World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Britain heightens confrontation with Iran over detained sailors

தடுத்துவைக்கப்பட்டுள்ள கடற்படைவீர்கள் பற்றி ஈரானுடனான மோதலை பிரிட்டன் அதிகரிக்கின்றது

By Peter Symonds
29 March 2007

Use this version to print | Send this link by email | Email the author

கடந்த வெள்ளியன்று ஈரானிய புரட்சிகரப் படையினரால் (IRG) தடுத்து வைக்கப்பட்ட 15 பிரிட்டிஷ் கடற்படையினரை விடுவிக்கப்பட வேண்டும் என்பதற்கு இராஜதந்திர அழுத்தத்தை புஷ் நிர்வாகத்தின் ஆதரவுடன் பிளேயர் அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. பாரசீக வளைகுடாவில் ஏற்கனவே அழுத்தம் நிறைந்துள்ள நிலைமையில், கடந்த இரண்டு நாட்களாக அமெரிக்க விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் பெரும் இராணுவப் பயிற்சியை வேறு நடத்தினர்; அதே நேரத்தில் லண்டனில் இருந்து பிரிட்டிஷ் மந்திரிகள் ஈரான் இன்னும் கூடுதலான வகையில் இராஜதந்திர ரீதியில் ஒதுக்கி வைக்கப்பட வேண்டும் என்று கோரினர்.

பாராளுமன்றத்திற்கு கொடுத்த அறிக்கையில் பிரதம மந்திரி டோனி பிளேயர் பிரிட்டிஷ் கடற்படையினரை ஈரானியர்கள் காவலில் வைத்துள்ளதை "தவறு, சட்டவிரோதமானது, முற்றிலும் ஏற்கத்தகுந்தது அல்ல" என்று கண்டித்துள்ளார். "சர்வதேச, இராஜதந்திர அழுத்தத்தை அதிகப்படுத்தும் நேரம் வந்துவிட்டது; அப்பொழுதுதான் ஈரானிய அரசாங்கம் இப்பிரச்சினையில் தாங்கள் எப்படி முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளோம் என்பதை அறியமுடியும்" என்றும் எச்சரித்தார்.

பிரிட்டனின் வெளியுறவு மந்திரியான மார்கரெட் பெக்கெட் கடற்படையினர் திருப்பி அனுப்பப்படும் வரை ஈரானுடன் இருநாடுகளின் பேச்சுவார்த்தைகள் மற்ற அனைத்துப் பிரச்சினைகளிலும் பிரிட்டன் நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டதாக அறிவித்தார். ஈரானிய தொலைக்காட்சியில் காவலில் உள்ளவர்கள் சிலரைக் காட்டியதும் "முற்றிலும் ஏற்கத்தக்கது அல்ல" என்றும் வெளியுறவு அமைச்சரகம் கண்டனம் தெரிவித்துள்ளது. தொலைக்காட்சியில் காட்டப்பட்ட நிகழ்வின்போது பெண் கடற்படையினரான Faye Turney, பிரிட்டிஷ் படகுகள் ஈரானிய நீர்ப்பகுதியில் "அத்து மீறி நுழைந்ததை" ஒப்புக்கொண்டு, காவலில் இருப்பவர்கள் நன்கு நடத்தப்படுவதாகவே கூறினார்.

துணை அட்மிரல் சார்ல்ஸ் ஸ்டைல் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஈரானிய நீர்ப்பகுதிக்குள் கடற்படையினர் நுழைந்துவிட்டனர் என்ற ஈரானியரின் கூற்று "ஐயத்திற்கு இடமின்றி விவாதத்திற்கு உரியது" என்றார். பல வரைபடங்கள், புகைப்படங்கள், முன்பு தெரிவிக்கப்பட்டிராத பயணக் குறிப்புக்கள் ஆகியவற்றின் உதவியுடன் கடற்படையினர் ஈராக்கிய நீர்ப்பகுதியில் 3 கிலோ மீட்டர்கள் உள்ளிருப்பதாகக் கூறப்படுவது ஆகியவற்றைக் காட்டினார். இரகசிய இராஜதந்திர விவாதங்களில் இரு வேறுவித பயணக் குறிப்புக்களை ஈரான் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடற்படை வீரர்கள் ஈராக்கிய நீர்ப்பகுதிக்குள் "தள்ளப்பட்டனர்" என்பதற்கு பிரிட்டிஷார் கொடுக்கும் "நிரூபணம்" இதற்கு முற்றிலும் மாறான "கணிசமான சான்று" என ஈரானால் கொடுக்கப்பட்டுள்ளதை போலவே அப்படியே ஏற்றுக் கொள்ளுவதற்கில்லை. Shatt al-Arab நீர்வழிக்கு அருகில் உள்ள டைக்ரிஸ், யூப்ரடிஸ் நதிகள் இணையும் பகுதியான பாரசீக வளைகுடா நீண்ட நாளாகவே ஈராக்கிற்கும் ஈரானுக்கும் இடையே பூசல்கள் நிறைந்த பகுதியாகும். "நதியின் எல்லை முடியும் தெற்கில் இது நடந்திருந்தால், பயணக் குறிப்புக்களை அறிந்திருந்தாலும், அதனால் பயன் ஏதும் இல்லை" என்று King's College ஐச் சேர்ந்த Robert Schofield, நீர்வழி வல்லுனர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் விளக்கினார்.

கடற்பிரிவு குறிப்புக்கள் பற்றி பூசலையும் விட முக்கியத்துவம் வாய்ந்தது அரசியல் பின்னணியாகும். அமெரிக்கா, பிரிட்டிஷ் ஆதரவுடன் ஈரான் மீது அதன் அணுத்திட்டங்கள் பற்றி அழுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், ஈராக்கில் அமெரிக்க-எதிர்ப்பு எழுச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்துள்ளது என்று குற்றம் சாட்டியுள்ள நிலையில், மத்திய கிழக்கு முழுவதும் "பயங்கரவாதத்திற்கு" தெஹ்ரான் ஆதரவு காட்டுகிறது என்று கூறுவதும் ஆகும். அமெரிக்க கடற்படை தன்னுடைய பிரிவுகளை இங்கு இரு மடங்காக்கி, 2003ல் நடைபெற்ற ஈராக் படையெடுப்பிற்கு பின்னர் இரண்டு விமானத்தாங்கி போர்க்கப்பல்களையும் முதல்முறையாக நிறுத்திவைத்துள்ளது. Patriot எனப்படும் ஏவுகணை எதிர்ப்புக் கருவிகளையும் வளைகுடா நாடுகளுக்கு அனுப்பிவைத்து, கண்ணி வெடிகள் அகற்றிகளையும் பாரசீக வளைகுடாப் பகுதிக்கு அனுப்பிவைத்துள்ளது.

பிரிட்டிஷ் கடற்படையும் தன்னுடைய பிரிவுகளை அக்டோபர் மாதத்தில் இருந்து அங்கு இருமடங்காக பெருக்கியுள்ளது. கூடுதலான போர்க்கப்பல்களில் HMS Cornwall உம் அடங்கியுள்ளது; ஈரானிய படைகளால் கடந்த வெள்ளியன்று கைப்பற்றப்பட்ட இரு சிறு கலங்களும் இதில் உள்ளன.

ஈரானுக்கு எதிராகத்தான் என்ற வகையில் இந்த இராணுவத் தயாரிப்பு உள்ளது. USS John C. Stennis போர்க்கப்பலின் தளபதியான காப்டன் பிராட்லீ ஜோகன்சன் செய்தி ஊடகத்திற்கு தெரிவித்ததாவது: "ஒரு வலுவான அமெரிக்க படை அங்கு உள்ளது என்றால், மற்றவர்களை மிரட்ட முற்படுவதற்கு முன் பாதுகாப்பாக இருந்து, எச்சரிக்கையுடன் செயல்படுங்கள் என்பதற்கான ஒரு தெளிவான தகவல்தான் அது. அவர்கள் எதைச் செய்தாலும் ஈரானியர்கள் போர் ஆபத்தை பெருக்கும் வகையில்தான் நடந்து வருகின்றனர்." கடந்த இரு நாட்களில் போர் விவகாரங்களில் புஷ் நிர்வாகத்தின் சொந்த "விரிவாக்கும் தோற்றம்தான்" நன்கு புலப்பட்டது; ஏனெனில் அங்கு 15 போர்க்கப்பல்களும் 100 போர் விமானங்களும் பயிற்சி உத்திகளை நடத்தியதுடன் அவை ஈரானிய கடற்கரை ஓரத்தில் இருந்து அதிக தூரத்திலும் நடத்தப்படவில்லை.

சில செய்தி ஊடகத் தகவல்களின்படி, பிரிட்டிஷ் கடற்படையினர் தடுத்துவைக்கப்பட்டதை அடுத்து பென்டகன் திட்டமிட்ட பயற்சியை விரைவாகவே செய்திருக்கக்கூடும். பஹ்ரைனில் உள்ள ஒரு மூத்த அமெரிக்க இராணுவ அதிகாரி ABC News இடம் ஈரானுக்கு தகவல் கொடுக்கும் வகையில் மிகப் பெரிய வலிமை காட்டல் ஒரு "தெளிவான முயற்சி ஆகும்" என்று கூறினார். அமெரிக்கக் கடற்படை அதிகாரிகள் இந்தச் செயற்பாடு "அவசரமாக திட்டமிடப்பட்டது", வெள்ளியன்று 15 பிரிட்டிஷ் படையினர் பிடிபட்டவுடன் நடத்தப்பட்டது என்றனர். வெள்ளை மாளிகளை செய்தித் தொடர்பாளர் Dana Perio இவற்றிடையே எந்த தொடர்பும் இல்லை என்று மறுத்து "எங்கள் பங்கில் அழுத்தத்தில் அதிக்கபடுத்தல் எதுவும் இல்லை." எனக்கூறினார்:

சர்வதேச முதலீட்டாளர்கள் அழுத்தங்கள் தீவிரமடைவது பற்றிக் கவலையை உறுதியாக கொண்டுள்ளனர். ராய்ட்டர்ஸ் குறிப்பிடுகிறது: "வளைகுடா பகுதியில் நடத்தப்படும் அமெரிக்க கடற்படைப் பயிற்சிகள் உலக நிதியச் சந்தைகளை உலுக்கியதுடன், எண்ணெய் விலையை அதிகமாக்கி, பங்குகளில் விலைகளிலும் சரிவை ஏற்படுத்தியது. செவ்வாய் கடைசிப் பகுதியில் சந்தைகள் வதந்தி ஒன்றினால் அதிர்வுற்றன. அது ஈரானுக்கும் அமெரிக்க கடற்படைக்கும் இடையே பூசல் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்பட்ட ஆதாரமற்ற வதந்தியாகும்.

வளைகுடாப் பகுதியில் அமெரிக்க பிரிட்டிஷ் கடற்படைத் திட்டம் ஈரானுக்கு எதிரான அமெரிக்க நிர்வாகத்தின் தூண்டிவிடும் நிலைப்பாட்டில் ஒரு கூறுபாடுதான்; இதைத்தவிர கடந்த சனியன்று கடுமையான ஐ.நா.பொருளாதாரத் தடைகளும் விதிக்கப்பட்டன. ஜனவரி மாதம் ஜனாதிபதி புஷ் ஈராக்கில் இருக்கும் அமெரிக்கத் துருப்புக்கள் ஈராக்கினுள் இருக்கும் ஷியைட் போராளிகளுக்கு ஆயுதம் மற்ற உதவிகளை அளிக்கும் ஈரானிய இணையதளங்களை "தேடிப்பிடித்து" "அழிக்கும்" என்று அறிவித்திருந்தார். அன்றே அமெரிக்க சிறப்புப் படைகள் அதிகாலைச் சோதனை ஒன்றை ஈரானிய தூதரக அலுவலகத்தில் இர்பில் என்னும் வட கிழக்கு ஈராக் நகரத்தில் நடத்தினர். எந்த குற்றச் சாட்டும் இல்லாமல் இரண்டு மாதங்களுக்கும் மேலாக ஐந்து ஈரானிய அதிகாரிகள் காவலில் உள்ளனர்; ஈராக்கிய அரசாங்கம் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறியும் எடுபடவில்லை.

வாஷிங்டன் நன்கு அறிந்துள்ளபடி இர்பில் சோதனை ஒரு பின்விளைவை ஏற்பட்டத்தக்கூடிய அமெரிக்கத் தூண்டுதல் ஆகும். பிரிட்டனை தளமாகக் கொண்ட Telegraph, கைதுகள் பதிலடியை ஏற்படுத்தக்கூடும் என்று பிரிட்டிஷ் உளவுத்துறை தலைவர்களுக்கு CIA எச்சரித்ததாக உறுதிபடுத்தியுள்ளது; இது தெற்கு ஈராக்கில் இருக்கும் பிரிட்டிஷ் துருப்புக்களுக்கு எதிராக நேரலாம் என்றும் கூறப்பட்டது. "மத்திய கிழக்கு, இன்னும் பிற பகுதிகளில் CIA அமெரிக்காவிற்கு கொடுத்த எச்சரிக்கையை ஒட்டி பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டாலும், பிரிட்டன் அதன்படி நடந்து கொள்ளவில்லை" என்று கட்டுரை விளக்கிக்கூறியது.

ஈராக்கில் பிடித்து வைக்கப்பட்டுள்ள அதிகாரிகள் விடுதலை செய்யப்படுவதுடன் பிரிட்டிஷ் கடற்படையினருடைய விதி பிணைக்கப்பட்டிருக்கக் கூடும் என்று சில வர்ணனையாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்; இக்கூற்றை ஈரானிய அதிகாரிகள் மறுத்துள்ளனர். பிரிட்டிஷ் மற்றும் சர்வதேச செய்தி ஊடகம் தெஹ்ரான் திட்டமிட்டு கடற்படையினரை பிடித்து வைத்துள்ளனர் என்று பொதுவாக நினைக்கின்றனர்; ஆனால் லண்டனிலோ அல்லது வாஷிங்டனிலோ, இதற்கான திட்டம் தோன்றியிருக்கக்கூடும் என்பதையும் மறுப்பதற்கில்லை. மற்றவர்களைப் போலவே, மூத்த அமெரிக்கச் செய்தியாளரான Symour Hersh, அமெரிக்க, இஸ்ரேலிய உளவுப்பிரிவினர் ஈரானுக்குள் தீவிரமாகச் செயற்படுவதாகக் குறைகூறியுள்ளார்.

அமெரிக்க உளவுத்துறை மற்றும் இராணுவத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்ட அமெரிக்கத் தளத்தை கொண்ட Stratfor சிந்தனைக்குழு, இந்நிகழ்வைப் பற்றி "அமெரிக்க-ஈரானிய மறைமுகப் போரில் மற்றொரு கட்டம்" என்ற தலைப்பு கொடுத்து ஒரு கட்டுரை எழுதியுள்ளது. பிரிட்டிஷ் கடற்படையினர் தடுத்து வைக்கப்பட்டதின் நோக்கம் பற்றி உறுதியாகக் கூறாவிட்டாலும், இக்கட்டுரை இது ஈரானுக்குள் நடைபெறும் மேலை உளவுத்துறையுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என்ற குறிப்பைக் காட்டியுள்ளது. ஒரு மூத்த ஈரானிய புரட்சிப் படையின் தளபதி Ali Reza Asghar இவ் ஆண்டுத் தொடக்கத்தில் நாட்டை விட்டு நீங்கி வந்ததாகக் கூறப்படுவதை இது சுட்டிக்காட்டுகிறது. அவர் அமெரிக்க உளவுத்துறையினால் விசாரிக்கப்பட்டுவருவதாக கூறப்படுகிறது; ஈரானுக்குள் மேலை முகவர்களுடைய செயற்பாடுகள் எந்த அளவிற்கு தெஹ்ரானுக்கு தெரியும் எனபது பற்றியும் அவரிடம் விசாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

Stratfor உடைய கருத்தின்படி, "இதை மனதில் கொண்டு, அமெரிக்க, இஸ்ரேலிய உளவுத்துறை ஆதாரங்களில் இருந்து சமீபத்தில் பல குறிப்புக்கள் பிரிட்டிஷ் MI 6 ஈரானில் இருந்து அதன் ஒற்றர்கள் ஒருவரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், ஆனால் MOIS (ஈரானிய உளவுத்துறை) இற்கு விஷயம் கசிந்துவிட்டது. இதையொட்டி Iranian Revolutionary Guard Corps பிரிட்டிஷ் MI6 நபர்களையும் ஒற்றர்களையும் காவலில் உள்ள ஐந்து ஈரானியர்களை மீட்பதற்காக கடற்படையினர் பிடிக்கப்பட்டுள்ளனர் என்று உறுதியற்ற ஆதாரம் ஒன்று தெரிவிக்கிறது. ஈரானுக்கு சாதகமாக பேச்சு வார்த்தைகள் நடைபெறவில்லை என்றால், பிரிட்டிஷ்காரர்கள் ஒற்று வேலைக்காக விசாரணையை எதிர்கொள்ள நேரிடும்."

பிரிட்டிஷ் கடற்படையினரை பிடித்ததற்கு சரியான காரணங்கள் எவையாக இருந்தாலும், அவர்களுடைய சங்கட நிலைக்கான முக்கிய பொறுப்பு பிளேயர் அரசாங்கம் மற்றும் புஷ் நிர்வாகத்திடம்தான் உள்ளது. ஈராக்கிற்கும் ஈரானுக்கும் இடையே பூசலுக்குட்பட்ட நீர்ப்பகுதியில் பிரிட்டிஷ் போர்க்கப்பல்கள் நிறுத்த வேண்டியதற்கான ஒரே காரணம் 2003 இல் ஈராக் மீது அமெரிக்கத் தலைமையிலான சட்டவிரோத படையெடுப்பு, ஆக்கிரமிப்பு ஆகியவை நடந்ததுதான். ஈராக்கில் இருந்து வெளியேறுவதற்கு பதிலாக, வெள்ளை மாளிகை இப்பொழுது அண்டை நாடான ஈரானையும் அச்சுறுத்துகிறது; இது எண்ணெய் வளம் கொழிக்கும் பகுதியில் பரந்த அமெரிக்க விழைவுகள் மேலாதிக்கம் பெறவேண்டும் என்ற திட்டத்தின் ஒரு பகுதியேயாகும்.

இத்தகைய ஆபத்தான அரசியல் கொதிப்பான நிலையில்தான் ஒரு சிறிய நிகழ்வான பிரிட்டிஷ் கடற்படையினரின் தடுத்துவைத்தல் என்பது கட்டுப்பாட்டை மீறிச் செல்லக்கூடும். பிரிட்டிஷ் செய்தித்தாட்களில் பல வலதுசாரிப் பிரிவுகள் ஏற்கனவே பிளேயர் அரசாங்கத்தை ஈரானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கத்தவறியதற்கு சாடியுள்ளன. செவ்வாயன்று டைம்சில் வந்த தலையங்கம் ஒன்று, "இந்த அத்துமீறல் ஆக்கிரோஷக் கோரிக்கையை தக்க முறையில் எதிர்கொள்ளாதது பிரிட்டிஷ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோரின் இழிவான கோழைத்தனத்தை காட்டுவதுடன், ஈரானை எதிர்கொள்ள இழிந்த முறையில் அவர்கள் தோல்வியுற்றதிலும் புலப்படுகிறது" என்று கண்டனம் தெரிவித்துள்ளது.

The Telegraph "அது நம்மிடம் அணுத்திட்டங்கள் பற்றிய விவரங்களில் பொய்கூறுவதை நிறுத்தாவிட்டால், தெற்கு ஈராக்கில் எழுச்சியாளர்களுக்கு ஆயுதம் கொடுத்து இயக்குவதை நிறுத்தாவிட்டால், ஈராக்கிய நீர்ப்பகுதிகளை மீறுவதை நிறுத்தாவிட்டால்..." ஈரானுக்கு எதிராக இன்னும் தீவிரப் பொருளாதாரத் தடைகள் தேவை" என்று வாதிட்டுள்ளது. மேலும், "இந்த வார இறுதியிலாவது இழிவுபடுத்தப்பட்டுள்ள பிரதம மந்திரி போதிய முதுகெலும்புடன் தேவையானவற்றை செய்வாரா அல்லது பிரிட்டன் ஒரு விரோதத் திறன் உடைய நாட்டிற்கு தன்னுடைய வலுவற்ற கூறுபாட்டைக் காட்டுமா" என்பதை கவலையுடன் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்." என்றும் கூறியுள்ளது.

இன்றுவரை, புஷ் நிர்வாகம் நிகழ்வைப் பொறுத்தவரையில் சற்றே குறைவான முறையில் எதிர்கொண்டுள்ளது. ஆனால் வளைகுடாவில் உள்ள USS Underwood போர்க்கப்பலின் இரண்டாம் தளபதியான Lieutenant Commander Erik Horner, அமெரிக்க படையினர் இதேபோன்று பிடிக்கப்பட்டால் அமெரிக்க எதிர்விளைவு எப்படி இருக்கும் என்பதை ஐயத்திற்கு இடமின்றித் தெரிவித்தார்: "அமெரிக்க கடற்படையின் பிரத்தியேகமான விதிகள் தற்காப்பிற்காக தாக்கும் உரிமையை மட்டும் கொடுத்துள்ளது என்றில்லாமல் தற்காப்பிற்கான சில கடமைகளையும் கொடுத்துள்ளது". ஈரானியப் படைகள் மீது அவருடைய படைகள் தாக்குதல் நடத்தியிருக்குமா என்று வினவப்பட்டபோது, அவர் அப்பட்டமாக "ஆமாம் என ஒப்புக்கொள்ளுகிறோம்" அறிவித்தார்.

வேறுவிதமாகக் கூறினால், புஷ் நிர்வாகம் பாரசீகவளைகுடாவில் மிகப் பெரிய அமெரிக்க கடற்படை பிரிவைக் கொண்டுள்ளது; அதற்கு கொடுக்கப்பட்டுள்ள விதிகளின்படி அமெரிக்கப் படைகள் எத்தகைய நிகழ்விற்கும் -- உண்மையோ, கற்பனையோ -- அவை விடையிறுக்கலாம். அதையொட்டி எழும் எந்தப் பூசலும் ஈரான்மீது பேரழிவு தரக்கூடிய தாக்குதலை, பாரிய அமெரிக்க இராணுவ சக்தியைப் பயன்படுத்தி, நிகழ்த்தவும் அவற்றால் முடியும்.