World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Bush administration demands UN action against Iran

ஈரானுக்கு எதிராக ஐ.நா. நடவடிக்கையை புஷ் நிர்வாகம் கோருகிறது

By Peter Symonds
2 May 2006

Use this version to print | Send this link by email | Email the author

புஷ் நிர்வாகம் சென்ற வெள்ளிக்கிழமையன்று சர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA) தாக்கல் செய்த ஈரானின் அணுத்திட்டங்கள் பற்றிய அறிக்கையை கையில் எடுத்துக்கொண்டு தெஹ்ரானுக்கு எதிராகவும் அத்துடன் தனது ஐரோப்பிய மற்றும் ஆசிய போட்டி நாடுகளுக்கு எதிராகவும் ஒரு புதிய சுற்று கோரிக்கைகளையும் அச்சுறுத்தல்களையும் விடுத்திருக்கிறது.

தெஹ்ரானை சர்வதேச அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் ஒரு அச்சுறுத்தல் என்று அறிவிக்கும் மற்றும் பொருளாதார தடைகளுக்கும் மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கும் வழி அமைத்துத் தரும் ஒரு கட்டுப்படுத்தும் தீர்மானத்தை ஐ.நா. சாசனத்தின் 7-வது அத்தியாயத்தின் கீழ் நிறைவேற்ற ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு வாஷிங்டன் அழுத்தம் கொடுத்து வருகிறது.

அத்தகையதொரு தீர்மானத்தை தொடக்கத்தில் ரஷ்யாவும் மற்றும் சீனாவும் புறக்கணித்தன, ஏனென்றால் ஈரானுக்கு எதிராக ஆக்கிரமிப்பிற்கான ஆதாரமற்ற நியாயப்படுத்துதலுக்கு அமெரிக்கா அதை சுரண்டிக்கொள்ளும் என்பதை நன்கு அறிந்திருந்தன. ஐ.நாவிலுள்ள சீனத்தூதர் வாங் ஜியாங்யா சென்ற வாரம் அறிவித்தார்: "அத்தியாயம் 7 என்பது பல விஷயங்களை உள்ளடக்கியது என்று நான் நினைக்கிறேன் அதில் படுமோசமான காட்சியும் அடங்கும் மற்றும் அதைப்பற்றி நான் விவரிக்க விரும்பவில்லை."

ஞாயிறன்று, ஒரு சுற்று பேட்டிகளை தந்த அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ், ஈரான் "சர்வதேச சமுதாயத்தோடு விளையாட்டில் ஈடுபட்டிருப்பதாக" குற்றம் சாட்டினார். உண்மையிலேயே, புஷ் நிர்வாகம்தான் ஒரு விரிவான இராஜதந்திர நாடகத்தை நடத்திக்கொண்டிருக்கிறது, அது ஈரான் ஆட்சியில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் முயற்சிகளை முடுக்கிவிட்டிருக்கிறது மற்றும் போர்த் திட்டங்களை ஏற்பாடு செய்து வருகிறது.

2003 மார்ச்சில் ஈராக்கில் புஷ் நிர்வாகம் முன்கூட்டியே சட்டவிரோதமான மற்றும் ஆத்திரமூட்டல் எதுவுமில்லாத படையெடுப்பை நடத்துவதற்கு எடுத்துக்கொண்ட நடவடிக்கைகளின் விசித்திரமான காட்சியை நினைவுபடுத்துவதாக இந்த நிலவரம் அமைந்திருக்கிறது. ஈரானுக்கு எதிராக தண்டனை நடவடிக்கைகளை அனுமதிப்பதற்காக அதன் நிரந்தர இரத்து அதிகாரம் கொண்ட உறுப்பினர்கள் உட்பட UN பாதுகாப்பு சபையை அச்சுறுத்தவும் பயமுறுத்தவும் ஒருதலைபட்சமான நடவடிக்கையின் அச்சுறுத்தலை வாஷிங்டன் மீண்டும் பயன்படுத்திவருகிறது.

அவர்களது மொழியும் அதேபோன்று இருக்கிறது "விருப்பக் கூட்டணிகள்" என்றழைக்கப்பட்டதற்கு பதிலாக, "ஒரே எண்ணங்கொண்டுள்ள அரசுகளின்" கூட்டணி பற்றி அமெரிக்க அதிகாரிகள் இப்போது பேசுகிறார்கள். "பாதுகாப்பு சபை என்கின்ற நமது அம்பரா துணியில் ஏராளமான இராஜதந்திர அம்புகளை நாம் கொண்டுள்ளோம் என்று நான் முழுமையாக நம்புகிறேன் மற்றும் ஒத்த எண்ணங்கொண்டுள்ள அரசுகள் பாதுகாப்பு சபை விரைவாக செயல்படாவிட்டால் கூடுதல் நடவடிக்கைகள் எடுப்பது குறித்து விருப்பத்துடன் உள்ளன மற்றும் அவை அவ்வாறு செயல்படவும் இயலும்" என்று ரைஸ் ஞாயிறன்று CBS தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.

"இராஜதந்திர நிகழ்வுப்போக்கு தொடக்கம்தான்" என்று சென்ற வெள்ளிக்கிழமை ஜனாதிபதி புஷ் ஊடகங்களிடம் தெரிவித்தார். என்றாலும், ஐ.நா.விற்கான அமெரிக்கத்தூதர் ஜோன் போல்டன், வர்த்தக கட்டுப்பாட்டு சாத்தியத்தை அல்லது இலக்கு தடைகளை ஆராயும் முன்னர் அத்தியாயம் 7-தீர்மானத்தை கொண்டு வர, "குறுகிய கால நேரத்தை" ஈரானுக்கு வழங்குவதற்கு ஐ. நா. முயலும் என்று கோடிட்டுக்காட்டினார். "இங்கே அவசர உணர்வு உள்ளது என்று நாங்கள் நினைக்கிறோம் மற்றும் முடிந்தவரை விரைவாக சபை நடவடிக்கையை நாங்கள் பெறுவோம் என்று நாங்கள் நம்புகிறோம்.... பாதுகாப்பு சபையோடு அல்லது பாதுகாப்பு சபை இல்லாமல் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க முடியும்" என்று அவர் கூறினார்.

இராஜதந்திர மிரட்டல்களின் ஒரு புதிய சுற்றை அமெரிக்கா ஏற்கனவே தொடக்கிவிட்டது. அமெரிக்க வெளியுறவுத்துறை அரசியல் விவகார துணைச்செயலாளர் நிக்கோலா பேர்ன்ஸ் இன்றைய தினம் பாரிசில், ஐ. நா.வின் பாதுகாப்பு சபை நிரந்தர உறுப்பினர்களான பிரிட்டன், ரஷ்யா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜேர்மனியின் அதிகாரிகளோடு ஈரானுக்கு எதிரான நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கவிருக்கிறார். IAEA அறிக்கை, ஈரான் ''சர்வதேசரீதியாக தடைசெய்யப்பட்ட'' நாடு என்று நிரூபித்திருப்பதாக சென்ற வாரம் பேர்ன்ஸ் அறிவித்தார் மற்றும் ஈரானுடன் எந்த தொடர்பையும் வைத்துக்கொள்வதில் ஒரு பெரிய சர்வதேச மறுமதிப்பீடு செய்யப்படவேண்டும் என்று கேட்டுகொண்டார். மே 9-ல் நியூயோர்க்கில் அதே நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களை ரைஸ் சந்திக்கவிருக்கிறார்.

புஷ்சும் அவரது அதிகாரிகளும் IAEA அறிக்கை ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்க முயலுகிறது என்று முடிவு செய்திருப்பதைப்போல் பேசுகின்றனர், ஆனால் அதை தெஹ்ரான் திரும்பத்திரும்ப மறுத்துள்ளது, அணுவாயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ் (NPT) அணுக்கருவை சமாதான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் தனது உரிமைகளுக்கு மட்டுமே செயல்படுத்தி வருவதாக வலியுறுத்திக் கூறிவருகிறது. அந்த அறிக்கை உறுதிப்படுத்துவது தெஹ்ரான் பகிரங்கமாக அறிவித்த--- யுரேனிய செறிவூட்டத்தை மீண்டும் தொடக்கிவிட்டது என்பதுதான்.

ஈரான் ஆட்சி அணுஆயுதங்களை தயாரிக்க முயன்று வருகிறது என்பது நிச்சயமாக அமைந்தாலும், IAEA அறிக்கை, அத்தகைய ஒரு திட்டத்திற்கு நேரடி சான்று எதையும் வழங்கவில்லை. 2002-ல் ஈராக்கில் அணுக்கரு திட்டங்கள் பற்றி குற்றம் சாட்டப்பட்டதைப்போன்று, IAEA ஒரு எதிர்மறை போக்கை நிரூபிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது--- அது ஈரானில் எந்த இடத்திலும், அணுக் குண்டுகளை தயாரிப்பதற்கு, இட்டுச்செல்லக்கூடிய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதையாகும். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக IAEA நிபந்தனைகளை நிறைவேற்ற தெஹ்ரான் மேற்கொண்ட ஒவ்வொரு முயற்சிக்கு பின்னரும் வாஷிங்டனிலிருந்து ஆத்திரமூட்டும் புதிய குற்றச்சாட்டுக்கள் வந்துகொண்டிருந்தன. மற்றும் ஆய்வு நடைபெறும் இடங்கள், ஆவணங்கள் மற்றும் ஊழியர்கள் தொடர்பாக, மேலும் சோதனை இடுவதற்கு, IAEA கோரிக்கைகளை விடுத்து வந்தது.

அமெரிக்காவின் மூலோபாய அபிலாசைகள்

புஷ் நிர்வாகத்தை பொறுத்தவரை ஈரானின் அணுத்திட்டங்கள், ஐ.நா.விற்கு அழுத்தங்கள் தருவதற்கான ஒரு வசதியான சாக்குப்போக்கு மட்டுமே ஆகும் மற்றும் உள்நாட்டில் ஒரு பயப்பிரச்சாரத்தை தூண்டிவிடுவதற்கான ஒரு சாக்குப்போக்குமாகும். அமெரிக்க அதிகாரிகள் அபத்தமாக ஈரான் அமெரிக்காவிற்கு, மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று முத்திரை குத்துகின்றனர், பொருளாதாரத்தில் பின்தங்கிய இந்த நாடு சிறிய எண்ணிக்கையில் அணுஆயுதங்களை வைத்திருந்தாலும் கூட அமெரிக்க இராணுவத்திற்கு ஈடுகொடுத்துவிட முடியாது என்பது அவர்களுக்கு நன்றாக தெரியும். தெஹ்ரான் IAEA-ன் கோரிக்கைகள் முழுவதற்கும் உடன்பட்டாலும் கூட, டெஹ்ரானில், "ஆட்சி மாற்றத்தை" முன்னெடுத்து செல்வதற்கு சரிசமமான போலி சாக்குப்போக்குகளின் நீண்ட பட்டியலை வெள்ளை மாளிகை வைத்திருக்கிறது.

வாஷிங்டனின் மிகப்பெரும் அரசியல் சொத்து என்று கருதப்படுவது, ஈரானின் முதலாளித்துவ ஆட்சிதான் அது, தனது வெற்று தேசியவாத வீறாப்பு பேச்சின் மூலம் புஷ் நிர்வாகத்தின் கையில் நேரடியாக சிக்கிக்கொள்கிறது. ஈரான் ஜனாதிபதி முஹம்மது அகமதினேஜாத்தின் பிரிவினைவாத இன வெறுப்பு மற்றும் செமிட்டிச-எதிர்ப்பு வாய்வீச்சு அவரது பலவீனமான அரசாங்கத்தை முண்டு கொடுப்பதை நோக்கமாக கொண்டது, ஆனால் அது, மத்தியகிழக்கிலும் மற்றும் சர்வதேச ரீதியாகவும் உழைக்கும் மக்களினால் ஒரு ஒன்றுபட்ட எதிர்ப்பை உருவாக்குவதை நேரடியாக வெட்டி முறிப்பதாக உள்ளது. கடைசியாக வெளியிடப்பட்டுள்ள IAEA அறிக்கை மீது கருதத்து தெரிவித்த அஹமதினேஜா ஆரவார ஒலியுடன் ''அத்தகைய பயனற்ற [ஐ.நா] தீர்மானங்கள் பற்றி ஈரான் சிறிதும் பொருட்படுத்தப்போவதில்லை" என்று அறிவித்தார்.

ஈரானுடன் ஒரு மோதல் போக்கை வேகப்படுத்துவதன் மூலம் புஷ் நிர்வாகம் எண்ணெய் வளம்மிக்க பிராந்தியத்தின்மீது கட்டுப்பாடு எதுவுமில்லாத அமெரிக்காவின் மேலாதிக்கத்தை அடைவதற்கான நீண்டகால அபிலாசைகளை முன்னெடுத்துச் செல்வதாக அமைந்திருக்கிறது. எண்ணெய் எரிவாயு இருப்புக்களை அதிகமாக வைத்திருப்பதுடன் மத்தியகிழக்கு, மத்திய ஆசியா மற்றும் இந்திய துணைக்கண்டத்திற்கு பெருகிவரும் முக்கியத்துவம் நிறைந்த மூலோபாய சந்திக்கும் இடத்தில் ஈரான் அமைந்திருக்கிறது. ஒத்துபோகும் அமெரிக்க-சார்பு ஒரு ஆட்சியை தெஹ்ரானில் நிறுவுவது ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் கடந்த ஒரு தசாப்தத்திற்கு மேலாக ஈரானுடன் பொருளாதார உறவுகளை நிறுவி வந்துள்ள வாஷிங்டனின் போட்டி நாடுகளின் முயற்சிகளை நேரடியாக வெட்டி முறிப்பதாக அமையும். ரஷ்யா மற்றும் சீனா, அத்துடன் EU, ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய அனைத்து நாடுகளுமே அந்த நாட்டில் கணிசமான நலன்களை கொண்டிருக்கின்றன.

ஐ. நா. பாதுகாப்பு சபையில் தோன்றியுள்ள மோதல் போக்குகள் ஈரான் மீது ஒரு அமெரிக்க இராணுவ தாக்குதல் ஆபத்தை மட்டுமல்ல, பெரிய வல்லரசுகள் ஈடுபடும் எண்ணெய் மற்றும் வளங்கள் தொடர்பான பரந்த மோதலையும் வெளிப்படுத்துகிறது. ஆப்கனிஸ்தானுக்கும், ஈராக்கிற்கும் எதிரான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பிற்கு பதிலாக ரஷ்யாவும், சீனாவும் குறிப்பாக ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மூலம், நெருக்கமான பொருளாதார மற்றும் மூலோபாய உறவுகளை உருவாக்கி வருகின்றன. சீனாவில் சென்ற ஆண்டு முதலாவது கூட்டு இராணுவ பயிற்சியை இரண்டு நாடுகளும் மேற்கொண்டன மற்றும் அடுத்த ஆண்டு இரண்டாவது ஒன்றை நடத்த திட்டமிட்டிருக்கின்றன.

குறிப்பாக மாஸ்கோ மத்திய ஆசிய முன்னாள் சோவியத் குடியரசுகளில் தற்பொழுது அமெரிக்கா வளர்ந்துவருவதற்கு அமைதியான முறையில் சவால் விட்டுக்கொண்டிருக்கிறது. சென்ற ஆண்டு நடைபெற்ற கூட்டத்தில் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) ஆப்கனிஸ்தானில் அமெரிக்கா தலையிடுவதற்கு முன்னர் மத்திய ஆசியாவில் ஏற்படுத்திய அதன் இராணுவத் தளங்களை வாபஸ் பெறுவதற்கு ஒரு காலக்கெடுவை முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. உஸ்பெகிஸ்தானில் இருந்த கார்சி-கானாபாத் இராணுவத்தளத்திலிருந்து தனது துருப்புக்களை விலக்கிக்கொள்ள பென்டகன் ஏற்கனவே நிர்பந்திக்கப்பட்டுவிட்டது மற்றும் மற்றொரு முக்கியமான கிர்கிஸ்தான் தளத்திற்கு வாடகையில் பெரிய உயர்வுக் கோரிக்கையை பென்டகன் எதிர்கொண்டுள்ளது.

ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்புக் கூட்டம் சென்ற ஆண்டு நடைபெற்றபோது, இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுடன் ஈரான் ஒரு பார்வையாளராக கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டது, குறிப்பிடத்தக்கதாகும் மற்றும் தெஹ்ரான் முழு உறுப்பினராவதற்கு முயற்சித்து வருகிறது. சென்ற மாதம் பெய்ஜிங்கில் நடைபெற்ற அந்த அமைப்பின் கூட்டத்தில் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி இவானோவ் அமெரிக்காவிற்கு எதிராக ஈரானுக்கு இராணுவ ஆதரவு எதுவுமில்லை என்று உடனடியாக தள்ளுபடி செய்தார்: "ஈரான் SCO-வில் ஒரு பார்வையாளர் அரசு, எனவே அதை பாதுகாப்பதற்கு, எவரும் எந்தப்பொறுப்புக்களையும் ஏற்கவில்லை. ஈரானை SCO பாதுகாத்து நிற்கும் என்ற எந்த முட்டாள்தனமான கருத்தையும் நான் உடனடியாக தள்ளுபடி செய்கிறேன்" அப்படியிருந்தும், இந்த பதிலில் கண்டுள்ள கடுமை அத்தகையதொரு அணியை இந்த பிராந்தியத்தில் அமைப்பது அமெரிக்க அபிலாஷைகளுக்கு எழுந்துள்ள சவால்களை எடுத்துக்காட்டும் ஒரு உண்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது மற்றும் எதிர்கால இராணுவ மோதல் சாத்தியக்கூறை எழுப்பியுள்ளது.

இன்றுவரை ஈரானில் பொருளாதார நலன்களை கொண்டிருக்கும் இதர நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகியவற்றோடு, ரஷ்யாவும் சீனாவும் சேர்ந்து அமெரிக்காவுடன் ஒரு நேரடி மோதல் போக்கு எதிலிருந்தும் பின்வாங்கியே வந்திருக்கின்றன. இந்த வல்லரசுகள் அனைத்துமே ஈரானை ஐ.நா-க்கு ஒப்படைக்க வேண்டும் என்று பெப்ரவரியில், IAEA தீர்மானத்திற்கு வாக்களித்தன பின்னர் மார்ச்சில் ஐ. நா. பாதுகாப்பு சபை கட்டுப்படுத்தாத ஒரு தலைவரது அறிக்கையை வெளியிட்டு ஈரானுக்கு ஒரு 30-நாள் காலக்கெடு விதித்து யுரேனிய செறிவூட்டலை நிறுத்திக்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொண்டன. நடைபெறவிருக்கும் ஈரான் தொடர்பான கூட்டங்களில் வாஷிங்டனை மேலும் சமாதானப்படுத்தி, ஐ. நா. நடவடிக்கையின் அளவை கட்டுப்படுத்த மாஸ்கோவும் பெய்ஜிங்கும் மீண்டும் முயலும் என்று தெரிய வருகிறது.

எவ்வழியாகிலும் அமெரிக்காவின் திட்டங்களை தடுப்பதற்கு பதிலாக, ஈரானின் அணுத்திட்டங்கள் தொடர்பாக அத்தியாயம் 7-வது தீர்மானத்தை ஆதரிப்பது ஒரு மோதல் போக்கை நெருங்கி வருகின்ற மற்றொரு நடவடிக்கையாகும். உள்நாட்டில் அரசியல் ஆதரவை இழந்துகொண்டு வருவதை எதிர்கொண்ட நிலையில் ஈராக்கில் ஆழமடைந்துவரும் புதை சேற்றில் சிக்கிக் கொண்டுள்ள புஷ் நிர்வாகம், நெருக்கடியான நிலையில் தனது மூலோபாய மற்றும் பொருளாதார அபிலாஷைகளை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்காக பொதுமக்களது கவனத்தை திசை திருப்புவதற்கு ஒரு வழியாக ஈரானை கையில் எடுத்துக்கொண்டிருக்கிறது.

Top of page