World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

New exposure of US government spying

Bush administration compiling massive database of bank records

அமெரிக்க அரசாங்க உளவுவேலை பற்றிய புதிய அம்பலம்

வங்கி தகவல்கள் பற்றி புஷ் நிர்வாகம் பாரிய தகவல் தளத்தை திரட்டுகிறது

By Kate Randall
24 June 2006

Use this version to print | Send this link by email | Email the author

நம்பிக்கைக்குரிய நிதி பரிவர்த்தனைகளின் உலகளாவிய இணைப்பு தளத்தை புஷ் நிர்வாகம் இரகசியமாக ஒட்டுக்கேட்டு வங்கிச் சான்றுகள் பற்றிய மிகப் பரந்த தகவல் தளத்தை தொகுத்துக் கொண்டிருக்கிறது. ஜூன் 23ம் தேதி நியூயோர்க் டைம்ஸ் பதிப்பில் வந்துள்ள ஒரு கட்டுரையின்படி, இந்த திட்டம் செப்டம்பர் 11, 2001ல் பயங்கரவாத தாக்குதல் நிகழ்ந்ததை அடுத்து தொடக்கப்பட்டது; அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் பல்லாயிரக்கணக்கான தனிநபர்களின் வங்கி நடவடிக்கைகள் பற்றி இத்திட்டம் ஆராய்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

9/11க்கு 10 நாட்களுக்கு பின்னர் புஷ்ஷின் உத்தரவின் பேரில் பயங்கரவாதிகளுக்கு நிதி செல்லுவதை பற்றிக் கண்டறியும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபின் அமெரிக்க கருவூலத்துறை பெல்ஜியத்தை சேர்ந்த உலகந்தழுவிய வங்கிகளுக்கிடையேயான நிதித் தொலைத்தொடர்பு என்னும் அமைப்பில் இருந்து (Society for Worldwide Interbank Financial Telecommunnication-SWIFT) இல் இருந்து தகவல்களை சேகரித்துள்ளது. அதிகம் அறியப்பட்டிராத 1977ம் ஆண்டு வந்திருந்த சர்வதேச நெருக்கடிக்கால பொருளாதார சட்டத்தின்படி (International Emergency Economic Powers Act-IEEPA) புஷ் நிர்வாகம் இத்திட்டத்திற்கு அதிகாரம் வழங்கியுள்ளது.

நியூயோர்க் டைம்ஸை இத்தகவலை வெளியிட வேண்டாம் என்று நிர்வாகத்தின் அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர். ஆனால் டைம்ஸ் தகவலை வெளியிட்டபின், அமெரிக்க மற்றும் சர்வதேச மக்களுக்கு பாரிய, நீதிமன்ற உத்தரவு இல்லாமல் அந்தரங்கம் ஊடுருவப்படுகின்றது என்ற தகவலை மறைமுகமாக கூறுகையில் அத்செய்தித்தாள் பயங்கரவாதிகளுக்கு உதவியாகவும், உடந்தையாகவும் உள்ளது என்று வெள்ளை மாளிகை கண்டித்தது. ''அமெரிக்கர்களை பாதுகாப்பதற்காக செயல்பட்டுவரும், ஒரு பாதுகாப்பான இரகசியத் திட்டத்தை வெளியிட்ட வகையில் நியூ யோர்க் டைம்ஸ் மீண்டும் எங்களை ஏமாற்றத்திற்கு உட்படுத்திவிட்டது" என்று புஷ் நிர்வாகச் செய்தித் தொடர்பாளர் Dana Perino கூறினார். "நாம் எப்படி பயங்கரவாதத்திற்கு எதிரான போரை நடத்துகிறோம் என்பதை பற்றிய குறிப்புக்களை அல் கொய்தா கண்காணித்து, அதற்கேற்ப அதை பின்னர் மாற்றிக் கொள்ளுகிறது" என்றும் அவர் கூறினார்.

இத்தகைய வங்கிச் சான்றுகளை அரசாங்கம் வேவுபார்த்தலை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு அமைப்பு (National Security Agency-NSA) எவ்வாறு அமெரிக்கர்கள் மீது இரகசிய வேவு பார்த்தலை செய்கிறது என்பது பற்றிய வெளிப்பாடுகளும் வந்துள்ளன; அதில் தொலைபேசி அழைப்புக்களை ஒற்றுக் கேட்டல், மின்னஞ்சல், தொலைநகல் ஆகியவற்றை நீதிமன்ற ஆணையின்றி வேவு பார்த்தல், நீதிமன்ற அனுமதியின்றி தகவல் தளம் அமைத்தல், நீதிமன்ற அனுமதியின்றி பல மில்லியன் கணக்கான உள்நாட்டுத் தொலைபேசி அழைப்புக்களும் ஒற்றுக் கேட்கப்பட்டமையும் அடங்கும். இணையத்தள சேவை வழங்குவோரை அவர்கள் வாடிக்கையாளர் எந்த வலைத் தளங்களை பார்வையிடுகின்றனர் மற்றும் எந்த விலாசத்திற்கு அவர்கள் தகவல் அனுப்பிகின்றனர் என்பதை பற்றிய இரண்டாண்டு சான்றுகளை வழங்குமாறு அரசாங்கத்தின் நீதித்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

முந்தைய அம்பலப்படுத்தப்பட்ட ஒற்றுத் திட்டங்களை போலவே, புஷ் நிர்வாகம் இந்த "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்று அழைக்கப்படும் கருத்தை போலிக் காரணமாக பயன்படுத்தி SWIFT திட்டத்தின் மூலம் ஜனநாயக உரிமைகள் மீது மற்றொரு அரசியலமைப்பு மாறான, சட்ட விரோதத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இப்படி துண்டு துண்டாக இத்தகைய திட்டங்களை பற்றி வரும் வெளியீடுகள் போலீஸ் அரசாங்க வடிவமைப்பிற்கான மிகப் பரந்த உள்கட்டுமானம் செயலுக்கு வந்துவிட்டது பற்றிய ஒரு குறிப்பிட்டளவு தகவல்களைத்தான் கொடுத்துள்ளது.

அரசாங்க அதிகாரிகள் உத்தரவாதம் கொடுத்தாலும்கூட, அதற்கு மாறாக இத்தகவல் வருங்காலத்தில் பயங்கரவாதத்துடன் தொடர்பு இல்லாத தனிநபர்களுக்கு எதிராக பயன்படுத்தக் கூடிய வகையில்தான் தொகுக்கப்படுகிறது என்பது பற்றி எவருக்கும் ஐயுறவு கொள்ளத் தேவையில்லை. இத்திட்டத்தைத் தொடக்கியுள்ளவர்கள் தங்கள் செல்வத்திற்கும் அதிகாரத்திற்கும் பெரும் ஆபத்து இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் அல்ல என்றும் அமெரிக்க மக்களிடம் இருந்துதான் வரும் எனக் கருதுகின்றனர் என்பது புலனாகிறது. அரசியலில் எதிர்ப்பவர்கள், ஈராக்கிய போர் மற்றும் பிற வருங்கால போர்களை எதிர்ப்பவர்கள், அமெரிக்க ஆட்சி உயரடுக்கின் வலதுசாரிகளின் உள்நாட்டுக் கொள்கைகளை எதிர்ப்பவர்கள் ஆகியவர்களை பற்றிய தகவல் தொகுப்புக்கள் நடக்கின்றன.

லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸிடம் பேசிய அரசாங்க அதிகாரிகள் SWIFT திட்டத்தில் இருந்து சேகரிக்கப்பட்டுள்ள தகவல்கள் "தொடர்பு பகுத்தாய்வில் (Link analysis) பயன்படுத்தப்படலாம் என்று கூறினர்; இந்த ஆய்வு வகை தனிநபர் உரிமையை பாதுகாப்பவர்களால் குறைகூறப்பட்டுள்ளது; ஏனெனில் பயங்கரவாதிகள் என சந்தேகத்திற்கிடமானர்வர்களுடனான நிரபராதியான மக்களின் அன்றாட நிதிய நடவடிக்கைகளை பற்றியும் தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.

SWIFT இனால் சேகரிக்கப்படும் தனிப்பட் தகவல்கள் எப்படிப் பார்த்தாலும் தேசிய பாதுகாப்பு அமைப்பின் திட்டங்களின் மூலம் திரட்டப்படும் தகவல்களைவிட மிக அதிகமான விவரங்களை கொண்டுள்ளன; மேலும் விலாசம், தொலைபேசி எண்கள், சமூகசேவை எண்கள், வேலைத் தகவல் என்று அனைத்துத் தகவல்களையும் வங்கிமூலம் நிதி அனுப்புவர்கள், பெறுபவர்களை பற்றி கண்டறிய இது பயன்படுத்தப்பட முடியும்; இவை அனைத்தும் வங்கிச் சான்றுகளில் நம்பிக்கைக்குரியவை எனக் கூறப்படுபவையாகும்.

மொத்தத் தகவல் மற்றும் தனிநபர்கள் இவ்வாறு தேடிக் கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகும். மத்திய வங்கிமுறையில் மத்திய நரம்பு முறை என்று கருதப்படும் வகையில் SWIFT கிட்டத்தட்ட 7,800 வங்கிகள் மற்றும் தரகு நிறுவனங்களை தொடர்புபடுத்தி நாள் ஒன்றுக்கு 12.7 மில்லியன் தகவல்களை தொகுக்கிறது. இத்தகைய மிகப்பெரிய இணையதளத்தை ஆராயும் வகையில் கருவூலத்துறை தனிப்பட்ட நபர்கள் பற்றித் தொடர்பான மிகப் பெரிய, தொடர்ச்சியான தகவல்களை தொகுத்துள்ளது.

கருவூலத்துறையின் பயங்கரவாதம் மற்றும் நிதிய உளவுப் பிரிவின் உதவிச் செயலாளரான ஸ்டுவர்ட் லீவீயின் கருத்தின்படி மாதத்திற்கு ஒரு முறை ஒரு புதிய பிடி ஆணையை வெளியிடுகிறது. இதைத் தொடர்ந்து SWIFT மிகப் பெரிய அளவிலான மின்னஞ்சல் முறை நிதியத் தகவல்களை கொடுக்கிறது; 9/11ல் இருந்து அரசாங்க அதிகாரிகள் தொகுத்து வரும் தகவல் தளங்களில் இது சேர்க்கப்பட்டுவிடுகிறது. இதன் பின் கருவூலத்துறை இத்தகவலை CIA, FBI போன்ற துறைகளின் பகுப்பாய்வாளர்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறது; அவர்கள் குறிப்பிட்ட நபர்களை பற்றிய ஆய்வைப் பின்னர் மேற்கொள்ளலாம்.

ஒரு சந்தேகத்திற்குரியவரை அடையாளம் அறிந்தபின், "சோதனை நடத்தி அவர் யாருக்குப் பணம் அனுப்பினார், அவருக்கு யார் பணம் அனுப்பினார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியும்" என்று லீவி தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் "பல்லாயிரக்கணக்கான" அத்தகைய சோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

"SWIFT தகவல் முறை வேலைசெய்யும் விதத்தில், விலாசங்கள், தொலைபேசி எண்கள், உண்மைப் பெயர்கள், வங்கி கணக்கு எண்கள் போன்ற நமக்கு அனைத்துவிதமான உறுதியான தகவலும் மற்றும் அரசாங்க அதிகாரிகள் தொடரக்கூடிய வகையில், நடவடிக்கை எடுக்கக் கூடிய வகையிலான ஏராளமான தேவையான விஷயங்களும் தகவல்களும் கிடைக்கின்றன." என்று லீவீ சேர்த்துக் கொண்டார்.

நியூயோர்க் டைம்ஸ் இன்னும் சில செய்தி வெளியீடுகள் SWIFT நடவடிக்கைகள் பற்றி தகவல்களை வெளியிடத் தயாராகிவிட்டன என்று தெரிந்த பின்னர்தான் புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகள் செய்தி ஊடகத்திடம் இதுபற்றிப் பேசினர். இதன் சட்டபூர்வ தன்மை பற்றி அவர்கள் உடனடியாக பாதுகாத்து, பயங்கரவாத சந்தேகத்திற்கு உரியவர்களுக்கு எதிராக மட்டுமே இது பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறினர்.

அரசாங்கத்தின் பயங்கரவாதம் பற்றிய ஆய்வாளர்கள் 1990 களில் இருந்து SWIFT இன் தகவல் தளத்திற்கான அணுகுதல் வேண்டும் என்று கோரிவந்துள்ளனர்; அரசாங்கம் மற்றும் தொழில்துறை அதிகாரிகள் தனியார் நிதியச்சான்றுகள் தடை பற்றிய சட்டங்களை மேற்கோளிட்டு இதற்கு அனுமதி மறுத்து வந்துள்ளனர். 9/11க்கு பின்னர் புஷ் இந்த அக்கறைகளை உதறிவிட்டு, சர்வதேச நெருக்கடிக்கால பொருளாதார சட்டத்தின்படி கீழ் தன்னுடைய அதிகாரத்தை கொண்டு "அசாதாரண, மிகப் பெரிய அச்சுறுத்தலுடன்" தொடர்பு இருக்கக் கூடிய எந்த வெளிநாட்டு நிதிப் பரிவர்த்தனையையும் "ஆராய, கட்டுப்படுத்த, தடுக்க" பயன்படுத்தலாம் என்று கூறிவிட்டார்.

தேசிய பாதுகாப்பு அமைப்பின் உளவுவேலை பற்றிய வெளிப்பாடுகளை போலவே, SWIFT திட்டம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதும், இரு அரசியல் கட்சிகள் மற்றும் செய்தி ஊடகத்தில் இருந்து எந்த தீவிர எதிர்ப்பும் வெளிப்படாது. எவ்வித தீவிரச் சட்டமற்ற விசாரணைகளும் ஏற்படாது, எக்கட்சியும் இத்திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறாது, இதற்குக் காரணமாக புஷ்ஷில் இருந்து அடிமட்டம் வரை உள்ளவர்கள் எந்தப் பொறுப்பையும் ஏற்க வேண்டி வராது.

தேசிய பாதுகாப்பு அமைப்பின் வேவு நடவடிக்கைகள் போலவே SWIFT திட்டம் இருப்பது பற்றி முக்கிய சட்ட மன்ற ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சி தலைவர்களுக்கு நீண்ட காலமாகவே நன்கு தெரியும். இவர்கள் அனைவருமே ஒன்று சேர்ந்து கொண்டு அமெரிக்க மக்களை இருளில் மூழ்கடித்துள்ளனர். திட்டத்தின் செயற்பாடு பற்றி இரண்டு பிரதிநிதிகள் மன்றத்தினருக்கும் மற்றும் செனட் உளவுத்துறை குழுக்களுக்கும் முழுமையாகக் கூறப்பட்டுள்ளனர் என்பதை கருவூலச் செயலர் ஸ்நோ குறிப்பிட்டுத் தெரிவித்துள்ளார். இது ஒரு போலிஸ் அரசு போன்ற நடவடிக்கைக்கு இரண்டு கட்சிகளின் ஆதரவு இருப்பதை தெளிவாக காட்டுகின்றது.

தேசிய பாதுகாப்பு அமைப்பின் ஒற்று வேலைக்கு பின்னர், செனட்டின் நீதித்துறைக்குழுவின் தலைவரான ஆர்லன் ஸ்பெக்டர் (பென்சில்வானியாவில் இருந்து குடியரசுக் கட்சி சார்பில் இருப்பவர்), வெள்ளை மாளிகையில் இருந்து வந்த அழுத்தத்தின் விளைவாக குழுவின் முன் அனைத்து தொலைத் தொடர்பு நிறுவன மேலாளர்களும் சாட்சியம் அளிக்க வேண்டும் என்று தான் முன்வைத்த அச்சுறுத்தலை திரும்பப் பெற்றுக் கொண்டுவிட்டார்.

ஸ்பெக்டரும் மற்றொரு குடியரசுக் கட்சி செனட்டருமான (ஒகாயோவின்) மைக் டி வைன்னும் அமெரிக்கர்கள்மீது தேசிய பாதுகாப்பு அமைப்பின் இலத்திரோனிக் முறைக் கண்காணிப்பு, தகவல் சேகரிப்பு ஆகியவை நிர்வாகத்துறை கொண்டிருப்பதற்கு சட்டபூர்வ மறைப்பு கொடுக்கும் வகையிலும் வெளியுறவு உளவுத்துறை கண்காணிப்பு நீதிமன்றத்தை ஒதுக்கும் வகையில் பிடி ஆணைகள் இல்லாமல் செயல்படும் வகையில் சட்ட வரைவுகளை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஸ்பெக்டராலும் ஒரு ஜனநாயக செனட்டர் டியான ஃபென்ஸ்ரைன் (கலிபோர்னியா) ஆலும் கொண்டுவரப்படவிருக்கும் மற்றொரு சட்ட வரைவு நீதிமன்றத்தின் ஒப்புதலை நாடும் நடைமுறைகளை நடைமுறைப்படுத்துவது பற்றிக் குறித்துள்ளது.

மேலும் செனட்டின் ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் கடந்த மாதம் ஒரே பக்கம் சேர்ந்து 78-15 என்ற வாக்கெடுப்பின்படி, CIA வின் புதிய இயக்குனராக ஜெனரல் மைக்கேல் ஹேடனை புஷ் நியமித்ததை உறுதி செய்தனர். இவர்தான் தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைவராக அதன் வேவு பார்க்கும் நடவடிக்கைகளுக்கு 9/11க்குப் பின்னர் இருந்தார். செனட் நீதித்துறைக் குழுவிற்கு முன் தன்னுடைய நியமன ஒப்புதலின் போது இத்திட்டத்தை பெரிதும் பாதுகாத்து பேசியதோடு இல்லாமல், தான்தான் இத்திட்டத்தின் முக்கிய கர்த்தா என்றும் தெரிவித்திருந்தார்.

Top of page