World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

New provocation against Tehran

Bush to brand Iranian force as "terrorist"

தெஹ்ரானுக்கு எதிராக புதிய ஆத்திரமூட்டும் செயல்

ஈரானியப் படைகளை "பயங்கரவாதிகள்" என்று புஷ் முத்திரையிட உள்ளார்

By Peter Symonds
16 August 2007

Use this version to print | Send this link by email | Email the author

நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட்டில் நேற்று வந்துள்ள கட்டுரைகளின்படி ஈரானிய புரட்சி காவலர் படைகள் (Iranian Revolutionary Guard Corps -IRGC) முழுவதையுமே "குறிப்பாக அழைக்கப்படவுள்ள உலகந் தழுவிய பயங்கரவாத அமைப்பு" என்று அதன் உட்குறிப்புக்கள் முழுவதும் அடங்கிய வகையில், புஷ் நிர்வாகம் முத்திரையிட தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. இவ்வாறு செய்கையில் செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களுக்கு பின்னர் அவர் கையெழுத்திடப்பட்ட ஜனாதிபதி ஆணை ஒன்றின் கீழ் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்துவார்.

மிகவும் ஆத்திரமூட்டும் இந்த முயற்சி தெஹ்ரான் மீது ஆழ்ந்த பொருளாதார அழுத்தத்தை அளிக்கும் அரங்கை அமைப்பது மட்டுமில்லாமல், ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு காரணம் கொடுக்கும் செயல்திறனையும் முறைப்படுத்துகிறது.

ஒரு இறைமை பெற்ற நாட்டின் இராணுவத்தின் முக்கிய கிளையை ஒருதலைப்பட்சமாக குற்றவாளித் தன்மை உடையதாக்கும் முடிவு முன்னோடியில்லாதது ஆகும். 1979 ஈரானிய புரட்சிக்கு பின்னர் தோற்றுவிக்கப்பட்ட IRGC யில் அதன் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படைப் பிரிவுகளில் 125,000 துருப்புகளும் துணையாளர்களும் இருப்பதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இப்படி பெயரிடுவது IRGC ஐ அல் கொய்தா, லெபனானில் ஷியைட் போராளிக் குழு ஹெஸ்போல்லா மற்றும் பாலஸ்தீனிய ஹமாஸ், மற்றும் இஸ்லாமிக் ஜிஹாத் குழுக்களுடன் சார்ந்த வகையில் சேர்க்கும்; பிந்தையவை அனைத்துமே அமெரிக்க இராணுவத்தாலோ அல்லது அதன் இஸ்ரேலிய நண்பர்களாலோ தாக்கப்படுகின்றன; அவற்றின் உறுப்பினர்கள் காவலில் வைக்கப்பட்டு "பயங்கரவாதிகள்" என்ற சந்தேகத்தின்பேரில் சித்திரவதைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

IRGC ஈராக், ஆப்கானிஸ்தானத்தில் "தலையிடுகிறது", மற்றும் ஹெஸ்போல்லா, ஹமாஸ் போன்ற "பயங்கரவாத குழுக்களுக்கு" ஆதரவு கொடுக்கிறது என்று ஆதாரமில்லாமல் அமெரிக்கா கூறுவதுதான் இந்த நடவடிக்கைக்கு போலிக் காரணம் ஆகும். IRGC, குறிப்பாக அதன் உயரடுக்குச் சிறப்புப் பிரிவான Quds Force, ஈராக்கில் இருக்கும் அமெரிக்கப் படைகளை தாக்குவதற்கு ஷியைட் போராளிகளுக்கு ஆயுதங்கள் கொடுத்தல், பயிற்சி அளித்தல் இயக்குதல் போன்றவற்றை செய்வதாகக் கூறும் பிரச்சாரங்களை புஷ் நிர்வாகமும் பென்டகன் அதிகாரிகளும் சமீபத்திய வாரங்களில் முடுக்கியுள்ளன. தாலிபான் மற்றும் பிற ஆக்கிரமிப்பை எதிர்க்கும் இயக்கங்களுக்கும் ஆப்கானிஸ்தானத்தில் IRGC உதவி வருவதாகவும் வாஷிங்டன் கூடுதல் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்களை அப்படியே உண்மை என்று ஏற்றுக் கொண்டாலும், புஷ் நிர்வாகத்தின் குண்டர்கள் தெஹ்ரானின் இராணுவத்தின் ஒரு பிரிவை பயங்கரவாதிகள் என்று முத்திரையிட்டு ஈராக், மற்றும் ஆப்கானிஸ்தானில் தலையிடுவதற்காக அதைத் தடை செய்வது என்பது பாசாங்குத்தனத்தின் உச்சக் கட்டம் ஆகும்; இவ்விரு நாடுகளும் அமெரிக்கத் தலைமையில் வழிநடத்தப்படும் படைகள் ஆக்கிரமித்துள்ள நாட்டின் எல்லைகளில் இருப்பவை. ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான மக்களை அமெரிக்க இராணுவம் கொன்று குவித்துள்ளதுடன், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஈராக்கையும் பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது. நூறாயிரக் கணக்கான ஈராக்கியர்களை அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகள் படுகொலை செய்துள்ளதுடன் நாட்டை விட்டு மில்லியன் கணக்கான மக்களை வெளியேறவும் செய்துள்ளது; தவிரவும் நாட்டின் உள்கட்டுமானம், சமூகக் கட்டுக் கோப்பு ஆகியவற்றையும் பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளன. பல்லாயிரக்கணக்கான ஈராக்கியர்கள் கைது செய்யப்பட்டு, காலவரையற்று சிறையில் குற்றச்சாட்டு ஏதும் இல்லாமல் அடைக்கப்பட்டுள்ளதுடன், சித்திரவதைக்கும் ஆட்பட்டுள்ளனர்.

"பயங்கரவாத அமைப்பு" என்ற தகுதிக்கு புஷ் நிர்வாகத்தை விட வேறு எதுவும் கூடுதலான பொருத்தத்தை கொண்டிருக்கவில்லை; தன்னுடைய பரந்த இராணுவ மேன்மையை பயன்படுத்தி, புதிய காலனி வகை ஆக்கிரமிப்பிற்கு முறையான எதிர்ப்பை தகர்க்கும் முறையில் ஆப்கான் மற்றும் ஈராக்கிய மக்களை இந்நிர்வாகம் அச்சுறுத்தியுள்ளது

ஈரானுக்கு எதிரான அமெரிக்க பிரச்சாரம், 2003ம் ஆண்டு நடந்த ஈராக் படையெடுப்பை நியாயப்படுத்த முயன்றதற்கு கூறப்பட்ட பொய்களுடன் அச்சம் கலந்த வகையில் ஒத்துள்ளது. இது வெற்றுத்தனமான கூற்றுக்கள், அரைகுறை உண்மைகள், அப்பட்டமான பொய்கள் அனைத்தின் கலவையாகும், சிறிதும் விளக்கப்படாத முரண்பாடுகளை கொண்ட புதிராகவும் உள்ளது. ஈராக்கில் இருக்கும் ஷியைட் போராளிகளுடன் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று ஈரான் பலமுறை மறுத்தும்கூட, அமெரிக்கர்களால் எவ்விதச் சான்றும் கொடுக்கப்படவில்லை. அனைத்து ஷியைட்டுக்கள் மற்றும் குறிப்பாக தெஹ்ரான் ஆட்சியை, அடிப்படை மத கருத்துக்கு மாறானவர்கள் என்று கருதும் தாலிபன் மற்றும் பிற சுன்னித் தீவிரவாதிகளுக்கு எதற்காக ஈரான் ஆயுதங்கள் வழங்க வேண்டும் என்பதை விளக்க எம்முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.

அமெரிக்க-ஆக்கிரமிப்பு எதிர்பாளர்களான ஈராக்கிலுள்ள ஷியைட் சக்திகளுக்கு ஒருவேளை ஆயுதங்களை ஈரான் அளித்திருக்கக்கூடும்; ஆனால் ஈராக்கின் எதிர்ப்பிற்கு பின்னணியில் "மூளையாக" தெஹ்ரான் திகழ்கிறது, அமெரிக்காவிற்கு எதிரான ஒரு மாற்றுப் போராக இதைக் கருதுகிறது என்று புஷ் நிர்வாகம் கூறுவது அபத்தமாகும்; ஏனெனில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகள் மற்றும் ஈராக்கிய படைகள் மீதான தாக்குதல்களுக்கு முக்கிய ஆதாரம் சுன்னி தீவிரவாத அமைப்பான அல் கொய்தாதான் என்ற கூற்றிற்கு இவை முற்றிலும் முரண்பட்டதாக உள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திரித்துக் கூறப்பட்ட தர்க்கத்தின்படி தங்கள் நாட்டில் அமெரிக்க ஆதிக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எந்த ஈராக்கியரையும், அவர்கள் வெளிப் பயங்கரவாத சக்திகளின் "ஈராக்கி-எதிர்ப்பு" முகவர்கள் என்ற வரையறுக்கப்பட வேண்டும் போலும்.

ஈரானிய உளவுத்துறை ஒற்றர்கள் ஐயத்திற்கு இடமின்றி ஈராக்கில் தீவிரச் செயற்பாடுகளை கொண்டிருந்தாலும், அதேபோல்தான் செளதி, ஜோர்தானிய மற்றும் பிற உளவுத்துறை அமைப்புக்களும் உள்ளன. ஈராக்கில் நடக்கும் தற்கொலை படைத் தாக்குதல்களுக்கு ஈரானியர்கள் என்று இல்லாமல் செளதிக் குடிமக்கள்தான் பெரும்பாலும் காரணமாவர். அணுவாயுதத் திட்டம் இருப்பதாக கூறப்பட்டு அற்காக ஈரான்மீது கடுமையான பொருளாதாரத் தடைகள் வேண்டும் என்று கோரியுள்ள புஷ் நிர்வாகம் இப்பொழுதுதான் செளதி அரேபியா, இஸ்ரேல் இன்னும் பல மத்திய கிழக்கு நட்பு நாடுகளுடன் பல பில்லியன் டாலர் மதிப்புடைய ஆயுதங்கள் ஒப்பந்தத்தை முடித்துள்ளது; இது வெடிப்பான இப்பகுதியில் ஆயுதப் போட்டியை முடுக்கிவிடக்கூடும்.

IRGC ஐ "சிறப்பாக அடையாள காணப்பட்டுள்ள உலகந்தழுவிய பயங்கரவாதி" என்று முத்திரையிட்டுள்ளதின் உடனடி விளைவு நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும். IRGC க்கு தெரிந்து பொருட்கள் உதவியை செய்யும் எந்த அமைப்பும் அல்லது தனிநபரும் குற்றப் பிரிவு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர். IRGC இருப்புக்களை கண்டறியும் எந்த அமெரிக்க வங்கியும் அவற்றை அமெரிக்க கருவூலத்துறைக்கு கொடுக்கும் கட்டாயம் உண்டு.

இதன் முக்கிய பாதிப்பு அமெரிக்காவிற்குள் இருக்காது; ஏனெனில் 1981ல் இருந்தே அது ஈரான் மீது பொருளாதார முற்றுகை நடத்தி வருகிறது; இந்த ஆட்சியை 1984லேயே அரசு ஆதரவு பயங்கரவாதம் என பெயரிட்டயைத்தது; ஆனால் IRGC ன் பரந்த வணிக நலன்களுடன் எந்த உறவையும் கொண்டிருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் பெரும் பாதிப்பை அடையும்.

வாஷிங்டன் போஸ்ட்டின் கருத்தின்படி, புஷ் நிர்வாகம் அடுத்த மாதம் நடக்க இருக்கும் ஐ.நா. பொது மன்றத்தின் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை பற்றிப் பரிசீலித்து வருகிறது. இந்த நேரம் ரஷ்யா, சீனா மற்றும் ஐரோப்பிய சக்திகளை ஈரானுக்கு எதிரான கடுமையான புதிய பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்கான அமெரிக்காவின் கோரிக்கைகளை ஏற்பதற்கு அதிகபட்ச அழுத்தம் கொடுக்கும் வகையில் உள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர், கொண்டலீசா ரைஸ் ஏற்கனவே ஐரோப்பிய நாடுகளிடம் ஒரு புதிய ஐ.நா. தீர்மானம் கொண்டுவருவதில் தாமதம் என்ற நிலையில் ஒருதலைப்பட்ச நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம் என்று கூறியதாகத் தெரிகிறது; இது சீன, ரஷ்ய எதிர்ப்பை ஒட்டிய விளைவு ஆகும். "இம்மக்களுடன் தொடர்பு கொள்ளும் எவரும் தங்கள் நடவடிக்கைகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும்" என்று ஒரு அமெரிக்க அதிகாரி வாஷிங்டன் போஸ்ட்டிடம் தெரிவித்தார். "அது ஒன்றுதான் இவர்களுடன் வணிகத் தொடர்பு கொண்டிருப்பதற்கான காரணங்களை அகற்ற முடியும்."

இராணுவ வழி மோதல்

ஆனால் அமெரிக்க நடவடிக்கையின் நோக்கம் பெரும் பொருளாதார நலன்கள் ஆபத்திற்கு உட்படக்கூடிய ஈரான் மற்றும் அமெரிக்காவின் ஐரோப்பிய, ஆசியப் போட்டியாளர்களுக்கு பொருளாதார ரீதியாக தண்டிப்பதற்கும் அப்பால் செல்கிறது. ஈராக்கிலும், ஆப்கானிலும் அமெரிக்க இராணுவம் புதைசேற்றில் தள்ளப்பட்டுள்ள போதிலும், ஈரானுடன் ஒரு இராணுவ மோதல் என்ற நிலைக்கு புஷ் நிர்வாகத்தை ஒரு பைத்தியக்காரத்தனமான தர்க்கம் தள்ளிக் கொண்டிருக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் அதன் ஆற்றல் இருப்புக்கள்மீது தடையற்ற ஆதிக்கத்தை நிறுவ வேண்டும் என்ற கருத்துடன் முந்தைய படையெடுப்புக்களை தொடக்கிய நிலையில், சதாம் ஹுசைன் பாக்தாத்தில் இருந்தும், தாலிபானை காபூலில் இருந்தும் அகற்றிய முறையில், தெஹ்ரானின் இரு முக்கிய போட்டியாளர்களை அகற்றியதன் மூலம் அவ்வட்டாரத்தில் ஈரானிய செல்வாக்கை தான் வலுப்படுத்தி விட்டதாகவே புஷ் நிர்வாகம் கருதுகிறது.

IRGC "பயங்கரவாதத் தன்மை உடையது" என்று சிறப்புப்பெயரிட்டுக் காட்டுவது, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பேரழிவு தரக்கூடிய விளைவுகளை கொடுக்கும் திறனைக் கொண்டிருப்பினும், ஈரானுக்கு எதிரான இராணுவ சாகசத்துக்கு ஆதரவாக வெள்ளை மாளிகையில் உள்விவாதத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதின் மற்றுமொரு அடையாளம் ஆகும். கடந்த ஓராண்டு காலமாக அமெரிக்கக் கோரிக்கைகளுக்கு ஈரானை தாழ்ந்து மண்டியிடச் செய்வதற்குக் கொடுக்கப்படும் ரைஸின் தூதரக அழுத்தங்கள் மேலோங்கி நிற்கின்றன. ஆனால் நியூ யோர்க் டைம்ஸ் சுட்டிக் காட்டியுள்ளது போல், "சமீபத்தய மாதங்களில், நிர்வாகத்திற்குள்ளேயே தூதரக நடவடிக்கை செயல்படுகிறதா என்ற விவாதம் ஏற்பட்டுள்ளது; துணை ஜனாதிபதி செனியின் ஆலோசகர்கள் இராணுவ நடவடிக்கை எடுப்பது பற்றி இன்னும் கூடுதலான கவனம் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

McClatchy செய்தித்தாட்கள் தொகுப்புக்கள் அனைத்திலும் வெளிவந்த கட்டுரை ஒன்று தெரிவிப்பதாவது: "ஈரான் கொள்கையுடன் தொடர்பு கொண்டுள்ள இரு அமெரிக்க அதிகாரிகள் ஈரானிய புரட்சிக் காவல் பிரிவின் சிறப்புப் பகுதியான Quds force நடத்தும் சந்தேகத்திற்கு உரிய பயிற்சி முகாம்கள் மீது வான்வழித் தாக்குதல்களை நடத்தலாமா என்று சில வாரங்கள் முன்பு துணை ஜனாதிபதி டிக் செனி திட்டமிட்டார்." அது மேலும் கூறியதாவது: "ஈரானுடன் தூதரக நெறி பற்றி சந்தேகத்தையே நீண்ட காலமாகக் கொண்டிருக்கும் செனி, ஈராக்கில் அமெரிக்க எதிர்ப்பு சக்திகளுக்கு ஈரான் ஆதரவும் உடந்தையாகவும் இருப்பது பற்றிப் புதிய சான்றுகள் கிடைத்தால் இராணுவ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வாதிட்டார்: உதாரணமாக ஈரானில் இருந்து எல்லை கடந்து ஒரு வாகனம் நிறைய படையினர்களோடோ அல்லது ஆயுதங்களோ வந்தால் அவ்வாறு செய்யலாம், என்று ஒரு அதிகாரி கூறினார்."

கடந்த வியாழனன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஜனாதிபதி புஷ் வெளிப்படையாகவே ஈரானை அச்சுறுத்தும் வகையில், "நீங்கள் ஆக்க பூர்வமற்ற செயலைச் செய்வதை நாங்கள் பிடித்தோம் என்றால், அதற்குத் தக்க விலை கொடுக்க வேண்டியிருக்கும்." என்றார். பாக்தாத்தில் சமீபத்தில் அமெரிக்க மற்றும் ஈரானிய தூதர்களிடையே நடைபெற்ற கூட்டங்களில் பேச்சு வார்த்தைகள் ஏதும் இல்லை என்பதையும் அவர் தெளிவாக்கியதுடன் அவற்றில் தெஹ்ரானுக்கு அமெரிக்க இறுதி எச்சரிக்கைகள் அளிக்கப்பட்டன என்றார். "தூதர் கிரோக்கரை ஈராக்கிற்குள் ஈரானியர்களை சந்திக்க நான் கூறிய காரணங்கள் பலவற்றுள் ஒன்று, "ஈராக்கில் அமெரிக்கர்களை கொல்வதற்கு EFP க்களை [சாலையோரக் குண்டுகள்] வழங்குதல், அல்லது உதவிக்கு மக்கள் அனுப்பப்படுவது ஆகியவை நிகழ்ந்தால் ...அதற்கான கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று கூறுவதற்குத்தான்."

அந்த நேரத்தில் தெஹ்ரானுக்கு சென்று, அப்பகுதியில் ஈரானின் பங்கு ஆக்கபூர்வமானது என்று கூறியிருந்த ஈராக்கிய பிரதம மந்திரி நூரி அல்-மாலிகியை பகிரங்கமாக புஷ் மறுத்துப் பேசினார். "ஈரான் ஆக்கபூர்வமானது என்ற அடையாளம் இப்பொழுது என்றால், என்னுடைய நண்பர் பிரதம மந்திரியுடன் நான் மனம் விட்டுப் பேச வேண்டிய நிலை வரும்; ஏனெனில் ஈரானியர்கள் ஆக்கபூர்வமானவர்கள் அல்லர் என்றுதான் நான் நினைக்கிறேன்."

நீண்ட காலமாக ஈரானுடன் தொடர்புகளை கொண்டுள்ள ஷியைட் கட்சியின் மேலாதிக்கத்திற்கு உட்பட்ட அரசாங்கத்தை கொண்டுள்ள மாலிகி, தெஹ்ரானுடன் முரண்பாடுகள் தீவிரமானால் வாஷிங்டனால் கொள்ளப்படும் முதல் பலியாகிவிடுவார். சமீப மாதங்களில் அவருடைய மந்திரிசபை ஏற்கனவே தொடர்ந்து சேதத்திற்கு உட்பட்டு வருகிறது; பாராளுமன்றம் அடுத்த மாதம் கூட இருக்கும்போது, நம்பிக்கையில்லா தீர்மானம் வரக்கூடும் என்ற வதந்திகளும் சூழ்ந்துள்ள நிலையில், தன்னுடைய "நண்பருக்கு" வெளிப்படையாக ஆதரவு கொடுப்பதில் புஷ் முழுமையாக உள்ளார் எனக் கூறுவதற்கு இல்லை.

"ஒரு வாகனம் நிறைய போராளிகளோ ஆயுதங்களோ" ஈராக்கிற்குள் நுழைவது கண்டுபிடிக்கப்பட்டால் ஈரானுக்குள் இருக்கும் IRGC தளங்கள்மீது தாக்குதல் வேண்டும் என்று செனி கூறியிருப்பது, இவ்வாண்டின் முன்பகுதியில் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக இருந்த Zbigniew Brzezinski உடைய கருத்துக்களை நினைவுபடுத்துகின்றன; அவர், "ஈரானுடனான ஒரு இராணுவ மோதலுக்கான நிலைமை வரக்கூடும்" என்ற கருத்தை ஆரம்பித்திருந்தார். புஷ்ஷின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போரை" கடுமையாக கண்டித்தும், அமெரிக்க நலன்களில் அதன் விபரீத விளைவுகளை பற்றி எச்சரித்த போதிலும், இடையில் Brzezinski கீழ்க்கண்ட நிலைமை வரலாம் என்று கூறினார்: "குறிப்பிட்ட வகைகளைக் ஈராக்கில் அடையமுடியாமற் போனதும், தோல்விக்கு ஈரான்தான் பொறுப்பு என்ற குற்றச் சாட்டுக்கள் வெளிவந்ததும், பின்னர் ஈராக்கில் ஏதேனும் ஒரு சிறு ஆத்திரமூட்டலோ, அமெரிக்காவில் ஒரு பயங்கவரவாதச் செயலோ ஈரான் மீது குற்றம் சாட்ட எடுத்துக் கொள்ளப்படும்; இது இறுதியில் ஈரானுக்கு எதிரான "தற்காப்பு" அமெரிக்க இராணுவ நடவடிக்கை என்ற உச்ச கட்டத்தை அடைந்து ஒரு தன்னந்தனியான அமெரிக்கா பரந்து, விரிந்து, ஆழ்ந்து செல்லும் புதைகுழியில் விழ நேரிடும்; இது ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று படர்ந்து செல்லும்."

அமெரிக்க அரசாங்கக் கருவியின் மிக உயர்மட்டங்களில் தொடர்புடைய, மற்றும் ஆத்திரமூட்டலை ஏற்படுத்தும் அனுபவங்கள் பலவற்றையும் கொண்ட Brzezinski தான் என்ன பேசுகிறோம் என்பதை நன்கு உணர்ந்தவராவார். அமெரிக்கக் கடற்படை வீரர்களை ஈரானியர்கள் கைப்பற்றுவதில் இருந்து அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது பேரழிவுத் தாக்குதல் நடத்துதல் வரை பலவித நிகழ்வுகளையும் கற்பனை செய்வது கடினமல்ல; இது புஷ் நிர்வாகத்தால் ஈரான்மீது இராணுவத் தாக்குதல் நடத்துவதற்காக ஏற்கனவே கொள்ளப்பட்டுள்ள முயற்சிகளை தொடக்குவதற்கு தீவிர தேசவெறிச் சூழ்நிலையை கிளப்பி விடுவதற்குப் பயன்படுத்தப்படக் கூடும். உண்மையில், IRGC ஐ ஒரு "பயங்கரவாத அமைப்பு" என்று அறிவித்துள்ளது, மற்றும் அதிகரித்த முறையில் புஷ் நிர்வாகத்தின் எரியூட்டும் மொழிகள் ஆகியவை, அத்தகைய போலிக் காரணம் கொடுப்பதற்கு ஈரானிய ஆட்சியின் பகுதியினரை தூண்டிவிடும் தன்மையை கொண்டுள்ளது.

ஈரானுக்கு எதிரான புதிய போரை எதிர்ப்பதற்கு முற்றிலும் மாறான வகையில் ஜனநாயகக் கட்சியினர் ஏற்கனவே தாங்கள் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு உடன்பட்டு ரப்பர் ஸ்டாம்ப் போல் செயல்படுவதாக சுட்டிக் காட்டியுள்ளனர். ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் எந்த ஜனநாயகக் கட்சி வேட்பாளரும் ஈரானுக்கு எதிராக இராணுவ சக்தியைப் பயன்படுத்தப் போவதில்லை என்று கூறவில்லை.

வெளியுறவு பற்றிய மன்றக் குழுவின் ஜனநாயகக் கட்சித் தலைவரான Tom Lantos நேற்று புஷ் நிர்வாகத்தின் IRGC க்கு எதிரான நடவடிக்கையை, ஈரான் அதன் அமைப்புக்களை "உலகப் பாதுகாப்பை சீர்குலைக்காமல்" கட்டுப்படுத்தும் வழி என்று உடனடியாக வரவேற்றுள்ளார். "அனைத்து அமைதி வழிவகைகளையும் இன்னும் முடித்துவிடவில்லை" என்று எச்சரிக்கையுடன் அறிவித்தாலும், புஷ் நிர்வாகம் IRGC க்கு எதிரான குற்றச்சாட்டு பாடல்களையே இவரும் மீண்டும் பாடினார்; அதாவது IRGC அணுவாயுத வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டிருப்பதாகவும், ஈராக், லெபனான் மற்றும் பாலஸ்தீனிய பகுதிகளில் "பயங்கரவாதிகளுக்கு" பயிற்சியளிப்பதில் இதன் பங்கு உள்ளது என்றும் கூறியுள்ளார். இராணுவ மோதல் ஏற்பட்டால், அனைத்து சொல் உறுதிமொழிகளும் தூர எறியப்பட்டுவிடும்; அப்படித்தான் ஈராக்கில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்படும் என்ற உறுதிமொழிகளின் நிலை இருந்தது.

ஜனாதிபதி தேர்தல்களுக்கு இன்னும் ஓராண்டே இருக்கையில், தன்னுடைய செயற்பட்டியலை ஆக்கிரோஷத்துடன் புஷ் நிர்வாகம் தொடர்வதற்கு அதிக தடைகள் இல்லை; இதில் ஆதார வளங்கள் கொழிக்கும் பகுதியில் மேலாதிக்க சக்தியாவதற்கு ஆற்றொணா நிலையில் ஆடும் சூதாட்டம் போல நடத்தப்பட வேண்டிய ஈரான் மீதான இராணுவத் தாக்குதலும் அடங்கும். தன்னுடைய அடுத்த குற்றம் சார்ந்த போரை அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்துமா என்பது வினாவல்ல; எப்பொழுது அதை நடத்தும் என்பதுதான் வினா என்பதைத்தான் அனைத்து அடையாளங்களும் குறிப்பிடுகின்றன; இம்முறை அது ஈரானுக்கு எதிராக இருக்கும்.