World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

British government scientists vouched for validity of study estimating 655,000 war deaths in Iraq

ஈராக்கில் 655,000 போர் இறப்புக்கள் என்ற மதிப்பீட்டு ஆய்வின் உண்மைக்கு பிரிட்டிஷ் அரசாங்க விஞ்ஞானிகள் உறுதியளிக்கின்றனர்

By Naomi Spencer
28 March 2007

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க தலைமையிலான படையெடுப்பு மற்றும் ஈராக் ஆக்கிரமிப்பினால் 655,000 ஈராக்கியர்கள் கொல்லப்பட்டனர் என்று கடந்த அக்டோபர் மாதம் வெளிவந்த மதிப்பீட்டு ஆய்வின் உண்மையை பிரிட்டிஷ் அரசாங்க அறிவியல் வல்லுனர்கள் ஒப்புக்கொண்டுள்தாக மார்ச் 26 அன்று BBC அறிவித்துள்ளது.

ஆனால் தன்னுடைய சொந்த விஞ்ஞானிகளின் அறிவுரை இருந்தும், பிரிட்டிஷ் பிரதம மந்திரி டோனி பிளேயரின் அரசாங்கம் அமெரிக்க ஜனாதிபதி புஷ் மற்றும் ஆஸ்திரேலிய பிரதம மந்திரி ஜோன் ஹோவர்டுடன் சேர்ந்து, ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் Bloomberg School of Public Health நடத்தி, பிரிட்டிஷ் மருத்துவ இதழான Lancelet ல் வெளிவந்த அறிக்கையை உதறித்தள்ளியதுடன் ஆய்வின் வழிவகைகளை "பிழையானது", அதன் விளைவுகள் "சந்தேகத்திற்குரியவை" என்று கூறியது. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இரண்டிலும் உள்ள செய்தி ஊடகம் அறிக்கையை புதைத்து விட்டது.

BBC உலகச் சேவையின் "செய்தி நேரம்" ("Newshour") நிகழ்ச்சிக்கான ஒரு திட்டத்தின் கீழ், தகவல் அறியும் உரிமையின் கீழ் கிடைத்த ஆவணங்களின்படி, ஆய்வில் கையாளப்பட்ட வழிவகை "மோதல்கள் நிகழும் பகுதிகளில் இறப்பை அளவிடுவதற்கான நன்கு சோதிக்கப்பட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட வழிவகை" என்று கூறி, ஆய்வுக் கண்டுபிடிப்புக்களை பகிரங்கமாக குறைகூறுதலுக்கு எதிராக மூத்த அதிகாரிகளும் விஞ்ஞானிகளும் பிளேயர் அரசாங்கத்திற்கு அறிவுரை கூறினர்.

BBC அறிக்கை Johns Hopkins ஆய்வு அறிக்கையின் உண்மையை உறுதி செய்வதுடன் ஈராக்கில் அமெரிக்க, பிரிட்டிஷ் போர்க்குற்றங்களின் மகத்தான அளவையும் அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளது. இக்குற்றங்களில் செய்தி ஊடகத்தின் நேர்மையற்ற தன்மை மற்றும் உடந்தையாக இருந்ததும் உயர்த்திக் காட்டப்பட்டுள்ளது.

அக்டோபர் 11, 2006ல் வெளியிடப்பட்ட ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் ஆய்வு அமெரிக்க தலைமையிலான படையெடுப்பிற்கு முன்னும் பின்னும் இறப்பு விகிதங்களை பற்றி ஆயிரக்கணக்கானவர்களுடன் பேட்டி கண்டதை அடுத்து அமைந்திருந்தது. மிகப் பெரிய செயற்பாடாக இந்த ஆய்வு அமைந்திருந்தது; மாதிரி அளவைக்கே 12,800 தனிநபர்கள் 1,849 இல்லங்களில் இருந்து 46 தற்செயலாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடெங்கிலும் இருந்த பகுதிகள் தொகுக்கப்பட்டிருந்தன. 95 சதவிகித புள்ளியியல் உறுதிப்பாட்டை கொண்டு, ஆய்வாளர்கள் இறந்தோர் எண்ணிக்கை 392,979ல் இருந்து 942,636க்குள் இருந்திருக்க வேண்டும் என்றும் மிக அதிக புள்ளிவிவர தன்மையின்படி 655,000 ஆக இருக்கலாம் என்றும் கூறியிருந்தனர்.

மேற்கொள்ளப்பட்ட பேட்டிகளில் 92 சதவிகிதத்தினர் ஆய்வாளர்களிடம் இறப்புச் சான்றிதழ்களை கொடுத்திருந்தனர். மூன்று ஆண்டுகளில் ஈராக்கின் மக்கட்தொகுப்பில் 2.5 சதவிகிதத்தினர் போரினால் கோல்லப்பட்டனர் என்றும், இது சராசரியாக நாளொன்றுக்கு 500க்கும் மேல் என்றும் ஆய்வாளர்கள் முடிவிற்கு வந்தனர். பெரும்பாலான இறப்புக்கள் வெடிமருந்துப் பிரயோகங்களினால் ஏற்பட்டவை ஆகும். ஈராக்கிய இறப்புக்கள் அமெரிக்க மக்கட்தொகைக்கு மாற்றப்பட்டிருந்தால் அமெரிக்க இறப்புக்கள் 7.5 மில்லியன் என்று இருந்திருக்கும்; அதாவது நியூ யோர்க் நகரத்தின் மொத்த மக்கட்தொகைக்கும் சமமாக இருந்திருக்கும்.

ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்ட அன்றே ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஜனாதிபதி புஷ் செய்தியாளர்களிடம் கூறினார்: "இது ஒரு நம்பகத்தன்மை உடைய அறிக்கை என்று நான் கருதவில்லை... தளபதி கேசி மற்றும் ஈராக்கிய அதிகாரிகளும் அப்படித்தான் நினைக்கின்றனர்." ஈராக்கிய சுகாதார அமைச்சரகத்தின் இறப்பு மதிப்பீடுகள் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் மதிப்பீட்டில் பத்தில் ஒரு பங்கைத்தான் காட்டுகின்றன. விளக்கம் ஏதும் கொடுக்காமல், மாற்று மதிப்பீடு ஏதும் இல்லாமல், ஆய்வை தான் படித்ததாக நிரூபிக்கவும் செய்யாமல், புஷ் இந்த வழிவகை "பெரும் குறைமதிப்பிற்கு உட்பட்டது" என்று விளக்கினார்.

ஆஸ்திரேலிய பிரதம மந்திரி ஹோவர்ட் அறிவித்தார்: "ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் ஆய்வை நான் நம்பவில்லை. அது அவ்வாறு இருக்க முடியாது. வீட்டிற்கு வீடு சென்று புள்ளிவிவரக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது போன்ற அடிப்படையில் இது நிகழ்த்தப்படவில்லை."

இதேபோல் டோனி பிளேயருடைய செய்தித் தொடர்பாளர் செய்தி ஊடகத்திடம் கூறியதாவது: "நாடு முழுவதும் பிரதிநிதித்துவம் செய்யா வகையில் ஈராக்கில் ஒரு பகுதியில் இருந்து ஒப்புமையில் சிறு மாதிரி அளவையில் இருந்து கணக்கெடுக்கும் உத்தியைக் கையாண்டு, ஆய்வு எடுக்கப்பட்டது என்பதுதான் பிரச்சினை. தொடக்கத்தில் இருந்தே இந்த வழிவகையை நாங்கள் வினாவிற்கு உட்படுத்தியுள்ளோம்; தொடர்ந்து அவ்வாறுதான் செய்வோம்."

பிரிட்டிஷ் அரசாங்கம் திங்களன்று BBC அறிக்கை வந்த பின் ஓர் அறிக்கையை வெளியிட்டது; இதில் முன்பு போலவே "உறுதியற்ற தன்மை" பற்றி வலியுறுத்தப்பட்டது. "பூசல் நிலைமைகளில் பயன்படுத்தப்பட்ட வழிவகைகள், குறிப்பாக காங்கோ ஜனநாயகக் குடியரசில் இத்தகைய வழிவகைதான் இருந்தது. ஆனால் Lancet எண்ணிக்கைகள் மற்ற ஆதாரங்களில் இருந்து கிடைத்துள்ள புள்ளிவிவரங்களைவிட மிகவும் அதிகமாக உள்ளன; தகவல் தொகுப்பை ஒட்டி எப்படி மதிப்பீடுகள் பெரும் வகையில் மாறக்கூடும் என்பதையே இவை காட்டுகின்றன."

BBC க்குக் கிடைத்த ஆவணங்களில் ஒன்று பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சரகத்தில் தலைமை அறிவியல் ஆலோசகராக உள்ள ரோய் ஆண்டர்சன் எழுதிய குறிப்பாகும்; இது ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் அறிக்கை வருவதற்கு இரு நாட்கள் முன்பு எழுதப்பட்டது. இக்குறிப்பு கூறுகிறது: "ஆய்வின் வடிவமைப்பு திண்மையாக உள்ளது; இப்பகுதியில் தகவல் சேகரிப்பு, சரிபார்த்தல் என்று ஈராக்கில் தற்பொழுதுள்ள நிலைமையின் இடர்பாடுகளை கருத்திற்கொண்டு பார்க்கும்போது இவ்விவரங்கள் "சிறந்த முறைக்கு" நெருக்கமாக கருதப்பட வேண்டும்."

ஆண்டர்செனுடைய குறிப்பிற்கு விடையிறுக்கையில் ஒரு பிரிட்டிஷ் அரசாங்க அதிகாரி எழுதினார்: "ஆய்வு சரியானதாக உள்ளதா என்பது பற்றி நாம் உண்மையிலேயே உறுதியாக இருக்கிறோமா? இதுதான் குறிப்பில் உட்குறிப்பாக உள்ளது."

மற்றொரு அதிகாரி ஆண்டர்சன் அறிக்கை பற்றிக் குறிப்பிடுவதாவது: "Lancet அளவையில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிக்கையை நாம் ஏற்கவில்லை." இருந்தபோதிலும் அதே மின்னஞ்சலில் அதிகாரி கூறினார்: "ஆனால் இங்கு பயன்படுத்தப்பட் அளவை வழிவகையை குப்பை என்று ஒதுக்கிவிடமுடியாது; அது பூசல் பகுதிகளில் இறப்பு எண்ணிக்கையை ஆய்வதற்கு சோதிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வழிவகையாகும்."

தெளிவாகவே, பிளேயர் அரசாங்கம் மதிப்பீடுகளை ஏற்காததற்கு காரணம் அறிவியல் ரீதியானதல்ல, அமெரிக்கா தலைமையிலான கூட்டணி பொறுப்பாக இருக்கும் இனப்படுகொலை மீதான இறப்பு எண்ணிக்கையின் அரசியல் மற்றும் சட்ட உட்குறிப்புக்கள் எல்லாவற்றுடனும் கருத்திற் கொண்டதாகும்.

BBC இன் அதிர்ச்சி அறிக்கை பற்றி அமெரிக்க செய்தி ஊடகத்தில் கிட்டத்தட்ட எவ்விதத் தகவலும் இல்லை. பிரிட்டனில் செய்தி வந்த ஒரு நாளைக்கு பின்னர், நியூ யோர்க் டைம்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட், USA Today, CNN, MSNBN என்னும் நான்கு முக்கிய ஒலிபரப்பு இணையங்கள், மற்றும் செய்தி ஊடகத்தின் பல பிரிவுகளும் இவ்வறிக்கை பற்றி ஏதும் கூறிப்பிடவில்லை. வாஷிங்டன் டைம்ஸ் மட்டும் தகவலை UPI இன்டர்நேஷனலின் செய்தியை ஒட்டி 200 வார்த்தைகளுக்கும் குறைவான அறிவிப்பு ஒன்றை கொடுத்தது.

இவ்விதத்தில் முக்கியமான செய்தி ஊடகப் பிரிவுகள், ஈராக்கிய படையெடுப்பிற்கு முன்பிலிருந்து தற்போது வரை அரசியலில் அரசாங்கத்திற்கு சேதம் கொடுக்கக் கூடிய தகவல்களை அடக்கிவைப்பதில் இணைந்த பங்கை ஆற்றியுள்ளன. இச்சமீபத்திய இருட்டடிப்புடன் அமெரிக்க செய்தி ஊடகம் ஈராக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினால் செய்யப்பட்ட பெரும் படுகொலைகள் மற்றும் சமூக அழிவுகளில் அது உடந்தையாக இருந்தது என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது.

கடந்த அக்டோபர் மாதம், ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் ஆய்வு வெளியிடப்பட்ட போது, நியூ யோர்க் டைம்ஸும் வாஷிங்டன் போஸ்ட்டும் தகவலை தங்கள் கடைசிப் பக்கங்களில் வெளியிட்ட வகையில் மூடிப் புதைத்தன; இதைப்பற்றி தலையங்க கருத்துக்கள் எதையும் தெரிவிக்கவில்லை. உலக சோசலிச வலைத் தள நிருபர்களால் கடந்த அக்டோபர் மாதம் மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் பாதுகாப்பு, செய்தி ஊடக சுதந்திரம் பற்றிய உரை ஒன்றின்போது அவருடைய பத்திரிகையின் செயற்பாடு பற்றி வினாவப்பட்டபோது, நியூ யோர்க் டைம்சின் ஆசிரியர் பில் கெல்லர் செய்தியை மூடிமுறைத்த நிகழ்வைப் பற்றி அலட்சியமாக உதறித் தள்ளுகையில், "நாங்கள் ஒன்றும் அதை முன் பக்கத்தில் பெரிதாக வெளியிடவில்லை" என்று கூறினார்.

அக்டோபர் 18, 2006ல் வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் இழிந்த முறையில் 655,000 போரில் இறந்தவர்களா? ஈராக் இறப்பு எண்ணிக்கை பற்றி போலி ஆய்வு" என்ற தலையங்கத்தின்கீழ் ஒரு கருத்தாய்வைக் கூறியது. இது Steven Moore என்று போல் ப்ரீமர் மற்றும் கூட்டணி இடைக்கால ஈராக்கிய அதிகாரத்தின் கீழ் பணியாற்றுபவரால் எழுதப்பட்டிருந்தது. "ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் கொடுக்கும் எண்ணிக்கை அந்நாட்டில் நான் பார்த்திருந்த எண்ணிக்கைகளுடன் முற்றிலும் பொருந்தவில்லை" என்று அவர் அறிவித்தார். ஆய்வானது கருத்தியல் ரீதியாக ஒருபக்கச்சார்பு கொண்டது என்று மூர் தெரிவித்தார்.

திங்களன்று BBC பில் செய்த இருட்டடிப்பு தெளிவாக்குவது போல், செய்தி ஊடகம் ஈராக்கில் நடக்கும் பெரும் அக்கிரமங்களின் அளவைப் பற்றி மக்கள் அறியாவகையில் இன்னும் தொடர்ந்து செயல்படுவதுடன், அவற்றிற்கு பொறுப்பானவர்களுக்கு இன்னும் பாதுகாப்பு கொடுத்துவருகிறது.