World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Foreign Minister Fischer crawls before the right-wing opposition

ஜேர்மனி: வலதுசாரி எதிர்க்கட்சி முன் மண்டியிடும் வெளியுறவு அமைச்சர் பிஷ்ஷர்

By Martin Kreickenbaum and Peter Schwarz
9 May 2005

Use this version to print | Send this link by email | Email the author

"விசா விவகாரம்" என்றழைக்கப்படுவது தொடர்பான ஒரு நாடாளுமன்ற குழுவின் விசாரணை முன்பு அண்மையில் ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஸ்கா பிஷ்ஷர் 12 மணி நேரம் சாட்சியமளித்தார். வரலாற்றிலேயே, முதல் தடவையாக, ஒரு ஜேர்மன் நாடாளுமன்ற குழுவின் முன் தொலைக்காட்சி காமிராக்கள் கொண்டுவரப்பட்டு, Phoenix செய்தி அலைவரிசையில் தனது முழு விசாரணைகளை ஒளிபரப்பியது.

பிஷ்ஷர் ராஜினாமா செய்யக்கூடும் என்ற ஊகச் செய்திகள் உட்பட ஏராளமான ஊடக பரப்புச் செய்திகளுக்கு மத்தியில் இந்த விசாரணை நடைபெற்றது. ஆனால், இறுதியில் அந்த நிகழ்ச்சி பயனற்றதாகிவிட்டது. பிஷ்ஷரின் சாட்சியம் முக்கிய சான்று எதையும் தரவில்லை. ஒரு வெளியுறவு அமைச்சர் கேள்விகளுக்கு கீழ்படிந்து பதிலளிப்பதும், இரக்கம் ஏற்படுகின்ற வகையில் சில தவறுகளை ஒப்புக்கொள்வதையும், இடைக்கிடை எதிர்க்கட்சிகள் "விசாக்கொள்கை மாற்றத்தை ஒரு மோசடியாக'' சித்தரிக்க முயலுவதையும் புகாராக கூறுவதையும் காணமுடிந்தது.

எப்போதாவது ஒருமுறை காரசாரமான ஒரு கருத்து மோதல்கள் காணப்பட்டாலும், அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் விசா கொள்கையின் பொதுவான போக்கில் உடன்படுகின்றனர் என்பது தெளிவாகத் தெரிந்தது. முடிந்தவரை அது கட்டுப்படுத்துவதாக அமைந்திருக்க வேண்டும், பொருளாதார அல்லது அரசியல் அடிப்படையில் நாட்டிற்கு பயன்படுபவர்களை மட்டுமே நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டும். விசாக்கொள்கை செல்ல வேண்டிய வழி குறித்து குழுவில் கவலை எதுவும் தெரிவிக்கப்படவில்லை, ஆனால் அதை செயல்படுத்துவதில் வெளியுறவு அமைச்சகம் தவறுகளை செய்துவிட்டதா, பிஷ்ஷர் தனது துறையை தனது கட்டுப்பாட்டினுள் வைத்துசெயல்படுகிறாரா என்பதே குழுவில் விசாரிக்கப்பட்டது.

முன்னாள் கத்தோலிக்க தேவாலய பணியாளர் என்கிற முறையில் பாவமன்னிப்பு சடங்குகளில் நன்கு பழக்கப்பட்டவர் என்ற முறையில் பிஷ்ஷர் சில தவறுகளை மிகுந்த சிந்தனையோடு ஒப்புக்கொண்டார்: "உடனடியாக நான் தகவல் தரவில்லை மற்றும் உடனடியாக அதுபற்றி கருத்துத் தெரிவிக்கவில்லை" என்பது தவறுதான் என ஒப்புக்கொண்டார். அவர் இரண்டு சட்டபூர்வமான விசா கட்டளைகள் "முறைகேடாக பயன்படுத்தப்படுவதற்கு" வாய்ப்புள்ளவை என்று ஒப்புக்கொண்டார். அதன்மூலம் வலதுசாரி எதிர்க்கட்சிகளின் கண்டனங்களை ஓரளவிற்கு ஒப்புக்கொண்டார். என்றாலும் அதே நேரத்தில், இந்தத் தவறுகள் தனது பதவிவிலகலை நியாயப்படுத்துகின்றன என்பதை மறுத்தார்.

ஜேர்மனிக்குள்ளேயும் ஐரோப்பாவிலும் புலம்பெயர்ந்தோரை பாரியளவு கடத்திவருவதற்கு வசதி செய்து தரும் வகையில், வெளியுறவுத்துறையின் விசாக்கொள்கை அமைந்திருக்கிறதா? கிழக்கு ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பெண்கள் கட்டாயப்படுத்தப்பட்டு விலைமாதர்களாக ஆக்கப்படுகின்றனரா? வெளிநாட்டு தொழிலாளர்கள் சட்டவிரோதமாக வேலைகளில் இருத்தப்படுகின்றனரா? என்பது குறித்து தெளிவுபடுத்துவதற்காக எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களது வற்புறுத்தலால் விசா விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அடிப்படையற்ற அந்த குற்றச்சாட்டுக்களை பயன்படுத்தி கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ சமூக யூனியன்(CDU/CSU) மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சியும் (FDP) முயன்றன. அவை அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் என்றாலும் ஊடகங்களில் அவை ஒரு அனுதாப எதிரொலிப்பை உருவாக்கின, ஏற்கெனவே நெருக்கடியிலுள்ள சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சி கூட்டணி அரசை பலவீனப்படுத்தவும்-----பிஷ்ஷர் இராஜினாமா செய்வாரானால் அரசாங்கத்தை அதன் பதவிக்காலம் முடியுமுன்னர் மாற்றிவிடவும் முயன்றன.

அதே நேரத்தில், அவர்களது பிரசாரம் அரசாங்கத்தின் விசாக்கொள்கைக்கு எதிரானது என்றாலும் ஒரு திட்டவட்டமான இனவெறித்தொனியை கொண்டதாகும். உக்ரைனிலிருந்து சட்டவிரோதமாக புலம் பெயர்ந்தவர்கள் தொடர்பாகவும் அவர்களது குற்றவியல் பற்றிய மிதமிஞ்சிய கற்பனைகளும் கிழக்குப்பகுதியிலிருந்து வருகின்ற குறைந்த ஊதிய போட்டியை சமாளிப்பதை நோக்கமாக கொண்டு அந்த வழியில் திருப்பிவிடப்பட்ட பிரசாரம் ஆகும், ஐரோப்பிய ஒன்றியம் கிழக்கு நோக்கி விரிவடைந்ததை தொடர்ந்து இந்த பிரசாரம் கணிசமான அளவிற்கு அதிகரித்துள்ளது.

கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ சமூக யூனியன் விமர்சனங்களின் பிரதான அம்சங்களில் ஒன்று வெளியுறவுத்துறை சட்டபூர்வமான கட்டளை ஒன்றில் காணப்படுகின்ற வாசகமாகும்---''அதில், [பயணம் செய்வதற்கான] சுதந்திரம் பற்றி சந்தேகம் ஏற்படுமானால் என்ற சொல் அடங்கியிருக்கிறது. இது ஒரு சட்டரீதியான நோக்கம் என கருதிக்கொள்ளலாம். எல்லாவற்றிக்கும் மேலாக கிழக்கு ஜேர்மனி பேர்லின் சுவற்றை கட்டியபோது அந்த ஆட்சிக்கு எதிரான முக்கிய கண்டனமே பயணம் செய்கிற உரிமையை கட்டுப்படுத்துவது தொடர்பானதுதானே? எல்லைகள் இப்போது எதிர்தரப்பில் மூடப்பட்டிருப்பதால் இந்தக்கொள்கை இனி செல்லுபடியாகாது.

கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ சமூக யூனியன் தாக்குதல்களை பிஷ்ஷரோ அல்லது பசுமைக் கட்சியினரோ சுதந்திரமாக பயணம் செய்வது ஒரு ஜனநாயக உரிமை என்ற அடிப்படையில் இதனை மறுத்துரைக்கவில்லை. தனது அதிகாரத்தின் கீழ் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுவிட்டன என்ற கண்டனத்திற்கு இது கொள்கை அடிப்படையில் நோக்கம் கொண்டவை என்று பிஷ்ஷர் திட்டவட்டமாக அக்குற்றச்சாட்டுக்களை புறக்கணித்தார். மாறாக, அவர் ஜேர்மன் தூதுவராலயங்கள் விசாக்களை வழங்கும்போது, தற்போதுள்ள கடினமான விசா வழங்கும் முறையில் அவர்கள் எதிர்நோக்கிய பிரச்சனைகளின் நடைமுறைரீதியான பிரதிபலிப்பே என வாதிட்டார்.

என்றாலும், அவர் கட்டுப்பாடுகள் குறைந்த அளவிற்கே தளர்த்தப்பட்டிருக்கின்றன என்று வலியுறுத்திக் கூறினார். அதில் தமது கட்டளையில் காணப்பட்டுள்ள 'அதில், பயணம் செய்வதற்கான சுதந்திரம் பற்றி சந்தேகம் ஏற்படுமானால்'' என்ற வாசகம் அனைவருக்கும் எல்லைகளை திறந்துவிடுவது என்ற பொருள் கொண்டதல்ல, வெளிநாட்டவர் தொடர்பாக இயற்றப்பட்டுள்ள சட்டத்தில் கண்டுள்ள முயற்சி, தனது அமைச்சக கட்டளையால் சிறிது தளர்த்தப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டார். சமூக ஜனநாயகக் கட்சி-பசுமை அரசாங்கம் "புதிய உண்மை நிலைமைகளை உருவாக்கிவிடவில்லை".

பயணத்திற்கான சுதந்திரத்தை தளர்த்துவதற்கு பிஷ்ஷர் எந்த நடவடிக்கை எடுத்திருந்தாலும் அவற்றை நியாயப்படுத்துவதற்கு----முதலாளித்துவ அரச பிரதிநிதியாகிய அவர் ஜேர்மனியின் பொருளாதார மற்றும் வெளியுறவுக்கொள்கை நலன்களை பாதுகாப்பதற்கே என சுட்டிக்காட்டினார். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நிலவுகின்ற பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சனைகளை அதிக பயண வாய்ப்புகள் உள்ள ''சாதாரண மக்கள்தான் செல்வந்தத்தட்டினர் அல்ல'' தீர்த்து வைக்க முடியும் என்று அவர் கூறினார். ரஷ்யாவையும் உக்ரைனையும் பொருளாதார தேக்கநிலை மற்றும் வேலையில்லாதோருக்கான, "கறுப்பு ஓட்டைகளாக;" (Black Holes) மாற்றுவதற்கு ஜேர்மனி அனுமதித்துவிட முடியாது என்று அவர் கூறினார். பிஷ்ஷர் தந்துள்ள தகவலின்படி ஆரேஞ்சு புரட்சி என்று அழைக்கப்படுவது "உக்ரேனுக்கு வழி திறந்துவிடாமல் நடைபெற்றிருக்க முடியாது" என்று குறிப்பிட்டார்.

புலம் பெயர்ந்தோர் தங்களது நாடுகளுக்கு அனுப்புகின்ற பணத்தின் பொருளாதார முக்கியத்துவம் பற்றியும் அவர் குறிப்பிட்டார். கீவ்வில் அத்தகைய நிதிகள் மூலம் முழு குடியிருப்புக்களே உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிதிகள் உண்மையிலேயே ஒரு முக்கியமான பொருளாதார காரணியாகும். மேற்கு நாடுகளின் வளர்ச்சித்திட்ட உதவித் தொகையை விட மிக அதிகமான தொகையை புலம்பெயர்ந்தோர் தங்கள் நாடுகளுக்கு திருப்பி அனுப்பிக்கொண்டிருக்கின்றனர். சில நாடுகளில், அது மொத்த உள்ளூர் உற்பத்தியின்(GDP) 10 அல்லது அதற்கு மேற்பட்ட சதவீதமாகும்.

கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் தலைமையிலான கோல் அரசாங்கத்தின் தனக்கு முன்னர் பதவியிலிருந்தவர்கள் காலத்திலிருந்து தமது விசா கொள்கைகள் தொடர்ந்து நீடித்துக்கொண்டிருப்பதாகவும் பிஷ்ஷர் வலியுறுத்தினார். 1990களில் வெளியுறவு அமைச்சர்களாக இருந்த ஹென்சர் மற்றும் கிங்கல் காலத்திலிருந்து விசாக்கொள்கை பயண சுதந்திர உரிமைக்கும் புலம்பெயர்ந்தோர் தொடர்பான கட்டுப்பாடுகளுக்குமிடையில் மோதலுக்கு இடம் கொடுத்து வந்தது. என்றாலும், போலந்து நாட்டவருக்கு விசா தேவைகள் இல்லை என்று தற்காலிகமாக ஹென்சர் தள்ளுபடி செய்தார். கோல், ஹென்சர், கிங்கல் (Kohl, Genscher, Kinkel) ஆகியோர் செயல்படுத்தி வந்த புலம்பெயர்ந்தோர் தொடர்பான முழுக்கொள்கையும் சரியானது என்று நான் கருதுகிறேன்..... எல்லைகளை திறந்து விடுவது சரியான நடவடிக்கை என்று கருதுகிறேன். நமது எல்லைகளை மூடுவது நம்மை நாமே கிணற்றுத்தவளைகளாக ஆக்கிக்கொள்வது அடிமுட்டாள்தனமான செயல். கோல் மற்றும் கிங்கலுக்கு எதிராக நான் எந்தக் குற்றச்சாட்டுகளையும் வைக்கவில்லை'' என்று நாடாளுமன்ற குழுவில் பிஷ்ஷர் தெரிவித்தார்.

அவர்களது முன்மாதிரியை பின்பற்றி தமது வெளியுறவுக்கொள்கை அமைந்திருக்கிறது என்று உறுதியளித்து கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ சமூக யூனியன் முன்னர் மண்டியிட்டு பிஷ்ஷர் தனது பதவியை காப்பாற்றிக்கொண்டார். ஆனால் இது அவர்களது பசியை மேலும் அதிகரிக்கவே செய்யும். நாடாளுமன்ற குழு முன்னர் பிஷ்ஷர் தோன்றியதால், விசா விவகாரத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி உடனடியாக வைக்கப்பட்டுவிடும் என்று சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சியினர் கருதினாலும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ சமூக யூனியன் மற்றும் தாராளவாத ஜனநாயகக் கட்சி அந்த விவகாரத்தை கைவிட்டுவிட கருதவில்லை. உள்துறை அமைச்சர் ஓட்டோ ஷல்லி (SPD) ஜூலை 8ல் குழுவின் முன்னர் தோன்றி, அவர் பிஷ்ஷர் மீதான தமது விமர்சனத்தை நிறுத்திக்கொள்ள மாட்டார் என்று அவர்கள் நம்புகின்றனர் என்றார்.

Spiegel Online செய்தி பத்திரிக்கையும் இந்த விவகாரம் இன்னும் முடிந்துவிட்டதாக நம்பவில்லை. பிஷ்ஷருக்கு எதிராக வீசுவதற்கு மேலும் பல விமர்சனங்களை கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ சமூக யூனியன் தங்கள் கைவசம் வைத்திருப்பதாக அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது: "நீதித்துறையை முடமாக்கி, சாட்சியங்களை கலைத்து, அரசாங்க விவகாரங்களில் கவனக்குறைவு சாத்தியக்கூறுகளோடு, குழப்பமான முறையில் அலுவலகம் நடத்தப்பட்டது----ஆகிய விவகாரங்கள் முடிவடைந்துவிட்டதற்கு பதிலாக பல்வேறு விமர்சனங்கள் குறித்து இன்னும் தெளிவுபடுத்தவில்லை". சமூக ஜனநாயகக் கட்சி தலைவரான Olaf Scholz வெளியிட்டுள்ள அறிக்கை இந்த மோசடி முடிந்துவிட்டது என்பது, "வெறும் கற்பனைதான்'' என்று Spiegel பத்திரிகை தகவல் அறிவித்துள்ளது.

Top of page