World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

The Israeli state and the right-wing settler movement

இஸ்ரேலிய அரசும் அதிதீவிர வலதுசாரி
குடியேறியோர் இயக்கமும்

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4

By Jean Shaoul
18 August 2005

Use this version to print | Send this link by email | Email the author

1984 தேர்தல்கள் முடிவுகள், இஸ்ரேலிய அரசியல் வலதுசாரி பக்கம் திரும்புவதை கோடிட்டுக் காட்டின. வலதுசாரி அணி ஒட்டுமொத்தமாக தொழிற்கட்சியோடு ஒப்பிடும்போது வாக்குகளில் தனது பங்கை நிலைநாட்டி வந்தது என்றாலும், இதர வலது-சாரி கட்சிகளான டெசியா, மொராஷாவிடம் (Techiya, Morasha) லிக்குட் தொகுதிகளை இழந்துவிட்டது.

மத தீவிரவாதியான ராபி மையர் கானேயும், அவரது காக் கட்சியும் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. அவர்கள் இராணுவத்திலுள்ள பலர் உட்பட, இஸ்ரேலிய சமுதாயத்தின் மிகவும் ஏழைப் பிரிவுகளிலிருந்து வாக்குகளை கவர்ந்தனர். அவரது பட்டியலில் இரண்டாவதாக இடம்பெற்றவர் அரசியல் காடைத்தனத்தின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டவர். அதே நேரத்தில் மூன்றாவதாக, டாக்டர். பரூக் கோல்ட்ஸ்டெய்ன் 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஹெப்ரானில் உள்ள மசூதி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 29 ஆண்களையும் குழந்தைகளையும் சுட்டுக்கொன்றவர்.

லிக்குட் கட்சிக்கு முற்போக்கான ஒரு மாற்றீடாக தொழிற்கட்சி செயல்பட தவறியதால்தான் இஸ்ரேல் வலதுசாரி பக்கம் திரும்பியது என்று மட்டுமே சாதாரணமாக கூறிவிட முடியாது. வலதுசாரிகள் உடைந்து பிளவுபட்டு போனதன் விளைவாக லிக்குட் கட்சி ஆட்சி செய்ய இயலாத நிலை ஏற்பட்ட நேரத்தில் தொழிற்கட்சி அதை ஆபத்திலிருந்து காப்பாற்ற முன்வந்தது. தேசிய ஐக்கியத்திற்கான லிக்குட்- தொழிற்கட்சி அரசாங்கங்கள் 1984 இற்கும் 1992 இற்கும் இடையில் அமைக்கப்பட்டன.

சில தீவிர இடதுசாரி தொழிற்கட்சி அணியைச் சார்ந்த கட்சிகள் வலதுசாரி சக்திகளுடன் சேர்ந்துகொள்ள மறுத்து வந்தாலும், தொழிற்கட்சியை சேர்ந்த பெரும்பாலான குழுக்கள் பங்கெடுத்து கொண்டதுடன் ஆக்கிரமிக்கப்பட்ட எல்லைகளில் குடியிருப்புக்களை அமைக்கவும், மெல்ல மெல்ல அவற்றை இணைத்துக்கொள்ளவும் அனுமதி அளிக்க விருப்பம் தெரிவித்தன மற்றும் 1977 இற்கும் 1984 இற்கும் இடையில் கட்டப்பட்ட பல குடியிருப்புக்கள் சட்டபூர்வமான அங்கீகாரம் பெறுவதற்கு ஆக்கிரமிப்பு பகுதியின் குடியிருப்புகள் சேவை செய்தன, இதன் மூலம் அதிதீவிர தேசியவாத மற்றும் மதவாதக் கட்சிகளின் நடவடிக்கைகள் இடம்பெற்றன.

லிக்குட் கட்சிக்கு உள்ளே வெளியே இரண்டிலும் செயல்பட்டு வந்த வலதுசாரி அணி தொடர்ந்து வளர்ந்து வந்த அரசாங்கத்தையே மேலும் வலதுசாரி பக்கம் தள்ளியது. சியோனிச அரசியல் நிர்வாகம் பிளவுபட்டதால் அந்த பிளவிலிருந்து புதிய வலதுசாரி அணிகள் உருவாயின. அதில் Shas என்பது மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆபிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டு யூதர்களை நோக்கிய ஒரு மதவாத கட்சியாகும். ஆனால் ஒரே கொள்கையை கொண்டவைதான். ஓரளவிற்கு அந்தக் கட்சிகள் தங்களது வலைப்பின்னல் மூலம் ஏழைகளுக்கு நலன்புரி அரசு சலுகைகள் வேண்டும் என்று கோரி வந்ததுடன், மேலும் அவர்கள் தொழிற்கட்சி ஸ்தாபனத்தின் ஊழல்மிக்க செல்வந்ததட்டினரோடும் அவர்கள் சம்மந்தபட்டிராததாலும் இவ்வாறான கோரிக்கைகளை வைத்தன.

ஒரு பெரிய கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதற்கு தரவேண்டிய விலை என்னவென்றால், அது சிறிய வலதுசாரி அணி கட்சிகளை நம்பியிருக்கவேண்டும், மந்திரி சபையில் இடம் கொடுக்க வேண்டும், அரசியல் ஆதரவிற்காக வாய்ப்புக்களை வழங்கும் பதவிகளை பெறுவதற்கு ஒவ்வொரு கட்சியும் முயன்றன. கட்சிகளும், தலைவர்களும், உள்துறை மற்றும் வீட்டு வசதித்துறை அமைச்சகங்களை நாடி அவற்றை தங்களது சொந்த சமூக வாக்காளர் தொகுதிகளை கட்டியெழுப்ப பயன்படுத்திக்கொண்டனர்.

அரசாங்கத்தின் வலதுசாரி கொள்கையின் ஒவ்வொரு கணக்கீட்டை பின்தொடர்வதிலும் மற்றும் ஒரு பெரிய இஸ்ரேலை உருவாக்குவதிலும் ஒரு பேரழிவை உருவாக்கியது என்பது 1992 அளவில், இஸ்ரேலிய நிதியாதிக்க செல்வந்த தட்டினருக்கு தெளிவாகத் தெரிந்தது. இராணுவம் லெபனானில் சிக்கிக்கொண்டது. பொருளாதாரம் தேக்கநிலையை அடைந்தது. 1987 டிசம்பர் முதல் தங்களது அச்சமூட்டும் பொருளாதார மற்றும் சமூக நிலைகளுக்கு எதிராக பாலஸ்தீனிய தொழிலாளர்களும் இளைஞர்களும் கிளர்ச்சியில் இறங்கினர்.

மிகக்கொடூரமான பதிலடி நடவடிக்கைகளுக்கு பின்னரும், இராணுவம் அந்த எழுச்சியை ஒழித்துக்கட்ட முடியவில்லை. லெபனான் போரினால் ஏற்பட்ட செலவினங்கள் ஆக்கிரமிப்பு மற்றும் குடியிருப்புக்களுக்கான மானியங்கள், அரசின் பொருளாதார மற்றும் அரசியல் அடித்தளங்களையே அரித்துவிட்டது. இஸ்ரேல் ஒரு சுற்றிச்சூழப்பட்ட ஒரு அரசு என்ற நிலையினால், பிராந்திய பொருளாதாரத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டது, அதனால் ஒரு கூர்மையான பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி உருவாயிற்று. இஸ்ரேலின் முதலாளித்துவ வர்க்கம் பொருளாதாரத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நிலையிலிருந்து விடுபட்டு வந்தாக வேண்டும்.

1993 ஓஸ்லோ உடன்படிக்கைகள்

1992ல், இட்சாக் ராபின் தொழிற்கட்சி தலைவராக பதவிக்கு வந்தவுடன், ஓராண்டிற்குள் பாலஸ்தீனியர்களுடன் சமரசத்திற்கு வந்துவிடுவதாக ஒரு உறுதியளித்தார். இப்பொழுது சமாதானம் (Peace Now) உதவியோடு, தொழிற்கட்சி தன்னை ஒரு சமாதான கட்சியாக உருவாக்கிக்கொண்டது. இஸ்ரேலின் சொந்த தேசிய நலன்களின் முன்னோக்கிலிருந்து மோதலிற்கு மிகவும் அறிவுபூர்வமான தீர்வை அதேபோல பாலஸ்தீனியர்களுடன் ஒரு சமரச உடன்பாடு செய்துகொள்ள முடியும் என்பதை முன்னெடுத்து வைத்தது.

1993 ஓஸ்லோ உடன்படிக்கை இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் (PLO) இடையில் உருவானதானது, பாலஸ்தீனிய வெகுஜனங்களின் ஜனநாயக மற்றும் சமூக அபிலாசைகளை பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் முதலாளித்துவ தேசிய முன்னோக்கினால் பாதுகாக்கமுடியாது என்பதற்கான அடையாளச் சின்னமாகும். இது சோவியத் ஒன்றியம் பொறிந்த பின்னர், வளைகுடா போருக்கு பின்னர், அரபு ஆட்சிகள் வாஷிங்டனுடன் ஒட்டுமொத்தமாக சமரசம் செய்துகொண்ட பின்னர் ஒரு தனிமைபடுத்தப்பட்டுவிட்ட பாலஸ்தீனிய தலைமை மீது அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் திணிக்கப்பட்ட ஒரு உடன்படிக்காகும்.

அதற்கு பதிலாக பெருமளவில் உருக்குலைந்த நிலையில் தனியாட்சி உறுதிமொழி தரப்பட்டது மற்றும் இறுதியாக மேற்குக்கரை மற்றும் காசாவில் ஒரு சிறிய பாலஸ்தீனிய-அரசு உருவாவதற்கு வகை செய்யப்பட்டது. பாலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலை அங்கீகரிக்க சம்மதித்தது.

ஆனால் இஸ்ரேலும்கூட சமரசங்களை செய்துகொள்ள கட்டாயப்படுத்தப்பட்டது. இஸ்ரேலின் மிகவும் முன்னோக்குள்ள அரசியல்வாதிகள் கெடுபிடிப்போர் முடிவில் இஸ்ரேலின் நிலை பலவீனப்பட்டுவிட்டது என்பதை உணர்ந்துகொண்டதையும், ஒஸ்லோ சமிக்கை காட்டியது. 1991 வளைகுடா போர் எடுத்துக்காட்டியது போல் அமெரிக்கா இப்போது அந்தப் பிராந்தியத்தை கண்காணிப்பதற்கு இஸ்ரேல் தவிர எகிப்து மற்றும் வளைகுடா அரசுகள் போன்ற பல அரபு ஆட்சிகளை அமெரிக்கா தற்போது சார்ந்திருக்க முடியும். அத்துடன் பூகோளமயமாக்கப்பட்ட ஒரு பொருளாதாரத்தில் அது செழிப்படையவேண்டும் என்றால் இஸ்ரேலுக்கு மத்திய கிழக்கு சந்தைகள் கிடைத்தாக வேண்டும் மற்றும் இதற்கு விலையாக பாலஸ்தீனிய நிர்வாகம் உருவாவதற்கு சம்மதிக்க வேண்டும்.

ஆனால் இந்த அளவிற்கு தரப்பட்ட அரைகுறையான சலுகைகள் 1993 செப்டம்பரில் வெள்ளை மாளிகை தோட்டத்தில் சிறப்புமிக்க உடன்படிக்கையாக உருவாக்கப்பட்டது. இதில்கூட ''பெரிய இஸ்ரேல்'' எழுப்பப்பட்ட கொள்கையை கடைபிடித்து வந்த வலதுசாரி குடியேறியோர் இயக்கத்திற்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக அமைந்துவிட்டது.

சிதைந்துவிட்ட இஸ்ரேலின் அரசியல் அமைப்பிற்குள் இடம்பெற்றிருந்த, சிறிய அரசியல் கட்சிகள் தங்களது ஆட்சியை உருவாக்குபவர்கள் என்ற அந்தஸ்த்தை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு தங்களுடைய சமூக அடித்தளத்திற்கு வலுவூட்டுகின்ற பாரிய நிதிச்சலுகைகளை கறந்தெடுத்தனர். எனவே அவர்கள் ஒரு சமாதான உடன்படிக்கை கையெழுத்திடப்படுவதில் அக்கறை காட்டவில்லை. ஏற்கனவே இருந்த மலிவான கூலித் தொழிலாளர்களை தேடி மேற்குக்கரை ஜோர்டான் மற்றும் எகிப்திற்கு தொழிற்துறையை மாற்ற வேண்டிவந்ததால் குறிப்பாக, அவர்களது ஆதரவாளர்கள் பலர் பாரதூரமாக பாதிக்கப்பட்டனர்.

வலதுசாரி சியோனிஸ்ட்டுகள் எந்தக் குடியிருப்பையும் கைவிடுவது ஒரு சாபக்கேடு என்று கருதி வந்ததால் அவர்களை திருப்திபடுத்த வேண்டிய அவசியத்தின் காரணமாக உடன்பாட்டு பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து சீர்குலைக்கப்பட்டு வந்தன. பிரதானமாக அமெரிக்காவிலிருந்தும் ரஷ்யாவிலிருந்தும் புலம்பெயர்ந்தவர்களுக்காக முன்பு நடந்ததைவிட மிக வேகமாக மேற்குக்கரையிலும் காசா பகுதிகளிலும் யூதர்களுக்கான குடியிருப்புக்கள் கட்டப்பட்டன. சாலைகளின் முறை பாலஸ்தீனிய நகரத்தையும் கிராமங்களையும் பிரிக்கின்ற வகையில் அதே நேரத்தில் யூத குடியிருப்புக்களை இணைக்கின்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளன, அதன் மூலம் பாலஸ்தீனிய நாட்டிற்கு தொடர்ச்சியான எல்லை கிடைக்காமல் செய்யப்பட்டது. ஆனால் இதுவும்கூட போதுமானது என்று குடியேறியோர் கருதவில்லை.

இஸ்ரேல் முதலாளித்துவ வர்க்கத்திற்கு இஸ்ரேலின் கொள்கை மாற்றம் மிகவும் அவசியமானதாகும். ஆனால் அது அதிதீவிர வலதுசாரி சக்திகளிடையே ஒரு வெடித்துச் சிதறும் போக்கை உருவாக்கிற்று. அமெரிக்காவில் பிறந்த மதவெறியரும், காக் உறுப்பினருமான பரூச் கோல்டுஸ்டெய்ன்யினால் 1994 மார்ச்சில் ஹெப்ரானில் 29 பாலஸ்தீனியர்களை படுகொலை செய்தார். அவர்களது எதிர்ப்பின் குறிப்பிடத்தக்க முதல் வெளிப்பாடாகவே அது அமைந்துவிட்டது.

ஜெருசலத்தில் ஆவேசம் கொண்டதொரு ஆர்பாட்டக்காரர்கள் முன்னிலையில் 1995 அக்டோபரில் வலதுசாரி மதவாத தேசியவாதிகள் பிரதமர் ராபினை ஒரு துரோகி என்று கண்டித்தபோது எதிர்க்கட்சியான லிக்குட் கட்சி அமைதியாகயிருந்தது. அதற்கு ஒரு மாதத்திற்கு பின்னர், ஒரு இளம் மதவெறியர், யிகால் அமீரினால் ராபின் கொலை செய்யப்பட்டார். இஸ்ரேல் அரசு உருவாக்கப்பட்டதிலிருந்து ஒரு இஸ்ரேல் தலைவர் ஒரு யூதரால் முதல் தடவையாக கொல்லப்பட்டார், அது ஒரு அராபியர் செய்த கொலையல்ல.

இந்த படுகொலை அதன் அரசியல் நோக்கத்தில் வெற்றிபெற்றது. 1996ல் பென்ஜமின் நோட்டன்யாஹீவின் லிக்குட் அரசாங்கம் பதவிக்கு வந்தது மற்றும் சமாதான பேச்சுவார்த்தைகள் ஏறத்தாழ நிறுத்தப்பட்ட நிலையில் உள்ளது.

பெரும்பாலான இஸ்ரேலியர்கள் ஏதாவது ஒரு வகையில் அந்த மோதலுக்கு தீர்வு காண வேண்டும் என்பதில் அப்பொழுதும் ஆர்வம் கொண்டிருந்தனர் மற்றும் பாலஸ்தீனர்களுடன் ஒரு உடன்படிக்கைக்கு வரவேண்டும் என்று 1999ல் தொழிற் கட்சியின் ஏகுட் பராக் பிரதமராவதற்கு வாக்களித்தனர். தடுமாறிக் கொண்டிருந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு புத்துயிர்வூட்டுவதற்கு பாரக்கின் தொழிற்கட்சி கூட்டணி முயன்றது, ஆனால் தோல்வியடைந்தது. தங்களது அடிப்படை தேவைகளைக்கூட நிறைவேற்றுகின்ற அளவிற்கு பாலஸ்தீனியர்களுக்கு எந்த யோசனையும் தெரிவிக்கப்படாதது அந்தத் தோல்விக்கான காரணங்களில் ஒரு பகுதியாகும். ஆனால், அது தோல்வியடைந்ததற்கு இன்னொரு காரணம் பிரதமர் தருவதற்கு தயாராக இருந்த சலுகைகளைக்கூட முதல் தடவையாக தொழிற்கட்சி தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்ற வலதுசாரி அணியினரும் மதவாதக் கட்சிகளும் இரத்துச் செய்தனர். அப்படி இடம்பெற்றவர்களில் Shas உம் மற்றும் Yisrael B'Aliya, என்கிற ரஷ்ய புலம்பெயர்ந்தோர் கட்சியும் அடங்கும்.

ஜெரூசலத்திலுள்ள மலை ஆலயத்திற்கு 2000 செப்டம்பரில் ஷரோன் 100 இற்கு மேற்பட்ட பலத்த ஆயுதந்தாங்கிய பாதுகாப்பு படைகள் புடைசூழ விஜயம் செய்தது, திட்டவட்டமாக மேற்குக்கரையிலும் காசா பகுதியிலும் பாலஸ்தீனியர்களின் ஒரு வன்முறையை கிளறிவிட்டு ஒரு பாலஸ்தீனிய அரசு அமைவதற்கான எந்த சாத்தியக்கூறுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதை நோக்கமாகக் கொண்டது.

வாஷிங்டன் ஆதரவோடும், தாராள பணச் செலவினாலும், கடைபிடிக்கப்பட்டு வந்த சட்ட விரோத குடியிருப்பு கொள்கையின் பின்னணியில் எண்ணிறந்த மக்கள் செழிப்படைந்தனர். வளர்ச்சித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட அரசாங்க நிதி திருப்பிவிடப்பட்டு பலருக்கு செல்வத்தை உருவாக்கியது. மதவாதக் கட்சிகள் அரசாங்கத்திற்கு தந்த ஆதரவிற்கு பதிலாக கறந்தெடுக்கப்பட்டவை மட்டுமே பல ஏழை மக்களுக்கு வழங்கப்பட்ட வசதிகளாக அவர்களின் வாழ்விற்கு பயன்பட்டது. இறுதி ஆய்வில் இதைபார்க்கும்போது, பாலஸ்தீனியர்களை அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றிவிட்டு அங்கு கொண்டுவரப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு மதவாத ஆட்சியில் பாலஸ்தீனர்களின் நியாயமான அபிலாசைகள் எதற்கும் எந்த சலுகைகளையும் எதிர்பார்ப்பது இயலாத காரியமாகிவிட்டது.

2001ல் ஆட்சிக்கு வந்தது முதல், ஷரோன் ஒரு பாலஸ்தீன அரசு உருவாவதற்கான சாத்தியக்கூறு எதையும் தடுத்து நிறுத்துவதற்கு தனது அதிகாரத்திற்கு உட்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் முடிந்தவரை பயன்படுத்தி வந்தார். நீடித்துக்கொண்டிருந்த வன்முறையை அவர் பயன்படுத்திக்கொண்டார் ----- நான்கு ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட சாலைத் தடைகள், ஊரடங்கு உத்தரவுகள், வீடு இடிப்புக்கள், அரசியல் படுகொலைகள் மேற்குக்கரையிலும், காசா பகுதியிலும் நடத்தப்பட்ட இராணுவ ஆக்கிரமிப்பு ஆகியவற்றை அவர் தூண்டிவிட பெருமளவில் பணியாற்றி வந்தார்----- இவற்றை செய்தது சியோனிச ஆட்சியை விரிவுபடுத்துவதற்கான தனது திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்குத்தான். ''பயங்கரவாதத்தின் மீதான போர்'' என்ற பெயரால் அவர் ஏறத்தாழ ஒரு பயங்கர போரையே நடத்தி வந்தார். அதை அவரது பெரிய இஸ்ரேலை செயல்படுத்துகின்ற ஒரு கட்டமைப்பாக பார்த்தார்.

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக குறிப்பாக மேற்குக்கரையிலும், கிழக்கு ஜெரூசலத்திலும் குடியேறியோர் விரிவாக்கம் மிக வேகமாக நடந்து வருகிறது, அங்கு தற்போது 4,50,000 யூத இஸ்ரேலியர்கள் வாழ்ந்து வருகிறார்கள். ஷரோனின் குடியேற்றத் திட்டம் மிகப்பெருமளவிற்கு வெற்றி பெற்றது, அது ஒஸ்லோ ஒப்பந்தங்களின்கீழ் சாத்தியமான தீர்வாக வைக்கப்பட்ட கோரிக்கையான ''இரண்டு அரசை'' எவருமே இன்றைய தினம் நம்பவில்லை. மேற்குக்கரை நடுவில் வெட்டிக்கொண்டு சென்று பாலஸ்தீனிய மக்களின் விளை நிலங்களை நிரந்தரமாக இஸ்ரேலுடன் சேர்த்துக்கொள்ளும் வகையில் ஒரு தடுப்புச் சுவரை எழுப்ப வேண்டும் என்ற தொழிற்கட்சியின் கருத்தை அவர் தழுவிக் கொண்டார். இந்த நடவடிக்கைகள் அனைத்துமே புஷ் நிர்வாகத்தின் முழு ஆதரவோடு நிறைவேற்றப்பட்டன.

அதற்கு பதிலாக, ஷரோன் காசா பகுதி குடியிருப்புக்களையும் மேற்குக்கரையில் நான்கு சிறிய குடியிருப்புக்களையும் நீக்கிவிடும் ஒரு சிறிய சலுகையை தந்தார். அவரது நடவடிக்கை உண்மையான அரசியல் நோக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கைக்கு உதவுகின்ற ஒரு தந்திரோபாய பின்வாங்கலாகும். சமரசப் பேச்சுவார்த்தைகள் இல்லாமல் இஸ்ரேலுக்கு சாதகமான அடிப்படையில் எல்லைகளை நிர்ணயிப்பதற்கான அதிகாரத்தை அவருக்கு வழங்குகின்ற அடிப்படையில் அவரது அணுகுமுறை அமைந்ததாகும். அவரது நெருக்கமான நம்பிக்கைக்கு பாத்திரமான டோவ் வைஸ்கிளாஸ் (Dov Weisglass) அந்த உண்மையை உளறிவிட்டார். அப்போது, குடியிருப்புக்களை அப்புறப்படுத்துகின்ற திட்டம், ''உண்மையிலேயே நச்சுவாயுவாகும் என்று குறிப்பிட்டார். அது பாலஸ்தீனியர்களுடன் ஒரு அரசியல் நிகழ்ச்சிபோக்கை மேற்கொள்ளாமல் தேவைப்படுகின்ற அளவிற்கு நச்சுவாயுவை அந்தத் திட்டம் தருகிறது.'' என்று குறிப்பிட்டார்

ஷரோனே 2005 பிப்ரவரியில் ஷரம் அல் ஷேக்கில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் அதை தெளிவுபடுத்தினார். அது என்னவென்றால், ''குடியேற்ற நீக்கத்திட்டம் நேரடியாக சாலை வரைபடத்திட்டத்திற்கு மாறுவதாக அமையாது'' மற்றும் தனது திட்டம் ''பாலஸ்தீனியர்களுக்கு ஒரு மரண அடி கொடுப்பதாக அமைந்திருக்கிறது'' என்று குறிப்பிட்டார்.

மேற்குக்கரையில் திட்டுத்திட்டாக உள்ள ஒரு சில குடியேற்றக்காரர்களையும், காசாவில் விரோதப்போக்கு கொண்ட 1.3 மில்லியன் பாலஸ்தீனிய மக்களால் சூழப்பட்டுள்ள 8,000 குடியிருப்பவர்களையும் பாதுகாப்பதற்காக இனி மிகப்பெரும் அளவில் பணத்தை செலவிடுவதற்கு அவர் இனி தயாராக இல்லை. ஏனென்றால் அவர் வெள்ளை மாளிகையின் சம்மதத்தோடு மேற்குக்கரையின் பெரும்பகுதியை இணைத்துக்கொள்ள முடியும். அதன் மூலம் எந்த எதிர்கால உடன்படிக்கையின்படியும், எந்தக் குடியிருப்பையும் விட்டுத்தர வேண்டிய சாத்தியக்கூறையும் குறைத்துவிட முடியும். காசா பகுதியிலிருந்து 1700 வீடுகளில் இருப்பவர்களை வெளியேற்றுகின்ற நேரத்திலேயே அவரது அரசாங்கம் சாலைவரைபடத்தின் நிபந்தனைகளுக்கு புறம்பாக மேற்குக்கரையில் பல்லாயிரக்கணக்கான மக்களை குடியேற்றுவதற்கு மிகப்பெரும் அளவில் குறிப்பிடத்தக்க குடியிருப்புக்களை கட்ட அங்கீகாரம் அளித்துள்ளது. ஆனால் ''சாலைவரைபடத்தின்'' படி அப்பகுதியில் எல்லா கட்டுமான தேவைகளையும் நிறுத்திவிட வேண்டும்.

இந்த நடைமுறையில் ஷரோன் ''சமாதானத்தை உருவாக்குகின்ற'' ஒருவர் என்று அழைக்கப்படுகிறார் மற்றும் இடதுசாரி அணிகளில் அவரை முன்னர் எதிர்த்து வந்தவர்கள் மற்றும் இப்பொழுது அமைதி இயக்கத்தை சார்ந்தவர்களும் இப்போது அவருக்கு ஆதரவு தருகின்றனர். குடியிருப்புக்கள் வெளியேற்றத்தை எதிர்த்த கட்சிகள் மற்றும் மந்திரிசபை அமைச்சர்கள் பதவி நீக்கம் மற்றும் இராஜினாமாக்களுக்கு பின்னர் சென்ற ஆண்டு லிக்குட் கட்சி தலைமையிலான கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்துவிடாது தடுப்பதற்கு தொழிற்கட்சி ஆதரவு தந்தது. எல்லாக் கருத்துக்கணிப்புக்களும் 70 சதவீத இஸ்ரேல் மக்கள் நிரந்தரமாக வெளியேற்றத்தை ஆதரிக்கின்றனர் ஏனென்றால் நீண்டகாலமாக பாலஸ்தீனியர்களுடன் நடைபெற்று வருகின்ற மோதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற வகையில் சமாதானத்திற்கு நிலம் என்ற அடிப்படையில் ஒரு தீர்வுகாண வேண்டும் என்று கருதுகின்றனர்.

தீவிர வலதுசாரிகளை பொறுத்தவரை அவர்களுக்கு இந்த கண்ணோட்டம் எதுவும் கணக்கீட்டில் இல்லை. அவர்களும் தங்களது பழைய நண்பரை ''சமாதான விரும்பி'' என்றே பார்க்கின்றனர். எனவே அவர் சியோனிச நோக்கத்தை துரோகமிழைப்பவர் என்று கருதுகின்றனர். பாலஸ்தீனியர்களுக்கு எந்த சலுகைகளையும் தருவதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் அத்தகைய ஒரு பாசிச தட்டினர் வளர்வது அமெரிக்க ஆதரவோடு மேற்குக்கரையில் இஸ்ரேலின் பிடிப்பை உறுதி செய்துகொள்வதற்கு அதைவிட அதிகமான பரிசாக பதிலுக்கு கிடைத்தாலும் அதற்குக்கூட எதிர்ப்பு தெரிவிப்பவர்---- இஸ்ரேலுக்குள் மதவாத மற்றும் மதசார்பற்ற யூதர்களுக்கு இடையில் ஒரு உள்நாட்டு போரை உருவாக்குகின்ற ஆபத்தை உருவாக்கியுள்ளது. ஆக மீண்டும் ஒரு முறை ஒரு கற்பனையை அது அம்பலப்டுத்தியுள்ளது. அது என்னவென்றால், ஏற்கனவே அங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களை பாதிக்கின்ற வகையில் பாலஸ்தீனத்தில் ஒரு யூத அரசை உருவாக்குவது, யூதர்கள் அடக்கியொடுக்கப்படுவதற்கு ஒரு தீர்வாக அமையும் என்ற கட்டுக்கதை மீண்டும் ஒரு முறை அம்பலப்படுத்தப்பட்டிருக்கிறது.

சியோனிசத்தின் தேசியவாத கருத்தியலுக்கும், சியோனிச அரசு கருவிக்கும் ஆதரவு காட்டுவது, பாலஸ்தீனியர்களோடும், இஸ்ரேலின் பக்கத்து நாட்டு அரபு மக்களோடும் சமாதானத்தை நிலைநாட்டுவது முடியாத காரியம் என்பதோடு மட்டுமல்லாமல் யூதர்களுக்கு உள்ளேயே சமாதானம் உருவாவதற்கு சாத்தியமில்லை. மத்திய கிழக்கில் ஒரு ஐக்கிய சோசலிச அரசை உருவாக்கி, சோசலிச மற்றும் மதச்சார்பற்ற அடிப்படையில் அரபு மற்றும் யூதத் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதன் மூலம் மட்டுமே சமூக, பொருளாதார மற்றும் உண்மையான ஜனநாயக முன்னேற்றம் பாதுகாக்கப்பட முடியும்.

Top of page