World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : வரலாறு

Marxism, History & Socialist Consciousness

மார்க்சிஸமும் வரலாறும் சோசலிச நனவும்

பகுதி 1-3

By David North
24 August 2007

Use this version to print | Send this link by email | Email the author

மார்க்சிஸமும் வரலாறும் சோசலிச நனவும் என்ற டேவிட் நோர்த்தின் புதிய நூலை மெஹ்ரிங் புக்ஸ் வெளியிட்டுள்ளது. இதன் ஆங்கிலப் பிரதியை இப்போது ஒன்லைனில் online பெற்றுக்கொள்ள முடியும். இந்த நூலின் 1ம் பாகம் முதல் 3ம் பாகம் வரை இங்கு பிரசுரிக்கின்றோம். மிகுதிப் பாகங்கள் தொடர்ச்சியாக வெளியிடப்படும்.

1. அறிமுகம்

அன்பின் தோழர்கள் ஸ்டெய்னர் மற்றும் பிரெனருக்கு:

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவானது (நா.அ.அ.கு) அதன் சார்பில் "புறநிலைவாதம் அல்லது மார்க்ஸிசம்"* என்ற உங்களது ஆவணத்திற்கு நான் பதிலளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளது. இது நான் ஒரு குறிப்பிட்டளவு வருத்தத்துடன் ஏற்றுக்கொண்ட ஒரு பணியாகும். கடந்த மூன்று தசாப்த காலங்கள் பூராவும் நாம் எடுத்துக்கொண்ட வாழ்கையின் வேறுபட்ட பாதைகள் எப்படியிருந்த போதிலும், நாங்கள் எமது இயக்கத்தில் நெருக்கமாக செயற்பட்ட காலகட்டத்தின் பசுமைநிறைந்த நினைவுகளை நான் இன்னும் வைத்திருக்கிறேன். எவ்வாறெனினும், அது மிகவும் நீண்டகாலத்திற்கு முன்னையதாகும். அது மட்டுமன்றி உங்களது சமீபத்திய ஆவணங்கள் கடந்த பல ஆண்டுகளாக உங்களுடைய பல்வேறு கட்டுரைகள் மேலும் மேலும் வெளிக்கொணர்ந்த விடயத்தை கோடிட்டுக் காட்டவே சேவை செய்கின்றன: அதாவது நீங்கள் மார்க்ஸியம், ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அரசியல் மரபுரிமைகள் மற்றும் நா.அ.அ.கு. வில் இருந்தும் வெகுதூரம் பயணித்துவிட்டீர்கள். இந்தத் தப்பமுடியாத அரசியல் யதார்த்தமானது இந்தப் பதிலின் உள்ளடக்கத்தையும், தொனியையும் நிர்ணயிக்கவேண்டும்.

உங்களுடைய கடிதம், உங்களது முன்னைய ஆவணங்களுக்கு நா.அ.அ.கு பதிலளிக்கத் தவறிவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன் தொடங்குகின்றது. அதிலிருந்து நீங்கள் மிகவும் கவலை அளிக்கக்கூடிய முடிவுகளை எடுத்துள்ளீர்கள்: நா.அ.அ.கு. "விமர்சனம் சம்பந்தமாக வெறுப்படையும்" நிலையிலுள்ளது. இது "அனைத்துலகக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினரும் ஆதரவாளரும் அக்கறைசெலுத்த வேண்டிய, இயக்கத்திற்குள்ளேயான ஆழமான பிரச்சினைகளின் அறிகுறியாகும்." இயக்கத்தின் தலைமையானது "அரசியல் விவாதங்களுக்கு கற்சுவர் எழுப்புவதோடு" "விமர்சனங்களில் இருந்து தப்பிக்கொள்வதற்காக கலந்துரையாடல்களையும் தவிர்க்க" முயற்சிக்கின்றது. நீங்கள் கூறுவது போல், உங்களது ஆவணங்களுக்கு நாம் பதிலளிக்கத் தவறியமை "இயக்கத்திற்குள் மெய்யான விமர்சனப்பூர்வமான விவாதத்தை மேற்கொள்ளும் வழக்கம் எந்தளவிற்கு அந்நியமாக்கப்பட்டுள்ளது என்பதை மட்டுமே கோடிட்டுக்காட்டுகிறது."

தகவல் தெரியாத பார்வையாளருக்கு, நீங்கள் விபரித்துள்ள நிலைமையானது ஒரு சர்வாதிகார முறையிலான அரசியல் கட்சிக்குள், ஒரு முற்றுகையிடப்பட்ட எதிர்ப்புப் போக்கானது தனது கருத்துக்களை சாதாரண உறுப்பினர்கள் மத்தியில் முன்வைப்பதற்கு உள்ள உரிமை, அதிகாரத்துவ ராஜ்யத்தால் நசுக்கப்படுவதற்கு எதிராகப் போராடிக்கொண்டிருப்பது போன்றே தோன்றும். நீங்கள் இருவரும் அறிந்தவாறு, யதார்த்தமானது முற்றிலும் வேறுபட்டதாகும். உங்களில் எவருமே சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க) உறுப்பினர்கள் அல்ல. நீங்கள் இருவரும் கட்சியில் இருந்து வெளியேறி சுமார் 28 வருடங்கள் ஆகப்போகின்றன.[1] இது ஒருவகையில் கவனத்திற்கொள்ள வேண்டியதாகும். "இயக்கத்துடனான நீண்ட வரலாற்றை" பற்றிய உங்களது குறிப்பு, சுயநனவுடன் பலபொருள்பட கூறும் ஒரு விவரிப்பாகும். அங்கே "உடன்" என்பதற்கும் "உள்ளே" என்பதற்கும் இடையில் ஒரு வித்தியாசம் இருக்கின்றது. உங்களது முதிர்ச்சி பெற்ற வாழ்வின் பெரும்பகுதியில் நீங்கள் கட்சியின் உறுப்பினர்களாக இருக்கவில்லை. நீங்கள் இயக்கத்துடன் நட்பார்ந்த உறவுகளை பேணிவந்தீர்கள் என்ற சாதாரண விடயத்திற்காக, நாம் சோ.ச.க. உறுப்பினர்களுக்கு அல்லது ஏனைய நா.அ.அ.கு. பகுதிகளுக்கு பதிலளிக்கக் கடமைப்பட்டிருப்பது போல் உங்களுடைய ஆவணங்களுக்கு பதிலளிக்க நாம் கடமைப்பட்டிருக்கவில்லை.

எமது இயக்கத்தின் கொள்கைகள் மற்றும் வேலைத்திட்டத்தை விமர்சித்து நீங்கள் எழுதுவதை அனைவரும் வாசிப்பதற்காக உங்களது சொந்த இணையத் தளத்தில் நீங்கள் வெளியிடுவதை நா.அ.அ.கு. வில் உள்ள எவரும் தடுக்கவில்லை. (அது இணையம் அரசியல் கருத்துப் பரிமாற்றத்திற்கான முற்றிலும் நியாயமான முறை என்பது உங்களால் நிராகரிக்கப்படுவது போல் தோன்றுவதை நீங்கள் மாற்றிக்கொள்ள தயாராகின்ற அளவுக்கு மட்டுமே.) உங்கள் கருத்துகளுடன் ஒத்த நோக்குள்ள தனிநபர்களின் ஆதரவை திரட்டவும் மற்றும் அதற்காக பிரச்சாரம் செய்யவும் உங்களுக்கு சுதந்திரம் உண்டு. அதே போல், எங்களுக்கு பொருத்தமானது என தோன்றுகின்ற உங்களுடைய ஆவணங்களுக்கு பதில் அளிக்கவும் அல்லது பதிலளிக்காமல் விடுவதற்குமான அரசியல் உரிமைகள் நா.அ.அ.கு மற்றும் சோ.ச.க. க்கும் உண்டு. நான்காம் அகிலத்தின் பாரம்பரியங்களையும் வேலைத்திட்டத்தையும் எதிர்க்கும் ஒரு முன்நோக்குக்காக உங்களுக்கு மன்றம் அமைத்துக்கொடுக்க வேண்டியது எங்களுடைய பொறுப்பல்ல. உங்களுடைய பகிரங்க விமர்சனங்களுக்கு இந்தப் பதிலை முன்வைப்பதன் மூலம் நா.அ.அ.கு ஒரு "சட்டப்பூர்வமான" பொறுப்பை பூர்த்தி செய்யவில்லை; மாறாக மார்க்ஸிச சோசலிசத்திற்கும் போலியான கற்பனாவாதத்திற்கும் இடையிலுள்ள ஆழமான மற்றும் அடிப்படையான வேறுபாடுகளை தெளிவுபடுத்துகிறது - போலி கற்பனாவாதம் மத்தியதர வர்க்க சித்தாந்தத்தின் ஒரு வடிவமாகும். அதை தோழர்கள் ஸ்டெய்னர், பிரெனர் ஆகிய நீங்கள் இருவரும் ஆதரிக்கிறீர்கள்.

2. அனைத்துலகக் குழுவும் உலக சோசலிச வலைத் தளமும்

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எமது இயக்கத்தில் நீங்கள் அங்கத்தவர்களாக இருக்காததோடு அதன் உள்ளக வாழ்க்கையைப் பற்றிய அறிவும் இல்லாத போதிலும், நீங்கள் அனைத்துலகக் குழுவுக்கு எதிராக மிகப் பெரும் குற்றச்சாட்டுக்களை விடுக்கின்றீர்கள். "இயக்கத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்ட தத்துவார்த்த அல்லது அரசியல் கலந்துரையாடல்கள் அமைதியைக் குலைக்கும் விதத்தில் இல்லாமல் போயுள்ளன" என நீங்கள் உறுதியாகக் கூறுகின்றீர்கள். இந்தக் குற்றச்சாட்டுக்கான அடிப்படை என்ன? உங்களுடைய ஆவணங்களை நாங்கள் கையாண்ட முறை தொடர்பான உங்களது மகிழ்ச்சியின்மையை தவிர, எமது அரசியல் நிலைப்பாட்டில் இந்த தத்துவார்த்த மற்றும் அரசியல் வீழ்ச்சி வெளித்தோன்றியிருப்பது எவ்வாறு? இவை உங்களால் பதிலளிக்கப்படாத கேள்விகளாகும். நா.அ.அ.கு, உங்களது ஆவணங்களின் தகுதிக்கேற்ற அளவு கவனம் செலுத்த தவறிவிட்டது என்ற சாத்தியக்கூற்றை ஒருவர் ஏற்றுக்கொண்டாலும் கூட, இந்த தவறானது உலக வரலாற்று நிகழ்வின் மட்டத்திற்கு அதுவாகவே எழப்போவதில்லை. உங்களுடைய முறையீட்டுக்கும் மற்றும் உங்களுக்குப் புறம்பான உலக அபிவிருத்திகளுடன் தொடர்புபட்ட மிகவும் முக்கியமான அரசியல் பிரச்சினைகளுக்கும் இடையில் ஒரு தொடர்பு இருப்பதாக நீங்கள் எடுத்துக்காட்டுவது இன்னும் அவசியமாக உள்ளது. இத்தகைய தொடர்பு இருப்பதாக நீங்கள் கூறிக்கொள்வது மட்டும் போதுமானதல்ல. நீங்கள் அதை நிரூபித்துக் காட்டவேண்டும். இது மார்க்ஸிச இயக்கத்தின் வரலாற்றில், எந்த வழியில் செய்யப்பட்டது என்றால், அது விமர்சனத்திற்கு உள்பட்ட அமைப்பின் அரசியல் நிலைப்பாட்டை கவனமாகவும் பூரணமாகவும் திறனாய்வுக்கு உட்படுத்துவதன் ஊடாகவே ஆகும்.

நீங்கள் இந்த தத்துவார்த்த ரீதியான கொள்கை அடிப்படையில் செயற்படத் தீர்மானித்திருந்தால், நீங்கள் சேகரித்துக்கொள்ளும் மூலப்பொருட்களுக்கு குறைவே இருக்காது. கடந்த 20 வருட காலமும் பிரமாண்டமான மாற்றங்களுக்கு சாட்சி பகர்கின்றன: தொழில்நுட்பம், உலக முதலாளித்துவத்தின் அமைப்பு மற்றும் பூகோளப் பொருளாதாரம் தேசிய அரசுகளுடன் கொண்டுள்ள உறவிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதோடு உலகின் அரசியல் புவியியலிலும் மாற்றம் ஏற்பட்டிருப்பதை நாம் மறந்துவிட முடியாது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் அச்சிடப்பட்ட வரைபடங்கள் இப்போது பயனற்றவையாகியுள்ளன. இத்தகைய உள் உறவுகொண்ட நிகழ்வுப்போக்குகள் அனைத்தும் - தொழில்நுட்பம், பொருளாதார மற்றும் அரசியலிலும் - சர்வதேச வர்க்கப் போராட்டத்தில் ஒரு ஆழமான தாக்கத்தைக் கொண்டுள்ளன. இந்த வரலாற்று மாற்றங்களுக்கான அனைத்துலகக் குழுவின் பதில் பல டஜன் தொகுப்புகளை இலகுவாக நிரப்பிவிடும்.

எவ்வாறெனினும், இப்போது இங்கு உங்களுடைய ஆவணத்தில் அனைத்துலகக் குழுவின் அரசியல் நிலைப்பாடு பற்றிய எந்தவொரு ஆய்வோ அல்லது குறிப்போ காணக்கிடைக்கவில்லை. "ஈராக் யுத்தம்," "புஷ் நிர்வாகம்," "செப்டெம்பர் 11" "சீனா," "ஆப்கானிஸ்தான்," "ஈரான்," "பயங்கரவாதம்," அல்லது "பூகோளமயமாக்கம்" என்ற சொற்களைக்கூட ஒருவரால் காண முடியவில்லை. இவை கவனக் குறைவினால் ஏற்பட்ட தவறுகள் அல்ல. நீங்கள் குறைந்த பட்சம் நான்காம் அகிலத்தினுள் அரசியல் ஆய்வுகள் மற்றும் முன்நோக்குகள் பற்றி வரலாற்று ரீதியில் புரிந்துகொள்ளப்பட்டுள்ள முறையின்படி, இந்த விடயங்களில் அக்கறை செலுத்தவில்லை. முற்றிலும் எதிரான முறையில்: மார்க்ஸிச அரசியல் ஆய்வுகள் மற்றும் விளக்கவுரைகள் சம்பந்தமாக அனைத்துலகக் குழு அக்கறைசெலுத்துவதையும் கூட ஒரு அடிப்படையான தவறு என நீங்கள் நம்புகிறீர்கள். வரலாற்றுச் சடவாத விதி முறையின் அடிப்படையிலான அத்தகைய ஆய்வுகளும் மற்றும் விளக்கவுரைகளும் சோசலிச நனவின் அபிவிருத்திக்கு அத்தியாவசியமானது அல்லது பொருத்தமானது என்ற கருத்தைக் கூட நீங்கள் கடுமையாக நிராகரிக்கின்றீர்கள். இந்த நிலைப்பாடு உலக சோசலிச வலைத் தளம் தொடர்பான உங்களது கசப்பான பகைமையை கோடிட்டுக் காட்டுகிறது. அனைத்துலகக் குழுவினுள் தவறு என நீங்கள் நம்பும் அனைத்தினதும் பிரதான வெளிப்பாடு உலக சோசலிச வலைத் தளம் தான் என்று நீங்கள் கருதுகிறீர்கள்.

"சகல கருத்துக்கள் மற்றும் குறிக்கோள்களைப் பொறுத்தவரையில் அனைத்துலகக் குழுவானது இயங்காமல் நின்றுவிட்டது" என நீங்கள் எழுதுகிறீர்கள். இந்த முடிவு எதை அடிப்படையாகக் கொண்டுள்ளது? "அனைத்துலகக்குழு தனது சொந்தப் பெயரில் கடைசியாக நடத்திய கூட்டத்தை ஞாபகப்படுத்திக்கொள்வது கூட கடினமாக உள்ளது. இப்போது பல வருடங்களாக இயக்கத்தின் அனைத்து அதிகாரப்பூர்வமான அறிக்கைகளும் உலக சோசலிச வலைத் தள அறிக்கைகளாகவே வெளிவருவதோடு, இப்போது ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒன்றுகூடல்கள் - அது தெளிவாக இயக்கத்தின் சர்வதேச மாநாடு - புரட்சிகரமான கட்சியின் பெயரில் அன்றி வலைத் தளத்தின் ஆசிரியர் குழுவின் பேரில் தான் வெளியிடப்பட்டன,'' என நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள்.

அது மட்டுமல்ல. நீங்கள் பின்வருமாறு கேட்கிறீர்கள்: "அனைத்துலகக் குழுவை உலக சோசலிச வலைத் தளத்திற்குள் (உ.சோ.வ.த.) உருமாற்றியமை எப்போதாவது கட்சி மாநாட்டில் கலந்துரையாடப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டதா?" மற்றும் "அத்தகைய ஒரு முக்கியமான மாற்றத்திற்கான காரணத்தை பொதுவான தொழிலாளர் வர்க்கத்துக்கு தெளிவுபடுத்திய ஆவணம் எங்கே? புரட்சிகர அனைத்துலகவாதத்தின் அமைப்புரீதியான வெளிப்பாட்டை கரைத்து விட்டு மீண்டும் மீண்டும் அனைத்துலகவாதத்தைப் பற்றி முழக்கமிடுவதுடன் சமப்படுத்துவது எப்படி சாத்தியமாகும்?''

உலக சோசலிச வலைத் தளத்தை ஸ்தாபித்ததில் ஏதோ ஒரு நியாயமற்ற மற்றும் சூழ்ச்சி வேலைகள் இருந்தது போன்று நீங்கள் "அனைத்துலகக் குழுவை உலக சோசலிச வலைத் தளத்திற்குள் உருமாற்றியமை" குறித்து பேசுகிறீர்கள். இந்த விஷயத்தில், உங்களது தாக்குதலானது உலக சோசலிச வலைத் தளத்தை ஸ்தாபித்ததையிட்டு ஸ்பாட்டசிஸ்ட் கழகம் காட்டிய பிரதிபலிப்புக்கு நெருக்கமாகவும் சமாந்தரமாகவும் உள்ளது.[2] எவ்வாறாயினும், உ.சோ.வ.த. ஸ்தாபிக்கப்பட்டமை அனைத்துலகக் குழுவின் அரசியல் நிலைப்பாட்டில் ஒரு மாற்றத்துடன் சம்பந்தப்பட்டுள்ளது என நீங்கள் எங்குமே குறிப்பிடவில்லை. உலக சோசலிச வலைத் தளத்தின் பெயர்தளம் திட்டவட்டமாகக் குறிப்பிடுவது போல் அது அனைத்துலக குழுவினாலேயே வெளியிடப்படுகிறது. உலக சோசலிச வலைத் தளத்துடன் நா.அ.அ.கு. விற்கு உள்ள அரசியல் தொடர்பு பற்றி உங்களுக்கு சந்தேகம் இருந்தாலும், அதன் ஆயிரக்கணக்கான அன்றாட வாசகர்களுக்கு அது இரகசியமானதல்ல. எல்லாவற்றிற்கும் மேலாக, மார்க்ஸினுடைய நொய ரெயினிஷ ஜைட்டுங் (Neue Rheinische Zeitung) என்ற பத்திரிகை வெளிவந்த நாட்களில் இருந்தே புரட்சிகர மற்றும் வேலைத் திட்ட அடையாளமானது அதனுடைய வெளியீட்டுடன் ஒரே கருத்தைக் கொண்டதாக இருந்து வந்துள்ளது. நாம் புரட்சிகர ஜேர்மன் சமூக ஜனநாயகக் கட்சியின் நொய ஜைட், இஸ்க்ரா, விபர்யோத் மற்றும் பிராவ்டா , சோவியத் ஒன்றியத்தில் ஸ்டாலின் விரோத எதிர்ப்பு இயக்கத்தின் புல்லடீன், 1920கள் மற்றும் 1930 களில் அமெரிக்காவில் இருந்த ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் வெளியிடப்பட்ட த மிலிடன்ட் மற்றும் த சோசலிஸ்ட் அப்பீல், பிரித்தானிய லேபர் கட்சிக்குள் வேலைசெய்த பிரித்தானிய ட்ரொட்ஸ்கிஸ்டுகளால் வெளியிடப்பட்ட த நியூஸ் லெட்டர், மற்றும் தொழிலாளர் கழகத்தின் புல்லட்டீனையும் கூட இந்தப் பட்டியலில் சேர்க்கலாம். உலக சோசலிச வலைத் தளத்தை ஆயிரக்கணக்கான வாசகர்கள் சோசலிச அனைத்துலகவாதத்தின் உண்மையான குரலாக காண்கின்றனர் என்ற உண்மையையிட்டு நாம் குழப்பமடைய எந்தவொரு காரணமும் கிடையாது.

உ.சோ.வ.த. ஏதோ ஒரு வழியில் நா.அ.அ.கு. விற்குத் தெரியாமல் ஸ்தாபிக்கப்பட்டது என்ற உங்களது கருத்து, முற்றிலும் முட்டாள்தனமாகும். ஆம், உலக சோசலிச வலைத் தளம் ஸ்தாபிக்கப்படும் போது பகிரங்க அறிக்கையொன்று வெளியிடப்பட்டது. நீங்கள் விரும்பினால் அதை வாசிக்கலாம்.[3] மற்றும், உண்மையில் உ.சோ.வ.த. ஸ்தாபிதமானது நா.அ.அ.கு. வின் ஒவ்வொரு பகுதிகளிலும் பெரும்பாலும் ஒரு ஆண்டு முழுவதும் உக்கிரமாக விரிவடைந்த கலந்துரையாடலின் மூலமே முன்னெடுக்கப்பட்டது என்பதை நீங்கள் கேட்டதற்காக சொல்லவேண்டியுள்ளது. இல்லையேல், கடந்த எட்டரை ஆண்டுகளாக அன்றாட உ.சோ.வ.த. வெளியீடுகளை தளராது நீடிக்கச் செய்யும் காரியாளர்களின் உயர்ந்தளவிலான செயற்திறம் கொண்ட ஆதரவையும் பங்களிப்பையும் அணிதிரட்டுவது எப்படி சாத்தியமாகும்? 1998 பெப்பிரவரியில் உ.சோ.வ.த. நிறுவப்பட்டதில் இருந்து, கொள்கை, வரலாறு, தத்துவார்த்தரீதியான பார்வை மற்றும் அனைத்துலகக் குழுவின் முன்நோக்கின் அடிப்படையில் திரட்டப்பட்ட மார்க்ஸிய எழுத்தாளர்களின், தொடர்ந்தும் விரிவடைந்துவரும் காரியாளர்களின் கூட்டுழைப்பை நிர்வகிக்கும் ஒரு சர்வதேச ஆசிரியர் குழுவினால் 18,000ற்கும் மேற்பட்ட கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன. தத்துவார்த்த மற்றும் நடைமுறை ஆகிய இரண்டிலும், புரட்சிகரமான அனைத்துலகவாதத்தின் அபிவிருத்தியில் உ.சோ.வ.த. ஒரு வரலாற்று மைல் கல்லைப் பிரதிநிதித்துவம் செய்கின்றது. நா.அ.அ.கு ஆங்கிலம், பிரெஞ்சு, ஜேர்மன், இத்தாலி, ஸ்பெயின், போர்த்துக்கல், ரஷ்யா, போலிஷ், சேர்போ குரோஷியன், துருக்கி, சிங்களம், தமிழ் மற்றும் இந்தோனேஷிய ஆகிய 13 மொழிகளில் கருத்துரைகளை வழங்கும் ஒரு வலைத் தளத்தின் அன்றாட வெளியீட்டை நிர்வகிக்கின்ற ஒரு காலகட்டத்தில், "புரட்சிகர அனைத்துலகவாதத்தின் அமைப்பு ரீதியான வெளிப்பாட்டை கரைப்பது பற்றிப்" பேசுவது உங்களது குழுவாத குருட்டுத்தனத்தின் ஒரு வெளிப்பாடாகும். இது உங்கள் மனதில் அனைத்துலகக் குழுவின் "சகல நோக்கங்களும் மற்றும் குறிக்கோள்களும்" முடிவுக்கு வந்துவிட்டது என்ற எண்ணத்தை பிரதிநிதித்துவம் செய்தால், உண்மையான அனைத்துலக நடவடிக்கை என நீங்கள் எதை நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதையிட்டு ஒருவர் ஆச்சரியப்பட முடியும். மூன்று தசாப்தங்களுக்கு முன்னதாக, நீங்கள் இயக்கத்தின் உறுப்பினர்களாக இருந்த போது, நா.அ.அ.கு. வின் உள்கட்சி வாழ்க்கையானது, அதன் உறுப்பாக இணைந்திருந்த அல்லது ஆதரவாக இருந்த பகுதிகளின் பிரதிநிதிகள் லண்டனில் உள்ள தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (தொ.பு.க.) அலுவலகத்திற்கு அவ்வப்போது வந்துபோவதை விட மேலதிகமாக எதையும் கொண்டிருக்கவில்லை. நா.அ.அ.கு. வின் பெயரளவிலான செயலாளரான கிளிவ்ஃ ஸ்லோடர், அனைத்துலக காரியாளர்களுடன் முறையான தொடர்புகளைக் கொண்டிருக்கவில்லை. கூட்டுழைப்பு ஒரு புறம் இருக்க, அனைத்துலகக் குழுவின் முன்நோக்கு பற்றிய முறையான கலந்துரையாடல்கள் இருக்கவில்லை. அனைத்துலகவாதம் பற்றிய உங்களது கருத்து, ஹீலியின் அமைப்பின் தீவிரமான சீரழிவு சகாப்தத்தில் உருவமைக்கப்பட்ட வரையில், உங்கள் இருவரில் ஒருவருக்கேனும், ஒரு இயக்கத்தின் அன்றாட அரசியல் நடவடிக்கைகள் மிக மிக அதிகமான அனைத்துலக கூட்டுழைப்பை ஏற்படுத்துகிறது என்பதை கருதிக்கூட பார்க்க முடியாதுள்ளது.

3. சர்வதேச ஆசிரியர் குழுவும் நா.அ.அ.கு. வின் முன்நோக்குகளும்

கடந்த ஆண்டில், இரு பிரதான தத்துவார்த்த மற்றும் அரசியல் நிகழ்ச்சிச் திட்டத்தை அனைத்துலகக் குழு ஏற்பாடு செய்திருந்தது: முதலாவது 2005, ஆகஸ்ட் 14 முதல் 20ம் திகதி வரை மிச்சிகன் ஆன் ஆபரில், "மார்க்ஸிசமும் அக்டோபர் புரட்சியும் நான்காம் அகிலத்தின் வரலாற்று அடித்தளங்களும்" [Marxism, the October Revolution and the Historical Foundations of the Fourth International] என்ற தலைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒன்பது தொடர் விரிவுரைகளாகும். இரண்டாவது, 2006 ஜனவரி 22 முதல் 27ம் திகதி வரை ஆஸ்திரேலியா, சிட்னியில் நடந்த உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழு கூட்டமாகும். இந்த நிகழ்வுகளுக்கான உங்களது பிரதிபலிப்புகள், நீங்கள் மார்க்ஸிசத்தைக் கைவிட்டுள்ளதையும் மற்றும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அரசியல் பார்வை மற்றும் பாரம்பரியங்கள் மீதான உங்களது விரோதப்போக்கையும் அழிவுகரமான முறையில் சுய-அம்பலப்படுத்தல் செய்வதாகும்.

இந்தக் கூட்டங்களில் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் மற்றும் விரிவுரைகள் மீதான உங்களது கோபாவேசமான பிரதிபலிப்புகள் சம்பந்தமாக நாங்கள் வியப்படையவில்லை. உங்களது ஆவணங்களுக்கு நா.அ.அ.கு. பதிலளிக்கத் தவறியதாக நீங்கள் தெரிவிக்கும் குற்றச்சாட்டு சம்பந்தமாக நீங்கள் உத்தியோகபூர்வமாக "கண்டனம்" தெரிவித்திருந்த போதிலும், இந்த விரிவுரைகளில் அபிவிருத்தி செய்யப்பட்ட தத்துவார்த்த கருத்துக்களும் முன்நோக்கும், வில்ஹெம் ரீச், ஏர்ன்ஸ்ட் புலொச் மற்றும் ஹேர்பர்ட் மர்கியுஸ் ஆகியோரின் நோக்குநிலையற்ற மார்க்ஸிய விரோத போலி-கற்பனாவாதத்தை நான்காம் அகிலத்திற்குள் ஊடுருவச் செய்வதற்கான -அதாவது ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் கோட்பாட்டு வேலைத்திட்ட அடித்தளங்களையும் மற்றும் வர்க்க நோக்குநிலையையும் அடிப்படையில் மாற்றுவதற்காக- உங்களது பிரச்சாரத்தை ஐயத்திற்கிடமின்றி தள்ளுபடி செய்வதை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன என்பதை நீங்கள் தெளிவாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். "இந்த ஒன்றுகூடல்களில் வெளியிடப்பட்ட விரிவுரைகள் மற்றும் அறிக்கைகளின் சாரம், விமர்சன ரீதியான விவாதத்திற்கு எந்தவொரு புதிய திறவுகோள்களையும் பிரேரிக்கவில்லை" என நீங்கள் எழுதும் போது மறைமுகமாய்க் குறிப்பிடுவது இதையேயாகும்.

நீங்கள் ஆசிரியர் குழு அறிக்கைகளைப் பற்றி, "முன்நோக்கு ஆவணங்களின் ஒரு போலித்தோற்றமாகத்தான் அதிகமாக உள்ளதே தவிர உண்மையானதாக அல்ல: அவை மார்க்ஸிச நிறம்பூசப்பட்ட வெளிநாட்டு விவகார அறிக்கைகளே தவிர, புரட்சிகர நடைமுறைக்கான கையேடு அல்ல. அவை உண்மையில் ஆசிரியர் குழு அறிக்கைகளே -- அதாவது மிகவும் அதிகமான ஊடகவியலுக்கான முன்நோக்காகும். என்ன செய்ய வேண்டும் என்ற பிரச்சினை, புரட்சிக் கட்சியை கட்டியெழுப்புவதன் தேவையைப் பற்றிய சமயச் சடங்கான அறிக்கையாக கடைசியில் சேர்ப்பதற்கும் மேலாக, அவற்றுக்குள் எந்தவிதத்திலும் நுழைந்திருக்கவில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், இந்த அறிக்கைகளில் புரட்சிகர முன்நோக்கின் சாரம் தவறவிடப்பட்டுள்ளது. ஆனால் இதைத்தான், அனைத்துலகக் குழு கலந்துரையாட மறுக்கிறது," என விவரிக்கின்றீர்கள்.

ஆசிரியர் குழு கூட்டத்தில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் பற்றி நீங்கள் கூறவிருந்ததின் மொத்தமும் இதுதான். உண்மையில் அங்கு முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் பற்றி எந்தவொரு திறனாய்வும் உங்களிடம் கிடையாது. 1953ல் அனைத்துலகக் குழு ஸ்தாபிக்கப்பட்டதில் இருந்து நடந்த ஒன்றுகூடல்களில் முன்வைக்கப்பட்ட அறிக்கைகளில், உலக அரசியல் நிலைமைகள் பற்றிய மிகப் பெரும் உள்ளடக்கத்தைக் கொண்ட ஆய்வை கூட்டாகப் பிரதிநிதித்துவம் செய்யும் இந்த அறிக்கைகளின் உள்ளடக்கம் பற்றிய உங்களது அலட்சியமானது, உங்களது சொந்த அரசியல் பார்வை மற்றும் வர்க்க நிலைப்பாடு பற்றி புரிந்துகொள்வதற்கு திறவுகோலை வழங்குகிறது.

நீங்கள் "முன்நோக்கு ஆவணத்தின் ஒரு போலித்தோற்றம்..." என வெறுப்புணர்ச்சியுடன் விலக்கிவைக்கும் சர்வதேச ஆசிரியர் குழு கூட்டத்தின் உள்ளடக்கத்தை மீளாய்வு செய்து பார்ப்போம். நீங்கள் நிராகரிப்பது என்னவென்றால், உலக அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளை உள்ளடக்கிய முழுமைபெற்ற ஆய்வின் அடிப்படையில், சோசலிசப் புரட்சிக்கான வாய்ப்புகளின் புறநிலை அடித்தளத்தை ஸ்தாபிப்பதற்கான அனைத்துலகக் குழுவின் முயற்சிகளையே ஆகும். உலகப் புரட்சிகர முன்நோக்கை அபிவிருத்தி செய்வதற்காக சர்வதேச ஆசிரியர் குழு எடுத்துக்கொண்டுள்ள அணுகுமுறையை, எனது ஆரம்ப அறிக்கையில் இருந்து ஒரு நீண்ட மேற்கோளை முன்வைப்பதன் மூலம் சிறப்பாக தெளிவுபடுத்த முடியும்.

அரசியல் முன்கணிப்பு பற்றிய எந்தவொரு தீவிர முயற்சியும் மற்றும் நிலவும் அரசியல் நிலைமைக்குள் காணப்படும் சாத்தியப்பாடுகள் பற்றிய மதிப்பீடும் உலக முதலாளித்துவ அமைப்பின் வரலாற்று வளர்ச்சி பற்றிய துல்லியமான மற்றும் தெளிவான புரிதலிலிருந்து கட்டாயம் தோன்றவேண்டும்.

முதலாளித்துவத்தின் வரலாற்று வளர்ச்சி பற்றிய பகுப்பாய்வு கீழ்க்காணும் இன்றியமையாத வினாவிற்கு விடையிறுக்க வேண்டும்: முதலாளித்துவம் ஓர் உலகப் பொருளாதார அமைப்புமுறை என்ற வகையில், மேல்நோக்கிய வளைவரை பாதையில் நகர்ந்து சென்று அதன் மிக உயர்நிலையை எட்டிக் கொண்டிருக்கிறதா அல்லது வீழ்ந்து கொண்டிருக்கிறதா அல்லது பெரும் பாதாளத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறதா?

இந்த வினாவிற்கு நாம் அளிக்கும் விடை, தவிர்க்க முடியாமல் நம்முடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நடைமுறை பணிகளுக்கு மட்டும் அல்லாமல் நம்முடைய இயக்கத்தின் முழு கோட்பாட்டு மற்றும் வேலைத்திட்ட நோக்குநிலைக்கும் தொலைநோக்கான விளைபயன்களைக் கொண்டிருக்கும். உலக முதலாளித்துவ அமைப்பின் வரலாற்று நிலைமை பற்றிய எமது பகுப்பாய்வு சமூகப் புரட்சிக்கான அகநிலை விருப்பத்தால் உறுதி செய்யப்படவில்லை. மாறாக, புரட்சிகர முன்னோக்கு என்பது சமூகப் பொருளாதார வளர்ச்சியின் புறநிலை போக்குகளை பற்றிய விஞ்ஞானபூர்வ ஆதாரங்களுடனான மதிப்பீட்டில் கட்டாயம் வேரூன்றியிருக்க வேண்டும். தேவையான புறநிலை சமூகப் பொருளாதார முன்நிபந்தனைகளால் ஆளுமை செலுத்தப்படாத நிலையில் ஒரு புரட்சிகர முன்னோக்கு வெறும் கற்பனை கோட்டையாகிவிடும்.

அப்படியானால், முதலாளித்துவ வரலாற்று வளர்ச்சியின் தற்போதைய கட்டத்தை நாம் எங்ஙனம் அறிந்து கொள்ள இயலும்? சமரசத்திற்குட்படாமல் எதிர்க்கும் இரு கருத்துருக்களை ஆராய்வோம். நாம் அறிந்துள்ளவாறு, மார்க்சிச நிலைப்பாட்டின்படி, உலக முதலாளித்துவ அமைப்பு ஒரு நெருக்கடியின் முன்னேறிய கட்டத்தில் உள்ளது -- உண்மையில் 1914ல் உலகப் போர் வெடிப்பு 1917ல் ரஷ்ய புரட்சியால் பின் தொடரப்பட்டதானது உலக வரலாற்றில் ஒரு அடிப்படை திருப்புமுனையை பிரதிநிதித்துவம் செய்தது. முதலாம் உலகப் போர் தொடங்கி 1945ல் இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த காலத்திற்கும் இடையேயான மூன்று தசாப்தங்களுக்கும் மேலான காலத்தின் அதிரவைக்கும் நிகழ்வுகள், முதலாளித்துவம் தன்னுடைய முற்போக்கான வரலாற்றுப் பணி முடிவுக்கு வந்திருந்த பின்னரும் உயிர்பிழைத்துள்ளது என்பதையும் உலகப் பொருளாதாரம், சோசலிச மாற்றத்தை காண்பதற்கான புறநிலை முன்நிபந்தனைகள் தோன்றியுள்ளன என்பதையும் நிரூபித்தது. அந்த தசாப்தங்களின் நெருக்கடிகளில் இருந்து முதலாளித்துவ அமைப்பு தப்பிப் பிழைத்ததற்கு தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன கட்சிகள் மற்றும் அமைப்புக்களின் தோல்வியும் அவற்றின் தலைமைகளின் காட்டிக் கொடுப்புகளுமே ஓரளவேனும் பெரும் காரணங்களாக இருந்தன. எல்லாவற்றுக்கும் மேலாக சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் கொண்டிருந்த பங்கினால்தான். அவர்கள் காட்டிக் கொடுக்கவில்லை என்றால், இரண்டாம் உலகப்போருக்குப் பின் அமெரிக்காவின் வளங்களை கணிசமாகப் பெற்று உலக முதலாளித்துவ அமைப்பு மீண்டும் ஸ்திரமடைந்திருக்க முடியாது. உண்மையில் போருக்குப் பிந்தைய காலத்தில் உறுதித்தன்மை இருந்தபோதிலும்கூட, பழைய காலனித்துவ பிராந்தியங்களில் முதலாளித்துவத்திற்கும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியும் உலகந்தழுவிய எதிர்ப்பும் தொடர்ந்திருந்தன. ஆனால், அவற்றின் புரட்சிகர சாத்தியப்பாடுகள் பழைய அதிகாரத்துவ அமைப்புக்களால் நசுக்கப்பட்டிருந்தது.

இறுதியாக 1960களிலும் 1970களிலும் பெரும் வெகுஜனப் போராட்டங்கள் காட்டிக் கொடுக்கப்பட்டமையும் தோல்விக்கு இட்டுச்செல்லப்பட்டமையும் முதலாளித்துவ எதிர்த்தாக்குதலுக்கு பாதையை வகுத்துக் கொடுத்தன. பொருளாதார வழிவகைகளும் தொழில்நுட்ப மாற்றங்களும் முன்னொருபோதும் இல்லாத அளவிற்கு முதலாளித்துவ அமைப்பின் உலகந்தழுவிய ஒருங்கிணைப்புக்கான சாத்தியத்தை ஏற்படுத்தியதோடு, தேசிய முன்னோக்குகள் மற்றும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டிருந்த பழைய தொழிலாள வர்க்க அமைப்புக்களையும் சிதறடித்தது. சோவியத் ஒன்றியத்திலும் கிழக்கு ஐரோப்பாவிலும் தேசியவாத போலி சோசலிச, மார்க்சிச-விரோத வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த ஸ்டாலினிச ஆட்சிகளின் பொறிவு இந்த நிகழ்வுப்போக்கினை விளைவுகளாக்கின.

1990களில் முதலாளித்துவத்தின் விரைந்த எல்லைப்புற விரிவாக்கம் இருந்தபோதிலும் கூட, அதன் வரலாற்று நெருக்கடி தொடர்ந்ததுடன், ஆழமடைந்தும் வந்தது. பழைய தொழிலாளர் இயக்கங்களுக்கு மரண அடியை கொடுத்த பூகோளமயமாக்கல் நிகழ்வுப்போக்கு, ஒரு உலகப் பொருளாதார அமைப்பு என்ற வகையில் முதலாளித்துவத்தின் பூகோளரீதியான ஒருங்கிணைக்கப்பட்ட தன்மைக்கும் முதலாளித்துவம் வரலாற்று ரீதியாக வேரூன்றியுள்ள தேசிய அரசு கட்டமைப்புக்கும் இடையிலான முரண்பாட்டை முன்னெப்போதுமில்லாத அளவிற்கு பதட்டமடையச் செய்ததுடன் அதிலிருந்து அது தப்பிக்கவும் முடியாமலும் போனது. அடிப்படையிலேயே தீர்க்கமுடியாத இந்த முரண்பாட்டின் தன்மையானது -அல்லது குறைந்தபட்சம் எந்தவொரு முற்போக்கான அடிப்படையிலும் "தீர்வு காணமுடியாத தன்மையானது"- தற்போதைய உலக நிலைமையை பண்புமயப்படுத்தும் பெருகிவரும் ஒழுங்கின்மை, வன்முறை ஆகியவற்றில் நாள்தோறும் வெளிப்பாட்டை காண்கிறது. ஒரு புதிய புரட்சிகர எழுச்சிக் காலம் தொடங்கிவிட்டது. அதுதான் சுருக்கமான மார்க்சிச பகுப்பாய்வாகும்.

இதற்கான மாற்றீடான முன்னோக்கு என்ன? கீழே உள்ள எதிர் கருத்தாய்வை கவனிப்போம்:

மார்க்ஸிசவாதிகள் "முதலாளித்துவத்தின் மரண ஓலம்" என்று லியோன் ட்ரொட்ஸ்கி பயன்படுத்திய வனப்புடைய சொற்றொடரில் கூறிய நிலைமையானது முதலாளித்துவத்தின் வன்முறை மிகுந்த, நீடித்த பிரசவ வலியாகவே இருந்தது. இருபதாம் நூற்றாண்டின் பல சோசலிச மற்றும் புரட்சிகர பரிசோதனைகள் பெரிதும் பக்குவமடையாதவை என்பது மட்டுமல்லாமல் அடிப்படையில் கற்பனாவாதமாகவும் போயின. இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றை பொருளாதார ஒழுங்குபடுத்தலின் உயர்ந்த அமைப்பு முறையாக, சந்தையின் ஈவிரக்கமற்ற வெற்றிக்கு அனைத்து தடைகளையும் தகர்த்து கடந்துவந்த முதலாளித்துவத்தின் கதையாகவே வாசிக்க வேண்டியுள்ளது. சோவியத் யூனியனின் சரிவும், சீனா சந்தை பொருளாதார முறைக்கு திரும்பியதும், இந்த வழிவகையின் உச்சநிலையையே பிரதிநிதித்துவம் செய்தன. இந்த தசாப்தமும் அனேகமாக இதைத் தொடரும் தசாப்தமும் ஆசியா முழுவதும் முதலாளித்துவத்தின் விரைந்த விரிவாக்கத்தை காண்பது நிகழ்வதற்கான சாத்தியக்கூறு உள்ளது. இந்த நிகழ்வுப்போக்கின் மிக முக்கியமான கூறாக சீனாவும் இந்தியாவும் பக்குவம் அடைந்த மற்றும் உறுதியான உலக முதலாளித்துவ சக்திகளாக வெளிப்படக்கூடும் என்பதாகும்.

மேலும், முன்வைக்கப்படும் இந்த கருத்து சரியென்றால், W.W. ரொஸ்ட்டொவ்வின் எடுத்துக்காட்டின் படி, முதலாளித்துவம் அடுத்த 20 ஆண்டுகளுக்குள் ஆபிரிக்காவிலும், மத்திய கிழக்கிலும் அதன் 'மேலெழும்பும்' கட்டத்தை அடையும். நைஜீரியா, அங்கோலா, தெற்கு ஆபிரிக்கா, எகிப்து, மொரோக்கோ மற்றும் அல்ஜீரியா (இன்னும்/அல்லது மற்ற நாடுகளும்) மிகப் பெரிய வெடிப்புத் தன்மையுடைய பொருளாதார வளர்ச்சியை பெறும். மேலும் சொல்லப்போனால் அடுத்த அரை நூற்றாண்டில், 2047ல் கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெடெரிக் ஏங்கெல்ஸ் வெளியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை 200வது ஆண்டு நிறைவு காணப்போகும் காலத்திற்குள் (இப்பொழுதில் இருந்து 41 ஆண்டுகள்தான் உள்ளன), உலக முதலாளித்துவத்தின் உலகந்தழுவிய வெற்றி முழுமை அடைந்து பாதுகாப்பாக இருப்பதாக தோன்றும்.

இந்தக் கற்பனைக் கருத்து உலகின் சமகால நிகழ்வுப்போக்கைப் புரிந்துகொள்ள உண்மையான அடிப்படையை பிரதிபலிக்கிறதா? அவ்வாறு பிரதிபலிக்குமானால் மார்க்சிச புரட்சிகர முன்னோக்கில் எஞ்சுவது சொற்பமே ஆகும். தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகள் பற்றிய எமது அக்கறையை கைவிடும் கட்டாயத்திற்கு நாம் தள்ளப்படமாட்டோம். உண்மையில், நாம் அக்கறை செலுத்தவேண்டிய நிலைமைகளில் எந்தக் குறைவும் இருக்காது. உலகின் மிக வறிய, சுரண்டப்படும் மக்களின் நிலைமையை உயர்த்துவதற்கு குறைந்தபட்ச கோரிக்கைகள் அடங்கிய ஒரு வேலைத் திட்டத்தை சூத்திரப்படுத்த முயற்சிக்க வேண்டும். ஆயினும், ஓரளவிற்கு இது சமூக சேவையை நடைமுறைப்படுத்துவது போல் இருக்கும். முந்தைய மார்க்சிசவாதிகளை பொறுத்தவரை - குறைந்தது வரலாற்றில் காணக்கூடிய வருங்காலம் வரையிலாவது - ஒரு புரட்சிகர செயல்திட்டத்தின் கற்பனாவாத தன்மையை ஏற்றுக்கொள்ள கடமைப்பட்டிருப்பார்கள். மற்றும் தங்களுடைய கடந்த காலம் பற்றிய விளக்கத்தை கணிசமான அளவு அவர்கள் திருத்திக் கொள்ளும் கட்டாயமும் ஏற்படும்.

ஆனால் பூகோள ரீதியாக வெற்றி பெற்றுவிட்ட முதலாளித்துவம் என்ற இந்த கருத்தாய்வு யதார்த்தமானதா? அனைத்து முந்தைய வரலாற்று அனுபவத்தில் காணும்போது, நிலவும் உலக ஒழுங்கின் இருப்புக்கே அச்சுறுத்தல் விடுக்கின்ற பொருளாதார மற்றும் அரசியல் தொடுவானத்தில் ஏற்கனவே காணக்கூடிய வெடிப்புத் தன்மையுடைய பல பிரச்சினைகளையும் தீர்த்துவிட அல்லது குறைத்துவிட உலக முதலாளித்துவ அமைப்பை அனுமதிக்கும் ஒரு தொகை நிலைமைகளை கற்பனைசெய்து பார்ப்பது பொருத்தமானதாக இருக்குமா?

ஏகாதிபத்திய அமைப்புமுறை வடிவமைப்பிற்குள் உள்ள பெரிய உலக சக்திகளுக்கு இடையே காணப்படும் புவிசார்-அரசியல் மற்றும் பொருளாதார பூசல்கள் சர்வதேச அரசியலை சீர்குலைத்து விடுவதற்கு முன், பேச்சுவார்த்தைகள் மூலம், பன்முக உடன்பாடுகள் மூலம், இப்பிரச்சினைகள் சமாதான முறையில் தீர்வு காணப்பட்டுவிடும் என்று நாம் கருதுகிறோமா?

'பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாத குறிப்பாக எண்ணெய், எரிவாயு மட்டுமன்றி ஏனைய மூலப்பொருட்களை அடைவதும், அவற்றை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதும் வன்முறை பூசல்களுக்கு இடமளிக்காமல் தீர்க்கப்பட்டுவிடும் என்று நம்புவதற்கு இடமுள்ளதா?

சீனாவிற்கும் ஜப்பானுக்கும் அல்லது சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஆசியாவில் மேலாதிக்கத்திற்காக நடைபெறுவது போன்ற பிராந்திய செல்வாக்கை அடைவதற்கான எண்ணற்ற போராட்டங்கள் மோதலுக்கு இடமளிக்காமல் தீர்க்கப்பட்டுவிடுமா?

அமெரிக்காவால் உலகப் பொருளாதாரத்தை அடிப்படையில் சீர்குலைக்காமல், தனது செலாவணி கணக்குப் பற்றாகுறையை ட்ரில்லியன் டாலர்கள் அளவுக்கு தொடர்ந்து பெருக்கிக் கொண்டே காலம் தள்ளிவிட முடியுமா? அமெரிக்காவில் பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் அதில் இருந்து வெளிப்படும் நிதிக் கொந்தளிப்பின் தாக்கத்தை உலகப் பொருளாதாரத்தால் அதிக சிரமமின்றி உறிஞ்சிக் கொண்டுவிட முடியுமா?

தன்னுடைய உலக மேலாதிக்க அபிலாஷைகளில் இருந்து பின் வாங்கிக் கொண்டு, உலக நாடுகளிடையே சமத்துவமுறையில் பூகோள அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள அமெரிக்கா முன்வருமா? சமரசம், சலுகைகள் அடிப்படையில் ஐரோப்பாவிலோ அல்லது ஆசியாவிலோ பொருளாதார, இராணுவ வகையில் போட்டியிடக்கூடிய நாடுகளுக்கு உரிய இடத்தை அது அளிக்குமா?

சீனாவின் எழுச்சி பெற்று வரும் செல்வாக்கை அமெரிக்கா சமாதானத்துடனும், கருணையுடனும் ஏற்குமா?

சமூக அடிப்படையில் எடுத்துக்கொண்டால் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவில் அதிர்ச்சி தரக்கூடிய வகையில் பெருகியுள்ள சமூக சமத்துவமின்மை குறிப்பிடத்தக்க, வன்முறைமிக்க சமூகப் பூசல்களை உற்பத்தி செய்யாமல் தொடருமா? அமெரிக்கத் தொழிலாள வர்க்கம் ஆண்டுக்கணக்கிலும் தசாப்தங்களிலும் அதன் வாழ்க்கைத் தரங்கள் பெரும் சரிவிற்குட்பட்டுள்ளதை கடுமையான, கசப்பான எதிர்ப்பைக் காட்டாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளும் என்ற கருத்தை அமெரிக்க அரசியல் மற்றும் சமூக வரலாறு ஆதரிக்கிறதா?

உலக முதலாளித்துவம் ஒரு புதிய விரிவாக்கமும் ஸ்திரத்தன்மையும் கொண்ட ஒரு பொற்காலத்திற்குள் நுழைந்துள்ளது என்று முடிவாகக் கூறுவதற்கு முன் இத்தகைய கேள்விகளுக்கு தக்க விடை காணப்பட்டாக வேண்டும்.

மேற்கூறிய வினாக்கள் அனைத்திற்கும் "ஆம்" என்று விடையிறுப்பவர்கள் வரலாற்றின் படிப்பினைகளுக்கு எதிராக பந்தயம் கட்டுபவர்களாகும்.

வரும் வாரத்தில் இப்பிரச்சினைகள் பற்றி நன்கு ஆராயப்படும்.

முடிவில், சர்வதேச ஆசிரியர் குழுவை வழி நடத்தும் திறனாய்வு வழிமுறைகளை நான் சுருக்கமாக விளக்கினேன்:

இந்த வாரம் நாம் எம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டிய முக்கியமான இலக்கு உலக முதலாளித்துவ அமைப்பின் விரைவாக வளர்ந்து வரும் நெருக்கடியின் முக்கிய கூறுபாடுகளை கோடிட்டுக் காட்டலாகும்.

1914 இல் லெனின் எழுதியதாவது: "முழுமை ஒன்றைப் பிரித்து, அதன் முரண்பட்ட கூறுகளை புரிந்துணர்ந்துகொள்வது... இயங்கியலின் ('இன்றியமையாத கூறுகளில்' ஒன்று, பிரதான இயல்புகளில் ஒன்றாக இல்லாவிடிலும் இயல்புகளில் அல்லது தனிச்சிறப்புகளில் ஒன்று) முக்கிய கூறு ஆகும்."

இத்தகைய தத்துவார்த்த அணுகுமுறையின்படி, நாம் கேட்க இருக்கும் அறிக்கைகள் நிலைமையையும் உலக நெருக்கடியின் வளர்ச்சிக் கூறுபாடுகளையும் பல பக்கங்களில் இருந்தும் ஆராயும்.

என்னுடைய ஆரம்ப அறிக்கையை அடுத்து பின்வரும் விரிவுரைகள் இடம்பெற்றன:

1. உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் நிலைமை பற்றிய நிக் பீம்ஸின் அறிக்கை, தற்போதைய ஒன்றிணைந்த நெருக்கடி நிலைமையை 20ம் நூற்றாண்டு பூராவும் பூகோள பொருளாதார அமைப்பில் அமெரிக்கா இட்டு நிரப்பிய தீர்க்கமான மற்றும் சிக்கலான உள்ளடக்கத்தில் இருத்தியது.

2. "ஈராக்கிற்கு எதிரான அமெரிக்கத் தலைமையிலான யுத்தத்தின் விளைவுகள்" என்ற தலைப்பிலான ஜேம்ஸ் கோஹனின் திறனாய்வு.

3. "புஷ் நிர்வாகமும் அமெரிக்க முதலாளித்துவத்தின் பூகோள வீழ்ச்சியும்" என்ற தலைப்பில் பரி கிறே முன்வைத்த அறிக்கை.

4. "அமெரிக்காவின் சமூக மற்றும் அரசியல் நெருக்கடியும் 2006 சோ.ச.க. தேர்தல் பிரச்சாரமும்," என்ற தலைப்பிலான பற்றிக் மாட்டினின் ஆய்வு.

5. "உலக சோசலிசத்திற்கான சீனாவின் அறிகுறிகள்" பற்றிய ஜோன் சானின் ஆய்வு.

6. "ஐரோப்பிய முதலாளித்துவத்தின் மரண முடிவும் தொழிலாளர் வர்க்கத்தின் பணிகளும்" என்ற தலைப்பில் உல்ரிச் ரிப்பர்ட் முன்வைத்த அறிக்கை.

7. "புதிய தொழிற்கட்சியும் பிரித்தானியாவில் ஜனநாயகத்தின் வீழ்ச்சியும்" என்ற தலைப்பில் ஜூலி ஹைலண்ட் முன்வைத்த அறிக்கை.

8. "லத்தீன் அமெரிக்க முன்நோக்குகள்" பற்றி பில் வான் ஓகன் வெளியிட்ட அறிக்கை.

9. "சமகால நிலைமையில் கலைத்துவ மற்றும் காலாச்சர பிரச்சினைகள்" என்ற தலைப்பில் டேவிட் வோல்ஷ் முன்வைத்த மதிப்பீடு.

10. "ஜனநயாக உரிமைகளும் அரசியல்யாப்புவாதத்தின் மீதான தாக்குதலும்" என்ற தலைப்பில் ரிச்சர்ட் ஹொஃவ்மன் முன்வைத்த திறனாய்வு.

11. "தெற்காசியாவும் முதலாளித்துவ தேசியவாதத்தின், ஸ்டாலினிசத்தின் அரசியல் திவாலும் " என்ற தலைப்பில் விஜே டயஸ் முன்வைத்த அறிக்கை.

12. "ஆபிரிக்காவும் அனைத்துலக சோசலிச முன்நோக்கும்" என்ற தலைப்பில் ரிச்சர்ட் டெயிலிர் முன்வைத்த ஆய்வு.

13. "சியோனிச திட்டத்தால் முன்வைக்கப்பட்டுள்ள பொருளாதார, சமூக மற்றும் அரசியல் பேரழிவு" என்ற தலைப்பில் ஜீன் ஷோல் முன்வைத்த திறனாய்வு.

சர்வதேச ஆசிரியர் குழுவில் முன்வைக்கப்பட்ட அறிக்கைகள் பற்றி கூறுவதற்கு உங்களிடம் ஒன்றும் கிடையாது. நான் சர்வதேச ஆசிரியர் குழு (ச.ஆ.கு.) மாநாட்டின் ஆரம்பத்தில் எழுப்பிய கேள்விக்கு நீங்கள் எந்த பதிலையும் வழங்கவில்லை. அந்த அறிக்கைகளில் முன்வைக்கப்பட்ட திறனாய்வுகளுடன் நீங்கள் உடன்படுகிறீர்களா அல்லது உடன்படவில்லையா என்பதை நீங்கள் தெரிவிக்கவில்லை. தோழர் நிக் பீம்ஸ், உலக அமைப்பிற்குள் நிலவும் சமத்துவமின்மையை பற்றியும் மற்றும் இந்த சமத்துவமின்மையானது ஏகாதிபத்திய உள் உறவுகள் மற்றும் அனைத்துலக வர்க்கப் போராட்டத்துடன் நீண்ட விளைவுகளுடன் தொடர்புபட்டுள்ளது, என்ற விசேடமான வலியுறுத்தல்களில் உலக முதலாளித்துவ பொருளாதார நிலைமையை இருத்துவதன் மூலம் பரந்த ஆய்வு ஒன்றை வழங்கினார். இந்த ஆய்வுகள் நா.அ.அ.கு. வின் முன்நோக்கிற்கு தீர்க்கமான அடித்தளத்தை வழங்குகின்றன. இந்த அறிக்கை பற்றி நீங்கள் அமைதியாக இருப்பதன் காரணம் என்ன? தோழர் கோகனின் அறிக்கை, ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பு என்ற ஒரே மிக முக்கியமான சர்வதேச சம்பவத்திற்காக அர்ப்பணிக்கப்பட்டிருந்தது. உங்களுடைய ஆவணம் இந்த அறிக்கை பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அல்லது யுத்தம் பற்றிய பிரச்சினையையாவது நீங்கள் எழுப்பியுள்ளீர்களா? கோகனின் திறனாய்வுடன் நீங்கள் உடன்படுகின்றீர்களா அல்லது உடன்படவில்லையா? நான் அறிக்கைகளின் பட்டியலை முன்வைத்தால், அதே கேள்வி மீண்டும் மீண்டும் எழக்கூடும். தனது விரிவான அறிக்கைகளில் நா.அ.அ.கு. முன்வைத்த அரசியல் ஆய்வுகளின் எந்தவொரு நோக்கையும் பற்றி உறுதியாக அணுகுவதற்கு நீங்கள் தவறியது ஏன்? நீங்கள் பதிலளிக்க தவறியமையை வெறுமனே அலட்சியப் போக்கு என கருதிக்கொள்ள முடியாது. இங்கு தலைநீட்டியிருப்பது என்னவெனில், புறநிலை உலகை சாத்தியமான வரையில் சரியாகவும் துல்லியமாகவும் திறனாய்வு செய்வதில் புரட்சிகர நடைமுறையை வேரூன்றச் செய்ய முயற்சிக்கும் முன்நோக்கு பற்றிய மார்க்சிச கருத்தை மொத்தமாக நிராகரிப்பதேயாகும். உங்களைப் பொருத்தளவில் இது காலத்தை வீணாக்குவதாகும். ஆசிரியர் குழு கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட அத்தகைய அறிக்கைகள், "சோசலிச நனவு" என நீங்கள் கருதும் அபிவிருத்தியுடன் தொடர்புபட்டுள்ளது என்பதை நீங்கள் நம்பவில்லை. நாம் இதன் பின்னர் தெளிவுபடுத்தவுள்ளது போல், அந்தப் பதத்தின் மூலம் நீங்கள் அர்த்தப்படுத்தும் விடயமானது, மார்க்ஸியத்தின் சிறந்த பிரதிநிதிகளின் வேலைகளை ஊக்குவிக்கும் புரட்சிகர நனவு என்ற கருத்துடன் முற்றிலும் வேறுபடுகின்றது. அனைத்துலகக் குழு அரசியல் மற்றும் வரலாற்றை அடிப்படையாகக் கொள்வதில் அக்கறை செலுத்தாமல், குறிப்பாக வில்ஹெம் ரீச் மற்றும் ஹர்பட் மார்கூஸ் ஆகியோரின் நூல்களில் முன்வைக்கப்பட்டுள்ளது போல் உளவியல் மற்றும் பாலியலினை அடிப்படையாகக் கொள்வதில் அக்கறை செலுத்த வேண்டும் என்றே நீங்கள் விரும்புகிறீர்கள். உங்களைப் பொறுத்தளவில், "சோசலிச நனவு", "சோசலிச கருத்தியல்" ஆகியவை மேற்கூறிய விடயங்களையே அடிப்படையாகக் கொள்ள வேண்டும். இதனாலேயே சர்வதேச ஆசியர் குழு முன்னெடுத்த வேலைகளைப் பற்றி நீங்கள் உணர்ச்சியற்ற அலட்சியத்துடன் பிரதிபலிக்கின்றீர்கள். பூகோள அமைப்பு என்றவகையில் வரலாற்று ரீதியில் அபிவிருத்தி செய்யப்பட்ட முதலாளித்துவத்தின் சமூகப்-பொருளாதார மற்றும் அரசியல் முரண்பாடுகளின் ஆய்வை அடிப்படையாகக் கொண்ட உலக புரட்சி முன்நோக்கை விரிவாக்குவதற்கான அதன் முயற்சிகள், நீங்கள் முழுமையாக அந்நியப்பட்டுவரும் மார்க்ஸிச அரசியல் மரபில் வேரூன்றியுள்ளன.

தொடரும்....

குறிப்புகள்:

* இந்த ஆவணத்தை http://www.permanent-revolution.org என்ற முகவரியில் சென்று வாசிக்க முடியும்.[return]

[1] தோழர் ஸ்டெய்னர், நீங்கள் 1978 செப்டெம்பரில் தொழிலாளர் கழகத்தை விட்டு வெளியேறிவிட்டீர்கள். தோழர் பிரெனர், நீங்கள் 1979 ஜனவரியில் இராஜினாமா செய்துவிட்டீர்கள். [return]

[2] மார்ச் 1998ல் ரொபட்சன் குழு எழுதியதாவது: "சோ.ச.க. யின் புதிய வலைத் தளம், டேவிட் நோர்த்தின் வாயுருவிலான 'உயர்ந்த சிந்தனைகளின்' ஊடாக துரிதமாக விரிவாக்கமடைகின்றது. அது, பிரமாண்டமான தற்பெருமையுடனும் ஐயுறவுக்குரிய அரசியலுடனும் தோரணை காட்டும், மங்களான சிறிய மனிதர்கள் புரட்சி விளையாட்டில் ஈடுபடும், ஏறத்தாழ கற்பனை உலகங்களில் உருவான, வளர்ச்சிகண்டுவரும் குப்பைகூழத்தில் புதிதாகத் தோன்றியுள்ளதாகும்... உண்மையான உலகில், உண்மையான மனிதர்கள் மத்தியில் ஒரு புரட்சிகரமான தொழிலாளர் கட்சியை கட்டியெழுப்புவதற்கான ஒரு கடுமையான போராட்டத்திற்கு மாற்றாக, இணையத் தளத்தில் சில ஆவணங்களைக் கொட்டுவதன் மூலம் பாசாங்கு செய்வதானது, நோர்த்வாதிகள் அவப்பெயர்பெற்றுள்ள சிடுமூஞ்சித்தனத்தினதும் மோசடியினதும் ஒட்டுமொத்த ஆழத்தை மட்டுமே உறுதிப்படுத்துகிறது''. [return]

[3] http://www.wsws.org/sections/categoryabout/about.shtml [return]