World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Protests denounce Arab leaders' complicity in Israeli assault

இஸ்ரேல் தாக்குதலுக்கு உடந்தையாக உள்ள அரேபிய தலைவர்களை எதிர்ப்புக்கள் கண்டனத்திற்கு உட்படுத்துகின்றன

By Mike Head
20 July 2006

Use this version to print | Send this link by email | Email the author

பாலஸ்தீனிய மற்றும் அரேபிய பொதுமக்களாகிய பாதிப்பாளர்களுக்கும் அரபு முதலாளித்துவ ஆளும் உயரடுக்கினருக்கும் இடையே இருக்கும் பரந்த பிளவை லெபனான் மற்றும் காசா மீது இஸ்ரேலியர்கள் நடத்தும் தாக்குதல் அப்பட்டமாகக் காட்டுகிறது. மத்திய கிழக்கு முழுவதும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை கண்டித்து எதிர்ப்புக்கள் வெடித்துள்ளது மட்டுமின்றி, இஸ்ரேலுடைய தாக்குதலை வெளிப்படையாக ஆதரித்துள்ள அரபு அரசாங்கங்கள் அல்லது தயக்கத்துடன் அதைப்பற்றி எதிர்ப்புக்கள் கூறியதோடு நிறுத்திக் கொண்டுள்ள அரசாங்கங்கள் மீது எதிர்ப்புக்கள் வெடித்துள்ளன.

பல தசாப்தங்களாக அரபு முதலாளித்துவ வர்க்கம் வாஷிங்டனுடனும் இஸ்ரேலுடனும், உடைமைகளை இழந்த பாலஸ்தீனிய மக்கள், மற்றும் அரபு உழைக்கும் மக்களுடைய முழுமையான இழப்பில் தங்கள் நலன்களை தக்க வைத்துக் கொள்ளும் வகையில் ஒத்துழைத்து செயல்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை இந்த அளவிற்கு இஸ்ரேலிய இராணுவ ஆக்கிரமிப்பிற்கு வெளிப்படையாக உடந்தையாக இருந்ததுபோல் இருந்ததில்லை. முன்பெல்லாம் அரபு அரசாங்கங்கள் திரைக்கு பின்னே இருந்து வாஷிங்டனுக்கு அல்லது டெல் அவிவிற்கு உத்தரவாதங்கள் கொடுப்பர்; ஆனால் வெளிப்படையாக இஸ்ரேலின் நேரடி தாக்குதலில் அகப்பட்டுக் கொள்ளும் ஒரு அரபு இயக்கத்தை பகிரங்கமாக கண்டிக்க மாட்டார்கள்.

லெபனான்மீது இஸ்ரேல் தன்னுடைய தாக்குதலை தொடங்குவதற்கு முன்னரே, எகிப்திய அரசாங்கம் ஜூன் 15 அன்று இஸ்ரேல் காசாப்பகுதியின்மீது நடத்திய தாக்குதலுக்கு இணைந்த வகையில், காசாவுடன் தன்னுடைய எல்லைகளை மூடிய வகையில் இஸ்ரேலுடன் ஒத்துழைத்தது. காசாப் பகுதியில் இருந்து படையெடுப்பில் இருந்து ஓடிவரும் அகதிகளை தடுத்து நிறுத்த 2,500 போலீசாரை எல்லையில் நிறுத்தி வைத்ததுடன் தங்கள் இல்லங்களை காப்பதற்காக எகிப்தில் இருந்து திரும்பி வரும் காசா மக்களையும் தடுத்தது. இந்த நடவடிக்கை ஏற்கனவே பெரும் சீற்றத்தை எகிப்தில் தோற்றுவித்தது; கடந்த வெள்ளியன்று பாலஸ்தீனிய போராளிகள் ரஃபா எல்லையில் கடக்கும் இடத்தை வற்புறுத்தி திறந்து, எகிப்தின் பக்கம் அகப்பட்டுக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மக்கள் மேலே செல்ல வகை செய்தனர்.

அதேதினத்தில் லெபனான் பற்றி விவாதிக்க அரபு லீக் வெளியுறவு மந்திரிகள் கூட்டத்தை கூட்டுகையில், ஜனாதிபதி புஷ், ஜோர்டான், எகிப்து, செளதி அரேபியா என்னும் அமெரிக்காவின் நெருக்கமான அரபு நட்பு நாடுகளின் தலைவர்களை அழைத்து அமெரிக்க-இஸ்ரேலிய பிரச்சார வழியைப் பின்பற்றுமாறு உத்தரவிட்டார்; இதன்படி ஹெஸ்பொல்லாவும், அதன் உட்குறிப்பின்படி ஈரானிலும் சிரியாவிலும் உள்ள ஹெஸ்பொல்லாவின் ஆதரவாளர்களும்தான் லெபனானில் இஸ்ரேலியர்களின் படுகொலைக்கு பொறுப்பு என்று கருதப்படுகின்றனர்.

ஜோர்டானின் மன்னர் அப்துல்லாவும், எகிப்திய ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கும் இதை எதிர்கொள்ளும் வகையில் கூட்டு அறிக்கை ஒன்றை வெள்ளியன்று வெளியிட்டனர்; அதில் "அரேபிய நலன்களுக்கு தக்கபடி நடந்து கொள்ளாத சாகசவாதத்தை" ஹெஸ்பொல்லா காட்டுவதாக கண்டித்ததுடன், அத்தகைய நடவடிக்கைகள் இப்பகுதி முழுவதையும் "எதிர்பாரா மோதல்களுக்கு" இட்டுச் செல்லும் என்றும் எச்சரித்தனர். இதற்குப் பின், ஒரு செளதி செய்தித் தொடர்பாளர் ஹெஸ்பொல்லாவின் "அடாவடித்தனமான நடவடிக்கைகள் அரேபிய நாடுகளை பெரும் ஆபத்திற்கு உட்படுத்தும்; அதுவும் இந்த நாடுகள் இதைப்பற்றி ஏதும் கூறமுடியாத நிலையில் இது நடக்கும்" என்று குற்றம் சாட்டினார்.

முபாரக்கும் அப்துல்லாவும் கெய்ரோவில் பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டிருந்த நேரத்தில், அருகில் இருந்து அல்-அசார் மசூதியில் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிட்டத்தட்ட 5,000 பேர் அணிவகுத்து ஆர்ப்பரித்தனர். ஜோர்டானின் தலைநகரமான அம்மானில், 2000க்கும் மேற்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் வெள்ளிக் கிழமை பிரார்த்தனைகளுக்கு பின்னர் ஒரு மசூதியில் கூடி "சியோனிஸ்டுகளே வெளியேறுங்கள், வெளியேறுங்கள்" என்றும், "லெபனான், பாலஸ்தீனிய மற்றும் ஜோர்டான் நாடுகளின் மக்கள் ஓரினத்தவரே" என்றும் கோஷமிட்டனர்.

இதற்கு மறுநாள் அரபு லீக்கின் உச்சிமாநாடு கெய்ரோவில் நடந்த போது, செய்தியாளர்களுக்கு விவரித்த பேராளர்களின் கருத்துப்படி, செளதி அரேபிய வெளியுறவு மந்திரி செளதி அல் பைசல், "எதிர்பாராத வகையில் பொருத்தமற்ற, பொறுப்பற்ற செயல்களை" புரிந்ததற்காக ஹெஸ்பொல்லா மீது குற்றம் சாட்டியபோது, ஜோர்டான் மற்றும் எகிப்து, இன்னும் பல பேர்சிய வளைகுடா நாடுகள், பாலஸ்தீனிய நிர்வாகம் ஆகியவற்றின் ஆதரவைப் பெற்றார். கூட்டறிக்கையில் உடன்பாடு இல்லாத காரணத்தால், கூட்டம் இஸ்ரேலின் பதில் நடவடிக்கை பற்றி தொடர்ச்சியான பெயரளவிற்கான விமர்சனங்கள் மற்றும் பாசாங்குத்தனமான "பாலஸ்தீனிய, லெபனிய மக்களுடன் ஒற்றுமை" பற்றிய அறிக்கைகளுடன் முடிவடைந்தது: மேலும் போர் நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்யவேண்டும் என்று ஐ.நா.பாதுகாப்புக் குழுவிற்கு கோரிக்கையும் அளிக்கப்பட்டது. இதே நேரத்தில் G8 உச்சி மாநாடு ரஷ்யாவில் நடைபெற்றபோது, புஷ்ஷும், வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைசும் அரபு நாடுகள் பலவும் ஹெஸ்பொல்லாவை விமர்சித்த ஒப்புதல் பற்றி குறிப்பிட்டனர். G8 அல்லது ஐ.நா, போர் ஒப்பந்தம் பற்றி தீர்மானம் ஏதும் கொண்டுவருமானால் அது தடைசெய்யப்படும் என்பதை அரபுத்தலைவர்களுக்கு விளக்கியுள்ளதாகவும் புஷ் கூறிவிட்டார்.

அரபு லீக் கூட்டத்திற்கு பின்னர், எதிர்ப்புக்கள் அப் பகுதி முழுவதும் நடத்தப்பட்டன; இதில் பங்கேற்ற செய்தியாளர்கள் ஹெஸ்பொல்லாவின் ஷியைட் ஆதரவாளர்கள் மட்டும் அல்லாமல் சுன்னிக்களும், மதசார்பு அற்ற இயக்கங்களின் உறுப்பினர்களும் ஆவர் என்று குறிப்பிட்டுள்ளனர். சில சமயங்கள் அவர்கள் போலீஸ் அடக்குமுறையை மீறி ஆர்ப்பரித்தனர்.

எகிப்தின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன; அரபு ஆட்சிகளின் செயலற்ற தன்மையை ஆர்ப்பாட்டக்காரர்கள் கண்டித்து, எகிப்தின் வடக்கு எல்லைகளை திறந்து மக்கள் "தங்கள் பாலஸ்தீனிய, லெபனிய சகோதரர்களுடன் இணைந்து போரிடுவதற்கு வகை செய்யப்பட வேண்டும்" என்று அவர்கள் கோரியதாக செய்தியாளர்களின் தகவல்கள் கூறுகின்றன. இஸ்ரேலுடன் உறவுகள் துண்டிக்கப்பட வேண்டும் என்றும் எதிர்ப்பாளர்கள் கூறியதுடன் அதன் தூதர் கெய்ரோவில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்றும் கோரினர். ஒரு செய்தித் தாள் எகிப்திய வழக்கறிஞர் ஒருவர், "அரபு அரசர்கள், ஜனாதிபதிகள் மற்றும் ஷேக்குகளே; உங்கள் மீது காறி உமிழ்கிறேன்" என எழுதப்பட்டிருந்த சொற்களைக் கொண்ட பாலஸ்தீனியக் கொடி ஒன்றை உயர்த்தி ஏந்தி வந்ததை வெளியிட்டது.

ஜோர்டானிய நகரங்களும் வெகுஜன ஆர்ப்பாட்டங்களை கண்ணுற்றன என்று துபாயை தளமாகக் கொண்ட அல் அராபியாத் தொலைக்காட்சி கூறியுள்ளது. அதற்கு முந்தைய தினம் கலகப்படைப்பிரிவு போலீசார் பல வழிபாட்டாளர்களை அடித்து கைது செய்ததுடன் அம்மானில் இருந்து ஒரு மசூதியில் முஸ்லீம் சகோதரத்துவம் என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பாலஸ்தீனிய ஆதரவு ஆர்ப்பாட்டத்தையும் கலைத்துவிட்டது. முன்கூட்டிய அனுமதி பெற்றால்தான் பொதுமக்கள் கூடலாம் என்ற சட்டத்தை மீறியதற்காக பல ஆயிரக்கணக்கான மக்கள் பங்கு பெற்ற கூட்டம் கலைக்கப்பட்டது என்று போலீஸ் வட்டாரங்கள் கூறியுள்ளன.

குவைத்தில் அமெரிக்க தூதரகத்தின் முன்பு கடந்த சனியன்று நூற்றுக்கணக்கான மக்கள் ஹெஸ்பொல்லாவிற்கு ஆதரவு கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். குவைத்தில் நிலவும் கடுமையான நிலையில், இத்தகைய எதிர்ப்பு ஒரு அபூர்வ நிகழ்வு ஆகும். ஹெஸ்பொல்லாவிற்கு ஆதரவான கோஷங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பியதுடன் அமெரிக்கா மத்திய கிழக்கில் கொண்டுள்ள கொள்கையையும் கண்டித்தனர். "அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒரே மாதிரியான பயங்கரவாதத்தின் இரு முகங்களாகும்" என்று ஒரு பதாகையில் எழுதப்பட்டிருந்தது.

பஹ்ரைனில் சுமார் 10,000 சுன்னிகளும் ஷியைட்டுக்களும் மனாமா தலைநகரத்தில் அணிவகுத்துச் சென்றனர். ஷியைட்டுக்கள் ஆதிக்கம் அதிகமுள்ள வளைகுடா முடியாட்சியில் 48 மணி நேரத்திற்குள் இத்தகைய எதிர்ப்பு மூன்றாம் தடைவயாக நிகழ்ந்தது; இங்கு பொதுவாக ஆர்ப்பாட்டங்கள் நடத்த அரசாங்க அனுமதி கிடைப்பதற்கு மூன்று நாட்கள் ஆகும். நூற்றுக்கணக்கான பஹ்ரைன் வாழ் ஷியைட்டுக்களும் மனாமாவிற்கு 15 கிலோமீட்டர் தெற்கேயுள்ள கர்ஜாகனில் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரித்தனர். "தோற்கடிப்பட்ட அரேபியர்களே, நீங்கள் மெளனமாக இருப்பது குற்றம்" என்று அரபு அரசாங்கங்களை கண்டித்து அவர்கள் கோஷமெழுப்பினர்.

அரேபிய அரசாங்கங்கள் "பில்லியன் கணக்கில் பாதுகாப்புப் படைகளுக்கு செலவழிக்கின்றன; அவையோ எங்களை பாதுகாப்பதில்லை. ஆனால் மக்கள் தங்களை காத்துக்கொள்ள களத்தில் இறங்கும்போது, அவர்கள் துரோகிகள் என்று முத்திரையிடப்படுகின்றனர்" என்ற குறையை ஒரு பெண் ஆர்ப்பாட்டக்காரர் கூறினார். மற்றொரு ஆர்ப்பாட்டக்காரர் கூறியதாவது: "ஐ.நா.விற்கும் மேலை நாடுகளுக்கும் நாம் மனித நிலையைவிடத் தாழ்ந்தவர்கள் என்ற கருத்து. நூற்றுக்கணக்கான அரேபியர்கள் ஒவ்வொரு நாளும் கொல்லப்படுகின்றனர்; ஆனால் உலகம் இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டால்தான் அக்கறை கொள்ளுகிறது; அவர்களுடைய கைகளில் எங்களுடைய விதிகளை இவர்கள் ஒப்படைக்கப் பார்க்கின்றனர்."

ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்கள் கடந்த திங்கட்கிழமையன்று சிரிய பாதிஸ்ட் ஆட்சி இசைவு கொடுத்திருந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெறுவதற்கு மத்திய டமாஸ்கசில் குழுமினர். அப்பகுதியும் அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றின் அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கிறது. அவர்கள் சிரிய, ஹெஸ்பொல்லா கொடிகளை அசைத்து ஹெஸ்பொல்லா தலைவர் ஹாசன் நசரல்லாவிற்கு தங்களுடைய ஆதரவை உரத்து முழங்கினர். சிலர், "எதிர்ப்புக்கள் நீடுழி வாழட்டும்; சரணடைதல் என்பது வீழ்க" என்ற பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

சிரியாவின் நகரங்களிலும் கிராமங்களிலும் குறைந்த எண்ணிக்கையுடைய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதற்கு முன் நூற்றுக் கணக்கான சிரிய மகளிரும் அரேபிய மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் டமாஸ்கஸில் உள்ள ஐ.நா. தலைமையகத்திற்கு முன்பு அமர்ந்து ஆர்ப்பரித்தனர்.

காசா பகுதியிலும் மேற்குக் கரையிலும் திங்களன்று ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் ஹெஸ்பொல்லாவிற்கு ஆதரவை வெளிப்படுத்தி ஆர்ப்பரித்தனர். காசா நகரத்தில் உள்ள சிவப்பு பிறை சங்க தலைமயகத்தில் இருந்து பாராளுமன்றக் கட்டிடம் வரை கிட்டத்தட்ட 2,000 மக்கள் அணிவகுத்துச் சென்றனர். இஸ்ரேலில் சிறைவைப்பட்டுள்ள 10,000 பேரில் இருக்கும் தங்களது குழந்தைகள், கணவர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் புகைப்படங்களை மகளிர் ஏந்திச் சென்றனர்.

மேற்குக்கரையில் ரமல்லாவில் மற்றொரு 2,000 பேர் ஆர்ப்பரித்து அணிவகுத்துச் சென்றனர். கடந்த சனிக்கிழமையன்று, சுமார் 1,500 அரேபிய இஸ்ரேலியர்கள், இஸ்ரேலிய பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட, நசரேத்தில் எதிர்ப்பை தெரிவித்தனர். அவ்விடத்தில் வினியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் "போர்க்குற்றங்களை நிறுத்து", "குழந்தைகளை கொல்வதை நிறுத்து" என்று அரசாங்கத்தை கோரியது.

ஜெமனில் வெகுஜன ஆர்ப்பாட்டம் ஒன்று அமெரிக்கத் தூதரை வெளியற்ற வேண்டும் என்று அமெரிக்க தூதரகத்தின் முன் அணிவகுப்பு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

அரசியலில் உறுதியற்ற நிலை

அரபு நாடுகளில் இருக்கும் கோபம் கண்கூடாகத் தெரிகிறது; இதனால் நியூயோர்க் டைம்ஸ், லொஸ் ஏஞ்சலஸ் டைம்ஸ், கிறிஸ்தியன் சயன்ஸ் மானிட்டர் மற்றும் அசோசியேட்டட் பிரஸ் உட்பட பல அமெரிக்க செய்தி ஊடக அமைப்புக்கள் லெபனான், காசா பகுதிகள் மீது இஸ்ரேலிய தாக்குதல்கள் நடைபெறுவது எப்படி அரபு ஆட்சிகளின் உறுதியைக் குலைக்கும் என்று எழுதியுள்ளன.

தன்னுடைய குடும்பத்துடன் பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதிமீதான குண்டுவீச்சுக்களில் இருந்து தப்பி மத்திய பெய்ரூட்டில் பாதுகாப்பை நாடியுள்ள ஒமர் அஜக்கை, நியூயோர்க் டைம்ஸ் மேற்கோளிட்டுள்ளது: "அரேபியர்களை பற்றி நான் வெட்கம் அடைகிறேன். அவர்கள் முற்றிலும் உபயோகமற்றவர்கள். மக்கள் இப்பொழுது எதிர்ப்பின்மீது சூதாட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அரேபிய தலைவர்கள் மீது எங்களுக்கு இனி நம்பிக்கை கிடையாது."

கிறிஸ்தியன் சயின்ஸ் மானிட்டரில் வந்துள்ள கட்டுரை அறிவிப்பதாவது: "கோப அலைகள் மத்திய கிழக்கில் வீசிக்கொண்டிருக்கின்றன; இவை எகிப்தில் இருந்து செளதி அரேபியா வரை தீவிரப்போக்குடைய இஸ்லாமியர்களின் அரசியல் வலிமையை பெருக்கிவிடக்கூடும்".

அஹ்மத் என்னும் எகிப்திய இயந்திர பழுது நீக்குபவரை பேட்டி கண்ட இவ்வேட்டின்படி, அவருடைய கருத்துக்கள், 1979ல் எகிப்து ஒரு சியோனிச நாட்டை அங்கீகரித்த முதலாவது அரபு நாடாக இருந்து, இஸ்ரேலுடன் காம்ப் டேவிட் உடன்படிக்கையில் முபாரக்கிற்கு முன்பு இருந்த அன்வர் சதாத் கையெழுத்திட்ட இரு தசாப்தங்களுக்கு பின்னர் அடித்தளத்தில் இருக்கும் சமூக அதிருப்தியை சுட்டிக் காட்டுகின்றன; "அந்த ஆட்சி இஸ்ரேலுடன் சமாதானமானால் செல்வக் கொழிப்புக்களும் வேலைப் பெருக்கமும் ஏற்படும் என்று கூறியது. ஆனால் நாங்கள் 20 ஆண்டுகளாக சமாதானமாக இருந்தாலும் எந்த செல்வக்கொழிப்பையும் காணவில்லை. எங்கள் பாலஸ்தீனிய, லெபனிய, ஈராக்கிய சகோதரர்கள் ஒவ்வொரு நாளும் படுகொலைக்கு உட்படுகின்றனர்; ஏதும் செய்யப்படுவதில்லை": என்று அவர் கூறினார்.

லொஸ் ஏஞ்சல்ஸ் டைம்சில் இதே போன்று வந்த அறிக்கை, "ஆட்சியாளர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இடையே உள்ள பெரும் பிளவு" பற்றி கவனத்தை செலுத்தக் கூறுகிறது. கெய்ரோவில் உள்ள அமெரிக்க பல்கலைக் கழகத்தில் அரசியல் அறிவியலாளராக இருக்கும் இமாம் ஹமதியை அது மேற்கோளிடுகிறது. அவர் கூறியதாவது: "இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்களை சிதைப்பதற்கு எகிப்திய அரசாங்கம் என்ன செய்துள்ளது? இஸ்ரேலுடன் வாடிக்கையான உறவுகளை கொண்டுள்ளது; பாலஸ்தீனியர்கள் மீது எவ்வளவு பற்றுக் கொண்டிருக்கிறோம் என உட்கார்ந்து கொண்டு வெறுமனே பேசுகிறது; அதே நேரத்தில் ஒவ்வொரு நாளும் பாலஸ்தீனியர்கள் கொல்லப்படுகின்றனர். இதன் பின் ஒரு மிகச் சிறிய தேசிய எதிர்ப்பு இயக்கம் தோன்றுகிறது; இத்தனை அரபு அரசாங்கங்களும் தங்கள் பெரிய படைகளுடன் செய்ய முடியாததை அது செய்கிறது. மக்களுடைய பார்வையில் இந்த ஆட்சிகள் பெரும் குறைமதிப்பிற்கு உட்படுத்தப்பட்டுள்ளன."

இந்த ஏடு லெபனிய அரசாங்கத்தின் போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கான முறையீட்டிற்கு புஷ் ஆதரவு கொடுக்கவில்லை என்ற முடிவையும் கண்டிக்கிறது; அமெரிக்க ஆதரவுடன் அரசாங்கம் பதவியில் இருத்தப்பட்டாலும் இந்நிலை உள்ளது என்பது, "இப்பகுதியில் பொதுமக்களுடைய அமெரிக்கா பற்றிய உணர்வுகளுக்கு இன்னும் பெரிய தாக்குதல் ஆகும்."

Top of page