World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

US issues more demands on Iraqi government to include former Baathists

முன்னாள் பாத்திஸ்ட்டுகளை ஈராக்கிய அரசாங்கத்தில் சேர்த்துக்கொள்ள அமெரிக்கா மேலும் கோரிக்கைகளை விடுக்கிறது

By James Cogan
20 May 2005

Use this version to print | Send this link by email | Email the author

வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் ஈராக்கிற்கு மே 15ல் எதிர்பாராத விதமாக விஜயம் மேற்கொண்டமை அந்த ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டில் நிலவுகின்ற சூழ்நிலை குறித்து அமெரிக்க ஆளும் வட்டாரங்களிடையே நிலவுகின்ற பயஉணர்வை தெளிவாக சமிக்கை காட்டுவதாக அமைந்திருக்கிறது. 1,40,000 இற்கு மேற்பட்ட அமெரிக்க துருப்புக்கள், ஆக்கிரமிப்பிற்கு எதிரான எழுச்சிகளால் கட்டுண்டு கிடப்பதால், புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஷியைட்டுகள் ஆதிக்கம் செலுத்தும் பிரதமர் இப்ராஹீம் அல்-ஜாஃபரி இன் அரசாங்கம் ஒரு ஆக்கபூர்வமான அமெரிக்க பொம்மை ஆட்சியாக செயல்படுகின்ற வல்லமை இல்லாதது என்று பெருமளவில் கருதப்பட்டு வருகிறது.

சதாம் ஹூசேனின் முன்னாள் பாத்திஸ்ட் ஆட்சியில் பதவிகளில் இருந்த பல சுன்னி முஸ்லீம் அரசியல் தலைவர்களுக்கு ஷியைட்டு தலைமையிலான ஐக்கிய ஈராக் கூட்டணி மற்றும் ஜாஃபரி அதிக இடம் தருகின்ற சமிக்க்ைகளை காட்ட வேண்டும் என்பதுதான் ரைஸின் விஜயத்தின் பிரதான நோக்கமாகும். அமெரிக்க மூலோபாயர்கள், எந்தவிதமான நியாயப்படுத்தலும் இல்லாமல், புதிய அரசாங்கத்தில் பல்வேறு சுன்னி பிரமுகர்களை சேர்த்துக்கொள்வதன் மூலம் நடைபெற்றுவரும் எழுச்சியின் அளவை திடீரென்று குறைத்துவிடும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ஈராக்கிற்கு புதியதொரு அரசியல் சட்ட நகலை உருவாக்குவதற்கு அரசாங்கம் அதிகாரம் அளித்துள்ள 55 உறுப்பினர்கள் குழுவில் இரண்டு சுன்னி முஸ்லீம்கள் மட்டுமே இடம் பெற்றிருப்பதாக மே 10ல் வெளியிடப்பட்ட அறிவிப்பின் மீது அமெரிக்கா ஆத்திரம் கொண்டிருப்பதன் அடையாளம்தான் ரைஸின் விஜயம் என்று தோன்றுகிறது. ஷியைட் கட்சிகள் சில சுன்னி நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர்களது கடந்தகால பாத்திஸ்ட் பின்னணியை கொண்டு அமைச்சர்களாக நியமிக்க மறுத்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சென்ற ஆண்டு அமெரிக்க இராணுவமும் ஈராக்கின் முன்னாள் பிரதமர் இயத் அல்லாவியும் நியமித்த புதிய ஈராக் இராணுவம் மற்றும் உள்நாட்டுப்பாதுகாப்பு அமைப்பிலும் இடம் பெற்றுள்ள ஆயிரக்கணக்கான பாதிஸ்ட்டுகளை களையெடுக்க வேண்டுமென்று ஷியைட்டு தலைவர்கள் தொடர்ந்து அழைப்புகளை விடுத்துவருகின்றனர்.

"வாஷிங்டனில் உருவாக்கப்பட்ட அரசாங்கம் என்ற கருத்தை நீங்கள் உருவாக்க விரும்பாமல் இருக்கலாம், ஆனால், தற்போது, வாஷிங்டனில் ஒரு தொடரும் நிரந்தர கவலை நிலவுகிறது, அது இந்த அரசாங்கம் ஒரு குறுகிய இன அடித்தளத்தில் சென்று கொண்டிருக்கிறது, மற்றும் அதுபற்றி அதிகம் செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது" என்று பெயர் குறிப்பிடப்படாத புஷ் நிர்வாக அதிகாரி நியூயோர்க் டைம்ஸ்ஸிடம் தெரிவித்தார்.

குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ரைஸ் முதலில் இறங்கியது பாக்தாத்தில் அல்ல, ஆனால், வடக்கு ஈராக்கின் குர்திஸ் தலைநகரான இர்பிலில் ஆகும். குர்திஸ் தேசியவாத தலைவரும், குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கத்தின் (KRG) ஜனாதிபதியுமான மசூத் பார்ஸானி (Massoud Barzani) இனை ரைஸ் சந்தித்தார்.

குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கத்தில் ஈராக்கின் வடகோடி குர்திஸ்தானியர்கள் பெரும்பாலும் வாழ்கின்ற மூன்று மாகாணங்கள் உள்ளன. அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்கள் ஈராக் மீது திணித்த அரசியல் சட்டத்தின் கீழ், பல ஆண்டுகளாக சதாம் ஹுசேன் ஆட்சிக்கு எதிராக அமெரிக்காவின் போர் திட்டங்களில் ஒத்துழைத்ததற்காக குர்திஸ் தேசியவாதிகளுக்கு வெகுமதியாக முழு தன்னாட்சி பிராந்தியம் வழங்கப்பட்டது. கொள்கைரீதியாக, ஒரு "கூட்டாட்சி ஈராக்" இன் ஒரு பகுதிக்கு குர்திஸ்தான் பிராந்திய அரசாங்கம் தலைமை வகித்தாலும் அது உண்மையிலேயே ஒரு சுதந்திர நாடுதான். அதனிடம் சொந்த ஆயுதப்படைகளான பெஸ்மெர்கா (peshmerga) குடிப்படை உள்ளது, மற்றும் பாக்தாத்திலுள்ள மத்திய அரசாங்கம் அந்தப் பகுதியில் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களையே வைத்திருக்கிறது.

மசூத் பார்ஸானி உடன் ரைஸின் சந்திப்பு ஷியைட் கட்சிகளுக்கு ஒரு உள்ளார்ந்த அச்சுறுத்தல் என்றே எடுத்துக்கொள்ளப்படுகிறது. தேசிய நாடாளுமன்றத்தில் குர்திஸ் கட்சிகளின் ஆதரவைத்தான் புதிய அரசாங்கம் ஐக்கிய ஈராக் கூட்டணியில் தனது மேலாதிக்க நிலைக்கு நம்பியிருக்கிறது. ரைஸ் விஜயத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்னர், இந்த சார்புநிலை மிகத்தெளிவாக எடுத்துக்காட்டப்படுகிறது, அப்போது ஜாபரியின் மந்திரி சபையில் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டவர்கள் தங்களது பதவியேற்பு உறுதிமொழியில், ஈராக்கின் "ஒரு கூட்டாட்சி மற்றும் ஜனநாயக ஆட்சியை காப்பது என்ற ஒரு உடன்பாடான உறுதிமொழிப்பிரிவை விட்டுவிட்டன. இதில் ''கூட்டாட்சி'' என்பது குர்திஸ் பிராந்தியத்தை குறிக்கும்.

குர்திஸ்களின் பதில், உடனடியாக ஜாபரி அரசாங்கத்திலிருந்து விலகிக்கொள்வது என்ற உடனடி அச்சுறுத்தல்தான். மசூத் பார்ஸானி மே 6ல் வெளியிட்ட அறிவிப்பில், "ஒரு கூட்டாட்சி ஈராக் என்ற குறிப்பு நீக்கப்பட்டது சட்டத்தை மீறுவதாகும், மற்றும் நமது கூட்டணிக்கு ஒரு கடுமையான அச்சுறுத்தலாகும். அப்படி நீக்கப்பட்டது திட்டமிட்டு நடத்தப்படவில்லை என்று நான் நம்புகிறேன் மற்றும் முடிந்தவரை விரைவாக இது திருத்தப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டார். ஜாபரி தனது அமைச்சரவையை இரத்துச்செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மற்றும் இரண்டாவது முறையாக கூட்டாட்சி என்ற குறிப்போடு பதவியேற்பு உறுதிமொழிகளை எடுத்துக்கொண்டார்கள்.

குர்திஸ் தேசியவாதிகளுக்கு புஷ் நிர்வாகம் தந்துவரும் ஆதரவை எடுத்துக்காட்டும் வகையில் இர்பிலில் ரைஸ் தனது நேரத்தை செலவிட்டார், அமெரிக்க கோரிக்கையான மேலும் பல சுன்னிகளையும் முன்னாள் பாத்திஸ்ட்டுகளையும் அரசாங்கத்தில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு பார்ஸானியின் ஆதரவை திரட்டினார் என்று எடுத்துக்கொள்ளலாம்.

இந்த மாதம் ஈராக் முழுவதிலும் குறிப்பாக பாக்தாத்தில் ஆவேசமாக பல தாக்குதல்கள் நடைபெற்றன. டசின் கணக்கில் குண்டு வீச்சுக்கள் நடைபெற்றுள்ளன, சில தெளிவாக எந்தவித இதர நோக்கமும் இன்றி ஷியைட்டுகளை கொல்வதற்கு மற்றும் ஊனமுற்றவர்களாக ஆக்குவதற்கு நடைபெற்றுள்ளன. அமெரிக்க இராணுவம் இதற்கான பொறுப்பை சுன்னி இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் சாட்டினாலும், ஈராக்கில் தெருக்களில் நிலவுகின்ற பல்வேறு வகைப்பட்ட வதந்திகள், அமெரிக்க இராணுவம் புதிய ஈராக் பாதுகாப்புப் படைகள் அல்லது அமெரிக்க ஆதரவு குழுக்களான அல்லாவியின் ஈராக் தேசிய உடன்பாட்டு கட்சி போன்ற அமைப்புகள் மீது குற்றம் சாட்டி வருகின்றன.

இனபடுக்கொலைகள் என்று தோற்றமளிக்கின்ற இந்த படுகொலைகளில் ஷியைட் மற்றும் சுன்னி மத போதகர்களும் கொல்லப்பட்டிருக்கின்றனர். ஒரு முன்னணி சுன்னி இமாம் பகிரங்கமாக ஷியைட் குடிப்படைகளை, பதர் படைப்பிரிவை (Badr Brigade) குற்றம்சாட்டி, சுன்னிகளை அந்தக் குடிப்படை கொலை செய்து வருவதாக கூறியுள்ளார், இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அனைத்து சுன்னி மசூதிகளையும் மூன்று நாட்கள் மூடிவிட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.

யார் பொறுப்பாக இருந்தாலும், இந்த குண்டு வீச்சுக்கள் மற்றும் கொலைகளை வாஷிங்டன் ஜாபரியும் ஷியைட் கட்சிகளும் அமெரிக்க கோரிக்கைகளுக்கு வளைந்து கொடுக்க வேண்டும் என்று அழுத்தங்களை கொடுப்பதற்கு பயன்படுத்தி வருகிறது.

வாஷிங்டன் போஸ்ட், தந்துள்ள தகவலின்படி அமெரிக்க தளபதியான ஜெனரல் ஜோர்ஜ் கேசி ரைசின் சுற்றுப்பயணத்திற்கு முன்னர், ஜாபரியை இரண்டு நாட்கள் சந்தித்து அவரிடம் வலியுறுத்திக் கூறியது என்னவென்றால், "சக்திவாய்ந்த மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கவேண்டும் அல்லது ஈராக் மக்களிடையே ஒரு பரவலான பாதுகாப்பற்ற உணர்வும், நம்பகத்தன்மையை இழக்கின்ற ஆபத்தும் ஏற்படும்". ஜாபரி இதற்கு பதிலளிக்கிற வகையில் பல்லூஜா நகரத்தின் மீது அமெரிக்க தாக்குதல் தோன்றுவதற்கு முன்னர், அல்லாவி 2004 நவம்பரில் கொண்டு வந்த அவசர நிலை பிரகடனத்தை மேலும் 30 நாட்களுக்கு நீடித்துள்ளார்.

மே 15ல் ஜாபரியை சந்தித்த பின்னர் ரைஸ், CNN க்கு "எதிர்காலத்தில் ஒரு ஐக்கிய ஈராக் இருக்கவேண்டுமென்றால், நாடு முன்னேறிச் செல்கின்ற நடைமுறைகளில் சுன்னிக்களையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்-----இந்த அரசாங்கத்தில் அவர்கள் சேர்த்துக்கொள்ளப்பட்டிருப்பது போன்று நடவடிக்கை எடுக்க வேண்டும்." எனக் கூறினார்.

ஜாபரி வாய்மொழியாக ரைசின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார், அரசியல் சட்டக்குழுவில் "ஒரு பெருமளவிற்கு சுன்னிகள் பங்கெடுத்துக்கொள்வதற்கான வழிகளை நாங்கள் கண்டு பிடிக்க முயலுவோம்", இதைத் தொடர்ந்து புதிய அரசாங்கத்தில் சுன்னி பாதுகாப்பு அமைச்சராக உள்ள சாதுன் அல்-துலமி ஒரு அறிவிப்பை வெளியிட்டார், ஈராக் பாதுகாப்பு படைகள் இனி மசூதிகளில் திடீர் சோதனைகளையும் தேடுதல் வேட்டைகளையும் அல்லது மதபோதகர்களை கைது செய்வதையும் நடத்தாது. எழுச்சிக்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான நடவடிக்கைகளின் ஒர் அங்கமாக டசின் கணக்கான சுன்னி மசூதிகள் சோதனையிடப்பட்டன, மத போதகர்கள் கைது செய்யப்பட்டனர்.

என்றாலும், ஐக்கிய ஈராக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள---பிரதான கட்சிகளான இஸ்லாமிய அடிப்படைவாத தாவாக்கட்சி ஈராக் இஸ்லாமிய புரட்சி சுப்ரீம் கவுன்சில் (SCIRI) மற்றும் அஹமது சலாபியின் ஈராக் தேசிய காங்கிரஸ் (INC) ஆகியவை சுன்னி பிரிவினரை ஈர்க்கும் முயற்சிகளில் ஆர்வம் காட்டவில்லை.

இதில் மிக வெளிப்படையான பிரச்சனையின் உண்மை என்னவென்றால், தலைமறைவு சுன்னி கிளர்ச்சி அமைப்புகளோ அல்லது உயர்ந்த அதிகாரம் படைத்த பொது சுன்னி தலைமை அமைப்பு குழுக்களான இஸ்லாமிய அறிஞர்கள் சங்கமோ (AMS) இடைக்கால அரசாங்கத்தின் சட்டபூர்வமான தன்மையை அங்கீகரிக்கவில்லை, மற்றும் ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைப்பதில் உறுதியுடன் உள்ளன. இஸ்லாமிய அறிஞர்கள் சங்கமும் மற்றும் இதர குழுக்களும் ஜனவரி 31 தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்ற அழைப்பை ஏற்று மிகப்பெரும்பான்மையான ஈராக் சுன்னிகள் தேர்தலை புறக்கணித்தன.

2003 படையெடுப்பிற்கு பின்னர் அமெரிக்காவின் நடவடிக்க்ைகள்----கட்டுப்பாடற்று வன்முறை, ஒட்டுமொத்த கைதுகள் மற்றும் சித்திரவதை மற்றும் சென்ற ஆண்டு பலூஜாவில் நடத்தப்பட்ட வெகுஜனக் கொலைகள்----- ஆக்கிரமிப்புக்கு எதிராக வெகுஜன விரோதப் போக்கை உருவாக்கிவிட்டன, குறிப்பாக சுன்னி பொதுமக்களிடையே அத்தகைய விரோதப்போக்கே உருவாக்கப்பட்டிருக்கிறது. ஏனெனில் அவர்கள்தான் அமெரிக்காவின் எதிர்க்கிளர்ச்சி தாக்குதலின் முனைப்பை தாங்கினர்.

இதில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்ச்சி என்னவென்றால், சிரியாவின் எல்லையருகே உள்ள மேற்கு அன்பார் மாகாணத்தில் மிக அண்மைகாலத்தில் அமெரிக்காவின் தாக்குதல் நடவடிக்கையாகும். Knight Ridder செய்தியின்படி, சுன்னி மலைவாழ் குழுவினர் வாழும் அந்தப்பகுதியில் வெளிநாட்டு போராளிகள் முகாமிட்டுள்ள இடத்தில் அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இதற்கு பதிலளிக்கின்ற வகையில் அல்-கையும் நகரத்தின் மீதும் அதை சுற்றியுள்ள கிராமங்கள் மீதும் அமெரிக்க படையினர் தான்தோன்றித்தனமாக தாக்குதல்களை நடத்தினர், அது அந்த நடவடிக்கை எடுக்ககோரிய அந்த மலைவாழ் இனத்தையே, ஆத்திரம் கொள்ள செய்துவிட்டது.

அந்த நடவடிக்கையானது, அமெரிக்கா கூறுகின்ற 125 வெளிநாட்டு மற்றும் ஈராக் கிளர்ச்சிக்காரர்கள் மடிந்ததோடு முடிந்தது. மடிந்தவர்களில் மிகப்பெரும்பாலோர் தங்களது மக்கள் என்று உள்ளூர்வாசிகள் கூறினர். அன்பார் மாகாண முன்னாள் கவர்னரான Fasal al-Goud, Knight Ridder- க்கு பேட்டியளித்தபோது "அமெரிக்கர்கள் ஒட்டுமொத்த கிராமங்களையும் குண்டு வீசி தாக்கினார்கள், மற்றும் அவர்கள் வெளிநாட்டவரைத்தான் தாக்குகிறோம் என்று கூறினார்கள் சொன்னார்கள். ஒரு AK-47, ஒருவர் பயங்கரவாதியா அல்லது அந்தப்பகுதி மலைவாழ் இனத்தவரா என்று பகுத்து பார்க்க முடியாத நிலையில், ஒரு ராக்கெட்டோ அல்லது ஒரு டாங்கியோ எப்படி பகுத்து பார்த்து தாக்க முடியும்?".

அல்-கையும் மருத்துவமனை இயக்குனரான மருத்துவர் ஹம்தி அல்-அலுசி, அல் ஜசிராவிற்கு பேட்டியளிக்கும்போது, "மருத்துவ உதவி ஊர்திகள் நகராமல் தடுக்கப்பட்டன, மருத்துவ உதவிக்குழுக்கள் நகர மையப்பகுதியிலிருந்து சென்றுவிட்டன ஏனெனில் அந்தப்பகுதி சிதைக்கப்பட்டுவிட்டது..... ஒரு தொகை அளவில் காயமடைந்தோர், பாதிக்கப்பட்டோர், மருத்துவமனைக்கோ அல்லது வேறு எந்த இடத்திற்கோ செல்ல முடியவில்லை. அல்-கையுமிலும் அருகாமையிலுள்ள நகரங்களிலும் என்ன நடந்தது என்பதை பார்க்குமாறு, இறைவனை பிரார்த்திக்கிறோம் மற்றும் உலகம் முழுவதையும் கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டார்.

அத்தகைய சூழ்நிலைகளில், சுன்னி தலைமையை சேர்ந்த எந்த பிரமுகரும் அமெரிக்க ஆக்கரமிப்பாளர்களோடு தங்களை சம்மந்தப்படுத்தி கொண்டிருப்பார்களேயானால் பெரும்பாலான மக்கள் அவர்களை காட்டிக்கொடுத்தவர்கள் என்றும், கைப்பாவைகள் என்றும் கருதுவார்கள். ஹூசேனின் முன்னாள் ஆட்சியை சேர்ந்த இழிவுபடுத்தப்பட்ட சக்திகளை சேர்ந்த தனிநபர்கள் தான் இப்படி ஒத்துழைக்க முன்வரக்கூடும், ஏனெனில் அவர்கள் அரசு அதிகாரத்தையும், சலுகையையும் இழந்துவிட்டவர்கள் மற்றும் அவர்களை அதை மீண்டும் பெறுவதற்கு முயன்று கொண்டிருக்கிறார்கள், மற்றும் ஈராக் மக்களுக்கு எதிராக பாத்திஸ்ட்டு புரிந்த குற்றங்கள் மீது வழக்குகள் வராது விதிவிலக்கு பெறுவதற்கு முயன்று கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட பிரமுகர்களுக்கு சாதகமாக அமெரிக்கா கட்டளையிட்டது, அத்தகைய அணுகுமுறையில் நடவடிக்கை எடுக்கப்படுமானால் அதை மில்லியன் கணக்கான சாதாரண ஈராக் ஷியைட்டுக்கள் எப்படி கருதுவார்கள் என்பதுதான். 35 ஆண்டுகளாக ஈராக்கை ஆட்சி செய்துவந்த பாத் கட்சி தனது கடுமையான ஒடுக்குமுறையை இடதுசாரி இயக்கங்கள் மற்றும் ஷியைட் தொழிலாள வர்க்கம் மற்றும் கிராமப்புற ஏழைகளை அடித்தளமாகக் கொண்ட மதவாதப் போக்குகளுக்கு எதிராக திருப்பிவிட்டனர். இந்த அதிக இரத்தக்களரிமிக்க ஒடுக்குமுறைகளில் சில அமெரிக்காவின் நேரடி அல்லது மறைமுக ஒப்புதலோடு நடைபெற்றது.

தாவாக்கட்சியும், SCIRI உம் முன்னணி ஷியா மதபோதகரான அலி-அல்-சிஸ்தானியோடு சேர்ந்தது, அமெரிக்கப் படையெடுப்பு மற்றும் ஈராக் ஆக்கிரமிப்பிற்கு ஒத்துழைப்பதை எந்த அடிப்படையில் நியாயப்படுத்தின என்றால், இதன்மூலம் ஷியைட் கட்சிகளுக்கு அரசியல் அதிகாரத்தை பெற்றுத்தருவதற்கு பயன்படுத்திக்கொள்ள முடியும் என்பதாலாகும். அந்த ஆட்சியை பாத்திஸ்ட்டுகளை நீதிமன்றத்தில் நிறுத்தி நீதி வழங்க முடியும். மற்றும் ஷியைட் வெகுஜனங்களுக்கு மேம்பட்ட வாழ்க்கைத்தரத்தை தரும் நடவடிக்கைகளை மேற்கொள்ள பயன்படுத்தமுடியும் என்றனர்.

படையெடுப்பு நடந்து இரண்டாண்டுகளுக்கு பின்னர் ஈராக்கில் மக்கள் வாழும் நிலை பேரழிவில் உள்ளது. இதை அண்மையில் பிரசுரிக்கப்பட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை நிதியளித்த ஆய்வு ஆவணமாக பதிவு செய்துள்ளது. (பார்க்க: "US war in Iraq yields a social ‘tragedy'") UIA வெகுஜனங்களுக்கு பயனுள்ள வாழ்க்கைதர மேம்பாடு எதையும் தருவதற்கான சாத்தியக்கூறு இல்லை. மேலும் அது தேர்தலில் தந்த உறுதிமொழியான ஈராக்கிலிருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதற்கு ஒரு காலக்கெடுவை பெறுவோம் என்பதிலிருந்து பின்வாங்கிக்கொண்டது. இப்போது அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பயம் என்னவென்றால், பாத்திஸ்ட்டுகளை களையெடுப்பதையும் கைவிட்டுவிட்டால் ஷியாக்களின் அரசியல் விசுவாசம் மதபோதகர் மொக்தாதா அல்-சதர் தலைமையிலான இயக்கத்திற்கு பின்னால் சென்றுவிடும் என்பதுதான்.

சதரின் ஆதரவாளர்கள் தலைமையில் ஆக்கிரமிப்பிற்கு எதிரான கிளர்ச்சிகள் 2004 ஏப்ரல் மற்றும் ஆகஸ்டில் நடைபெற்றன. செப்டம்பரில் ஏற்பட்ட போர் நிறுத்த உடன்பாட்டை தொடர்ந்து ஜனவரியில் நடைபெற்ற மோசடி தேர்தலுக்கு சதர் தனது மறைமுக ஆதரவை தந்தார். அமெரிக்கா தலைமையிலான படைகள் மீது தனது குடிப்படை தாக்குதல்களில் ஈடுபட வேண்டாம் என்று அழைப்பு விடுத்தார். அவரது ஆதரவாளர்களில் பலர் ஐக்கிய ஈராக் கூட்டணிக்கு வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். என்றாலும், அதே நேரத்தில், சதரிஸ்டுகள் ஆக்கிரமிப்பிற்கு தங்களது கண்டனங்களை நிலைநாட்டி வந்தனர், அவர்களது தீவிரமான பாத்திஸ்ட்டுகளுக்கு எதிரான வாய்வீச்சையும் நிலைநாட்டிவந்தனர்.

ரைஸின் விஜயத்தை தொடர்ந்து உடனடியாக மே 16ல் சதர் ஐக்கிய ஈராக் கூட்டணி கட்சிகள் மீது தனது அழுத்தங்களை முடுக்கிவிடுகின்ற வகையில் கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத தனது முதலாவது நிருபர் மாநாட்டை நடத்தினார். நஜாபிலிருந்து அவர் வெளியிட்ட அறிக்கையில் ``நான் பல கோரிக்கைகளை வைக்கிறேன்: சதாம் ஹுசேனை தண்டிக்க வேண்டும் மற்றும் ஈராக் அரசாங்கத்தையும், மத இயக்கங்களையும், அரசியல் கன்னைகளையும் நான் கேட்டுக்கொள்வது என்னவென்றால் அவர்கள் அனைவரும் ஆக்கிரமிப்பாளரை அடித்து விரட்டுவதற்கு கடுமையாக முன்வரவேண்டும். ஆக்கிரமிப்புப் படைகள் உடனடியாக விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்`` என்று அறிவித்தார்.

ஜபாரி மீது புஷ் நிர்வகத்தின் அழுத்தங்களால் பொம்மை அரசாங்கத்தில் மேலும் பல சுன்னிகள் சேரலாம், ஆனால் பரந்த எழுச்சி மற்றும் மற்றொரு கிளர்ச்சிக்கு பெரும்பான்மை ஷியைட்டுகள் தயார் செய்து வருகின்ற சூழ்நிலைகளில் அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

Top of page