World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Blair, Murdoch and the oligarchy

பிளேயர், மேர்டோக் மற்றும் தன்னலச் சிறுகுழுவினர்

By Chris Marsden and Julie Hyland
2 August 2006

Use this version to print | Send this link by email | Email the author

மத்திய கிழக்கில் மற்றொரு அமெரிக்க ஆதரவுடைய போரின் பின் டொனி பிளேயர் மக்களுடைய கருத்துக்களை மீறி அணிவகுத்து நிற்கையில் பிரிட்டனின் பிரதம மந்திரி உண்மையிலேயே யாரைப் பிரதிபலிக்கிறார் என்று மில்லியன் கணக்கான மக்கள் கேட்கக் கூடும். இதற்கான விடை கடந்த வாரம் கிடைத்தது; இது அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ்ஷுடன் அவர் இணைந்து தோன்றியதால் மட்டும் அல்ல.

ஜூலை 28 அன்று வெள்ளை மாளிகை செய்தியாளர் கூட்டத்தில் பிளேயர் பேசியது லெபனான் நிகழ்வுகளில் ஒரு பெரும் முக்கியத்துவத்தை காட்டியது. ஆனால் அமெரிக்காவிற்கு இவர் பறந்து சென்றது என்பது பல மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டிருந்தது; அதையொட்டி அவர் ரூபர்ட் மேர்டோக்கின் செய்தி நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகளினதும், செய்தியாளர்களினதும் வருடாந்த கூட்டத்தில் உரையாற்ற கூடியதாக இருந்தது.

புஷ்ஷுடன் ஒற்றுமையை காட்ட வேண்டும் என்ற அரசியல் கட்டாயம் இருந்தாலும்கூட, பிளேயர் வெள்ளை மாளிகளையில் ஒரு சில மணி நேரங்கள்தான் இருந்தார்; பின்னர் அவர் ஐந்து நாட்கள் கலிபோர்னியாவிற்கு சென்று வணிக உலகில் பெரும் செல்வாக்கு படைத்தவர்களுடன் தொடர் கொண்டார்; இதில் மேர்டோக்கின் கூட்டம்தான் முக்கிய இடத்தைக் கொண்டிருந்தனர்.

News Corp. செய்தி நிறுவனம் பற்றிய தகவல்கள் பிளேயர்தான் அரங்கின் புதிய நட்சத்திரம் என்ற கருத்தைக் கொடுக்கும். இதற்குக் காரணம் செய்தி ஊடகப் பெருமகனாரின் தயவை நாடி ஏங்கிய மற்றவர்களுடைய நிலைமை பற்றி இரகசியமாக மறைக்கப்பட்டிருந்ததும் முக்கியமானதாகும்.

மேர்டோக் கூட்டியிருந்த முக்கிய அரசியல்வாதிகள் குழு உலக நிதிய தன்னலச் சிறுகுழு உலக விஷயங்களில் கொண்டிருக்கும் ஆதிக்கம் பற்றி ஓர் உட்பார்வையைக் கொடுத்தது. உண்மையில், U2 பாடகர் போனோவின் தன்னுடைய வறுமை மற்றும் எய்ட்சிற்கு எதிரான உரையின் தலைப்பு "The Power of one" என்பது இன்னும் கூடுதலான வகையில் கலிபோர்னியாவில் கூடியவர்கள் பற்றிய பொருத்தமான விளக்கம் ஆகும்.

பிளேயருடன் பிரத்தியேகமாக Pebble Beach கடற்கரையில் சேர்ந்து கொண்டவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் முன்னாள் ஜனாதிபதி பில் கிளின்டன், அவருடைய மனைவியும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகும் திறன் கொண்ட ஹில்லேரி, முன்னாள் அமெரிக்கத் துணை ஜனாதிபதி அல் கோர், தற்பொழுது 2008 குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கான போட்டியில் முன்னணியில் உள்ள செனட்டர் மக்கெயின் மற்றும் கலிபோர்னியாவின் ஆளுனர் ஆர்னால்ட் ஷ்வார்ட்ஷ்நேக்கர் ஆகியோர் ஆவர்.

இந்த நட்சத்திர வகை ஜனநாயக-குடியரசு வரிசையைத்தவிர, இஸ்ரேலிய துணைப் பிரதமர் ஷைமன் பெரெஸும் லெபனால் போரில் இருந்து சற்று கால அவகாசம் எடுத்துக் கொண்டு "இஸ்லாமும் மேற்கும்" என்ற தலைப்பில் ஓர் உரையையும் ஆற்றினார்.

ஆனால் மேர்டோக்கின் செய்தி ஊடகப் பேரசின் ஆதரவை நம்பியிருக்கும் அளவில்தான் பிளேயர் இக்கூட்டத்தில் இருந்து உயர்ந்து காணப்படுகிறார். "தற்கால உலகில் தலைமையிடம்" என்ற தன்னுடைய பேச்சை அவர் வாஷிங்டன் மற்றும் டெல் அவிவிற்குத் தன்னுடைய ஆதரவு பற்றி எழுந்துள்ள குறைகூறல்களுக்கும் விடை கொடுத்தார்.

ஆயினும்கூட, குழுமியிருந்தவர்கள் அனைத்தும் உலகின் மிகப் பெரும் ஏலம் விடுபவரின் பார்வையில் விழவேண்டும் என்ற ஆர்வம் கொண்டிருந்தது இந்த உண்மையினால் மாற்றப்பட்டுவிடவில்லை.

பிளேயர் பிரிட்டனில் இருந்து புறப்பட்டபோதே, அவர் பதவிக் காலம் முடிந்தவுடன் மேர்டோக் அவருக்கு தன்னுடைய News Corp இல் ஒரு பதவியைக் கொடுக்கக் கூடும் என்ற தகவல்கள் வெளிவந்தன. அப்படி நடந்தால், ஈராக்கில் அமெரிக்கத் தலைமைப் போரைத் தீவிரமாக ஆதரித்த ஸ்பெயினின் முன்னாள் பிரதமரான ஜோஸ் மரி அஸ்நார் என்னும் மற்றொரு தலைவருடன் அவர் இணைவார். தன்னுடைய பங்கிற்கு, நிகழ்ச்சியை நிறைவு செய்த பில் கிளின்டனும் மேர்டோக்குடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ளார். புதிய நிறுவனத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் காரி கின்ஸ்பெர்க் கிளின்டனின் வெள்ளை மாளிகையில் வழக்குரைஞராக இருந்தவர்; கடந்த மாதம் ஹில்லேரிக்காக நியூயோர்க்கில் மேர்டோக் நிதி திரட்டும் விருந்து ஒன்றை நடத்தினார்.

பிளேயர் வேலைக்கான அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் மேர்டோக்கின் பணியாளராகத்தான் உள்ளார்.

பெபிள் பீச் கூட்டத்தில், அதுவும் உலகம் முழுவதும் ஒரு பெரிய அரசியல் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கும்போது, அவர் தன்னுடைய நேரத்தைச் செலவிட்டதின் உட்குறிப்புக்களை காணுங்கள். பிரிட்டிஷ் மக்களுடைய அரசியல் பிரதிநிதி என்ற முறையில் தான் செயலாற்றுவதான பாசாங்குத்தனத்தை பிளேயர் சிறிதும் பொருட்படுத்துவதில்லை. அவருடைய கொள்கைகளை பொறுத்தவரையில், அது "அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது" என்று முத்திரையை கொண்டுள்ளதுடன் News Corp உடைய முழு உரிமையாகவும் உள்ளது.

மேர்டோக்கை தன்னுடைய மிக முக்கியமான மற்றும் மூலோபாயத்திற்கு ஆதரவு கொடுப்பவராக பிளேயர் கருதுகிறார்; Sun போன்ற வெளியீடுகளை கொண்டுள்ள ஒருவரை இவர் அரசியலில் பதவிகளை அளிக்கும் வள்ளலாகவும் நினைக்கிறார். இக்கருத்துத்தான் மேர்டோக்கினாலும் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

அண்மையில் அமெரிக்க பொதுத் தொலைபேசிக்கு கொடுத்த ஒரு மணி நேரப் பேட்டியில் பிளேயர் அரசாங்கத்தின் அரசியல் செயற்பாடுகளை இயக்கும் தன் திறமை பற்றி மேர்டோக் பெருமையுடன் பேசிக் கொண்டார். "இப்பொழுது நாங்கள் அவர்களுக்கு சற்று மோசமான நேரத்தை தருகிறோம். நாங்கள் அவருக்கு ஆதரவு கொடுத்தோம்; ஆனால் ஐரோப்பாவை பொறுத்த வரையில் கடுமையாக அவரை எதிர்த்தோம். அங்கிருந்து நகர்ந்துவிடுங்கள் என்று நாங்கள் கூறினோம். இறுதியில் எங்கள் வழிக்கு அவர் வந்துவிட்டார்." இவருடைய செய்தித்தாட்கள் அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றி, "பிரிட்டனில் சட்டம் ஒழுங்கு முறிந்துள்ளது, சட்டம் தவறாகத் திருத்தப்பட்டதின் விளைவாக அயோக்கியத்தனமும் சமூகப்பொறுப்பற்ற நடவடிக்கைகளும் விளைந்தது பற்றியும்" விளக்கியுள்ளன.

தன்னுடைய விசுவாசத்தை, பிளேயருக்கு பின் பிரதமராக இருக்கும் சான்ஸ்லர் கார்டன் பிரெளனுக்கு மாற்றிக் கொள்ளுவரா அல்லது கன்சர்வேடிவ்களுக்கு ஆதரவு கொடுப்பாரா என்று வினவப்பட்டதற்கு மேர்டக் விடையிறுத்தார்: "அடுத்த தேர்தல்களுக்கு முன்பு பிரெளனுக்கும் புதிய கன்சர்வேடிவ் தலைமைக்கும் இடையே போட்டியை கொண்டு அவர்கள் எப்படித் தேறுகிறார்கள் என்பதை பார்க்க விரும்புகிறேன்."

மேர்டோக்குடனான பிளேயரின் உறவு பெருவணிகத்துடன் அவர் கொண்டுள்ள தொடர்புகளில் உயர்ந்த தன்மையைக் கொண்டது ஆகும். இங்கு உடனடி தன்னலம் என்னும் பிரச்சினை உள்ளது. பிளேயர் பதவியை விட்டு விலகும்போது, அமெரிக்காவில் உரையாற்றும் வட்டத்தின் மூலம் அவர் மில்லியன் கணக்கில் சம்பாதிப்பார் என்று பல வர்ணனையாளர்களும் சுட்டிக் காட்டியுள்ளனர். இவரின் கூட்டத்தின் பார்வையாளர்கள் பெரும் செல்வம் கொழித்தவர்களான வலதுசாரிகளாக இருப்பர். கலிபோர்னியாவிற்கு இவர் வருகை புரிந்தது, ஓரளவிற்கேனும் அத்தகைய அரசாங்கப் பதவிக்கு பின் வரும் போக்கை துவங்குவதற்கு தக்க இணையத்தை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டது ஆகும்.

ஆனால் பிளேயர் மட்டும் அரசியலில் விற்பனைக்கு வந்துள்ளவர் அல்லர். Labour PLC உடைய பிரதிநிதியாகவும் அவர் கலிபோர்னியாவிற்குச் சென்றார்; அக்கட்சிதான் உலக நிதியாதிக்க தன்னலக்குழுவின் கருவியாக செயல்படுகிறது; அதன் உத்தரவின்பேரில்தான் பொதுச்செலவினங்களில் குறைப்புக்கள் நடத்தப்படுகின்றன; பெருவணிகத்தின் மீதான வரிகள் குறைக்கப்படுகின்றன: பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்படுகின்றன, மற்றும் ஆக்கிரோஷமான இராணுவவாத வெளியுறவுக் கொள்கைகள் நடத்தப்படுகின்றன.

கலிபோர்னியாவின் பிளேயரின் பரந்த பயணப் பாதை பலவற்றை வெளிப்படுத்துகிறது. பெப்பிள் பீச் கூட்டத்திற்கு முன் அவர் ஜனாதிபதி ரோனால்ட் ரேகனின் கீழ் அரச செயலராகவும், "வுல்கன்கள்" என்று அழைக்கப்பட்டு, புஷ், டிக் ஷென்னி, போல் வுல்போவிட்ஸ் ஆகிய நவீன பழைமைவாதிகளின் (neo-con) ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் இருந்த ஜோர்ஜ் ஷூல்ஸின் விருந்தினராக இருந்தார்; அவர் அமெரிக்க பொறியியல்துறை மாபெரும் நிறுவனமான பெக்டலின் நிர்வாகக் குழுவிலும் இருந்தார்; இந்நிறுவனம்தான் இப்பொழுது 2012 லண்டன் ஒலிம்பிக் விளையாட்டுக்கான கட்டுமானங்களை ஏலத்தில் எடுக்க உள்ளது.

இன்னும் ஏராளமான உயர் நிர்வாக அதிகாரிகளையும் பிளேயர் சந்தித்தார்; இவர்களில் Cisco Systems உடைய தலைமை நிர்வாகி ஜோன் சேம்பர்ஸும் அடங்குவார்; தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்நிறுவனம் அரசாங்க ஒப்பந்தங்களை பெற முயல்கிறது; அதில் புதிய உயிரியல் அடையாள அட்டைத் திட்டமும் (biometric identity card) அடங்கியுள்ளது.

News Corp. நிர்வாகிகளுக்கு பிரதம மந்திரி நிகழ்த்திய உரை இவருடைய வழக்கமான மிகைப்படுத்தப்பட்ட தன்மை மற்றும் மாபெரும் அளவில் அறநெறியை உபதேசித்ததுடன் அரசியலில் கவனத்தையும் கொண்டிருந்தது.

லெபனானில் ஏன் தான் உடனடியான போர் நிறுத்தத்தை எதிர்க்கிறேன் என்பதை விளக்கிய முறையில் அவர், "இந்த மோதல்களுக்கு அடிப்படைக் காரணங்களுடன் போரிடுவது தவிர்க்கமுடியாதது" என்று கூறினார்; இதன் வேர்கள் "இன்னும் அடிப்படையான முறையில் ஒரு கூடுதலான போராட்டத்தில் உள்ளன : அதாவது நவீன உலகத்தை தழுவ வேண்டும் என்று நினைப்பவர்கள், அதை எதிர்ப்பவர்கள் இடையில் என்று." எனக் கூறிப்பிட்டார்.

இதை இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கும் மேலை ஜனநாயக பெறுமதிகளுக்கும் இடையேயான ஒரு போராட்டம் என்று பிளேயர் வர்ணித்தார்; ஆனால் அவரைப் பொறுத்தவரையில், "நவீன உலகம்" என்பது மத்திய கிழக்கின் எண்ணெய் இருப்புக்களை கொள்ளையடிக்கும் உலகப் பெரு நிறுவனங்களின் உரிமை என்பதே சரியான பொருளாகும்.

உலகந்தழுவிய முறையின் கட்டளைகளை உணர்ந்துகொள்கையில் முன்னேற்றமடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளின் கொள்கைகளையும் கட்டளையிட வேண்டும் என்பதை உணரப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இடது வலது என்ற மரபார்ந்த பிரிவிற்கு இனி எந்த முக்கியத்துவமும் இல்லை என்பதை பல முறையும் பிளேயர் கூறினார். அரசியலில் உள்ள அடிப்படையான பிழையான கோடு என்பது "மூடப்பட்ட அல்லது திறந்துள்ள முறைகளுக்கு" இடையே உள்ள வேறுபாடுதான் என்றார்.

"உலகந்தழுவிய முறைக்கு விடையிறுப்பு தடையற்ற வணிகம், திறந்த சந்தைகள், போட்டியின் அடிப்படையில் முதலீடு; கல்வி, அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றின் மூலமும் அமையலாம். அல்லது அது பாதுகாப்பு முறையில் காப்புவரிகள், கடுமையான வகையில் தொழிலாளர் சந்தை கட்டுப்பாடு, வெளிநாட்டு முதலீட்டின் ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு என்ற முறையிலும் வரலாம்." என்று பிளேயர் கூறினார். "மரபார்ந்த வகையில் ஐரோப்பியப் சமூகநல அரசாங்கமும் அதன் சமூக முன்மாதிரியும் இப்பொழுது தற்போதைய போட்டி நிறைந்த உலகச் சந்தையின் சவால்களை எதிர்கொள்ள திறனற்றுப் போய்விட்டது", "மரபார்ந்த குடியுரிமை சுதந்திரங்கள் பற்றிய வாதங்கள் தவறு என்றில்லை, ஆனால் அவை வேறு ஒரு காலத்திற்கு பொருந்துபவையாக போய்விட்டன" என்றும் அவர் தெரிவித்தார்.

"1999ம் ஆண்டு என்னுடைய கட்சி மாநாட்டில் "பழைமைவாதிகளின் சக்திகள்" பற்றி நான் ஆற்றிய உரைதான் பெரும் தவறான புரிந்து கொள்ளுதலுக்கு உட்பட்டது" என்று அவர் தொடர்ந்தார். "இது பழைமைவாதிகளின் மீதான தாக்குதல் என்று எடுத்துக் கொள்ளப்பட்டது. உண்மையில் இது பழைமைவாதத்தில் (conservatism) உள்ள சிறிய 'c' எழுத்து பற்றியது, மாறுதலுக்கு (change) காட்டும் எதிர்ப்பு பற்றியது; இது வலதிற்கும் இடதிற்கும் சமமாகவே பொருந்தும்."

இஸ்லாமிய பயங்கரவாதத்தை சமூகநல அரசாங்கத்தை தகர்ப்பது, ஜனநாயக உரிமைகளைக் காக்க வேண்டும் என்ற அக்கறை காட்டுபவர்கள் ஆகியோரை ஒன்றாகப் பார்க்க வேண்டும் எனக் கூறுவது இரத்தத்தை உறைய வைப்பது போலாயிற்று.

அவருடைய உரைக்கு முன்னால், அமெரிக்க, பிரிட்டிஷ் ஆதரவுடன் இஸ்ரேலிய இயந்திர துப்பாக்கிகள் கானாவை "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பெயரில் இடிபாடுகளாக மாற்றிக் கொண்டிருந்தது என்பது மறக்கப்பட வேண்டாம். பல வாரங்காள பிளேயர் போர் நிறுத்தத்திற்கான அனைத்து அழைப்புக்களையும் எதிர்த்து லெபனிய மக்கள் கொண்டுள்ள பெரும் துன்பங்கள் பற்றிய தன்னுடைய உயர்ந்த அசட்டதைத்தன்மையைத்தான் வெளிப்படுத்தியுள்ளார். இப்பொழுதும் அவர் அவ்வாறே தொடர்ந்து செய்கிறார்; மேர்டோக், புஷ் இருவரிடம் இருந்தும் பெரும் பாராட்டுக்கள் இதன் மூலம் கிடைக்கும் என்பதையும் அவர் நன்கு அறிவார்.

ஆனால் லெபனான் பற்றிய பிளேயரின் அணுகுமுறை உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் வர்க்கத்தின் ஜனநாயக, சமூக விழைவுகளுக்கு காட்டப்படும் இகழ்வு என்ற அரசியல் செயற்திட்டத்தின் இழிந்த கூறுபாடுகளில் அடித்தளமாகவும், தன்னலச் சிறுகுழுவின் நலன்களில் எதுவும் குறுக்கிடக்கூடாது என்ற உறுதிப்பாட்டையும்தான் இது காட்டுகிறது. இந்த அணுகுமுறைதான் பிளேயருக்கு மேர்டோக்கின் நாற்காலியில் பாசமான இடத்தைக் கொடுத்துள்ளது.

Top of page