World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Lebanon and Kosovo: an instructive comparison

லெபனானும் கோசோவோவும் : ஒரு படிப்பினை கொள்ளத்தக்க ஒப்புமை

By Patrick Martin
7 August 2006

Use this version to print | Send this link by email | Email the author

பயங்கரவாத சக்திக்கு எதிராக நடந்துகொண்டிருக்கும் தனது போர் தனக்கு ஒரு முழு மக்கட்தொகையினரையும் வெளியேற்றுவதற்கு உரிமை அளிக்கிறது எனக் கூறும் மிகப் பரந்த, உயர்ந்த இராணுவ சக்தியை கொண்டுள்ள ஆட்சியின் கைகளில் நூற்றுக் கணக்கானவர்கள் மடிந்துள்ளதுடன், பலரும் தங்களின் சொந்த வீடுகளிலேயே படுகொலை செய்யப்பட்டுள்ளனர், பல நூறாயிரக்கணக்கான மக்கள் அச்சத்துடன் இதே நிலை தங்களுக்கு ஏற்படுமோ என்ற நிலையில் வெளியேறி ஓடிக் கொண்டிருக்கின்றனர். ஆட்சியின் பிரச்சாரத்தால் பெருந்திரளானோர் கூட்டங்கூட்டமாய் வெளியேறுதல் ஊக்கப்படுத்தப்படுகிறது; கொடுமைகளை விளம்பரப்படுத்தி மக்களை நெருக்கியடித்துக்கொண்டு ஓடவைக்கிறது. அதன் இறுதி இலக்கு: இனத்தூய்மைப்படுத்தல், மற்றும் உள்ளூர் மக்களுக்கு பதிலாக, ஆட்சியினரால் அணிதிரட்டப்படுபவர்கள் அவ்விடங்களில் குடியேற்றல் ஆகும்.

மார்ச்-ஏப்ரல் 1999ல் கொசோவோவில் இக்காட்சிதான் நிலவியது; அதுதான் 2006 ஜூலை-ஆகஸ்ட்டில் தெற்கு லெபனானில் இடம்பெறத் தொடங்கியிருக்கிறது. இதில் வேறுபாடு என்னவென்றால், முதல் நிகழ்வில் அமெரிக்க அரசாங்கம் இனத்தூய்மையை போருக்கான போலிக் காரணமாக பயன்படுத்தியது; இரண்டாவது நிகழ்வில் இனத்தூய்மை நடவடிக்கை ஒரு கூட்டு அமெரிக்க-இஸ்ரேலிய செயல்திட்டமாக இருக்கிறது.

கொசோவோவில் சேர்பிய ஜனாதிபதி ஸ்லோபோடன் மிலோசெவிக்கின் ஆட்சி அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு ஒரு தடையாக கருதப்பட்டது. அதை ஒட்டி கிளின்டன் நிர்வாகம் ஒரு NATO குண்டுவீச்சுத் தாக்குதலுக்கு ஏற்பாடு செய்தது; அதன் விளைவாக இறுதியில் சேர்பியா கொசோவாவில் இருந்து வெளியேறுமாறு கட்டாயப்படுத்தப்பட்டது; அதே நேரத்தில் அமெரிக்க செய்தி ஊடகம் மிலோசெவிக்கை பால்கன்களில் உள்ள ஹிட்லர் என்று அரக்கத்தனமாக சித்தரித்து கொசோவோ விடுதலை இராணுவத்தை (KLA) சுதந்திரத்திற்காக போராடுபவர்கள்" என்று பாராட்டியது. (KLA வின் உத்திகளில் சேர்பிய குடிமக்களை பதிலடியாக படுகொலை செய்தல், மாநில தலைநகரான பிரிஸ்டினாவில் உணவு விடுதிகள் மற்றும் பஸ் நிறுத்தங்களில் குண்டுகளை பதுக்கி வெடிக்க வைத்தல் ஆகியவையும் அடங்கியிருந்தன. அதன் நிதியூட்டங்கள் பெரும்பாலும் இரு ஆதாரங்களில் இருந்து, CIA உதவித் தொகைகள் மற்றும் போதைப் பொருள் கடத்தல்களிலிருந்து வந்தன.)

இன்று, புஷ் நிர்வாகம் இஸ்ரேலிய விஸ்தரிப்புவாதத்தை, மத்திய கிழக்கை உருமாற்றி அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பரந்த எண்ணெய் இருப்புக்கள்மீது கட்டுப்பாடு கொண்டு வரும் தன்னுடைய மூலோபாயத்தின் முக்கிய கூறுபாடாகக் கருதுகிறது. இதையொட்டி, அமெரிக்கா ஆக்கிரமிக்கும் சக்தியான தன்னுடைய நட்பு நாடான இஸ்ரேலுடன் இணைந்து நின்று செயலாற்றுகிறது; இத்தாக்குதலில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட போர்விமானங்கள் இஸ்ரேலிய விமானிகளால் செலுத்தப்பட்டு அமெரிக்காவினால் அளிக்கப்பட்டுள்ள குண்டுகள் லெபனான் மக்கள்மீது வீசப்படுகின்றன. இக்கொள்கையுடன் முழுவதுமாக இயைந்து செயலாற்றும் அமெரிக்கச் செய்தி ஊடகம், இஸ்ரேலிய தாக்குதல் கொடூரங்களை தற்காப்பு நடவடிக்கைகள் என்று மன்னிப்பதுடன், ஹெஸ்பொல்லாவின் கொரில்லா போராளிகளை "பயங்கரவாதிகள்" என்றும் அரக்கத்தனமாக சித்தரித்துக் காட்டுகிறது.

கொசோவோ போரில், அமெரிக்க செய்தி ஊடகம் இடையறாமல் கொசோவோ அகதிகள் மத்தியில் பெரும்கஷ்டங்கள்மீது குவிப்புக் காட்டி, இறப்பு எண்ணிக்கையையும் மிகைப்படுத்துகிறது. அமெரிக்க நேட்டா குண்டுவீச்சுக்களை நியாயப்படுத்தவும், சேர்பிய போராளிகள் 100,000 க்கும் மேற்பட்ட குடிமக்களை கொன்றதாக கூற்றுக்கள் இருந்தன. போர் முடிந்த பின்னர் கவனமான ஆய்வுகள், கொசோவோவின் இறப்பு எண்ணிக்கை மதிப்பீட்டை 6,000க்குக் குறைத்தன; அதில் 2,000 பேர்தான் அமெரிக்க நேட்டோ தாக்குதலுக்கு முன்னர் இறந்தவர்கள் ஆவர்.

கிட்டத்தட்ட 2,000க்கும் மேற்பட்ட லெபனியர்கள் ஏற்கனவே இஸ்ரேலின் மூன்றுவார இடைவிடாக் குண்டுவீச்சினால் மடிந்துள்ளனர் என்பது உறுதி. உத்தியோகபூர்வ லெபனிய அரசாங்க பட்டியல் 1,000 எனக் கூறினாலும், இதில் தெற்கு லெபனான் மற்றும் வெளி அமைப்புக்களால் அடையமுடியாத கிராமங்கள் சிறு நகரங்களில் கட்டிட இடிபாடுகளின்கீழ் புதையுண்டுள்ளவர்களின் எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை. ஆனால் அமெரிக்காவில் அதிகார வட்டங்களில் இதைப்பற்றி, லெபனானில் நிரபராதிகள் படுகொலை செய்யப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்றோ ஓல்மெர்ட் ஒரு கசாப்புக்கடைக்காரர் என்ற கண்டன ஓலமோ வரவில்லை; அதேபோல் இக்குற்றங்களுக்கு பெரிதும் உதவும் குண்டுகள், ஏவுகணைகள் ஆகியவற்றை அமெரிக்கா கொடுப்பதை நிறுத்த வேண்டும் என்ற கருத்தும் வெளிவரவில்லை.

கொசோவோ போரின்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஜனநாயகக் கட்சிக்காரரான பில் கிளின்டன் சேர்பியாவில் இருந்த மிலோசெவிக் ஆட்சியின் கொள்கைகளைப் பற்றி பலமுறையும் கண்டித்தார்; இவை அனைத்தையுமே அதிக மாற்றம் இல்லாமல் புவியியல் இடமாறுதலை கொண்டு இஸ்ரேலின் ஓல்மெர்ட் அரசாங்கத்திற்கும் சமமாகப் பொருத்திப் பார்க்க முடியும்.

முதல் அமெரிக்க நேட்டோ குண்டுவீச்சிற்கு உத்தரவிட்டபோது, கிளின்டன் ஒரு உரையில் வினவியதாவது: "இருபதாம் நூற்றாண்டின் கடைசி ஆண்டில், ஐரோப்பாவில் முழு மக்களும் தங்கள் வீடுகளை கைவிட்டு ஓட வேண்டும் அல்லது இறந்து விட வேண்டும் என்ற நிலையில் இருந்ததுபோன்ற நிலையில் இருக்கிறோமா அல்லது அவ்வகையிலான நடத்தைக்கு ஒரு விலையை விதிக்கப்போகிறோமா மற்றும் அதற்கு உதவ முயற்சிப்போமா?" "தாயகத்தை விட்டு நீங்க வேண்டும் அல்லது இறக்க வேண்டும்" என்ற நிலையில் தெற்கு லெபனிய மக்கள் தள்ளப்பட்டுள்ள நிலை துல்லியமாக உள்ள இங்கு இப்படிப்பட்ட கண்டனம் மத்திய கிழக்கிற்கு பொருந்தாது போலும்.

ஏப்ரல் 3, 1999ல் தன்னுடைய ஓவல் அலுவலகத்தில் இருந்து வானொலி உரையாற்றியபோது, கிளின்டன், மிலோசெவிக்கின் "மிகத் தெளிவான இலக்கு கொசோவோ நிலப்பரப்பை தக்க வைத்துக்கொண்டு அங்குள்ள மக்களை அகற்றுவதாகும்" என்று குறிப்பிட்டார். 12 நாட்களுக்கு பின்னர் பத்திரிகை ஆசிரியர்களின் அமெரிக்க சமூகத்தின் (American Society of Newspaper Editors) கூட்டத்தில் பேசுகையில், மிலோசெவிக் "கொசோவோ, மக்கள் வாழமுடியாத பயனற்ற நிலமாக மாறும் நிலை ஏற்ப்டாலும்கூட, தன்னுடைய ஆட்சிக்கு வரும் அனைத்து எதிர்ப்பையும் அழிப்பதற்கு உறுதிபூண்டுள்ளார்" என்று கூறினார். ஜூன் 11, 1999 அன்று கொசோவோவிற்கு நேட்டோ படைகள் அனுப்பப்படும் முன்னர் சேர்பியர்களுடைய நடவடிக்கையை "தங்கள் மண்ணில் இருந்து ஒரு மக்களை அகற்றும் முயற்சி, உயிருடனோ அல்லது உயிரற்ற நிலையிலோ அவர்களை அகற்றிவிடும் முயற்சிதான்" என்று விவரித்தார்.

இந்த அறிக்கைகளை அனைத்தும் அதே வேகத்துடன் அல்லது கூடுதலான வேகத்துடனும்கூட இஸ்ரேலிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கும் பொருந்தும். இஸ்ரேலிய போர்விமானங்கள் பல நூறாயிரக்கணக்கான துண்டுப் பிரசுரங்களை தெற்கு லெபனான் முழுவதும் வீசி அங்குள்ள மக்களை அனைவரும் வெளியேற வேண்டும் அல்லது ஹெஸ்பொல்லாவின் பகுதியினர் எனக் கருதப்பட்டு இலக்கு வைக்கப்படுவர் எனக் கூறியுள்ளது. சிறார்கள், முதியவர்கள், மனநோயினால் வாடுபவர்கள், நோயாளிகள், இயலாதவர்கள் அனைவருமே, தங்கள் வீடுகளை கைவிட்டு வடக்கில் லிட்டனி ஆற்றைக் கடந்து செல்லாவிட்டால், வான்வழித் தாக்குதல் மூலம் இறப்பை எதிர்நோக்க வேண்டும்.

ஒன்றன்பின் ஒன்றாகப் போர்க்குற்றங்களை அடுக்கிக் கொண்டு போகும் இஸ்ரேலியர்கள் இதன் பின் இவர்களுடைய கோரிக்கையை ஏற்று இடம் பெயர்ந்து செல்லும் லெபனிய அகதிகள் மீதும் குண்டுவீச்சுக்களை நடத்துகின்றனர்; மிலோசெவிக் கூட இத்தகைய முயற்சியில் ஈடுபடவில்லை. இதன்பின் பெரும்பாலும் ஷியைட் மக்கள் அதிகமாக உள்ள பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளிலும் சாதாரண மக்களை அச்சுறுத்தும் துண்டுப்பிரசுரங்கள் விமானங்களில் இருந்து வீசப்பட்டுள்ளன.

வேறுவிதமாகக் கூறினால், இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நோக்கம் தெற்கில் இருந்து அனைத்து மக்களும், அவர்கள் ஷியைட், சுன்னி அல்லது கிறிஸ்துவர்கள், மற்றும் பெய்ரூட்டின் ஷியைட் பிரிவினர் என்று, மொத்தத்தில் லெபனிய மக்களில் 50 சதவிகிதத்தினர் அகற்றப்பட வேண்டும் என்பதே ஆகும். இஸ்ரேல் (மற்றும் அமெரிக்கா) தவிர வேறு எந்த அரசாங்கமும் இப்படிப்பட்ட கோரிக்கையை முன்வைத்திருந்தால் அமெரிக்கச் செய்தி ஊடகம் சரியான முறையில் அது என்னவோ அதை நன்கு கூறியிருக்கும் : அதாவது இனத்தூய்மை நடவடிக்கை அரக்கத்தனமான அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று.

கொசோவோவிலும் லெபனானிலும் அமெரிக்க அரசாங்கம் மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தின் உயர்ந்த தரத்திற்காக பாடுபடுவதாகக் கூறியுள்ளது. இரண்டிலுமே அது ஒப்பீட்டளவில் பாதுகாப்பற்ற எதிராளிமீது தொழில்நுட்பத்தில் முன்னேறிய அரசினால் நடத்தப்படும் பெரும்குண்டுவீச்சு தாக்குதல்களை ஆதரித்துள்ளது; இந்நடவடிக்கைகள் வருந்தத்தக்கதாயினும் அவசியமானது என்றும் கூறியுள்ளது. இரண்டிலுமே, அமெரிக்க அரசாங்கம் போர்க்குற்றங்களுக்கு உடந்தையாக இருந்துள்ளது -- ஒன்றில் நேரடியாக அமெரிக்கப் படைகள் மற்றும் அமெரிக்காவின் நட்பு நாடுகளான NATO படைகளினால் சேர்பியாவிற்கு எதிராகவும், மற்றொன்றில் லெபனானுக்கு எதிராக அமெரிக்க குண்டுகள், ஏவுகணைகள், போர் விமானங்கள் ஆகியவை இஸ்ரேலாலும் பயன்படுத்தப்பட்டுள்ளன.

புஷ் நிர்வாகம் மற்றும் இஸ்ரேலுக்காக வக்காலத்து வாங்குபவர்கள் இப்படி லெபனான் மற்றும் கொசோவோவை ஒப்பிட்டுப் பேசுவதை ஐயத்திற்கு இடமின்றி நிராகரிப்பர். தெற்கு லெபனானில் இஸ்ரேலுக்கு நில வேட்கை கிடையாது என்றும் குடிபெயர்ந்துள்ள அரேபிய மக்கள் அவர்களுடைய வீடுகளுக்கு பூசல் முடிந்தவுடன் திரும்புவர் என்றும் அவர்கள் கூறுவர். இத்தகைய கூற்றைத்தான் 1999ல் மிலோசெவிக்கின் ஆட்சி கூறியது; ஆனால் அவற்றை நம்பிக்கைக்கு உகந்த பிரச்சாரம் அல்ல என்று அமெரிக்க அரசாங்கம் உதறித்தள்ளியது; மேலும் அது கூறும் கருத்துக்களை ஒட்டி இல்லாமல் முன்பு எவ்வாறு இனவழித் தூய்மை முறையில் சேர்பிய போராளிகள் பொஸ்னியாவிலும் குரோஷியாவிலும் நடந்து கொண்டது என்பது பற்றித்தான் முடிவெடுக்கப்பட வேண்டும் என்று கூறியது.

இஸ்ரேல் மீதும் இதே அளவுகோல் கையாளப்பட்டால், தெற்கு லெபனானில் குண்டுவீச்சு நடவடிக்கை மற்றும் குடிமக்கள் இடம் பெயர்தல் ஆகியவையும் ஆக்கிரமிப்பு, குடியேற்றம் இறுதியில் நிரந்தரமான நிலப்பறிப்பு ஆகியவைதான் வரும் என்ற முடிவிற்கு வரலாம்.

1948 ல் இருந்து ஒவ்வொரு இஸ்ரேலியப் போரிலும் இதே வடிவமைப்புதான் இருந்து வந்துள்ளது; இப்பொழுது லெபனிய அராபியர்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறுவதற்கு ஒப்பத்தான் அப்பொழுது பாலஸ்தீனிய அரபு மக்கள் கூட்டம் கூட்டமாக நசுக்கப்பட்டனர். 1948ல் சியோனிஸ்டுகள் இன்னும் கூடுதலான வகையில் "குறைந்த தொழில்நுட்ப" வகைகளைக் கையாண்டனர்: அதாவது டீர் யாசின் மற்ற அரபு கிராமங்களில் பிற்காலத்தில் பிரதம மந்திரிகளாக வந்த மெனாசெம் பெகின், யிட்சாக் சமீர் போன்றவர்கள் முகாம்களில் படுகொலைகளை நிகழ்த்தினர். இன்று அவர்கள் துல்லியமாக செல்லக்கூடிய கருவிகளைப் பயன்படுத்துகின்றனர், துண்டுப் பிரசுரங்களை விண்ணில் இருந்து தூவுகின்றனர்; ஆனால் மூலோபாயம் ஒன்றுதான்; சிலரைக் கொல், பலரையும் பீதியடையச் செய் என்பதே அது.

மேலும், அரபு நிலங்களை புதிதாகப் பிடிப்பதை நோக்கிய சியோனிச உந்துதலில் உறுதியான அரசியல் தர்க்க உந்துதலும் உள்ளது. 1948ல் இஸ்ரேல் தோற்றுவிக்கப்பட்ட காலத்திற்கு முன்பே, சியோனிச இயக்கத்தின் ஒரு முக்கிய பிரிவு இப்பொழுதுள்ள எல்லை இல்லாமல், லிட்டனி ஆறுதான் யூத நாட்டின் "இயற்கையான" வடக்கு எல்லை என்று கருதியது.

ஒரு பாதுகாப்புக் கண்ணோட்டத்தில், இப்பகுதியில் இருந்து அரபு மக்களை நிரந்தரமாக வெளியேற்றுவது, அதுவும் ஷியைட் முஸ்லிம்கள், ஹெஸ்பொல்லாவிற்கு ஆதரவாக இருப்பவர்களை வெளியேற்றுவது என்பது ஒன்றுதான் அவர்களைப் பொறுத்த வரையில் ஹெஸ்பொல்லா ராக்கெட்டுக்கள் ஹைபாவையோ அல்லது மற்ற இஸ்ரேலிய நகரங்கள்மீது தாக்குதல் நடக்காமல் இருப்பதற்கு உறுதியளிக்கும் என்று நம்பப்படுகிறது.

தெற்கு லெபனானில் எந்தப் புதிய இஸ்ரேலிய குடியிருப்பும் லெபனானுக்கு வடக்கில் இருக்கும் அரபு மக்கள் நிறைந்துள்ள இடங்களில் இருந்து ராக்கெட் தாக்குதலுக்கு உட்படும். இதுதான் சியோனிசத் திட்டம் 1948ல் இருந்து எதிர்கொண்டுள்ள சங்கடமான நிலையாகும். உள்ளூர் அரபு மக்களை வெளியேற்றியோ, தோற்கடித்தோ எந்தப் புதிய எல்லைகள் நிறுவப்பட்டாலும், இன்னும் விரிவாக எல்லைகள் ஆக்கப்பட்டாலும், 1948ல் இருந்து 1967 முதல் பின் இன்று வரை எப்படி நடந்தாலும், இன்னும் கூடுதலான மக்கள் இடம் பெயருகையில், நிலப்பறிப்பிற்கும் உட்படுகையில், சீற்றம் கொண்ட அகதிகள் இஸ்ரேல் அரசு நிலைத்திருப்பதற்கு ஒருபொழுதும் சமரசப்பட்டுப் போக மாட்டார்கள்.

Top of page