World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The "Salvador option"

Pentagon plans death squad terror in Iraq

''சல்வடோர் தேர்வு''

பென்டகன் ஈராக்கில் கொலைக் குழுக்கள் மூலம் பயமுறுத்தத் திட்டமிட்டிருக்கிறது

By Bill Van Auken
13 January 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கில் பெருகிவருகின்ற ஆயுதந்தாங்கிய எதிர்ப்பு மற்றும் அதைக்கண்டுபிடிக்க முடியாத நிலை, ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள பென்டகன் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பிற்கு எதிராக உள்ள அரசியல் எதிரிகளை தீர்த்துக்கட்டவும், பொதுமக்களை பயமுறுத்தவும் கொலைக்குழுக்களை ஏற்பாடு செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.

நியூஸ் வீக் வார இதழில் ஜனவரி 8ல் முதலில் வெளியிடப்பட்ட இந்தத் திட்டம், பென்டகனில் திட்டமிடுபவர்கள் இதை "சல்வடோர் தேர்வு" (Salvador option) என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இது ஈராக்கில் மோசமடைந்து வரும் நிலவரம் தொடர்பாக அமெரிக்க இராணுவத் தலைமைக்கும், வெள்ளை மாளிகைக்கும் ஏற்பட்டுள்ள பெருகிவரும் விரக்திக்கு ஒரு அளவுகோலாகும்.

"கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிரான, தாக்குதலை மேற்கொள்வதற்கு நாம் ஒரு வழி கண்டாக வேண்டும். நாம் தற்போது, பாதுகாப்பு நடவடிக்கையில்தான் இறங்கியிருக்கிறோம் மற்றும் அதில் நாம் இழந்துகொண்டிருக்கிறோம்" என்று ஒரு மூத்த இராணுவ அதிகாரி நியூஸ்வீக்கிற்கு தெரிவித்தார்.

ஜனவரி 30ல் அமெரிக்கா, ஏற்பாடு செய்துள்ள தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்களுக்கு குறைந்த நாட்களே இருக்கின்ற சூழ்நிலையில் தாக்குதல்களின் எண்ணிக்கையும் அளவும் பெருகிக்கொண்டேயிருக்கிறது. இராணுவ முற்றுகை, பலூஜாவை தரைமட்டமாக்கிவிட்ட நிலையிலும், இராணுவத் தளபதிகள் உறுதியளித்திருந்தபடி "கிளர்ச்சிக்காரர்களின் முதுகெலும்பை முறிக்க" தவறிவிட்டது மட்டுமல்லாமல், நாட்டின் பெரும்பகுதியில் தாக்குதல்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதற்கு அது தலைமை தாங்கியுள்ளது.

தேர்தல்கள் ஒரு புதிய அரசியல் சட்ட நகலை உருவாக்கும் இடைக்கால அமைப்பை உருவாக்கித்தரும் என்று கூறப்பட்டாலும் அது எந்தப்பிரச்சனையையும் தீர்த்து வைக்காது.

ஈராக் பொம்மை ஆட்சியின் புலனாய்வு சேவை இயக்குநர் ஜெனரல் முஹமது அப்துல்லாஹ் அல்-ஷாவானி செய்துள்ள மதிப்பீட்டின் அடிப்படையில் அமைந்த சிறிதளவே அறிவிக்கப்பட்ட அக்கட்டுரை, 2,00,000 சக்திவாய்ந்த கிளர்ச்சிக்காரர்கள் குறிப்பாக சுன்னி பகுதிகளில் பரந்த மற்றும் மக்களது அனுதாபத்தோடு போரிட்டு வருகிறார்கள் என சுட்டிக்காட்டியது.

இந்த மதிப்பீட்டோடு உடன்பட்ட, ஒரு அமெரிக்க இராணுவ அதிகாரி நியூஸ் வீக் இடம் கூறினார்: "பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தந்து கொண்டிருக்கிற சுன்னி மக்கள், அதற்கு, எந்த விலையும் தரவில்லை, இந்த கண்ணோட்டத்தில் அது செலவில்லா ஆதரவு. இந்த நிலையை நாம் மாற்றியாக வேண்டும்."

ஆக்கிரமிப்புக்கு ஒத்துழைக்கும் அரசியல் தலைவர்கள் படுகொலை, போலீஸ் நிலையங்கள் மீது குண்டு வீச்சு தாக்குதல் மற்றும் ஆதரிக்கின்ற குடிப்படையினரை ஒட்டுமொத்தமாக கொன்று குவிப்பது ஆகிய பெரிய விலையைத் தந்து கொண்டிருப்பதை ஆக்கிரமிப்பு அதிகாரிகள் காண்கின்றனர். ஆக்கிரமிப்பை எதிர்ப்பவர்களிடமிருந்தும் இதே அளவிற்கு விலை தரவேண்டிய நிலையை உருவாக்குவதுதான் திட்டத்தின் நோக்கம்.

சல்வடோர் தேர்வு என்றழைக்கப்படும் திட்டத்தின் முக்கிய புறநிலை இதுவாகத்தான் இருக்கும். எதிர்ப்பாளர்களை ஆதரிப்பவர்கள் மற்றும் அனுதாபிகளை, எளிதாக அடையாளம் கண்டு கொள்ள முடிவதில்லை. ஆனால் அமெரிக்க பொம்மையாட்சியில் இணைந்து கொள்பவர்களையும், அதன் பாதுகாப்புப் படைகளில் பணியாற்றுபவர்களையும் மிக எளிதாக அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது, என்றாலும், இந்த ஒட்டு மொத்த மக்கள் மீது கூட்டுத் தண்டனை விதிப்பதன் மூலம்தான் அத்தகைய பயமுறுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

சல்வடோர் தேர்வின் கீழ் போர்புரிகிற விதிகள் என்னவென்றால் அமெரிக்கத் துருப்புக்களும் மற்றும் அவர்களுக்கு ஒத்துழைக்கின்ற ஈராக்கியர்களும், தாக்குதலுக்கு இலக்காகின்ற கிராமங்களில் தத்துவ அடிப்படையில் பார்த்தால் அத்தகைய அட்டூழியங்கள், பொதுமக்கள் போராளிகளுக்கு தஞ்சம் கொடுப்பதிலிருந்து ஒதுங்கிக் கொள்வர். ஏற்கனவே ஈராக்கில் சித்திரவதை பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது, இனி தகவல்களை திரட்டுவதற்கு மட்டுமல்லாமல் ஏற்கனவே சித்திரவதை செய்யப்பட்டவர்கள் பற்றிய தகவல்களைத் தெரிந்துகொண்டவர்கள் மீதும், ஒரு திட்டமிட்ட சித்திரவதை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

1970 களிலும் மற்றும் 1980 களிலும், வாஷிங்டன் மற்றும் எல் சால்வடோர், குவாத்தமாலா மற்றும் ஹோண்டூராசில் சர்வாதிகாரிகள் நடத்திய இரத்தக்களரி எதிர்-கிளர்ச்சி நடவடிக்கைகள் அத்தகைய நடைமுறைகளில் அமைந்தவையாகும். புஷ் நிர்வாகத்திற்குள் தலைமை பதவிகளை வகிப்பவர்கள் இன்னமும் அந்த நடவடிக்கைகளை ஒரு வெற்றிக்கதை என்றே கருதுகின்றனர்.

அந்த இரத்தக்களறி சம்பவங்களில் பலர் நேரடியாக பங்களிப்பு செய்திருக்கிறார்கள். ஈராக்கிலுள்ள வாஷிங்டன் நடப்புத்தூதர் - ஈராக்கிலுள்ள பொம்மையாட்சியை நடத்திக்கொண்டிருக்கிற அதே வேளையில், பொதுமக்களது கண்ணிலிருந்து மறைந்து பணியாற்றிக்கொண்டிருக்கிறார்---- அவர்தான் ஜோன் நெகரோபோன்ட். 1981 முதல்1985 வரை நெகரோபோன்ட் ஹொண்டூராசில் வாஷிங்டன் தூதராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில்தான் ஹொண்டூராஸ் அந்த பிராந்தியம் முழுவதிலும் நிகரகுவாவிற்கெதிராக CIA ஏற்பாடு செய்த "கான்ட்ரா' போர் மற்றும் எல்சல்வடோரில் நடைபெற்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகள் உட்பட, அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் அனைத்தையும் அரங்கேற்றும் பகுதியாக செயல்பட்டு வந்தது. ஹொண்டூராசிலேயே கொலைகுழுக்கள் அலைபோன்று ஆள்கடத்தல்களையும், கொலைகளையும் செய்தன. அந்த நேரத்தில் வாஷிங்டன் தனது இராணுவ உதவியை அந்த ஆட்சிக்கு 400 சதவீதம் அதிகரித்து தந்தது.

அதேபோன்று புஷ் நிர்வாகம் Elliot Abrama ஐ திரும்ப பதவியில், அமர்த்தியிருக்கிறது. அவர் றீகன் நிர்வாகத்தில் அமெரிக்க உள் விவகாரங்களில் துணைச் செயலாளராக பணியாற்றியவர், மற்றும் மத்திய அமெரிக்காவின் வலதுசாரி சர்வாதிகாரிகளை பகிரங்கமாக ஆதரித்து நின்ற முதன்மையான அதிகாரி அவர், ஈரான் கான்ட்ரா விவகாரத்தில் காங்கிரசோடு உறவு வைத்து தகவல் கொடுத்ததாக பிடிக்கப்பட்டு 1991ல் தண்டிக்கப்பட்டவர். தற்போது புஷ் வெள்ளை மாளிகையின் மத்திய கிழக்கு தொடர்பான மூத்த ஆலோசகராக பணியாற்றி வருகிறார்.

பாரியளவு இரத்தக்களரி மூலம் மட்டுமே, மத்திய அமெரிக்காவில் பொது மக்களது எழுச்சிகளை வாஷிங்டன் அடக்க முடிந்தது. 1980களின் தொடக்கத்தில் ஒடுக்குமுறை உச்சகட்டத்தில் இருந்தபோது, இராணுவம் மற்றும் போலீஸ் கொலைக்குழுக்கள் ஆண்டிற்கு 13,000 மக்களை கொன்று குவித்தது.

மக்களில் ஒட்டுமொத்த தட்டினரை சார்ந்தவர்களும் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார்கள்--- பிரதானமாக போர்குணம்மிக்க தொழிலாளர்கள் மாணவர்கள் மற்றும் விவசாயிகள் அவர்களது குடும்பங்கள் மற்றும் நண்பர்களோடு சேர்த்து தீர்த்துக்கட்டப்பட்டனர். அந்த நாட்டின் மக்கள் தொகை 5,00,000-ற்கும் குறைவுதான்----ஆனால் அமெரிக்கா அளவிற்கு பெரியநாடு ஒரு மில்லியனில், முக்கால் பங்கிற்கு மேற்பட்டவர்கள் ஒவ்வொரு ஆண்டும் அரசியல் கொலைகளுக்கு இலக்கானார்கள்.

இந்த காலகட்டம் முழுவதிலும், ரீகன் நிர்வாகம் சால்வடோர் ஆட்சிக்கு இராணுவ உதவியை அதிகரித்துத் தந்தது, அந்த நேரத்தில் நாடாளுமன்றத்திற்கு தாக்கல் செய்யப்பட்ட அறிக்கைகளில் அந்த ஆட்சி மனித உரிமைகள் நிலைப்பாடுகளை மேம்படுத்துவதற்கு "ஒரு குறிப்பான ஒரு கணிசமான" முயற்சியை மேற்கொண்டிருப்பதாக, தெரிவித்தது.

அப்போது கொலைக் குழுக்களுக்கு, தலைமை வகித்த Roberto D'Aubuisson என்பவர் "Major Blowtorch" என்று அழைக்கப்பட்டார். ஏனெனில் அவர் சித்திரவதைகளில் நேரடியாக பங்கெடுத்துக் கொண்டவர்-- இதுபோன்ற மனிதர்கள் மத்திய புலனாய்வுத்துறையில் ஊதியம் பெற்றவர்கள்.

சான் சால்வடோரின் கத்தோலிக்க மதப்பிரிவை சார்ந்த சட்ட உதவி அமைப்பான Socorro Juridico 1980 ஜூனில் ஒரு அறிக்கை வெளியிட்டது, அதில் 50 நாட்கள் நடைபெற்ற சித்திரவதை படுகொலை, அல்லது கொலைகளை அது பதிவு செய்திருக்கிறது, அந்த கொலைக்குழுக்களின் கைகளில் 2,000 இற்கு மேற்பட்ட மக்கள் மடிந்திருக்கின்றனர்.

"அந்தக் காலத்தில் மிகவும் தெளிவாகத் தெரிந்த பயமுறுத்தும் கொடூரச் செயல்களின் நடவடிக்கைகள் நிறைந்திருந்தன. ஒடுக்குமுறை நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கெதிராக, அதற்கு முன்னர் எந்த காலகட்டத்திலும், நடைபெற்றிராத அளவிற்கு கொடூரமான சித்திரவதைகள் நடைபெற்றன. தோலுரிக்கப்பட்ட, தலைவெட்டப்பட்ட, குரல்வளை வெட்டப்பட்ட அல்லது அங்கங்கள் சிதைக்கப்பட்ட சடலங்கள் காணப்பட்டன. தலைகளை மரங்களிலும் அல்லது வேலிகளிலும் கட்டித் தொங்கவிட்டிருந்தார்கள். துணை இராணுவ அடிப்படையில் நடைபெற்ற ஒடுக்கு முறைகளுக்கு மேலாக, நாட்டின் வடக்கு மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியங்களில் பெருமளவில் இராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. தப்பி ஓடிக்கொண்டிருந்த பெண்களும் குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்டனர்..... நகரங்களில், ஆசிரியர்கள், மாணவர்கள், சுகாதார ஊழியர்கள் மற்றும் மாதாகோயில் ஊழியர்கள், இரக்கமற்ற வகையில் ஆயுதப்படைகளின் கையில் கொடூரமான ஒடுக்குமுறையால் பாதிப்பிற்குள்ளாகினர்.

சர்வதேச மன்னிப்பு சபை (Amnesty International) 1982ல் நாடு முழுவதிலும் தொடர்ந்து நடைபெற்ற ஒடுக்குமுறை நடவடிக்கைகளை விவரித்து ஒரு அறிக்கை வெளியிட்டது.

"எல்சார்வடோரிலுள்ள பாதுகாப்பு படைகள் திட்டமிட்டு பரவலாக ஒடுக்குமுறை "மக்கள் காணாமல் போவது" தனிநபர்கள் மற்றும் பரந்த அடிப்படையில் மகளிர், ஆடவர், மற்றும் குழந்தைகள் மீது சித்திரவதை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் பலியானவர்கள் அதிகாரிகளை எதிர்த்து நிற்பவர்கள் என்று சந்தேகிக்கப்பட்டவர்கள் மட்டுமல்ல, ஆனால், பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கென்று இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளிலும் நடைபெற்றிருக்கிறது. அவர்களது கொலை அல்லது அங்கச் சிதைவு முற்றிலும் தான்தோன்றித்தனமானது".

அருகாமையிலுள்ள குவாத்தமாலாவில் நடைபெற்ற கொலைகளின் அளவு மேலும் பயங்கரத்தன்மை கொண்டதாகும். ஐ.நா ஏற்பாடு செய்திருந்த விசாரணை குழு, அந்த நாட்டில் அமெரிக்க ஆதரவுடன் தொடர்ந்து வந்து கொண்டிருந்த சர்வாதிகாரங்கள் 2,00,000 மக்களை கொன்று குவித்ததாக முடிவிற்கு வந்திருக்கிறது. றீகன் நிர்வாகத்தின் உற்சாகமான ஆதரவை பெற்றிருந்த, ஜெனரல் Efrain Rios Montt தலைமையின் கீழ் அந்நாட்டின் மத்திய மலைப்பாங்கான பகுதிகளில் மாயன் இந்திய மக்களுக்கெதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட இரத்தக்களரி நடவடிக்கைகள், "இனப்படுகொலை அளவிற்கு" சென்றுவிட்டதாக, அந்த அறிக்கை கூறியது.

பென்டகன் தற்போது சல்வடோர் தேர்வு என்று ஆராய்ந்து கொண்டிருப்பது இந்த உண்மையைத்தான் எடுத்துக்காட்டுகிறது. என்றாலும், மத்திய அமெரிக்காவில் அமெரிக்கா தலையிட்டதற்கும் ஈராக் ஆக்கிரமிப்பிற்குமிடையில், கணிசமான வேறுபாடுகள் உள்ளது. குவாத்தமாலாவிலும், எல்சால்வடோரிலும் அமெரிக்க ஏகாதிபத்தியம், நிலைபெற்றுவிட்ட உள்நாட்டு வசதிபடைத்தவர்கள் மற்றும் இராணுவங்கள் மூலம் பணியாற்ற முடிந்தது. அவை பென்டகனில் பயிற்சியளிக்கப்பட்டு, மற்றும் பல தசாப்தங்களாக வெகுஜனங்களை ஒடுக்குவதில் அனுபவம் பெற்றிருந்தவை.

ஈராக்கில் வாஷிங்டன் எதிர்கொள்ளுகின்ற நிலவரம் என்னவென்றால் ஈராக்கில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு படைகள், ஈராக் ஆக்கிரமிப்பிற்கெதிரான சக்திகளின் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்கின்ற நேரத்தில் எல்லாம் "கரைந்துவிடுகின்றன".

குர்திஸ் Peshmerga மற்றும் ஷியைட் குடிப்படையினரை சேர்ந்தவர்களை கொலைக்குழுக்களாக உருவாக்கும்போது அமெரிக்க சிறப்புப்படைகளை அத்தகைய சக்திகளுக்கு நேரடியாகவும், மற்றும் "ஆலோசகர்களாகவும்'' பயன்படுத்திக்கொள்கின்ற திட்டங்கள் ஆராயப்பட்டு வருவதாக நியூஸ் வீக் கட்டுரை குறிப்பிடுகிறது.

அத்தகைய உள்ளூர் சக்திகளை இதுபோன்ற கறைப்படிந்த வேலைகளுக்கு பயன்படுத்திக்கொள்வதில் வாஷிங்டன் வெற்றி பெறுகின்ற அளவை பொறுத்தே அதன் விளைவு ஈராக்கில் பல்வேறு தரப்பு இன, மத மக்களுக்கிடையே ஒரு முழுவீச்சில் உள்நாட்டுப்போர் கட்டவிழ்த்துவிடப்படக் கூடும்.

இதில் பெரும்பாலான கொலைகளைச் செய்வது அமெரிக்கத் துருப்புகளாகத்தான் இருக்கும். அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பாக உள்ள, வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கும் ஈராக்கியர்களை சிரியாவிற்குள் படுகொலை செய்ய அல்லது புகுந்து ''பிடித்துவர'' Green Beret அமெரிக்க இராணுவத்தின் தலைமையில் நடவடிக்கை எடுக்க ஆலோசனை நடைபெற்று வருவதாக, நியூஸ் வீக் செய்தி தெரிவிக்கிறது. அப்படி பிடித்துவரப்படுபவர்கள் இரகசிய இடங்களில் விசாரணைக்காக பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. இதன் பொருள் என்னவென்றால், அபுகிரைபிலும் இதர பகுதிகளிலும் நடைபெற்றதாக அம்பலப்படுத்தப்பட்ட சித்திரவதைகள் பரவும்.

"சால்வடோர் தேர்வு" என்று கூறப்படும் ஆலோசனையின் அடிப்படையாக, அமைந்திருக்கின்ற சிந்தனை என்னவென்றால், தற்போது அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஒத்துழைப்பதற்கு எதிராக, ஈராக் போராளிகள் நடத்திவருகின்ற படுகொலை மற்றும் பயங்கர நடவடிக்கைகளை வாஷிங்டனும் அதன் கைப்பொம்மைகளும் அவர்களை எதிர்ப்பவர்களுக்கு எதிராக வெற்றிகரமாக பயன்படுத்திவிட முடியும் என்பதுதான்.

ஆனால், இந்த எதிர்ப்பு ஈராக் மக்களின் பரவலான வெகுஜனங்களை உள்ளடக்கியதாகும். சால்வடோரில் பயன்படுத்தப்பட்ட முறைகளை ஈராக்கில் கடைபிடித்தால் ஏற்கனவே, ஈராக் மக்களை கொன்று குவித்த நடவடிக்கைகளுக்கு மேலாக மிகப்பெரும் எடுப்பில் படுகொலைகளை செய்ய வேண்டியிருக்கும்.

ஆக, புஷ் நிர்வாகம் ஈராக்கில், பயங்கரவாதத்தின் மீதான போர் என்று அழைக்கப்படுகின்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதன்மூலம், தற்பொழுது இதற்கு முன் கண்டிராத பரந்த பயங்கரவாத செயல்கள் மூலம் அமெரிக்க இராணுவம் அங்கு அச்சுறுத்தலில் ஈடுபடவுள்ளது.

Top of page