World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

As Bush tells Lebanese "we are with you"

Massive rally in Beirut rejects US intervention

"நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்" என்று புஷ், லெபனான் மக்களுக்கு கூறிக் கொண்டிருக்கும்போதே

பெய்ரூட்டில் மிகப்பெரிய பேரணி அமெரிக்கத் தலையீட்டை நிராகரிக்கிறது

By Bill Van Auken
10 March 2005

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்கத் தலையீட்டை லெபனானில் எதிர்க்கவும், சிரியாவிற்கு எதிரான வாஷிங்டனின் பெருகிய அச்சுறுத்தல்களை கண்டிக்கவும், 500,000 த்தில் இருந்து 1 மில்லியன் என மதிப்பிடப்படும் மக்கள் நிறைந்த கூட்டத்தை பெய்ரூட் தெருக்களில் கொண்டு வந்து நிறுத்திய ஒரு கண்டனப் பேரணி லெபனிய ஷியைட்டு ஹெஜ்போல்லா இயக்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டது

லெபனானின் மிக பெரியதும், வரலாற்றளவில் மிகவும் ஒடுக்கப்பட்டதுமான, பெரும்பாலான ஷியைட்டு மக்களைக் கொண்டிருந்த இந்தப் பேரணியில் "அமெரிக்காவிற்கு மரணம்", "இஸ்ரேலுக்கு மரணம்", "பெய்ரூட் ஒரு சுதந்திர நாடு, அமெரிக்காவே வெளியேறு" என்ற கோஷங்கள் ஒலித்தன. எதிர்ப்பாளர்கள், "அமெரிக்காதான் பயங்கரவாதத்திற்கு ஆதாரமாக உள்ளது", "நம்முடைய பேரழிவுகள் அனைத்தும் அமெரிக்காவில் இருந்துதான் வருகின்றன" என்று முழங்கும் அட்டைகளை உயர்த்திப் பிடித்திருந்தனர். ஒரு அட்டையில் புஷ்ஷின் நிழற்படமும், "லெபனான், உம்முடைய விளையாட்டுக்களம் அல்ல" என்ற கோஷமும் இருந்தன. மற்றவற்றில் சிரியாவிற்கான ஆதரவுகள் வெளிப்படுத்தப்பட்டு இருந்தன.

அமெரிக்க தேசியப்பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஜோர்ஜ் டபுள்யூ புஷ் "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்ற உரையை நிகழ்த்துவதற்கு சற்று முன்னர்தான் இத்தகைய பெரிய ஆர்ப்பாட்டம் பெய்ரூட்டில் நடந்தது. புஷ் "சுதந்திரம்", "ஜனநாயகம்" என்ற நற்பண்புகளை - அவரது பேச்சில் 40 முறைக்கும் நெருக்கமாக இடம்பெற்ற அந்த வெற்றுச்சொற்களை- புகழ்ந்து கொண்டு அதே நேரத்தில் ஒருவேளை அமெரிக்காவின் அடுத்த இலக்காக இருக்கக்கூடிய சிரியாவிற்கு எதிரான அச்சுறுத்தல்களையும் விடுத்துக் கொண்டிருந்த தன்மையில், சொற்ஜாலமும், உண்மை நிலைப்பாடும் இதைவிட அப்பட்டமாக ஒத்துப்போகாத தன்மை இருந்திருக்க முடியாது என்றுதான் தோன்றியது.

"லெபனிய மக்கள் தங்களுடைய எதிர்காலத்தை, வெளிநாட்டு சக்தியின் ஆதிக்கம் இன்றி நிர்ணயிக்கும் உரிமை பெற்றவர்கள்" என்று அறிவித்த புஷ், அனைத்து சிரியப் படைகளும் லெபனானில் இருந்து உடனடியாக வெளியேறவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். "உலகம் முழுவதும் உங்கள் மனச்சாட்சியின் போக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. லெபனானின் வருங்காலம் உங்களுடைய கைகளில்தான் உள்ளது" என்று லெபனான் மக்களுக்கு அவர் கூறினார்.

வாஷிங்டன் "உங்களுடைய பக்கம்தான் இருக்கிறது" என்று புஷ் பறைசாற்றிக் கொண்டிருக்கும் கூற்று வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் நூறாயிரக்கணக்கான லெபனியர்கள் தெருக்களில் நின்று அமெரிக்க ஜனாதிபதி தங்கள் நாட்டில் தலையீட வேண்டாம் என்று கூவியதின் விந்தையை அம்பலப்படுத்த அமெரிக்கப் பெருநிறுவன செய்தி ஊடகத்தில் எதுவும் துணிவுகொள்ளவில்லை.

செவ்வாய் கிழமை பெய்ரூட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம், அமெரிக்க ஆதரவு பெற்ற சிரியா திரும்பச் செல்லவேண்டும் என்ற கோரிக்கை வைக்கும் எதிர்ப்பினர் போலவும், அதேபோன்ற அரசியல் தன்மையுடைய அணிகளையும் விட 10 மடங்கு அதிக மக்கள் நிறைந்ததாக இருந்தது - ஆயினும்கூட அமெரிக்கச் செய்தி ஊடகத்தில் இதற்கு பத்தில் ஒரு பங்குதான் பிந்தையவற்றைவிட இடம் ஒதுக்கப்படும் என்று துணிந்து கூறலாம்.

மற்றொரு அமெரிக்கத் தலையீட்டை ஜனநாயக சொற்ஜாலங்களில் அழகுபடுத்திக் கொண்டுவரும் புஷ்ஷின் முயற்சிக்கு விரோதம் இருப்பதற்கு தக்க சான்றுகள் உள்ளன. அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒரு நீண்ட வரலாற்றை லெபனானில் கொண்டுள்ளது; அதுதான் 15 ஆண்டு உள்நாட்டுப் போரில், லெபனானின் மக்கள் ஒடுக்கப்பட்டிருப்பதற்கும், நூறாயிரக் கணக்கான மக்கள் இறந்து பட்டதற்கும், காயமுற்றதற்கும் முக்கியப் பொறுப்பை ஏற்கவேண்டும்.

1958ம் ஆண்டு, ஜூலை மாதம், ஜனாதிபதி ட்வைட் டி. ஐசனோவரின் நிர்வாகம் ஆறாம் கடற்படையை லெபனானுக்கு அனுப்பி வைத்தது; 10,000 அமெரிக்க சிறப்புக் கடற் படையினர் வலதுசாரி ஜனாதிபதி காமில்லே சாமெளனின் ஆட்சிக்கு முட்டுக் கொடுத்து நிறுத்தவதற்காக, அவர் "சர்வதேச கம்யூனிசத்தின்" தாக்குதலுக்கு உட்பட்டிருக்கிறார் என்ற போலிக் காரணம் காட்டி தரையிறங்கினர்.

உண்மையில், தேர்தலை ஆதரவாக திரிக்கவும் எதிர்க்கட்சியை நசுக்கவும் சாமெளனுக்கு சிஐஏ உதவிய பின்னர், அவர் உள்நாட்டு எழுச்சி ஒன்றை சந்தித்துக் கொண்டிருந்தார். லெபனானை ஒரு மேலை வாடிக்கை நாடாக எப்படியும் தக்கவைத்துக் கொள்ளவேண்டும் மற்றும் அதற்காக தீவிர அரேபிய தேசியவாதம் பரவுதலைத் தடுத்து நிறுத்த இராணுவ சக்தியையும் பயன்படுத்தவும் வாஷிங்டன் நோக்கங்கொண்டிருந்தது. அண்டை ஈராக்கிய நாட்டில் தேசியவாத போக்குடைய அதிகாரிகளால் அமெரிக்கச் சார்புடைய முடியாட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து, அமெரிக்க இராணுவ நடவடிக்கை உடனடியாக மேற்கொள்ளப்பட்டிருந்தது.

தலையீட்டை பற்றிய துல்லியமான ஆய்வுகளில் ஒன்று அந்தத் தலையீட்டின் அடித்தளத்தில் இருந்த நோக்கம், "பெட்ரோலிய இருப்புக்களை அணுகுதல், இராணுவத் தளங்களை அமைத்தல், விமானப் போக்குவரத்து உரிமைகளை பெற்றுக் கொள்ளுதல், இன்னும் பெருகிய முறையில் அப்பகுதியில் வணிக விரிவாக்கம் ஆகியவற்றை கொள்ளுதல் இவற்றைப் பெறுவதற்காக" மேற்கொள்ளப்பட்ட முயற்சி என்று கூறுகிறது. ("United States Intervention in Lebanon and the Middle East, 1945-1958," Irene Gendzier.) வாஷிங்டனுடைய உண்மையான குறிக்கோளின் அர்த்தத்தில் அதிக மாற்றம் ஏதும் இல்லை.

கிறிஸ்தவ நிதிய செல்வந்தத்தட்டின் நலன்களை காப்பதற்கும், அதேநேரத்தில் வளர்ந்துவரும் முஸ்லீம் மக்களை அடக்குவதற்கும், அவர்கள் கோரிக்கையான ஜனநாயக ரீதியிலான பெரும்பான்மையினரின் ஆட்சி என்பதை அடக்கவும் பாடுபட்டுக் கொண்டிருந்த ஒரு போலீஸ் அரசாங்கத்திற்கு துணையாக இருக்கும் தன்மையைத்தான் அமெரிக்க தலையீடு அப்பொழுது கொண்டிருந்தது.

இஸ்ரேலுடைய ஆதரவு பெற்றிருந்த, பாசிச கிறிஸ்தவ பலாஞ்சியர்களுக்கும், வறுமையில் வாடியிருந்த முஸ்லீம் பெரும்பான்மை, பாலஸ்தீனியர்களுடன் இணைந்து ஆதரவு கொடுத்திருந்த லெபனான் இடதுக்கும் இடையே 1975ம் ஆண்டில் உள்நாட்டுப் போர் ஏற்பட்டது. தன்னுடைய கவனத்தை லெபனான் மீது செலுத்திய வாஷிங்டன் முதலில் சிரியா மூலம் அரசியல் தலையீடு என்ற வகையில் ஆதரவளித்தது; லெபனானின் மரோனைட் கிறிஸ்தவ ஜனாதிபதி சுலைமான் பிரான்ஜிஹென் மற்றும் வலதுசாரிகள் தோல்வியின் விளிம்பில் நின்றிருந்தபோது, சிரியா தன்னுடைய படைகளை அனுப்பி வைத்தது.

லெபனிய இடதுசாரி பிரிவுகளில் சில சிரியாவின் பாத்திஸ்ட் ஆட்சி தங்களுக்கு ஆதரவு தரும் என்று கருதியிருந்தபோது, அந்த நம்பிக்கைகள் விரைவில் சுக்குநூறாயின. சிரிய இராணுவம் லெபனானில் கிளர்ச்சிஎழுச்சி வெற்றியடைவதை தடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டது: ஹபீஸ் அல் ஆசாத்தின் ஆட்சி இப்பகுதி முழுவதும் தீவிரத்தன்மை பெறுவது தனது சொந்த உயிர்வாழ்விற்கே அச்சுறுத்தல் ஆகிவிடுமோ என்று கருதியது.

இஸ்ரேலியப் படையெடுப்பிற்கு அமெரிக்க ஆதரவு

1982ல் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த அலெக்சாந்தர் ஹைக் இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் போர் நடத்தலாம் என்பதற்கு சமிக்கை கொடுத்தார்; இந்தப் படையெடுப்பு பல்லாயிரக் கணக்கான லெபனிய மக்களுடைய உயிரைக் குடித்தது. சியோனிச ஆட்சி தன்னுடைய முழு இராணுவ பலத்தையும் மேற்கு பெய்ரூட்டின் சேரிகள் நிறைந்த பகுதிகளில் இயக்கியது; தெற்கு லெபனானில் அடுத்த 18 ஆண்டுகள் தொடர்ந்திருக்கும் ஆக்கிரமிப்பையும் பூசலையும் தொடங்கியது. செவ்வாய்க் கிழமை அன்று நிகழ்ந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களில், அமெரிக்க ஆதரவுடன் வந்திருந்த இஸ்ரேலிய இராணுவத்தால் கொல்லப்படாத, காயப்படாத, சிறை வைக்கப்படாத உறவினர்கள் என்று தொடர்பற்றவர்கள் வெகு சிலரேயாவர்.

அக்டோபர் 1982ல், அமெரிக்கா மீண்டும் கடற்படையின் நிலப்படை பிரிவினரை லெபனானுக்கு அனுப்பி வைத்தது; இந்த முறை இஸ்ரேலியப் படையெடுப்பில் விளைந்த நன்மைகளை, அதாவது பாலஸ்தீனிய விடுதலை அமைப்பு நாட்டை விட்டு அகற்றப்படவேண்டும், மற்றும் பலாஞ்சிஸ்ட் தலைவர் அமின் ஜெமாயெலின் தலைமையின் கீழ் ஒரு வலதுசாரி அரசாங்கம் நிறுவப்பட வேண்டும் என்பதை வலுப்படுத்துவதற்காக அனுப்பி வைத்தது.

உள்நாட்டுப் போரில் ஒரு பக்கத்தாருடன் பக்கச்சார்பு எடுத்து சேர்ந்து கொண்ட பின்னர், வாஷிங்டன் நாட்டில் ஒடுக்கப்பட்டிருந்த முஸ்லீம்களின் கோபத்தை தூண்டிவிட்டது. ஷியைட்டு கிராமங்களை அமெரிக்கப் படைகள் ஆகாயத்தில் இருந்தும் கடலில் இருந்தும் குண்டுகளை பொழிந்து நூற்றுக் கணக்கான மக்களை கொன்றதன் மூலம் தாக்குதலுக்கு பதிலளித்தது. இதற்கு விடை கொடுக்கும் வகையில் ஷியைட்டு படைகள் தற்கொலை படைகளை ஏவி 241 மரைன்களின் உயிரைக் குடித்தன. அமெரிக்கப் படைகள் அதற்குப் பின்னும் நான்கு மாதங்கள் லெபனானில் இருந்தன. அக்காலக் கட்டத்தில் 16 இன்ச் பீரங்கிகளை கொண்டிருந்த அமெரிக்க கடற்படை கப்பல் USS New Jersey பல முறையும் Druze மற்றும் ஷியைட்டுக்களின் நிலைகளை தாக்கியது.

லெபனானில் சிரியா தற்போது கொண்டுள்ள இராணுவ நிலைப்பாட்டிலும் வாஷிங்டன் முழுமையாக தொடர்புடையதாகும். நாடு தொடர்ந்து ஸ்திரமான நிலையில் இருப்பதற்கும், ஈராக்கிற்கு எதிரான முதல் அமெரிக்க பாரசீக வளைகுடாப் போரில் ஹபீஸ் அல்-ஆசாத் ஆதரவு கொடுப்பதற்கும் வெகுமதியாக, புஷ்ஷின் தந்தை 1989-90ல் சிரிய பணிக்கு உடன்பாடு தெரிவித்தார்.

செவ்வாய் கிழமையன்று "மனச்சாட்சியின் பெரும் இயக்கம்" என்று புஷ் போற்றப்பட்டது, மற்றொரு அமெரிக்கத் தலையீட்டை எதிர்ப்பதற்காக தெருக்களில் குவிந்திருந்த, ஒடுக்கப்பட்ட ஷியைட்டுக்களை பற்றிய கருத்து இல்லை. மாறாக அவர் பெப்ரவரி 14ல் லெபனானின் முன்னாள் பிரதம மந்திரி ரபிக் ஹரிரி கொலையுண்டதற்கு எதிராக நிகழ்ந்த முந்தைய சிரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை குறிப்பிட்டுப் புகழ்ந்திருத்தார்.

லெபனான் பற்றி அமெரிக்க செய்தி ஊடகங்கள் மக்கள் ஒட்டுமொத்தமாக சிரியாவிற்கு எதிராக கிளர்ந்து எழுந்து, படுகொலைக்கு அதனையும் அதன் லெபனிய கூட்டாளிகளையும் குற்றம் சாட்டின. இது இன்னும் ஓர் சிதைந்த தகவலாகும். உண்மையில் கருத்துக்கள் பல பிரிவுகளின் நடைமுறைக்கேற்ப பிளவுபட்டுள்ளன; லெபனானில் இஸ்ரேல் மற்றும்/அல்லது அமெரிக்காதான் கொலைக்கு காரணம் என்பது பற்றிய நம்பிக்கை பரந்த முறையில் பரவி உள்ளது.

மார்ச் 7ம் தேதி Zogby International கொடுத்துள்ள கருத்துக் கணிப்பின் முடிவின்படி, நாட்டின் மரோனைட் கிறிஸ்தவர்களில் பாதிப்பேர் சிரியா அல்லது லெபனான் அதிகாரிகள்தான் படுகொலையில் சம்பந்தப்பட்டு இருந்திருப்பார்கள் என்று கருதுகின்றனர். கருத்துக் கூறிய ஷியைட்டுக்களில் 70 சதவிகிதத்தினர் அமெரிக்கா அல்லது இஸ்ரேல்தான் பொறுப்பு என்று தெரிவிக்கின்றனர். லெபனான் மக்கள்தொகை என்று முழுமையாக எடுத்துக் கொண்டால் 45 சதவிகிதத்தினர் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இந்தக் கொலையால் நன்மை அடைந்ததாகக் கூறியுள்ளனர்; 11 சதவிகிதத்தினர் சிரியாவிற்கு இதனால் நன்மை என்று தெரிவித்துள்ளனர்.

குறிப்பிடத்தக்க வகையில், கருத்துக் கணிப்பில் கலந்து கொண்ட மரோனைட்டுக்களில் பாதிக்கும் குறைவானவர்கள் லெபனானில் இருந்து சிரியா பின்வாங்கிவிட்டால் நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு ஏற்படும் என்று நம்புகிறார்கள், இதைவிடக் குறைவான விகிதத்தினர்தான் மற்ற பிரிவுகளில் இருந்து அக்கருத்தை கொண்டிருக்கிறார்கள் என்பதும் தெரியவருகிறது.

தலையங்கம் எழுதுபவர்களுக்கும், தலைப்புச் செய்தி கொடுப்பவர்களுக்கும், தொலைக் காட்சியில் பரபரப்பாக பேசுபவர்களுக்கும் இத்தகைய முரண்பாடுகளை பற்றிச் சிந்திக்க நேரம் கிடையாது. சிரியாவிற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், "பசுமை புரட்சி", "பெய்ரூட்டின் வசந்த காலம்", "மக்களுடைய அதிகாரம்" என்று போற்றி துதிப்பதில் முன்பைவிட இப்பொழுது அதிகமாகவே அவர்கள் செய்துள்ளனர்.

New York Times புதனன்று ஒப்புக் கொண்டுள்ளபடி, லெபனானிலேயே பசுமை புரட்சி என்று அழைக்கப்படுவது தியாகிகள் சதுக்கத்தில் கூடியிருந்த எதிர்ப்பாளர்களின் தன்மை நன்கு அறியப்பட்டுள்ளதன் காரணமாக "BMW" புரட்சி என்று கூறப்படுகிறது. இந்தக் கூட்டங்களின் அறிவிப்புக்கள், செல் போன்களில் செய்தி அளிப்பு மூலமாக அனுப்பப்பட்டு, லெபனானின் ஆளும் செல்வந்தத்தட்டினரின் மகன்களையும் மகள்களையும் நடனச் சாலையில் இருந்து தெருவிற்கு அழைத்து வருகின்றன.

இத்தகைய "மக்களின்" எதிர்ப்பின் முக்கியமான தலைவர்களில் ஒருவர், தற்செயல் நிகழ்வு என்றில்லாமல், காமில் சாமெளனுடைய மகனான டோரி சாமெளன் உள்ளார்; தகப்பனார் ஜனாதிபதியாக இருக்கும்போதுதான் ஐசனோவர் அமெரிக்கக் கடற்படையை அவரை அவருடைய மக்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக 50 ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பி வைத்திருந்தார். 1975-76 ல் நிகழ்ந்த உள்நாட்டு போரின்பொழுது, மூத்த சார்மெளன் பாலஸ்தீனிய மற்றும் லெபானிய இடதுகளிடமிருந்து காப்பாற்றுமாறு சிரியாவிடம் மன்றாடிய மற்றும் பின்னர் இஸ்ரலுடைய ஆதரவையும் இதற்காகவே நாடியிருந்த கிறிஸ்தவ தலைவர்கள் மத்தியில் ஒருவராக இருந்தார்.

அடிக்கடி முக்கியமான "ஜனநாயகவாதி" என்று மேற்கோளிடப்படும் டோரிக்கு, டானி என்று ஒரு சகோதரர் இருந்தார்: அவர் சமெளன்சின் புலிகள் குடிப்படை பிரிவின் தளபதியாக இருந்தார். புலிகள்தாம் 1975ம் ஆண்டு 2,000 பாலஸ்தீனிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று சிரிய உதவியுடன் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்தவர்கள்; அதுவும் அவர்கள் டெல் அல் ஜாடார் அகதிகள் முகாமில் சரண்டைந்தபோது இது நடைபெற்றது. 1982ம் ஆண்டு, இக் குடிப்படை உறுப்பினர்கள் இஸ்ரேல் ஏற்பாடு செய்திருந்த சப்ரா, ஷாடிலா முகாம்களில் படுகொலைக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதுதான் அமெரிக்க ஆதரவு பெற்ற, லெபனானில் சுதந்திர தாகம் உடையவர்களின் பாசிச பாரம்பரியமாகும்.

செவ்வாய் கிழமை அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நூறாயிரக் கணக்கான மக்கள் சாமெளன் மற்றும் பிற மரோனைட் வலதுசாரிகள் தலைமையிலான நவநாகரிக எதிர்ப்பாளர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர்கள் ஆவர். அவர்கள் பெரும்பாலும் நாட்டின் வறிய நிலையில் தொழிலாள வர்க்கத்தில் உள்ள ஷியைட்டுக்கள் ஆவர். "புதிய மத்திய கிழக்கின் அடையாளம்" என்று வண்ணமிகு தலையங்கிகள், விலைமதிப்பற்ற கருங் கண்ணாடிகள், வனப்பான உடைகள் என்று அமெரிக்கச் செய்தி ஊடகத்தை ஈர்த்த அடையாளங்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் காண்பதற்கு இல்லை.

லெபனிய சமூக துருவமுனைப்படல்

உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்தே, லெபனானில் சமூக துருவமுனைப்படல் அதிகரிக்கவே செய்தன. நாட்டை மீண்டும் கட்டமைப்போம் என்று புகழாக பேசியமை சாமெளன்கள் போன்றவர்களுக்கு நல்வாய்ப்பாய் பெரும் செல்வத்தைத்தான் அளித்துள்ளது, அதே நேரத்தில் நாட்டின் பெரும்பான்மையான மக்களுடைய வறுமை அதிகரித்துள்ளது. வேலயின்மை விகிதம் 20 சதவீத உயர்வு இருக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் கிட்டத்தட்ட முன்றில் ஒரு பங்கு மக்கள். வறுமையில் உழன்று, மாதம் $600 க்கும் குறைவான தொகையில் வாழ்கின்றனர். லெபனான் அரசாங்கம், உயர்மட்டத்தில் இருப்பவர்கள் செலுத்தும் வரிகளை 10 சதவீதம் ஆகக் குறைக்கும் தடையற்ற சந்தைக் கொள்கைகளை முற்றிலும் தழுவியது மற்றும் பொதுத்துறையில் பல நிறுவனங்களும் தகர்க்கப்பட்டு, தொழிற்சங்கங்களும் கடுமையாய் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டன.

அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டுள்ள ஈராக்கில் நடைபெற்ற ஜனவரி 30 தேர்தல்கள் லெபனிய மக்களுக்கு ஊக்கம் கொடுத்துள்ளது என்ற புஷ் நிர்வாகத்தின் மடத்தனமாக கூற்றை அமெரிக்கச் செய்தி ஊடகமும் எதிரொலித்து, மத்திய கிழக்கு முழுவதும் அடித்துச்செல்லும் ஜனநாயகத்திற்கான சமயப் போர் போன்ற உணர்விற்கு ஊக்கம் கொடுத்துள்ளது.

ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம், செயல்பட்டுக் கொண்டிருக்கும் பாராளுமன்றம் ஆகியவை இருக்கும்போது, முற்றுகைக்கு உட்பட்ட நிலையில் ஒரு வாக்கெடுப்பு என்பது அமெரிக்க இராணுவத்தை முழுமையான கட்டுப்பாட்டை தொடரத்தான் அனுமதித்துள்ளது, இந்நிலையின் கீழ் லெபனான் என்ன கற்றுக்கொள்ள வேண்டி இருந்தது என்பது ஒருபோதும் விளக்கப்படவில்லை. ஈராக் அளித்துள்ள ஒரே "உதாரணம்" ஒரு நாடு எப்படி மிருகத்தனமான இராணுவ சக்தியால் காலனித்துவ அடிமைத்தனத்திற்கு உட்பட்டிருக்கிறது என்பதாகும்.

வாஷிங்டனோ, அல்லது சிரியா வெளியேற வேண்டும் என்று கோருபவர்களோ "சுதந்திரம்" மற்றும் ஜனநாயகம்" பற்றிய நேசிப்பினால் உந்துதல் பெற்றவர்கள் அல்லர்.

லெபனானில் ஜனநாயகத்தை வளர்ப்பதில் புஷ் நிர்வாகத்திற்கு எந்த அக்கறையும் கிடையாது என்பது தெளிவேயாகும். அதன் தற்போதைய சூழ்ச்சிகள், அந்த பிராந்தியத்தில் தன்னுடைய சொந்த மூலோபாய நலன்களை காப்பதற்காக ஒவ்வொருவித ஜனநாயக எதிர்ப்பு சக்திக்கும் ஆதரவு கொடுத்து உள்ளதுதான் அதன் நீண்ட கால மற்றும் இழிவான நிலைச்சான்றின் பகுதியாகும். ஹெஜ்போல்லாவிடம் அது கொண்டுள்ள அணுகுமுறை இதைத்தான் சுட்டிக் காட்டுகிறது. அந்தக்கட்சி இப்பொழுது பாராளுமன்றத்தில் 12 உறுப்பினர்களைக் கொண்ட முகாமாக உள்ளது; அடுத்த தேர்தல்களின் கணிசமான முறையில் ஆதாயம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெய்ரூட் பேரணி நிரூபித்துள்ளதுபோல், லெபனானில் ஷியைட் பன்முகப் பிரிவில், இது மக்களிடையே அதிக ஆதரவைக் கொண்டுள்ளது. இருந்தபோதிலும், அப்பகுதியில் அமெரிக்க, இஸ்ரேல் கொள்கைகளுக்கு அதன் எதிர்ப்பால், வாஷிங்டன் இது ஒரு பயங்கரவாத அமைப்பு என்றும் அடக்கப்படவேண்டும் என்றும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

பெரும்பாலும், சிரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நாட்டின் சிறு நிதியத் தட்டின் குழுவின் சலுகைகளை காக்க வேண்டும் என்று கருதுபவர்களால்தான் வழிநடத்தப்படுகின்றன. அவர்கள் வலியுறுத்தும் சமூக சமத்துவமற்ற நிலை எந்தவிதமான ஓர் உண்மையான ஜனநாயகத்துடனும் இயைந்து போகாது. சிரியாவை அகற்றுதல், ஹெஜ்பொல்லாவை ஆயுதம் களையச் செய்தல், அமெரிக்காவை இழுப்பது ஆகியவை நாட்டின் பெரும்பாலான மக்களுடைய இழப்பில் தங்களுடைய நிலைமையை வலுப்படுத்திக் கொள்ளும் வழிமுறைகள் ஆகும்.

லெபனானில், 15 ஆண்டுகளுக்கு முன் இருந்த கடுமையான சமுதாய, அரசியல் பிளவுகள் இன்னும் உள்நாட்டுப் போர் என்ற வகையில் தொடர்கின்றன. தன்னுடைய புதிய அமெரிக்கப் பேரரசின் நோக்கம் நிறைவேற்றப்படுவதற்காக, மத்திய கிழக்கு, அதன் எண்ணெய் வளம் இவற்றைப் பூசலிற்கு இடமின்றி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக புஷ், நிர்வாகம் உள்நாட்டுப் போரை முடித்த உடன்பாட்டை மாற்ற வேண்டும் என்றும் தன்னுடைய விருப்பத்தையொட்டி உள்ள, ஆனால் லெபனிய மக்களாலோ அவர்களின் பிரதிநிதிகளாலோ ஒப்புக்கொள்ளப்படாத, ஐ.நா. தீர்மானம் 1559 ஐ நிறைவேற்ற வேண்டும் என்றும் முயற்சி செய்கிறது.

ஒரு செல்வம் கொழித்த தொழில் சிறுகுழுவினர், அதிகாரவர்க்க்தில் இருந்தவர்கள் என்ற பிரிவிற்கு பதிலாக மற்றொரு செல்வம் கொழித்த தொழில்துறை சிறுகுழுவினர் மற்றும் முன்னாள் அதிகாரத்துவத்தினர் அடங்கிய ஒரு குழுவை, மேலை நாடுகளுடன் நெருங்கிய தொடர்பு உடைய குழுவால் பதிலீடு செய்து அதிகாரத்திற்கு கொண்டுவந்த, அமெரிக்க ஆதரவில், கடந்த டிசம்பர் மாதம் உக்ரைனில் நடைபெற்ற "ஆரஞ்சு புரட்சியை" கருத்திற் கொண்டு, "லெபனான் ஒன்றும் உக்ரைன் அல்ல" என்று ஹெஜ்பொல்லாவின் தலைவர் நசருல்லா செவ்வாய்க்கிழமை கூட்டத்தில் குறிப்பிட்டார்.

இந்த எச்சரிக்கை தெளிவாகத்தான் உள்ளது. வாஷிங்டன் லெபனானை ஒரு அமெரிக்க சார்புடைய, இஸ்ரேல் சார்புடைய செயற்கைக் கோள் நாடாக, மாற்றும் முயற்சி ஆழமான உள்ளார்ந்த சமூக உட்குறிப்புக்களையும் கொண்டுள்ளது மற்றும் நாட்டை உள்நாட்டுப் போரில் மூழ்கடிக்கும் அச்சுறுத்தலையும் கொண்டுள்ளது, அது அப்பகுதி முழுவதையும் விழுங்கக்கூடும்.

Top of page