World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Lively discussion at German Socialist Equality Party election meeting

ஜேர்மனி சோசலிச சமத்துவக் கட்சி தேர்தல் கூட்டத்தில் உயிர்த்துடிப்பான விவாதம்

By our reporters
10 September 2005

Use this version to print | Send this link by email | Email the author

செப்டம்பர் 3-ல், ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி - PSG பேர்லினில் அதன் பிரதான தேர்தல் கூட்டத்தை நடத்தியது. ஜேர்மனி முழுவதிலும் இருந்தும் மற்றும் பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்தும், பல தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கெடுத்துக்கொண்டனர்.

ஜேர்மனியின் ஆளும் செல்வந்தத்தட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கு எதிராக ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய மாற்றை முன்னெடுத்து வைப்பதற்காக செப்டம்பர் 18-ல் நடக்கும் தேசிய தேர்தல்களில் PSG தலையிடுகிறது. தற்போது சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சி கூட்டணி அரசாங்கத்திற்கு தலைமை தாங்கி நடத்திச் செல்லும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) அதிபர் ஹெகார்ட் ஷ்ரோடர் திட்டமிட்ட காலத்திற்கு ஓராண்டிற்கு முன்னரே வரும் செப்டம்பரில் (இந்த மாதம்) நடத்தப்படுவதற்கு அழைப்புவிடுத்தார். இந்த ஆண்டு ஆரம்பத்தில் முக்கிய மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் அவரது கட்சி படுமோசமாக தோல்வியடைந்ததை தொடர்ந்து புதிய தேர்தல்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார். பாரம்பரியமாக ஜேர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சியின் ஒரு கோட்டை என்று கருதப்பட்டு வந்த ஒரு மாநிலத்தில் ஆதரவில் சரிவு ஏற்பட்டதானது, அவரது சமூக வெட்டுக்கள் அடங்கிய கொள்கைக்கு பொதுமக்களது எதிர்ப்பின் அளவை தெளிவாக எடுத்துக்காட்டுவதாக அமைந்தது.

ஷ்ரோடர் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கான முடிவு ஜேர்மன் மக்களுக்கு ஒரு இறுதி எச்சரிக்கை விடுக்கும் வடிவத்தில் அமைந்திருந்தது - எனது அரசாங்கத்திற்கு அதன் ஆழமான மக்கள் வெறுக்கின்ற நலன்புரி அரசை சிதைக்கின்ற நடவடிக்கைகள் அனைத்திற்கும் மீண்டும் வாக்களிக்க வேண்டும் அல்லது ஜேர்மனியின் பழைமைவாத CDU (கிறிஸ்தவ ஜனநாயக ஐக்கியம்), CSU (கிறிஸ்தவ சமூக ஐக்கியம்) எதிர்கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். அவை அனைத்து பழைமைவாத SPD பசுமைக்கட்சி சட்டங்களையும் ஆதரித்தன, ஆனால் அதே நேரத்தில் அவை இன்னும் வேகமாக அமையவில்லை என்று கூறின.

PSG ஜேர்மனியின் 4 மாநிலங்களில் சாக்சோனி, பெர்லின், வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா மற்றும் ஹெஸ்சன் மாநிலங்களில் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ஜேர்மனியிலேயே மக்கள் தொகை அதிகமுள்ள தொழில்துறை மற்றும் அரசியல் நடவடிக்கையில் முக்கியமான பகுதிகள் அவை.

கூட்டம் PSG வேட்பாளர் எலிசபெத் சிம்மர்மேனால் தொடக்கி வைக்கப்பட்டது. அவர் வடக்கு ரைன் வெஸ்ட்பேலியாவில் போட்டியிடுகிறார். சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பசுமைக்கட்சி அரசாங்கத்தின் சாதனையை அதாவது வளர்ந்து வரும் இராணுவ வாதம் தொழிலாள வர்க்கம் கடந்த காலத்தில் பெற்றிருந்த வெற்றிகள் மீது இதுவரையில்லாத அளவிற்கு தாக்குதல்கள் தொடுப்பதாலும் பண்பிடப்படும் தன்மை கொண்டதாக அமைந்திருப்பதை எடுத்துரைத்தார்.

ஒரு சோசலிச திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டு PSG இந்தத் தேர்தல்களில் போட்டியிடுவதாக சிம்மர்மேன் வலியுறுத்திக் கூறினார். இந்தக் காரணத்தினால் PSG அண்மையில் அமைக்கப்பட்ட இடதுசாரி கட்சி மற்றும் அதன் தலைவர் ஒஸ்கார் லாபொன்டைனை கடுமையாக எதிர்க்கிறது. அவர் SPD-க்கு மற்றும் பழைமைவாத CDU-விற்கும் கூட நிர்பந்தம் கொடுத்து அவர்களது கொள்கைகளை மிதப்படுத்தி மற்றும் 1960களில் ஜேர்மன் அரசியலை பண்பிட்டுக் காட்டிய சமூக பொதுக் கருத்து அடிப்படையிலான பாணி அரசியலுக்கு திரும்ப முடியும் என்று கூறுகிறார்.

முதலாவது பேச்சாளரான பீட்டர் சுவார்ட்ஸ், PSG நிறைவேற்று குழுவில் ஒரு உறுப்பினரும் உலக சோசலிச வலைத்தள சர்வதேச ஆசிரியர் குழுவில் ஒரு உறுப்பினரும் ஆவார். அமெரிக்காவில் சூறாவளி ஏற்படுத்திய பேரழிவின் விளைவுகளை எடுத்துரைத்து தனது உரையை தொடக்கினார்.

அமெரிக்காவின் தெற்கு மாகாணங்களில் பல நூறாயிரம் மக்களை பாதித்துள்ள பேரழிவுச் சூழ்நிலையை அமெரிக்க அதிகாரிகள் எப்படி கருதுகிறார்கள் என்பது அமெரிக்க அரசாங்கம் ஏழைகள் மீதும் நலிவடைந்தோர் மீதும் கொண்டிருக்கின்ற கருத்தை தெளிவாக விளக்குவதாக அமைந்திருக்கிறது. இந்த பேரழிவிற்கான வேர்கள் முதலாவதாகவும் மிக முக்கியமாகவும் அரசியல் காரணங்களால் ஏற்பட்டதே தவிர இயற்கை விளைவுகளால் அல்ல. மிக விளக்கமான முறையில் அமெரிக்காவில் காட்டப்பட்டிருப்பது என்னவென்றால், முதலாளித்துவம் பொதுமக்களது மிக அடிப்படையான தேவைகளைக்கூட ஆளும் செல்வந்தத்தட்டின் இலாபநோக்கங்களுடன் இணக்குவித்து தீர்ப்பதற்கு முற்றிலும் செயல்திறன் அற்றதாகிவிட்டது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

சுவார்ட்ஸ் அதற்குப்பின்னர் வரவிருக்கின்ற ஜேர்மன் நாடாளுமன்ற தேர்தல்களின் பக்கம் கவனத்தை திருப்பினார். மற்றும் இந்தத் தேர்தலின் மைய நெருக்கடியை எடுத்துரைத்தார். பிரதான கட்சிகள் அனைத்தினாலும் ஒரே அரசியல் வழிதான் காட்டப்படுகின்றன, இந்த கொள்கைகள் நியூ ஒர்லியன்சை நோக்கி இட்டுச் செல்கின்றன. ஜேர்மனியின் அனைத்து முதலாளித்துவ கட்சிகளும் பொதுமக்களது அடிப்படை சமூகத் தேவைகளுக்கான எந்தப் பொறுப்பையும் நிராகத்து விட்டன.

உண்மையிலேயே, போலீசாருக்கும் இராணுவத்திற்கும் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டிருப்பது பொதுமக்களது கொந்தளிப்பை சமாளிப்பதற்கான ஒரு முன்னெச்சரிக்கையாகும். மக்களுக்கு உண்மையான மாற்று தேர்தல் வாய்ப்பு எதுவுமில்லை என்று சுவார்ட்ஸ் சொன்னார். ஆனால், மாறாக அதிபர் ஷ்ரோடரின் இறுதி எச்சரிக்கையுடன் மோத வேண்டியிருக்கிறது: ஆழமான மக்கள் வெறுப்பிற்கு இலக்கான SPD கொள்கைகளை நீடிக்க வேண்டுமா? அல்லது பழைமைவாத எதிர்க்கட்சியால் அமைக்கப்படும் ஒரு அரசாங்கத்தினால் மிகக்கடுமையான தாக்குதல்களுக்கு ஆளாக வேண்டுமா?

ஜேர்மனியின் அரசியல் சட்ட நீதிமன்றம் அண்மையில் இந்த இறுதி எச்சரிக்கையை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கும் வடிவத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கு ஒப்புதல் தந்திருப்பது ஆளும் ல்ெவந்தத்தட்டின் மிக அடிப்படையான நலன்களை பாதுகாப்பதற்கு பாரம்பரிய முதலாளித்துவ ஜனநாயக வடிவங்களை ஆளும் செல்வந்தத்தட்டினர் பலிகொடுப்பதை சுட்டிக்காட்டுகிறது. அது ஒரு சர்வதேச இயல்நிகழ்ச்சியான நாளுக்கு நாள் என்றுமில்லா வகையில் ஆழமாகிக் கொண்டுவரும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளில் தன்னையே காண்கிறது. ஜேர்மனியின் ஆளும் வர்க்கங்கள் ஆழமாகிக்கொண்டுவரும் சமுதாயப் பிளவு மற்றும் மக்களில் பரந்த தட்டினர் மத்தியில் இடதுசாரி பக்கம் நகர்வதற்கு பதிலளிக்கிற வகையில் ஆளும் வர்க்கங்கள் ஆழமாக வலதுசாரிப் பக்கம் கடுமையாக மாறிக்கொண்டு வருகின்றன.

SPD தொழிலாளர்களிடையே செல்வாக்கை இழந்து கொண்டு வருகின்ற சூழ்நிலையிலும், கடந்த காலத்தில் தொழிலாள வர்க்கம் வென்றெடுத்த வெற்றிகள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தவியலாது போய் விட்டதாலும் அது அரசியல் ஆட்சி அதிகாரத்தை வலதுசாரி அணியினர் கையில் ஒப்படைக்கத்தயாராக இருக்கிறது. இத்தகையதொரு அரசியல் நிகழ்ச்சிக்கு ஜேர்மனியில் நீண்ட பாரம்பரியம் உண்டு. வைமர் குடியரசு காலத்தில் SPD தான் அதிபர் புருன்னிங்கிடம் அரசியல் அதிகாரத்தை ஒப்படைத்தமை மற்றும் அதற்குப் பின்னர் ஹிட்லரின் சர்வாதிகாரத்திற்கு அடிபணிந்தது.

எனவே இன்றையதினம் தொழிலாள வர்க்கத்தின் முன்னுள்ள மிக அவசரமான பணி என்னவென்றால், அது தனது சொந்தக் கட்சியை அமைப்பதாகும். சமூக சீர்திருத்தவாதம் தோல்வியடைந்துவிட்டது. மற்றும் அது புதுப்பிக்கப்பட முடியாது. சமூக ஏற்றத்தாழ்வுகள் எல்லையற்ற வகையில் வளர்ந்துவிட்டன. மற்றும் முதலாளித்துவத்திற்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி மிகப்பெருமளவில் புதிய போர்களாக வடிவம் எடுத்திருக்கின்றன. இந்த நிகழ்ச்சிப்போக்கு ஒரு சிறிய செல்வந்தத்தட்டின் நலன்களை ஒட்டுமொத்த சமூகத்தின் தேவைகளுக்காக கீழ்ப்படுத்தும் ஒரு சர்வதேச சோசலிச திட்டத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களால் ஆன ஒரு தாக்குதல் மூலம் மட்டுமே தடுத்து நிறுத்தப்பட முடியும்.

அத்தகையதொரு இயக்கத்தின் வளர்ச்சியை ஒஸ்கார் லாபொன்டைனின் இடதுசாரிக்கட்சி ஒட்டுமொத்தமாக தள்ளுபடி செய்கிறது. அதற்கு மாறாக அது சமூக சீர்திருத்தவாதத்திற்கு புத்துயிர் கொடுக்க முயற்சிகளை மேற்கொள்கிறது, மற்றும் தொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற உண்மையான ஆபத்துக்களிலிருந்து அவர்களை வேண்டுமென்றே தவறாக வழிநடத்துகிறது.

பிரிட்டனிலுள்ள சோசலிச சமத்துவக் கட்சியின் மத்திய குழுவின் ஒரு உறுப்பினரும் WSWS சர்வதேச ஆசிரியர் குழுவின் ஒரு உறுப்பினருமான ஜீலி ஹைலண்ட் இந்த ஜூலை மாதம் லண்டனில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களை தொடர்ந்து எழுந்துள்ள அரசியல் நிலவரம் குறித்து பேசினார். ஈராக் போரில் பிரிட்டன் பங்கெடுத்துக்கொள்வதற்கு முன்னரேகூட, பாரியளவு நடைபெற்ற போர் எதிர்ப்பு கண்டன பேரணிகளில் பங்கெடுத்துக்கொண்டவர்கள், ஏற்கனவே அமெரிக்க போருக்கான பிளேயரின் ஆதரவு மத்திய கிழக்கில் பின்னர் சமநிலை குலைவை ஏற்படுத்தும் என்றும், பிரிட்டனில் பபயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்துவதற்கான ஆபத்துக்களை அதிகரிக்கச் செய்வதற்கு உதவும் என்றும் தெளிவுபடுத்தின. ஆனால் பிரிட்டனின் பிரதமர் டோனி பிளேயர் மிகுந்த இறுமாப்போடு அத்தகைய எச்சரிக்கைகளை புறக்கணித்தார். ஜனநாயகம் பற்றிய விளக்கம் அவரது என்னவென்றால், பரந்த பொதுமக்களது எதிர்ப்பை எதிர்கொள்கையில் என்ன விலை கொடுத்தாவது அரசாங்கம் தாக்குப்பிடித்து நிற்பதாகும் என்பது.

லண்டனில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல்களுக்கு பிளேயர் அரசாங்கத்தின் பதில் நடவடிக்கை என்னவென்றால் அச்சம் மற்றும் அதிர்ச்சி சூழ்நிலையை உருவாக்குவது, குண்டு வீச்சுக்களுக்கும் ஈராக் போருக்கும் ஒரு தொடர்பை ஏற்படுத்த முயலுகின்ற எவரும் பயங்கரவாதிகளுக்கு ஒத்துழைப்பவர்கள் மற்றும் உடந்தையாக செயல்படுபவர்கள் என்று கூறுவது மற்றும் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கைகளை எடுப்பது. பிரேசில் நாட்டை சேர்ந்த ஒரு தொழிலாளி ஜோன் சார்லஸ் டி மென்சிஸ் கொலை செய்யப்பட்டமை பற்றி ஹைலண்ட் சிறிது விளக்கமாக எடுத்துரைத்தார். அந்த நிகழ்ச்சி போலீஸ் கொலைக் குழுக்கள் தற்போது பிரிட்டனின் தெருக்களில் நடமாடிக் கொண்டிருப்பதை தெளிவுபடுத்துவதாகக் கூறினார்.

அதற்குப் பின்னர், ஒரு சுவையான விவாதம் நடைபெற்றது. சமூக நிலவரம், சர்வதேச உறவுகள் பற்றி குறிப்பாக கூட்டத்தில் கலந்துகொண்ட பல இளைஞர்கள் கேள்விகள் கேட்டனர். பிரிட்டனின் ஆளும் வர்க்கக் கொள்கைகள், டி மென்சிஸ் கொலை மற்றும் அமெரிக்காவிற்கு பிரிட்டனின் அரசாங்கம் கீழ்ப்படிந்து நடப்பது ஆகியவை குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டன.

பிரிட்டிஷ் முதலாளித்துவம் கடந்த 40 முதல் 50 ஆண்டுகளில் மகத்தானதொரு சரிவு நிலையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. அது தற்போது சுதந்திரமாக தனது நலன்களை தற்காத்து நிற்க இயலும் என்பதற்கான சாத்தியக்கூறு எதுவுமில்லை மற்றும் ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் தன்னை சமன்படுத்தும் நிலையை மேற்கொள்ள முயன்று வருகிறது என்று ஹைலண்ட் விளக்கினார்.

ஜேர்மனி ஒரே நாடாக திரும்ப ஒன்றுபட்டது மற்றும் ஜேர்மனியின் வளர்ந்து வருகின்ற செல்வாக்கு பிரிட்டனின் செல்வாக்கை கீழறுக்க துணைபுரிந்தது. எனவேதான் பிளேயர் ஐரோப்பிய ஒன்றியம் பலவீனமாக இருக்க வேண்டும் என்று முயலுகிறார் மற்றும் ஒரு நாட்டின் மீது இன்னொரு நாட்டை மோதவிட்டுக் கொண்டிருக்கிறார். பிளேயர் ஈராக் போரை, அதைத் தொடர்ந்து உலகம் மறு பங்கீடு செய்யப்படுவதை, போரில் கிடைத்த வெகுமதிகளில் தனக்கொரு பங்கை பிடுங்கிக்கொள்ளுவதற்கான வாய்ப்பு என்று பார்த்தார்.

சமூக ஏற்றதாழ்வுகளை எப்படி நீக்கவியலும் என்ற ஒரு கேள்விக்கு பதிலளித்தபோது தொழிலாள வர்க்கத்தின் வரலாறு முழுழுவதிலும் சமூக சமத்துவத்தை தனது நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வந்திருக்கிறது என்று சுட்டிக்காட்டப்பட்டது. இந்த வரலாறு ஆய்ந்தறியப்பட வேண்டும். அது எதிர்கால போராட்டங்களுக்கு முன்னேற்பாடு செய்யவும் மற்றும் ஒரு சோசலிச திட்டத்துடன் தலையீடு செய்வதை இயலக் கூடியதாக்கவும் அவசியமானதாகும்.

ஜேர்மன் மக்கள் எப்போதுமே போகின்ற போக்கில் அதே சமூக விரோதக் கொள்கைகளுக்கு எப்போதுமே ஏன் வாக்களித்துக் கொண்டிருக்கின்றனர்? என்ற கேள்விக்கு பதிலளித்த பீற்றர் சுவார்ட்ஸ் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அடிப்படையில் இதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று பதிலளித்தார். இந்த பிரச்சனை மக்களின் செயலிழந்தநிலை என்று அழைக்கப்படுவது அல்ல, மாறாக, ஸ்ராலினிசம் மற்றும் சமூக ஜனநாயகத்தின் தோல்விகளும் காட்டிக்கொடுப்புக்களும் ஆகும்.

பழைமைவாத அதிபர் ஹெல்முட் கோலை பதவியிலிருந்து நீக்குவதற்காக 1998-ல் ஒரு SPD பசுமைக்கட்சி அரசாங்கத்திற்கு பெரும்பாலோர் வாக்களித்தனர். 2002-ல் SPD பசுமைக் கூட்டணி மீண்டும் ஆட்சி அதிகாரத்திற்கு வருவதற்கு வாக்களிக்கப்பட்டதற்குக் காரணம் ஷ்ரோடர் பகிரங்கமாக ஈராக் போருக்கு எதிராக பேசியதாகும்.

தொழிலாள வர்க்கம் செயலிழந்து உள்ளது என்று நிலைநாட்டுவது சரியானதல்ல. உண்மையான பிரச்சினை தொழிலாளர்களுக்கு தங்களது வரலாற்று நலன்களை தற்காத்து நிற்பதற்கு, அடிப்படை பிரச்சினைகளை புரிந்துகொள்வதற்கு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நலன்களுக்காக அவற்றை விளக்கவும் ஆய்வு செய்யவும் ஒரு அரசியல் இயக்கம் இல்லை என்பதாகும். இன்றைய தினம் தொழிலாளர்கள் மகத்தான அனுபவங்களுக்கூடாக கடந்து வருகின்றனர். ஆனால் அவர்கள் ஆக்கபூர்வமாக தலையிட முடியாமல் இருப்பதை உணர்கின்றனர். ஏனென்றால், தங்களது நலன்களை முன்னெடுத்து வைக்கின்ற கணிசமான எந்த அமைப்பும் இல்லை என்பதை உணர்கின்றனர், இதில் தொழிற்சங்கங்களும் அடங்கும்.

அதற்கு ஒரு எடுத்துக்காட்டாக சுவார்ட்ஸ் அமெரிக்காவில் நோர்த் வெஸ்ட் ஏர்லைன்ஸ் ஊழியர்களின் வேலை நிறுத்தத்தைக் குறிப்பிட்டார். அங்கு ஊழியர்கள் பெரும் எடுப்பில் ஊதியங்கள் வெட்டப்படுவதையும், ஆட்குறைப்பு செய்யப்படுவதையும் எதிர்த்தனர். விமானப் பயணிகள் நிறுவனங்களில் செயல்பட்டுவந்த பிற எல்லா தொழிற்சங்கங்களுமே வேலை நிறுத்தம் செய்துகொண்டுள்ள தொழிலாளர்களின் முதுகில் குத்துவதற்கு பணியாற்றின மற்றும் கருங்காலிகளை ஏற்பாடு செய்தனர். தங்களது பூர்வீக தொழிற்சங்கத் தலைமை தங்களை ஆதரிக்க மறுத்து வருவதை மட்டுமின்றி நிர்வாகத்துடன் தீவிரமாகவும், பெரிய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தும் தொழிலாளர்களது எதிர்ப்பபை நசுக்குவதை நேரடியாக அனுபவித்தனர். ஒரு புதிய சுயாதீனமான சோசலிச தலைமை தொழிலாள வர்க்கத்திற்கு தேவை என்ற பிரச்சனை இதற்கு முன்னர் இருந்ததைவிட இப்போது தொழிலாளர்களுக்கு நேரடியாக எழுந்துள்ளது. எனவே ஜேர்மனியிலும் மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள உழைக்கும் மக்களுக்கு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளை தெளிவாக ஆய்வு செய்து வழங்குவதும், தொழிலாளர்களை தங்களது சொந்த சுதந்திரமான நிலைப்பாட்டை அபிவிருந்து செய்யக்கூடியவராய் ஆக்குவதும், ஒரு புரட்சிகர சோசலிச பதிலை தெளிவாகக் கூறுவதற்கு அவர்களை இயலச்செய்வதும் PSG-ன் தேர்தல் பிரச்சாரம் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் பணிகளது மையத்தானமாகும்.

தங்களை சோசலிஸ்ட்டுகள் என்று அழைத்துக்கொள்ளும் இதர கட்சிகளின் நிலைப்பாடுகள் மற்றும் PSG-ன் சுகாதார சேவைப் பிரச்சனைகள், ஓய்வூதியங்கள், நோயாளிள் பராமரிப்பு, உடல் ஊனமுற்றவர்களது பிரச்சனைகள் பற்றிய கேள்விகளும் எழுப்பப்பட்டன. குறிப்பாக, ஒரு தொழிலாளர்கள் அரசின் முன்னுரிமைகள் பற்றிய கேள்விகளும் எழுப்பப்பட்டன.

அந்தக் கேள்விகளுக்கு தரப்பட்ட பதில்கள் ஸ்ராலினிச அமைப்புக்களுக்கு எதிராக PSG நவீன உற்பத்தி மற்றும் பொருளாதாரத்தின் பூகோளத் தன்மையை அடிப்படையாக கொண்ட ஒரு சர்வதேசிய சோசலிச முன்னோக்கை தற்காத்து நிற்பதை வலியுறுத்தின. நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம் உற்பத்தித் திறன் மகத்தான அளவிற்கு வளர்ச்சியடைந்திருப்பது அடிப்படையிலேயே முற்போக்கானது. இந்த வெற்றிகளை, பொருளாதாரத்தின் பிரதானப் பகுதிகளை, பெரிய வங்கிகளை மற்றும் நிறுவனங்களை மிகப் பரவலான பெரும்பான்மை மக்களது ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதன் மூலம் தொழிலாளர் அரசாங்கத்தால் பயன்படுத்திக் கொள்ளப்பட வேண்டும். உயர்ந்த வருமானங்கள் மீது மற்றும் சொத்தின் மீது அதிக வரிகள் விதிக்கப்படும் மற்றும் சமூகத்தில் மிக முக்கியமான துறைகளான சுகாதாரம், கல்வி மற்றும் ஆசிரியர் பணிகளில் ஆயிரக்கணக்கான புதிய வேலை வாய்ப்புக்கள் நூறாயிரக்கணக்கில் உருவாக்கப்படும்.

Top of page