World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Campaigners win broad support to place SEP candidate on ballot in California

கலிபோர்னியாவில் சோசலிச சமத்துவக் கட்சி வாக்காளரை வாக்குச்சீட்டில் பதிவு செய்வதற்கு தேர்தல் பிரச்சாரகர்கள் பரந்த ஆதரவை வென்றெடுக்கின்றனர்

By Joe Kay
21 June 2006

Use this version to print | Send this link by email | Email the author

கலிபோர்னியா 29ம் மாவட்டத்தில் சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர்களும் உறுப்பினர்களும் அமெரிக்க சட்டமன்றத்திற்கான (காங்கிரசிற்கான) வாக்குச் சீட்டில் ஜோன் பேர்ட்டனை இடம்பெறச் செய்யும் முயற்சியில் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் இருந்து மிகக் கணிசமான ஆதரவை பெற்றுள்ளனர்.

இதுவரை லொஸ் ஏஞ்சல்சின் சில பகுதிகளான பசடேனா, தெற்கு பசடேனா, ஆல்டடேனா, டெம்பிள் சிட்டி, சான் காப்ரியல், கிளென்டேல், ஆலம்பரா மற்றும் பர்பாங்கின் சில பகுதிகள் ஆகியவை அடங்கியுள்ள இத்தொகுதியில் உள்ள 3.000 வாக்காளர்களிடம் இருந்து பிரச்சாரகர்கள் கையெழுத்துக்களை சேகரித்துள்ளனர். இந்த எண்ணிக்கை SEP வேட்பாளரை வாக்குச்சீட்டில் இடம்பெறச் செய்வதற்கு பரந்த அளவில் மக்களிடையே ஆதரவு உள்ளது என்பதை குறித்தாலும்கூட, குறைந்த தேவையான 8,951 வாக்குகளுக்கு இது மூன்றில் ஒரு பங்காகத்தான் இருக்கிறது. கையெழுத்துக்கள் சேகரிப்பதற்கு வரும் சவால்களை முறியடிக்க வேண்டும் என்ற கருத்துடன் ஆதரவாளர்கள் குறைந்தது 15,000 கையெழுத்துக்களையாவது கலிபோர்னியா மாநிலம் கெடுவிதித்துள்ள ஆகஸ்ட் 11க்குள் சேகரிக்க முயன்று வருகின்றனர்.

அமெரிக்க தேசிய சட்டமன்றத்தின் பிரதிநிதிகள் மன்றத்திற்கு ஒரு சுயேச்சை வேட்பாளர் 1,161 டாலர்களை மனுக்கட்டணமாக கொடுக்க வேண்டும் அல்லது ஜூலை 27ம் தேதிக்குள் கட்டணம் தள்ளுபடி செய்யப்படுவதற்காக 3,000 கையெழுத்துக்களை அளிக்க வேண்டும். எனவே இதுகாறும் சேகரிக்கப்பட்டுள்ள கையெழுத்துக்கள் இக்கட்டணத்தை செலுத்தத் தேவையில்லை என்ற நிலைமையை பேர்ட்டனுக்கு அளிக்கும். இக்கையெழுத்துக்கள் அனைத்தையும் வாக்குச் சீட்டில் இடம்பெறச் செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

இம்மனுவில் கையெழுத்து சேகரிப்பதற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளபோது ஆதரவாளர்கள் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு இருப்பதற்கான பொது எதிர்ப்பை கண்ணுற்றனர்; குறிப்பாக இத்தொகுதியில் இருக்கும் தொழிலாள வர்க்கத்தில் கணிசமான எண்ணிக்கையினர் அவ்வெதிர்ப்பை காட்டியுள்ளனர். ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்னும் SEP கோரிக்கைக்கு வலுவான ஆதரவு இருப்பதுடன் ஜனநாயகக் கட்சி, குடியரசுக் கட்சி இரண்டையும் எதிர்க்கும் தொழிலாளர்களுக்கான ஒரு புதிய கட்சியின் தேவைக்கும் கணிசமான சம்மதமும் உள்ளது.

இம்மாவட்டத்தில் இருக்கும் வேறுபட்ட சமூக அடுக்குகளில் இருந்து மாறுபட்ட எதிர்க் கருத்துக்களை SEP சார்பில் மனுக்கொடுக்கும் பிரச்சாரகர்கள் எதிர்கொண்டனர். பல பாதசாரிகள் இருக்கும் வணிகப் பகுதியான பழைய பசடேனா நகரப்பகுதியில் கையெழுத்துக்களை சேகரிப்பது பொதுவாக கடினமாக உள்ளது. இவர்களில் பலரும் மக்களின் செல்வம் நிறைந்த பிரிவில் உள்ளவர்கள் அல்லது மாவட்டத்திற்கு வெளியே இருப்பவர்கள் ஆவர். இதற்கு மாறாக தொழிலாளர் பகுதிகளில் குறிப்பாக வடக்கு பசடேனா, தெற்கு பசடேனா மற்றும் ஆல்டடேனா பகுதிகளில் SEP இன் கருத்துக்கள் ஆர்வத்துடன் கேட்கப்படுகின்றன; முதல் இரண்டு மாதாங்களில் இப்பகுதிகளில் கையெழுத்துச் சேகரித்தலில் குவிப்புக் காட்டப்பட்டது. பசடேனா நகரக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களிடமிருந்தும் பல கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டன.

SEP பிரச்சாரத்திற்கு மாறுபட்ட எதிர்கொள்ளல், சமூக துருவப்படுத்தல் தொகுதியில் இருப்பதற்கு ஒரு நிகழ்வு சான்றாக உள்ளது. மனு சேகரிப்பவர் ஒரு தம்பதியினரை கையெழுத்திடுமாறு கேட்டார்; "எல்லாம் நன்றாக உள்ளன" என்ற அடிப்படையில் அத்தம்பதியினர் கையெழுத்திட மறுத்துவிட்டனர். கையெழுத்துச் சேகரிப்பவர் மற்றொருவரை அணுகியபோது அவர் ஈராக் ஆக்கிரமிப்பு, சமூகச் சமத்துவமின்மை பற்றிய SEP நிலைப்பாட்டை கேட்டவுடனேயே தன் கையெழுத்தை இட்டார். முந்தைய தம்பதிகள் இதை எதிர்கொண்ட விதம் பற்றி கூறப்பட்டபோது அந்நபர் குறிப்பிட்டார்: "அதன் காரணம், அவர்கள் செல்வந்தர்கள், தங்களுடைய செல்வத்தை பாதுகாக்க விரும்புகின்றனர்."

பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கையில் SEP ஆதரவாளர்கள் ஈராக்கில் உறவினர்கள் இருக்கும் சிலரையும் ஈராக்கிற்கே சென்றிருந்த சிலரையும் எதிர்கொண்டனர். ஈராக்கில் நடக்கும் போர் பற்றி SEP நிலைப்பாடு பற்றி இவர்களில் எவரும் மாறுபட்ட கருத்தைக் கூறவில்லை. ஈராக்கில் தன்னுடைய இரு மருமகன்கள் இருப்பதாகவும், படைகள் திரும்பப் பெற வேண்டும் என்று எவர் அழைப்புக் கொடுத்தாலும் அதற்கு ஆதரவு கொடுக்க இருப்பதாகவும் ஒரு பெண்மணி குறிப்பிட்டார்.

ஈராக்கில் இதுகாறும் கொலையுண்ட 2,500 க்கும் மேற்பட்ட அமெரிக்க துருப்புகளில் நாட்டின் மற்ற மாநிலங்களையும் விட அதிகமாக கலிபோர்னியாவில் இருந்து 258 பேர் இறந்துள்ளனர்.

ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் உடனடியாக திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பியுள்ளதில், ஜனநாயகக் கட்சியினர் எவ்வாறு போரின் ஆரம்ப படையெடுப்பு மற்றும் ஆக்கிரமிப்பின்போது ஆதரவு கொடுத்திருந்தனர் என்பதை பிரச்சாரகர்கள் வலியுறுத்த முற்பட்டனர். அத்தகைய ஆதரவு 2003ல் நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படி இராணுவ சக்தி பயன்படுத்தப்படலாம் என்ற ஒப்புதல் பெறுவதற்கு முக்கிய பங்கு கொண்டிருந்த 29ம் மாவட்டத்தின் பிரதிநிதியான ஆடம் ஷிப்பிடம் உருவகமாக விளங்குகிறது.

இம்மாத தொடக்கத்தில் கலிபோர்னியாவில் நடைபெற்ற ஆரம்ப தேர்வுகள் வெளிக்காட்டியுள்ளதுபோல் இந்த இரு கட்சிமுறை பற்றி ஏற்கனவே ஆழ்ந்த அதிருப்தி நிலவுகிறது. உத்தியோகபூர்வ கட்சிகளுக்கான வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பதற்கு நடத்தப்படும் ஆரம்ப தேர்தல்களில் வாக்களித்தவர்கள் இதுகாறும் இல்லாத குறைந்த அளவில் 30 சதவிகிதம் மட்டுமே இருந்தனர்.

பெருவணிக நலன்களை முக்கியமாக காக்கும் பிரச்சினைகளை பொறுத்த வரையில் இருகட்சிகளுமே நெருங்கி ஒத்துழைக்கின்றன; கலிபோர்னியாவில் உள்ள ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சி கவர்னர் ஆர்னோல்ட் ஷ்வார்ஷ்நெக்கருடைய நிர்வாகத்துடன் நெருக்கமான ஒத்துழைப்பை கொண்டுள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையே எத்தகைய பூசல்கள் இருந்தாலும் இரண்டுமே ஊழல் மிக்கவை பெருவணிகர் செல்வந்தர் ஆகியோருக்கு தாழ்ந்து நடக்கின்றன என்பதுதான் உழைக்கும் மக்களிடையே பரந்த அளவில் இருக்கும் நம்பிக்கையாகும்.

ஜனநாயகக் கட்சியை அம்பலப்படுத்தும் போராட்டமும் தொழிலாள வர்க்கத்திற்காக ஒரு புதிய கட்சி அமைக்கப்பட வேண்டிய தேவையை எழுப்புவதும் மனுவில் கையெழுத்து சேகரிக்கும் பிரச்சாரத்தின் மையப் பிரச்சனையாக வந்தது. சில தொழிலாளர்கள் ஜனநாயகக் கட்சி ஒரு மாற்றீடாக வரலாம் என்ற நம்பிக்கையை கொண்டுள்ளனர்; அல்லது ஒரு புதுக்கட்சி செயல்முறைக்கு வரமுடியாது என்ற கருத்தை கொண்டுள்ளனர். மற்றவர்கள் அரசியல் நடைமுறைக்கே முற்றிலும் விரோதப் போக்கை காட்டி அரசியல் அமைப்புக்கள் அனைத்துமே ஊழல் வாய்ந்தவை என வாதிட்டு, அவ்வடிப்படையில் SEP க்கு ஆதரவாக கையெழுத்திட மறுக்கின்றனர். எனவே தேவையான கையெழுத்துக்களை சேகரிக்கும் முயற்சி ஒரு தீவிர முயற்சியாக மாறி, இரு கட்சிகள், முழு அரசியல் சமூக முறைக்கு எதிராக தொழிலாளர்கள் இடையே ஒரு சோசலிச முன்னோக்கை வளர்ப்பதற்கான போராட்டமாக ஆகியுள்ளது.

SEP இப்பிரச்சாரத்தில் முக்கியத்துவம் கொடுக்கும் மற்றொரு பிரச்சினை புலம்பெயர்ந்தவர் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் கொடுக்கப்பட வேண்டும் என்பதாகும். இந்த முன்னோக்கிற்கு ஹிஸ்பானிய தொழிலாளர்களிடம் இருந்து வலுவான ஆதரவு கிடைத்துள்ளது; அவர்கள்தான் தொகுதி மக்களில் கணிசமாக இருக்கின்றனர். வசந்த காலத்தில் முக்கியமாக ஹிஸ்பானியர் உட்பட நூறாயிரக் கணக்கான தொழிலாளர்கள் புலம்பெயர்ந்தோர் உரிமைகள்மீது வலதுசாரி பிரிவினர் நடத்தும் தாக்குதலை எதிர்த்து லொஸ் ஏஞ்சல்சிற்கு அணிவகுத்துச் சென்றனர். கையெழுத்து திரட்டுபவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் போராட்டத்தை தொழிலாள வர்க்கம் ஒட்டுமொத்தத்தின் போராட்டங்களுடன் பிணைத்துக் கொள்ள வேண்டிய தேவையை எழுப்பினர்.

27 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்துவரும் ஒரு தொழிலாளர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்மீது நடத்தப்படும் தாக்குதலை பற்றிய கவலையை வெளிப்படுத்தினார். ஹிஸ்பானிய தொழிலாளர்கள் மீது அரசியல் நடைமுறை நடத்தும் விரோதச் சூழ்நிலைத் தாக்குதல் பற்றிக் குறிப்பிடுகையில் இப்பெண்மணி, "இதற்கு முன்பு இவ்வாறு இருந்ததே இல்லை." என்று குறிப்பிட்டார். வாஷிங்டனில் அதிகாரபூர்வ விவாதத்தில் இரு கட்சிகளையும் கண்டனத்திற்குட்படுத்திய SEP நிலைப்பாடு பற்றி இவர் வலுவான ஆதரவை தெரிவித்தார். ஒரு புறத்தில் தொழிலாளர்களை பிரித்து அவர்களுடைய சமூக நிலையின்மீது இருக்கும் அதிருப்தியை திசைதிருப்பும் பொருட்டு குடியேறும் தொழிலாளர்களை பலிக்கடா ஆக்க குடியரசுக் கட்சியின் ஒரு பிரிவினர் நினைக்கிறார்கள்; மறுபுறத்திலோ, புஷ் நிர்வாகம் உட்பட, ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியில் ஒரு பிரிவும் தேசிய வெறியைத் தூண்டும் வகையில் "விருந்தாளி தொழிலாளர்" திட்டத்தை செயல்படுத்த விழைந்துள்ளனர்; இதன்படி அமெரிக்க பெருநிறுவனங்களுக்கு குறைவூதிய தொழிலாளர் வருகை எப்பொழுதும் இருக்கும். (See: "SEP candidate in CaliforniaL Extend full rights to all immigrants!")

இந்த குடியிருப்பவர் குடியுரிமை இல்லாதவர், பதிவு செய்யப்படாதவர் என்பதால் மனுவில் கையெழுத்திட முடியாவிட்டாலும், அவர் தன்னுடைய உறவினர்களிடம் காட்டுவதற்காக பல துண்டுப் பிரசுரங்களையும் அறிக்கைகளையும் எடுத்துச் சென்றார். மனுவில் கையெழுத்திட ஆர்வம் காட்டிய பல தொழிலாளர்கள், குடிமக்களாக இல்லாததால் கையெழுத்திட முடியாத நிலையில் இருப்பதையும் SEP கண்ணுற்றது. அமெரிக்காவில் இருக்கும் அனைத்து தொழிலாளர்களுக்கும் முழு அரசியல் உரிமை விரிவாக்கப்பட வேண்டும் என்ற பிரச்சினையை பிரச்சாரகர்கள் முன்வைத்துள்ளனர். அரசியல் வழிவகையில் பங்கு பெறுவதற்கான திறன் எவருக்கும் மறுக்கப்படக் கூடாது.

கையெழுத்து சேகரிப்பவர்கள் அமெரிக்கா மற்றும் உலகம் முழுவதும் உள்ள அனைத்து தேசிய இனங்களின் உழைக்கும் மக்களின் ஐக்கியப்பட்ட ஒரு இயக்கத்தை கட்டியமைப்பதற்கான போராட்டத்துடன் ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருவரதும் பிற்போக்குத்தனமான நிலைப்பாடுகளை எதிர்கொண்டுள்ளனர்.

SEP பிரச்சாரம் செய்கையில், சுயேச்சை வேட்பாளர்கள் பதிவுச் சீட்டுத் தகுதி பெறுவதற்கு கொண்டுள்ள அசாதாரண சுமையை, மனுவிற்குக் கையெழுத்துச் சேகரிப்பதற்கான இடங்களை பெறுவதில்கூட எதிர்கொண்டனர். சுயேச்சை வேட்பாளராக பதிவு பெறுவதற்கு தொகுதி முழுவதிலும் இருக்கும் பதிவான வாக்காளர்களில் 3 சதவிகிதத்தினரின் கையெழுத்துக்களை சேகரிக்கவேண்டும் என்ற ஜனநாயக விரோத தேவையின் அடிப்படையில்தான் இந்த 8,951 கையெழுத்துக்கள் பற்றியது வருகின்றது. கலிபோர்னியாவில் பல மாவட்டங்களிலும் இருப்பது போலவே, 29வது மாவட்டமும் ஜனநாயகக் கட்சிக்கு ஒரு "பாதுகாப்பான" இருக்கை வேண்டும்" என்னும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் பொருள் மனுவில் கையெழுத்திட விருப்பம் உடையவர்கள் உண்மையில் மாவட்டத்திற்கு வெளியே வாழ்கின்றனர்.

இதன் விளைவாக, பிரச்சாரகர்கள் தேவையான கையெழுத்துக்களை பெறுவதற்காக நூறாயிரக்கணக்கான மக்களிடம் பேச வேண்டும்; தொகுதியில் இருக்கும் எல்லாப் பகுதிகளிலும் கையெழுத்துக்களை சேகரிக்க வேண்டும்.

ஓரளவிற்கு மற்ற மாநிலங்களைவிட கலிபோர்னியாவில் மனுவில் கையெழுத்துக்கள் சேகரிக்க இடம் கிடைப்பது சுலபமாகும்; ஏனெனில் கலிபோர்னிய தலைமை நீதிமன்றம் தனியார் இடங்களில் கடை வளாகங்கள், பெரும் கார் நிறுத்தம் இடங்கள் உட்பட சில பகுதிகளில் பிரச்சாரகர்கள் பொது இடங்களில் பாதுகாப்புடன் தடையற்ற பேச்சு சுதந்திரத்தில் ஈடுபடலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. மிச்சிகன் போன்ற சில மாநிலங்களில் கடைகள், வளாகங்கள் ஆகிய இடங்களில் இருந்து மனுக் கொடுப்போர் வாடிக்கையாக அகற்றப்பட்டுவிடுவர். இல்லிநோயில் பொது நூலகத்திற்கு முன்பு கையெழுத்துச் சேகரிக்கும் உரிமையை SEP க்கு வழங்குவதற்கு நகர அதிகாரிகள் மறுக்க முயன்று வருகின்றனர்.

ஆனால் இந்த பெரிய அளவு பாதுகாப்புக்கள் இருந்தபோதிலும்கூட, கலிபோர்னியாவில் SEP இன் கையெழுத்துச் சேகரிப்பவர்களுக்கு இன்னும் பல இடையூறுகள் உள்ளன. எந்த இடத்தில் எவ்விதத்தில் பிரச்சாரம் நடத்தப்பட வேண்டும் என்பதில் வணிக வளாகங்கள் காட்டும் கெடுபிடி பிரச்சாரகர்களை மக்களிடம் பேசுவதற்கு கூட வகை கொடுப்பதில்லை. தடைற்ற பேச்சு உரிமையை மீறாவகையில் கடைகள் தங்களுடைய சொந்த கார் நிறுத்தங்களை பெற்றுள்ளதுடன், தனிமைப்பட்டுள்ளது என்று கூறி, இவை பொது இடமில்லை என வாதிட்டு பிரச்சாரகர்களை அகற்றிவிடுகின்றன.

பிரச்சாரத்தின்போது நடந்த இரு நிகழ்வுகள் வாக்குச் சீட்டுப் பதிவு பெறுதில் இருக்கும் ஜனநாயக விரோதத் தன்மையை உயர்த்திக் காட்டியுள்ளன. ஒரு நிகழ்வில் பிரச்சாரகர்கள் பர்பங்கில் வணிகர் ஜோவின் கடைக்கு முன்னே கையெழுத்து சேகரிக்க முற்பட்டபோது, கையெழுத்திட்ட ஒருவர் கொடுத்த அறிக்கையாவது: "அமெரிக்கா என்ன என்பதை எடுத்துக்காட்டுவதாகத்தான் உள்ளது உங்கள் பணி." ஐந்து நிமிஷங்களுக்கு பின்னர் கடையின் மேலாளர்கள் வெளியே வந்து பிரச்சாரகர்களை இடத்தை விட்டு நீங்குமாறு கூறினர்.

மற்றொரு நிகழ்ச்சியில் ஈராக்கை ஆக்கிரமிப்பதற்கு ஆதரவாக ஒரு குடியிருப்பவர் கருத்துக் கூறினார்; அந்நாட்டில் ஜனநாயகத்தை அது கொண்டுவரும் என்று அவர் வாதிட்டார். வாக்குச் சீட்டில் பதிவு செய்வதற்கே இங்கு SEP க்கு 9,000 வாக்காளர்கள் தேவைப்படுகின்றனர் என்று பிரச்சாரகர் சுட்டிக்காட்டினார். அதற்கு குடியிருப்பவர் கூறிய பதிலாவது: "இங்கு அமெரிக்காவில் உண்மையான ஜனநாயகம் இல்லை." அமெரிக்க இராணுவம் ஈராக்கில் அமெரிக்காவிலேயே அகற்றப்பட்டுவிட்ட ஜனநாயகத்தை கொண்டுவரமுடிவது பற்றிய விவாதத்திற்கு பின், இந்நிலைப்பாட்டில் உள்ள முரண்பாடுகள் பற்றிச் சிறிது விவாதத்திற்குப்பின், குடியிருப்பவர் கையெழுத்திட ஒப்புக் கொண்டார்.

SEP க்கு கணிசமான ஆதரவு இருந்தபோதிலும் வரவிருக்கும் வாரங்களில் மிகப் பெரிய அளவில் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட வேண்டும். ஆகஸ்ட் 11க்குள் 15,000 கையெழுத்துக்கள் சேகரிப்பதற்கு பிரச்சாரகர்கள் வாரத்திற்கு சராசரியாக 1,500 கையெழுத்துக்களை பெற வேண்டும். அதாவது இப்பொழுது நடைபெறும் கையெழுத்து சேகரிப்பைவிட கூடுதலான முறையில் சேகரிப்பு இருக்க வேண்டும்.

வாக்குச் சீட்டில் பதிவு செய்யும் வகையில் SEP க்கு தெற்கு கலிபோர்னியாவில் தொழிலாளர்களுக்கு ஒரு சோசலிச மாற்றீட்டிற்கான வாய்ப்பு வருவதற்கு போராட வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜூன் 22 அன்று பசடேனாவில் ஒரு பொதுக் கூட்டத்தில் ஜோன் பேர்ட்டன் பேசவுள்ளார். அனைத்து WSWS வாசகர்கள் மற்றும் அப்பகுதியில் உள்ள ஆதரவாளர்களை இக்கூட்டத்தில் பங்குபற்றி பிரச்சாரத்திற்கு எனெனன்ன வழிகள் சாத்தியமோ அவ்வளவில் உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

To contact the SEP and help with the campaign, click here.

To donate to the SEP, click here.

Visit the SEP Campaign web site at www.socialequality.com

Top of page