World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

The Iraq occupation and the kidnapping of Douglas Wood

ஈராக்கிய ஆக்கிரமிப்பும் டக்லஸ் வூட்டின் கடத்தலும்
By James Cogan and Nick Beams
14 May 2005

Use this version to print | Send this link by email | Email the author

63 வயது ஆஸ்திரேலியக் குடிமகனும் அமெரிக்காவில் வாழ்வபவருமான டக்லஸ் வூட் கடத்தப்பட்டு கொலை அச்சுறுத்தலுக்கு உட்பட்டிருப்பது, அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் ஈராக் எவ்வாறு உயிர்த்த நரகமாக உள்ளது என்பதற்கு மற்றொரு வெளிப்பாடாக இருக்கிறது.

ஈராக்கின் முஜாஹிதீனின் ஷூரா சபை என்று தன்னை அழைத்துக்கொள்ளும் ஓர் அமைப்பு, அல் ஜசீராவிற்கும் மற்ற செய்தி நிறுவனங்களுக்கும் ஒரு ஒளிப்பதிவு தட்டினை (DVD) மே 1ம் தேதி அனுப்பிவைத்துள்ளது. இதில் மிகவும் உளைச்சலுக்கு உட்பட்டுள்ள வூட், அவர் தலைமீது துப்பாக்கிமுனைகள் சுடத்தயாராகும் நிலையில் காட்டப்பட்டிருக்கிறார். அந்நிலையில் இவர் அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், ஆஸ்திரேலிய பிரதம மந்திரி ஜோன் ஹோவர்ட், கலிபோர்னிய கவர்னர் ஆர்னால்ட் ஷ்வார்ஸ்நெக்கர், தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை "அமெரிக்க, ஆஸ்திரேலிய, பிரிட்டிஷ் படைகளை ஈராக்கில் இருந்து அகற்றுவதற்கும் ஈராக்கியர்கள் தங்களை தாங்களே கவனித்துக் கொள்ளவும்,'' உதவுவதற்கு கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகிறார். இந்த வீடியோ புகைப்படம் காட்டப்படுவதற்கு 24 தொடக்கம் 48 மணி நேரத்திற்கு முன் அவர் கடத்தப்பட்டிருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது.

செய்தி ஊடகங்களுக்கு மே 7ம் தேதி அனுப்பப்பட்ட இரண்டாம் வீடியோ காட்சி, வூட் காயத்திற்குட்பட்டு, பெரிதும் அச்சமுற்றிருக்கும் நிலையில், அவருடைய தலை மொட்டையடிக்கப்பட்டு காணப்படுகிறார். அதில் ஆஸ்திரேலேய அரசாங்கம் 72 மணி நேரத்திற்குள் தன் படைகளைத் திரும்பப் பெற்றுக் கொள்ளாவிட்டால் அவர் கொலைசெய்யப்பட்டுவிடுவார் என்ற கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது.

வூட்டின் நிலைமை பற்றி மனம் இரங்காமல் எவரும் இருக்கு முடியாது. ஆஸ்திரேலியாவில் பிறந்த இத்தந்தையும், பாட்டனாருமான இவர் அமெரிக்காவில் கடந்த 40 ஆண்டுகளாக அணு மின்சக்தி ஆலைகளில் பொறியியல் வல்லுனராகவும், பல சிறு வணிக திட்டத்தையும் செய்து வாழ்ந்து வருகிறார். பலரும் ஓய்வு பெற்றுக்கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்புடன் இருக்கும் வயதில், இவர் ஈராக்கிற்கு அமெரிக்க இராணுவத்தில் ஒரு நல்ல ஊதிய ஒப்பந்த வேலையினால் ஈர்க்கப்பட்டு, இந்த அரசியல் பிணைக்கைதி என்ற பயங்கர தீயகனவு போன்ற நிலையில் அகப்பட்டுக் கொண்டுள்ளார்.

ஈராக்கில் இருக்கும் ஆஸ்திரேலிய செய்தியாளர்கள், ஆஸ்திரேலிய முஸ்லிம் சமூகத் தலைவர் ஷேக் டாஜ் எல் டேனே எல்ஹிலலி மற்றும் மத்திய கிழக்கில் இருக்கும் செய்தி ஊடகப் பிரிவுகள் இவற்றின் உதவியுடன் வூட்டின் குடும்பம் அவரை விடுவிக்கப் பெரும் முயற்சிகளை கொண்டுள்ளது. ஒரு குடும்ப அக்கறை கொண்ட நபர், இதய நோய் பீடிப்பு உடையவர், அரசியலில் எந்தத் தொடர்பும் அற்றவர் என்று விளக்கி வூட்டின் சகோதரர்கள் அல் ஜசிரா மூலம் கடத்தல்காரர்களுக்கு முறையீடு செய்துள்ளனர். எல்ஹிலலி ஈராக்கிற்கு பறந்து வந்து வூட்டின் குடும்பம் ஒர் அறக்கட்டளையை ஈராக்கில் நிறுவும் என்று உறுதியளிப்பதற்கும் ஈராக்கிய மத குருமார்களுடன் கூட்டாக வூட்டை விடுவிப்பதற்கு முறையீடு செய்வதற்காகவும் வந்துள்ளார். வூட் விடுவிக்கப்படவேண்டும் என்று அவர் கோரும் விளம்பரங்கள் ஈராக்கில் ஒலி/ஒளி பரப்பப்படுகின்றன; இதைத் தவிர செய்தித்தாள்களிலும் முறையீடுகள் விளம்பரங்களாக வந்துள்ளன. எவ்வாறாயினும், மே 10 இறுதிக்கெடு முடிந்த பின்னர் வூட்டின் தலைவிதி என்ன ஆயிற்று என்பது பற்றி ஏதும் தெரியவில்லை.

வூட் கொலைசெய்யப்பட்டார் என்றால், இதன் பொறுப்பு ஐயத்திற்கிடமின்றி ஹோவர்ட் அரசாங்கத்தின்மீதுதான் இருக்கும்; இதுதான், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தன்னுடைய கொள்ளை நடவடிக்கைக்கு அமெரிக்கா ஆதரவை பெற்றுக்கொள்வதற்காக ஆஸ்திரேலிய படைகள் ஏகாதிபத்திய முறையில் ஈராக்கின் வளங்களை கொள்ளையடிப்பதற்கு துணை நிற்க பணித்துள்ளது.

சதாம் ஹுசேனின் ஆட்சியில் பேரழிவுகரமான ஆயுதங்கள் இருந்ததாகவும் அவற்றினால் பேராபத்து ஏற்படலாம் என்று பொய்யான அடிப்படையில் போர் துவங்கப்பட்டமை எப்பொழுதோ அம்பலமாகிவிட்டன. ஆனால் இப்பொழுதும், ஹோவர்ட் கொடுக்கும் விளக்கமான ஆஸ்திரேலிய படைகளை அனுப்பியது இராணுவ மற்றும் இதர உளவுத்துறையின் தகவல்களில் கொண்டிருந்த நம்பகத்தன்மை என்பது பொய்யான நைந்து போன துணிபோல்தான் உள்ளது.

வூட் பற்றிய ஒளிப்பட தட்டு ஒளிபரப்பப்பட்ட மே 1 அன்றே, பிரிட்டனின் சன்டே டைம்ஸ், 2002 ஜூலை 23ம் தேதியன்று, அப்பொழுது MI6 உடைய தலைவராக இருந்த (அமெரிக்க CIA க்கு ஒப்பாக பிரித்தானியாவில் இருப்பது) ரிச்சார்ட் டியர்லொவ், டோனி பிளேயரிடமும் அவருடைய தேசிய பாதுகாப்பு அதிகாரிகளிடமும் புஷ் நிர்வாகம் ஈராக்கின் மீது போர் தொடுப்பதாக முடிவு எடுத்துவிட்டதாக தெரிவித்திருந்தார். பிரிட்டிஷ் பிரதம மந்திரியிடம் டியர்லவ் "பயங்கரவாதம் மற்றும் பேரழிவுகரமான ஆயுதங்களை ஒன்றிணைத்து போர் நியாயப்படுத்தப்படும்" என்றும் அவர் தெரிவித்திருந்தார்: மேலும், "இந்தக் கொள்கைக்கு ஆதரவான வகையில் உளவுத்துறை செய்திகள் தேர்ந்தெடுக்கப்படும்" என்றும் அவர் கூறினார். புஷ்ஷிற்கும், பிளேயருக்கும் எந்த அளவு இது உறுதியாக தெரியப்பட்டிருந்ததோ, அதே அளவிற்கு ஹோவார்டும் இதைப் பற்றி நன்றாக அறிந்திருந்தார்.

சூழ்ச்சிகள், பொய்கள் மற்றும் ஐயத்திற்கிடமில்லாத குற்றம் இவற்றில் நன்கு ஆழ்ந்திருந்த ஈராக்கின் மீதான ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பிற்கு ஆதரவளித்த ஹோவர்டின், வூட் கடத்தப்பட்டுள்ளமை பற்றிய விடையிறுப்பு முற்றிலும் எதிர்பார்க்கப்பட்டதேயாகும். "பிணைக் கைதிகளை பிடிபோருக்கு நான் ஒன்றும் அடிபணிந்துவிட மாட்டேன்.... இந்த நாட்டின் வெளியுறவுக் கொள்கை பயங்கரவாதிகளால் நிர்ணயிக்கப்படுவதற்கு நாம் அனுமதிக்கக் கூடாது."

வெளியுறவுத்துறை மந்திரியான அலெக்சாந்தர் டெளனர், 20ம் நூற்றாண்டு பிரிட்டிஷ் இராஜ்ஜியத்தின் கதைகள் வகையிலேயே நின்று, தன்னுடைய பையன்களுடைய சொந்த மாதிரியில் தொலைக்காட்சி காமெராக்கள் முன் பெரும் அவசரத்துடன் ஆஸ்திரேலியா உறுதிப்பாட்டுடன்தான் இருக்கும் என்று கூறினார். "இதைத் தெளிவாகக் கூறவேண்டியது என் கடமை,'' நாம் எந்தக் கொள்கையையும் மாற்றிக் கொள்ள மாட்டோம் மற்றும் பிணைத் தொகை எதையும் கொடுக்க மாட்டோம்."

எதிர்க்கட்சியான தொழிற்கட்சியை பொறுத்தவரையில், அதன் தலைவர் கிம் பீஸ்லி தன்னுடைய கட்சி அரசாங்கத்தை பற்றிய அனைத்து விமர்சனங்களையும் "நிறுத்தி வைக்கும் என்றும்", இன்னும் கூடுதலான 450 துருப்புக்களை ஈராக்கிற்கு அனுப்பிவைக்கும் முடிவிற்கும் பொருந்தும் என்று வலியுறுத்தியுள்ளார். "இதைப் பொறுத்தவரையில், நாம் அரசாங்கத்துடன் இணைந்துதான் நிற்கிறோம், அதாவது ஒரு பயங்கரவாதத் தாக்குதல் நம் மீது வந்துள்ளது என்பதற்காக கொள்கையை மாற்றிக் கொள்ளுவதற்கு இல்லை." ஹோவர்டை போலவே, தொழிற்கட்சி தலைவரான பீஜ்லேயிக்கும் முக்கியமான தேவை "இன்றியமையாத ஆஸ்திரேலிய தேசிய நலன்களே அன்றி", டக்லாஸ் வூட்டின் உயிர் பாதுகாப்புப்பற்றி அல்ல.

பீஸ்லேயின் நிலைப்பாடு ஆஸ்திரேலியன் இதழின் முழுப்பாராட்டையும் ஒரு மே 9ம் தேதி தலையங்கத்தின் மூலம் பெற்றதில் வியப்பு ஏதும் இல்லை; அதில், "தொழிற்கட்சி, ஈராக்கிய கொள்கை பற்றி விவாதிப்பதில்லை என்று கூறிய வகையிலும், ஹோவர்ட் அரசாங்கத்தின் உறுதிப்பாடான தன்மையை ஆதரிப்பதிலும், மிகப் பெரும் கெளரவத்துடனும் பொது அறிவுடனும் நடந்து கொண்டுள்ளது." என்று கூறியுள்ளது. இந்த நாளேட்டின் வெளியுறவு ஆசிரியரான கிரெக் ஷெரிடன், அரசியல் ஸ்தாபனங்கள் எவ்வாறு வூட்டின் விதியைப் பற்றி அசட்டை செய்துள்ளது என்றும், மத்திய கிழக்கில் "ஜனநாயகப் புரட்சியை" புஷ் நிர்வாகம் கட்டவிழ்த்துவிட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவரே வூட் என்றும் கூறியுள்ளார். உண்மையில் அவரைக் கடந்தியவர்கள் ஆஸ்திரேலியா தன்னுடைய படைகளை திருப்பப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்று கூறியிருப்பது, "நாம் சரியான புறத்தில்தான் உள்ளோம் என்றும் நம்முடைய முயற்சிகளுக்கு பலன் ஏற்பட்டுவருகிறது என்பதும் தெரியவரும்."

அமெரிக்க இராணுவத்தில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் வேலையில் இருப்பதாக வூட் ஒப்புக் கொண்டாலும், இவர் கடத்தப்பட்டிருப்பதும், கொலை அச்சுறுத்தலுக்கு உட்பட்டிருப்பதும் ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தை கடுகளவேனும் முன்னேற்றுவிப்பதற்கு பயன்படாது என்பதுடன் ஆழ்ந்த பிற்போக்குத்தனத்தையும் கொண்டுள்ளது ஆகும்.

ஈராக் ஆக்கிரமிப்பிக்கப்பட்டிருப்பது இத்தகைய நடவடிக்கைகளால் முடிவிற்கு வந்து விடாது. ஈராக்கிய மக்கள் மட்டுமே சாதிக்கக் கூடியதும் அல்ல இது. எல்லாவற்றிற்கும் மேலாக, இதைச் சாதிப்பதற்கு உலகத்தில் உள்ள அனைத்து தொழிலார்களும் ஏகாதிபத்திய வல்லரசுகளின் குற்றங்களுக்கு தீவிர அரசியல் எதிர்ப்புக் காட்டுவது ஒன்றுதான் வழியாகும்.

கடத்தப்படுவது மற்றும் டக்லஸ் வூட் போன்ற தனிநபர்கள் கொலைசெய்யப்படுதல் போன்றவை அத்தகைய இயக்கத்தின் அபிவிருத்திக்கு தடையாகத்தான் இருக்கும். தொடர்ச்சியான ஆக்கிரமிப்பை புதிய நியாயப்படுத்துவதற்கு நிற்கும் சக்திகளின் கைகளை இத்தகைய செயல்பாடுகள் பலப்படுத்தும். அதிலும் போர் ஆரம்பிக்கப்படுவதற்காக பொய்கள் கூறப்பட்டன என்பது முற்றிலும் அம்பலமான நிலையில் இச்செயல்களினால் நன்மை கிடையாது.

டக்லஸ் வூட்டைக் கடத்திய அமைப்பிற்குக் கிடைத்ததெல்லாம் ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் நடைமுறைப் பிரச்சாரத்திற்கு ஓர் தளம் அமைத்து கொடுத்த செயல்தான். ஆஸ்திரேலியர்களில் பெரும்பாலானவர்கள் போரை எதிர்த்திருந்ததுடன், ஆஸ்திரேலிய படைகள் அனுப்பப்படுவதற்கும் எதிர்ப்புத் தெரிவித்திருந்து, அமெரிக்க படையெடுப்பிற்கு எதிரான ஈராக்கிய மக்களின் கிளர்ச்சி செய்யும் உரிமைகளுக்கு அனுதாபத்தையும் காட்டிருந்தனர். வூட்டின் கொடூரமான தோற்றங்கள் அவ்வாறான கிளர்ச்சிகள் அனைத்தையும் "பயங்கரவாதம்" என்று அரக்கத்தனமாக காட்டுவதற்குத்தான் பயன்பட்டு, ஈராக், காட்டுமிராண்டித்தனத்திற்குள் நழுவவிடக் கூடாது என்பதற்காகத்தான் ஆக்கிரமிப்பு தொடர்கிறது என்ற கூற்றை நியாயப்படுத்தத்தான் உதவும்.

போருக்கு எதிரான "இடது" எதிர்ப்பாளர்கள் எனக் கூறிக்கொள்பவர்களால் இப்பொழுது மிகப் பெரிய குழப்பம் தோற்றுவிக்கப்பட்டுள்ளது; இவர்கள் ஈராக்கில் "ஜனநாயகம்" கொண்டுவருவதற்கு ஆக்கிரமிப்பு தேவையானது என்ற கூற்றிற்கு நம்பகத் தன்மை கொடுக்கின்றனர்.

இந்த வாதத்திற்கு மாதிரிபோன்ற உதாரணம் ஆஸ்திரேலியா இன்ஸ்டியூட்டை சேர்ந்த ஆஸ்திரேலியன் பாலிசி ஆன்லைன் என்பதில் மே 6ம் தேதி வந்த கட்டுரை ஒன்றில் கிளைவ் ஹாமில்டனால் கொடுக்கப்பட்டுள்ளது. "ஈராக்கில் தலையீடு என்பது தவறான கருத்துக்கள், பாசாங்குத்தனம் இவற்றின் அடைப்படையில் இருந்தாலும், படைகளை இப்பொழுது திருப்பப் பெற்றுக் கொள்ளுவது என்பது பேரழிவு தரும் உள்நாட்டுப் போருக்கு எல்லா வகையான சாத்தியக்கூறையும் வழங்கிவிடும்."

உண்மையில் அமெரிக்க ஆக்கிரமிப்பு என்பது ஈராக்கில் இப்பொழுதுள்ள பேரழிவின் ஒவ்வொரு கூறுபாட்டிற்கும் காரணமாகும். சமூக நெருக்கடி, பொறுப்பற்ற முறையில் கொலைகள், அழிவு, சித்திரவதை, தவறாக நடத்தப்படுதல் என்று உள்ள அமெரிக்க இராணுவத்தின் முன்னெடுப்புகள் அனைத்துமே மிகப் பெருகிய முறையில் எதிர்ப்பின் அணையை உருவாக்கியுள்ளது. குறுங்குழு, பயங்கரவாத நடவடிக்கைகள் ஆகியவை ஆக்கிரமிப்பின் உபவிளைவுகளாகும்.

"ஜனநாயக" அரசாங்கத்தை நியமிப்பது என்ற விவகாரம் ---அமெரிக்கா, அதன் கூட்டணியினர்களின் செயற்பாடுகளுக்கு வக்காலத்து வாங்குபவரால் பாராட்டப்பட்டாலும்-----நிலைமையை தெளிவுபடுத்துகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும், 400க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன் 1000 பேருக்கும் மேலாக காயமுற்றுள்ளனர், கார் குண்டுத்தாக்குதல் அலைதான் இதற்குக் காரணம். அவற்றுள் சில வேண்டுமென்றே ஷியைட்டுக்களை கொல்ல அல்லது காயப்படுத்தவேண்டும் என்ற நோக்கத்தை கொண்டிருந்தன; இதற்குக் காரணம் அமெரிக்க ஆதரவு பெற்று வந்துள்ள புதிய பாக்தாத் ஆட்சி ஷியைட் அரசியல் நபர்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டது ஆகும்.

டக்லஸ் வூட்டை கொலை செய்தல் என்பது ஈராக்கிய மக்களின் நலன்களுக்கு உதவப்போவதிலலை. மேலும் அனைத்து ஆக்கிரமிப்பு வல்லரசுகளும் நிபந்தனையற்ற முறையில் உடனடியாக பின்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கும் இது பின்னடைவைத்தான் கொடுக்கும். அவர் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும். ஆனால் அவர் இறந்து போனால், அந்த இரத்தக் கறை ஹோவர்ட் அரசாங்கத்தின் கைகளில்தால் படிந்து நிற்கும்.

Top of page