World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : வரலாறு

New title now available

Mehring Books publishes "Marxism, History & Socialist Consciousness" by David North

புதிய நூல் வெளிவந்துள்ளது

டேவிட் நோர்த் எழுதிய "மார்க்சிஸமும் வரலாறும் சோசலிச நனவும்" என்ற நூலை மெஹ்ரிங் புக்ஸ் வெளியிடுகிறது

17 August 2007

Use this version to print | Send this link by email | Email the author

மெஹ்ரிங் புக்ஸ் டேவிட் நோர்த்தின் புதிய நூலை வெளியிட்டுள்ளது. இந்த நூல் இப்போது ஒன்லைனில் online கிடைக்கிறது. டேவிட் நோர்த்தின் "மார்க்சிஸமும் வரலாறும் சோசலிச நனவும்" என்ற நூலின் முன்னுரையை இங்கு நாம் பிரசுரிக்கின்றோம்.

தொழிலாளர் கழகத்தின் (சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி) இரு முன்நாள் உறுப்பினர்களான அலெக்ஸ் ஸ்டைனெரும் ஃபிராங்க் பிரெனரும், நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் கோட்பாட்டு வேலைகள், அரசியல் நோக்கு மற்றும் நடைமுறை செயற்பாடுகளைப் பற்றிய விமர்சனமொன்றை வெளியிட்டுள்ளனர். புறநிலைவாதம் அல்லது மார்க்சிஸம்*, என்ற தலைப்பிலான இந்த ஆவணத்தின் அதன் ஆசிரியர்களால், அனைத்துலகக் குழுவினுள் அரசியல் மற்றும் புத்திஜீவித வாழ்க்கை உறைந்துபோன நிலையில் இருப்பதாக நோக்கப்படுகிறது. இந்த நோக்கையே ஆவணத்தின் விமர்சனமும் தாராளமாக கொண்டுள்ளது. இந்த ஆசிரியர்கள் தொழிலாளர் கழகத்தில் இருந்து விலகி, புரட்சிகர சோசலிச அரசியல் நடவடிக்கைகளைக் கைவிட்டு கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்கள் கழிந்துவிட்டன என்ற காரணத்தினால் ஸ்டைனெர் மற்றும் பிரெனரின் விமர்சனங்களுக்கு பதிலளிப்பதற்கு அனைத்துலகக் குழு எவ்விதமான விசேடக் கடமையையும் கொண்டிருக்கவில்லை. எவ்வாறெனினும், கடந்த காலத்தில் அடிக்கடி நிகழ்ந்ததைப் போலவே, இந்த விமர்சனமானது புரட்சிகர வரலாறு, மார்க்சிஸ கோட்பாடு மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தின் முக்கியமான பிரச்சினைகளை தெளிவுபடுத்துவதற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது. ஒரு நீண்ட பதிலைத் தயார் செய்வதற்கு மிகவும் நிர்ப்பந்திக்கப்பட்டதற்குக் காரணம், ஸ்டைனெர்-பிரெனர் ஆவணமானது போலி-மார்க்சிஸத்தின் மெய்யான சாராம்சமாகவும் தவிர்க்கமுடியாதவாறு பிற்போக்கு கருத்துப் போக்காகவும் இருந்தமையே. இவை ஃபிராங்க்பேர்ட் கல்லூரி மற்றும் சமகாலத்திய நவ-கற்பனாவாதத்துடனும் தொடர்புபட்ட பல்வேறு சிந்தனை கல்லூரிகளின் செல்வாக்குக்கு உட்பட்ட குட்டிமுதலாளித்துவ தீவிரவாதிகளின் மத்தியில் பிரசித்திபெற்றவையாகும். 2006 ஜூன் 28ம் திகதி முதன் முதலில் வெளியிடப்பட்ட (மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியினதும் அனைத்துலகக் குழுவினதும் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்ட) மார்க்சிஸமும் வரலாறும் சோசலிச நனவும் என்ற இந்த பதிப்பில் முன்வைக்கப்பட்டுள்ள ஆவணம், ஸ்டைனெர்-பிரெனர் முன்வைத்த ஆவணத்திற்கு அனைத்துலகக் குழு வழங்கும் பதிலாகும்.

மார்க்சிஸமும் வரலாறும் சோசலிச நனவும் என்ற ஆவணம், ஸ்டைனெருக்கும் பிரெனருக்கும் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதில் இருந்து சரியாக ஒரு வருடம் கடந்துவிட்டது. இந்த ஆவணத்தைப் பெற்றுக்கொண்டதற்கான அறிவித்தல் அவர்களது இணையத்தில் இருப்பதோடு எமது ஆவணம் "கவனமாக ஆழ்ந்து ஆராய்ந்து பதிலளிக்கத் தக்கது" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், "புரட்சிகர இயக்கத்தின் எதிர்காலமே அதில்தான் தங்கியிருப்பதாக" பிரகடனம் செய்யும் ஸ்டைனெரும் பிரெனரும் தாம் "அவசரப்படப் போவதில்லை" என்றும் எச்சரித்துள்ளனர். குறைந்த பட்சம் இதிலாவது அவர்கள் தமது வார்த்தைக்கு உண்மையானவர்களாக நடந்துகொண்டுள்ளனர். அநேகமானவை உள்ளடங்கியிருப்பதாக எமக்குக் கூறப்பட்டுள்ள அவர்களது பதிலை இதுவரையும் காணக்கிடைக்கவில்லை.

ஆனால் உலகம் நகர்கின்றது. ஸ்டைனெரும் பிரெனரும் தமது காலங்கடந்த பெரிய புத்தகத்தை வெளியிடுவது சாத்தியமாகும் அதே வேளை, அதற்கு வழங்கிய காலக்கேடு கடந்துவிட்டதாக எமக்கு தோன்றுகின்றது. மார்க்சிஸமும் வரலாறும் சோசலிச நனவும் என்ற நூலை மார்க்சிஸக் கோட்பாட்டில் ஆர்வம் கொண்ட பரந்த மக்களின் கவனத்திற்கு கொண்டுவர மேலும் நாம் தாமதிப்பதற்கு காரணம் கிடையாது. மார்க்சிஸத்திற்கும் தற்காலத்தில் காணப்படுகின்ற பலவித குட்டிமுதலாளித்துவ தீவிரவாத சிந்தனாவாதத்திற்கும் இடையிலான ஆழமான இணைக்கமுடியாத பிளவை வெளிச்சத்திற்குக் கொண்டுவர இந்த ஆவணம் உதவியாக இருக்கும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

டேவிட் நோர்த்

டெட்ரொயிட் (Detroit)

ஜூன் 28, 2007

இந்தப் புதிய வெளியீட்டைப் பெற வேண்டுகோள் அனுப்புவதற்கு இங்கே கிளிக் click செய்யவும்.

* ஆவணத்தை http://www.permanent-revolution.org என்ற முகவரியில் காணலாம். [return]