World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: "Election Alternative" defends policies of Berlin state government

ஜேர்மனி: பேர்லின் மாநில அரசாங்கத்தின் கொள்கைகளை பாதுகாக்கும் "தேர்தல் மாற்றீடு"

By Ulrich Rippert
5 May 2006

Use this version to print | Send this link by email | Email the author

வேலைகள் சமூக நீதிக்கான தேர்தல் மாற்றீட்டின் (WASG) ஒரு சிறப்பு கட்சி மாநாடு ஏப்ரல் 29-30 வாரக் கடைசியில் நடைபெற்றது. இந்த இளவேனிற் காலத்தில் மாநில தேர்தல்களில் போட்டியிட திட்டமிட்டுள்ள கட்சியின் பேர்லின் பிராந்திய அமைப்பு தனது வேட்பு மனுவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்று கோரும் ஒரு தீர்மானத்திற்கு ஆதரவாக அதில் கலந்துகொண்ட பெரும்பாலான பிரதிநிதிகள் வாக்களித்தனர். பேர்லின் பிராந்திய அமைப்பு இந்த கோரிக்கையுடன் உடன்பட தவறுமானால் அப்போது, WASG தேசிய நிர்வாகம், "தேசிய கட்சி மாநாட்டின் விருப்பத்தை உறுதிப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுப்பதற்கும் அவற்றை பரிசீலனை செய்வதற்கும்" திட்டவட்டமாக அங்கீகாரம் அளித்துள்ளது.

ஒரு கட்சியின் அமைப்பிற்கு எதிராக ஒழுங்க நடவடிக்கையின் இந்த அச்சுறுத்தல் Ludwigshafen நகரின் மாநாட்டில் மூர்க்கமான விவாதங்களுக்கு இட்டுச் சென்றது. ஜனநாயக விரோத கட்டமைப்புகள் பற்றியும் கட்சியின் நிர்வாகக்குழு மேற்கொண்டுள்ள சர்வாதிகார போக்கு குறித்தும் பிரதிநிதிகள் புகார் கூறினர். என்றாலும் அரசியல் நோக்குநிலையின் மிகவும் அடிப்படை பிரச்சினையை குறித்து எந்தவித குறிப்பையும் பெரும்பாலும் தவிர்த்தது. கட்சியின் எதிர்கால நிலைநோக்குத் தொடர்பாக ஒரு அரசியல் முடிவில் தலையிட்டு பேர்லினில் தனது குழு சுதந்திரமாக வேட்பாளரை நிறுத்துவதற்கு எதிராக கட்சியினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜனநாயக சோசலிச கட்சி (PDS) மற்றும் சமூக ஜனநாயகக் கட்சி (SPD) ஆகிய இடது கட்சி இடையில் ஒரு கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டு மாநில மற்றும் நகர நிர்வாகத்தினால் கடந்த நான்கு ஆண்டுகளாக ஜேர்மனியின் தலைநகரில் முன்னெடுக்கப்பட்டு வந்த சமூக வேலைத்திட்டங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் பிற்போக்குத்தனமான கொள்கைகளை WASG நனவுபூர்வமாக ஆதரித்து வந்தது.

ஒரு ''இடது'' அல்லது ''சோசலிச மாற்றீடு'' தொடர்பான கட்சியின் வேலைதிட்டத்தில் உள்ள குறிப்புகள் மற்றும் கூக்குரல் பின்னணியை பார்க்கும்போது கட்சி மாநாடு செய்துள்ள முடிவு WASG இன் உண்மையான நிலையையும் மற்றும் அது அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுமானால் கட்சியிலிருந்து என்ன எதிர்பார்க்க முடியும் என்பதையும் காட்டுகிறது.

பேர்லினில் இடது கட்சி-சமூக ஜனநாயகக் கட்சி செனட்டின் அரசியலை மதிப்பீடு செய்து சிறிதளவு ஆய்ந்து பார்த்தாலே அதன் உள்கட்சி விமர்சனங்களுக்கு எதிராக WASGஇன் கட்சி மாநாடு எந்த வகையான கொள்கைகளை பாதுகாக்கிறது என்பதை தெளிவாக்குவதற்கு போதுமானதாகும்

இடது கட்சி தனது கட்சி வேலைத்திட்டத்தில் பகிரங்கமாக, கண்டித்த அனைத்து நடவடிக்கைகளையும் கடந்த சில ஆண்டுகளாக, இடது கட்சி-PDS பேர்லினில் செயல்படுத்தி வந்திருக்கிறது. 2001 கோடைகாலத்தில் ஜனநாயக சோசலிச கட்சி முன்னெடுத்த ஒரு தேர்தல் பிரச்சாரத்தில், அதிக அளவிற்கு சமூகநீதி கோரியது மற்றும் பேர்லின் வங்கி நிறுவனத்தின் (BGB) குற்றவியல் நடவடிக்கைகளை கண்டித்தது. என்றாலும், தேர்தலை வென்றெடுத்த பின்னர் PDS செனட்டர்கள் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ளும் முன்னரே, BSB தனியார் நிதி உரிமையாளர்களும் மற்றும் பங்குதாரர்களுக்கும் அவர்களது முதலீடுகளுக்கு பாதுகாப்பு தருகின்ற ஒரு ''ஆபத்து பாதுகாப்பு சட்டத்தை'' இயற்றுவதற்கு அவர்கள் சம்மதித்தனர். அதற்காகும் 21.6 பில்லியன் யூரோ தொகைகளையும் மற்றும் அனைத்து செலவினங்களையும் மாநில கருவூலம் ஏற்றுக்கொள்ள வகை செய்யப்பட்டது (அதாவது, பேர்லினின் சாதாரண குடிமக்கள் ஏற்க வேண்டும்.)

அதே நேரத்தில் ஒரு கடுமையான சேமிப்புத்திட்டம் நிறைவேற்றப்பட்டது. அது பொதுசேவைகளில் 15,000 வேலைகள் இழப்பதற்கும், வேலை நேரத்தையும் ஊதிய வெட்டுக்களையும் அதிகரிப்பதற்கு வகை செய்யப்பட்டது. இந்த நடவடிக்கைகள் ஜேர்மனியின் கூட்டு ஒப்பந்த ஏற்பாட்டை மீறுவதாக அமைந்திருப்பதால், செனட் திடீரென்று உள்ளூர் தொழில் வழங்குனர் சங்கத்திலிருந்து வாபஸ் பெறுவதற்கு ஜனவரி 23ல் முடிவு செய்தது. இதன் விளைவாக, தற்போதுள்ள கூட்டு உடன்படிக்கைகள் அனைத்து மாநில ஊழியர்களுக்கும் பயனற்றவையாக ஆகிவிட்டன. அதற்குப்பின்னர் உடனடியாக தனது அனைத்து ஊழியர்களுக்கும், வாரத்தில் பணியாற்றும் மணி நேரங்களை 40 இலிருந்து 42 மணிநேரமாக நீடித்தது.

பேர்லினிலுள்ள அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தங்களது ஊதிய மற்றும் சம்பளங்களில் ஒரு 10 சதவீத வெட்டினால் பாதிப்பிற்குள்ளாகினர் மற்றும் புதிய ஊழியர்களது வருமானம் மேலும் 15 சதவீதம் வெட்டப்பட்டது. நகரின் பொது சேவைகளில் மொத்தம் 38 மில்லியன் யூரோக்கள் சேமிக்கப்பட்டிருப்பதாக தனது சொந்த புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

பேர்லினுள்ள ஒன்பது பெரிய மருத்துவமனைகளை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் மருத்துவ சேவைகள் நிறுவனமான Vivantes தனது தொழிலாளர்களுக்கான விடுமுறை மற்றும் கிறிஸ்மஸ் மிகையூதியங்களை வெட்டிவிட்டதுடன் மற்றும் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை 17,000 இலிருந்து 13,000 ஆக குறைத்துவிட்டது. அதன்மூலம் எஞ்சியிருக்கும் தொழிலாளர்களின் வேலைப்பளு அதிகரித்துவிட்டது. பேர்லின் சாரிட்டி மருத்துவமனை மேற்பார்வைக் குழுவின் தலைவர் என்கின்ற அவரது பங்கில், இடதுகட்சி செனட்டர் தோமஸ் பிளையர்ல் சாரிட்டி நிர்வாகம் முன்வைத்த தீர்மானமான ஊதிய வெட்டுக்களை திணிக்க வேண்டும் என்பதை ஆதரித்தார். அவை Vivantes திணித்த வெட்டுக்களைவிட கூடுதலானதும் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தில் ஒரு பெரும் பகுதியை தனியார்மயமாக்க வேண்டும் என்ற முன்மொழிவையும் ஆதரித்தார்.

அவர்களது தேர்தல் உறுதிமொழிகளுக்கு முரணாக, இடதுகட்சி-சமூக ஜனநாயகக்கட்சி செனட், முந்தைய செனட்டினால் மேற்கொள்ளப்பட்ட பேர்லினின் நீர் வழங்கீடுகளின் ஒரு பகுதியை தனியார்வுடைமையாக்குவதை வாபஸ் பெறுவது என்பதை மறுத்துவிட்டது. மாறாக, தனியார் முதலீட்டாளர்களான, (RWE,Veolia Waters) நிறுவனங்களுக்கான நிகர வருமானங்களுக்கு உறுதியளிக்கப்பட்டதன் விளைவாக சராசரியான தண்ணீருக்கான கட்டணம் 25 சதவீதம் உயர்ந்திருக்கிறது. பேர்லின் பொருளாதார அமைச்சர் ஹரால்டு வொல்ப் (இடது கட்சி - PDS) இந்த கட்டண உயர்வு மூலம் உயரும் அவர்களது செலவினங்கள் குறைக்கப்படும் என்று வணிகங்களுக்கு அவர் உறுதியளித்தார்--- இது பொது மக்கள் தலையில் சுமத்துகின்ற மற்றொரு நடவடிக்கையாகும்.

கூடுதல் நடவடிக்கைகளில், நகரத்தின் வீட்டுவசதி அமைப்பை (GSW) அதன் 65,000 சொத்துக்களுடன் அமெரிக்க முதலீட்டாளரும் ஊகவாணிப நிறுவனமான "Cerberus'' இற்கு விற்பதும் (அந்த நிறுவனம் வீட்டுவசதி சந்தையில் தனது செல்வாக்கை பயன்படுத்தி வாடகைகளை உயர்த்துவதில் இழிபுகழ் பெற்றதாகும்), பேர்லின் பள்ளிகளில் இலவச கல்வி உபகரணங்கள் வழங்குங்குவதை ஒழித்துக்கட்டுவது, பாலர்பள்ளி கட்டணங்கள் கணிசமாக உயர்த்துவது, வாரத்திற்கு ஏறத்தாழ இரண்டு பாடங்கள் அளவிற்கு ஆசிரியர்களது வேலை நேரம் அதிகரித்தமை, நகரத்தின் பல்கலைக்கழகங்களில் 75 மில்லியன் யூரோக்கள் வெட்டு போன்றவை அடங்கும். பேர்லின் குடிமக்களுக்கு ஏற்பட்டுள்ள புதிய சுமைகள் மற்றும் வெட்டுக்களை நீண்ட பட்டியலிட வேண்டும்.

ஒரு அரசாங்கம், பொதுமக்களுக்கு இவ்வளவு பகிரங்கமாக, வெட்கக்கேடான முறையில் காட்டிக்கொடுப்பதும், மோசடி செய்வதும் மிக அபூர்வமாக நடைபெறுகின்ற காரியமாகும்.

WASG கட்சி மாநாடு தற்போது இந்தக் கொள்கைகளை நியாயப்படுத்தி இருப்பதும் அதன் விமர்சனங்களை குற்றச்சாட்டுவதற்கு முயற்சித்திருப்பதுமாகிய உண்மை குறித்து பல தொகுதிகளாக விவரிக்கலாம். தேர்தல் மாற்றீடு என்பது எந்தவொரு மாற்றீடையும் கொண்டவையல்ல, அத்தகையதொரு மாற்றீடு வளர்வதை அது அனுமதிக்காது என்பதை இந்த நடவடிக்கை தெளிவுபடுத்துவதாக உள்ளது. WASG பல்வேறு தொழிற்சங்க அதிகாரத்துவவாதிகளாலும், முன்னாள் சமூக ஜனநாயகக்கட்சி உறுப்பினர்களாலும் நிறுவப்பட்டது. சமூகநலன்கள் மீதான வெட்டிற்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பு ஒரு சோசலிச திசையில் சென்று விடாது தடுத்து திசைதிருப்புகின்ற முழுநோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட ஒரு அதிகாரத்துவ சூழ்ச்சி தந்திரோபாய முயற்சியாகும்.

WASG மற்றும் இடதுகட்சி-PDS இரண்டிலுமே நிர்வாக குழுவில் இருக்கின்ற சமூக ஜனநாயகக் கட்சி முன்னாள் தலைவர் ஒஸ்கார் லாபொன்டைன் Ludwigshafen இல் இழிவுபுகழ்பெற்ற வாய்வீச்சு பேச்சு ஒன்றை வழங்கினார். ஜேர்மனி இராணுவம் மேற்கொண்ட இராணுவத் தலையீட்டை, ''புதிய-தாராளவாத போக்குகளான' ஓய்வூதியங்கள் மற்றும் நலன்புரி வெட்டுக்கள் தொடர்பான பொறுப்பற்ற கொள்கைகளை உரத்த குரலில் ஆவேசமாய் கண்டித்து திரும்பத்திரும்ப ''இடதுகளின் ஒற்றுமைக்காக'' அழைப்பு விடுத்தார். WASG மற்றும் இடதுகட்சி- PDS ஒற்றுமை ''வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது'' என்றும் ''இடது குறுங்குழுவாதிகளால்'' அதற்கு ஆபத்தை விளைவிக்க முடியாது என்றும் கூறினார்.

என்றாலும், பிரதிநிதிகள் உற்சாகமாக கைதட்டி இரண்டு கட்சிகளும் ஒன்றிணைவதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த சம்மதித்தனர். கவனமாக நோக்குகின்ற எந்த ஆய்வாளருக்கும் எழுகின்ற கேள்வி: பாரம்பரிய கட்சிகள் மேற்கொள்ளுகின்ற அதே கொள்கைகளை அரசாங்கத்திற்கு வந்ததும், புதிய இடதுசாரிக் கட்சி எந்தவிதமான கொள்கை அடிப்படையும் இல்லாமல் அகந்தைப்போக்கோடு செயல்படுத்துமானால் அதனிடம் இருந்து என்ன எதிர்பார்க்க முடியும்?

லாபொன்டைனின் பல வருடங்கள் சமூக ஜனநாயகக் கட்சியின் முன்னணி உறுப்பினராக இருந்த பின்னணியை கொண்டுள்ளதுடன், 11 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த நேரத்தில், சமூக ஜனநாயகக் கட்சி தலைவராக இருந்த ருடால்ப் ஷார்பிங்கை கவிழ்த்து விட்டு கட்சி தலைவர் பதவியை Mannheim நகர சமூக ஜனநாயகக் கட்சி கட்சி மாநாட்டில் கைப்பற்றிதை மீண்டும் செய்ய முயல்கின்றார். ஹெல்முட் கோலின் பழைமைவாத அரசாங்கத்திற்கு எதிராக உணர்வை தூண்டிவிடுகின்ற ஒரு உரையை ஆற்றிய பின்னர்தான், "நீதி மற்றும் புதுமையை புகுத்துவது" என்ற முழக்கத்தின் கீழ் 1998ல் சமூக ஜனநாயகக் கட்சி தேர்தல் வெற்றிக்கு ஒழுங்கமைத்தார். அக்கட்சி பசுமைக் கட்சிக்காரர்களுடன் ஒரு ஆளும் கூட்டணியை உருவாக்கியது.

என்றாலும், கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டிருப்பதைப்போல், முதலாவதாக, ஒரு துயரமாகவும் அதற்கு பின்னர் ஒரு மோசடி நாடகமாகவும் தன்னைத்தானே வரலாறு மீண்டும் காட்டுகின்றது. 8 ஆண்டுகளுக்கு முன்னர், "புதுமை மற்றும் நீதி" என்ற முழக்கம் சில நம்பிக்கைகளையும் மாயைகளையும் உருவாக்கிற்று. இன்றைய தினம், பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்திமுறை மற்றும் சர்வதேச ஒருசிலவராட்சியின் பாரிய அதிகாரம் ஆகியவற்றின் பின்னணியில் முதலாளித்துவ தனியார் சொத்துரிமை உறவுகளின் அடித்தளங்களுக்கு அறைகூவல்களை விடாமல், வேலை மற்றும் சமுதாய வாழ்க்கை தரங்களை பாதுகாக்க இயலும் என்று எவரும் இன்றைய தினம் நம்ப முடியாது. ஒரு சோசலிச முன்னோக்கு அவசியம் என்பது அதிக அளவில் தெளிவாகிக்கொண்டு வருகிறது.

எனவேதான் லாபொன்டைனினதும், PDS தலைவர் கிரிகோர் கீசியினதும் ஒரு புதிய இடது கட்சியை அமைப்பதற்கான திட்டம் கால் ஊன்றுவதற்கு முன்னரே சீர்குலைந்துவிட்டது. இது WASG உம் இடதுசாரி கட்சியும் தனது கட்சிக்குள்ளே மிகவும் மூர்க்கத்தனமான அதிகாரத்துவ சக்திகளை ஊட்டி வளர்ப்பதால் பிரதிபலிக்கப்படுகின்றது.

குறிப்பாக, வெறுப்பூட்டும் இவ்வகை தலைவர்களுக்கன ஒரு எடுத்துக்காட்டு WASG துணைத்தலைவர் உலி மவரர் ஆவார். ஒரு நீண்டகால சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவராகவும் பாடன்-வூட்டம்பேர்க் மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி வந்த மவரர் சென்ற ஆண்டு WASG இற்கு தாவினார். அவர் தற்போது ஜேர்மன் நாடாளுமன்றத்தில் கட்சி உறுப்பினராக உள்ளார். அண்மையில் நடைபெற்ற கட்சி மாநாட்டிலும், மற்றும் பேட்டிகளிலும் அவர் பகிரங்கமாக பேர்லின் பிராந்திய கட்சி அமைப்பை நீக்கிவிட வேண்டும் என்றும், ''தன்னிச்சையாக, இடதுகட்சி-PDS கூட்டணிக்கு எதிராக பேர்லினில் வேட்பாளரை நிறுத்துவதற்கு'' எதிராக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார். ஒரு ஒன்றுபட்ட இடதுகட்சி திட்டத்திற்கு ஆபத்தை விளைவிக்க, ''சில தீவிரவாத இடதுசாரி அணி குறுங்குழுவாதிகள்'' மேற்கொள்ளும் முயற்சியை சகித்துக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறினார். அரசியல் அடிப்படையில் மட்டுமே ஆட்சேபனை தெரிவிப்பதற்கு பதிலாக சட்டபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

சென்ற ஆண்டு இடதுசாரிக் கட்சி - PDS இன் மதிப்புக்குரிய தலைவர் ஹான்ஸ் மான்ட்ரோவுடன் சேர்ந்து மாரார் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இந்த கட்டுரைகள் தொகுதிக்கான தலைப்பு இடதுபக்கமாக கடந்துசெல்வது - இடதுகட்சி விரும்புவதை முடிந்தது, செய்யகூடியது என்ன? அதில் ஒரு கட்டுரை ஜேர்மனியின் இடதுகட்சி இறுதியாக, தேசிய பிரச்சினை குறித்து ஒரு ஆக்கபூர்வமான விவாதம் நடத்த வேண்டும் என்று கோருகிறது. வழக்கமான அரசியல் உறவுகள் தற்போது ஜேர்மனியில் நிலவுவதாகவும், பிரெஞ்சு கம்யூனிஸ்ட்டுக்கள் ''பிரான்ஸ் வாழ்க'' என்று முழக்கம் எழுப்புவதைப்போல் ஜேர்மனியில் இடது கட்சி கூட்டங்களில் ''ஜேர்மனி நீடூழி வாழ்க'' என்ற முழக்கம் எழுப்புவது பற்றி எவ்வித மனக்கிலேசமும் கொள்ளக்காடாது என்பதே அவரது கருத்தாகும்.

இதே தேசியவாத மரபு தான் தொழிற்சங்க வட்டாரங்களிலும் நிலவுகிறது. இது தொழிலாளர்கள் பிளவுபடுத்த பயன்படுத்தப்படுவதுடன், தேசியவாத அடிப்படையிலும் மற்றும் ஒரு தொழிற்சாலை தொழிலாளர்களை மற்றைய தொழிற்சாலை தொழிலாளர்களோடு மோதவிட்டு கொண்டிருக்கிறது. இடதுகட்சி-PDS மற்றும் WASG ஆகிய இரண்டும் முதலாளித்துவ ஒழுங்கமைப்பிற்கு இறுதி முண்டுக்கொடுப்பது போன்ற சேவையை வழங்கிவருவதன் மூலம் அவை தமது உண்மையான பிற்போக்கு வேலைதிட்டத்தை வெளிப்படுத்துகிறது.

Top of page