World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Egypt: Mubarak extends repressive Emergency Law

எகிப்து: ஒடுக்குமுறை அவசரச் சட்டத்தை முபாரக் நீடிக்கிறார்

By Rick Kelly
5 May 2006

Use this version to print | Send this link by email | Email the author

25 ஆண்டு-கால அவசரகால சட்டத்தை மேலும் ஒரு இரண்டு ஆண்டுகளுக்கு எகிப்து நாடாளுமன்றம் சென்ற வாரம் மீண்டும் புதுப்பித்துள்ளது. நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஹோஸ்னி முபாரக்கின் கட்சியினால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது, அவர் அந்த சட்டத்தில் அடங்கியுள்ள ஜனநாயக விரோத மற்றும் ஒடுக்குமுறை விதிகளை தனது சர்வாதிகாரத்தை பாதுகாப்பதற்காக பரந்த அளவில் சார்ந்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள 378 உறுப்பினர்களில் கால்வாசிப்பேர் முக்கியமாக முஸ்லீம் சகோதரத்துவ எதிர் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் இந்த நடவடிக்கையை எதிர்த்தனர்.

இந்தச் சட்டம் நீடிக்கப்பட்டிருப்பது அரசாங்கம் அதிகரித்தளவில் ஆடிக்கொண்டிருக்கும் தனது அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கு மற்றொரு ஒடுக்குமுறை அலையை தயாரிப்பதை கொண்டிருக்கிறது என்பதை கோடிட்டுக்காட்டுவதாக உள்ளது. அப்படிச் செய்வதற்கு, உடனடி சாக்குப்போக்கு ஏப்ரல் 24 அன்று சுற்றுலா நகரமான டாஹப்பில் நடைபெற்ற மூன்று குண்டுவெடிப்புக்களாகும், அவை குறைந்தபட்சம் 19 பேரைக் கொன்றது. இந்த பயங்கரவாத தாக்குதல் பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்கள் தேவையான அளவிற்கு இயற்றப்படுகின்ற வரை அவசரகால சட்டம், நடைமுறையில் இருக்கின்ற அவசியத்தை எடுத்துக்காட்டியிருப்பதாக, அரசாங்கம் கூறிற்று-----அத்தகைய சட்டத்தை இயற்றுவதற்கு குறைந்தபட்சம் 18 மாதங்களாகும் என்று அதிகாரிகள் கூறினர்.

உண்மையிலேயே, அவசரகால சட்டம் நீடிக்கப்பட்டிருப்பதற்கும், எகிப்தின் குடிமக்களை, பயங்கரவாத அச்சுறுத்தலில் இருந்து காப்பதற்கும் சிறிதும் சம்மந்தமில்லாத நடவடிக்கையாகும். இந்த சட்டம் அரசாங்கத்திற்கு-எதிரான எதிர்பின் எந்த வெளிப்பாட்டையும் ஒடுக்குவதை நோக்கமாகக்கொண்டது.

அவசரகால சட்டம் செய்திப் பத்திரிகைகள், புத்தகங்கள், மற்றும் இதர ஊடகங்களை, முன்தணிக்கை செய்வது மற்றும் தடைவிதிப்பது மற்றும் பொதுக்கூட்டம், இயக்கங்களின் சுதந்திரத்தை நசுக்குவது உட்பட ஜனாதிபதிக்கு பரவலான அதிகாரங்களை தருவதாக உள்ளது. மக்களை குற்றச்சாட்டுக்கள் எதுவுமில்லாமல் கைது செய்வதும் சிறையில் அடைப்பதும் காலவரையறையின்றி சிறையில் வைத்திருக்க முடியும். அந்த குற்றஞ்சாட்டப்பட்டவர் முறையான நீதிமன்றங்களில் சுதந்திரமாக இயங்குகின்ற அரசு பாதுகாப்பு நீதிமன்றங்களில் விசாரிக்கப்படுகின்றனர். மற்றும் அவை முக்கிய இராணுவ நீதிபதிகள் தலைமையில் இரகசியமாக அடிக்கடி நடைபெற்றுக்கொண்டுள்ளன.

மனித உரிமைக் குழுக்கள் செய்துள்ள மதிப்பீட்டின் படி அவசர நிலை, சட்ட விதிகளின் கீழ் 15,000 பேர் குற்றச்சாட்டு எதுவும் தாக்கல் செய்யப்படாமல் சிறையில் காவலில் வைக்கப்பட்டிருக்கின்றனர். எகிப்தின் இழிவுபுகழ்பெற்ற கொடூரமான பாதுகாப்புப்படைகள் சித்திரவதை செய்வதும் கற்பழிப்பதும் தொடர்பாக பல்வேறு ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகள் உள்ளன.

முபாரக் சர்வாதிகாரத்தில் மிக பரவலாக வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ள சட்டங்களில் ஒன்று அவசரநிலை தொடர்பான சட்டமாகும். அதை இரத்து செய்ய வேண்டும் என்பது தாராளவாத மற்றும் இஸ்லாமிய நிலைபெற்றுவிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதான கோரிக்கையாகும். பொது மக்களிடமிருந்து தனது அரசாங்கம் பெருமளவிற்கு தனிமைப்படுத்தப்பட்டு வருவதால் முபாரக் சென்ற ஆண்டு, பல வேட்பாளர்கள் கலந்துகொள்ளும் ஜனாதிபதித் தேர்தலை நடத்த ஒப்புக் கொண்டார். மற்றும் அவசரநிலைச்சட்டத்தை இரத்து செய்வது உட்பட பல்வேறு அரசியல் சீர்திருத்தங்களை கொண்டுவர உறுதியளித்தார்.

இவற்றில் எதுவும் ஜனாதிபதியின் இரும்புக்கர ஆட்சியைத் தளர்த்துவதற்காக அல்ல என்பதை அண்மைக்கால வளர்ச்சிகள் தெளிவுபடுத்தின. கடந்த செப்டம்பரில், நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல், முபாரக்கிற்கு, மேலும் ஆறு ஆண்டு கால பதவியை பெற்றுத் தருவதற்கு, கவனமாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். தேர்தல் முடிந்தவுடன் அவர் தாராளவாத எதிர்க்கட்சி அரசியல்வாதியான ஐமன் நூறுக்கு எதிராக நடவடிக்கையில் இறங்கினார், அவர் ஜனாதிபதி தேர்தலில் 7.6 சதவீத வாக்குளைப் பெற்றார். அவருக்கு, மோசடிக்குற்றச்சாட்டுக்களின் கீழ் ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவை பொய் குற்றச்சாட்டுக்கள் என்று பரவலாக கருதப்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு பிற்பகுதியில் உள்ளாட்சி நிர்வாக அமைப்புக்களுக்கான தேர்தல் நடத்த இருந்ததையும் முபாரக் தள்ளி வைத்திருக்கிறார். சென்ற ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் ஆளும் தேசிய ஜனநாயக கட்சி வாக்குகளில் 35 சதவீதத்தை மட்டுமே பெற்றிருந்ததால் மேலும் வாக்குகள் சரியும் என்று ஆட்சி பயந்தது. முஸ்லீம் சகோதரத்துவ அமைப்பு 88 தொகுதிகளில் வென்றது இது மொத்தத் தொகுதிகளில் 5-ல் ஒரு பங்காகும்.

ஏராளமான எதிர்க்கட்சிக்காரர்களை அதிகாரிகள் கைது செய்த நேரத்தில் சென்ற வாரம் அவசரச்சட்டம் நீடிக்கப்பட்டிருக்கிறது. மிகப்பரவலாக செய்திகளாக வெளியிடப்பட்டுள்ள சம்பவம், ஏப்ரல் 27-ல் மத்திய கெய்ரோவில் அமைந்துள்ள நீதிபதிகள் சங்கத்திற்கு வெளியில் 10,000 போலீசார் ஆர்பாட்டக்காரர்களை தாக்கியதாக மதிப்பிடப்பட்டதாகும். நீதித்துறையை இழிவுப்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள இரண்டு நீதிபதிகளான, ஹெஸம் பஸ்டாவிசி மற்றும் முஹம்மது மெக்கி ஆகியோருக்கு, ஆதரவாக, நீதிபதிகள் சங்கத்திலும், அருகாமையிலுள்ள உயர்நீதிமன்ற கட்டிடத்திலும் ஆர்பாட்டக்காரர்கள் திரண்டனர். சென்ற ஆண்டு தேர்தலில் அரசாங்க வாக்குப்பதிவு மோசடிக்காக மேற்பார்வையிட்ட இதர நீதிபதிகளை அவர்கள் பகிரங்கமாக கண்டித்தனர்.

போலீசாரில் பலர் ஆயுதந்தாங்கி கலவரத்தடுப்பு கவசங்களுடன் வந்து தாக்கினர், மற்றும் 20 கணக்கான கண்டனக்காரர்களை கைது செய்தனர். நீதிபதிகள் சங்கத்தில் இரண்டு நீதிபதிகள் மீது வழக்குத்தொடுப்பதை கண்டிப்பதற்காக, சுமார் 80 நீதிபதிகளும், டசின் கணக்கான அவர்களது ஆதரவாளர்களும் ஒரு வார காலமாக மறியல் போராட்டம் நடத்தி வந்தனர். ஒரு பாரியளவு அணிதிரட்டலுக்கு போலீசார் பதிலளித்தனர், தஹாப் குண்டுவெடிப்புக்களை பின்தொடர்ந்து காணப்பட்டதை விட அதிகளவாகும்.

"நீதிபதிகள் உட்பட ஒவ்வொருவரையும் அவர்கள் தாக்க தொடங்கினர்," என்று எதிர்க்கட்சி இயக்கமான "கிப்பாயா (போதும்)-வின் ஒரு உறுப்பினரான ராசா அசாப் அல்-அஹ்ரம் வீக்கிலிக்கு தெரிவித்தார்.

குறிப்பாக அரசாங்கம், அதன் ஆட்சி முறைகள் குறித்து பெருகிவரும் நீதித்துறை விமர்சனங்களுக்கு எளிதில் பாதிப்படையகூடியளவில் உள்ளது. அந்த ஆட்சியின் கீழ் உள்நாட்டு ஊடகங்கள் கண்டிப்பான முன்தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றன. மற்றும் அரசியல் எதிர்க்கட்சிகள் நெருக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன அல்லது வெளிப்படையாக தடைசெய்யப்படுகின்றன. அரசாங்க ஊழல் வாக்குப்பதிவு மோசடி பற்றியும், டசின் கணக்கான நீதிபதிகள், கண்டனம் தெரிவித்து வருவது அரசாங்க-எதிர்ப்பு எதிர்க்கட்சிகளின் ஒரு குவிப்பு புள்ளியாகிவிட்டது.

முபாரக் மற்றும் அரசாங்கத்திலிருந்து ஓரளவு தன்னாட்சி உரிமைபெற்ற அரசு அமைப்பாக நீதித்துறை மட்டுமே செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதை நோக்கமாக கொண்டு வலதுசாரி பொருளாதார மற்றும் சமூக வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக எகிப்தின், நீதிமன்ற முறை ஒட்டுமொத்தமாக 1970 களின் பின்னரும், 1980 களிலும் சீரமைக்கப்பட்டது. இடது-தேசியவாத கமால் அப்துல் நாசரின் கீழ் வெளிநாட்டு தொழில்துறைகள் தேசியமயமாக்கப்பட்ட பின்னர், பன்னாட்டு நிறுவனங்களும், முதலீட்டு நிறுவனங்களும், நாசரின் வாரிசுகளான, அன்வார் சாதத்தும், அதற்குப் பின்னர் முபாரக்கும் தங்களது சொத்து மற்றும் இலாபங்களுக்கு உத்தரவாதம் தரவேண்டும் என்று கோரினர்.

பொருளாதார தேக்கவீக்கம் அரசியல் ஸ்திரமற்ற தன்மை மற்றும் சர்வதேச கடன் வழங்குபவர்களிடமிருந்து அழுத்தங்கள் அதிகரிப்பதை எதிர்கொண்டும், ஆட்சி, தனது அரசியல் வாழ்வையே, வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதில் அதிகரித்தளவில் நம்பியிருக்கிறது. புதிய உச்ச அரசியலமைப்பு நீதிமன்றம் எகிப்து மற்றும் வெளிநாட்டு தனியார் முதலீட்டாளர்களின் சொத்துடமைகள் ஆகிய இரண்டையும் தற்போது எகிப்தில் பாதுகாப்பாக உள்ளன என்று ஆட்சி உறுதியளிக்க உதவியது மற்றும் ஆட்சியின் வெறும் உறுதிமொழிகளுக்கு அப்பாலும், அதற்கு மேலாகவும், அமைப்புரீதியில் பாதுகாப்புக்கள் உள்ளன என்று தமிர் முஸ்தபா குறிப்பிட்டிருக்கிறார். "சட்டம் எதிர் அரசு: எகிப்து அரசியல் நீதித்துறை மயமாதல்," சட்டமும் சமூக விசாரணையும், தொகுதி 28, எண் 4, 2003 இறுதி காலாண்டு வெளியீடு."

தொழிலாள வர்க்கத்திற்கான எந்த சுதந்திரமான கட்சி அல்லது அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்துவது இல்லாததன் ஒரு விளைவாக முபாரக் ஆட்சியில், சில அம்சங்கள் தொடர்பாக விமர்சிக்கும் பல நீதிபதிகள் தற்போது முதன்மை நிலையில் உள்ளனர். எகிப்து சமுதாயம் பாரியளவிற்கு சமூக சமத்துவமின்மையை குறிப்பவையாகும். அங்கு உண்மையான வேலையில்லாதோர் விகிதம் 20 சதவீதம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது மற்றும் நெறிமுறைத் தளர்வு மற்றும் தனியார்மயமாக்கல் ஆகிய அரசாங்க வேலைதிட்டத்தின் விளைவாக நூறாயிரக்கணக்கான மக்கள் தங்களது வேலைகளை இழந்தனர். சமுதாய படலத்தின் இன்னொரு முனையில் கடந்த தசாப்தத்தில் பங்குச்சந்தை பூரிப்படைந்தது மற்றும் சலுகை பெற்ற ஒரு சிலர் திடீர் பணக்காரர்களாகிவிட்டனர்.

தற்போதுள்ள முறைக்குள் சாதாரண தொழிலாளர்களின் நலன்களை வெளிப்படுத்துவதை காணமுடியாது. சுதந்திரமான தொழிற்சங்கங்கள், தடை செய்யப்பட்டுள்ளன. சோசலிச வெளியீடு மற்றும் அமைப்புக்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மிகப்பெரிய எதிர்க்கட்சி அமைப்பு இஸ்லாமிய சகோதரத்துவ குழுவாகும். அது ஒரு முதலாளித்துவ அமைப்பு. எகிப்தின் பிஸ்னஸ் டுடே சென்ற ஆண்டு வெளியிட்டுள்ள கருத்தில் குறிப்பிட்டிருந்ததாவது: " சகோதரத்துவ அமைப்பின் எதிர்காலம் பற்றி ஆராய்வதற்கு முயலுகின்ற பொருளாதார ஆய்வாளர்கள் ஒரு முக்கியமான உண்மையை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட முடியாது: சகோதரத்துவ, அமைப்பின் அதிகாரத்தை செயல்படுத்துகின்றவர்களில் ஒரு குறிப்பிட்ட தட்டு செல்வந்த தொழிலதிபர்களைக் கொண்டது. அவர்களது பணம் இரகசிய முதலீடுகளில் உள்ளது, அவர்கள் தற்போது எகிப்தில் சாதகமான சந்தையில் குழப்பம் விளைவிப்பதில் எந்த அக்கறையும் கொண்டவர்கள் அல்லர்."

ஏறத்தாழ, எங்களது பொருளாதாரத்திட்டம் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான பொருளாதாரத் திட்டம் அல்லது எகிப்திலுள்ள எந்த அரசியல் கட்சியும் தாக்கல் செய்துள்ள எந்தவித இதர திட்டத்தையும்விட கடுமையாக வேறுபட்டு நிற்பதல்ல" என்று, இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் முன்னணி உறுப்பினரும், கெய்ரோ பல்கலைக்கழக பேராசிரியருமான அப்துல் ஹமீத் எல்-கசாலி பிஸ்னஸ் டுடேயிடம் தெரிவித்தார்.

தாராளவாத எதிர்க்கட்சிக் குழுக்கள், எதற்குமே வெகுஜன அடிப்படை இல்லை, அவை, புஷ் நிர்வாகத்தின் ஆதரவை வென்றெடுத்துவிட முடியும் என்று நம்பிக்கை வைத்து செயல்பட்டு வருகின்றன. கிப்பாயா அமைப்பு----''போதுமானது'' என்பது ஒரு தாராளவாதிகள், இஸ்லாமியவாதிகள், முன்னாள் ஸ்ராலினிஸ்ட்டுக்கள் மற்றும் நாசரிஸ்ட்டுக்கள் அடங்கிய குழுக்களின் கீழ் 2004-ல் அமைக்கப்பட்டதாகும். அது உக்ரேன், ஜோர்ஜியா மற்றும் கிர்கிஸ்தானில் காணப்பட்ட ''வண்ணப்புரட்சிகள்'' என்றழைக்கப்பட்டதை பின்பற்ற முயன்றன----அவை அனைத்துமே அமெரிக்காவின் ஆதரவை பெற்றவை.

என்றாலும், அமெரிக்காவிற்கும் எகிப்திற்கும் இடையே சில அரசியல் பதட்டங்கள் நிச்சயமாக இருந்தாலும், வாஷிங்டன் ஆட்சி மாற்றத்தை கடைபிடித்து வருகிறது என்பதற்கான சமிக்கைகள் எதுவுமில்லை.

எகிப்தை இழிவுபடுத்தினார் என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் எகிப்து-அமெரிக்க சமூகவியல் பேராசிரியர் சாத் எட்டின் இப்ராஹிமிற்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்ற ஆகஸ்ட்டில் எகிப்திற்கு, 130 மில்லியன் டாலர் உதவியை எதிர்ப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபூள்யூ. புஷ்ஷினால் ஒரு அச்சுறுத்தல் தூண்டிவிடப்பட்டது. மிக அண்மைக்காலத்தில், யூத மூத்தவர்களின் ஒரு செமிட்டிச-எதிர்ப்பு குறிப்புகள் தொடர்பான ஒரு நாடக ஓவியத்தை அரசு தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்படுவதற்கு எதிராக, அமெரிக்கா கண்டனங்களை செய்தது. ஆனால் வாஷிங்டன் மீண்டும் முபாரக்கிற்கு, உதவி எதையும் நிறுத்த முடியாது என்று அறிவித்துவிட்டது. "அமெரிக்கா எகிப்திற்கு உதவியளிப்பதற்கு காரணம் அமெரிக்காவின் மூலோபாய நலன்களுக்கு உகந்தது என்பதால்தான்" என்று அரசுத்துறை பேச்சாளர் நான்சி பெக் குறிப்பிட்டார்.

ஈராக்கில் தொடர்ந்து கொண்டுள்ள ஆக்கிரமிப்பை ஆதரிப்பது உட்பட மத்திய கிழக்கில் அமெரிக்க கொள்கையை ஆதரிக்கும் ஒரு முக்கிய பங்கை வகித்துக் கொண்டுள்ள முபாரக், அமெரிக்காவின் மிக நெருக்கமான அரபு கூட்டணியினராக உள்ளார். வாஷிங்டன் எகிப்திற்கு ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 2 பில்லியன் டாலர்கள் இராணுவ மற்றும் பொருளாதார உதவியை வழங்கி வருகிறது-----இது, இஸ்ரேல் நீங்கலாக வேறு எந்த நாடும் பெறுகின்ற உதவியைவிட அதிக தொகையாகும். அவசரநிலை சட்டங்களை அவர், நீடித்திருப்பதற்கு அமெரிக்க அரசுத்துறையின் ஒரு பேச்சாளர் மிக மென்மையான விமர்சனங்களையே தெரிவித்தார், "அது ஒரு ஏமாற்றமளிப்பதாகும்" என்று அவர் அறிவித்தார். ''எகிப்து அரசாங்கம், தேர்தலுக்கு இடையில் இந்தக் காலக்கட்டத்தை பயன்படுத்தி பல்வேறுபட்ட நடவடிக்கைகளை எடுக்கும் என்று நாங்கள் நம்பியிருந்திருக்கக் கூடும், ஆனால் அவர் இந்த [அவசரநிலை] சட்டத்தின் மீது மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறார்.''

Top of page