World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Bush in Germany: smiles cannot mask US-European conflicts

ஜேர்மனியில் புஷ்: அமெரிக்க - ஐரோப்பிய பூசல்களை புன்னகைகளால் மறைத்துவிட முடியாது

By Ulrich Rippert
26 February 2005

Use this version to print | Send this link by email | Email the author

ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷின் ஐரோப்பிய பயண தற்காலிக தங்கல்களில் ஒவ்வொரு நாளும், காமெராக்களுக்கான புன்னகைகள் மற்றும் பரஸ்பர நட்புறவு என்ற அறிவிப்புக்கள் இருந்தபோதிலும், அதிகரித்துவரும் அட்லாண்டிக் கடந்த பூசல்களை மறைக்க முடியாது என்பது தெளிவாகியுள்ளது.

"புன்னகைகளின் உச்சிமாநாடு", புதிய "அட்லான்டிக் கடந்த நட்புரிமை" என்ற பெரிய பேச்சுக்கள் போன்றவற்றை செய்தி ஊடக வர்ணனைகள் களிப்புடன் கூறுகின்றன. "அமெரிக்காவின் கவர்ச்சிகர தாக்குதலின் முழக்கத்தை" ஐரோப்பா பல வாரங்களாக எதிர்கொள்கிறது என்று Frankfurter Rundschau எழுதியது; Sueddeutsche Zeitung ஆழ்ந்த சோகத்தின் இருப்பு தீர்ந்துவிட்டது என்று சேர்த்துக் கொண்டது.

"ஒரு மந்திரத்தை திருப்பித் திருப்பிக் கூறுவதுபோல், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க அரசியல் வாதிகள், "செயற்பாணிதான் சாராம்சம்" என்று மீண்டும், மீண்டும் குறிப்பிட்டனர்; இதே செய்தித் தாளில் மற்றொரு கட்டுரை குறிப்பிட்டது; "இருப்பினும் இந்த முழக்கம், ஒரு அரசியல் மையக் கருத்து என்பதைவிட, விளம்பர முழக்கமாக லேஜெர்பீல்டிற்கு (நவீனபாணியின் குருவான கார்ல்-க்கு) மிகப் பொருத்தமுடையது; இது அன்றாட அரசியலில் பொதுவாக இருக்கும் தன்மை மிகக் குறைவுதான் என்ற உண்மையை மறைத்துவிட முடியாது."

அன்றாட வாழ்க்கையில் இணையாக பலவற்றைக் காணமுடியும். ஒரு தனிப்பட்ட உறவு மோதலுக்குட்பட்டு, நேரடியான விரோதமாக சிதைவதற்கு முன்னர், ஒரு திருமண வாழ்வு ஆலோசகர் பொதுவாக இரு புறமும் "நல்லெண்ணத்துடன் தாக்குதல்" நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்வார். இதைத் தொடர்ந்து விளையும் களிப்பற்ற நயங்கள் பயனுடைய செயல்களைவிட சங்கடங்களை ஏற்படுத்தி, இந்த உறவு முடிந்து விட்டது என்று உணர்ந்த இருபுறத்தில் இருந்தும் ஒரு தலையாட்டலைத்தான் கொண்டுவரும்.

அரசியல் உலகிலும் இதைவிட அதிகமாகத்தான் காணப்படும்; உண்மைகள் உறுதியான தன்மை படைத்தவையாகும். மைன்ஸின் நிகழ்த்தப்பட்ட பேச்சுக்கள் உண்மையான பூசல்கள் மற்றும் வளர்ந்துவரும் மூலோபாய வேறுபாடுகள் இவற்றினால் பண்பிடப்படுகின்றன.

முதன் முதலாக ஓர் அமெரிக்க ஜனாதிபதி, டாலர், உலகப் பொருளாதாரத்தில் அதற்கு இருந்த சவால்விட முடியாத உயர்நிலையை இழந்து கொண்டிருந்தபோது, ஐரோப்பாவிற்கு வருகை தந்திருந்தார். செவ்வாய்க்கிழமை மாலை டாலரின் வலுவிழந்த தன்மை மீண்டும் தெளிவாக தோன்றியது. 200 பில்லியன் டாலர் தொகையை, உலகிலேயே அதிக டாலர் இருப்புக்களை கொண்டிருப்பதில் நான்காம் இடத்தைக் கொண்டுள்ள தென் கொரிய மத்திய வங்கி, இந்த இருப்புக்களில் ஒரு பகுதியை யூரோக்களில் செலுத்திக் கொள்ள இருக்கிறது என்று அறிவித்தவுடன், டாலர் யூரோவிற்கு எதிராக 1.5 புள்ளிகளை இழந்தது: Dow Jones -ம் 1.6 சதவிகிதம் சரிந்தது. டாலரின் இந்த வலுவற்ற தன்மைக்கு பின்னணியில் மகத்தான அமெரிக்க செலாவணிப் பற்றாக்குறை, இதுகாறும் இல்லாத புதிய அளவிற்கு உயர்ந்து நிற்கிறது.

ஈராக் போர் தொடங்கியதில் இருந்தே, இந்தப் பொருளாதார சரிவினை இராணுவ வலிமையின் மூலம் ஈடுசெய்ய வேண்டும் என்று மேற்கொள்ளப்பட்ட, புஷ் நிர்வாகத்தின் முந்தைய முயற்சிகள் ஐரோப்பாவில் புது மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட்டன. "அவருக்கு என்ன தேவை என்று அறிந்து கொண்டதில் எந்தத் தவறும் இல்லை. ஈராக்கில் மிகக்குறுகிய காலத்தில் வலிதரும் வரம்பை அடைந்துவிட்டதால், அவர் அந்தச் சுமையை தாங்கிக் கொள்ளுவதற்காக பங்காளிகளை நாடிக்கொண்டிருக்கிறார்" என்று Frankfurter Rundschau எழுதியது. ஆனால் கடந்த கால அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான கருத்து வேறுபாட்டை, அமெரிக்க அல்லது ஐரோப்பிய மூலோபாயம் என்ற ஒன்று கிடையாது, சுதந்திரத்தை ஒட்டித்தான் வேறுபாடு என்ற கருத்தில் அகற்ற முயற்சித்தால், "எவ்வளவு குறைந்த முறையில் அவர் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதுதான் தெளிவாகியுள்ளது" என்று செய்தித்தாள் எழுதியது.

சுதந்திரத்திற்கான பூசலும், அதேபோல "மேற்கத்தைய மதிப்பீடுகளுக்காக" என்பதும் இனி தானாகவே அமெரிக்க மேலாதிக்கத்தை அடக்கிக் கொண்டுவிடாது. "ஐரோப்பியர்கள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஒப்புக் கொண்டனர்" என்ற காலம் மலையேறிவிட்டது. ஜேர்மனியின் முன்னாள் அதிபரான Helmut Schmidt (சமூக ஜனநாயகக் கட்சி-SPD) ஏற்கனவே Die Zeit இல் இந்தக் கருத்தாய்வை பற்றிய ஒரு கட்டுரையில் ஏற்கனவே கூறியுள்ளார், அது முதல் சொற்றொடரில் தொடங்கி கடைசிச் சொற்றொடரில் பின்வருமாறு முடிகிறது: "நட்பு என்பது அடிமைத்தனம் அல்ல."

அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் (சமூக ஜனநாயகக் கட்சி) ஐரோப்பிய கோரிக்கைகள் வருங்காலத்தை பொறுத்தவரையில் அமெரிக்காவிற்கு இணையான வகையில் பரிசீலிக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறினார். மைன்ஸ் கோட்டையில், புதன்கிழமை இரவு விருந்திற்கு பின்னர் உரையாற்றும்போது அமெரிக்காவும் ஜேர்மனியும் "சம அந்தஸ்து உடைய பங்காளிகள்" என்று அவர் குறிப்பிட்டார். தூதரகமுறை நயங்கள் ஒரு புறம் இருக்க, இதைக் கூறியதன் மூலம் தன்னுடைய கருத்து என்ன என்பதை சந்ததேகத்திற்கு இடமின்றி அவர் வெளியிட்டுவிட்டார். ஈராக்கிற்கு எதிராக போருக்குச் செல்லவேண்டும் என்பது பற்றிய வெளிப்படையான குறிப்பான, ஒருதலைப்பட்சமான அமெரிக்க நடவடிக்கைகள், மற்றும் வாதத்திற்கிடமின்றி நிறைவேற்றப்பட்ட காரியத்துடன் ஐரோப்பா முரண்பட்ட கர்வம் நிறைந்த வழிமுறை இனியும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று அவர் கூறினார்.

ஈராக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் உதவுவதில் ஜேர்மன் அரசாங்கம் தயாராக இருப்பது பற்றி ஷ்ரோடர் அடையாளம் காட்டினார்: ஆனால் சொற்றொடர்களுக்கு இடையே எச்சரிக்கைகளும் தெளிவாக இருந்தது: முன்கூட்டியே தீவிர ஒத்துழைப்புடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றால், அவருடைய அரசாங்கம் இனி ஒத்துழைக்க வராது என்பதுதான் அது.

முனிச் பாதுகாப்பு குழுவில் இருவாரங்களுக்கு முன்பு நிகழ்த்திய உரையில் அவர் கூறியிருந்தது போலவே, ஷ்ரோடருடைய விமர்சனம் ஈராக்கில் அமெரிக்க நடவடிக்கைகள் பற்றி கொள்கை அளவில் செலுத்தப்படவில்லை. கூறப்பட்ட பொய்களை பற்றியோ, தடுப்புப் போர் என்று போரை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்ட கொள்கைவழி பற்றியோ, அனைத்து சர்வதேச சட்டங்களுக்கு எதிராகவும் அபு கிரைப், குவாண்டநாமோ குடா சிறைச் சாலைகளில் கைதிகளுக்கு நிகழ்ந்த கொடூரங்களை பற்றியோ அவர் எதையும் குறிப்பிடவில்லை. ஷ்ரோடர் கேட்டதெல்லாம் "சம உரிமைகள்தாம்." ஜேர்மனிய, ஐரோப்பிய நலன்கள் இன்னும் கூடுதலான முறையில் வருங்காலத்தில் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

இந்த வேறுபாடுகள் மீண்டும் ஈரான், சிரியா பற்றிய இராணுவ நடவடிக்கைகளில் தெளிவாக தெரிந்தது. ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியவை தெஹ்ரான் உடனான சர்ச்சைக்கு தூதரக முயற்சிகளில் தீர்வு காண முற்படுகின்றன; அதற்கு அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து அம்முன்முயற்சிக்கு சக்திமிக்க ஆதரவு வேணடும் என்றும் கோருகின்றன. மறுபுறம், புஷ்ஷோ இந்த அணுகுமுறையை நிராகரிப்பது மட்டும் இன்றி, இராணுவ நடவடிக்கைக்கான விருப்பத்தேர்வு "மேசைமீது இருக்கிறது" என்று வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.

சிரியாவை பொறுத்தவரையில் நிலைமை ஒன்றும் வேறுவிதமாக இருந்துவிடவில்லை. பிரெஞ்சு ஜனாதிபதியால் இந்தப் பிரச்சினையில் மிகவும் பேசப்பட்ட "உடன்பாடு" கூட, உற்றுப்பார்த்தால் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது. அமெரிக்க ஆதரவுடைய சூத்திரமான "ஒரு புதிய ஒலிநயம், புதிய பாணி, ஒரு புதிய உணர்வு" அட்லாண்டிக் கடந்த உறவுகளில் உள்ளது என்று பிரெஞ்சுக் குழுவினர் கூறினர். ஆனால் Le Figaro இதற்கு "வேறுபாடுகள் தீர்ந்துவிட்டன" என்ற பொருளை தராது என்ற விளக்கத்தை கொடுத்துள்ளது. சிராக், புஷ் இருவருமே சிரியப் படைகள் லெபனானில் இருந்து ஏப்ரல் 17 தேர்தல்களுக்கு முன் அகற்றப்படவேண்டும் என்று கோரினாலும், அவர்கள் முற்றிலும் வேறான இலக்குகளைத்தான் பின்பற்றுகின்றனர். பிரான்ஸ், பெய்ரூட்டின் மீதான டமாஸ்கஸின் பொருளாதார, அரசியல் பிடிகளைத் தளர்த்திக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிறது. ஒரு பழைய காலனித்துவ சக்தி என்னும் முறையில் அது தன்னுடைய பொருளாதார, நிதிய நலன்களை லெபனானில் தொடர்கிறது. தன்னுடைய பங்கிற்கு, அமெரிக்கா லெபனானில் சட்டபூர்வமான கட்சியான ஹெஜ்போல்லாவிற்காக சிரியா கொடுக்கும் ஆதரவை கீழறுக்க சிரியாவை அழுத்தத்தின் கீழ் வைக்க விரும்புகிறது

"சிரியாவுடன் மோதலை தவிர்க்க வேண்டும் என்று பாரிஸ் விரும்புகிறது" என்று சிராக்கிற்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்; மேலும் இஸ்ரேலிய-பாலஸ்தீனிய விவகாரத்தில், அமெரிக்காவின் அக்கறையற்ற எந்த தொடர்பையும் நிராகரிக்கிறது" என்று Le Figaro எழுதியுள்ளது. "ஹெஜ்பொல்லாவை பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் ஐரோப்பா சேர்க்க வேண்டும் என்ற அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கோரிக்கையையும் பிரான்ஸ் எதிர்க்கிறது."

பிரஸ்ஸல்ஸில் நடந்த NATO உச்சிமாநாட்டில், ஜனாதிபதி சிராக், ஹெகாராட் ஷ்ரோடரின் தலைமையைப் பின்பற்றி, "ஐரோப்பிய பாதுகாப்பு வளர்ச்சி" பற்றி வலியுறுத்தினார். NATO "வரலாற்றில் மிக வெற்றிகரமான கூட்டு" என்று கூறப்பட்டிருந்த, உச்சிமாநாட்டின் ஆவண அறிக்கையில் இரண்டு நாடுகளின் தலைவர்களும் கையெழுத்திட்டபோதிலும், அவர்கள் NATO வில் இருந்து சுதந்திரமான, ஒரு ஐரோப்பிய இராணுவ திறனை ஏற்படுத்துவதற்கு முன்னேறிக்கொண்டிருக்கின்றனர் என்ற உண்மையை இது மாற்றவில்லை.

நவம்பர் 2004ல் ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு மந்திரிகள் 13 விரைவுப்படை-உடனடித் தாக்குதல் குழுக்களை அமைப்பதில் உடன்பட்டனர். ஒவ்வொரு குழுவிலும் 1,500 ல் இருந்து 2,000 வீரர்கள் இருப்பர் மற்றும் ஐந்து முதல் பத்து நாட்களுக்குள் இவர்கள் நிறுத்தப்பட்டுவிடுவர். இவை 2007 க்குள் தயார்நிலைக்குக் கொண்டுவரப்படும். இந்தப் பிரிவுகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு நன்கு ஆயுதம்தரித்த, மிகக் கூடுதலான முறையில் நகர்ந்து தலையிடும் ஆற்றலையுடைய படைப்பிரிவை கொடுக்கும். ஐரோப்பிய தற்பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புக் கொள்கைக்கு (European Security and Defence Policy ESDP), இவை இராணுவ தசையாக செயல்படும்.

புஷ்ஷின் வருகையை அரசியல் செல்வந்த தட்டினரைவிட முற்றிலும் மாறுபட்ட முறையில் சாதாரண மக்கள் எதிர்கொண்டனர். அவர்கள் பலவித ஏகாதிபத்திய நலன்களை பற்றிக் கவலை கொள்ளவில்லை: அடிப்படையில் போர்களும், இராணுவவாதமும் நிராகரிக்கப்பட வேண்டும் என்று நினைக்கின்றனர். மக்கட்தொகையினரின் பரந்த தட்டுக்கள் புஷ்ஷை ஒரு வெறுப்பிற்குரிய நபராகத்தான் காண்கின்றனர்; 1930களுக்கு பின்னர் எந்த அரசியல் வாதியும் இப்படிக் காணப்படவில்லை. இவருடைய வருகையின்போது மேற்கொள்ளப்பட்ட விந்தையான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொந்திரவு கொடுப்பதாக மட்டும் கருதப்படாமல், நேரடி ஆத்திரமூட்டல் என்றே நினைக்கப்பட்டன. "அவர் எவரையும் நம்பவில்லை என்றால், அவருடைய வீட்டிலேயே இருக்கட்டும்; அல்லது போர்க்கப்பலில் தன்னுடைய பேச்சு வார்த்தைகளை நடத்திக் கொள்ளட்டும்" என்று மைன்சில் ஒரு ஓய்வூதியம் பெறுபவர், பொதுவாகப் பரவியிருக்கும் உணர்வுக்குக் குரல்கொடுக்கும் வகையில் கூறினார்.

புஷ்ஷிற்கும் சாதாரண மக்களுக்கும் இடையே எவ்விதமான தொடர்பும் தவிர்க்கப்பட்டது. அனைத்துமே செயற்கையாக அரங்கேறின. அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட இடத்தில், குறிப்பிட்ட நேரத்தில் புஷ் செல்லும்போது கையசைப்பதற்காக மக்கள் நிற்பரோ என்று வீணே தேடி நின்றனர். அவர்கள் இதற்குத் தயாராக இருக்கும் எவரையும் காணமுடியவில்லை. ஒரு கடை வளாகத்திற்குச் சென்று புஷ்ஷை பற்றி எவரேனும் நல்லபடியாகக் கூறுவரோ என்று எதிர்பார்த்த ஒரு அமெரிக்க தொலைக்காட்சி குழுவிற்கும் இதேபோன்ற அனுபவம்தான் ஏற்பட்டது. எந்த அரசியல் வாதியும், குறுகிய காலத்தில் இத்தனை பெரிய முறையில் புகழை இழந்தது கிடையாது.

See Also:

ஐரோப்பாவில் புஷ்: அட்லாண்டிக் கடந்த ஐக்கியம் பற்றிய பேச்சு வார்த்தைக்கு கீழே பதட்டங்கள்
 

Top of page