World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German army and air force deployed against G8 summit demonstrators

ஜேர்மனிய தரை, விமானப்படை G8 உச்சி மாநாட்டிற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் செய்தவர்கள் மீது பயன்படுத்தப்பட்டன

By Emma Bode
31 July 2007

Use this version to print | Send this link by email | Email the author

உள்நாட்டு நடவடிக்கைகளில் இராணுவம் ஈடுபடத்தப்படக் கூடாது என்று ஜேர்மனிய அரசியல் அமைப்பு உறுதியாகத் தடுத்துள்ளபோதிலும், ஜூன் மாத மத்தியில் ஜேர்மனியில் நடந்த உலகத் தலைவர்களின் G8 மாநாட்டின்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் நடவடிக்கைகளை உளவுபார்ப்பதற்காக ஜேர்மனியின் தரைப்படை, விமானப் பிரிவுகள் பயன்படுத்தப்பட்டன. ஆப்கானிஸ்தானில் தற்போது பயன்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் Tornado போர் விமானங்கள், ஜேர்மனிய சுற்றுலாத்தலமான ஹெலிகன்டாமில் நடைபெற்ற G8 மாட்டு அரங்கிற்கு வெளியே ஆர்ப்பாட்டக்காரர்கள் நிறுவியிருந்த முகாம்களை வானில் இருந்து புகைப்படம் எடுக்க அங்கிருந்து திருப்பிவிடப்பட்டிருந்தன.

இவ்வாறு பயன்படுத்தப்பட்டது சிறிய தற்காலிய விமர்சனத்தை தொடர்ந்து , பின்விளைவுகள் பற்றி எந்தக் கவலையையும் கொண்டிராத ஜேர்மனிய அரசாங்கம், உத்தியோகபூர்வக் குழுக்களில் இவ்விடயத்தை மூடிமறைக்க முயன்று வருகிறது. செய்தி ஊடகமோ அல்லது அரசியல் குழுக்களோ எந்த அக்கறையையும் காட்டவில்லை. மெக்லன்பேர்க்-மேற்கு பொமரேனியா மாநிலத்தின் சட்டமன்றத்தின் உள்விவகாரதத்திற்கான குழு ஒன்றுதான் போலீசிற்கும் இராணுவத்திற்கும் இடையே நடந்த ஒத்துழைப்பு பற்றி கவனிக்க இருப்பதாகக் கூறியுள்ளது; இதையும் கூட அது தொழில்நுட்ப, செயல்பாட்டு முறை ஒத்துழைப்பு என்றுதான் விவரித்துள்ளது. நிகழ்ச்சி நடந்து இரண்டு மாதங்கள் கூட ஆகவில்லை என்றாலும், செய்தி ஊடகம் இதைப் பெரிதும் பொருட்படுத்தவில்லை.

ஜேர்மனிய உள்பிராந்தியத்தில் இராணுவத்தைப் பயன்படுத்துவதை தடுப்பது என்பது, போருக்குப் பிந்தைய ஜேர்மனிய அரசியலமைப்பிலுள்ள பல விதிகளில் பொதுவாக இருப்பதைப்போல், நாஜி ஆட்சி, வைமார் குடியரசு மற்றும் ஜேர்மனியப் பேரரசின்கீழ் ( ''ஜனநாயவாதிகளை நிறுத்துவதற்கு ஒரே வழி இராணுவம்தான்" என்ற கோஷத்தை இது கூறியிருந்தது) அனுபவித்த கசப்பான வரலாற்று அனுபவங்களுடன் பிணைந்துள்ளதாகும்.

அடிப்படைச் சட்டத்தின் 35வது விதியின்படி, ஜேர்மனிய இராணுவம் பெரிய விபத்துக்கள் அல்லது இயற்கைப் பேரிடர்கள் போன்றவற்றில்தான் உள்நாட்டுச் செயற்பாடுகளுக்குப் பயன்படுத்தப்பட முடியும். கடந்த ஆண்டு வான் பாதுகாப்பு தொடர்புடைய தீர்ப்பு ஒன்றில், உள்நாட்டுத் தலையீட்டு விடயங்களில், ஜேர்மனிய இராணுவம் குறிப்பான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது, அதாவது சாதாரணமாக போலீஸ் எடுக்கக்கூடிய செயல்களைத்தான் செய்யவேண்டும் என்று அரசியலமைப்பு நீதிமன்றம் உறுதிபடுத்தியிருந்தது.

பதவியேற்றதில் இருந்து ஜேர்மனிய உள்துறை மந்திரி வொல்வ்காங் ஷொய்பிள (கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்-CDU), ஜேர்மனிய இராணுவத்தின் பயன்பாடு பற்றிய சட்டபூர்வத் தடைகள் அனைத்தையும் கடப்பதற்கு முறையாக முயன்று வருகிறார்; அரசியலமைப்பில் திருத்தம் கொண்டுவருவதற்காக பயங்கரவாதத் தாக்குதல்கள் ஆபத்து பற்றி பலமுறையும் கூறிவருகிறார். ஜேர்மனிய பெரும் கூட்டணி அரசாங்கத்தின் இரண்டாம் முக்கியமான பங்குக் கட்சியான சமூக ஜனநாயக கட்சி (SPD) அத்தகைய திருத்தத்தை ஏற்பதற்கு மறுப்புத்தான் தெரிவித்துள்ளது.

இப்பொழுதோ ஹெலிகன்டாமில் G8 உச்சிமாநாட்டின் போது ஜேர்மனிய இராணுவத் தலையீடு என்பது நடந்து முடிந்த விஷயமாகிவிட்டதை SPD எதிர்கொள்ளுகிறது; ஆனால் கட்சியின் தலைமை தீவிர எதிர்ப்பு எதையும் காட்டவில்லை. SPD, CDU இரண்டின் கூட்டணி அரசாங்கத்திலுள்ள பிரதிநிதிகளும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவம் பயன்படுத்தப்பட்டது பற்றி நியாயப்படுத்த முற்பட்டுள்ளனர், அல்லது அதை அதிகம் பொருட்படுத்தவில்லை.

SPD யின் உள்துறை விடயங்களுக்கான பேச்சாளர் Dieter Wiefelspuetz ஜேர்மனியப் படைகள் பயன்படுத்தப்பட்டதை "முறையான கவனம் அற்ற செயல்பாடு" என்றுதான் விளக்கியுள்ளார்; SPD யின் பாதுகாப்புத் தொடர்பாளர் Rainer Arnold ஜேர்மனிய விமானப்படையினர், இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது "ஒரு சந்தேகத்திற்குரிய பணியாகும்" என்று விளக்கியுள்ளார்.

CDU வின் உள்துறை விவகாரங்கள் தொடர்பாளரான வொல்ப்காங் பொஸ்பாக் G8 எதிர்ப்பாளர்கள் நிறுவியிருந்த முகாம்களை வானில் இருந்து கண்காணிப்பு செய்தது முறையானதுதான் என்றும் குற்றம்சார்ந்த செயல்களைத் தடுக்கும் நடவடிக்கைதான் என்றும் அறிவித்தார்; CDU வின் இராணுவ விடயங்களுக்கான வல்லுனரான Bernd Siebert அறிவித்தார்: "அரசியலமைப்பின்படி தெளிவாக முறையில்தான் இராணுவம் பயன்படுத்தப்பட்டுள்ளது." ஜேர்மனிய சான்ஸ்லரான ஏஞ்சலா மெர்க்கெல் (CDU) தன்னுடைய உள்துறை மந்திரியின் கருத்துக்கு ஆதரவு கொடுத்து "இன்னும் கூடுதலான வகையில் இராணுவம் உள்விவகாரங்களில் ஈடுபடுத்தப்படுவது பற்றி" தான் நீண்டகாலமாக விருப்பம் கொண்டுள்ளதாகக் கூறினார்.

Republican Laywer Association (RAV) என்னும் அமைப்பு பேர்லினில் ஏற்பாடு செய்திருந்த அரங்கு ஒன்று ஹெலிகண்டாமில் ஜேர்மனிய இராணுவம் நடத்திய தலையீட்டின் அளவை தெளிவாக்கியது.

அந்த அரங்கில் கொடுக்கப்பட்ட சாட்சியத்தில், ஜூன் 6ம் தேதி அருகில் இருந்து ரொஸ்டொக் நகரத்தில் ஒரு G8 எதிர்ப்பாளர் எடுத்த படமும் உள்ளது. ஒரு முன்னாள் ஜேர்னிய இராணுவத்திலிருந்த ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர், இராணுவப் பிரிவு உறுப்பினர்கள் மற்றும் வாகன அடையாள எண் அடிப்படையில் அறியப்படக்கூடிய போலீசார் ஆகியோருக்கு இடையே நேரடி ஒத்துழைப்பு இருந்ததை நேரே கண்ணுற்றார். தொடர்புடைய வாகனங்கள் ஒரு டாங்க் தகவல் முன்னாய்வுப் பிரிவைச் சேர்ந்தவையாகும்; அவற்றின் இராணுவப் பணிகள் "விரோதியை அடையாளம் கண்டு அழித்தல்" ஆகும். காமெராக்கள் பொருத்தப்பட்ட மற்றும் இரவு நேரத்தில் காணக்கூடிய கருவிகளையும் கொண்டிருந்த டாங்குகள் கார்கள் செல்லும் பாதைகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை எதிர்பாளர்கள் நடத்திய இடத்திற்கு அருகே இருந்த வயல்கள் ஆகியவற்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

"இராணுவம்", "விமானப்பிரிவு" போன்ற சொற்களால் அடையாளமிட்டிருந்த ஹெலிகாப்டர்களும் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் வந்திருந்த போலீஸ் பிரிவுகளுக்கு வழிகாட்டப் பயன்படுத்தப்பட்டன. இத்தகவல்கள் ஜேர்மனிய இராணுவத்தின் செய்தித் தொடர்பாளர்களால் மறைமுகமாக உறுதிசெய்யப்பட்டன.

இராணுவப் பாதுகாப்புப் பணிப் பிரிவின் செயல்களை மற்றொரு சாட்சி விளக்கினார்; அப்பிரிவு உள்ளூர் சமூகஅமைப்பு ஒன்றை வேவு பார்த்தது; Tornado போர்விமானம் ஒன்று G8 எதிர்ப்பாளர்கள் முகாம்களுக்கு 70 மீட்டர்கள் உயரத்தில் பெரும் சத்தத்துடன் பறந்ததையும் இவர் எடுத்துக் கூறினார்.

இந்த விமானங்கள் ஜேர்மனிய விமானப் பிரிவான 51 "Max Immelmann" ஐச் சேர்ந்தவை; 1995இல் இருந்து 2001வரை பால்கன் போர்களின்போது பயன்படுத்தப்பட்டவை. நேட்டோவின் விரைவு அதிரடிப்படையின் பகுதியாக இருந்த "Immelmann" பிரிவு உலகெங்கிலும் செயல்படுகிறது; இண்மையில் சூடானிலும், ஆப்கானிஸ்தானிலும் பறந்திருந்தது.

Tornado முன்னாய்வு விமானங்களை G8 எதிர்ப்பாளர்களைக் கண்காணிப்பதற்கும் அச்சுறுத்துவதற்கும் பயன்படுத்துவது ஜேர்மனிய பாராளுமன்றத்தின் பாதுகாப்புத் துறைக்குழுவின் விசாரணைக்கு உட்பட்டது; இதன் கூட்டம் எப்பொழுதும் இரகசியமாகத்தான் இருக்கும். தேசிய பாதுகாப்பு வரவு செலவுத்திட்டம் மற்றும் பயிற்சிகள் பற்றி உடன்பாடு தெரிவிக்கும் பணியை பாராளுமன்ற பாதுகாப்புப் பிரிவுக்குழு கொண்டுள்ளது; மேலும் இராணுவம் தொடர்பான பாராளுமன்ற கட்டுப்பாட்டுச் செயல்களையும் இது மேற்கொள்ளும்.

செய்தி ஊடகத்தின் தகவல்களின்படி, பாதுகாப்புக் குழு G8 உச்சிமாநாட்டிற்காக 1,100 இராணுவத்தினர் பயன்படுத்தப்படுவதற்கு உடன்பட்டிருந்தது; ஆனால் Tornado விமானத்தைப் பயன்படுத்த அது அனுமதி கொடுக்கவில்லை. மாறாக இரண்டு Tornado பணிகளுக்கான ஒப்புதல் பாதுகாப்புச் செயலாளர் Franz Josef Jung இனால் நேரடியாகக் கொடுக்கப்பட்டது. உண்மையில் இந்தப் பிரிவு இரண்டு முறைக்குப் பதிலாக ஏழுமுறை பறந்தது. ஐந்து முறைகள் வேறுபாடு இருப்பதை ஒப்புக் கொண்ட பாதுகாப்பு மந்திரி முழு நடவடிக்கையையும் நியாயப்படுத்தும் வகையில் இது ஜேர்மனிய அரசியலமைப்பிற்கு இணங்கியிருப்பதாக அறிவித்தார்.

Der Spigel இதழின் ஆன்லைன் பதிப்பின்படி, G8 உச்சிமாநாட்டின் போது விமானப்படை செயல்பாட்டிற்கு மொத்த செலவு கிட்டத்தட்ட 10 மில்லியன் யூரோக்கள் என்று தெரிய வருகிறது.

"சட்டப்படி சந்தேகத்திற்குரிய வகையில்" பாதுகாப்பு மந்திரி செயல்பட்டுள்ளார் என்று அரசியலமைப்பு வல்லுனர்கள் அறிவிக்கையில், அரசியலமைப்பு நீதிமன்றம் விமானப் பாதுகாப்பு பற்றி எடுத்துள் சமீபத்திய தீர்ப்பும் உள்நாட்டு மக்களுக்கு எதிராக இராணுவ வழிவகைகள் பயன்படுத்தக்கூடாது என்பதை உறுதிபடுத்தியுள்ளது. ஜேர்மனிய தரைப்படை, விமானப்படைப் பிரிவுகள் வெளிப்படையாக, தூண்டிவிடும் தன்மையில் ஹெலிகண்டாமில் பயன்படுத்தப்பட்டது, மற்றும் பயங்கரவாதத்தின் ஆபத்து, பயங்கரவாதத் தாக்குதல்கள் பற்றிய ஆபத்து பற்றிய பிரச்சாரங்கள், எச்சரிக்கைகள் ஆகியவை ஒரு முன்னோடியை ஏற்படுத்தி அதையொட்டி ஜேர்மனிய மக்கள் ஜேர்மனியத் தெருக்களில் இராணுவ நடமாட்டத்தை ஏற்கும் கட்டாயத்திற்குத் தள்ளப்படும் நோக்கத்தை கொண்டது என்பது தெளிவாகிறது.

இதற்குப்பின் முறையற்ற, குறைந்த உயர விமானக் கண்காணிப்பு பற்றி ஆர்ப்பாட்டக்காரர்களிடம் அரசாங்கம் "மன்னிப்பை" கோரி அறிக்கை விடுத்துள்ளது. ஆனால் அதில் முக்கிய பிரச்சினை இந்த விமானப் பயணங்களால் ஏற்படும் பெரும் ஓசைதான் என்றும் இழிந்த முறையில் கூறியுள்ளது. பாராளுமன்ற துணைச் செயலரான கிறிஸ்டியான் ஷ்மிட் (CSU), ஒரு Tornado விமானம் பயணித்தது "மறுப்பதற்கு இடமின்றி கணிசமான தொந்தரவைக் கொடுக்கிறது" என்று பாராளுமன்றத்தில் ஒப்புக் கொண்டார்; ஆனால் அதே நேரத்தில் இத்தகைய பயணங்கள் பகிரங்ககூட்டம் கூடும் உரிமையை எவ்விதத்திலும் மீறவில்லை என்றும் தெரிவித்தார்.

வெளித்தோற்றத்தைப் பொறுத்தவரையில் உயர் தொழில்நுட்ப ஜேர்மனிய இராணுவப் பிரிவுகள் மற்றும் ரொஸ்டொக்கில் G8 எதிர்ப்பாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் தீங்கு பயக்கும் வகையில் தலையிட்ட கவசமணிந்த போலீசாருக்கும் இடையே வேறுபாடு காண்பது கடினமானது ஆகும். ஆயினும்கூட, ஹெலிகண்டாமில் அப்பட்டமாக ஜேர்மனிய இராணுவத்தைப் பயன்படுத்தியதும் மற்றும் இதற்கு எவ்விதத் தீவிர அரசியல்ரீதியான எதிர்ப்பு இல்லாமை ஆகியவை தன்னுடைய கொள்கைகளுக்கு எதிரான உள்நாட்டு எதிர்ப்புக்களை கையாள்வதற்கு ஜேர்மனிய அரசாங்கம் மேற்கொள்ள இருக்கும் நடவடிக்கைகள் பற்றி கடுமையான எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.