World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Court penalises Opel worker

ஜேர்மனி: ஓப்பல் தொழிலாளரை நீதிமன்றம் தண்டித்தது

By Ulrich Rippert
28 December 2005

Back to screen version

டிசம்பர் 19ல் ஹாம்மிலுள்ள தொழில் நீதிமன்றம் (வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா) ஓப்பல் தொழிலாளி ரிச்சார்ட் காசரோவ்ஸ்கிக்கு எதிராக ஒரு தீர்ப்பை வழங்கியது. அது முக்கியமான நீதிமன்ற நடைமுறை எதையும் ஏளனம் செய்வதாக அமைந்திருக்கிறது. நீதிமன்றம் நிபந்தனை எதுவுமில்லாமல் Adam Opel AG கார் நிறுவனத்திற்கு சார்பாக தீர்ப்பளித்துள்ளது. 2004 அக்டோபரில் வாரம் முழுவதும் நடைபெற்ற வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்துக் கொண்ட அனைவருக்கும் ஒரு முன் உதாரணமாக அந்த நிர்வாகம் சென்ற ஆண்டு காசரோவ்ஸ்கியை திடீரென்று பதவி நீக்கம் செய்தது.

நீதிபதிகள் குழுவின் தலைவரான ஹெல்முட் ரிக்ரர் அறிவித்த தீர்ப்பு மிகவும் அடிப்படை சட்ட நெறிமுறைகளையும், காசரோஸ்விகியும், அவரது வழக்கறிஞர் டாக்டர் குரோட்டயும் நீதிமன்றத்திற்கு எடுத்த வைத்த விவரமான வாதங்களை புறக்கணிப்பதாக அமைந்திருக்கிறது. நீதிமன்ற முடிவின் பொருள் என்னவென்றால், நிறுவனம் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் ஆட்குறைப்பு செய்யலாம் மற்றும் எந்தவிதமான இடையூறும் இல்லாமல் ஒட்டு மொத்தமாக வேலையில் இருந்து நீக்கலாம் மற்றும் தொழிலாளர்களுக்கு அதை எதிர்ப்பதற்கு எந்த உரிமையும் இல்லை என்பதாகும்.

இந்த நீதிமன்ற வழக்கில் அடிக்கடி கூறப்பட்டு வரும் நீதித்துறை சுதந்திர செயல்பாட்டிற்கான எந்த அடையாளமும் இல்லை. நீதிபதி ரிக்ரருடன் அமர்ந்திருந்த இரண்டு கெளரவ மதிப்பீட்டாளர்களில் ஒருவரான றெய்னர் விற் ஒரு ''சிறிய தொழிற்சாலை அல்லாதவற்றின்'' ஒரு தலைமை அலுவலகர் என்று அறிமுகப்படுத்தப்பட்டார் இரண்டாவதாக ஹூசைன் கோக்மென் ஒரு கெளரவ மதிப்பீட்டாளராக முதலாவதாக நீதிமன்ற விசாரணையில் கலந்துகொண்டார். இவர் வழக்கு ஆரம்பிப்பதற்கு முன் அவர் பதவியேற்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டு விசாரணை நிகழ்வின்போது எதுவும் தெரிவிக்கவில்லை.

சாட்சிகள் குறுக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் நீதிபதிகளின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதன் சட்டப்பூர்வமான தன்மை குறித்து தனக்கோ அல்லது மதிப்பீட்டாளர்களுக்கோ எந்த விதமான சந்தேகமும் இல்லை என்று வலியுறுத்திக் கூறினார். இழப்பீடு எதுவுமில்லாமல் ஒரு சமரச உடன்படிக்கையை ஏற்றுக் கொள்ளுமாறு ரிச்சார்ட் காசரோவ்ஸ்கிக்கு அவர் பாரிய அழுத்தங்களை கொடுத்தார். பலமுறை காசரோஸ்கியின் வழக்கை முழுமையாக புறக்கணிக்கப்போவதாகவும் அவர் திடீரென பதவி நீக்கப்பட்டதற்கு ஒப்புதல் அளிக்கப்போவதாகவும் அச்சுறுத்தினார். இப்படிச் செய்வதன் மூலம் ஓப்பல் தொழிலாளி தனது சொந்த வக்கீலுக்கான கட்டணத்தை மட்டுமல்ல எதிர்த்தரப்பு நீதிமன்ற செலவினத்தையும் ஏற்றுக் கொள்ள வேண்டிவரும்.

அத்தகையதொரு சமரச உடன்பாட்டை காசரோஸ்கி ஏற்றுக் கொண்டால் தான், அவர் திடீரென பதவியிலிருந்து நீக்கப்பட்டது திரும்பப் பெறப்பட்டு நிறுவனத்தின் ''நிலைமை காரணமாக'' தேவைக்கு மேற்பட்டவர் என்று அறிவிக்கும் நிலை உருவாகும்.

இந்த நீதிமன்ற முடிவு அண்மையில் பல ஜேர்மன் நிறுவனங்கள் அறிவித்துள்ள ஒட்டுமொத்த வேலைநீக்க திட்டங்களுடன் தொடர்புப்படுத்தி பார்க்கவேண்டியதுடன், பல தொழிற்சாலைகளில் அந்த வேலைநீக்க திட்டம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

நூரெம்பேர்கிலுள்ள AEG எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் நிறுவனத்தில் தொழிலாளர்கள் பல நாட்களாக நிறுவனத்தின் தாய் தொழிற்சாலையின் திட்டமிட்டு மூடுதலுக்கு எதிராக வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். அது ஏறத்தாழ 1,800 தொழிலாளர்களை பாதிப்பதாகும். Telekom மேலும் 32,000 பேரை வேலை நீக்கம் செய்வதாக அறிவித்திருக்கிறது. Volkswagen 8,000 முதல் 10,000 பேரும், Siemens 8000 பேரும், DaimlerChrysler இல் மேலும் 8,000 பேர் ஆகும். இது தவிர சில்லறை வியாபார தொழிற்சாலையான Karstadt Quelle 5,700 வேலைகளை குறைக்க திட்டமிட்டிருக்கிறது. Walter Bau கட்டுமானம் 3,000 வேலைகளையும் HypoVereinsbank 2,400 வேலைகளையும் Deutsche Bank 1,900 வேலைகளையும் IBM 1600 வேலைகளையும் Hewlett-Packard 1,500 வேலைகளையும் Ford 1,300 Linde 1,100 சமையல் மற்றும் சமையல் சாதனங்கள் தயாரிப்பாளர் Miele 1,100, நீர்க்குழாய் பழுதுபார்க்கும் தயாரிப்பாளர் Groheவில் 943 வேலைகளை நீக்கம் செய்யப் போவதாக அறிவித்திருக்கின்றன. டயர்கள் தயாரிப்பு நிறுவனமான Continental தனது ஹனோவர் நகர தொழிற்சாலையை மூடிவிட விரும்புகிறது அதன் மூலம் 320 வேலைகள் இழக்கப்படும். அனைத்தையும் எடுத்துக்கொண்டு பார்க்கும்போது மிகப்பெரிய வேலை நீக்கத்தின் பட்டியல் பெரும்பாலும் முடிவற்றதாக உள்ளது.

இதை ஒப்புநோக்கும்போது இந்தப் பெருநிறுவனங்களில் பலவற்றிற்கு சொந்தக்காரர்களும் பங்குதாரர்களும் கணிசமான அளவிற்கு வருடக் கடைசியில் கிடைக்கும் பங்கீட்டுத் தொகைகளை அனுபவிக்கின்றனர். நிறுவனங்களின் இலாபங்களை அதிகரிப்பதற்கும், மிச்சமிருக்கின்ற தொழிலாளர் பாரிய விட்டுக்கொடுப்புகளை ஏற்றுக்கொள்ள செய்வதற்கும் இந்த மிகப்பெரிய வேலை வெட்டு பயன்படுத்தப்படுகின்றது. பெருமளவில் வேலைகுறைப்பு அலை சந்தேகத்திற்கு இடமின்றி பெரிய சமூக மோதல்களுக்கு இட்டுச் செல்லும்.

நீதிமன்றம் ரிச்சார்ட் காசரோவ்ஸ்கியை தண்டித்த அதே நாளில் நியூயோர்க் நகர போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களது தொழிற்சங்கத்தை மீறி வேலை நிறுத்தத்தை தொடக்கினர். நீதிமன்றங்கள் வேலைநிறுத்தத்திற்கு தடை விதித்திருந்தும் அதில் பங்கெடுத்துக் கொண்டவர்களை கடுமையாக தண்டிக்கப் போவதாக அச்சுறுத்திய பின்னரும் அவற்றிற்கு எதிராக இந்த நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டனர்.

2004 இலையுதிர் காலத்தில் போக்கும் (Bochum) நகரிலுள்ள ஓப்பலில் நடைபெற்ற கண்டன வேலை நிறுத்தம் சர்வதேச வர்க்க போராட்டத்தில் ஒரு தரம் வாய்ந்த புதிய கட்டத்தின் பகுதி என்பது இப்போது தெளிவாக தெரிகிறது. ரிச்சார்ட் காசரோஸ்கியை தண்டித்தது உயர் நீதிமன்றங்களினால் ஒப்புக் கொள்ளப்பட்டிருப்பது அனைத்து தொழிலாளர்களையும் நேரடியாக மிரட்டுவதை நோக்கமாக கொண்டது மற்றும் அது பற்றி மிக உயர்ந்த மட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

காசரோஸ்கியின் விசாரணை

வரவிருக்கின்ற போராட்டங்களுக்கு தயாரிப்பு செய்வதற்காக, காசரோஸ்கி விசாரணையிலிருந்தும் மற்றும் ஓப்பலில் நடைபெற்ற ஒருவார வேலை நிறுத்தத்திலிருந்தும் அரசியல் படிப்பினைகளை பெறுவது அவசியமாகும்.

இந்த விசாரணைகளின் ஆரம்பத்தில் மிகவும் அறிவுறுத்தும் கருத்தை உருவாக்கியது அப்போதைய ஓப்பல் நிர்வாகத்தின் பிரதிநிதியான எல்மார் ஈசிங், ஏன் நிறுவனம் வேலை விலக்கல் நஸ்ட ஈட்டுத்தொகை எதையும் தர முடியாததை நியாயப்படுத்தினார். சிறிதுநேரம் விசாரணை இடைவேளையில் ஈசிங் ஓப்பல் நிர்வாகத்திற்கு தொலைபேசி தொடர்பு கொள்வதற்காக அவ்வாறு செய்யப்பட்டது. அதற்குப் பின்னர் அவர் குறிப்பிடும்போது அத்தகைய நஸ்ட இழப்பீட்டுத் தொகை மிகச் சிறியதாக இருந்தாலும் இதர ஓப்பல் தொழிலாளர்களுக்கு அது ''தவறான சமிக்கையை'' அனுப்பி வைப்பதாக அமையும் என்று குறிப்பிட்டார். ''இந்த நடவடிக்கைகள் ரிச்சார்ட் காசரோஸ்கிக்கு மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமல்ல ஆனால் ஓப்பல் AG க்கும் ஒரு பெரிய அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது'' என்று ஈசிங் மேலும் கூறினார்.

ஓப்பலுக்கு இந்த வழக்கின் அரசியல் முக்கியத்துவமும், அது அனுப்ப விரும்பிய சமிக்கையும் மிகவும் தெளிவானதாகும். ஒரு வார வேலை நிறுத்தமும் போக்கும் ஓப்பல் கண்டன நடவடிக்கைகளும் 2004 அக்டோபரில் முடிந்த ஒரு வாரத்திற்கு பின்னர் உடனடியாக நிர்வாகம் ஒரு தொழிலாளியை - ரிச்சார்ட் காசரோஸ்கியைத் தேர்ந்தெடுத்து அவரை உடனடியாக வேலைநீக்கம் செய்ததன் மூலம் ஒரு முன் மாதிரியை உருவாக்க உத்தரவிட்டது. அவர்கள் அனுப்ப விரும்பிய ''சமிக்கை'' தொழிலாளர்களை மிரட்டுவதற்காக------எதிர்காலத்தில் எவராவது கண்டனங்களில் ஈடுபடத் துணிந்தால் மற்றும் வேலைநீக்கங்களுக்கு எதிராக தொழிற்தகராறுகளை எழுப்பத் துணிந்தால் கொடூரமான தண்டனையை கருதிப்பார்க்க வேண்டியிருக்கும் என்பதாகும்.

என்றாலும் ஜேர்மனியின் தொழிற்துறைச் சட்டம் தனியொருவரை வெளியேற்றுவது மற்றும் தனிநபரை தண்டிப்பதை வெளிப்படையாக தடைவிதிக்கிறது. சட்டம் திட்டவட்டமாக குறிப்பிட்டிருப்பது என்னவென்றால் தொழிற்சாலை தொழிலாளர் குழுவும் தொழிலதிபர்களும் சேர்ந்து ''ஒரு தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டுள்ள அனைவருக்கும் நீதி மற்றும் சமத்துவத்தின் கொள்கைகளை வழங்கி நடத்தவேண்டும் மற்றும் எந்த ஒருவரும் அவர் பிறந்த இனம், மதம், நாடு, அரசியல் அல்லது தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வேறுபாட்டுடன் நடத்தப்படக் கூடாது'' என்று குறிப்பிட்டுள்ளது. இந்தப் பத்தியின் விஷயம் தொடர்பாக வெளிவந்துள்ள அதிகாரபூர்வமான சட்ட விமர்சனங்கள் தொழிலாளர் தகராறுகளை தொடர்ந்து பழி வாங்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்கும் தீர்ப்புகள் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த தடையை சுற்றிவளைத்துக்கொண்டு கட்டளையிட்டு காசரோஸ்கியை தண்டிப்பதற்காக ஒரு நைந்த சாக்குப் போக்கை ஓப்பல் நிர்வாகம் உருவாக்கியுள்ளது. வேலைநிறுத்தம் நடந்த மூன்றாவது நாளில்-----ஒரு சனிக்கிழமை வழக்கமான உற்பத்தி நடைபெறாத நாள் - அன்றைய தினம் அந்த தொழிற்சாலையின் வாயில் கூட்டத்தில் காக்ரோஸ்கி சில சகதொழிலாளர்களுடன் சேர்ந்து தொழிற்சாலைக்குள் சென்றார். அப்போது புதிய சாபிரா மாதிரி கார் தயாரிப்பதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று பார்வையிட்டனர் என்று அது கூறியது. நான்கு தொழிலாளர்களை கொண்ட ஒரு குழுவுடனும், அப்போது காரின் வெளிப்பாகங்களின் பணிகளை முடிக்கும் நிலையில் இருந்த ஒரு மேற்பார்வையாளருடனும் சிறிது நேரம் தகராறு நடந்ததாக அது பிறகு குற்றம் சாட்டியது.

எண்ணிறந்த தொழிலாளர்கள் தொழிற்சாலையில் அந்த நேரத்தில் தொழிற்சாலை வாயில் கூட்டங்களிலும் அல்லது வீட்டிலும் நடைபெறுகின்ற விவாதங்களை போன்று தொழிலாளர்கள் தங்களது எதிர்காலம் பற்றியும் தங்களது குடும்பங்களின் எதிர்காலம் பற்றியும் கண்டன நடவடிக்கைகளை ஆதரிப்பதன் முக்கியத்துவம் பற்றியும் திட்டமிட்ட ஒட்டு மொத்த வேலை நீக்கங்கள் பற்றிய கூட்டங்களில் கலந்து கொள்வது பற்றியும் விவாதித்தனர். இதில் நடைபெற்ற விவாதங்களை சாக்குப் போக்காக எடுத்துக் கொண்டு நிர்வாகம் காக்ரோஸ்கியை உடனடியாக வேலை நீக்கம் செய்தது அவர் ''தொழிற்சாலை பணிகளில் குறுக்கிடுவது கடுமையாக உள்ளது என்றும்'' அவர் துஷ்பிரயோகம், அச்சுறுத்தல் மற்றும் தொழிலாளர்களை இழிவுபடுத்தம் வகையில் நடந்து கொண்டதாகவும் கூறியது.

இந்த வழக்கு, முதல் விசாரணையின் பொழுது ஓப்பல் நியமித்த நிர்வாகத் தரப்பு சாட்சிகள் மட்டுமே வாக்கு மூலம் அளிக்க அனுமதிக்கப்பட்டனர் ஆனால் அப்போதும் கூட விவாதங்களின் போது எந்தப் புள்ளியிலும் அவர்கள் தாங்கள் அச்சுறுத்தப்பட்டதாக உணரவில்லை என்று கோடிட்டுக் காட்டினர். இரண்டாவது விசாரணையின் போது மட்டுமே மனுதாரர் ரிச்சார்ட் காசரோஸ்கி சார்பில் சாட்சியமளித்தவர்கள் அந்த சம்பவம் தொடர்பாக அவர் கூறிய நிகழ்ச்சிகளை உறுதிபடுத்துகின்ற வகையில் சாட்சியம் அளித்தனர்.

இந்த அறிக்கைகள் தரப்பட்ட பின்னர் பல பிரச்சனைகள் தெளிவுபடுத்தப்பட்டன. முதலாவதாக உடல்ரீதியாக தாக்குதல் இடம்பெறவில்லை, இரண்டாவதாக எவரும் அச்சுறுத்தப்படவில்லை. மூன்றாவதாக தொழிற்சாலை வாசலில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு ஒருமைப்பாட்டை காட்ட வேண்டும் என்ற தகவல் தொழிற்சாலைக்குள் நடைபெற்ற பொதுவிவாதத்திலிருந்து வேறுபட்டதாக இருக்கவில்லை மற்றும் நான்காவதாக அந்தக் குழுவினர் தொழிற்சாலைக்குள்ளிருந்து 10 நிமிடங்களுக்கு பின்னர் வாசலில் நடைபெற்ற தகவல் அறிவிப்புக் கூட்டத்திற்கு சென்றனர்.

என்றாலும் தலைமை வகித்த நீதிபதி ரிச்சடர் இந்த சங்கிலித் தொடர் போன்ற சம்பவங்களை புறக்கணித்து விட்டு மற்றும் சாட்சியங்களை மதிப்பீடு செய்ய அனுமதிக்காமல் விட்டு விட்டார். மாறாக இரண்டு சாட்சிகளும் நம்பமுடியாதவை என்று புறக்கணிப்பு செய்து மற்றும் ஒரே சாட்சி ரிச்சார்ட் காசரோஸ்கிக்கு சாதகமாக தெளிவாக கருத்துத் தெரிவித்தார் என்று கூறினார். மூன்று நிர்வாகத் தரப்பு சாட்சிகளுக்கு எதிராக ஒரு சாட்சி என்றவகையில் நீதிபதிகள் குழுவிற்கு அந்தப் பிரச்சனை தெளிவாகயிருந்தது.

நீதித்துறையின் விழிப்புணர்வை கவனமெடுக்கும் நடைமுறைகளோடு எந்தவிதமான சம்மந்தமும் இல்லாமல் நீதிபதி றிக்டர் அத்தகையதொரு அனுமானத்திற்கு வந்திருக்கிறார். ஓப்பல் நிர்வாகத்தின் வாதத்தின் அடிப்படையை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக தெளிவான முரண்பாடுகளை அவர் அப்பட்டமாக புறக்கணித்திருக்கிறார். சாட்சிகள் தந்த வாக்கு மூலங்களின்படி தொழிற்சாலைக்கு விஜயம் செய்தபோது அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த காசரோஸ்கி ஒருவர் மட்டுமே எதுவும் பேசவில்லை என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர். அவருடன் பணியாற்றும் பல சகதொழிலாளர்கள் அதேபோன்று குறிப்பிட்டனர். ஆனால் அவர்களில் எவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கையோ பதவி நீக்க நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை.

2005 நவம்பர் 28ல் தாக்கல் செய்த ஒரு எழுத்து மூல மனுவில் ரிச்சார்ட் காசரோஸ்கியின் வழக்கறிஞர் டாக்டர் குரோட்ட இந்த முரண்பாட்டை சுட்டிக்காட்டினார்: ''கொள்கைகளுக்கு முற்றிலும் முரண்பாடான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன என்பது தான் உண்மை மற்றும் அதன்மூலம் பதவிநீக்க முன்னறிவிப்பு தொடர்பான நியாயமான உரிமைகள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன என்ற உண்மையை எடுத்துக் காட்டுகின்ற வகையில் மனுதாரரின் நண்பர்கள் அவருடன் அந்த தொழிற்சாலையில் 2004 அக்டோபர் 16ல் புதிய சாபிரா மாதிரி கார் வெளிப்பகுதிகளை பார்வையிடுவதற்கு செல்ல முயன்றபோது அவர்களுக்கு எச்சரிக்கைகளையோ அல்லது வேலைநீக்க முன்னறிவிப்புக்களையோ எதிர் மனுதாரர் நிறுவனம் தரவில்லை. ஒரு பக்கத்தில் பார்த்தால் இது முற்றிலும் சரியான நடவடிக்கை ஆனால் மற்றொரு பக்கத்தில் பார்த்தால் மிதமிஞ்சிய கண்டனத்திற்கு தெளிவான முரண்பாடுகள் காணப்படுகின்றன. எதிர்மனுதாரர் நிறுவனம் மனுதாரருக்கு மித மிஞ்சிய கண்டனங்களையும் வேலைநீக்க முன்னறிவிப்பையும் தந்திருக்கிறது. வழக்கு தொடுப்பவருக்கு எதிர்தரப்பினால் வேலைநீக்க கடிதம் வழங்கப்பட்டது. மனுதாரர் சாபிரா தொழிற்கூடத்திற்கு 2005 அக்டோபர் 16ல் சில நிமிடங்களே விஜயம் செய்த போது தனது நண்பர்களை போன்றே அடிப்படையில் நடந்து கொண்டார்.

மேலும் முரண்பாட்டை நீதிபதி ரீச்ட்டர் புறக்கணித்திருக்கிறார். முதல் தீர்ப்பில் ரிச்சார்ட் காசரோஸ்கி தனது ''கடமை தவறியதன் மூலம்'', ''வேலையாட்களை குறைப்பதற்கு எதிராக அவரது சகதொழிலாளி ஆர்பாட்டத்தின்'' நடத்தையைவிட மிஞ்சிவிட்ட அவரது செயல் தொழிற்சாலையின் பணிகளுக்கு கணிசமான அளவிற்கு சீர்குலைவை ஏற்படுத்தியது''. அவர் உண்மையில் அக்கறையற்று நடந்து கொண்டிருக்கிறார் அது என்னவென்றால் மூன்று நாட்கள் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் 6,000 இற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டதால் தொழிற்சாலையில் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அப்படியிருக்கும் போது ரிச்சார்ட் காசரோஸ்கி எப்படி ''கணிசமான அளவிற்கு'' அந்தத் தொழிற்சாலை பணிகளை சீர்குலைத்திருக்க முடியும்.

2004 அக்டோபர் 16ல் நடைபெற்ற சம்பவங்களை சாட்சிகள் அளித்த வாக்குமூலத்திலிருந்து முடிவு செய்யமுடியாது என்று திட்டவட்டமாக கருதியிருப்பாரானால், அப்போது அவர் சட்டத்தின் அடிப்படை கொள்கையான ''குற்றச்சாட்டப்பட்டவர் மீது ஒருவேளை ஐயப்பாடுகள் இருக்குமானால்--- இந்த வழக்குகளில் வழக்குத்தொடர்பவர் தள்ளுபடியாக்கப்படுவார்!' (in dubio per reo!) இதற்கு மாறாக நீதிமன்றத்தின் செயல்பாடு ஓப்பல் நிர்வாகத்தின் ஒரு உடந்தையாளராக செயல்படும் வகையில் அமைந்திருக்கிறது.

இந்த விசாரணை ஓப்பல் நிறுவனத்தின் நிர்வாகத்திற்கும் நீதித்துறைக்கும் தொழிற்சங்கங்கள் / தொழிற்சாலை தொழிலாளர் குழுவிற்கும் இடையில் ஒரு பக்கமாகவும் மற்றொரு பக்கம் அதன் ஊழியர்களுக்கும் இடையில் நிலவுகின்ற உறவுகளை ஒரு சிறிய அளவில் அம்பலப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. விசாரணைகள் முடிந்ததும் நீதிபதி ஓப்பல் வழக்கறிஞர்களுடன் வேடிக்கையாக பேசினார். மற்றும் அந்த வழக்கறிஞர்கள் இந்த வழக்கில் வழங்க வேண்டிய நஸ்டஇழப்பீட்டை சேமித்திருப்பதன் மூலம் அவர்கள் புதியதொரு ஓப்பல் சாபிரா காரை வாங்க முடியம் என்று வேடிக்கையாக குறிப்பிட்டார். இவற்றுடன் சேர்த்து நிர்வாகத்திற்கு பொறுப்பானவர்கள் எதிர்காலத்தில் கண்டனங்களில் ஈடுபடுபவர்கள் ''சகட்டு மேனிக்கு தொழிற்சாலைக்குள் நுழைந்து விடாது'' தடுக்க உறுதி செய்து தரும் வகையில் பாதுகாப்பு அலுவலகங்களை கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தொழிற்சாலை தொழிலாளர்குழு தலைவர் ஒரு சாட்சியாக அழைக்கப்பட்டார். ஆனால் வாக்கு மூலம் தருமாறு அவர் கேட்டுக் கொள்ளப்படவில்லை. எனவே அவர் நீதிபதி தமது தீர்ப்பின் இறுதி வாசகங்களை கூறும்போது அங்கு அமரவில்லை அதற்கு நீதிபதி தமாஷாக அவரை சிறையில் அடைத்து விடுவதாக அச்சுறுத்தினார். அந்த வேடிக்கையை அனைவரும் ஏற்றுக் கொண்டனர் மற்றும் அந்த நிறுவனத்தின் தொழிற்சாலை தொழிலாளர்குழுக்களில் பணியாற்றும் 36 முழு நேர மேற்பார்வையாளர்களுக்கு தலைமை வகிக்கும் ரெய்னர் ஐனெக்கல் பதிலுக்கு சிரித்தார். ஒரு பக்கம் ஒரு மகிழ்ச்சி ததும்பும் கேலி, கிண்டல் நிரம்பிய குடும்பமான தலைமை மேலாளர்கள் நீதிபதிகள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர்குழு உறுப்பினர்களும் மறுபக்கம் ரிச்சர்டு காசரோஸ்கி மற்றும் அவரது நண்பர்களும் சகாக்களும் அந்தத் தீர்ப்பு கண்டு ஆத்திரமடைந்து ஏறத்தாழ பேச முடியாதவர்களாக ஆகிவிட்டனர். ஒரு வர்க்க சட்டத்தின் எல்லா அம்சங்களும் இயல்புகளும் அடங்கிய முற்றிலும் நியாயமற்ற தீர்ப்பு கண்டு நிலை குலைந்து நின்றனர்.

இந்தத் தொடர்புகள் மிகத் தெளிவாக தெரிந்தது எப்போது என்றால் விசாரணை முடிவதற்கு சற்று நேரத்திற்கு முன்னர் ரிச்சார்ட் காசரோவ்ஸ்கியின் வழக்கறிஞர் தனது முடிவுரையில் 2004 அக்டோபர் சனிக்கிழமை பிற்பகல் நிகழ்ச்சிகள் அந்தத் தொழிற்சாலையில் நிலவிய பொதுவேலை நிறுத்தத்தோடு தொடர்புபடுத்தி பார்க்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார்.

''வேலை நிறுத்தம் பற்றி பேச வேண்டாம்'' என்று ஹெல்முட் ரிக்ட்டர் அறிவித்தார். இந்த மரியாதையான சொல்லான' வேலை நிறுத்தத்தை' இழிவுபடுத்த வேண்டாம்'' என்று அவர் கேட்டுக் கொண்டார். மற்றும் நடந்தது ஒரு ''முறைக்கேடான சட்டவிரோத செயல்'' என்று வலியுறுத்திக் கூறினர். நீதிபதி ரிக்ட்டரின் கருத்துப்படி வேலைநிறுத்தங்களுக்கு ஜேர்மனியில் தொழிற்சங்கங்கள் தான் அழைப்பு விடுக்க முடியும் மற்றும் கடுமையாக நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகளின் படி மட்டுமே அது நடைபெற வேண்டும்.

ரிச்சார்ட் காசரோஸ்கிக்கு எதிராக எடுக்கப்பட்ட தண்டனை நடவடிக்கையின் முக்கியத்துவத்தை நீதிபதியின் இந்தக் கருத்து எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது. அது தொழிலாளர்கள் சுதந்திரமாக எந்தக் கிளர்ச்சி நடத்தினாலும் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டை மீறுவதற்கு எந்த முயற்சி மேற்கொண்டாலும் எல்லாச் சூழ்நிலைகளிலும் அவற்றை தடுத்து நிறுத்தியாக வேண்டும் என்பதாகும்.

அரசியல் படிப்பினைகள்

ரிச்சர்டு காசரோஸ்கிக்கு வழங்கப்பட்டிருக்கின்ற இந்த தண்டனையை ஒரு எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நிறுவனத்தின் நிர்வாகம் எவ்வளவு தூரம் சென்றும் எந்த அளவிற்கு முன்னேற்பாடுகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் செய்து இந்த முன்னேற்பாட்டை முன் உதாரணத்தை உருவாக்கியிருக்கிறதென்றால் ----சர்வதேச அளவில் அதிக செலவு பிடிக்கும் தொழிற்துறை சட்ட அலுவலகங்களான பேக்கர் & மெக்கன்சியைப் பயன்படுத்தி ஒவ்வொரு நீதிமன்றத்திலும் இந்த பதவி நீக்கக் கட்டளையை உறுதிபடுத்த நடவடிக்கை எடுத்திருக்கின்றது. இந்த உதாரணம் தெளிவாக உணர்த்துவது என்னவென்றால் இந்த தண்டனை நடவடிக்கைகள் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவை எதிர்காலத்தில் எத்கைய கொடூரமான தாக்குதல்களுக்கு தொழிலாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கிறது.

தொழிலாளர்களுக்கு எதிரான தாக்குதலை நடத்துவதில் ஓப்பல் உட்பட எல்லா நிறுவனங்களும் ஒரு இரட்டை மூலோபாயத்தை கடைபிடிக்கின்றன ----அவை நீதிமன்றங்களையும் தொழிற்சங்கங்களையும் - இரண்டையும் சார்ந்திருப்பதாகும். எந்த விதமான முன்னறிவிப்பும் கொடுக்காமல் வேலைநீக்கம் செய்வதற்கு முடிந்தது எதனால் என்றால் சென்ற ஆண்டு தொழிற்தகராறில் தொழிற்சாலை தொழிலாளர் குழுவும் தொழிற்சங்கமும் எந்த குறிப்பிட்ட முடிவையும் அடையாமல் பல தொழிலாளர்களின் விருப்பத்திற்கு எதிராக முடிவுக்கு கொண்டு வந்ததாகும். இதைத்தவிர தொழிற்போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நிர்வாகத்துடன் ஒரு உடன்படிக்கைக்கு வருவதை அவர்கள் கைவிட்டனர். இருந்தபோதிலும் ஏனைய தகராறுகளை தொடர்ந்து தசாப்த காலத்திற்கு மேலாக அவர்களால் இதேபோன்று உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ரிச்சார்ட் காசரோஸ்கி மீதும் துர்ஹான் எர்சின் என்ற மற்றொரு தொழிலாளி மீதும் தற்போது திணித்துள்ள கடுமையான நடவடிக்கையின் தன்மைக்கு பச்சை கொடி காட்டியது தொழிற்சங்கமும் தொழிற்சாலை தொழிலாளர்குழுவும்தான். தொழிற்சாலை தொழிலாளர் குழு உறுப்பினரான துர்ஹான் எர்சின் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரும் அடுத்தமாதம் சொந்த விசாரணையை எதிர்கொண்டுள்ளார்.

தொழிற்சங்கங்கள் முன்பு எப்போதும் செயல்பட்டிராத அளவிற்கு நிறுவனங்களுக்கு நேரடி உடந்தையாகவும் நிறுவனங்களின் நிபந்தனைகைள ஏற்றுக் கொள்ளுமாறு தொழிற்சங்க உறுப்பினர்களை மிரட்டுகின்ற வகையிலும் செயல்பட்டு வருகின்றன. தொழிற்சங்கங்கள் வலதுசாரி பக்கம் திரும்புவது ஒரு சர்வதேச இயல்நிகழ்ச்சியாகும். நியூயோர்க் நகர பொது போக்குவரத்து ஊழியர்கள் தற்போது இதே பிரச்சனையை எதிர்கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவின் போக்குவரத்து தொழிலாள தொழிற்சங்கங்களின் தேசியத் தலைமை வேலைநிறுத்தத்திற்கு திட்டவட்டமான எதிர்ப்பை தெரிவித்து விட்டது.

தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்சாலை தொழிலாளர் குழுக்களின் இந்த பிற்போக்குத்தனத்திற்கான தோற்றுவாய் அவர்களது தேசியவாத மற்றும் முதலாளித்துவ-சார்பு வேலைத்திட்டங்களில் அடங்கியிருக்கிறது. ஓப்பல் மற்றும் இதர எல்லா நிறுவனங்களின் தொழிலாளர்களுமே அடிப்படையிலேயே புதிய அரசியல் முன்னோக்கை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தை எதிர்நோக்கியுள்ளனர். மோசமடைந்து வரும் தொழில் நிலைமைகள் மற்றும் இதர ஊதியவெட்டின் திணிப்பு மற்றும் எதிர்காலத்தில் மிகப்பெருமளவில் ஆள்குறைப்பிற்கு எதிராக செயல்படக்கூடிய ஒரே சாத்தியக்கூறு ஒரு சர்வதேச சோசலிச வேலை திட்டத்தின் அடிப்படையில் போராடுவதாகும்.

ரிச்சார்ட் காசோரோவ்ஸ்கியையும் துர்ஹான் எர்சினையும் ஒரு கொள்கைரீதியாக பாதுகாக்க ஜேர்மனியின் சோசலிச சமத்துவக் கட்சியும் உலக சோசலிச வலைத் தளமும் தலையிடுகின்றன. ஒரு அரசியல் மாற்றீடிற்கு கடுமையாக முயற்சி செய்கின்ற அனைத்து தொழிலாளர்களும் சோசலிச சமத்துவக் கட்சியையும் உலக சோசலிச வலைத் தளத்தையும் தொடர்பு கொள்ளுமாறு அழைப்பு விடுக்கிறோம்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved