World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Israel launches military onslaught on Gaza

காஸா மீது இஸ்ரேல் மூர்க்கத்தனமான இராணுவத் தாக்குதல்

By Chris Marsden
28 June 2006

Use this version to print | Send this link by email | Email the author

புதன்கிழமை அன்று இஸ்ரேலிய நேரமாகிய காலை 2.30 மணிக்கு, காஸா மீது இஸ்ரேலிய இராணுவப் படைகள் ஏவுகணைகள் மற்றும் வெடிகுண்டுகளைக் கொண்டு இப்பகுதியின் முக்கிய மின்நிலையம் மற்றும் மூன்று பாலங்களை குறி வைத்து பெரும் தாக்குதலை மேற்கொண்டன. காலாட்படையும் கவசவாகன படையும் விமானத்தாக்குதல் முடிவுற்றவுடன் காசாவின் தெற்குப் பகுதியில் நுழைய ஆரம்பித்தன.

மத்திய காஸாவில் நுஸ்ஸூரியட் அகதிகள் முகாமில் அமைந்திருந்த இந்த மின்நிலையம் அழிக்கப்பட்டதால் இந்த பிரதேசத்தின் பெரும்பாலான பகுதிகள் காஸா நகரம் உள்பட இருளில் மூழ்கியது. அழிக்கப்பட்ட மூன்று பாலங்களில் வடக்கு காஸாவுக்கும் தெற்கு காஸாவுக்கும் இடையேயான ஒரு முக்கியமான இணைப்பு பாலமும் அடங்கும்.

ஞாயிற்றுக்கிழமையன்று பாலஸ்தீனிய போராளிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய இராணுவ அலுவலர் கிலாட் ஷாலிட் என்பவரை ஆபத்திலிருந்து மீட்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை என்று இஸ்ரேல் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவிக்கையில், காஸா மீதான தாக்குதலின் விகிதமும், முக்கிய கட்டமைப்புகளை இலக்காக வைத்து தாக்கியிருப்பதும், நூற்றுக்கும் அதிகமான இஸ்ரேலிய இராணுவ பீரங்கி வண்டிகளும் ஆயிரக்கணக்கான படைவீரர்களும் குவிக்கப்பட்டிருந்ததும் பாதுகாப்பு படையினரின் கூற்றின் அபத்தத்தை எடுத்துக்காட்டுகிறது.

ஹமாஸின் ஆயுதம் தாங்கிய ஒரு பிரிவு மற்ற பிரிவுகளுடன் சேர்ந்து இஸ்ரேலிய எல்லைப்புறசாவடியில் ஒரு டாங்க் மீது ஜூன் 25ம் தேதி மேற்கொண்ட இந்த இணைந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருக்கிறது. இந்த திடீர் சோதனையில் இரண்டு இஸ்ரேலிய படைவீரர்கள் கொல்லப்பட்டு ஷாலிட் கைதியாக எடுத்துச்செல்லப்பட்டார்.

ஒரு பகுதியாக அமைதிப் பேச்சுவார்தைகளிலிருந்து தப்பி ஓடும் பாங்கிலும், இந்த சூழ்நிலையை கொழுந்துவிட்டு எரியச் செய்யும் நோக்குடனும் ஷாலிட் சிறைப்பிடிக்கப்பட்டதை இஸ்ரேல் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு வெகுநாட்களாக திட்டமிட்டுள்ளபடி காஸாவின் மீது இராணுவத் தாக்குதலை நடத்தியது.

காஸாவின் மீது இஸ்ரேலிய தாக்குதல் நடந்த தருணத்தில் பரந்த கூர்மையான மற்றும் கடுமையான இஸ்ரேலிய நடவடிக்கைக்கான நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. நாம் முடிவில்லாமல் எப்போதும் இதற்காக காத்துக் கொண்டிருக்க மாட்டோம் என பிரதம மந்திரி எகுட் ஆல்மெர்ட் அறிவித்தார்.

பயங்கரவாத தலைவர்களையும் அதில் ஈடுபட்டுள்ளவர்களையும் அடித்து நொருக்க இராணுவத்துக்கு பரந்த மற்றும் தொடர்ந்து கொண்டிருக்கிற இராணுவ நடவடிக்கைகளுக்கு தயார்செய்யுமாறு நம்முடைய இராணுவ தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு கட்டளை பிறப்பித்திருக்கிறேன். இதில் யாருக்கும் விதி விலக்கில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

நாடு கடத்தப்பட்டு டமாஸ்கஸ்ஸில் வசிக்கும் ஹமாஸின் அரசியல் தலைவரான காலேட் மெஷால் உட்பட ஹமாஸ் இயக்கத் தலைவர்கள் படுகொலை செய்யப்படுவதற்கான இலக்காக இருக்கலாம் என இராணுவ வானொலியில், அமைச்சரும் முன்னாள் இராணுவ ஜெனரலுமான பெஞ்சமின் பென் எலியேஸர் தெரிவித்தார்.

காஸா பகுதிக்கு உணவு விநியோகம், தண்ணீர் மற்றும் எரிவாயு விநியோகம் ஆகியவற்றை துண்டிக்க இஸ்ரேலிய அரசாங்கம் ஏற்கனவே ஒரு தற்காலிக திட்டத்தை அங்கீகரித்திருந்தது.

ஹமாஸின் இராணுவப் பிரிவும் மக்கள் ஆதரவு எதிர்ப்புக் குழுவிலிருந்து ஒன்றிலிருந்து ஒன்றாகப் பிரிந்து வந்த இரண்டு அமைப்புகளான ஸலாடின் பிரிகேட் மற்றும் ஆர்மி ஆப் இஸ்லாம் ஆகியவை இஸ்ரேலால் சிறைப்பிடிக்ப்பட்டுள்ள பாலஸ்தீனிய பெண்மணிகள் மற்றும் குழந்தைகளை விடுவிக்க கோரிய கோரிக்கைகளை, கைவிட்டுப் போய்விட்டது எனக் கூறி ஆல்மெர்ட் மறுத்துவிட்டார். "இது பேச்சுவார்த்தைக்கு உகந்த ஒரு விஷயமல்ல. இது பேரம் பேசப்படுவதற்கான விஷயமுமல்ல" என ஆல்மெர்ட் தெரிவித்ததார். "கைதிகளை விடுவிப்பது என்பது நிச்சயமாக இஸ்ரேலிய அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலில் இல்லை" என்றும் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிய சிறைகளில் சுமார் 100 பாலஸ்தீனிய பெண்மணிகளும் 18 வயதுக்குட்பட்ட 300 இளைஞர்களும் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஷாலிட்டின் தலைவிதிக்கு இஸ்ரேலிய இராணுவமும் அரசாங்கமும் தொழில் ரீதியான கவலையை தெரிவித்தாலும், ஹமாஸின் தலைமையிலான பாலஸ்தீனிய நிர்வாகத்திற்கு எதிராக குரோதங்களை மேற்கொள்வது நியாயப்படுத்தப்படுவதற்காக கெரெம் ஷாலோம் பகுதியில் திடீர் சோதனை நடத்தவும் ஷாலிட் சிறைப்பிடிக்கப்படவும் அனுமதித்தனர் என்பதற்கான சான்று வெளிப்பட்டு வந்தது.

பாலஸ்தீனிய தாக்குதல் குறித்து அரசாங்கம் முன்கூட்டியே அதிக அளவில் விளக்கமான எச்சரிக்கைகளை விடுத்துள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படையான ஷின் பெட் வலியுறுத்துகிறது.

ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரும் தொழிற் கட்சித் தலைவருமான அமிர் பெரேட்ஸ் கூறுகையில், போராளிகள் ஊடுருவல்கள் குறித்த எச்சரிக்கைகள் அவருக்குத் தெரியும் எனவும் ஆனால் இவைகள் தற்போது பொதுப்படையாகவே இருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார். இருந்தாலும், ஷின் பெட்டு வட்டாரங்கள், பேரெட்ஸ் அல்லது இஸ்ரேலிய பாதுகாப்பு படைகளின் (IDF) அதிகாரிகள் சுட்டிக் காண்பித்திருப்பதை விட அதிக அளவிலான தகவல்கள் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு தெரியும் என ஹாரெட்ஸ் நாளிதழிடம் தெரிவித்துள்ளன.

இஸ்ரேலிய காஸா எல்லைப் பகுதியின் தெற்குப் பகுதியில் குறுக்கே கடந்து செல்லும் இடங்களில் சுரங்கப்பாதை ஒன்றை உபயோகித்து படைவீரர்களை கடத்துவதற்காக போராளிகள் திட்டமிட்டிருக்கிறார்கள் என இஸ்ரேலிய படை நிறுவனங்கள் அனைத்தும் தெளிவான எச்சரிக்கைகள் பெற்றிருக்கின்றன என இந்த ஷின் பெட் வட்டாரங்கள் தெரிவித்ததாக ஹாரெட்ஸ் செய்தி அறிக்கை தெரிவிக்கிறது. ஏன் இந்த எச்சரிக்கைகளின் கடுமையை இராணுவம் இயன்ற அளவுக்கு சிறியதாக்கி உள்ளது என்பதை அவர்களால் விளக்க முடியவில்லை" என்றும் அந்த செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

பாலஸ்தீனியர்கள் ஒரு சுரங்கப்பாதையை தோண்டிக் கொண்டிருக்கிறார்கள் என்னும் புலனாய்வு பிரிவின் எச்சரிக்கை சம்பவம் நடந்த ஒரு தினத்துக்கு முன்பாக தங்கள் பிரிவிற்குக் கிடைத்தது என தாக்குதலுக்கு இலக்கான பீரங்கி வண்டி குழுவில் உயிர் பிழைத்திருக்கும் ஒரே நபரான இந்த வண்டி ஓட்டுநர் ரோய் அமிட்டாய் (Ro'i Amitai) கூறியிருப்பதாகவும் தெரிகிறது. தன்னுடைய பீரங்கி வண்டி தீப்பிடித்த போது காலாட்படை பிரிவுத் தலைவர் வண்டியிலிருந்த படைவீரர்களை வெளியேறுமாறு கோரினார் என பீ எர் ஷேவாவில் இருக்கும் மருத்துவ மையத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் அமிட்டாய் தெரிவித்துள்ளார்.

போராளிகளால் தோண்டப்பட்ட சுரங்க வழி அரை மைல் தூரம் இருக்கும் எனவும் இதனைக் கண்டுபிடிக்க IDF தவறியது அசாதரணமானது எனவும் சில வண்ணனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வலதுசாரி எதிர்க்கட்சியை சேர்ந்த சில்வன் ஷாலோம் கூறுகையில், "ஒரு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது என்பது தற்போது தெரிய வந்துள்ளது. இந்த எச்சரிக்கை மிகவும் தெளிவாக இருந்ததாக நான் நினைக்கிறேன். தெளிவான தகவலை உத்தேச இடத்தையும் தாக்கப்போகிற விதம் ஆகியவற்றுடன் அனுப்பியதாக தெரிவிக்கும் ஷின் பெட்டுக்கும் IDF-க்கும் இடையேயான பூசலை நாம் ஆய்வு செய்ய வேண்டும் என்பதில் ஐயமில்லை" எனக் குறிப்பிட்டுள்ளார்.

லிக்குட் ஆய்வு செய்யக் கோரியிருப்பது ஜூலை 10ம் தேதிக்குள் அறிக்கை அனுப்ப வேண்டியது, போரிட வேண்டிய தேவை ஆகிய இரு பொருள்களை ஒன்றாக இணைக்கிறது. நாம் ஹமாஸ் அரசாங்கத்தை பதவி இறக்க வேண்டும் என ஜூவிஷ் ஏஜென்சி கூட்டத்தில் கட்சித் தலைவர் பின்யாமின் நேதான்யாஹூ தெரிவித்துள்ளார்.

புலனாய்வுப் பிரிவின் "தவறுதல்கள்" பாலஸ்தீனிய திடீர் சோதனையின் வெற்றிக்கு காரணம் கற்பிப்பதாக இருந்தாலும் கூட, 12 ஆண்டுகளில் ஒரு இஸ்ரேலிய படைவீரரை சிறைப்பிடித்திருப்பது ஒரு "கொலைகார, வெறுக்கத்தகுந்த மதவெறி கொண்ட இஸ்லாமிய தீவிரவாதிகளின் இஸ்ரேலை அழித்துவிட வேண்டும் என்னும் விருப்பத்திற்கு" காயம் பட்டிருப்பவரின் பதிலடி என ஆல்மெர்ட் காட்டிக் கொண்டிருப்பது இப்போதும் கூட ஒரு மோசடியாகத்தான் இருக்கும்.

இதற்கு முன் நடந்தது என்ன என்பதை "மறந்துவிடும்" இயல்புள்ள தகவல் தொடர்பு ஊடகங்களையும், அமெரிக்காவால் ஆதரிக்கப்பட்டு வரும் நிலையையும் இஸ்ரேலிய அரசாங்கத்தின் பிரச்சாரம் எப்போதும்போல நம்பிக்கொண்டிருக்கிறது. உண்மையில், நிகழ்வுகள் நன்றாகத் திட்டமிட்ட பாணியில்தான் நடந்து வருகின்றன: இஸ்ரேலின் அடக்குமுறை நம்பிக்கை இழந்த நிலையில் மிக மூர்க்கமான எதிர்ப்புகளை அடிக்கடி ஏற்படுத்தி அதன் காரணமாக நியாயப்படுத்த இயலாத விதமாக, அளவுக்கு மீறி அதிகமாக பளுவான இராணுவ பதிலடி கொடுப்பது என்பது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஐந்து மாத காலமாக நீண்டு கொண்டிருக்கும் இஸ்ரேலிய இராணுவத்தின் வலிந்து தாக்கும் நடவடிக்கைகளாலும், கைப்பற்றப்பட்ட பிரதேசத்தில் பொருளாதார முற்றுகை இட்டிருப்பதும், இதனால் சமீப வாரங்களில் 14 பாலஸ்தீனிய அப்பாவி குடிகள் மரணமடைந்ததும், காஸாவில் ஒரு கடற்கரையில் சுற்றுலாவில் இருந்தபோது எட்டு நபர்கள் ஜூன் 9ம் தேதி கொல்லப்பட்டதும் ஞாயிற்றுக்கிழமை இஸ்ரேலிய டாங்க் படைப்பிரிவு மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு காரணங்களாக அமைந்துள்ளன. கடந்த மார்ச் மாதத்திலிருந்து 5,000-க்கும் அதிகமான வெடிகுண்டுகளை இஸ்ரேல் காஸாவின் மீது ஏவி அதனுடைய இருப்புகளையும் அழித்துக்கொண்டு டஜன் கணக்கிலான உயிர்களையும் பறித்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

அத்தகைய வேண்டுமென்றே கணக்கிடப்பட்ட திட்டமிட்ட ஆத்திரமூட்டல்களின் நோக்கம் இஸ்ரேலை அழிக்கும் தங்கள் திட்டத்தை இஸ்வாமியவாதிகள் கைவிடுவதான ஒரு உடன்படிக்கையின் அடிப்படையில் ஃ்பதா, ஹமாஸ் மற்றும் இஸ்லாமிக் ஜிஹாத் ஆகியவற்றிற்கிடையே மீண்டும் ஏற்படும் நட்புறவை நிர்மூலமாக்குவதுமாகும்.

இஸ்ரேலை அழிக்கவும் அமைதி பேச்சுவார்த்தையை பொருத்தமற்றதென கூறுவதையும் கொண்ட தனது சாசனத்தை இரத்து செய்துவிட்டு, கைதிகள் சாசனம் என அழைக்கப்படுவதை ஏற்றுக்கொள்வதற்கான அறிகுறியை நேற்று ஹமாஸ் அறிவித்து இஸ்ரேலுடனான முரண்பாட்டினை தீர்க்கும் வகையில் இரண்டு நாடுகள் என்கிற தீர்வினை ஏற்பதாகவும் அறிவித்துள்ளது.

போராளிக் குழுக்களின் பழிவாங்கல் நடவடிக்கைகள் காஸாவில் தற்போது நடந்துவரும் முழு அளவிலான தாக்குதல்களுக்கான போர்க்காரணத்தை வழங்கலாம் என டெல் அவிவ் நம்பிக்கை கொண்டிருந்தது. இஸ்ரேலிய செய்தி பத்திரிகைகள் அனைத்திலும் முதல் பக்கத்தில் ஷாலிட் சிறைப்பிடிக்கப்பட்டதன் உருவப்படத்தை நன்கு பிரசுரித்துள்ளது கடிமா தலைமையிலான கூட்டணி அரசாங்கத்திற்கு அது கோரும் மன்னிப்பை அளிக்கிறது.

உலகிலேயே மிகுந்த அடர்த்தியான மக்கட் தொகை கொண்ட பகுதிகளில் ஒன்றான காஸாவில் இந்த இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல் 2002ம் ஆண்டில் மேற்குக் கரையில் நூற்றுக்கணக்கான உயிர்களை பலி கொண்ட ஆப்ரேஷன் டிபென்ஸிவ் மற்றும் ஆப்ரேஷன் டெட்டர்மின்டுபாத் சமயத்தில் இருந்ததை காட்டிலும் அதிக அளவிலான இரத்தக்கறை படிந்த ஆற்றலுடையதாக இருக்கக்கூடும். எகிப்தும் இந்த தாக்குதலில் கூட்டாக செயலாற்ற முன்வரும் விருப்பத்தை தெரிவித்துள்ளது. காஸாவின் மீதான இஸ்ரேலிய படையெடுப்பினால் அகதிகளாக வருபவர்களை தடுத்து நிறுத்துவதற்காக 2,500 காவல் துறையினரை எல்லைப் பகுதியில் அமர்த்தியிருப்பதாக கெய்ரோ தெரிவித்துள்ளது.

Top of page