World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Schröder at the White House: cuddling up to Bush

வெள்ளை மாளிகையில் ஷ்ரோடர்: புஷ்ஷுடன் குலாவல்

By Peter Schwarz
1 July 2005

Use this version to print | Send this link by email | Email the author

2002 இலையுதிர்காலத்தில், ஜேர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) மற்றும் பசுமைக் கட்சி கூட்டணி, பலரும் அவர்களால் முடியாது என்று நினைத்த ஒரு தேர்தலில் வெற்றி பெற்றனர். அத்தகைய மாற்றத்திற்கு காரணம் தேர்தல் தினத்திற்கு முன்பு, ஜேர்மன் அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் ஈராக்கிய போருக்கு எதிராக எதிர்ப்பை தெரிவித்திருந்த உண்மையை தளமாகக் கொண்டிருந்தது.

மத்திய கிழக்கில் ஜேர்மனிய நலன்களினால் முக்கியமான ஷ்ரோடர் உந்துதல் பெற்றிருந்த போதிலும்கூட, ஒரு ஏகாதிபத்திய குற்றம் என்று வாக்காளர்கள் கருதியிருந்த ஒரு போருக்கு அவர்கள் அடிப்படையில் எதிர்ப்புக் கொண்டதால், ஷ்ரோடரின் நிலைப்பாட்டிற்கு வாக்காளர்களால் ஆதரவு அளிக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் போர்த் திட்டங்களுடன் தன்னையும் அடையாளப்படுத்திக் கொண்டிருந்ததால் ஜேர்மனிய கன்சர்வேடிவ் எதிர்க்கட்சி தேர்தலில் தோல்வியைக் கண்டது.

மூன்று வருடங்களுக்கு பின்னர், அடுத்த ஜேர்மனிய தேர்தல் பிரச்சாரத்திற்கான தயாரிப்புக்களுக்கு நடுவே, ஷ்ரோடரின் போரெதிர்ப்பு நிலைப்பாட்டில் ஒன்றும் மிஞ்சி இருப்பதாகத் தெரியவில்லை. போருக்கு ஜனாதிபதி கூறியிருந்த காரணங்கள் வெளிப்படையாக பொய்கள் என்று அம்பலப்படுத்த நிலையில், அந்த ஜனாதிபதியின் ஈராக்கிய கொள்கைகள் நைந்திருக்கும் நிலையில், அமெரிக்காவிலேயே விரைவாக ஆதரவை இழந்து கொண்டிருக்கும் அந்த ஜனாதிபதி இருக்கும் வெள்ளை மாளிகைக்கு இவருடைய சமீபத்திய -ஒருவேளை கடைசியாகக் கூட இருக்கலாம்-- பயணம், ஜனாதிபதிக்கு பெரும் மதிப்புக் காட்டுவதாய் அமைந்தது.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவில் ஜேர்மனிக்கு ஒரு நிரந்தர இடம் அளிப்பதற்கு அமெரிக்கா உடன்படவேண்டும் என்பதற்காக, ஜனாதிபதியிடம் இரங்கி நிற்பதற்காக, ஷ்ரோடர் வாஷிங்டனுக்கு வந்திருந்தார்; இந்தக் கோரிக்கை சிறிது காலமாகவே பெரும் ஆற்றலுடன் ஷ்ரோடராலும், அவருடைய பசுமைக்கட்சி வெளியுறவு மந்திரி ஜோஷ்கா பிஷராலும் தொடரப்பட்டு வந்துள்ளது. தன்னுடைய நாட்டிற்கு இந்த இடம் வேண்டும் என்பதற்காக வாதிடும் ஷ்ரோடர், ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் பால்கன் பகுதியில் உறுதிநிலை வந்துள்ளதற்கு ஜேர்மனியின் பங்கினை வலியுறுத்திக் கூறியுள்ளார்; மேலும் ஐ.நா. குழுக்களில் உயர்ந்ததில் ஓர் இடத்தைப் பெறுவதை நியாயப்படுத்தும் வகையில் அவர் கூறியதாவது: "இதில் இருந்து நாங்கள் சில உரிமைகளைப் பெறுவோம், மிக உயர்ந்த அளவில் கூட்டு முடிவு எடுக்கும் உரிமையாகும் அது."

தூதரக முறையில் மிகவும் நேர்த்தியாக தன்னுடைய விருந்தினரை புஷ் உறுதி மொழி ஏதும் கொடுக்காமல் உதறித் தள்ளிவிட்டார்: "எந்த நாட்டின் வேட்புத்தன்மையையும் நாங்கள் நிராகரிக்கவில்லை" இந்தப் பதிலை ஷ்ரோடர் சாதகமானது என்று பாராட்டியுள்ளார். உண்மையில், அமெரிக்க வெனியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ், மூன்று வராங்களுக்கு முன்புதான் பாதுகாப்புக் குழுவில் ஜேர்மனிக்கு நிரந்தர இடம் கொடுப்பதற்கு எதிராக தன்னுடைய சொந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

ஷ்ரோடரை வெளிப்படையாகவே மூக்கை உடைக்க வேண்டும் என்று புஷ் விரும்பவில்லை; அதிலும் ஈராக்கியப் போருக்கு இந்த முந்தைய எதிர்ப்பாளர் இப்பொழுது தாழ்ந்து நிற்கும் நிலை, தன் நாட்டிலேயே போர் எதிர்ப்பு உணர்வு பெருகியிருக்கும் நிலையில் ஒரு அமெரிக்க ஜனாதிபதிக்கு செளகரியமாகத்தான் உள்ளது. எப்படிப்பார்த்தாலும், வாஷிங்டனை பொறுத்தவரையில், ஷ்ரோடர் ஒரு "நொண்டி வாத்தாக", பதவியில் இருந்து வெளியேறப் போகிறவராகத்தான், கருதப்படுகிறார்.

Neue Zuricher Zeitung என்னும் நாளேடு இதைப்பற்றிக் கூறுகிறது: "ஷ்ரோடர் அக்கறையுடன் எடுக்கப்படவேண்டிய நபர் என்று கருதப்பட்டிருந்தால், ஒருவேளை புஷ் இன்னும் வெளிப்படையாகவே தன்னுடைய கருத்தை கூறியிருப்பார். ஆரம்பத்திலேயே அவர் ஜேர்மன் அதிபரிடம் மிகத் தெளிவான முறையில் ஐ.நா.பாதுகாப்புக் குழுவில் ஜேர்மனி நிரந்தர இடம் பெறுவதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறியிருப்பார்."

ஜேர்மனியின் தூதரக நெறி, "ஷ்ரோடரும் அவருடைய வெளியுறவு மந்திரி பிஷ்ஷரும் ஒரு விரிவாக்கப்படும் பாதுகாப்புக் குழுவிற்கு உலகெங்கிலும் ஆதரவு திரட்டத் தொடங்கியபோது மகத்தான, நிரந்தர பற்றாக்குறையைத்தான் கண்டுவருகிறது." என்று இந்த நாளேடு கூறியுள்ளது. அவர்கள் வாஷிங்டனுடைய உண்மையான போக்கை தவறாகக் கருதுவது மட்டும் இல்லாமல் "ஐ.நா. பாதுகாப்புக் குழுவில் ஜேர்மனிக்கு ஒரு நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து என்பது ஐரோப்பாவில் பல நாடுகளுக்கும் களிப்புத் தராது என்பதையும் அறியவில்லை" என்றும் ஏடு கூறியுள்ளது.

ஷ்ரோடரின் வருகை, புஷ்ஷிடம் தயவை பெறுவதற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகள் இவற்றைப் பயன்படுத்தி, அமெரிக்கச் செய்தி ஊடகம் ஈரானுக்கு எதிராக ஆக்கிரோஷமான கொள்கையை அமெரிக்கா மேற்கொள்ள வலியுறுத்துவதற்கு பயன்படுத்திக் கொண்டது. ஷ்ரோடருடைய வருகையை பற்றி எழுதிய வாஷிங்டன் போஸ்ட் அவருடைய வெள்ளை மாளிகை விஜயம் பற்றிய கட்டுரைக்கு, "ஷ்ரோடர் ஈரான் பற்றி புஷ்ஷிடம் உடன்பாடு கொள்ளுகிறார்" என்று தலைப்புக் கொடுத்தது. ஈரானிய ஜனாதிபதியாக எதிர்பாராதவிதமாக கடினப் போக்கு உடைய மக்மூத் அகமதினெஜட் தேர்ந்தெடுக்கப்பட்டது பற்றி இந்நாளேடு குறிப்பிடுகையில், புஷ்ஷும், ஷ்ரோடரும் "ஈரானைப் பொறுத்தவரையில் பொது முன்னணியில் உள்ளனர்" என்று எழுதியுள்ளது.

"என்னுடைய செய்தி... நாம் கிரேட் பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி ஆகியவற்றுடன் தொடர்ந்து உழைத்து நல்ல குவிப்பு உடைய, ஒருங்கிணந்த, ஒற்றுமையான செய்தியை, அதாவது அணுவாயுத வளர்ச்சித் திட்டம் ஏற்பதற்கில்லை என்பதை அனுப்பிவைப்போம். ஈரான் அணுவாயுத திட்டத்தை வளர்ப்பதற்கு வாய்ப்புள்ளதாக்கும் ஒரு வழிமுறை ஏற்கப்பட முடியாது."

"இச் செய்தியுடன் அதிகமாய் நான் உடன்பட முடியாது. அவை அனைத்தின் மீதாகவும் நாங்கள் தொடர்ந்து உறுதியுடன் இருப்போம்" என்று ஷ்ரோடர் விடையிறுத்தார்.

"உண்மையில், ஓவல் அலுவலகத்தில் பரிமாறிக் கொள்ளப்பட்ட தூதரக நயச் சொற்கள் ஈரான் பிரச்சினையில் புதைந்து கிடைக்கும் ஆழ்ந்த வேறுபாடுகளை மறைத்துவிட முடியாது. ஒரு சாதாரண அணுப்பயன்பாட்டுத்திட்டம் கூட ஈரானை அணுவாயுத உற்பத்தியில் ஈடுபடக்கூடிய நிலைமையை ஏற்படுத்தக் கூடும் என்று புஷ் எச்சரித்தபோது, ஷ்ரோடர் பலமுறையும் சாதாரண அணுப்பயன் திட்டங்களை ஈரான் கொள்ளுவதற்கு உரிமை கொண்டுள்ளது என்று கூறினார்.

அமெரிக்கா இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளுவதை தடுக்கும் வகையில் ஈரானின் அணுசக்தி திட்டங்கள் பற்றி பேச்சுவார்த்தைகள் நடத்தவேண்டும் என்று ஐரோப்பிய சக்திகள் விழைகின்றன. வாஷிங்டனோ ஈரான் மீது கூடுதலான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதற்காக பேச்சு வார்த்தைகளை ஆதரித்து, இன்னும் கூடுதலான வகையில் ஆக்கிரோஷமான கொள்கைக்கான போலிக் காரணங்களையும் காண முற்படுகிறது. குறிப்பாக, ஜேர்மனியை பொறுத்தவரையில், ஜேர்மனிய பொருட்களுக்கு முக்கிய சந்தையாகவும், எண்ணெய் விற்பனையாளராகவும் இருக்கும் ஈரானுடன் வெளிப்படையாக பூசல் என்பது பொருளாதாரத்தில் பேரழிவு விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று மட்டும் இல்லாமல், துருக்கி உட்பட அப்பகுதி முழுவதும் உறுதிப்பாடு சீர்குலைந்துவிடும் என்ற அச்சமும் உள்ளது.

ஒரு நீண்ட காலப் பார்வையில், இந்த வேறுபாடுகள் அனைத்துமே தந்திரோபாயரீதியானவைதான். அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய நலன்களை பூகோளம் முழுவதும் கட்டாய வகையில் விரிவாக்கம் செய்யும் கொள்கையை ஷ்ரோடர் சவால்செய்யவில்லை. ஜேர்மனிய, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களும் தங்களுடைய கொள்ளைப் பங்கை நிலைநிறுத்திக் கொள்ள வாய்ப்பு வேண்டும் என்பதைத்தான் அவர் விரும்புகிறார். ஆகையால் இப்பிரச்சினைகளை தூதரகத் திரைமறைவிற்குள் இயக்க அவர் விரும்புகிறார்.

புஷ்ஷுடன் தன்னுடைய கருத்து வேறுபாடுகளை வெளிப்படையாக விவாதித்து, வாஷிங்டனுடைய பொய்களை சுட்டிக் காட்டி அமெரிக்க ஜனாதிபதியை எதிர்கொண்டிருந்தால், ஜேர்மனியில் இருக்கும் வாக்காளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருப்பார் என்று மட்டும் இல்லாமல் அமெரிக்கர்களிடையேயும் ஆதரவு ஷ்ரோடருக்கு கிடைத்திருக்கும். ஆனால் அமெரிக்கா, ஜேர்மனி இருநாடுகளில் இருக்கும் ஆளும்செல்வந்தத்தட்டுக்களின் நலன்களின் எதிர்ப்பார்ப்புக்களுக்கு எதிராக ஷ்ரோடரின் அத்தகைய நிலைப்பாடு அமைந்திருக்கும்.

பொருளாதார, சமூகக் கொள்கையை போலவே, ஷ்ரோடர் வெளியுறவுக் கொள்கையிலும் முதலாளித்துவ நலன்களை உறுதியாகப் பாதுகாக்கவேண்டும் என்ற கருத்து உடையவர் ஆவார். எனவே அவர் தன்னுடைய கன்சர்வேடிவ் எதிர்ப்பாளர்களுக்கு ஆட்சிப் பொறுப்பை கொடுத்துவிட விரும்புவாரே ஒழிய, 2010 செயற்பட்டியலில் கொணடுவரப்பட இருக்கும் சமூக, பொதுநலத் திட்டச் செலவுக் குறைப்புக்களைக் கைவிடத் தயாராக இருக்கமாட்டார். புஷ் நிர்வாகத்திற்கு கோபத்தை ஏற்படுத்தி, அதன் விளைவாக ஜேர்மனிய பெருவணிகத்தை கோபம் மற்றும் மனமுறிவு விளைவிக்கக் கூடிய மோதலை எதிர்கொள்ளுவதைவிட அவர் தேர்தல்களில் தோல்வியை விரும்புவார்.

Top of page