World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Blair joins Bush to defend Iraq occupation and back preemptive action vs. Iran

ஈராக்கிய ஆக்கிரமிப்பை பேணவும் ஈரானுக்கு எதிரான முன்னரே தாக்கி தனதாக்கும் தாக்குதலுக்கு ஆதரவு கொடுப்பதற்கும் புஷ்ஷுடன் பிளேயர் இணைகிறார்

By Chris Marsden
27 May 2006

Use this version to print | Send this link by email | Email the author

ஈராக்கிய ஆக்கிரமிப்பு தொடரவேண்டும், அதன் அண்டை நாடான ஈரானுக்கு எதிரான தூண்டுதல் பிரச்சாரங்கள் தொடரவேண்டும் என்பதை வலியுறுத்துவதற்கு ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷும், பிரதம மந்திரி டோனி பிளேயரும் தங்களுடைய சமீபத்திய கோடை உச்சிமாநாட்டு பேச்சு வார்த்தைகள் கூட்டத்தை பயன்படுத்திக் கொண்டனர்

அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் மக்களிடையே உள்ள போரெதிர்ப்பு உணர்விற்கு எதிரான இவர்களுடைய இகழ்வுணர்வைத்தான் இக்கூட்டம் விளக்கிக்காட்டியுள்ளது.

கருத்துக் கணிப்புக்களில் புஷ்ஷின் தரம் கிட்டத்தட்ட 30 சதவிகிதத்திற்கு குறைந்துவிட்டது; தனக்குத் தானே விதித்திருந்த பிரதமர் பதவிக்கு இரண்டு ஆண்டு கால கெடு என்பதை விரைவில் முடித்துக் கொண்டு பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை பிளேயர் எதிர்கொண்டுள்ளார். நிறைய பொய்களின் ஆதாரங்களை கொண்டு ஈராக்கிற்கு எதிரான போர் தொடுக்க வேண்டும் என்ற முடிவை மையமாக கொண்டிருந்த இரு தலைவர்களுக்கான மக்களின் எதிர்ப்பு, இன்னும் கூடுதலான வகையில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நாட்டில் அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய இரண்டுமே கொண்டுள்ள இராணுவ மற்றும் அரசியல் பேரழிவை ஒட்டி ஆழ்ந்து வெளிப்பட்டுள்ளது.

ஆயினும்கூட, மே 25ல் நடைபெற்ற கூட்டுச் செய்தியாளர் கூட்டத்தில், "இந்தப் போர், நாட்டின் மனநிலையை பாதித்துள்ளது" என்று புஷ் ஒப்புக் கொண்டபோதும், இருவருமே பாக்தாத்தில் உள்ள கைப்பாவை அரசாங்கத்திற்கு உலகம் முழுவதும் ஆதரவு கொடுத்து, இன்னும் கூடுதலான வகையில் மக்கள் எழுச்சியை உடைக்கும் குருதிகொட்டும் உந்துதலுக்கும் ஆதரவு வேண்டும் என்று கோரியுள்ளனர்.

ஈராக்கில் "பேரழிவு ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட முடியாதது", அபுகிறைப் சிறையில் கைதிகள் தவறாக நடத்தப்பட்டது போன்ற சில "பிழைகள்" நடந்துள்ளதாக புஷ் பேச்சுவாக்கில் ஒப்புக் கொண்டார், ஆனால் செய்தி ஊடகம் இப்படி ஒத்தூதப்பட்ட "தவறுகள் ஒப்புக் கொள்ளப்பட்டதை பற்றி" அதிகம் கூறினாலும், செய்தியாளர் கூட்டத்தின் மைய நோக்கமான "நான் இங்கு தலைமைத் தளபதியாக இருக்கும் வரை, இரண்டரை ஆண்டுகளுக்கு" கொள்கையில் எந்த மாறுதலும் இருக்காது என்று வலியுறுத்தியதை, ஊடகம் அதிகம் பொருட்படுத்தவில்லை.

சொல்ஜாலத்தில் கூடுதல் வனப்புரை காட்டும் வேலையை பிளேயர் செய்யுமாறு புஷ் விட்டுவிட்டார். அமெரிக்க ஜனாதிபதியுடன் கூட்டாக மேடையில் தோன்றுவதில் பிளேயருக்கு உள்ள நன்மைகளில் ஒன்று, ஆங்கிலப் புலமையில் தான் கூடுதலான தேர்ச்சி உடையதை காட்டிக் கொள்ள முடியும் என்பதாகும்.

இந்தக் கூட்டத்தில் புஷ்ஷையும்விட போர்வெறிக்கூச்சலை பிளேயர் வெளிப்படுத்திப் பேசினார். எழுச்சியை எதிர்கொள்ளுவதில் போதுமான தன்மையை காட்டாதுபோனதுதான் முக்கிய தவறு என்று அவர் கூறினார்: "இந்த வன்முறை, குருதிசிந்தல், பயங்கரவாதம் ஆகியவற்றை ஈராக்கில் தோற்றுவிக்கும் சக்திகள், ...அந்நாடும் மக்களும் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை அடைவதற்கான நம்பிக்கையை அழிக்க விரும்புகின்றன" என்று அவர் குறிப்பிட்டார்.

அத்தவறு இப்பொழுது சரி செய்யப்பட வேண்டும். இராணுவம் பின்வாங்கப்படுவதற்கு காலம் குறிக்கப்பட வேண்டிய தேவையில்லை; மாறாக ஈராக்கில் புதிதாக சுமத்தப்பட்டுள்ள அரசாங்கத்தை வலுப்படுத்துவற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பிளேயர் கூறினார்: "நமக்கு வேண்டிய முதல் விஷயம் பாக்தாத்தில் ஒரு வலுவான அரசாங்கம் இருக்க வேண்டும் என்பதாகும்; நாட்டில் அதன் ஆணைகளை செயல்படுத்த அது தயாராக இருக்க வேண்டும்... ஈராக்கிய சக்திகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை கடினமாக்கும் வகையில் சூழ்நிலையை தோற்றுவிப்பவர்கள்மீது அவை கடுமையான நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளன."

ஈரான்மீது வாஷிங்டன் கொண்டுள்ள திட்டங்களை பற்றிக் குறிப்பிடுகையில் நிருபர்களிடம் புஷ் கூறினார்: "டோனியும் நானும் கொண்டுள்ள இலக்குகளில் ஒன்று அணுவாயுதமுடைய ஈரான் என்பது மிக ஆபத்தானது என்பதை உலகுக்கு நம்பவைத்தல் ஆகும்; ஆகையால், நாங்கள் உறுதியான பொது இலக்கு ஒன்றைக் கொண்டிருக்கிறோம்."

அமெரிக்கா, தெஹ்ரான் தன்னுடைய அணுக்கரு ஆற்றல்திட்டத்தை தகர்த்துவிடவேண்டும் என்ற ஈரானுக்கு எதிரான கோரிக்கைக்கு, பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் பிரிட்டனுடைய ஆதரவை தூதரக செயற்பாடுகளுக்காக பெற்றுவிட்டது. ஆனால் புஷ் இன்னும் அதிகமாகச் செல்ல விரும்புகிறார். தானும் பிளேயரும் "நாம் கொண்டுவந்திருக்கும் இக்கூட்டணி ஆபத்தானது என்பதை ஈரானியர்களுக்கு எப்படி நம்பவைப்பது என்பது பற்றி மாடியில் நிறைய நேரம் பேசினோம். ... EU3 [பிரிட்டன், ஜேர்மனி, பிரான்ஸ்] கேட்பதை ஈரானியர் ஒப்புக் கொள்ளவில்லை என்றால், பங்காளிகளை ஐ.நா. பாதுகாப்புக் குழுவிடம் செல்வது ஒன்றுதான் வழி என எப்படி நம்பிக்கை கொள்ள வைப்பது என்றும் உத்தி வகுத்தோம்."

ஈரானுக்கு எதிரான "விரிவாக்கப்பட்ட கூடுதலான நடவடிக்கைகள்" மற்றும் பாதுகாப்புக் குழு பற்றிய குறிப்புக்கள் வாஷிங்டன் இறுதி இலக்காக இராணுவ நடவடிக்கைக்கு ஐ.நாவின் ஒப்புதலை பெற வேண்டும் என்று உறுதி கொண்டுள்ளதை பாதுகாப்புக் குழு பற்றிய இவருடைய குறிப்பு தெளிவாகக் காட்டுகிறது. இத்தகைய ஒப்புதல் இன்னும் கூடுதலான முறையில் பிளேயருக்கு முக்கியமானது ஆகும். பிரிட்டனின் வெளிநாட்டுக் கொள்கையை அமெரிக்க இராணுவ மற்றும் தூதரகச் செயற்பாடுகளுடன் அவர் பிணைத்துள்ளார், இவர் புஷ் நிர்வாகம் ஒருதலைப்பட்சமான முறையில் செயல்படத் தயாராக இருப்பது ஐரோப்பாவில் ஈராக் படையெடுப்பின்போது நடந்ததுபோல் அதிரடி அரசியல் விளைவுகளை ஏற்படுத்தக் கூடும் என்று அஞ்சுகிறார். முன்னரே தாக்கித் தனதாக்கிக் கொள்ளும் அமெரிக்க போர்க் கொள்கைக்கு சட்ட ரீதியான நியாயப்படுத்துதலை வழங்குவதற்கான மற்றும் அமெரிக்க இலக்குகளுக்கு சர்வதேச ஆதரவுகளை உத்திரவாதம் செய்வதற்கான ஒரு முயற்சியால் மேலாதிக்கம் செய்யப்படுகிறது.

இந்த இலக்கை கருத்திற் கொண்டு வெள்ளியன்று ஜோர்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் பிளேயர், "ஜனநாயக மதிப்பீடுகளை" வளர்க்க, பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்பதற்காக, சர்வதேச சமூகம் சமரசம் காண்பதற்கான உத்தியை சுற்றி, "கூடுதலான வகையில் முன்கூட்டியே தாக்கித் தனதாக்கும் போர்" தொடக்கும் உத்தி ஆகிய தன்னுடைய திட்டங்களை பற்றி ஓர் உரை நிகழ்த்தினார். பாதுகாப்புக் குழு நெறிகளில் மாறுதல்கள் கொண்டுவரப்பட்டு அது தவிர்க்கமுடியா தலையீடுகள் உறுப்பு நாடுகள் மேற்கொள்ளுவதை அனுமதிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த பிளேயர், "வரும் நடவடிக்கையை எதிர்கொள்ளுவதை விட, நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதையும் உறுதியான தகவல்படி என்றில்லாமல், ஊகக் கணக்கின்படி எடுக்க வேண்டும்; அத்தகைய நடவடிக்கைகள் உண்மையில் பொதுவாக எமது பகுதிகளுக்கு புறத்தே இருக்க வேண்டும்" என்று வலியுறுத்திக் கூறினார்.

"சதாமை அகற்றியது பற்றிய வாதங்களின் தகுதி பற்றிய விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று மீண்டும் வலியுறுத்திய அவர், "இப்போர் உலகத்தை பிரித்தது. ஈராக்கியர்கள் ஜனநாயகத்திற்காக கொண்டுள்ள போராட்டம் அதை மீண்டும் ஒன்றுபடுத்தவேண்டும்." என்றார்.

இதன் பின்னர் பெரும் இரத்தம் சிந்தலை எதிர்கொள்கின்றபோதிலும் ஆக்கிரமிப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற மக்களுடைய கோரிக்கைக்கு எதிராக ஏகாதிபத்திய சக்திகளின் தலைவர்கள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் ஏன்ற நேரடி முறையீட்டை அவர் முன்வைத்தார். "எமது உளப்பாங்கை இங்குதான் நாம் தீவிரமாக மாற்றவேண்டும். இப்பொழுது ஈராக்கில் நடக்கும் படுகொலைகளை பற்றிய படங்கள் நமக்கு காட்டப்படும்போது, எமது கருத்துக்களில் பல அதைத் தோல்வி என்று காணும், விட்டுச்செல்வதற்கான காரணமாக காணும். உறுதியாக தொடர்ந்து செயல்பட்டு வெற்றி காண்பதற்கு அது ஒரு காரணமாகும்" என்று அவர் தொடர்ந்து கூறினார்.

ஆனால் ஈராக்கை அடைதல் என்பது மட்டும் போதாது. அப்பகுதி முழுவதற்கும் நாம் இன்னும் கூடுதலான வகையில் குவிப்புக் காட்டி, ஒன்றுபடுத்தப்பட்ட மூலோபாயத்தை கொள்ள வேண்டும் என்று நான் நினைக்கிறேன. மிகச் சரியான முறையில் பரந்த முறையிலான மத்திய கிழக்கு ஆரம்ப முயற்சியை அமெரிக்கா தொடங்கியுள்ளது. ஆனால் இப்பிரச்சினையை நான் இன்னும் பரிசீலனை செய்யும்போது, எமது வருங்காலத்தை காப்பதற்கு, அவர்களுக்கு நிறைய உதவி செய்ய வேண்டும் என்பதில் எனக்கு பெரும் நம்பிக்கை வந்துள்ளது. உதாரணமாக ஈரான் மாற்றத்தை காணாவிட்டால் நாம் பாதுகாப்பாக இருக்க முடியும் என்று நான் நம்பவில்லை."

புஷ் மற்றும் பிளேயரின் இத்தகைய அறிக்கைகளின் தாக்கங்கள், உறைய வைக்கும் தன்மையை கொண்டிருந்தன; ஈராக்கின்மீது புதிய கொடுமைகளை இழைப்பதற்கும் மத்திய கிழக்கு முழுவதும் இன்னும் பெரும் குற்றங்களை இழைப்பதற்கும் இவை முன்னறிவிப்பு போல் தோன்றின.

தங்களுடைய, பாக்தாத்மீது போர் தொடுத்ததை, ஜனநாயகம் அங்கு தோற்றுவிக்கப்படுவதற்காக என்று நியாயப்படுத்திப் பேசும் அவர்கள் முயற்சி வெளிப்படையான பொய்யாகும். பிளேயரின் அடிப்படை வாதம், பேரழிவு கொடுத்திருந்தபோதிலும், ஈராக்கின்மீதான போர் நியாயமானதா இல்லையா என்று ஒருவர் நம்புவதை காட்டிலும், அதைப் பற்றி இனி ஏதும் செய்வதற்கில்லை என்பதாகும். நடந்து விட்ட உண்மையாகத்தான் அது ஏற்கப்படவேண்டும். கடந்த காலத்தை மறந்துவிட்டு, "ஜனநாயகத்தை" கட்டமைக்கும் போராட்டத்தில் ஒன்றுபட வேண்டும்.

ஈராக்கிற்கு எதிரான போர், சதாம் ஹுசைன் பேரழிவு ஆயுதங்களை கொண்டிருக்கிறார் என்ற தவறான கூற்றுக்களின் அடிப்படையில் தோன்றியிருந்தால், அப்போரை தொடங்கிய, நடத்தியதற்கு பொறுப்பானவர்கள் நீதிக்கு முன் நிறுத்தப்பட வேண்டும்; ஆனால் இங்கோ சட்டவிரோத படையெடுப்பின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட அரசாங்கமே சட்ட நெறியற்றதாக உள்ளது.

உண்மையில் ஆக்கிரமிப்பு போராக இருந்த இப்படையெடுப்பின் முக்கிய இலக்கு மத்திய கிழக்கு மற்றும் அதன் எண்ணெய் இருப்புக்களின்மீது அமெரிக்க மேலாதிக்கத்தை நிறுவ வேண்டும் என்பதுதான். அமெரிக்க, பிரிட்டிஷ் மக்களை ஏமாற்றும் விதத்தில் திட்டமிட்டு பிரச்சாரத்தின் தயாரிப்பை அது கொண்டிருந்தது.

ஆயினும்கூட பிளேயர் அத்தகைய சட்ட விரோத நடவடிக்கைகள் மூலம் செய்யப்பட்ட ஆக்கிரமிப்பு, ஜனநாயக ஆட்சியை அங்கு தோற்றுவித்துள்ளது என்று இப்பொழுதும் கூறுகிறார். இதற்கு மாறாக அங்குள்ள எழுச்சி "பயங்கரவாதம்தான்" என்றும் கூறுகிறார். மே 25 அன்று நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில், பிளேயரும் புஷ்ஷும் ஈராக்கில் வெளிநாட்டு இராணுவ ஆக்கிரமிப்பிற்கான எதிர்ப்பை "பயங்கரவாதம்" என்று இரண்டு டஜனுக்கும் மேலாக முத்திரையிட்டு கூறினார். இதேபோன்ற விதத்தில்தான் அவர்கள் பாக்தாத் அரசாங்கத்தை எதிர்க்கும் சக்திகளை குறுகிய நோக்குடைய வன்முறையினால் விளையும் முழு ஆபத்தையும் பிரதிபலிப்பவை என்று சித்தரித்தனர்.

இது உண்மையை தலைகீழாக நிறுத்தி வைத்தல் போன்றது ஆகும். எழுச்சி ஒன்றும் ஒரு சில சமயவாத தீவிரவாதிகளின் போராட்டம் அல்ல; போரினாலும் புதிய குடியேற்ற முறையிலான ஆக்கிரமிப்பிற்கு ஈராக் உட்பட்டுள்ளதினாலும் தூண்டுதல் பெற்றுள்ள மக்கள் எதிர்ப்புத்தான் அது. அதபோல் சுன்னிக்களுக்கும் ஷியாக்களுக்கும் இடையேயுள்ள வன்முறை குறுகிய முறையில் தூண்டுதல் பெற்றதற்கு ஆக்கிரமிப்புத்தான் முக்கிய காரணமாகும்; உண்மையான ஜனநாயக பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் அது வளர்ந்துள்ளது.

தேசிய ஒன்றுமையை அடைவதற்கான ஒரு வழிவகை என்றில்லாமல், பிரதம மந்திரி நூரி கமால் அல் மாலிக்கின் நிர்வாகம் உள்நாட்டு போருக்கு சரியும் நிலையை விரைவுபடுத்திக் கொண்டுதான் இருக்கிறது. புஷ்ஷினாலும், பிளேயரினாலும் பாராட்டப்படும் இப்போர் உண்மையில் குறுகிய பிளவுகளின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டது ஆகும்; ஈராக்கை இன-வகுப்புவாத வகையில் சிதைத்துவிடுவதற்கு இது ஊக்கம் கொடுத்துள்ளது; வடக்கில் குர்து பகுதி, நாட்டின் எஞ்சிய பகுதிகள் போட்டியாளர்களான சுன்னிக்கள், ஷியாக்கள் என்ற பிரிவுகளிடையே பிரித்துக் கொடுக்கப்படும்.

ஈராக்கில் பெருமளவிலான சுன்னி அடிப்படையிலான கிளர்ச்சியை தளத்தைக் கொண்டு எழுச்சியை மிருகத்தனமான முறையில் அடக்கி ஆதிக்கம் கொள்ள வேண்டும் என்ற கருத்துடைய ஷியாப் பிரிவின் பிரதிநிதிதான் மாலிக்கி ஆவார். ஷியாப் போராளிகள் கலைக்கப்பட்டுவிடாமல், மறுபடியும் பாதுகாப்புக் கருவிகளில் இணைத்துக் கொள்ளப்படவேண்டும் என்ற தன்னுடைய விருப்பத்தை அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஆக்கிரமிப்பிற்கு இருக்கும் எதிர்ப்பை பிளவுபடுத்த நிர்வாகத்தில் சுன்னி பிரதிநிதிகளையும் கொண்டுவரவேண்டும் என்ற அமெரிக்க முயற்சியில் நிர்வாகத்தின் கட்டமைப்பிற்குள்ளே வெளியே இருக்கும் வகுப்புவாத பூசல்களின் எதிரொலியையும் நுழைத்துவிட வேண்டும் என்ற கருத்துதான் உள்ளது; இதனால் எவர் முக்கியமான பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்பதைப்பற்றி அரசாங்கம் முடிவெடுக்க முடியவில்லை.

புஷ் மற்றும் பிளேயர் எதிர்கொண்டிருக்கும் சூழ்நிலையில் தெளிவான இணைகோடுகளை காணமுடியும். இருவருமே தங்களுடைய நாடுகளிலும் சர்வதேச அளவிலும் இழிவுற்றுள்ளனர். ஒரு பேரழிவு என அறியப்பட்டுள்ள நிர்வாகத்திற்குத்தான் இருவருமே தலைமை வகிக்கின்றனர்; இன்னும் ஆழ்ந்த நெருக்கடிக்கு இட்டுச் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தை இருவரும் கொண்டுள்ளனர். ஆயினும்கூட அவர்கள் பதவியில் தொடர்ந்து உள்ளனர் என்பது இன்னும் வினோதமான இணைவான நிகழ்வு ஆகும்.

இரு நாடுகளின் ஆளும் உயரடுக்கிற்குள்ளேயே புஷ் மற்றும் பிளேயர் தலைமையில் உள்ள அரசாங்கங்களிடம் பரந்த வகையில் அதிருப்தி இருந்தபோதிலும், அவர்களுடைய அடிப்படை இலக்குகள் பற்றிப் பரந்த உடன்பாடு உள்ளது. ஈராக்கில் உள்ள சீர்குலைந்துள்ள நிலைமை பெருகிய அக்கறையை துண்டியுள்ளது; ஆனால் அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியும், பிரிட்டனில் கன்சர்வேடிவ் தலைமையிலான எதிர்க்கட்சியும் போரை ஆதரித்து, ஆக்கிரமிப்பிற்கும் ஆதரவு கொடுக்கின்றன. மத்திய கிழக்கின் எண்ணெய் வளத்தின் மீது அமெரிக்கா கொண்டுள்ள பிடியின் இறுக்கத்தை தளர்த்தும் வகையில் படைகளை திரும்பப்பெற வேண்டும் என்று எவரும் விரும்பவில்லை. மாறாக எவ்விதத்திலும் ஆக்கிரமிப்பு தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் இப்பகுதியில் வாஷிங்டனின் இடுக்கிப்படி வலுப்படுவதற்காக ஈரானுக்கு எதிரான போர்த்தயாரிப்புக்கள் முன்கூட்டியே முடியவேண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இறுதியாக, இரண்டு நாடுகளிலும் ஆளும் வட்டங்களுக்குள்ளே இருக்கும் அனைத்து பிரிவுகளும் இராணுவவாதம் மற்றும் போருக்கு பரந்த தொழிலாள வர்க்கத்தின் அரசியல் எதிர்ப்பானது, அரசியல் வகையில் எவ்வித வடிகாலையும் காணக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளன.