World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: SEP collects required signatures to stand in Berlin elections

ஜேர்மனி: பேர்லின் தேர்தலில் போட்டியிடுவதற்கு தேவையான கையெழுத்துக்களை சோசலிச சமத்துவக் கட்சி திரட்டுகிறது

By our reporter team
3 July 2006

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த ஐந்து வாரங்களாக, சோசலிச சமத்துவக் கட்சியின் (Partei fur Soziale Gleichheit-PSG) டசின் கணக்கிலான உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் செப்டம்பரில் நடைபெற இருக்கும் நகர செனட் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்நிலை தகுதியினை பெறுவதற்காக ஏறக்குறைய 3,000 கையெழுத்துக்களை வேலைவாய்ப்பு அலுவலகங்களிலும், அங்காடி மையங்களிலும் மற்றும் பேர்லினில் உள்ள பல்கலைக் கழகங்களிலும் திரட்டியுள்ளனர்.

கடந்த வாரத்தில் ஆயிரக்கணக்கான நகல்கள் விநியோகிக்கப்பட்ட, இந்த கட்சியின் தேர்தல் அறிக்கையில் ''சமூக ஜனநாயகக் கட்சிக்கும் (SPD) இடது கட்சி/ஜனநாயக சோசலிச கட்சிக்கும் (Linkspartei/PDS) இடையிலான கூட்டணியான பேர்லின் மாநில அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு நிலவும் பரந்த அளவிலான எதிர்ப்புக்கு ஒரு தெளிவான குரல் கொடுக்கவும், புரட்சிகர நோக்குநிலை வழங்கவும் இந்த PSG தேர்தலில் பங்குகொள்கிறது'' என குறிப்பிட்டுள்ளது. இந்த தேர்தலில் பங்கு கொள்வதை "போரை எதிர்க்கின்ற, ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கின்ற, சமூகசமத்துவத்திற்கு போராடுகின்ற மற்றும் ஏழ்மையை ஒழிக்கும் நோக்கில் ஒரு சர்வதேசரீதியிலான ஒரு கட்சியை அமைப்பதற்கான முதல் படியாக PSG கருதுகிறது."

செனட் அல்லது ஜேர்மன் பாராளுமன்றத்தில் (Bundestag) அதிகாரபூர்வமாக பிரதிநிதித்துவம் பெறாத கட்சிகள் அனைத்தும் வாக்களிப்பு படிவத்தில் இடம்பெற 2,200 நபர்களின் ஆதரவுக் கையெழுத்தைப் பெற்று தேசிய தேர்தல் அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். வாக்களிக்கத் தகுதி பெற்ற மொத்த மக்கட் தொகையில் இந்த மொத்தம் 0.1 சதவீதம் சமமாக இருக்கிறது. இதில் கையெழுத்திடுகிறவர்கள் அவர்களுடைய முழு பெயரினையும், மணமானவதற்கு முன்னுள்ள பெயர் உட்பட, பிறந்த தேதி மற்றும் தற்போதைய முகவரி ஆகியவற்றை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். மாவட்ட தேர்தல் பதிவு அதிகாரிகள் ஒவ்வொரு தனிப்பட்ட நபரின் படிவத்தில் உள்ள புள்ளி விபரங்களை தனித்தனியாய் சரிபார்த்து கையெழுத்து வைத்துள்ள நபர் வாக்களிக்க தகுதி பெற்றவர் என்றும், சரியான விபரங்களைக் கொடுத்திருக்கிறார் என்றும், வேறு எந்தக் கட்சிக்கும் கையெழுத்து இடவில்லை என்றும் உறுதிப்படுத்தவேண்டும். இந்த சம்பிரதாயங்கள் முடிவு பெற்ற பின்னர் தான் உறுதி செய்யப்பட்ட கையெழுத்துக்களை PSG தேசிய தேர்தல் அதிகாரிக்கு அனுப்பமுடியும்.

இத்தகைய அதிகாரத்துவ இடையூறுகள் இருந்த போதிலும், PSG தேர்தலில் போட்டியிடுவதை ஆதரிக்க அநேக மக்கள் தயாராக இருக்கிறார்கள். குறிப்பாக PSG இன் சர்வதேச மற்றும் சோசலிச முன்னோக்கிற்கு மிகுந்த ஆர்வம் காணப்படுகிறது. ஜேர்மனியில் குடியுரிமை கிடைக்கப் பெறாத அதிக எண்ணிக்கையில் உள்ள தொழிலாளர்கள் தாங்கள் கையொப்பமிட்டு PSG இனை ஆதரிப்பதற்கு இயலாத தங்களின் ஏமாற்றத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள். பலர் தேர்தல் அறிக்கையை முதலில் படித்துவிட்டு பிறகு இந்த கட்சியின் பெயர்ப்பட்டியலிலுள்ள வேட்பாளர்களை ஆதரித்து கையெழுத்து இட்டார்கள். பலர் உலக சோசலிச வலைத் தளம் குறித்து ஏற்கெனவே நன்கு அறிந்துள்ளனர்.

பேர்லினின் புறநகர்ப் பகுதியாகிய Neukolln இனை சேர்ந்த வேலையில்லா 37 வயதான அலெக்ஸாண்டர் சி. PSG இன் தேர்தல் அறிக்கையை படித்துவிட்டு அதில் உள்ள கோரிக்கையில் பலவற்றை ஏற்றுக்கொண்டு உடன் கையெழுத்திட்டுள்ளார். மற்ற கட்சிகளுக்கு இடையில் உள்ள ஒரே வேறுபாடு அவர்களினது பெயர் மட்டும்தான், ஆனால் அனைவரும் பெரிய வணிகத்தின் கட்டளைகளைப் பின்பற்றுகிறார்கள் என அவர் தெரிவித்தார். மாறாக, மனித இனத்தின் இன்றியமையாத தேவைகளும் அத்தியாவியங்களும் மத்தியில் நிறுத்ப்படவேண்டும் என அவர் தெரிவித்தார். இன்றைய தொழிலாளர்களால் தான் சர்வதேச அளவில் தங்களது உரிமைகளை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை அவர் ஏற்றுக் கொள்வதால் கையெழுத்திடுவதாக Lichtenberg இனை சேர்ந்த 23 வயதுடைய அன்னிகா பி. விளக்கினார்.

போலந்திலிருந்து 20 வருடங்களுக்கு முன்பு ஜேர்மனிக்கு வந்து கட்டிட தொழிலாளியாக பணிபுரியும், மாரெக் டி. என்பவர் PSG இன் பிரச்சாரத்தை ஆதரித்தார். "ஒரு அரசியல் மாற்றீடு கண்டிப்பாக தேவை," என அவர் தெரிவித்தார். "ஒவ்வொரு வருடமும் நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது." வாழ்க்கைச் செலவு மிகப்பெரிய அளவில் அதிகரிக்கிறது, குறிப்பாக வாடகையும் மின்கட்டணமும் என்று மாரெக் புகார் தெரிவித்தார். சரியாக 10 வருடங்களுக்கு முன்பாக, தான் குடியிருக்கும் வீட்டுக்கு தற்போது கொடுக்கும் தொகையில் பாதித் தொகையை வாடகையாக கொடுத்து வந்த நிலையில், இதே காலகட்டத்தில் தன்னுடைய சம்பளம் அதிகரிக்கவில்லை என அவர் தெரிவித்தார்.

பேர்லினில் சமுதாய நெருக்கடி மிக கடுமையான அதிகரிந்துள்ளது. தலைநகரில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை 18.1 சதவீதம் என அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு வசித்து வருபவர்களில் மேலும் 250,000 நபர்கள் அற்பமான வேலையின்மை ஊதியம் II (Unemployment Pay II Payments) இனை நம்பியிருக்கிறார்கள். 60 பில்லியன்கள் யூரோ என்ற அளவில், எல்லா ஐரோப்பிய தலைநகரங்களைவிடவும் அதிக அளவிலான கடன் சுமையில் பேர்லின் உள்ளது. அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளபடி ஐந்து குழந்தைகளில் ஒருவர் என்னும் விகிதத்தில் வறுமைக் கோட்டில் இருக்கிறார்கள்.

இந்த நகரத்தின் சமூக ஜனநாயகக் கட்சி(SPD)-ஜனநாயக சோசலிச கட்சி (PDS) செனட் சபை தான் இத்தகைய சூழ்நிலைக்கு நேரடிப் பொறுப்பாகும். பேர்லினில், SPD மற்றும் இடதுசாரி கட்சிகள் நாட்டின் சமூக மற்றும் பொதுநல ஆதாயங்களை சீரழிக்கும் வகையில் நாட்டை இட்டுச்சென்றுள்ளன. அவர்கள் பொதுத்துறையில் 15,000 வேலைகளை அழித்துள்ளனர் மற்றும் வேலை செய்யும் தொழிலாளர்களின் ஊதியத்தை 10 சதவீதம் குறைக்கும்பொருட்டு உள்ளூர் முதலாளிகளது சங்கத்திலிருந்து வாபஸ் வாங்கினர். பேர்லின் போக்குவரத்து சேவையிலும் மருத்துவப் பணியிலும் பெருமளவில் வேலைகளை அழிப்பதையும், ஊதியத்தை குறைப்பதையும் திணித்தனர். மேலும் பல்கலைக்கழகங்கள் மற்றும் இளஞ்சிறார்கள் கல்விக்கான நிதி ஒதுக்கீடுகளையும் அவர்கள் குறைத்துள்ளனர். பேர்லின் செனட் சபையால் பொதுநலச் சேவைகளின் குறைப்பினை அமுலாக்கம் செய்துள்ள பட்டியல் நீண்டு செல்கின்றது.

பலர் இந்த கசப்பான அனுபவங்களை அரசாங்க கட்சிகளுடன் வெளிப்படையான குரோதம் மூலமாக பிரதிபலிக்கின்றனர். ஒரு புதிய கட்சியை ஏற்படுத்துவதில் பிரயோசனமில்லை என அரசியலில் ஆர்வமற்று பலர் கையொப்பம் இட மறுத்துள்ள அனுபவத்தையும் PSG பிரச்சாரத்தினர் சந்தித்த நிலையில், பலரும் இந்த PSG கட்சியானது PDS மற்றும் தேர்தல் மாற்றீட்டுக் கட்சியிலுள்ள (WASG) அதிகாரத்துவத்தினருடன் தம்மை வேறுபடுத்திக் கொண்டு தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு சுயாதீனமான இயக்கத்திற்குப் போராடுவதால் ஆதரவாக கையெழுத்திட்டனர்.

இந்த இடதுகட்சி தானாகவே தன்னை மதிப்பிழந்ததாக ஆக்கிக் கொண்டுள்ளது என்று சட்டத்தரணியான Treptow இனை சேர்ந்த ஒரு இளைஞரான Wiebke S. தெரிவித்தார். "பேர்லினில், இளம் குழந்தைகளுக்கு ஒரு வேளை சூடான உணவை கூட தினமும் அளிக்க முடியாத ஒரு சமுதாய ரீதியில் தரமிழந்த நிலையில் அவர்களின் பெற்றோர்களை வைத்திருக்கும் ஒரு கட்சியை தேர்ந்தெடுக்கலாகாது என தனக்கு படுவதாக அப்பெண் தெரிவித்துள்ளார்." தான் மிகக்குறைந்த ஊதியத்தையே பெற்று வந்தாலும் அவர் கஸ்டப்பட்டு மேற்படிப்பு படித்து தன்னை "ஒரு புலமை வாய்ந்த தொழிலாளியாக" தரப்படுத்திக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறார். ஜனநாயக சோசலிச கட்சிக்கு இடது புறத்தில் நிற்கும் வேட்பாளரை உடனடியாக ஆதரித்தார்.

பழைமையான அதிகாரத்துவத்திலிருந்து தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனத்திற்கு PSG அழைப்பு விடுப்பதன் காரணமாக Wedding பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஜென்ஸ் எல். என்பவர் தன்னியல்பாக தனது கையெழுத்தைத் தந்திருக்கிறார். இடது கட்சியிடமிருந்து அவர் இனிமேல் எதையும் அதிக அளவில் எதிர்பார்க்கவில்லை. WASG இனைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று கேட்கப்பட்டதற்கு, "நான் இந்த அமைப்பை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதவில்லை" என்று அவர் பதில் தெரிவித்துள்ளார். ஒரு புறம், அவர்கள் PDS உடன் இணைந்து பாராளுமன்றத்தில் உட்கார்ந்து கொண்டு அவர்களுடன் இணைய விரும்புவதுடன், மறுபுறம் PDS இற்கு எதிராக இங்கு பேர்லினில் வேட்பாளர்களை நிறுத்த விழைகிறார்கள். கட்சியின் வேலைத்திட்டங்களில் அவர்களுக்கு வேறுபாடு எதுவும் இல்லை மற்றும் இடது கட்சியின் தலைவர் Mr. Lafontaine ஏற்கெனவே அரசாங்கத்தில் அமர்ந்திருக்கிறார்" என்றார்.

Top of page