World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Historical and political issues behind Iranian president's anti-Semitic campaign

ஈரானிய ஜனாதிபதியின் செமிட்டிச-எதிர்ப்பு பிரச்சார பின்னணியின் வரலாற்று மற்றும் அரசியல் பிரச்சினைகள்

By Justus Leicht and Stephan Steinberg
30 December 2005

Use this version to print | Send this link by email | Email the author

அண்மை மாதங்களில் ஈரான் ஜனாதிபதி மஹமூத் அஹமதினாஜாத் செமிட்டிச எதிர்ப்பு பிரகடனங்களை பகிரங்கமாக திரும்பத் திரும்ப வெளியிட்டு வருவதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இரண்டாம் உலகப் போரின் போது 6 மில்லியன் யூதர்களை நாஜிக்கள் இனப்படுகொலை செய்ததை இஸ்ரேல் இருந்தது என்பதை நியாயப்படுத்துவதற்கு தயாரிக்கப்பட்ட ஒரு ``கட்டுக் கதை'' என்று வர்ணித்தார். ``மில்லியன் கணக்கான அப்பாவி யூதர்களை ஹிட்லர் கொலை செய்தார்`` என்ற கூற்றை ஏற்றுக் கொள்ள மறுத்தார், இஸ்ரேல் அரசை ''வரைபடத்திலிருந்து துடைத்தகற்றவும்'' மற்றும் தற்போது இஸ்ரேலில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற யூதர்கள் கனடாவிற்கோ அல்லத அலாஸ்காவிற்கோ நகரவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

ஈரானின் ஆளும் செல்வந்தத் தட்டிற்குள் வளர்ந்து வருகின்ற சமூக நெருக்கடி மற்றும் பிளவுகளின் பின்னணிக்கு பதிலாக அஹமதினேஜாத் கருத்துக்கள் உழைக்கும் மக்களை தேசிய மற்றும் மத வாத துணையோடு பிரிப்பதையும் பிற்போக்கு அரசியல் சக்திகளை அணிதிரட்டுவதையும் சமூக பதட்டங்களை பேரினவாத வழிகளில் திசைதிருப்புவதையும் நோக்கமாகக் கொண்டது. அது மிக ஆழ்ந்த உள் மோதல்களால் ஒரு அழிவுற்ற சமுதாயத்தில் தங்களது கட்டுப்பாட்டை ஊர்ஜிதம் செய்ய முயலுகின்ற மகத்தான செல்வம் படைத்த சிறு செல்வந்தட்டின் பதிலாகும்.

அஹமதினாஜாத்தின் செமிட்டிச-எதிர்ப்பு கருத்துக்களுக்கு பின்னணியாகவும் இஸ்ரேலுக்கு எதிரான அவரது அச்சுறுத்தல்களுக்கு பின்னணியாகவும் அமைந்திருப்பது ஒரு முற்றுகை சூழ்நிலையை உருவாக்குவதற்கான ஒரு திட்டமிடப்பட்ட முயற்சியாகும் அங்கு சமூக அல்லது அரசியல் எதிர்ப்பு எந்த வடிவத்தில் வந்தாலும் அதை மிகப் பெரும் தேசத்துரோகம் என்று தடை விதித்து பலாத்கார முறையில் நசுக்கி விட முடியும். ஏகாதிபத்தியத்தையும் இஸ்ரேல் அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக் கொள்கைகளையும் எதிர்ப்பதிலிருந்து விலகி, அஹமதினேஜாத்தின் கோபங்கள் அடிப்படையிலேயே ஈரானிய தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக அமைந்திருக்கிறது.

குறிப்பாக அவை ஈரானில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற சுமார் 30,000 பேரை கொண்ட சிறிய யூதர்கள் சமுதாயத்திற்கு எதிரான ஒரு நேரடி அச்சுறுத்தலாகும், அவர்களது பூர்வீகங்கள் கி.மு. ஆறாம் நூற்றாண்டிற்கு செல்கிறது. அதிகரித்தளவில் அடுத்தடுத்து ஆளும் மதகுரு செல்வந்த தட்டினரின் அரசியல் திவாலை மூடி மறைப்பதற்காக யூதர்களுக்கு எதிரான உணர்வுகளை அணிதிரட்ட ஈரானின் தலைமை முயன்று வருகிறது.

அதே நேரத்தில் அஹமதினாஜாத்தின் செமிட்டிச-எதிர்ப்பு கருத்துக்கள் உலகரீதியாக மிகவும் பிற்போக்கு சக்திகளின் கைகளில் விரும்பியதைச் செய்வதாக அமைந்திருக்கிறது. அமெரிக்காவில் ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ. புஷ் ஈரான் ஜனாதிபதியின் இந்த கருத்துக்களை பயன்படுத்தி வட கொரியா மற்றும் ஈராக்குடன் சேர்த்து ஈரானும் ``தீய அச்சுகளின்`` ஒரு பகுதி என்று தனது கூற்றுக்கு புத்துயிர் ஊட்டியிருக்கிறார். இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சக பேச்சாளர் மார்க் ரெகேவ் ஒரு மறைமுக அச்சுறுத்தலை விடுத்தார். ``யதார்த்தத்தின் திரித்தமைக்கப்பட்ட அர்த்தத்தில் வெறியார்ந்த கருத்தியல் மற்றும் அணு ஆயுதங்கள் இவற்றின் சேர்க்கையை சர்வதேச சமுதாயத்தில் எவரும் ஒப்புக் கொள்ள முடியாது'' என்று அறிவித்தார். பிரிட்டனின் சன்டே டைம்ஸில் வெளியிடப்பட்டுள்ள ஒரு கட்டுரையின்படி, மார்ச் இறுதி வாக்கில் ஈரானியன் யுரேனிய செறிவூட்ட வசதிகளின் மீது ஒரு தாக்குதலை நடத்துவதற்கு இஸ்ரேல் விரிவான திட்டங்களை தீட்டியுள்ளது.

ஈரானிய முதலாளித்துவத்தின் பங்கு

தெஹ்ரானின் ஒரு முன்னாள் மேயர் அஹமதினேஜாத் ஒரு வலதுசாரி வாய் வீச்சாளர். அவர் தன்னை ஏழைகளின் பிரதிநிதி என்று காட்டிக் கொள்கிறார், அதே நேரத்தில் பொதுமக்களிடையே சிறிதே செல்வாக்குப் பெற்றிருக்கின்ற ஆனால் அரசு இயந்திரம் நீதித்துறை மற்றும் தேசிய தொலைக்காட்சி ஆகிய பொருளாதாரத்தின் பெரும் பகுதியில் கட்டுப்பாட்டை வைத்துள்ள மதவாத கடினப்போக்கினர்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்கிறார்.

அயத்துல்லா கொமேனி நிறுவிய ஈரானிய புரட்சிகர காவலர் இணை இராணுவ பிரிவில் ஒரு அதிகாரியாக பாஸ்தரான் பகுதியில் அவர் தனது அரசியல் வாழ்வை தொடக்கினார். ஈரானில் மிகத் தீவிரமான இஸ்லாமிய தார்மீக நெறிமுறையை செயல்படுத்துகின்ற குடிப்படையின் ஒரு ஆசானாகவும் (basij) அவர் பணியாற்றி வந்திருக்கிறார். அப்படி ஆசானாக பணியாற்றி வந்த தனது பங்களிப்பை உறுதி செய்கின்ற வகையில் சமூக மற்றும் கலாச்சார சுதந்திரங்களை தடைசெய்வதற்கு டெஹ்ரான் மேயராக தனது அதிகாரங்களை பயன்படுத்தினார்.

ஜனாதிபதியாக அவர் பொறுப்பேற்றது முதல் அஹமதினேஜாத் திட்டமிட்டு அரசாங்க பதவிகள் அரசு-நடத்துகின்ற ஊடகங்கள், இராஜதந்திர படைப்பிரிவுகள் மற்றும் அரசு நிதி நிறுவனங்களில் தனது சொந்த ஆதரவாளர்களை நியமித்தார். அவர்களில் பலர் பாஸ்தரானில் சம்மந்தப்பட்டவர்கள் மற்றும் பலர் ஈரானுக்கும் ஈராக்கிற்கும் இடையே 1980 முதல் 1988-வரை நடைபெற்ற போர்க்காலத்தில் அரசியலுக்கு வந்தவர்கள். சுருக்கமாக சொல்வதென்றால் இதர இன மற்றும் மதவாத குழுக்களுக்கு எதிராக இனப்படுகொலையையும், இரத்தக் களரி மோதல்களையும் தொடங்குவதற்கு தயங்காத தேசியவாத மற்றும் மதவாத பிற்போக்குவாதிகளின் ஒரு குழுவை தனது ஆதரவு தளமாக அஹமதினாஜாத் கொண்டுள்ளார்.

ஈரானிய ஆளும் செல்வந்த தட்டிற்குள்ளேயே மிகத்தீவிரமான உள் சண்டைகள் மற்றும் பிளவுகள் இருந்தபொழுதிலும் அத்தகையதொரு வலதுசாரி பிரமுகர் ஈரானிய அரசின் மிக உயர்ந்த பதவிக்கு வந்திருப்பதும் அவர் பகிரங்கமாக யூதர்கள்-எதிர்ப்பை பகிரங்கமாக மீண்டும் கொண்டு வருவதும் மத்திய கிழக்கு முழுவதுமான மற்றும் ஒட்டு மொத்த ஈரானிய முதலாளித்துவ வர்க்கத்தை எதிர்நோக்கியுள்ள அரசியல் முட்டுக்கட்டையையும் நெருக்கடியையும் வெளிப்படுத்துவதாக உள்ளது. இந்த சமூக செல்வந்தத்தட்டினர் உள் நாட்டில் ஜனநாயக நிலைமையை ஸ்தாபிப்பதற்கும் அல்லது சர்வதேசரீதியாக ஏகாதிபத்தியத்திற்கு எதிராக ஒரு கடுமையான மற்றும் உறுதியான போராட்டத்தில் ஈடுபடுவதற்கும் அமைப்புரீதியாக வல்லமை இல்லாதவர்கள்.

அதன் அனைத்து பிற்போக்கு விளைபயன்களுடன் வகுப்புவாத அரசியலின் பல்வேறு வடிவத்தை மீண்டும் உருவாக்குவது ''மூன்றாவது உலகம்'' என்றழைக்கப்படுகின்ற நாடுகள் முழுவதிலும் உள்ள தேசிய முதலாளித்துவத்துவ வர்க்கத்தை பண்பிடும் ஒரு இயல்நிகழ்ச்சியாகும். முதலாளித்துவ தேசியவாத இயக்கங்களும் மற்றும் இடது தேசியவாத ஆட்சிகளும் மத்தியகிழக்கு, ஆபிரிக்கா, ஆசியா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் ஏகாதிபத்தியத்திய-எதிர்ப்பின் தலைமையாக உலகின் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களுக்காக ''தேசிய விடுதலை இயக்கங்களை'' தாங்கள் தற்போது நடத்திவருகிறோம் என்று அடிக்கடி சோசலிச வர்ணம் பூசி செயல்பட்ட காலம் முடிவுற்றது. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிர் எடையாக முதலாளித்துவ தேசியவாதிகள் நம்பியிருந்த முன்னாள் சோவியத் ஒன்றியம் மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் ஸ்ராலினிச ஆட்சி வீழ்ச்சியடைந்ததுடன் நிச்சயமாக அது முடிவுற்றது. சோவியத் ஒன்றியம் மற்றும் அதன் கிழக்கு ஐரோப்பிய வாடிக்கை அரசுகள் சிதைவுற்றதும் அங்கெல்லாம் தன்னுரிமை பொருளாதாரங்கள் (Autarkic economies) உருவாயின, அவை பெருகிவரும் பூகோளமயமாக்கல் உற்பத்தி முறையோடு பின்னிப் பிணைந்து செயல்பட்டன மற்றும் உலகப் பொருளாதாரத்திற்கும் தேசிய அரசு முறைக்கும் இடையில் மோதல்களை தீவிரப்படுத்தின.

இந்த பிராந்தியத்தில் அமெரிக்க ஆதிக்கத்திற்கு ஒரு முக்கிய தூணாக விளங்கிய கொடூரமான சர்வாதிகாரி ஷா ரேஷா பலவியை வெறுத்து ஒதுக்கி வீழ்த்திய ஒரு வெகுஜன எழுச்சியால் உருவான 1979 புரட்சிக்கு தலைமை தாங்கி நடத்திய சமூக சக்திகளின் குணயியல்புகளை இறுதியாக வெளிப்படுத்துவது அஹமதினாஜாத்தின் எழுச்சியாகும். அந்தப் புரட்சி பொது மக்களின் வெகுஜன இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட அதே நேரத்தில், தொழிலாள வர்க்கம் மதபோதகர்களால் பிரிதிநிதித்துவம் செய்யப்படும் தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் அதிருப்தி கன்னைக்கு கீழ்ப்படிந்து இருந்தது மற்றும் அயத்துல்லா ரூகோல்லா கொமேனியால் தலைமை தாங்கப்பட்டது.

கொமேனியின் பிரதான சமூக அடித்தளம் முகவும் பாரம்பர்ய மிக்க முதலாளித்துவ தட்டினர்களில் அடங்கியிருந்தது, குறிப்பாக ஷா மற்றும் மேற்கு ஏகாதிபத்தியத்தோடு கொண்ட அவரது நெருங்கிய பொருளாதார உறவுகளாலும் குரோதத்திற்கு ஆளாக்கப்பட்ட சந்தை வியாபாரிகளது அடித்தளத்தை பெற்றிருந்தது. கொமேனியின் ஆட்சி ஆயிரக்கணக்கான இடதுசாரி தீவிரவாதிகளை படுகொலை செய்தது, தொழிலாள வர்க்கத்தின் சுதந்திர இயக்கம் ஒவ்வொன்றையும் நசுக்கியது மற்றும் குர்துகள் தேசிய உரிமைகளை வென்றெடுக்கும் எந்த முயற்சிகளையும் கொடூரமாக நசுக்கியது.

ஈரானில் ஸ்ராலினிசம்

1979-ல் நடைபெற்ற புரட்சியில் முல்லாக்களும் சந்தை வியாபாரிகளும் ஆதிக்கம் செலுத்துகின்ற சாத்தியக்கூறு ஏற்பட்டதற்கு ஸ்ராலினிச டுடே கட்சி (Tudeh Party) மற்றும் ஏனைய இடதுசாரி சக்திகளின் கொள்கைகளின் விளைவாகும், அவை தொழிலாள வர்க்கத்தையும் வறுமைக்கு உள்ளாக்கப்பட்ட விவசாயிகளையும் தடுத்து பின்னுக்கு நிறுத்தின. ''முற்போக்கு தேசியவாத சக்திகளின் ஐக்கிய முன்னணி'' என்றழைக்கப்பட்டதன் அடிப்படையில் டுடே கட்சி, மன்னர் ஷா விற்கு எதிராக ''இஸ்லாமிய சோசலிசம்'' மற்றும் ''ஏகாதிபத்திய எதிர்ப்பு'' என்ற பெயரில் கொமேனியையும் அதேபோல் ஈரான் இஸ்லாமிய குடியரசின் முதலாவது ஜனாதிபதியான பானி-சதரையும் ஆதரித்தது.

டுடே கட்சி மற்றும் அதற்கு முந்திய ஈரான் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய இரண்டும் ஈரானின் தொழிலாள வர்க்கத்தை காட்டிக் கொடுத்தது இதுதான் முதல் தடவையல்ல. அது நீண்ட மற்றும் போர்க்குணமிக்க அரசியல் வரலாற்றைக்கொண்டது. 1920-ல் அமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி 1920-களின் மத்தியில் ஸ்ராலினிசத்தின் செல்வாக்கின் கீழ் வந்து 1917 அக்டோபர் ரஷ்ய புரட்சியின் தத்துவார்த்த அடிப்படையான நிரந்தர புரட்சித் தத்துவத்தை புறக்கணித்தது.

இந்த தத்துவம் 1905ம் ஆண்டில் லியோன் ட்ரொட்ஸ்கியால் முதலில் முறைப்படுத்திக் கூறப்பட்டது ஏகாதிபத்தியத்தின் சகாப்தம் நிலைநாட்டப்பட்டதில் பின் தங்கிய நாடுகளை சேர்ந்த தேசிய முதலாளித்துவம் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிப் பணிகளை நிறைவேற்றுவதற்கு இயலாத நிலையில் இருக்கும். தோன்றி வரும் தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்வதற்கும் அதன் சொத்துடமையையும், ஆட்சியையும் பாதுகாத்துக்கொள்வதற்காக நிலப்பிரபுத்துவ சக்திகள் இராணுவ மற்றும் ஏகாதிபத்திய சக்திகளோடு ஒரு கூட்டணியை உருவாக்குவது தவிர்க்கமுடியாது.

இதன் ஒரு விளைவாக, தொழிலாள வர்க்கம் முதலாளித்துவத்தின் எல்லாப் பிரிவுகளிலிருந்து அரசியல் சுயாதீனத்தை நிலைநாட்டி, ''அடிமைப்பட்டிருக்கும் நாட்டின் தலைமையை அதற்கெல்லாம் மேலாக அதன் விவசாய வெகுஜனங்களின் தலைமையை வென்றெடுத்து'', அரசியல் அதிகாரத்தை அதன் கைகளில் எடுத்துக் கொண்டு ஒரு தொழிலாள அரசை ஸ்தாபித்து ஜனநாயக நடவடிக்கைகளை எடுப்பது மட்டுமின்றி பொருளாதாரத்தை ஒரு சோசலிச அடிப்படையில் மாற்றுவதற்கும் ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்தால்தான் ''ஜனநாயகத்யுைம் தேசிய விடுதலையையும் சாதிக்கும் அவற்றின் பணிகளின் முழுமையானமற்றும் உண்மையான தீர்வை காண முடியும்'' என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்தினார். ஒரு தேசிய முன்னோக்கிற்கு மாறாக இந்த மூலோபாயம் ஒரு சர்வதேசிய புரட்சிகர அடிப்படை மீதாகத்தான் சாத்தியமாகும் என்று ட்ரொட்ஸ்கி வலியுறுத்திக் கூறினார்.

ஸ்ராலினிசத்தின் செல்வாக்கின் கீழ், கம்யூனிச அகிலத்தின் பிரிவுகள் நிரந்தர புரட்சிக்கு எதிராக ஒரு இரண்டு கட்ட புரட்சி தத்துவத்தை ஏற்றுக் கொண்டன. இதன்படி இது அடிப்படையிலேயே ஒரு தேசியவாத கருத்துருவாகும், தொழிலாள வர்க்கம் மிகவும் தாமதமாக முதலாளித்துவ வளர்ச்சி ஏற்படும் நாடுகளில் புரட்சிகரப் போராட்டங்களின் தலைமையை ''முற்போக்கு'' தேசியவாத முதலாளித்துவத்திடம் விட்டுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் அது நிலபிரபுத்துவ ஆளும் செல்வந்தத்தட்டை தூக்கி வீசிவிட்டு முதலாளித்துவ ஜனநாயக ஆட்சிகளை ஸ்தாபிக்கும் அவற்றின் கீழ் முதலாளித்துவம் வளரும் மற்றும் தொழிலாளர் வர்க்கமும் வளரும். ஏதோ எதிர்காலத்தில் மட்டுமே திட்டவட்டமாக நிர்ணயிக்கப்படாத ஒரு புள்ளியில் தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச புரட்சியில் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்வதற்கான நிலைமைகள் ''கனியும்''.

இந்த வரலாறற்ற மற்றும் திட்டமிட்ட மாக்சிசத்தின் திரித்தலின் அரசியல் அர்த்தம் என்னவென்றால் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஒத்துழைப்போடு தொழிலாள வர்க்கம் நிராயுதபாணியாக்கப்பட்டு முதலாளித்துவ சக்திகளுக்கு அது கீழ்ப்படியவேண்டியதாயிற்று மற்றும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக வன்முறை திரும்பியது தவிர்க்க முடியாததாயிற்று. சீனாவில் 1920களில் இந்தக் கொள்கை முயற்சியின் எடுத்துக்காட்டாக மிக துயரமும் பேரழிவும் நிகழ்ந்தது அங்கு கம்யூனிஸ்ட் கட்சி முதலாளித்துவ கோமிண்டாங்கின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, அது 1927 புரட்சி இரத்தக்களரி தோல்வியடைய வழிவகுத்தது.

ஈரானில் ஸ்ராலினிச அதிகாரத்துவம் ரேசா கான் பலவியை ஒரு ''புரட்சிகரத் தலைவர்'' என்று பிரகடனப்படுத்தியது. ரேசா கான் ஒரு கோசக் கேர்னலாக பணியாற்றி வந்தார் முதலாளித்துவத்தின் அரசியல் தலைவர்களின் ஆதரவு மூலம் 1921-ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் உதவியோடும் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை நடத்தினார். ஒரு வலுவான அரசு என்ற அடிப்படை மீதான பொருளாதாரத்தின் ஒரு முதலாளித்துவ வளர்ச்சியை தொடக்கி வைக்கும் தனது முயற்சிகளுக்கு அவர் ''இடது'' மற்றும் ஏகாதிபத்திய-எதிர்ப்பு வாய் வீச்சை பயன்படுத்தினார். 1925-ல் அவரே தனக்குத் தானே ''மயில் அரியாசனத்தில்'' முடிசூட்டிக் கொண்டார்

பொருளாதார வளர்ச்சிப் பிரச்சனையை எதிர்கொள்ளும்போது தொழிலாள வர்க்கத்தின் சமுதாய செல்வாக்கு அதிகரிப்பதுடன், சொத்துடைமை வர்க்கங்களுக்கும் பரந்த வெகுஜனங்களுக்கும் இடையில் நகரங்களிலும் கிராமப் பகுதிகளிலும் சமூக வேறுபாடுகள் தீவிரமடைந்ததை தொடர்ந்து பலவி ஒடுக்குமுறையையும் பேரினவாதத்தையும் மேற்கொண்டார். மதகுருமார்களின் பெரும் நிலக்கிழார்களின் மற்றும் அங்காடி வர்த்தகர்களான குட்டி முதலாளிகளின் அதிகாரத்தை சிதைப்பதற்குப் பதிலாக இந்த சமூக தட்டினர் மீதாக துல்லியமாக பல்லவி சார்ந்திருந்து தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதற்கும் மற்றும் எல்லா தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் சுதந்திரமான அமைப்புக்களை தடை விதிக்கவும் செய்தார். அவர் முன் மாதிரியாக எடுத்துக் கொண்டது துருக்கியின் அட்டடுர்க்கியையும் இத்தாலி பாசிச முசோலினியையும் தான்.

1950களின் தொடக்கத்தில் ஒரு வளர்ந்து வந்த சமூக மற்றும் தேசிய இயக்கம் ஷாவின் மகனும் வாரிசுமான முஹமது ரேசா பலவியை தற்காலிகமாக நாடுகடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது தேசிய முதலாளித்துவத்திற்கு கீழ்படியச்செய்ததால் டுடே கட்சி மீண்டும் ஒரு முறை உதித்தெழுந்த புரட்சிகர இயக்கத்தை காட்டிக்கொடுத்தது. முதலில் அது பிரதமர் முஹம்மது மொசாதேக்கின் அரசாங்கத்தை ஆதரித்தது அவர் நாட்டின் எண்ணெய் தொழிற்துறையை தேசியமயமாக்கினார் அது வரை அது பிரிட்டிஷ் பெட்ரோலியத்திற்கு சொந்தமாக இருந்தது. இதன் மூலம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் சீற்றத்தை சம்பாதித்த மொசாதேக் பெரிய பிரிட்டனுக்கு எதிராக அமெரிக்காவை தூண்டிவிட முயன்றார்.

அமெரிக்காவின் ஆலோசனையை தொடர்ந்து மொசாதேக் தனது சொந்த அடித்தள அமைப்பாக செயல்பட்டு வந்தவர்கள் உட்பட வெகுஜனங்கள் மீதான கொடூர தாக்குதலுக்கு திரும்பினார். இந்த இராணுவ ஒடுக்கு முறையைத் பின்தொடர்ந்து மன்னர் ஷாவே நேரடியாக மொசாதேக் மீது நடவடிக்கையில் இறங்கத் தொடங்கினார். 1953 ஆகஸ்ட்டில் CIA ஆதரவு இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் அவர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

இது நடைபெற்றதற்கு காரணம் என்னவென்றால் மொசாதேக் தேசிய முன்னணி ஒரு ''விரிவான முன்னணி'' ஆலோசனையை புறக்கணித்த பின்னர், டுடே கட்சி, ரேசா ஷா பலவிக்கு எதிராக சுயாதீனமான எதிர்ப்பை அணிதிரட்டுவதிலிருந்து தவறிவிட்டது. இதற்கிடையில் ராஜ ாஷா பலவி சர்வாதிகார அதிகாரத்தை மேற்கொண்டு அதன்பின் ஆட்சிக்கு வர சாத்தியமாகியது. அவரது ரகசியப் போலீசான SAVAK விரைவில் சர்வதேச அளவில் கொடூரமான சித்திரவதை நுட்பங்களை கையாள்வதில் இழிபுகழ் பெற்றது.

ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெற்ற நேரத்திலும் அதற்கு பிந்திய ஆண்டுகளிலும் பெரும்பாலான மதகுருமார்கள் ஷாவை ஆதரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஷாவின் கீழ் தேசிய பொருளாதாரம் நவீனமயப்படுத்தியதும் சர்வதேச நிறுவனங்களுக்குத் திறந்துவிடப்பட்ட பொழுதும் தான் இது மாறத்தொடங்கியது, ஏனென்றால் மதகுருமார்களின் பொருளாதார நலன்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாக ஆரம்பித்தன.

இந்தப் பிரிவினரின் முக்கியமான ஆதரவு அடித்தளம் ''சந்தைகளில்'' பாரம்பரியமாக வர்த்தகம் மற்றும் வணிகம் செய்து வருபவர்கள், இவர்கள் சர்வதேசரீதியாக போட்டியிடும் வல்லமை இல்லாதவர்கள். ஷாவை சுற்றியிருந்த ஒரு சிறிய குழுவினரான தேசிய மற்றும் வெளிநாட்டு முதலாளித்துவவாதிகளும் பெரும் நிலக்கிழார்களும் 1963-ல் தொடங்கிய தொழில்துறைமயமாக்கல் மற்றும் நவீனமயமாக்கலின் ''வெண்மைப்புரட்சி'' என்றழைக்கப்பட்டதிலிருந்து பயனடைந்தனர். ஆனால் இந்த நிகழ்ச்சிப்போக்கு ஈரானை உலக பொருளாதாரத்தில் ஒன்றிணைக்கவும் உள்நாட்டு முதலாளித்துவ ஆட்சியை தூக்கி வீசுவதற்குரிய சாத்தியமான சமூக சக்தியை பலப்படுத்தியது----- அவற்றின் கீழ் நகர்ப்புற பாட்டாளி வர்க்கம் 1970களின் நடுப் பகுதி வரை மகத்தான வளர்ச்சி பெற்று வந்தது.

ஈரானின் சமூகப் பிரச்சனைகள்

ஏற்கனவே இஸ்லாமிய குடியரசின் ஆரம்ப ஆண்டுகளில் ஆளும் செல்வந்தத் தட்டினருக்குள் பொருளாதாரத்தில் அரசின் பாத்திரம் பொருளாதாரக் கொள்ளைகள் மற்றும் வெளிநாட்டு முதலீட்டிற்கு நாட்டை திறந்துவிடுவது தொடர்பாக கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவின.

சந்தை வணிகர்களிடையே தனக்குள்ள சமூக அடித்தளத்தின் நலன்களில் இசைவைக் கொண்டு வங்கிகளையும் எண்ணெய் தொழிற்துறை உட்பட முக்கிய தொழிற்துறைகளை தேசிய மயமாக்குவதால் ஈரானிய பொருளாதாரத்தில் உலக சந்தையின் தாக்கத்தை கட்டுப்படுத்த கொமேனி முயன்றார். என்றாலும் முதலாளித்துவ உலக பொருளாதாரத்தில் பூகோளமயமாக்கல் அதிகரிப்பதன் கட்டமைப்பிற்குள் ஒரு வெறும் தேசியவாத அடிப்படை மீதான பொருளாதார வளர்ச்சியை நிலைநாட்டுவதற்கு சாத்தியமில்லை.

ஈரான்- ஈராக் போரின் போது (1980-1988) நாடு முழுவதும் இரத்தம் தோய்ந்த நிலையும் அவற்றின் பொருளாதார பிரச்சனைகள் மேலும் ஆழமாகின. அந்தப் போரில் அமெரிக்கா பொதுவாக ஈராக்கை ஆதரித்து ஆனால் சில நேரங்களில் ஈரான் பக்கமும் சாய்ந்தது இரத்தக்களரி பரிமாற்றத்தை ஊக்குவிப்பதன்மூலம் இரண்டு ஆட்சிகளையும் பலவீனப்படுத்துவது அவற்றின் நோக்கமாகும். அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் எதிரான பிரச்சாரத்திற்கும் அப்பால் ஈரான் தலைமை இரகசியமாக அமெரிக்காவுடனும், இஸ்ரேலுடனும் ஒத்துழைத்து வருகிறது என்பதை ஈரான்-கொன்ட்ரா விவகாரம் அம்பலப்படுத்தியது. றேகனின் வெள்ளை மாளிகை இரகசியமாக ஈரானுக்கு ஆயுதங்களை அனுப்பி அதன் மூலம் கிடைக்கும் வருவாயை நிக்கரகுவாவிற்கு எதிராக கோன்ட்ராக்கள் நடத்தி வந்த கறைபடிந்த போருக்கு நிதியளித்தது.

1990-களில் டுடே கட்சி ஈரான் ஆட்சியில் ''சீர்திருத்தவாத'' பிரிவு என்றழைக்கப்பட்டவர்கள் மீது தனது நம்பிக்கையை வைத்தது, அவற்றிற்கு முஹம்மது கட்டாமி தலைமை வகித்தார். இஸ்லாமிய ஈரான் பங்களிப்பு முன்னணியில் சேர்ந்துள்ள பல்வேறு அமைப்புக்கள் அவரை ஆதரித்தன. 1997-ல் கட்டாமி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஆனால் கட்டாமி முகாம் ஜனநாயக உரிமைகளை காப்பதற்கு எந்த குறிப்பிடத்தக்க நடவடிக்கையையும் எடுக்க விரும்பவில்லை. புதிய அரசாங்கம் அடிமட்டத்திலிருந்து ஒரு வெகுஜன இயக்கத்தினால் அச்சுறுத்தல் உணர்கின்ற நேரத்தில் கட்டாமியும் அவரது ஆதரவாளர்களும் தங்களது கடினமான எதிர்ப்பாளர்களுடன் நெருக்கமாக அணிவகுத்துக்கொண்டு தொழிலாளர்களையும் மாணவர்களையும் நசுக்கி வந்தனர், அதே நேரத்தில் ''இடது மற்றும் வலது தீவிரவாதத்தின்'' ஆபத்திற்கு எதிராக அவர்களை கொடுமைப்படுத்தினார். சீர்திருத்தவாத பத்திரிகையாளர்கள் அறிவுஜீவிகள் மற்றும் அரசியல்வாதிகள் பழிவாங்கப்பட்டபோது, சிறையில் அடைக்கப்பட்டபோது அல்லது கொலை செய்யப்பட்டபோது கட்டாமி அவற்றைத் தடுக்க எதுவும் செய்யவில்லை மாறாக அமைதி மற்றும் மிதமாக நடக்கவேண்டும் என்று மட்டுமே கூறி வந்தார்.

பொதுமக்களில் பரந்த வெகுஜனங்களின் நலனுக்கு விரோதமாக கட்டாமி ஒரு ஏகாதிபத்திய-சார்பு மற்றும் நவீன-தாராளவாதக் கொள்கையை கடைப்பிடித்து வந்தார். அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீது புஷ் நிர்வாகம் படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பு நடத்திய நேரத்திலும் ஈரானுக்கு எதிராக இராணுவத் தலையீட்டின் பகிரங்க அச்சுறுத்தல் விடுத்த நேரத்திலும் கூட அமெரிக்காவிடனும் ஐரோப்பாவுடனும் தனது உறவுகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கட்டாமி எதிர்பார்த்தார்.

இதன் விளைவாக கட்டாமி முகாம் மீது ஆரம்பத்தில் கணிசமான அளவிற்கு மாயைகளை உருவாக்கிக் கொண்ட இளைஞர்களும் முல்லா ஆட்சியின் எதிர்ப்பாளர்களும் அப்பட்டமாக செல்வாக்கிழந்தனர் மற்றும் பெருகி வரும் சமூக மற்றும் அரசியல் முரண்பாடுகளை கட்டுப்படுத்த அவர்களால் நீண்டகாலத்திற்கு முடியவில்லை. இந்தச் சூழ்நிலைகளில் தான் முல்லா ஆட்சி கட்டாமியின் வாரிசாக அஹமதினேஜாத்தை முன்கொணர்ந்தது.

சரியான விளக்கம் தரப்படாத ''மாபியா'' கும்பல்களை கட்டுப்படுத்துவது மற்றும் ஓரளவிற்கு சமூக நீதியை நிலைநாட்டுவதது என்ற அடிப்படையில் அஹமதினேஜாத் ஜனாதிபதி பதவியை ஏற்றுக் கொண்ட அதேவேளை, இப்போது அவர் பேரினவாதம் மற்றும் செமிட்டிச-எதிர்ப்பை நாடியிருப்பது ஈரானின் மகத்தான சமூக பிரச்சனைகளுக்கு அவரிடமும் அவரது ஆதரவாளர்களிடமும் எந்தத் தீர்வும் இல்லை என்பதை உறுதியாகக் காட்டுகிறது. ஈரான் எண்ணெய் வளங்கள் செறிந்த நாடு என்றாலும் எண்ணெய் விலை உயர்வுகளால் ஓரளவிற்கு இலாபம் சம்பாதிக்க முடிந்திருக்கிறது என்றாலும் அதன் எண்ணெய் தொழில் உள் கட்டமைப்பு வசதிகள் முற்றிலும் சீர்குலைந்து கிடக்கின்றன மற்றும் எண்ணெய் வருவாய் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றால் ஏராளமான முதலீடுகள் தேவை.

அதிகாரபூர்வமாக ஈரானில் வேலையில்லாதிருப்பவர்களின் எண்ணிக்கை 16 சதவீதம் என்று தற்போது குறித்துக்காட்டியிருந்தாலும், பல ஆய்வாளர்கள் அது 30 அல்லது 35 சதவீதத்திற்கு நெருக்கமாக இருக்கலாம் என்று மதிப்பிடுகின்றனர். 25 வயதிற்கு குறைந்தவர்களில் 42 சதவீத பேர் வேலையில்லாதிருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அங்கு மில்லியன் கணக்கான இளைஞர்கள் உழைப்புச் சந்தைக்கு வருகின்றபோது இந்த சதவீதம் அதிகரிக்கவே செய்யும். நாட்டின் மக்கள் தொகையில் நாற்பது சதவீதம் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்ந்து கொண்டிருப்பதாக அதிகாரபூர்வமற்ற மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. குறைந்த ஊதியம் மற்றும் வறுமை நிலைமைக்கு எதிராக வேலை நிறுத்தங்களும் தொழிலாளர் கிளர்ச்சிகளின் இதர வடிவங்களும் சர்வசாதாரணமாக நடைபெற்றுக் கொண்டுள்ளன.

இதற்கு மாறாக ஒரு சிறிய முல்லா தட்டினர்களும் வர்த்தகர்களும் நாட்டின் வளங்களை குறிப்பாக அதன் எண்ணெய் வளங்களை கொள்ளையடித்ததனால் பெருமளவிற்கு செல்வத்தை குவித்திருக்கின்றனர். இந்த நடமுறையில் செல்வவளம் பெற்றவர் ஆயத்துல்லா ரப்சஞ்சானி உருவில் பரந்த அளவில் பார்க்கப்படுகிறது ஜனாதிபதி தேர்தலில் அஹமதினேஜாதின் ஒரு பிரதான போட்டியாளராவார், ஒரு பில்லியனுக்கு மேற்பட்ட தனிப்பட்ட சொத்துக்கு ஆதிக்கம் செலுத்துபவர் என்று கூறப்படுகிறார்.

அத்தகைய சமூக முரண்பாடுகள் ஒரு அதிகரித்தளவில் வன்முறை வடிவம் எடுக்கின்றன. அஹமதினேஜாத் பதவியேற்று முதல் ஆறு மாதங்களில் ஈரானிலுள்ள குர்திஸ்தான் பாதுகாப்புப் படைகளுக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் நடைபெற்ற இரத்தக்களரி மோதல்கள் மற்றும் தூக்கு தண்டனைகள், சிறை வைப்பு நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்றிருக்கின்றன. தெற்கு ஈரானில், ஈரான் ஜனாதிபதியின் தனிப்பட்ட மெய்காவலர்களின் ஒரு உறுப்பினர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது எந்த சூழ்நிலையில் என்று இன்னும் விளக்கப்படவில்லை

புஷ் நிர்வாகம் மற்றும் இஸ்ரேல் ஆட்சியை பொறுத்தவரை அஹமதினேஜாதின் ஆத்திரமூட்டலை பயன்படுத்தி ஈரானுக்கு எதிராக ஒரு இராணுவத் தாக்குதலை நடத்துவதற்கு தங்களது சொந்த தயாரிப்புகளை செய்து கொண்டிருக்கின்றன. ஈரானின் ஆளும் செல்வந்தத் தட்டினர் தங்களது உள்நாட்டு அரசியல் மற்றும் சமூக நெருக்கடியை கட்டுப்படுத்துவதற்கு கையாண்டு வருகின்ற பேரினவாதமும் மத வெறியும் தவிர்க்க முடியாத அளவிற்கு மத்திய கிழக்கில் போரையும் இந்த பிராந்தியம் முழுவதையும் துண்டு துண்டாக சிதறச் செய்கின்ற அச்சுறுத்தலையும் உயர்த்தியுள்ளது.

மத்திய கிழக்கில் ஐக்கிய சோசலிச அரசுகள்

பனிப்போர் காலத்தில் அரபு மற்றும் ஈரானிய முதலாளித்துவம் மேற்கு ஏகாதிபத்தியத்திற்கும் சோவியத் அணிக்கும் இடையில் நிலவி வந்த பகை உணர்வை பயன்படுத்தி ஓரளவிற்கு தேசிய தன்னாட்சி உரிமையை பெற முடிந்தது மற்றும் தங்களது சொந்த இயற்கை வளங்கள் மீது ஓரளவிற்கு தங்களது கட்டுப்பாட்டை நிலைநாட்ட முடிந்தது. 1990களின் ஆரம்பத்தில் சோவியத் யூனியனும் ஸ்ராலினிச சார்பு நாடுகளும் வீழ்ச்சியுற்ற பின்னர் இந்த சூழ்ச்சிக்கையாளலுக்கு இடமும் மறைந்து விட்டது.

அதிகரித்தளவில் ஒட்டு மொத்த மத்திய கிழக்கும் வெடித்துச் சிதறும் நிலையில் உள்ளது. பூகோளமயமாக்கலின் அழுத்தங்களோடு மகத்தான சமுகப் பிளவுகளும் சேர்ந்து கொண்டன மற்றும் மேற்கு ஏகாதிபத்தியத்தால் ஒரு புதிய தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது----அமெரிக்கா தலைமையில் இந்த பிராந்தியத்தை மறு ஒழுங்கு செய்வதற்கும் அதன் வளங்களில் ஏகபோகம் செலுத்துவதற்கும் முயன்று இரண்டாம் உலகப் போருக்கு பின் உருவாக்கப்பட்ட அரசு அமைப்புக்களை ஒன்றின் பின் ஒரு நாடாக சிதைத்துக் கொண்டு வருகின்றன. இந்த பிராந்தியத்தில் அழுத்தும் பிரச்சனைகள் எதற்கும் ஒரு தேசியவாத அடிப்படையில் தீர்வுகாண முடியாது.

ஈரானின் வரலாறு எதையாவது நிரூபித்து நிற்கிறது என்றால் அது தேசிய முதலாளித்துவத்தின் எந்த பிரிவும் பரந்த வெகுஜனங்களின் சமூக பிரச்சனைகளுக்கு ஒரு முற்போக்கான தீர்வை தரவில்லை என்பதுதான்---- அது கொமேனியோடு சம்மந்தப்பட்ட கடினபோக்கினராக இருந்தாலும் கட்டாமியோடு தொடர்புடைய சீர்திருத்தவாத பிரிவாக இருந்தாலும் அல்லது டுடே கட்சி போன்ற அமைப்புக்கள் தாங்கி நிற்கும் ''முற்போக்கு'' சக்திகளாக இருந்தாலும் அவை எதுவுமே எந்தத் தீர்வையும் தர முடியவில்லை. ஆனால் பல்வேறு கால கட்டங்களில் அந்தப் பிரிவுகள் ஈரானின் முதலாளித்துவ வர்க்கத்திற்குள்ளளேயே தங்களது கடுமையான கன்னைவாத (பிரிவு) போராட்டத்தில் ஈடுபட்டு வந்தாலும் அடி மட்டத்திலிருந்து அச்சுறுத்தல் வரும் போது அனைவரும் இணைந்து கொண்டு அதை எதிர்த்து வந்தார்கள்.

மத்திய கிழக்கு முழுவதிலும் கொதித்துக் கொண்டிருக்கும் சமூக மற்றும் அரசியல் நெருக்கடிக்கு அரபு மற்றும் ஈரானிய முதலாளித்துவங்களின் அனைத்துப் பிரிவுகளின் தேசிய வாதத்திலிருந்து அடிப்படையிலேயே முறித்துக் கொண்டு ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களும் தொழிலாளர்களும் ஒரு புதிய சர்வதேசிய முன்னோக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமும் அவசரமும் ஆகும். ஈரானிலுள்ள முல்லா ஆட்சியின் செமிட்டிச-எதிர்ப்பு பிரச்சாரம் ஈரானிய தொழிலாளர்களை இஸ்ரேலிலுள்ள தங்களது வர்க்க சகோதர சகோதரிகளிடமிருந்து தனிமைப்படுத்தி வைக்கவே பயன்படுகிறது அதன் மூலம் தொழிலாளர்கள் பிற்போக்கு சியோனிசவாதிகளின் கைகளில் விழுந்து மத்திய கிழக்கின் ஒட்டு மொத்த தொழிலாள வர்க்கத்தையும் இனவாத மற்றும் மதவாத அடிப்படையில் பிரிப்பதற்கு முயற்சிக்கும். இந்த அபிவிருத்தியை எதிர்ப்பது, மத்திய கிழக்கில் ஒரு ஐக்கிய சோசலிச அரசிற்கான போராட்டத்தின் அடிப்படையில் ஒட்டு மொத்த பிராந்தியத்தையும் சமூக மற்றும் பொருளாதார ரீதியில் மறு ஒழுங்கமைத்தலை நோக்கமாகக் கொண்டு தொழிலாள வர்க்கம் ஒரு தாக்குதலில் இறங்குவதன் மூலம்தான் சாத்தியமாகும்.

Top of page