் படையிலிருந்து தனது அதிருப்தியை தெரிவிப்பதற்காக ராஜினாமா செய்துள்ளார். லான்ஸ் கோர்ப்ரல் ஜோர்ஜ் சொலமு என்பவர், எல்லைக் காவல் படையினர்களில் பாதிப்பேர் இந்தப் போரை ஏற்றுக்கொள்ளவில்லை. அல்லது அதிருப்தி கொண்டிருக்கின்றனர் என்று தெரிவித்தார். இந்தப் போர், "நியாயமற்றது ஒழுக்கக் குறைவானது வெற்றுத் தன்மை கொண்டது" என்றும், கட்டாயப்படுத்தப்பட்டு பணியாற்றுவதை விட தான் சிறைக்கு செல்லத் தயார் என்றும் அவர் கூறினார். "சம்பிரதாய முறையில் பெரும்பாலோர் ராஜினாமா செய்கின்றனர். தங்களது குடும்பங்கள் பிரச்சனைகளில் இருப்பதாக கூறி அவர்கள் அமைதியாக சென்று விடுகின்றனர். மற்ற படையினர்களுக்கு ஒரு வழிகாட்டும் ஒளிவிளக்காக நான் செயல்பட விரும்புகிறேன். நாம் அமைதியாக பதவி விலக முடியாது. அந்தப் போர் தவறானது. மற்ற படையினர்கள் மனசாட்சிப்படி அதற்கு ஆட்சேபனைத் தெரிவிக்க வேண்டும்" என்று சங்கடப்படும் மற்றவர்கள் பற்றி அவர் குறிப்பிட்டார்.

இராணுவ நீதிமன்ற விசாரணை இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்கள்வரை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டுள்ள இராணுவத்தினர்கள் தண்டிக்கப்பட்டால் அவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.

Top of page