World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

Iraq: Kurdish leader threatens civil war over Kirkuk

ஈராக் : கிர்குர்க் சம்பந்தமாக உள்நாட்டுப் போர் ஏற்படும் என்று குர்திஷ் தலைவர் அச்சுறுத்துகிறார்

By James Cogan
7 August 2007

Use this version to print | Send this link by email | Email the author

தன்னாட்சி குர்திஷ் வட்டார அரசாங்கத்தின் (Kurdish Regional Government -KRG) தலைவரான மசூத் பர்ஜானி, எண்ணெய் வளம் கொழிக்கும் கிர்குர்க் நகரத்தை குர்திஷ் பகுதியில் இணைப்பதற்கான வாக்கெடுப்பு மற்ற ஈராக்கிய அரசியல் பிரிவுகளால் தொடர்ந்து தாமதப்படுத்தப்படுமே ஆனால், ஈராக்கில் "ஓர் உண்மையான உள்நாட்டுப் போர்" ஏற்படும் என்று அச்சுறுத்தினார்.

2005ல் அமெரிக்காவால் கவனமுடன் சரிபார்த்து வெளியிடப்பட்ட ஈராக்கிய அரசியலமைப்பின் 140வது பிரிவு கிர்குர்க் மற்றும் பிற குர்திஷில் உள்ள "பிரச்சினைக்கு உரிய பகுதிகளில்" உள்ள மக்கள் KRG யில் சேர விரும்புகிறார்களா என்பதை உறுதி செய்வது பற்றிய வாக்கெடுப்பு டிசம்பர் 31, 2007 க்குள் நடத்தப்பட வேண்டும் எனக் கூறியுள்ளது. குர்திஷ் கட்சிகளுடைய உதவிக்கு புஷ் நிர்வாகம் உதவியளிக்கும் வகையில் கொடுத்த பல முக்கிய சலுகைகளுள் இந்தப் பிரிவு சேர்க்கப்பட்டதும் ஒன்றாகும். 2003 படையெடுப்பு காலத்தில் இருந்து, அவை பெரும்பாலும் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு மிகவும் விசுவாசமுடையவைகளாக இருந்து வந்துள்ளனர். பர்ஜானியின் குர்திஷ் ஜனநாயகக் கட்சி (KDP) மற்றும் ஈராக்கிய ஜனாதிபதி ஜலால் தாலாபானியின் குர்திஸ்தான் தேசபக்த முன்னணி (Patriotic Union of Kurdistan -PUK) இரண்டும் பாக்தாத்தில் உள்ள கைப்பாவை அரசாங்கத்தில் முக்கியமான முடிவுகளில் பங்கைக் கொண்டு, பொதுவாக வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க இராணுவத்தின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் ஒப்புதல் கொடுக்கின்றன.

கிர்குக்கில் இருக்கும் குர்திஷ் அதிகாரிகளும் பாதுகாப்பு படைகளும் மோதலுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கெடுப்பிற்கு முன்பு குர்திஷ் வாக்காளர்களுக்கு தெளிவான பெரும்பான்மை இருக்கும் என்பதற்கு ஏற்ப நடந்து கொண்டு வருகின்றன. 1980களில் சதாம் ஹுசைனின் ஆட்சிக் காலத்தில் அங்கிருந்து விரட்டியடிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான குர்திஷ் மக்கள் மீண்டும் நகரத்தில் குடியமர்த்தப்பட்டுள்ளனர். கடந்த நான்கு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான அரேபியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இப்படி மாற்றுவகையில் இனத் தூய்மையை செயல்படுத்தியிருப்பது "இயல்பான வாழ்விற்கு திரும்புதல்" என்று அரசியலமைப்பில் குறிக்கப்பட்டுள்ளது. சில அரேபியர்கள் நிதி உதவி பெற்று தாங்களே வெளியேறியுள்ளபொழுது, மற்றவர்கள் குர்திஷ் போராளிகள் வன்முறை அச்சுறுத்தல் கொடுக்கின்றனர் அல்லது உண்மையாகவே அச்சுறுத்தலை பயன்படுத்திகின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளனர். பல நூற்றாண்டுகளாக கிர்க்குக்கில் முக்கியமாக இருந்து வந்துள்ள துருக்கி மொழி பேசும் துருக்கோமன்கள் தாங்களும் வெளியேறவேண்டும் என்ற அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக கூறியுள்ளனர்.

கிர்குக் மீது கட்டுப்பாட்டை பெறுதல் என்பது குர்திஷ் தேசியவாதிகளுக்கு நீண்டகால பொருளாதார நலன்களுக்கு அஸ்திவாரங்களை கொடுக்கும் -அதாவது ஒரு தனி குர்திஷ் அரசுக்காக. தற்பொழுது KRG யில் ஈராக்கின் மூன்று வடக்கு பெருமான்மை குர்திஷ் மாநிலங்களான Sulaymariyah, Irbil, Dahuk ஆகியவை உள்ளன. அருகில் இருக்கும் பகுதிகள் விதி 140ன் படி சேர்த்துக் கொள்ளப்படலாம்; அவற்றில் குர்திஷ் மக்கள் நிறைந்த நிநேவா மற்றும் தியாலி மாநிலங்களும் கிர்குக் மாநிலத்தின் பெரும்பகுதியும் சேர்க்கப்பட்டாலும்; பிந்தையதில் ஈராக்கில் மிகப் பழைய எண்ணெய் வயல்களும் நாட்டின் மொத்தம் எடுக்கப்படாத எண்ணெய் இருப்புக்களில் 40 சதவிகிதமும் அடங்கியுள்ளன. குர்திஷ் பகுதி உலகில் 10 உயர்மட்ட எண்ணெய் உற்பத்தி நாடுகளில் ஒன்றாக ஒரே நாளில் மாற்றப்பட்டுவிடும்.

ஆனால், வாக்கெடுப்பிற்கான காலக்கெடுவிற்கு நான்கு மாதங்களுக்கு முன்பு, ஈராக்கின் பிரதம மந்திரி நூரி அல்-மாலிகியின் ஈராக்கிய அரசாங்கம் வாக்கெடுப்பிற்கான தயாரிப்புக்கள் பற்றி அதிகமாக ஒன்றும் செய்யவில்லை. குறிப்பாக மோதலுக்கு உட்பட்ட பகுதிகளில் KRG யுடன் முன்பு ஒப்புக்கொண்டுள்ளபடி மக்கள் ஜனத்தொகை கணக்கெடுப்பை ஜூலை 31க்குள் முடிப்பதில் அது தோல்வியுற்றுள்ளது.

இத்தகைய தாமதப்படுத்தும் போக்கு எதிர்ப்பின் பரப்பை பிரதிபலிக்கிறது. கிர்குர்க்கில் உள்ள அரேபிய, துர்க்கோமன் தலைவர்கள் ஒரு குர்திஷ் கட்டுப்பாட்டிற்குள் நடக்கும் வாக்கெடுப்பை நிறுத்துவதற்கு ஆயுதங்கள் கூட ஏந்தத் தயாராக இருப்பதாக எச்சரித்துள்ளனர்; அத்தகைய வாக்கெடுப்பின் விளைவு முன்கூட்டியே தீர்மானிக்கப்படும் என்றும் தங்கள் சமூக உறுப்பினர்களை ஒரே இரவில் புதிதாக நடைமுறைக்கு வந்துவிடக்கூடிய தனி நாட்டில் இரண்டாம் தர மக்களாக ஆக்கிவிடக்கூடும் என்றும் கூறியுள்ளனர். பாக்தாத்தில் இருக்கும் சுன்னி மற்றும் ஷியைட் கட்சிகள் பெரும் எண்ணெய் வருவாய் தரக்கூடிய பகுதிகளை இழப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன் 140ம் பிரிவு நிராகரிக்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளனர். அங்காராவில் சில துருக்கிய அரசியல் வாதிகள், ஆற்றல் வளமுடைய KRG உடனடியாக துருக்கியின் 15 மில்லியன் தொகுப்பு உடைய குர்திஷ் சிறுபான்மையிடையே பிரிவினைவாதத்தை தூண்டிவிடக்கூடும் என்று அஞ்சுவதுடன், KRG கிர்குர்க்கை இணைத்துக்கொள்ளுவதை தடுக்கும் வகையில் வட ஈராக்கின்மீது படையெடுப்பு நடத்த வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளனர்.

புஷ் நிர்வாகமோ ஈராக்கிய அரசியலமைப்பை பகிரங்கமாக ஆதரிக்கிறது. அமெரிக்க அரசியல் நடைமுறையில் உள்ள முக்கிய பிரமுகர்கள் கிர்குக்கின் மீது குர்திஷ் உரிமை கோரலைப் பற்றி கவலை தெரிவித்துள்ளனர். ஒரு முக்கிய நேட்டோ நட்பு நாடான துருக்கிக்குள் தீவிர பதட்டங்கள் ஏற்படும் என்ற அச்சங்களும் உள்ளன; இதைத் தவிர ஈராக்கிலும் உறுதியற்ற தன்மை ஆழ்ந்து பெருகிவிடும் என்ற கவலையும் உள்ளது. கடந்த ஆண்டு குடியரசுக் கட்சியின் ஜேம்ஸ் பேக்கர் மற்றும் ஜனநாயகக் கட்சியின் லீ ஹாமில்டன் இருவரும் தயாரித்த ஈராக் ஆய்வுக் குழு அறிக்கை கிர்குக்கை "வெடிப்புத் தன்மை நிறைந்தது" என்று விளக்கி காலவரையற்று வாக்கெடுப்பு தாமதப்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

உள்நாட்டுப் போர் பற்றி பர்ஜானி கொடுக்கும் அச்சுறுத்தல் குர்திஷ் உயரடுக்கிடையே தங்கள் விழைவுகள் தகர்க்கப்பட்டுவிடக் கூடுமோ என்ற பெருந்திகைப்பை உறுதிப்படுத்துகிறது. அமெரிக்க தளத்தை கொண்ட அரேபிய தொலைக்காட்சி அல்-ஹுராவிடம் கூறினார்:

"காலதாமதம் ஏதும் இல்லை, இப்பிரச்சினை தீர்க்கப்படாவிட்டால், நான் முன்கூறியபடி, அனைத்து விருப்புரிமைகளும் பயன்படுத்தப்படலாம். கூட்டாட்சி (ஈராக்) அரசாங்கம் கிர்குக் பற்றியும் விதி 140 பற்றியும் கொண்டுள்ள கொள்கை, நடவடிக்கை பற்றி எனக்கு திருப்தி இல்லை.... கிர்குக் விவகாரம் பற்றி குர்துகள் விட்டுக்கொடுக்க மாட்டார்கள், பேரம் பேசவும் மாட்டார்கள்; ஆனால் அரசியலமைப்பு மற்றும் சட்ட நெறி மூலம் கிர்குக் மீதான கட்டுப்பாட்டை அடைவது என்பதை ஏற்றுள்ளோம். ஆனால் அரசியலமைப்பு, சட்ட வழிவகைகளில் எங்களுக்கு ஏமாற்றத் திகைப்பு ஏற்பட்டால், மற்ற வழிவகைகளை கையாளும் உரிமை எங்களுக்கு உண்டு. விதி 140 செயல்படுத்தப்படவில்லை என்றால், பின்னர் உண்மையில் ஓர் உள்நாட்டுப் போர் ஏற்படும்."

பர்ஜானியின் அலங்காரப் பேச்சில், விளிம்பில் நிற்கும் தன்மை கணிசமாகக் காணப்படுகிறது; இது ஈராக்கிய அரசாங்கம் மற்றும் அமெரிக்காவை விரைவில் வாக்கெடுப்பு நடத்தத் தூண்டுகிறது. இன்று மாலிகி துருக்கிக்கு, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரதம மந்திரி Recep Tayyip Erdogan உடன் கிர்குர்க்கில் KRG யின் விழைவுகள் மற்றும், துருக்கியுடன் 23 ஆண்டுகளாக ஈராக்கின் வடக்கில் உள்ள குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி (PKK) கிளர்ச்சியாளர்கள் பற்றிப் பேச்சு வார்த்தைகளை நடத்துவதற்காக பறந்து செல்லுகிறார்

கிட்டத்தட்ட 200,000 துருக்கிய துருப்புக்கள் ஈராக்கிய எல்லையில் குவிக்கப்பட்டு, துருக்கிய இராணுவம் எல்லையை கடந்து PKK பதுங்கியுள்ள இடங்களை அழிப்பதற்கு பாராளுமன்ற ஒப்புதல் வேண்டும் என்றும் கோரியுள்ளது. துருக்கியின் உயர்மட்டத் தளபதியான ஜெனரல் யாசர் புயுகானிட் மே 31 அன்று விடையளிக்கப்பட வேண்டிய ஒரே வினா, அவருடைய படைகள் ஈராக்கின்மீது படையெடுத்தால், "பர்ஜானியுடனும் ஏதேனும் நடக்குமா" என்பதுதான்.

நேற்றைய வாஷிங்டன் போஸ்ட்டில் வந்துள்ள கட்டுரை ஒன்றின்படி, குர்டிஷ் அரசியல்வாதிகள், "ஈராக் விவகாரங்களில் இருந்து தலையிடாமல் நகர்த்து கொளுமாறு துருக்கியத் தலைவருக்கு மாலிகி கூறவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்." மாலிகி அவ்வாறு செய்யவில்லை என்றால் அது அவருடைய அரசாங்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கக்கூடும். முக்கிய சுன்னிப் பிரிவும், மதகுரு மோக்டாடா அல்-சதருக்கு விசுவாசமாக இருக்கும் பெரும் ஷியைட் பிரிவும் மந்திரிசபையில் இருந்து வெளியேறியுள்ளன. புதிய கூட்டணிகள் அமைப்பு ஏற்படலாம், ஒரு புதிய பிரதம மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கு தவிர்க்க முடியாமல் வாக்கெடுப்பு வரக்கூடும் என்ற வதந்திகள் பாக்தாத் முழுவதும் உலவி வருகின்றன. ஈராக்கிய பாராளுமன்றத்தில் இருக்கும் குர்திஷ் உறுப்பினர்கள் மற்றொரு வேட்பாளருக்கு ஆதரவை மாற்றிக் கொண்டால், அவர்களுடைய வாக்குகள் மாலிகியை பதவியில் இருந்து இறக்கக்கூடும்.

Brookings Institute ல் உள்ள Omer Taspinar, "கிர்குக்கை அடைவதற்கு கைம்மாறாக" PKK ஐ தகர்ப்பதற்கான தங்களுடைய உடன்பாட்டைத் கொடுக்க குர்திஷ் விரும்புவார்கள் என்று தான் நம்புவதாக வாஷிங்டன் போஸ்ட்டிடம் கூறினார். வேறுவிதமாகக் கூறினால், நகரமும் எண்ணெயும் குர்திய வரம்பிற்கு உட்படுவதற்கு துருக்கி உடன்பட்டால், KRG துருக்கிய தலையீட்டை அனுமதிக்கும் அல்லது தன்னுடைய படைகளையே உபயோகித்து PKK ஐ எல்லைப் பகுதியில் இருந்து அகற்றும். இத்தகைய உடன்படிக்கை பிராந்திய குழப்பம் பற்றிய அமெரிக்க அச்சங்களையும் குறைக்கும்.

ஆனால், குர்திஷ் அரசியல் தந்திர உத்திகள் தோற்றால் பர்ஜானியின் உள்நாட்டுப் போரை உண்மையாக்கும் வகையில் நடந்து கொள்ளுவதற்கான தேவையான இராணுவ சக்தியை KRG கொண்டுள்ளது. KDP மற்றும் PUK பேஷ்மெர்காப் போராளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட குர்திஷ்காரர்கள் வட ஈர்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதிய ஈராக்கிய இராணுவத்தில் பெரும் சதவிகிதத்தில் உள்ளனர். KRG கிட்டத்தட்ட 175,000 போராளிகளை கூட்டி டாங்குகள், கவச வாகனங்கள், பீரங்கிகள் இவற்றையும் அணிதிரட்ட முடியும் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.

அரேபிய மற்றும் துர்க்கோமன் அமைப்புக்கள் நகரத்தை ஆயுதமேந்திக் கைப்பற்றுவதற்கான முயற்சிகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அஞ்சுகின்றன. ஜூலை 16ம் தேதி 85 பேரைக் கொன்ற தற்கொலைக் குண்டுவீச்சுக்களை தொடர்ந்து, இன்னும் கூடுதலான 12,000 குர்திஷ் துருப்புக்கள் நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ளதாக உறுதிபடுத்தப்படாத செய்திகள் கூறுகின்றன; பாதுகாப்புக் கருதி இவ்வாறு என்று கூறப்படுகிறது. Voices of Iraq செய்தி நிறுவனத்தின் கருத்தின்படி 6,000 பேஷ்மெர்காக்கள் "எண்ணெய் குழாய்களை காப்பதற்காக" அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் மற்றும் 6,000 பேர் "மின்கம்பிகளை பாதுகாப்பதற்கு" அனுப்பப்பட்டுள்னர் என்றும் தெரிகிறது.

ஈராக்கில் கடந்த நாலரை ஆண்டுகளாக நடந்து வரும் படுகொலைகளை பார்க்கும்போது, கிர்குக் பற்றி உள்நாட்டுப் போரின் தன்மையை விளக்குவதற்கு "உண்மை" என்ற சொல்லை பர்ஜானி பயன்படுத்தியுள்ளது எளிதில் தள்ளிவிடப்பட முடியாதது ஆகும்.

குர்திஷ் தலைவருடைய கருத்து, வடக்கு ஈராக்கில் இனவழியிலான மோதல் இன்னும் கூடுதலான இறப்பு, அழிவு மற்றும் இடம் பெயர்தல் என்று ஈராக்கிய மத்திய மாநிலங்களில் சீறிக் கொண்டிருக்கும் குறுகிய குழுவாத பூசல்களால் ஏற்படும் இழப்புக்களைவிட கூடுதலான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அவர் நம்புவதை காட்டுகிறது. மாலிகியின் அமெரிக்க சார்புடைய அரசாங்கம் ஷியைட் போராளிகள் மற்றும் அதை எதிர்க்கும் சுன்னி முஸ்லிம் தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் மோதல்கள் இரு தரப்பில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்களை மடியச் செய்துள்ளது; ஒரு மில்லியனுக்கும் மேலானவர்களை தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றியுள்ளது. அரேபியர்கள், துருக்கோமன்கள் மற்றும் குர்திஷ் மக்கள் நிறைந்துள்ள பகுதிகளில் இருந்து மற்ற சிறுபான்மையினரும் வெளியேறுதல் என்பது --தயக்கத்துடன் KRG இன்னமும் உரிமை கோராத ஈராக்கின் மூன்றாம் மிகப் பெரிய நகரமான மோசூல் உட்பட-- இரண்டு மில்லியனுக்கும் மேற்பட்ட அகதிகள் என்ற விளைவை ஏற்படுத்திவிடும்.

பாக்தாத்தில் தவிர்க்கமுடியாமல் அரசியல் நெருக்கடியை தூண்டக்கூடிய ஒரு மோதலை தவிர்ப்பதற்கு புஷ் நிர்வாகம் முயன்றுள்ளது; இப்பகுதி ஒன்றுதான் ஒப்புமையில் நாட்டில் உறுதியான பகுதிகளாக உள்ளன; இதைத்தவிர இது ஈராக்கின் அண்டை நாடுகளான சிரியா, ஈரான் மற்றும் துருக்கியையும் போருக்கு இழுக்கும். ஆயினும்கூட, அமெரிக்க படையெடுப்புத்தான் சுன்னி-ஷியைட் பதட்டங்கள் தூண்டிவிடப்படுவதற்குப் பொறுப்பாக இருப்பதுபோல், அது ஈராக்கின் வடக்குப் பகுதியில் வகுப்புவாத சக்திகளையும் கட்டவிழ்த்துள்ளது; அதை வாஷிங்டன் கட்டுப்படுத்த முடியாது.