World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: SPD chairman resigns in midst of grand coalition talks

ஜேர்மனி: பெரும் கூட்டணி பேச்சுவார்த்தைகளின் நடுவில் சமூக ஜனநாயக கட்சி தலைவர் இராஜிநாமா செய்கிறார்

By Peter Schwarz
3 November 2005

Use this version to print | Send this link by email | Email the author

பாராளுமன்றத்தில் அவருடைய ஆளும் கூட்டணியான சமூக ஜனநாயக கட்சி (SPD) மற்றும் பசுமைக் கட்சிக்கு பெரும்பான்மை இருந்திருந்தபோதிலும், ஜேர்மன் அதிபர் ஹேகார்ட் ஷ்ரோடர் முன்கூட்டியே கூட்டாட்சித் தேர்தல்கள் நடத்த முடிவு எடுத்த ஆறுமாதங்களுக்குள் சமூக ஜனநாயக கட்சியின் தலைவரான Franz Muntefering தன்னுடைய தலைவர் பதவியை இராஜிநாமா செய்துள்ளது கட்சியை ஆழ்ந்த நெருக்கடியில் தள்ளியுள்ளது.

தேர்தல் முன்கூட்டியே நடத்தப்பட்டதும் மற்றும் முண்டபெயரிங்கின் திடீர் ராஜிநாமா இரண்டுமே ஒரு உந்துதலைத்தான் அடித்தளமாகக் கொண்டுள்ளன: தங்களுடைய முதலாளிகளுக்கு சார்புடைய கொள்கைகளுக்கு கடுகளவு எதிர்ப்பையும் தாங்கள் பொறுத்துக் கொள்ள முடியாது என்பதை ஷ்ரோடர், முண்டபெயரரிங் இருவரும் தெளிவாக்குவதோடு, தங்கள் கட்சி உறுப்பினர்களிடம் இருந்து கிளம்பும் விமர்சனத்தை ஏற்பதற்கு பதிலாக வலதுசாரிக் கட்சிகளிடம் அதிகாரத்தை ஒப்படைப்பதை அவர்கள் விரும்புகின்றனர் என்பதும் தெளிவாகிறது.

திங்களன்று கட்சி நிர்வாகக் குழு கூட்டத்தில் 23 உறுப்பினர்கள் முன்னாள் இளம் சோசலிஸ்ட் தலைவர் Andrea Nahles ஐ கட்சியின் புதிய பொதுச் செயலாளராக நியமித்ததைத் தொடர்ந்து முண்டபெயரிங் தன்னுடைய இராஜிநாமாவை அறிவித்துள்ளார். முண்டபெயரிங் விரும்பிய வேட்பாளரான Kajo Wasserhovel 14 வாக்குகளைத்தான் பெற்றார். இதன் பின் அவர் கூட்டத்தை கலைத்துவிட்டு, கட்சித் தலைமைக்குழுவை அழைத்து, திகைப்புற்றிருந்த நிர்வாகக் குழு உறுப்பினர்களிடம் இன்னும் இருவாரங்களில் வரவிருக்கும் கட்சி மாநாட்டில்கூட தான் இனித் தலைவராக செயலாற்றுவதாக இல்லை என்று கூறிவிட்டார்.

கட்சித் தலைவரின் அதிகாரபூர்வ ஒப்புதலைப் பெற்றிராத ஒருவர் கட்சியின் முக்கிய பதவிக்கான வேட்பாளருக்கான தேர்தலில் நிற்பது பொதுவான ஜனநாயக நடைமுறை வழக்கமாகும். ஆனால் சமூக ஜனநாயக கட்சியில் இந்த நிலைமை இல்லை.

இத்தேர்வு குறித்த தனது பிரதிபலிப்பை தன்னுடைய பதவியை இராஜிநாமா செய்வதன் மூலம் முண்டபெரியரிங் காட்டிக்கொண்டார்: செய்தி ஊடகமும் அவருடைய வேட்பாளருக்கு எதிராக வாக்களித்தவர்களை சீற்றத்துடன் தாக்கியது. "தங்களையே தீக்கிரையாக்கிக் கொள்ளும் செயல்", "தன்னை அழித்துக்கொள்ளும் உந்துதல்" என்று அவர்களுடைய செயல் விமர்சிக்கப்பட்டது; குழுவின் செயற்பாடுகள் "சதி மூலம் அகற்றுதல்" என்றும், "சமூக ஜனநாயக கட்சி தலைவருக்கு எதிரான எழுச்சி" என்றும், விவரிக்கப்பட்டன; இவையனைத்தும் நிர்வாகக் குழுவில் பெரும்பாலானவர்கள் கட்சித் தலைவருடைய கருத்தை ஒட்டி, ஓர் இரகசிய வாக்கெடுப்பில் வாக்களிக்காமல் போனதற்கு கூறப்படும் கருத்துக்கள் ஆகும்.

இதில் குறிப்பிடத்தக்கது என்னவெனில் Nahles ஒன்றும் முண்டபெரியரிங்கின் அரசியல் எதிர்பாளர் அல்ல என்பதாகும். இலக்கியத்தில் பட்டதாரியான 35 வயது நிரம்பிய இவர் இத்தனை காலமும் முண்டபெயரிங்குடைய ஆதரவைத்தான் பெற்றிருந்தார் என்றும் அவர் "பெரும் நம்பிக்கைத் தன்மை" கொண்டவர் என்றும்தான் கூறப்படுகிறது; Suddeutsche Zeitung செய்தித்தாளுக்குக் கொடுத்த சமீபத்திய பேட்டியில், இவ்வம்மையார் இதை எளிதில் ஒப்புக் கொண்டிருந்தார்.

கட்சியின் இடதுசாரியைச் சேர்ந்தவராக Nahles கருதப்படுகிறார். ஆனால் இந்த இடதுசாரி பிரிவு கட்சித் தலைமையின் முடிவுகள் அனைத்தையும் எத்தனையோ ஆண்டுகளாக ஆதரித்துத்தான் வந்திருக்கிறது; அது யூகோஸ்லேவியா, ஆப்கானிஸ்தானத்தின் இராணுவ ஆக்கிரமிப்பு, 2010 திட்டத்தில் இருந்த பொதுநல விரோத செயற்பட்டியல், இப்பொழுது பழைமைவாத கட்சிகளுக்கும் சமூக ஜனநாயக கட்சி க்கும் இருக்கும் பெரும் கூட்டணி என்று எந்த முடிவாக இருந்தாலும், ஆதரவு கொடுக்கப்பட்டுள்ளது.

"நாம் அனைவருமே பெரும் கூட்டணி வெற்றியடைய வேண்டும் என்றுதான் விரும்புகிறோம். தான் ஆதரிக்கும் அரசாங்கத்திற்கு எதிராக ஒரு கட்சி போராட்டத்தை நடத்தக் கூடாது" என்று Suddutsche Zeitung க்கு நிர்வாகக் குழு கூடுமுன் Nahles கூறியிருந்தார். உண்மையில் அவருடைய "இடது தன்மை" என்பது எப்பொழுதாவது, நயமான முறையில் வார்த்தை அளவில் விமர்சிப்பது என்று மட்டும்தான் இருந்தது.

சமூக ஜனநாயக கட்சிக்குள் இருக்கும் "Networkers" என்று அழைக்கப்படுகிறவர்களுடன் "இடதுகள்" ஒரு உடன்பாட்டைக் கொண்டுள்ளனர்: இதில் லோயர் சாக்சோனியின் முன்னாள் பிரதமமந்திரி Sigmar Gabriel ஐச் சூழ்ந்திருக்கும் இளைய அதிகாரிகள் உயர்பதவிகள் வேண்டும் என்ற கருத்துடையவர்கள் மொத்தமாக உள்ளனர். செய்தி ஊடகத் தகவல்களின்படி, "இடதுகள்" Networkers உறுப்பினர்களுடைய உடன்படிக்கையை கொண்டு Sigmar Gabriel சுற்றுச்சூழல் மந்திரி பதவிக்கு வருவதற்கு ஆதரவு தரவேண்டும் என்றும் இதற்கு ஈடாக அவருடைய ஆதரவாளர்கள் Nahles க்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறியதாகவும் தெரிகிறது.

Spiegel Online இல் அரசியல் ஆய்வாளரான Franz Walter, Networkers உறுப்பினர்களை பற்றிப் பின்வருமாறு விவரிக்கிறார்: "பாராளுமன்றத்திற்குள் சமூக ஜனநாயக கட்சி உட்பிரிவாக இருக்கும் இந்தக் குழு 1998ல் செயல்படத் தொடங்கி, ஒரு வளைந்து கொடுக்கும் சூழ்நிலை, உட்கட்சியின் பிரிவை கண்காணிக்கும் கட்டமைப்பு வேண்டும் என்பதற்காக நிறுவப்பட்டது. இதற்கு ஒரு பொது அரசியல் அரங்கு என்று கிடையாது; குறிப்பிட்ட திட்டத்திற்கு இவர்கள் கட்டுப்பட்டதும் கிடையாது; ஷ்ரோடருக்கு பின்னர் மூலோபாயத்தில் கடுமையாக எப்படி மாறுதல் வேண்டும் என்ற நிலைப்பாடும் கிடையாது.... இதற்குப் பொது அடிப்படையாக இளமையுடன் இருக்க வேண்டும், அரசியல் கட்டமைப்பினுள் உயர்பதவிகளை அடையவேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும்; சுருக்கமாகக் கூறினால், அரசியல் கட்டமைப்பினால் சாதகமான முறையில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்து இருந்தது. இந்தக் காரணத்தை ஒட்டி, ‘Networkers' பல ஆண்டுகளாக எந்தக் கொள்கை பிடிப்பும் இல்லாத சந்தர்ப்பவாதிகள் போல்தான் கருதப்பட்டுள்ளனர்."

பெரும்பாலான நிர்வாகக் குழு உறுப்பினர்கள் Nahles க்கு வாக்களித்த காரணம், (கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (CDU) தலைவர்), அதிபர் ஏஞ்சலா மெர்க்கலுடைய வால் போல்தான் கூட்டணியில் கட்சி இருப்பதாகக் கருதப்பட்டுவிட்டால், கட்சியின் அமைப்பில் சரிவு ஏற்பட்டுவிடும் என்று அவர்கள் அஞ்சியதுதான். முண்டபெயரிங் பொதுச் செயலாளர் பதவிக்காக நிறுத்தியிருந்த வேட்பாளரான Kajo Wasserhovel பொதுவாக அவருடைய வலதுகரம் போலக் கருதப்பட்டு, அரசியல் சார்பு அற்ற நபர் என்று ஒப்புமையில் கருதப்படுபவர் ஆவார். ஏற்கனவே துணை அதிபர் மற்றும் தொழிலாளர் மந்திரி என்று வரவிருக்கும் அரசாங்கத்தில் நியமனம் பெற்று முழுப் பணிகளை கொள்ள இருக்கும் கட்சித் தலைவர் கட்சியின் மீது கடுமையான கட்டுப்பாட்டை கொள்ள உதவுவதுதான் அவருடைய பணியாகும்.

கட்சி உறுப்பினர்களுக்கு தன்னுடைய இராஜிநாமாவை தெரிவித்து எழுதிய கடிதத்தில் முண்டபெயரிங் அறிவித்ததாவது: "இக்கட்சிக்கு தலைவராகவும், இந்த அரசாங்கத்திற்குத் துணை அதிபராகவும் இருக்க நான் விரும்பினேன்.... கட்சிக்குப் பணி புரிதலும், அதே நேரத்தில் ஆட்சியை நடத்துவதும் எப்பொழுதும் எளிதல்ல, அதிலும் குறிப்பாக ஒரு பெரும் கூட்டணியில்... எனவே, கட்சித் தலைமையில் உள்ள உயர்மட்டத்தினருக்கு ஒரு குறிப்பிட்ட வகையிலான பணி வேண்டும் என்று நான் விரும்பினேன்; இதைத்தவிர, பொதுச் செயலாளர் பதவிக்கு Kajo Wasserhovel உடைய பெரையும் முன்வைத்தேன்."

தன்னுடைய பங்கிற்கு Nahles ஓர் "அரசியல் பொதுச் செயலாளர்" தேவை என்பதை வலியுறுத்தினார்; இவர் கட்சிக்குள் பிளவுகள் ஏற்படாமல் அரசாங்கத்திற்கு உதவும் வகையில் செயல்படுவதுடன், "வருவிருக்கும் ஆண்டுகளில் சிந்தனைத் தொகுப்புக்களையும் கட்டமைக்க வேண்டும்", "2009ம் ஆண்டில் பெரும்பான்மை பெறும் வகையில் அமைப்பு முறையில் தயாரிப்புக்களையும் மேற்கொள்ளவேண்டும்" --2009 தான் அடுத்த கூட்டாட்சித் தேர்தல்கள் நடக்கவிருக்கும் ஆண்டு ஆகும். "வெறும் பேர்லினை மையமாகக் கொண்ட முன்னோக்குகள் மட்டும் இல்லாமல், கட்சி சாதாரண சமூகத்தின் அரங்கிற்கும் தன்னை தயாரித்துக் கொள்ள வேண்டும்." என்று அவர் குறிப்பிட்டார்.

"வேறுவிதமாகக் கூறினால், கட்சி அன்றாட அரசாங்கப் பணியில் இருந்து சற்று ஒதுங்கி இருக்க வேண்டும்; இன்னும் கூடுதலான உறுப்பினர்களும் வாக்காளர்களும், கட்சியை விட்டு நீங்குபவர்களும் Gregor Gysi, Oskar Lafontaine உடைய இடது கட்சிக்குச் செல்லாத வகையில் இருக்க வேண்டும் என்பதை Nehles வலியுறுத்தியுள்ளார். இத்தகைய வழிவகைக்கு அவருக்குக் கட்சியின் நிர்வாகக் குழுவிடம் இருந்து ஆதரவு கிடைத்துள்ளது; அங்கு சிலகாலமாக ஷ்ரோடர், முண்டபெயரிங் ஆகியோருடைய சர்வாதிகாரத் தலைமை முறையினால் பெரும் ஏமாற்றம் குவிந்துள்ளது. அதிலும் குறிப்பாக தேர்தல்கள் முன்கூட்டியே வரவேண்டும் என்ற ஷ்ரோடரின் முடிவு - எந்த எச்சரிக்கையும், ஆலோசனை பெறலும் இல்லாமல் எடுக்கப்பட்டது, பின்னர் அதிபர் தன்னுடைய கட்சி உறுப்பினர்களிடமே ஆதரவைக் கொண்டிருக்கவில்லை என்ற வாதம் நிலைமையை நியாயப்படுத்துவதற்கு முன்வைக்கப்பட்டு --- ஆகியவை அமைதியின்மை ஏற்படுத்த ஆதாரமாயின.

Spigel online உடைய தகவலின்படி, நிர்வாகக் குழுவில் ஷ்ரோடரின் பங்குதான் Nahles க்கு பெரும்பாலோர் ஆதரவு கொடுக்க வழிவகுத்தது. Wasserhovel க்கு ஆதரவாக ஷ்ரோடர் பேசியிருந்தார். "இது 'உபயோகமாக இல்லை' என்று கூடியிருந்தவர்களில் ஒருவர் பின்னர் தெரிவித்தார். "எப்படி கட்சி ஷ்ரோடரின் தலைமை தாங்கும் வகையினால் "மரத்துப் போய் இருந்தது" என்பதை நினைவுறுத்தும் வகையில்தான் இது இருந்து. மேலும் ஷ்ரோடரின் கீழ் ஏழு ஆண்டுகள் இருந்த பின் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் முயற்சியின் அடையாளமாக உறுப்பினர்கள் வாக்கை பயன்படுத்தினர்."

முண்டபெயரிங் ஆதரவு பெற்ற வேட்பாளருக்கு எதிரான எழுச்சி என்பது அவருடைய வலதுசாரி கொள்கைகளுக்கு எதிராகவோ, பெரும் கூட்டணிக்கு எதிராகவோ இலக்கை கொண்டிருக்கவில்லை; மாறாக அவருடைய சர்வாதிகார முறைத் தலைமைக்கு எதிராக இலக்கை கொண்டிருந்தது. இந்த முடிவு FAZ.net இல் கூறப்பட்டுள்ளது; அது எழுதியது: "திருமதி Nahles இற்கு கிடைத்த ஆதரவு அவருடைய தனிநபர் தன்மை அல்லது அரசியல் சார்பு காரணமாக இல்லை. இதற்குக் காரணம் முண்டபெயரிங்குடைய தலைமைதாங்கி நடத்தும் வழிவகை, பெருகிய முறையில் சர்வாதிகார போக்குடையதாக இருக்கிறது என்று கட்சித் தலைமைக்குள் ஒரு கருத்து ஏற்பட்டதுதான்; முண்டபெயரிங் எவரையும் கலந்து ஆலோசிப்பதில்லை, தன்னுடைய முடிவுகள் அனைத்தையும் ஒருதலைப்பட்சமாக தானே எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் காணப்பட்டன."

இப்படிப்பட்ட மிகக் குறைந்த வரம்பு உடைய எதிர்ப்பைக்கூட முண்டபெயரிங்கினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கட்சிக்குள்ளிருந்து மிகச் சிறிய விமர்சனத்தையும் அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை, முடியாது; கட்சி அமைப்பின் செயற்பாடுகள் பிரச்சினைகள் பற்றியும் இதே நிலைப்பாடுதான் அவருக்கு இருந்தது. இதற்குக் காரணம் பெரும் கூட்டணி தற்பொழுது தயாரித்து வரும் பொதுநல வெட்டுக்களும், சேமிப்புக்களும் அடங்கிய திட்டம்தான்.

முண்டபெயரிங் தன்னுடைய இராஜிநாமாவை அறிவித்ததும், வரவிருக்கும் வரவு செலவுத்திட்டத்தில் 35 மில்லியன் யூரோக்கள் பொதுநலச் செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என்று பெரும் கூட்டணியின் முக்கிய தலைவர்களுக்குடையே விவாதம் நடந்ததும் ஒரேதினத்தில்தான் என்பது ஒன்றும் ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல. பேச்சுக்களின் முடிவைப் பற்றி மெளனத் திரை ஒன்று உள்ளது.

சமூக ஜனநாயக கட்சியை ஆதரித்த வாக்காளர்கள் மற்றும் சாதாரண கட்சி உறுப்பினர்கள் இடையே இந்த வெட்டு தவிர்க்க முடியாமல் சீற்றத்தையும் எதிர்ப்பையும் தூண்டும்; அத்தகைய நிலைமையில் கட்சிக்குள் இருக்கும் எந்த வேறுபாடுகளும் மிகப் பெரிய பூசல்களாக விரைவில் வெடிக்கும். இதையொட்டி கட்சியை முண்டபெயரிங் சர்வாதிகார முறையைக் கொண்டு கட்டுப்பாட்டில் வைக்கேண்டும் என்ற வகையில் நடப்பது, அதன் அரசியலுக்கு பொது மக்களிடையே எதிர்ப்பு வரும்போது பெரும் கூட்டணி அதை அடக்குவதற்கு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தருவதற்கே என்று இருக்கிறது.

தன்னுடைய இராஜிநாமாவை முண்டபெயரிங் அறிவித்தமை கட்சிக்குள் அவரை குறைகூறுபவர்களை அமைதியாக்குவதில் முற்றிலும் வெற்றி பெற்றது. இராஜிநாமா செய்தி வந்தவுடனேயே, கட்சியில் இருக்கும் வலதுசாரியினர் Nahlesக்கு ஆதரவாக துணிவுடன் வாக்களித்த நிர்வாகக் குழு உறுப்பினர்களை கோபத்துடன் தாக்கினர். அவர்கள் தாக்கப் பேசியதில் சற்று நிதானமான சொற்றொடர்கள் "மகத்தான முட்டாள்தனம்", "புரிந்து கொள்ளமுடியாத செயல்", "பக்குவமற்ற செயல்" போன்றவையாகும்.

Nahlesக்கு ஆதரவு கொடுத்தவர்கள் தொலைக்காட்சி காமிராக்கள் முன்தோன்றி உறுதியளித்ததாவது: "நாங்கள் இந்த நிலையை விரும்பவில்லை." அதாவது முண்டபெயரிங் இராஜிநாமா செய்வார் என்று தெரிந்திருந்தால், அவர்கள் வேறுவிதமாக வாக்களித்திருப்பர் என்று அவர்கள் அறிவித்தனர்.

பொதுச் செயலாளர் வேட்பாளர் பதவியில் இருந்து, வரவிருக்கும் கட்சி மாநாட்டில் அறிவிப்பதாக Nahles தெரிவித்தார்; சுற்றுச்சூழல் மந்திரி Heidemaire Wieczorek-Zeul, Nahles இற்கான பிரச்சாரத்தில் முக்கியத் தலைவர் என்று கருதப்பட்டவர் தான் கட்சித் துணைத் தலைவர் என்ற பதவியில் இருந்து இராஜிநாமா செய்து, அப்பதவி Nahlesக்கு கொடுக்கப்படலாம் என்று அறிவித்தார்.

நவம்பர் 12-13 வார இறுதியில் கூடவிருக்கும் கட்சி மாநாடு முண்டபெயரிங்கிற்கு உரிய மரியாதை அளிக்கும் என்பது ஏற்கனவே தெளிவு: எவரும் ஒரு சொல்கூட குறைகூற மாட்டார்கள். முண்டபெயரிங் பதவியில் தொடர்ந்து இருக்க வலியுறுத்தும் பிரச்சாரம் ஒன்று ஏற்கனவே இணையதளத்தில் தொடங்கிவிட்டது.

தன்னுடைய "அனைத்து ஆற்றலையும்" பயன்படுத்தி கூட்டணிப் பேச்சு வார்த்தைகளை தொடர இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்; திட்டமிட்டபடி துணைத் தலைவர் பதவி மற்றும் தொழிலாளர் துறை மந்திரிப் பதவியையும் வகிக்க இருப்பதாகக் கூறியுள்ளார். தன்னுடைய ராஜிநாமாவை முண்டபெயரிங் திரும்பப் பெற்றுக் கொள்ளுவார் என்பது எதிர்பார்க்க முடியாது; கட்சித் தலைமைக்கான நபராக பிராண்டன்பேர்க் மாநிலத்தின் பிரதம மந்திரியாக Matthias Platzeck தேர்ந்தெடுக்கப் படலாம்.

கட்சி உறுப்பினர்களுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் முண்டபெயரிங் "சமூக ஜனநாயக கட்சித் தலைமை இளமைத் தன்மை பெறும் செயல், நான் எதிர்பார்த்ததைவிட முன்கூட்டியே நடைபெறுகிறது. இது வெற்றியடையை நான் உதவுவேன்." என எழுதினார்.

"இணைய உறுப்பினர்களில் முண்டபெயரிங்கின் கீழும் கூட்டணியின் கீழும் பணியாற்றுவதற்கு ஆர்வமும் விருப்பமும் உடையவர்கள் நிறைய பேர் உள்ளனர். "சமூக ஜனநாயக கட்சி, கட்சித் தலைமையின் இளமைத் தன்மை" என்பது விரைவில் டோனி பிளேரின் பிரிட்டிஷ் புதிய லேபர் (New Labour) வழிப்படி நவீனமயமாக்கப்படக்கூடும்.

சமூக ஜனநாயகக் கட்சி தற்போதைய நெருக்கடியை தீர்க்க முடிந்தாலும்கூட, முண்டபெயரிங்குடைய இராஜிநாமா பெரும் கூட்டணியின் பலவீனத்தைத்தான் காட்டுகிறது. அது முறையாக ஏற்படுத்தப்படுவதற்குள்ளேயே முறிந்துவிடும் அடையாளத்தைக் காட்டுகிறது. முண்டபெயரிங்கின் ராஜிநாமாவை அடுத்து ஊகங்கள் நிறைய இருந்தபோதிலும், பெரும் கூட்டணியின் மற்றொரு முக்கிய நபரான கிறிஸ்தவ சமூக யூனியன் (CSU) உடைய தலைவர் எட்மண்ட் ஸ்ரொய்பர் தானும் விலகுவதாக அறிவித்து தன் கட்சி வலுவாக உள்ள பவேரியாவிற்கு திரும்ப இருப்பதாகக் கூறியுள்ளார்.

பல வாரங்கள் பேர்லினின் ஒரு மந்திரி பதவியை ஏற்றுக்கொள்ளும் முன்தயக்கத்துடன் யோசித்துவந்த ஸ்ரொய்பர், செவ்வாய்க்கிழமை அன்று பவேரியப் பிரதம மந்திரியாக தொடர்வது என்ற முடிவில் தான் "உறுதியாக" இருப்பதாகக் கூறியுள்ளார். கிறிஸ்தவ சமூக யூனியனின் சக அங்கத்தவரான Michael Glos இவருக்குப் பதிலாக கூட்டாட்சி பொருளாதார மந்திரியாக வருவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முண்டபெயரிங் சமூக ஜனநாயக கட்சி தலைவர் பதவியை இராஜிநாமா செய்ததை சுட்டிக் காட்டி தன்னுடைய இராஜிநாமாவையும் ஸ்ரொய்பர் நியாயப்படுத்தியுள்ளார். சமூக ஜனநாயக கட்சியில் நிலைமை மாறிவிட்டது என்பதை இது காட்டியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். "பெரும் கூட்டணியில் அதிகாரம் நிறைந்த முக்கிய புள்ளியாக" முண்டபெயரிங் இருந்தார்; அவர் இல்லை என்றால் அரசாங்கத்தில் தான் நுழைவதற்கான அடிப்படையும் இல்லை என்று ஸ்ரொய்பர் கூறியுள்ளார்.

சமூக ஜனநாயகக் கட்சி இங்கு எதிர்கொண்டிருக்கும் முக்கிய நெருக்கடிகளை போலவேதான் பவேரியாவில் ஸ்ரொய்பர் முக்கிய நெருக்கடிகளை காண்கிறார் என்பதுதான் அவருடைய ராஜிநாமாவின் உண்மைக் காரணமாகும். அவருடைய கட்சி எப்பொழுதும் தேர்தல்களில் 50 - 60 சதவிகித வாக்குள் வெற்றி என்றுதான் பெற்று வந்தது; அதாவது தொழிலாளர்கள் அடுக்குகளின் பரந்த தட்டுக்களிடம் இருந்து இவர் ஆதரவைக் கொண்டிருந்தார் என்பது பொருளாகும்; இது வருவிருக்கும் பெரும் கூட்டணியின் கொள்கைகளினால் கடுமையான பாதிப்பிற்கு உட்படும்.

பேர்லின் அரசாங்கத்தில் சேருவதாக ஸ்ரொய்பர் முடிவெடுத்த சில நாட்களுக்குள், கிறிஸ்தவ சமூக யூனியனில் இவருக்கு அடுத்து பவேரியப் பிரதமர் பதவிக்கு கடுமையான போட்டி ஏற்பட்டுள்ளது; இதில் ஸ்ரொய்பரின் அமைச்சரவைத் தலைவர், புதிய தாராளக் கொள்கைக்கு வாதிடுபவர் என்று கருதப்படும் Erwin Huber, மற்றும் சமூகப் பொறுப்புக்கள் சிலவற்றைக் கொள்ளவேண்டும், அதேநேரத்தில் சர்வாதிகாரத்தனமான அரசாங்கமாகவும் இருக்க வேண்டும் என்று வாதிடும் மாநிலத்தின் உள்துறை மந்திரி Gunter Beckstein இருவரும் உள்ளனர். இந்தப் போராட்டம் ஸ்ரொய்பரே பவேரியாவிற்கு திரும்பிவந்துவிடுவதால் பிசுபிசுத்துவிட்டது.

அதிபராக நியமனம் பெற்றுள்ள ஏஞ்சலா மெர்க்கல் பற்றி ஸ்ரொய்பருக்கு உவகை இல்லை; ஏனெனில் அப்பெண்மணி இவர் ஒரு விரிவுபடுத்தப்பட்ட "உயர் அமைச்சரகம்" - பொருளாதாரம், தொழில்நுட்பம்" என்பதற்கு பொறுப்பாக இருக்கலாம் எனக் கொடுத்திருந்த உறுதிமொழியில் இருந்து பின்வாங்கிவிட்டார்.

See Also:

புதிய ஜேர்மன் பாராளுமன்றம் தன்னுடைய உண்மையான முகத்தை காட்டுகின்றது

ஜேர்மனியின் பாரிய கூட்டணியில் இருந்து என்ன எதிர்பார்க்கப்படலாம்?

ஜேர்மனி: அதிபர் மெர்க்கெலின் தலைமையில் பெரும் கூட்டணி
வாக்களர்களின் விருப்பத்திற்கு எதிராக ஓர் அரசாங்கம்

Top of page