World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Amiens meeting discusses lessons of struggle against "New Job Contract"

பிரான்ஸ்: "புதிய வேலை ஒப்பந்த்திற்கு" எதிரான போராட்டத்தின் படிப்பினைகளை அமியான் கூட்டம் விவாதிக்கிறது

By our reporter
6 June 2006

Use this version to print | Send this link by email | Email the author

உலக சோசலிச வலைத் தளத்தால் கூட்டப்பெற்ற பொதுக் கூட்டம் ஒன்று ஜூன் 1ம் தேதி அமியானில் நடைபெற்றது, இதில் பெப்ருவரி ஆரம்பத்தில் இருந்து ஏப்ரல் நடுப்பகுதிவரை தேசிய அளவில் கிட்டத்தட்ட மூன்று மில்லியன் மக்கள் பங்கு பெற்ற "முதல் வேலை ஒப்பந்தத்திற்கு" (First Job Contract - CPE) எதிரான வெகுஜன இயக்கத்தின் படிப்பினைகள் விவாதிக்கப் பெற்றன.

ஏப்ரல் 10ம் தேதி கோலிச அரசாங்கம் திரும்பப் பெறுவதற்கு நிர்பந்திக்கப்பட்ட CPE யின்படி 26 வயதிற்குட்பட்ட தொழிலாளர்களை முதலாளிகள் முதல் இரண்டு ஆண்டு காலத்தில் எக்காரணமும் இல்லாமல் பணிநீக்கம் செய்யலாம் என்று இருந்தது.

பல்கலைக்கழக மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் தலைமையில் நிகழ்ந்த இவ்வியக்கம் ஜனாதிபதி ஜாக் சிராக், பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பன் மற்றும் உள்துறை மந்திரி நிக்கோலா சார்கோசியின் முழு சமூக வேலைத் திட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு முழுமையாக இருந்ததின் குவிப்பாயிற்று. இயக்கத்தின் எழுச்சிச் சொல் பிரெஞ்சுத் தொழிலாளர் வர்க்கத்தின்பால் அரசாங்கம் précarité (சமூக, வேலைப்பாதுகாப்பு) என்ற பெயரில் சுமத்திய நிலைப்பாடு இருந்தது.

கூட்டத்தில் பங்கேற்றவர்கள் பிரான்சில் உள்ள இளைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் பல்வேறு கருத்துக்களை பிரதிபலித்தவர்களாக இருந்தனர். இயக்கத்தின் அனுபவத்தில் இருந்து தக்க மதிப்பீட்டை பெறவும் வரவிருக்கும் போராட்டங்களுக்கு ஏற்ற முன்னோக்குகளை கொள்ளவும் அவர்கள் பெரும் ஆர்வமுடைய விருப்பத்தை வெளிப்படுத்தினர்.

CPE எதிர்ப்பு இயக்கத்தில் தீவிரமாக இருந்த உயர்நிலைப் பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களைத் தவிர (வேலைநிறுத்தங்கள், உள்ளிருப்பு மற்றும் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டவர்களில் இருவர், நான்ந் பல்கலைக்கழகத்தில் இருந்து 450கிலோமீட்டர் பயணித்து கூட்டத்திற்கு வந்தனர்), பிரெஞ்சு மற்றும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள், நீலக் காலர், வெள்ளைக் காலர் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அரசாங்க ஊழியர்கள் ஆகியோரும் உயிரோட்டமான விவாதத்தில் பங்கு பெற்றனர்.

தடைகள் மற்றும் கூட்டம் திரட்டுதல் ஆகியவற்றில் பெரும் பங்கு கொண்டிருந்த அமியானில் இருந்த Robert de Lauzarches உயர்நிலைப்பள்ளியின் இளம் மாணவர் ஒருவர் தன்னுடைய தகப்பனாருடன் வந்திருந்தார்; பிந்தையவர் 1968 மே/ஜூன் மாதங்களில் தளபதி சார்ல்ஸ் டு கோலின் அரசாங்கத்திற்கு எதிராக நிகழ்ந்த பொது வேலை நிறுத்தத்தில் ஓர் இளைய தொழிலாளியாகவும் கட்சி உறுப்பினராகவும் இருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் காட்டிக் கொடுப்பை அனுபவித்தவராவார்.

கூட்டத்திற்கு தலைமை வகித்த Antoine Lerougetel 2007 ஜனாதிபதித் தேர்தலில் சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளராக வரக்கூடியவரும் தற்பொழுது செய்தி ஊடகத்தில் அதற்கான ஆதரவைக் கொண்டவருமான Ségolène Royal இன் சமீபத்திய உரையைப் பற்றிக் குறிப்பிட்டார். வடக்கு பாரிசில் இளைஞருடைய எழுச்சி மீண்டும் வந்தது பற்றிக் குறிப்பிட்ட இவ்வம்மையார், அரசாங்கத்தின் கடுமையான போலீஸ் அடக்குமுறை நடவடிக்கைகளை கூட போதுமான அளவு உறுதியற்றவை என்று குறைகூறினார். வகுப்புக்களை தடை செய்யும் மாணவர்களுடைய பெற்றோர்களும் வகுப்புக்களுக்கு வரவேண்டும் என்ற கருத்தை முன்வைத்த இவ்வம்மையார் 16 வயது குற்றம் இழைத்தவர்கள் இராணுவ நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் கூறினார். பிரான்சின் புறநகர் சேரிகளில் உள்ள நிலைமைகளை சீர்திருத்தும் வகையில் அவர் எந்த திட்டத்தையும் கூறவில்லை. அவருடைய உரை சார்க்கோசியினால் பாராட்டப்பட்டது; அவரோ "சட்டம்-மற்றும்-ஒழுங்கு" தன்னுடைய பிரச்சினைகளின் தனிப்பட்ட முத்திரை என்று ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

CPE க்கு எதிரான போராட்டத்தில் Intersyndicale என்னும் தொழிற்சங்க, தொழிலாளர் அதிகாரத்துவ முகாமின் ஒரு பகுதியாக சோசலிஸ்ட் கட்சி விளங்கியது என்றும், "இடது", "தீவிர இடது" கட்சிகள் Riposte Collective என்ற வகையில் ஒன்றாக இருந்தன என்றும் Lerougetel சுட்டிக் காட்டினார். இரண்டு கூட்டணிகளுமே précarité க்கு எதிரான மக்களை இயக்கத்தின் வரம்பை மட்டுப்படுத்தி, அதைத் தனிமைப்படுத்தி, கழுத்தை நெரிக்கவும் முற்பட்டிருந்தன என்று அவர் குறிப்பிட்டார்.

CPE க்கு எதிரான போராட்டத்தின் அனுபவங்கள் தொழிற்சங்கங்களும் அதிகாரபூர்வ இடது கட்சிகளும் முற்போக்கு இடது என்று கூறிக்கொள்பவையும் அரசாங்கத்தை வீழ்த்தும் போராட்டத்தை தடுப்பதற்கு ஒத்துழைத்தன எனத் தெரிவிக்கின்றன. ரோயாலின் திட்டங்கள் இன்னும் கூடுதலான வெளிப்படையான வலதுபுற மாற்றத்தைத்தான் இச் சக்திகளுக்கு கொடுத்தது என்பதை பிரதிபலிக்கின்றன.

புலம்பெயர்ந்த இளைஞர்கள் போலீசுக்கு எதிராக கலகம் செய்ததற்கு விடையிறுக்கும் வகையில் சிராக்கின் ஆணையின் கீழ் வெளிவந்த நெருக்கடிக்கால நிலைமை நவம்பர் 9ம் தேதி சுமத்தப்பட்டபோது, அதற்கு சோசலிஸ்ட் கட்சி ஆதரவு கொடுத்திருந்தது; மேலும் ஒரு மாதம் கழித்து பயங்கரவாத-எதிர்ப்பு சட்டங்கள் வந்தபோது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவும் இல்லை. பல சோசலிச சட்ட மன்ற உறுப்பினர்களும் இச்சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க விரும்பியிருந்தனர். இந்நடவடிக்கைகள் ஒரு போலீஸ் அரசை நோக்கிய திக்கில் முக்கியமான கட்டமாகும்.

உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பினர்களில் ஒருவரும் ஜேர்மனியின் சமூக சமத்துவக் கட்சியின் தலைவருமான பீட்டர் சுவார்ட்ஸ், உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் சார்பில் உரையாற்றினார். CPE பூசல் ஓர் நோய்க் குறி ஆகும் என்று அவர் குறிப்பிட்டார்.

"இதன் முக்கியத்துவம் பிரெஞ்சு எல்லைகளுக்கு அப்பாலும் சென்றுள்ளது. ஐரோப்பா முழுவதும் இருக்கும் சமூக அரசியல் நிலைமைகள் பற்றிய உட்பார்வையை இது அளித்துள்ளது. உதாரணமாக ஜேர்மனிய மக்களைவிடக் கூடுதலான முறையில் பிரெஞ்சுக்காரர்கள் தெருக்களுக்கு வந்து மரபார்ந்த முறையில் ஆதரிக்கின்றனர் என்றாலும், அவர்கள் காட்டும் வெடிப்புத் தன்மை மிகுந்த அழுத்தங்கள் மற்றும் அரசியல் பூசல்கள் ஜேர்மனியிலும் ஐரோப்பாவின் மற்ற பகுதிகளிலும் உள்ளன" என்று அவர் விளக்கினார்.

"பிரான்சில் நடைபெறும் நிகழ்வுகள் சர்வதேச அனுபவத்திற்கு மூலோபாயமாக உள்ளன; அவை பெரும் கவனத்துடன் பகுத்து ஆராயப்பட வேண்டும். இளைஞர்களும் தொழிலாள வர்க்கமும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு ஒருவித தேசியத் தீர்வும் கிடையாது. சர்வதேச, சோசலிச முன்னோக்கு கொண்ட அடிப்படையில் கட்டமைக்கப்படும் ஒரு புதிய புரட்சிகர கட்சிதான் இப்பணியை செய்யமுடியும் என்பது தெளிவு" என்று அவர் வலியுறுத்தினார்.

CPE க்கு எதிரான பூசல் மிக விரைவில் அரசாங்கத்திற்கும் பிரெஞ்சு சமூகத்தின் பரந்த பிரிவுகளுக்கும் இடையே வெளிப்படையான மோதல் என்று வளர்ந்தது என்று அவர் சுட்டிக்காட்டினார். "ஒரு புறத்தில் முதலாளிகள் அமைப்புக்களுடைய ஆதரவில் இருக்கும் அரசாங்கமும், மறுபுறம் இளைஞர்கள், அவர்களுடைய பெற்றோர்கள் மற்றும் பெரும்பான்மையான உழைக்கும் மக்களும் இருந்தனர்."

சக்திவாய்ந்த பொருளாதார நலன்களுக்கு சேவைசெய்து முற்றிலும் சுரண்டப்படும் ஜனங்களாக இருக்கத் தயாராக இல்லை என்பதை இளைஞர்கள் எடுத்துக்காட்டினர். "சமூகத்தில் தங்களுக்கென ஓர் இடத்தை அவர்கள் கோருகின்றனர்; தங்களுடைய பெற்றோர்கள் சமூகத்தில் கொண்டிருந்த அந்தஸ்தையாவது தாங்களும் பெற வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றர். இது ஒன்றும் அதிகமாகக் கேட்பது ஆகாது; ஆனால் சமூக வாழ்வின் ஒவ்வொரு கூறுபாட்டையும் இலாப கொள்கைகளுக்கு தாழ்த்தும் அரசாங்கத்திற்கு இது மிகப் பெரிய கோரிக்கை எனத் தோன்றுகிறது."

தந்திரோபாய முறையில் அரசாங்கம் ஒரு பின்வாங்குதலை மேற்கொண்டு CPE ஐ கைவிட நேர்ந்துள்ளது; ஆனால் அனைத்துப் பிரச்சினைகளும், வேலையின்மை, précarité போன்றவை இன்னும் உள்ளன. "அரசாங்கம் இன்னும் அதிகாரத்தில்தான் உள்ளது. குடியேறுபவர்களுக்கு எதிராக ஒரு சட்டத்தையும் இயற்றியுள்ளது..... இவ்வியக்கம் அரசாங்கத்தை வீழ்த்தும் திறனைக் கொண்டிருந்தது; ஆனால் ஆட்சியோ தொழிற்சங்கங்கள் மற்றும் "இடது", "தீவிர இடது" கட்சிகளால் காப்பாற்றப்பட்டுவிட்டது."

அவர் மேலும் கூறியதாவது: "ஆரம்பத்தில் இருந்தே தொழிற்சங்கங்கள் இயக்கத்தை நெரித்துக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முற்பட்டன. அரசாங்கத்தை வீழ்த்துவது அவர்கள் விருப்பமில்லை என்று அவர்கள் வலியுறுத்தியதுடன் அவர்களுடைய ஒரே கோரிக்கை CPE திருப்பப் பெற வேண்டும் என்பதுதான் என்றும் கூறினர். மாணவர் இயக்கம் ஒரு பொது வேலை நிறுத்தத்தை கோரியபோது அவை அதற்கு விடையிறுக்கவில்லை.

"எதிர்ப்பு இயக்கம் விரிவடைந்தபின், அவர்கள் சார்க்கோசியின் உத்தரவின்கீழ் கோலிச கட்சியுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். அவ்வாறு செய்கையில் அவர்கள் UMP இன் மிகத்தீவிரமான வலதுசாரி பிரதிநிதிக்கு ஆதரவு கொடுத்து 2007 ஜனாதிபதி தேர்தல்களில் அவர் கன்சர்வேடிவ் மற்றும் வலதுசாரிக் கட்சிகளின் வேட்பாளராக நிற்கக்கூடிய வாய்ப்பை அதிகப்படுத்திவிட்டனர்."

பிரெஞ்சு அரசியலை நன்கு கவனிப்பவர்களுக்கு தொழிற்சங்கங்கள் இப்படிக் காட்டிக் கொடுப்பது வியப்பு என்றோ தற்செயல் நிகழ்வோ எனத் தோன்றவில்லை என்று சுவார்ட்ஸ் வலியுறுத்தினார். "1990களின் நடுப்பகுதியில் இருந்து பிரெஞ்சுத் தொழிலாளர் வர்க்கம் பல நேரங்களிலும் அரசாங்கம் மற்றும் முதலாளிகளிடமிருந்து வரும் தாக்குதல்களுக்கு எதிராக எழுச்சி செய்துள்ளனர். ஆனால் இப்போராட்டங்கள் அனைத்தும் தொழிற்சங்கங்கள் மற்றும் உத்தியோகபூர்வ "இடது" கட்சிகள் செய்த நாச வேலைகளால் தோல்வியில் முடிவடைந்தன; அவை இயக்கத்தை முதுகில் குத்தின அல்லது மேலே செல்ல முடியாமல் முடக்கிவிட்டன."

1997ல் அலன் யூப்பேயின் கோலிச அரசாங்கம், லியோனல் ஜோஸ்பன்னுடைய "பன்முக இடது" அரசாங்கத்திற்கு அதிகாரத்தை கொடுத்தபின், சோசலிஸ்ட் கட்சியின் பிரதம மந்திரி கடந்த காலத்தில் தொழிலாள வர்க்கம் பெற்றிருந்த நலன்கள் மீது தாக்குதல்கள் நடத்தவேண்டும் என்ற கொள்கையை கடைபிடித்தார்; இது பின்னர் வலது கட்சிகள் அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றுவதற்குத்தான் உதவியது."

"précarité, வேலையின்மை, சமூக நலன்கள் அழிப்பு, இனவெறி, ஜனநாயக உரிமைகள் தாக்கப்படுதல் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டங்களுக்கு பழைய அதிகாரத்துவ கருவிகளில் இருந்து அரசியலில் சுயாதீனமாக செயல்படும் ஒரு புதிய கட்சி கட்டியமைத்தல் தேவையாகும்" என சுவார்ட்ஸ் கூறினார். "தொழிலாளர்களை எல்லைகள், இனங்கள் கடந்த முறையில் இணைத்து ஒன்றுபடுத்தும் ஒரு சர்வதேச சோசலிச முன்னோக்கின் அடிப்படையில்தான் இது இயலும்."

தேசிய பொருளாதாரத்தின்மீது உலகந்தழுவிய பொருளாதாரம் கொண்டுள்ள ஆதிக்கம் சமூகச் சீர்திருத்தவாத அரசியலின் அடிப்படையை அழித்துவிட்டது என்றும் அவர் கூறினார். இவைதான் 1960களிலும் 1970 களிலும் குறைந்த அளவு வெற்றியையேனும் பெற முடிந்தது. "இதுதான் தொழிற்சங்கங்களும் உத்தியோகபூர்வ இடது கட்சிகளும் வலதிற்கு திரும்புவதற்கான காரணம் ஆகும். சிராக்/வில்ப்பன் அரசாங்கத்துடன் அவை கொண்டிருக்கும் வேறுபாடுகள் வெறும் தந்திரோபாய ரீதியானவைதான். அவையும் தொழிலாளர் சந்தையின் 'அடிப்பைடை' சீர்திருத்தம் 'நவீனமயமாக்கல்' என்ற கருத்தை ஏற்கின்றன. அதாவது உரிமைகள், ஊதியத் தரங்கள் ஆகியவற்றை தகர்ப்பது பூகோளமயமாக்கலின் கீழ் போட்டியிடுவதற்கு பிரான்சினால் தவிர்க்க முடியாத செயற்பாடு என்பதை ஒப்புக் கொள்ளுகின்றன" என்று அவர் விளக்கினார்.

இந்நிகழ்வுப்போக்கு சர்வதேச அளவில் நடைபெறுகிறது என்றும் "அது ஜேர்மனி, பிரிட்டன், இத்தாலி, அமெரிக்கா என்று எந்நாட்டில் நடந்தாலும், அரசாங்கங்களின் கொள்கைகள், அவை பெயரளவிற்கு "இடது" அல்லது வலதுசாரி என்று இருந்தாலும், அடிப்படையில் ஒன்றாகத்தான் உள்ளன. ஜேர்மனியில் சமூக ஜனநாயக வாதிகளும் கிறிஸ்தவ ஜனநாயக வாதிகளும் பெரும் கூட்டணியை அமைத்துள்ளனர்; எல்லா இடங்களிலும் தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடனும் முதலாளிகளுடனும் மிக நெருக்கமாக ஒத்துழைக்கின்றன" என்று அவர் கூறினார்.

"கடந்த தசாப்தத்தில் நிகழ்ந்த வெகுஜன இயக்கத்தில் இருந்து ஏதேனும் ஒரு படிப்பினை பெறமுடியும் என்றால், தொழிலா வர்க்கம் முற்றிலும் புதைந்துள்ள தொழிற்சங்க மற்றும் சீர்திருத்தவாத கருவிகளில் இருந்து முறித்துக் கொண்டு, சுயாதீனமான அரசியல் இயக்கத்தை கட்டியமைக்க வேண்டும் என்பதுதான் அது. "தீவிர இடதின்" பங்கே இத்தகைய அமைப்புக்களுடன் முறிவை தடுக்க வேண்டும் என்றுதான் உள்ளது.

பிரான்சில் "மிகத் தீவிர இடது" என்று அழைக்கப்படும் LCR (புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்), LO ( லுத் ஊவ்றியேர்), PT (Parti des Travailleurs) ஆகிய கட்சிகள் CPE திரும்பப் பெற்றவுடன், அறிக்கைகளை வெளியிட்டன; அதன் முக்கிய நோக்கம் அடிப்படை அரசியல் பிரச்சினைகளை குழப்புவதாகும். "இந்த மூன்று அமைப்புக்களும் CPE திரும்பப் பெற்றதை பெரும் வெற்றியென்று எக்காளமிட்டன. தொழிலாள வர்க்கம் தன்னுடைய அனைத்து தேவைகளையும் இப்பொழுது சுமத்தலாம், அது எண்ணிக்கையில் இயக்கத்தை அதிகரித்து அதன் "ஒற்றுமையை" வளர்ப்பதன் மூலம் முடியும் என்ற முடிவுரையை அவை கூறின. அவர்கள் ஒற்றுமை என்று கூறும்போது அதன் பொருள் தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் ஒற்றுமை என்பதாகும்."

சோசலிச கொள்கை என்று கூறுவது ஒருபுறம் இருக்கட்டும், எதுவுமே ஒரு புதிய அரசியல் நோக்குநிலையை பற்றி ஒரு வார்த்தை கூடக் கூறவில்லை; எந்தத்திட்டமும் பிரான்சில் எல்லைகளுக்கு அப்பால் தன்னுடைய பார்வையை செலுத்தவில்லை. இம்மூன்றும் முற்றிலும் தேசியவாத மற்றும் தொழிற்சங்கவாத முன்னோக்கைத்தான் கொண்டுள்ளன."

"பூகோளமயமாக்கல் முறை மிக முன்னேற்றமான கட்டத்தில் உள்ளபோது, சீனாவும் இந்தியாவும் மிகக் குறைவூதிய தொழிலாளர்களை மில்லியன் கணக்கில் உலக உற்பத்தி நிகழ்ச்சிப்போக்கில் கொண்டுவரும்போது, இந்த மூன்று அமைப்புக்களும் ஒரே குரலில் தொழிலாளர்கள் இன்னும் சற்று கூடுதலாக போராட வேண்டும், அவர்களுடைய சமூக நெருக்கடி தீர்ந்துவிடும் என்று அறிவிக்கின்றன" என்று சுவார்ட்ஸ் தொடர்ந்து கூறினார்.

இது வெறும் முட்டாள்தனமோ அறியாமையோ அல்ல. "தொழிற்சங்க போராட்டத்தை புகழ்ந்து தள்ளுவது என்பது அனைத்திற்கும் மேலாக தொழிற்சங்க அதிகாரத்துவங்களையும் உத்தியோகபூர்வ இடது கட்சிகளயும் முண்டுகொடுத்து தாங்கவே பயன்படும் என்பதோடு, இயக்கத்தை அவர்கள் பின்னே கொண்டு செலுத்திவிடும்."

"இடது ஒற்றுமை" என்பது உண்மையில் முன்னாள் சீர்திருத்த மற்றும் ஸ்ராலினிச அதிகாரத்துவம் மற்றும் மத்தியதர வகுப்பு இடதுகளின் ஒற்றுமைதான் என்று சுவார்ட்ஸ் விளக்கினர். உண்மையான பணியோ அனைத்து நாடுகள் மற்றும் இனக்குழுக்களின் தொழிலாள வர்க்கத்தை ஒன்றுபடுத்துதல் என்று உள்ளது.

"தொழிலாள வர்க்கம்" என்னும் சொல் எம்மை பொறுத்த வரையில் பரந்த தன்மையை உடையது. வாழ்வதற்கு ஓர் கூலியை நம்பியிருப்பவர்கள் அனைவரையும், ஆண்கள் பெண்களையும், இது குறிக்கும் --உடல் உழைப்பாளர்கள், அலுவலகங்களில் உழைப்பவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி பட்டதாரிகள் அனைவருக்கும் பொருந்தும். அப்படிப்பட்ட ஐக்கியத்தை கொண்டுவருவதற்கு 21ம் நூற்றாண்டின் யதார்த்தத்துடன் பொருந்தும் வேலைத்திட்டம் தேவையாகும். நவீன தொழில்நுட்பம், மனிதகுலத்தின் மிக அழுத்தமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சடப்பொருள் நிலைமைகளை தோற்றுவித்துள்ளது; ஆனால் தனியார் இலாபத்திற்காக பொருளாதார வாழ்வின் அனைத்து கூறுபாடுகளும் தாழ்த்தப்படும்போது, இது செயற்படுத்தப்பட முடியாமல் போகிறது. உற்பத்தியானது வெகுஜன சமூகத்தின் தன்மைக்கு ஒத்திருக்கும்பொழுதுதான் அது முடியும், பெரும் வங்கிகளும் தொழில்துறை வசதிகளும் சமூக ரீதியாக உடைமையாக்கப்படும் பொழுதும் மற்றும் சமூகரீதியாக இயக்கப்படும்பொழுதும் மட்டுமே அது முடியும்."

உலக தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான சோசலிச இயக்கத்திற்காகவும் ஒரு புதிய புரட்சிக் கட்சி கட்டியமைப்பதற்காகவும் அடித்தளங்களை உருவாக்குவதில் உலக சோசலிச வலைத் தளம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பங்கை வலியுறுத்தி சுவார்ட்ஸ் தன்னுடைய உரையை முடித்தார். "தெருக்களில் இருந்து வரும் போட்டியும் அழுத்தங்களும் அவைதாமாகவே தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நோக்குநிலை பற்றிய பிரச்சினைகளை தன்னியல்பாகத் தீர்த்துவிட முடியாது... தனது நலன்கள் ஒட்டுமொத்த முதலாளித்துவ ஒழுங்குடனும் இயைந்து இருக்க முடியாது என்பது பற்றி தொழிலாள வர்க்கம் கட்டாயம் நனவாக இருத்தல் வேண்டும்."

இதைத் தொடர்ந்து உயிரோட்டமான விவாதங்கள் பல குழுக்களிடைய அரங்கில் நடைபெற்றன; இது அரங்கு காலி செய்யப்பட வேண்டிய வரையில் தொடர்ந்தது; பின்னர் அரங்கிற்கும் வெளியேயும் நடந்தது.

நான்ந் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த Sylvain மற்றும் Oussama எப்படி சோசலிஸ்ட் கட்சி ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த UNEF (பிரான்சின் தேசிய மாணவர் சங்கம்) என்னும் முக்கிய மாணவர் அமைப்பு அதிகாரத்துவ ரீதியில் இயக்கத்தின் வளர்ச்சியை அவர்களுடைய பல்கலைக் கழகத்தில் மட்டுப்படுத்தி வெகுஜனக் கூட்டங்களை கட்டுப்படுத்தியது என்று கூறினார்.

கம்யூனிஸ்ட் கட்சியின் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்த CGT, (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு) மாணவர்கள் பிரதிநிதிகள் தொழிலாளர்களை சந்திக்காமல் தடுத்துவிட முயன்றது என்று Oussama விளக்கினார். "சங்க அலுவலர்கள் எங்களை பார்க்க வந்து, சாதாரண தொழிலாளர்களிடம் இருந்து அப்புறப்படுத்திவிடுவார்கள்" என்று அவர் கூறினார். ஆயினும் அவர்கள் குப்பை, கழிவுப்பொருட்கள் சேகரிப்பு பணி மறுப்பில் இருந்த தொழிலாளர்களுடன் (Les ouvriers du service de collecte des ordures ménagères) மிக நெருக்கமாக ஒத்துழைத்தனர். "தொழிலாளர்கள் எங்களுடன் சேரத் தொடங்கியவுடன், அரசாங்கமும் தொழிற்சங்கங்களும் பயப்படத் தொடங்கின."

அமியானில் உள்ள Aurélien என்ற பள்ளி மாணவர் இளைஞர்கள் CGTயினால் பயன்படுத்தப்படுவதாக தான் உணர்ந்ததாகவும், அவ்வமைப்பு இவர்களுடைய சாலைத் தடைகளுக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை என்றும் கூறினார்.

தொழிற்சங்க அதிகாரத்துவத்தினருக்கு ஒரு மாற்றீடு தேவை என்று சில்வியன் கூறினார். நான்காம் அகிலம் அவ்விதத்தில் ஏதேனும் செய்யுமா என்பதைக் காணத்தான் தான் கூட்டத்திற்கு வந்ததாகவும் அவர் கூறினார். ஆனால் அத்தகைய சிறிய அமைப்பு எதையும் சாதிக்க முடிவது பற்றி ஐயம்தான் வந்துள்ளது என்றார். WSWS ஆதரவாளர்கள் வேலைத்திட்டம்தான் கட்சியைக் கட்டியமைக்கும் என்று சுட்டிக்காட்டினர். முக்கியபணி பகுப்பாய்வு செய்து தொழிலாள வர்க்கத்தின் முழு நனவை உயர்த்துவது ஆகும்; இப்பணியைத்தான் உலக சோசலிச வலைத் தளம் செய்து கொண்டிருக்கிறது. WSWS, முதல் வேலை ஒப்பந்தத்தை பற்றி 34 கட்டுரைகளும் பகுப்பாய்வுக் கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளது.

மிகப் பெரிய எண்ணிக்கையில் இடது கட்சிகள், குழுக்கள் இருப்பது பற்றி மாணவர்கள் திகைத்துள்ளனர் என்று Oussama கூறினார்; ஆனால் இந்த அமைப்புக்கள் மற்றும் மார்க்சிச இயக்கத்தின் வரலாற்றை படித்தால்தான் அவை ஆற்றும் பங்கினைப் புரிந்து கொள்ள முடியும், அது அவசியமானது என்பதில் அவர் உடன்பட்டார்.

தொழிலாளர்களின் பாரம்பரிய ஐக்கியத்திற்கு என்ன ஆயிற்று என்று அமியான் பல்கலைக்கழகத்தின் மற்றொரு மாணவர் வியப்படைந்தார். ஸ்ராலினிஸ்டுகளும் சமூக ஜனநாயகவாதிகளும் கடந்த 70 ஆண்டுகளில் தொழிலாள வர்க்கத்தினரிடையே பாரிய அளவில் சோசலிச நனவை அழித்துவிட்டனர் என்றும் WSWS இன் பங்கு மீண்டும் அந்த நனவை கட்டியமைப்பதுதான் என்றும் ஒரு உலக சோசலிச வலைத்தள ஆதரவாளர் விளக்கினார்.

விவாதங்களை சுருக்கிக் கூறுகையில், சோவியத் ஒன்றியத்திலும் வெளியிலும் முக்கிய மார்க்சிஸ்டுகளை ஸ்ராலின் கொன்றமை மார்க்சிச இயக்கத்தின் வளர்ச்சியை தடுத்த முக்கிய கூறுபாடு ஆகும் என்று சுவார்ட்ஸ் சுட்டிக்காட்டினார். CPE அளித்த முக்கிய படிப்பினைகளில் ஒன்று, இடது மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்கள் வெகுஜன அழுத்தத்தின் மத்தியிலும் இடது பக்கம் செல்லவில்லை என்பதாகும். அவை இடது பேசினாலும், முதலாளித்துவ அரசு பிரான்சில் இருந்தது போல் நெருக்கடியில் இருந்தால் அரசின் உதவிக்குத்தான் வந்தன. சமீபத்திய போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த அனுபவத்தை உணர்ந்தனர் என்று அவர் கூறினார்

Top of page