World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US officially ends hunt for Iraqi WMD

ஈராக் பேரழிவுகரமான ஆயுதங்களின் தேடுதல் வேட்டைக்கு அமெரிக்கா அதிகாரபூர்வமாக முற்றுப்புள்ளி வைத்தது

By Joseph Kay
18 January 2005

Use this version to print | Send this link by email | Email the author

சென்றவாரம் புஷ் நிர்வாகம் குழப்பமற்ற நிலையில் ஈராக்கில் பேரழிவுகரமான ஆயுதங்களை தேடுகின்ற முயற்சியை அதிகாரபூர்வமாக கைவிட்டு விட்டதாக ஒப்பு கொண்டிருக்கிறது. நவீனகால அரசியலில் மிகப் பெரிய பொய் தனது இழிவான முடிவிற்கு நொண்டிக்கொண்டே சென்று சேர்ந்ததை அமெரிக்க ஊடகங்கள் மிக சர்வசாதாரணமாக வெளியிட்டிருக்கின்றன.

ஈராக்கின் இரசாயன, மரபியல் மற்றும் அணு ஆயுதங்கள் பற்றிய மறுக்க முடியாத ''புலனாய்வு'' அடிப்படையில் விடப்பட்ட கடுமையான எச்சரிக்கை போருக்கு ஒரு சாக்குப் போக்காக அமைந்தது, ஏற்கனவே 100,000 ஈராக் மக்களை கொன்று ஏறத்தாழ 1,400 அமெரிக்கர்கள் பலியாகி, ஒவ்வொரு மாதமும் பில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டுக்கொண்டிருக்கிற அந்தப்போர் பற்றி எந்தக் குறிப்பும் அவற்றில் இல்லை.

அமெரிக்க பத்திரிகைகளும் ஒலிபரப்பு ஊடகங்களும் நிர்வாகத்தின் போர் பிரச்சாரத்தை நீட்டி முழக்கியதில் தனது சொந்த விமர்சனத்திற்குரிய பங்களிப்பு தொடர்பாக விளக்கம் தரவேண்டிய பொறுப்பு எதுவும் இல்லாதவை என்று சொல்லத் தேவையில்லைதான்.

ஜனவரி 12-ல், வாஷிங்டன் போஸ்ட் ஒரு கட்டுரையை "ஈராக்கில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களை தேடுகின்ற வேட்டை சென்ற மாதம் முடிந்து விட்டது" என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது. "2004-ல் ஆயுதங்கள் தேடுதல் வேட்டைக்கு தலைமை வகித்து நடத்திய Charles A. Duelfer நாடாளுமன்றத்திற்கு ஒரு இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்து நான்கு மாதங்களுக்கு பின்னர் -அந்த இடைக்கால அறிக்கை- ஈராக் போருக்கு முன்னர் ஈராக் தொடர்பாக புஷ் நிர்வாகத்தின் தலைமை அதிகாரிகள் வலியுறுத்திக் கூறிய ஒவ்வொரு அம்சத்தையும் ஏறத்தாழ மறுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது. இந்த இளவேனிற்காலத்தில் ஈராக் ஆய்வுக் குழுவின் இறுதி முடிவுகள் வெளியிடப்படும், அதற்கிடையில் இந்த அறிக்கை அப்படியே நீடிக்கும் என்று [ ஒரு மூத்த புலனாய்வு அதிகாரி] தெரிவித்தார்."

Duelfer அக்டோபரில் வெளியிட்ட பூர்வாங்கமான அறிக்கை, ஈராக்கிடம் இருந்த எந்தவித இரசாயன மற்றும் மரபியல் ஆயுதங்களும் 1991ல் அழிக்கப்பட்டுவிட்டன, அதற்கு பின்னர் பேரழிவுகரமான ஆயுத திட்டம் எதுவும் திரும்பவும் தயாரிக்கப்படவேயில்லை என்று முடிவு கூறியிருந்தார். "1991க்கு பின் ஈராக் அணுவெடிப்பு சாதனங்களையோ அல்லது அணுஆயுதங்களையோ பயன்படுத்தி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கான அடையாளம் எதையும்," அது பார்க்கவில்லை.

இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், அரசாங்கத்தின் தலைமை ஆயுதங்கள் ஆய்வாளர் தனது தேடுதல் வேட்டையில் ஆத்திரமூட்டல் எதுவுமில்லாமல் போரை நடத்தியதற்கு கூறப்பட்ட சாக்குப்போக்குகள் அனைத்துமே முற்றிலும் மோசடியானவை மற்றும் முன்னாள் அமெரிக்க ஆயுதங்கள் ஆய்வாளர் ஸ்கோட் ரிட்டர், புஷ் நிர்வாகம் ஒரு திட்டமிட்ட மோசடியை நடத்தியது என்று குற்றம் சாட்டியதையும் சரி என்று மெய்பிப்பதாக அமைந்திருக்கிறது.

போஸ்ட் செய்திக்கு புஷ் நிர்வாகம் அளித்த பதிலில் முக்கியத்துவம் எதுவும் கொடுக்காமல் பேரழிவுகரமான ஆயுதங்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை என்பதை சாதாரணமாக தள்ளுபடி செய்தது. ABC News சேர்ந்த பார்பரா வால்டருக்கு புஷ் அளித்த பேட்டி, ஜனவரி 14ல் ஒலிபரப்பப்பட்டது, அதில் அவர் "சதாம் ஹுசேன் ஆபத்தானவர், அவர் அதிகாரத்தில் இல்லாததால் உலகம் பாதுகாப்பாக இருக்கிறது'' என்ற தமது மந்திரத்தை திரும்பவும் கூறினார். போர் அதன் விலைக்கு ''முற்றிலும்'' ஏற்புடையதுதான் என்று கூறினார்.

வெள்ளை மாளிகை பத்திரிகை செயலாளர் ஸ்கோட் மெக்கிலேலன் "இன்றைக்கு நாம் அறிந்திருப்பதை அடிப்படையாக கொண்டு பார்க்கும்போது, ஜனாதிபதி அதே நடவடிக்கையைத்தான் எடுத்திருப்பார் ஏனென்றால் அது அமெரிக்க மக்களை காப்பாற்றுவது சம்மந்தப்பட்டதாகும்" என்று கூறினார். அமெரிக்காவிற்கு ஒரு அச்சுறுத்தல் இல்லாத ஒரு ஆட்சியை கவிழ்ப்பது எப்படி அமெரிக்க மக்களை காப்பாற்றுவதற்கு அவசியமாகும் என்பதை மெக்கிலேலன் விளக்கவில்லை.

ஈராக்கில் பேரழிவுகரமான ஆயுதங்கள் உள்ளனவா? அல்லது இல்லையா என்பதைப்பற்றி கவலையில்லை என்று இருந்திருப்பார்களானால், புஷ், துணை ஜனாதிபதி டிக் சென்னி, பாதுகாப்பு செயலாளர் டோனால்ட் ரம்ஸ்பெல்ட் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கொண்டலீசா ரைஸ் மற்றும் இதர தலைமை நிர்வாக அதிகாரிகள் படையெடுப்பிற்கு முந்திய காலத்தில் அந்தப் பிரச்சனைக்கு அவ்வளவு அதிகமான முக்கியத்துவம் தந்தது ஏன்----என்பதை அவர் விளக்கவுமில்லை மற்றும் பல்வேறு தரப்பினரைக் கொண்ட வெள்ளை மாளிகையின் நிருபர்கள் பட்டாளமும் அதை விளக்குமாறு வற்புறுத்தவில்லை.

அவர்கள் அனைவருமே அமெரிக்காவிடம் ஈராக் அத்தகைய ஆயுதங்களை வைத்திருக்கிறது என்பதற்கு ஆதாரம் உள்ளது என்று திட்டவட்டமான அறிக்கைகளை வெளியிட்டவர்கள். இங்கே எடுத்துக்காட்டாக 2002 ஆகஸ்ட் 26ல் செனி கூறியது இது: "இதை எளிதாக சொல்வதென்றால், சதாம் ஹுசேன் தற்போது பேரழிவுகரமான ஆயுதங்களை வைத்திருக்கின்றார் என்பதில் சந்தேகத்திற்கு இடமில்லை. அவர் அவற்றை குவித்துக் கொண்டிருப்பது நமது நண்பர்களுக்கும் நமது நட்பு நாடுகளுக்கும், நமக்கும் எதிராக பயன்படுத்துவதற்குத்தான்" 2002 அக்டோபர் 7ல் புஷ் அறிவித்தார்: "11 ஆண்டுகளுக்கு பின்னர், அந்த ஆண்டுகளில் கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார தடைகளை விதிக்க, சோதனைகள் நடத்த, தேர்ந்தெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கை மூலமும் கூட முயன்று வந்தோம், இதனுடைய முடிவு என்னவென்றால் சதாம் ஹுசேன் இன்னமும் இரசாயன மற்றும் மரபியல் ஆயுதங்களை வைத்திருக்கிறார் மற்றும் அவற்றை அதிக அளவில் தயாரிப்பதற்கான தனது திறமைகளை அதிகரித்துக் கொண்டிருக்கிறார்".

2003 மார்ச் 30ல் ரம்ஸ்பெல்ட் அறிக்கையை ABC News ''திஸ் வீக்' நிகழ்ச்சியில் வெளியிட்டது. ''படையெடுப்பின் 10 நாட்கள் முன்னர்: [ஈராக் பேரழிவுகரமான ஆயுதங்களை] எங்கு வைத்திருகிறது என்பதை நாம் அறிவோம்'' என குறிப்பிட்டிருந்தார்.

பொய்களை அடிப்படையாகக் கொண்டு போருக்கு சென்றுவிட்டு, அதற்கு பொறுப்பேற்பதிலிருந்து தாங்கள் தப்பித்து விடமுடியுமென்று புஷ் மற்றும் அவருடன் உள்ளவர்கள் கருதுவார்களானால், அது தங்களை ஊடகங்களோ அல்லது ஜனநாயகக் கட்சியோ தட்டி கேட்காது, சவால் விடாது என்று தாங்கள் அறிந்து கொண்டிருப்பதால்தான்.

New York Times எழுதியுள்ள தலையங்கம் தராளவாத ஸ்தாபனத்தின் கருத்தை பிரதிபலிப்பதாக அமைந்திருக்கிறது. ஜனவரி 13ல் அது, "புல்லட்டீன்: பேரழிவுகரமான ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை" என்ற தலைப்பில் தலையங்கம் பிரசுரித்துள்ளது. தான் உடந்தையாக செயல்பட்டதை மூடிமறைக்கும் முயற்சியாக அந்த செய்தி பத்திரிக்கை, "இல்லாத பேரழிவுகரமான ஆயுதங்கள் ் பற்றிய அச்சம் நமக்கு ஒரு போரை கொண்டு வந்திருக்கிறது" என்று எழுதியிருக்கிறது. டைம்ஸ் தான் அரசாங்க பொய்களின் பலி எனவும், அந்த குற்றத்தை பிரச்சாரம் செய்வதற்கு உடந்தையாக செயல்படவில்லை என்பது போன்று எழுதுகிறது.

"கடுமையாக நாம் கைபிடித்துள்ள நம்பிக்கைகளை மறுத்துரைப்பதில் உள்ள சங்கடங்களை இது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கிறது, திரு புஷ் ஆயுதங்களை தேடும் வேட்டை நாடகத்தை நன்றாகவே விற்றிருக்கிறார், அண்மையில் 40 சதவீத அமெரிக்க மக்கள் அந்த ஆயுதங்கள் அங்கு இருந்தன என்று ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள்" என்று அந்த பத்திரிகை தொடர்ந்து எழுதுகிறது.

டைம்ஸின் சொந்தத் தோள்களிலிருந்து பழியை நகர்த்திவிடுவதற்கு மேற்கொள்ளப்பட்டிருக்கும் இந்த முயற்சி பற்றி பலவற்றை சொல்ல வேண்டியது அவசியமாகும். முதலாவதாக நிர்வாகத்தின் பொய்களை கண்டுபிடிப்பதில் எந்தவிதமான சிரமமும் அடையாத, மில்லியன்கணக்கான மக்கள் அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் திரண்டார்கள். 2003 பிப்ரவரி 15ல் 20 மில்லியன் மக்கள் சர்வதேச அளவில் போர் எதிர்ப்பு கண்டன பேரணிகளை நடத்தினர்.

இரண்டாவதாக ஈராக்கில் பேரழிவுகரமான ஆயுதங்கள் இருப்பதாக இன்னும் பல அமெரிக்கர்கள் நம்புவார்களானால் அப்போது அந்த தவறு டைம்ஸ் போன்ற "செய்திகள்" ஆதாரங்களினால்தான் இருக்கவேண்டும், அவை அந்த மோசடி அப்படியே நீடிப்பதற்கு தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தன மற்றும் அதை மறுக்கும் அம்பலத்திற்கு வந்த தகவல்களை மறைத்தன.

டைம்ஸ்ற்கே உரிய பாணியில், அந்த தலையங்கம் ஒரு நேர்மை குறைவான சமிக்கையை வெளியிட்டிருக்கிறது---- புலனாய்வில் "தவறுகள் மோசடிகளை தனிமைப்படுத்தி பகுத்துப்பார்க்க தவறிய நமது சொந்தத் தவறுகள்" என்று குறிப்பிட்டிருக்கிறது. அதே நேரத்தில் தனது சொந்த நிருபர்கள் மற்றும் ஜூடிக் மில்லர் போன்ற இழிவுபுகழ் பெற்ற விமர்சகர்கள் அந்தப் பொய்களை வளர்ப்பதில் பங்களிப்பு செய்ததை குறிப்பிட தவறிவிட்டது. "தவறான புலனாய்வு" என்ற சொல்லிற்குள் புகுந்து தப்பிக்கப் பார்க்கிறது. இந்த மோசடியை அமெரிக்க மற்றும் உலக மக்களிடையே நீடிப்பதற்கு உதவியதற்காகாக, மில்லரோ அல்லது வேறு எந்த பத்திரிக்கையாளருமோ அல்லது பத்திரிக்கையாசிரியருமோ வேலையிலிருந்து நீக்கப்படவில்லை.

கிளின்டன்களின் அர்கன்சாஸ் (Whitewater) நிலவியாபார பேரம் பற்றி இடைவிடாது புலன் விசாரணை செய்த டைம்ஸ் மற்றும் Los Alamos விஞ்ஞானி Wen Ho Lee ஐ இரக்கமற்ற வகையில் வேட்டையாடிய டைம்ஸ், புஷ் நிர்வாகம் கூறிய பேரழிவுகரமான ஆயுதங்கள் ஈராக்கில் இல்லை என்று ஐ.நா ஆயுத ஆய்வாளர்களும், மறுத்த பின்னர் ஏன் புலனாய்வு செய்ய வேண்டும் என்று கவலைப்படவில்லை? இங்கே புதிர் எதுவுமில்லை: இதர தாராளவாத பத்திரிகைகள் என்று கூறப்படுபவையுடன் சேர்ந்து டைம்ஸ் உம் எண்ணெய் வளம் மிக்க ஈராக் மீது எந்தவிதமான ஆத்திரமூட்டலும் இல்லாமல் சட்டவிரோதமாக படையெடுப்பதை ஆதரித்தன.

அந்த தலையங்கம் தனது முடிவுரையில் ஈராக் ஆய்வுக்குழு தனது ஆயுதங்கள் தேடுகின்ற நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டு ஈராக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக போர் புரிய சென்றுவிட்டதாக குறிப்பிடுகிறது, "அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நம்புகிறோம், அவர்கள் அப்படி வெற்றிபெறாவிட்டால், ஈராக்கில் ஏராளமான பகுதிகள் எவரும் நடமாடாத பகுதியாகிவிடும் அங்கு பயங்கரவாதிகள் பேரழிவுகரமான ஆயுத திட்டங்களை சுதந்திரமாக நிறைவேற்றுவார்கள். அதை முறியடிப்பதற்கு ஐ.நா ஆயுத ஆய்வாளர்கள் அங்கே செல்ல முடியாது" என்று டைம்ஸ் எழுதியிருக்கிறது.

இதை வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், அரசாங்கம் சொல்லிய பொய்களை இறுதியாகவும் அதிகாரபூர்வமாகவும் கண்டிப்பது என்பது போரை எதிர்ப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக ஆகிவிடக் கூடாது, மாறாக அதற்கு எதிராக அதாவது மேலும் சாவுகள் அழிவுகள் ஏற்படுத்துவதை நியாயப்படுத்த அதை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

முன்னணி ஜனநாயகக் கட்சிக்காரர்கள் இது சம்பந்தமாக தெரிவித்துள்ள கருத்தும் நேர்மை குறைவானதாகவும் அறைகுறையாகவும் உள்ளது. கீழ்சபை ஜனநாயகக் கட்சி தலைவர் Nancy Pelosi புஷ் இவ்வளவு நீண்ட காலத்திற்கு இவ்வளவு பெரிய தவறை ஏன் செய்து கொண்டிருந்தார் என்பதை அமெரிக்க மக்களுக்கு விளக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். இங்கே முக்கியமான புள்ளிக்கு வருவோம். ஜனநாயகக் கட்சி தனது ஜனாதிபதி வேட்பாளராக போருக்கு ஆதரவாக வாக்களித்தவரை பேரழிவுகரமான ஆயுத பொய்கள் அம்பலத்திற்கு வந்து நீண்ட காலத்திற்கு பின்னர், போருக்கு ஆதரவாக வாக்களித்தவரை தனது கட்சிக்கு ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தது ஏன் என்பதை அவர் எப்போது அமெரிக்க மக்களுக்கு விளக்கப்போகிறார்? அவரது கட்சி இன்னமும் ஏன் ஆக்கிரமிப்பை ஆதரித்துக்கொண்டிருக்கிறது.

ஜனநாயகக் கட்சியின் சார்பில் 2000 தேர்தலில் துணை ஜனாதிபதியாக, போட்டியிட்ட செனட்டர் ஜோசப் லிபர்மேன் ஈராக்கிடம் அத்தகைய ஆயுதங்கள் இல்லை என்பதைக்கூட ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். "பேரழிவுகரமான ஆயுதங்கள் ஏராளமாக இருப்பதை நாம் கண்டுபிடிக்கவில்லை என்ற உண்மையினால் மட்டும் சதாம் ஹுசேனிடம் அவை இல்லை என்று பொருளாகாது" என்று Fox News இற்கு அவர் தெரிவித்தார்.

Top of page