World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

NewYork Times, Los Angeles Times respond to government witch-hunt: a cowardly evasion of democratic principles

அரசாங்கத்தின் சூனிய வேட்டைக்கு நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் விடையிறுத்த வகை: ஜனநாயகக் கோட்பாடுகளை கோழைத்தனமாக தட்டிக்கழித்தல்

By Patrick Martin and Barry Grey
3 July 2006

Use this version to print | Send this link by email | Email the author

செய்தி ஏடுகளின் மீது மக்கார்த்திய மாதிரியிலான தாக்குதலுக்கு விடையிறுக்கும் வகையில் லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸின் ஆசிரியரான டீன் பாக்கே மற்றும் நியூயோர்க் டைம்சின் நிர்வாக ஆசிரியர் பில் கெல்லர் இருவரும் கூட்டறிக்கை ஒன்றை ஜூலை 1 அன்று இரு ஏடுகளிலும் வெளியிட்டனர். புஷ் நிர்வாகம் மற்றும் சட்டமன்றத்தில் உள்ள குடியரசுக் கட்சி தலைவர்கள் ஜூன் 23 அன்று CIA மற்றும் கருவூலத்துறையின் பாரிய இரகசிய செயற்பாடுகளான சர்வதேச வங்கி நடவடிக்கைகள் பற்றிக் கண்காணிப்பு, மீளாய்வு பற்றிய அறிக்கைகளை வெளியிட்டதைத் தொடர்ந்து இப்பூசல் ஆரம்பமாயிற்று.

இதேபோன்ற அறிக்கைகள் வாஷிங்டன் போஸ்ட் மற்றும் வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆகியவற்றிலும் வெளியிடப்பட்டன.

9/11 தாக்குதல்கள் நடந்த 10 நாட்களுக்கு பின்னர் உத்தரவிடப்பட்டிருந்த பயங்கரவாத நிதி கண்டுபிடிப்பு திட்டம் (Terrorist Finance Tracking Programme) பற்றி இக்கட்டுரைகள் கூறியிருந்தன. இத்திட்டத்தின்படி சட்ட மன்றத்தின் மேற்பார்வை இல்லாமல் கருவூலத்துறை உலகின் மிகப்பெரிய நிதியத் தொடர்பு இணைய தளமான, பெல்ஜியத்தை தளமாக கொண்டுள்ள சர்வேதேச வங்கிகளுக்கிடையிலான நிதிய தொலைத்தொடர்பு அமைப்பில் (Society for Worldwide Interbank Financial Telecommunication-SWIFT) இருந்து அதிகம் அறியப்பட்டிராத சர்வதேச நெருக்கடிக்கால பொருளாதார அதிகாரங்கள் சட்டத்தின்படி (IEEPA) நிர்வாக ஆணைகள் மூலம் தகவல்களை சேகரித்து வந்திருந்தது.

ஆனால் துணை ஜனாதிபதி டிக் ஷென்னி, கருவூலத்துறை செயலர் ஜோன் ஸ்நோ மற்றும் பாதுகாப்பு மந்திரி டொனால்ட் ரம்ஸ்பீல்ட் ஆகிய அனைவரும் குறிப்பாக நியூயோர்க் டைம்ஸை இலக்கு கொண்டு, அமெரிக்க பாதுகாப்பு நலன்களுக்கு ஊறு விளைவிப்பதாக குற்றம் சாட்டினர். காங்கிரஸில் உள்ள முக்கிய குடிசரசுக் கட்சித் தலைவர்களும் இப்பூசலில் இறங்கினர்; அவர்களில் சிலர் செய்தித்தாள் நாட்டுத் துரோகம் செய்துவிட்டது என்று குற்றம் சாட்டியதுடன், அதன் மீது குற்றவியல் தடுப்புக்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும் வாதிட்டனர்.

செனட் மன்றத்தின் உளவுத்துறை குழுவின் தலைவரான குடியரசுக் கட்சியின் செனட்டர் பாட் ரோபர்ட்ஸ் தன்னுடைய குழு செய்தித்தாட்கள் மீது அதிகாரபூர்வ விசாரணையை தொடங்கும் என்று அறிவித்தார்; ஒரு முன்னோடியில்லாத வகையிலான செய்தித்தாள்கள் சுதந்திரத்தின்மீதான தாக்குதலில், அமெரிக்க பிரதிநிதிகள் மன்றமும் ஜூன் 29 அன்று செய்திதாட்கள் தகவல்களை கண்டனத்திற்கு உள்ளாக்கி புஷ் நிர்வாகத்தின் ஆணைகளுக்கு அமெரிக்க செய்தி ஊடகம் முற்றிலும் தாழ்ந்து நடக்க வேண்டும் என்றும் கோரியது.

கட்சி நிலைப்பாட்டு ரீதியிலான வாக்கெடுப்பில், 227க்கு 183 என்ற எண்ணிக்கையில் நிறைவேறிய இத்தீர்மானத்தில், இந்த மன்றம் "அனைத்துச் செய்தி ஊடகமும் அமெரிக்க மக்களுடைய வாழ்க்கையை பாதுகாப்பதில் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறது; அரசாங்கத்தின் பயங்கரவாதிகளை அடையாளம் கண்டு, தடுத்து அவர்களை பிடிக்கும் முயற்சிகளின் திறனிலும் ஒத்துழைப்பு கொடுக்கும் வகையில் உளவுத்துறை திட்டங்களில் இரகசிய ஆவணங்களை வெளியிடாமல் இருக்குமாறு எதிர்பார்க்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.

இப்படி கட்சி நிலைப்பாட்டுரீதியிலான வாக்கெடுப்பு மன்றத்தில் இருந்த ஜனநாயகக் கட்சியினருக்கு ஏதோ செய்தி ஊடகத்தின் சுதந்திரம் பற்றி கொள்கையளவில் பெரும் பாதுகாப்பு கொடுக்கவேண்டும் என்பதை பிரதிபலிக்கவில்லை. அவர்களும் கசிவு பற்றியும் அது வெளியிடப்பட்டது பற்றியும் கண்டித்திருந்த தீர்மானத்தில் சேர்ந்திருப்பர்; இதையொட்டி தீர்மானத்திற்கு கிட்டத்தட்ட ஒருமனதான ஆதரவு கிடைத்திருக்கும். ஆனால் இவர்களும் ஒன்றாக சேர்ந்து வாக்களிப்பதை தடுத்ததற்கான காரணம் குடியரசுக் கட்சியின் தலைமையின் தந்திரோபாயம் தான். அது தீர்மானத்தை இயற்றிய விதம் அதன் சொல்லாட்சியில் புஷ் நிர்வாகத்திற்கு அரசியல் ஆதரவு கொடுக்கும் வகையை தெரிவிப்பதாகவும் வங்கிக் கண்காணிப்பின் ஒவ்வொரு கூறுபாட்டிற்கும் ஒப்புதல் கொடுப்பது போலவும் இருந்தது.

பாகேயும் கெல்லரும் எழுதியிருந்த ஜூலை 1ம் தேதிக் கட்டுரை கோழைத்தனம், தெளிவற்றுக் கூறல் ஆகியவற்றிற்கு எடுத்துக் காட்டாக இருந்தது. அரசாங்கத்தின் அழுத்தத்தை நிராகரித்து இரகசிய ஒற்றுவேலைத் திட்டத்தை பற்றி வெளியிடலாம் என்ற தங்கள் முடிவைக் காக்கும் வகையில், ஆசிரியர்கள் பொதுமக்களிடம் இருந்து தகவலை காக்கும் அரசாங்கத்துடனான ஒத்துழைப்பை மேற்கோளிட்டனர். இவ்வாறு செய்கையில் அவர்கள் அமெரிக்காவின் "சுதந்திரச் செய்தி ஊடகம்" எப்படி அரசாங்கம், அதன் உளவுத் துறை ஆகியவற்றின் உடனிணைப்பாக செயலாற்றுகிறது என் பங்கையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

"கடந்த வாரம் எங்கள் செய்தித்தாட்கள் புஷ் நிர்வாகத்தின் சர்வதேச வணிகச் செயற்பாடுகளை கண்காணிக்கும் இரகசியத் திட்டம் பற்றி தகவலை வெளியிட்டது. அதிகாரிகள் வேண்டாம் என்று முறையிட்ட பின்னர்கூட நாங்கள் அவ்வாறு செய்தோம்." என அவர்கள் எழுதினர்.

இந்த முடிவு வழமையானது என்பதைவிட விதிவிலக்கு என்பதை அடிக்கோடிடுவது போல் பாக்கேயும் கெல்லரும் அறிவிக்கின்றனர்: "ஒரு இரகசியத் திட்டம் பற்றி எக்கட்டுரையும் ஒரு பொறுப்பான அதிகாரிக்கு அதுபற்றி கருத்துக் கூறும் நியாயமான வாய்ப்பை கொடுக்காமல் வெளியிடப்படுவதில்லை. தேசியப் பாதுகாப்பிற்கு அத்தகைய வெளயீடு பெரும் ஆபத்து என்று வாதிட்டால், நாங்கள் அதற்காக காத்திருந்து கவனமாக அதிகாரியின் மதிப்புக்குரிய கருத்தைக் கேட்போம். பல நேரமும் அதிகாரிகளுடன் அதிகாரபூர்வமற்ற உரையாடல்களில் இத்தகவல்கள் பற்றி பங்கு பெறுகிறோம்; எனவே அவர்கள் பயமின்றி எங்கள் முதல் பக்கங்களில் வெளியிடும் அதிக இரகசியங்களை பற்றி தங்கள் கருத்துக்களைக் கூறுவர்."

கட்டுரையில் தொடர்ந்து அவர்கள் எழுதுவதாவது: "வெளியிடுவது என்ற முடிவிற்கு நாங்கள் வந்துவிட்டால், அனைவருமே அது பற்றி அறிவர். ஒரு கட்டுரையை நிறுத்துவது என்ற முடிவிற்கு வரும்போது, அது பற்றி ஒருவருக்கும் தெரியாது. ஆனால் கடந்த சில ஆண்டுகளில் எங்கள் ஒவ்வொருவருக்கும் இதை நிறுத்துவதால் ஏற்படும் ஆபத்துக்களைவிட நலன்கள் அதிகம் என்று நிர்வாகம் நம்பவைக்கும்போது அவ்வாறு செய்த அனுபவம் உண்டு. நியூயோர்க் டைம்ஸ் ஆசிரியர்கள் ஓராண்டிற்கு முன்னால் மிக அதிகமாக விவாதிக்கப்பட்ட விவகாரமான தொலைபேசி ஒட்டுக் கேட்பது பற்றிய தன்னுடைய கட்டுரையை மேலும் அது பற்றி எழுதுவது நிர்வாகத்தின் இரகசியத்தை பாதிக்கப்போவதில்லை என்ற உணரும் வரை நிறுத்திவைத்தது ஆகும்."

"ஆனால் வேறு சில உதாரணங்களும் உள்ளன. வெளியிட்டால் ஆபத்திற்குரிய அணு சக்தி இருப்புக்களை காக்கும் முயற்சிகளுக்கு ஊறு விளைவிக்கும் என்று தெரிந்ததால் நியூயோர்க் டைம்ஸ் அத்தகைய கட்டுரைகளை வெளியிடவில்லை; அதேபோல் இப்பொழுதும் முயற்சியில் உள்ள முக்கியமான பயங்கரவாத எதிர்ப்புக்கள் பற்றியும் கட்டுரைகள் வெளியிடப்படுவதில்லை. ஆப்கானிஸ்தானின் கடைவீதியில் நிருபர்களால் வாங்கப்பட்ட கணினி கருவிகளில் கண்டுபிடக்கப்பட்ட அமெரிக்க ஒற்று மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் பற்றி லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் தகவல்களை வெளியிடவில்லை...

"நிர்வாகத்தின் வேண்டுகோளின்பேரில், CIA சிறைகளைக் கொண்டுள்ள குறிப்பிட்ட நாடுகளின் பெயர்களை வாஷிங்டன் போஸ்ட் வெளியிடவில்லை; அத்தகவல் அமெரிக்க வாசகர்களுக்கு தேவையில்லை என்பது எங்கள் கருத்து. தன்னுடைய தேசிய பாதுகாப்பு அமைப்பின் ஒற்றுக் கேட்டல் பற்றிய கட்டுரையில் சில தொழில்நுட்ப தகவல்களையும் கூறவில்லை."

வேறுவிதமாகக் கூறினால், அமெரிக்க அரசாங்கத்தினால் கடத்தப்பட்ட தனிநபர்கள் எந்தச் சட்ட உரிமையும் இல்லாமல், சர்வதேச சட்டம் சித்திரவதை பற்றி வரையறுத்துக் கூறியுள்ள வகைகளை மீறி நடத்தப்பட்டு இரகசிய சிறைகள் செயல்படுவது பற்றி, பொதுமக்களிடம் தகவல் கொடுக்காமல் அமெரிக்காவின் "சான்றுகள்கூடிய செய்தி ஏடுகள்" அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும். இதுதான் "மக்களின் தெரிந்து கொள்ளும் உரிமை" பற்றிக் இவர்கள் கூறிவிருப்பது.!

உலகெங்கிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளை முறையில் அமெரிக்க செய்தி ஊடகம் உடந்தையாக இருக்கிறது என்ற குறிப்பை தவிர, இந்த அறிக்கை புஷ் நிர்வாகம் பயங்கரவாதத்தின் மீதான போர் என்ற பெயரில் ஈராக்கிய போரை நியாயப்படுத்துதல், ஜனநாயக உரிமைகளின்மீதான தாக்குதலை நியாயப்படுத்துதல் ஆகியவற்றிற்கு முற்றிலும் விமர்சனமற்ற வகையில் ஆதரவு கொடுப்பதும் அறிக்கை மூலம் வெளிவருகிறது.

"9/11ல் இருந்து "செய்தித்தாள் ஆசிரியர்கள் அரசாங்கம் பயங்கரவாதிகளின் முகவர்களிடம் இருந்து நாட்டை காக்கும் முயற்சிகளை பற்றித் தகவல் கொடுப்பதில் பெரும் வேதனை தரும் விருப்பங்களைத்தான் எதிர்கொண்டு வந்துள்ளனர். இத்தகைய காலக்கட்டத்தில் எங்களுடைய பணி பொதுமக்கள் சார்பில், எவ்வளவு இடர்பாடுகளுக்கு இடையே அவர்களுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் திறமையுடன் செயலாற்றுகிறார்கள் என்பதை பற்றித் தகவல் கொடுப்பதேயாகும்." என்றும் ஆசிரியர்கள் புலம்பியுள்ளனர்.

இவர்கள் மிக அடிப்படையான உண்மையை கூறத் திறனற்றவர்கள், அல்லது விருப்பமற்றவர்கள்; அதாவது, அமெரிக்க மக்களின் ஜனநாயக உரிமைகள் மீது புஷ் நிர்வாகம் கொண்டுவரும் ஆபத்தின் அளவு ஒரு சில பயங்கரவாதிகளின் செயலைவிட மிகப்பெரியது என்பதே அது. அல் கொய்தாவின் கொலைகார, பிற்போக்கான கருத்துக்கள் எப்படி இருந்தாலும் அது அரசியலமைப்பை மாற்றி அமெரிக்காவில் ஒரு போலீஸ் ஆட்சியை நிறுவமுடியாது. புஷ் நிர்வாகம் ஏற்கனவே அப்பாதையில் பல அடிகள் எடுத்துவைத்துள்ளது. அக்காரணத்திற்காகத்தான் அமெரிக்க அரசியலை நோக்கும் எந்த அறிவார்ந்தவரும் உணரக்கூடிய தன்மையை, செய்தி ஊடகம் வெளியிடும்போது, அரசாங்கம் வன்முறையில் சீறுகிறது: அதாவது அமெரிக்க அரசாங்கம் வாடிக்கையாக சர்வதேச நிதிய நடவடிக்கைகளை கண்காணிக்கிறது என்பது பற்றிய தகவல்தான் அது.

இந்த உண்மை பற்றிய சிறுகுறிப்பு கூட பாகே மற்றும் கெல்லரின் கட்டுரையில் இல்லை. புஷ் நிர்வாகம் முற்றிலும் நியாயமானதாகத்தான் நடந்து கொள்ளுகிறது என்பதை அவர்கள் முழுமையாக ஏற்கின்றனர். ஜனநாயக உரிமைகள் மீது ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் எப்படி இருந்தாலும், பயங்கரவாதத்திற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கூடுதலான உற்சாகத்தில் விளைவந்தவை அவை என்று இவர்கள் கருதுகின்றனர்.

இங்குதான் "தாராளவாத" செய்தி ஊடகம் மற்றும் முதலாளித்துவ அரசாங்கத்திற்கு இடையே இருக்கும் உண்மையான உறவு வெளிப்படுகிறது. ஈராக்கில் ஆக்கிரமிப்பு போரை புஷ் நிர்வாகம் நடத்தி வருகிறது; அதே நேரத்தில் அமெரிக்க மக்களை பெரிதும் அடக்கும் வகையில் உள்கட்டுமான பணிகளில் ஈடுபட்டுவருகிறது. பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகம், இராணுவவாதம் மற்றும் ஜனநாயக உரிமைகளின்மீதான தாக்குதலுக்கு எதிரி என்று தன்னை கருதிக் கொள்ளுவது ஒருபுறம் இருக்க, தன்னை ஒரு அவதானி போல் நடத்திக் கொள்ளாமல், அமெரிக்க ஆளும் உயரடுக்கின் ஆலோசகர் அல்லது பங்காளி என்ற பங்கைத்தான் கொண்டுள்ளது.

Top of page