World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு : ஈராக்

International conference on Iraq: bitter antagonisms on display

ஈராக் பற்றிய சர்வதேச மாநாடு: கடும் மோதல்கள் கண்காட்சி

By Peter Symonds
7 May 2007

Use this version to print | Send this link by email | Email the author

மே 3ம் 4ம் தேதிகளில் எகிப்திய சுற்றுலா தலமான Sharm el-Sheikh ல் நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் ஈராக் மீதான பேரழிவுகரமான அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு ஆதரவு திரட்டும் புஷ் நிர்வாகத்தின் முயற்சிகள் அதிக பலனைத் தரவில்லை. வாஷிங்டனுடைய அழுத்தத்தின்பேரில், ஈராக்கிற்கு நிதி கொடுத்தவர்களில் சிலர் பாக்தாத் மற்றும் அண்டை நாடுகளுக்கு கடன் நிவாரணம் கொடுப்பதாக ஒப்புக்கொண்டு ஈராக்கில் கிளர்ச்சியாளர்கள் நுழையாமல் இருக்கவும், ஆயுதங்களை தடுக்கவும் ஒப்புக் கொண்டனர். ஆனால் ஈராக்கின் மீதான சட்ட விரோத அமெரிக்க படையெடுப்பு மற்றும் ஈரான், சிரியாவிற்கு எதிரான ஆக்கிரோஷ அச்சுறுத்தல்கள் ஆகியவை தோற்றுவித்துள்ள கடுமையான பிராந்திய பதட்டங்கள் ஒருபோதும் மேற்பரப்பிலிருந்து தொலைவில் இல்லை.

ஈராக்கின் அனைத்து அண்டை நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் நிரந்தர உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்ட மாநாடு பற்றி செய்தி ஊடகத்தின் வர்ணனை கேலிக்கூத்தாக இருந்தன. சிரியாவின் வெளியுறவு மந்திரி வாலிட் அல்-மோவெல்லமுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ் 30 நிமிஷம் நடத்திய பேச்சுவார்த்தையின் முக்கியத்துவம் என்ன? ஈரானிய வெளியுறவு மந்திரி மனெளஷேர் மொட்டாகி விருந்தின்போது ரைசுக்கு எதிரில் உட்காராதது வயலின் வாசிக்கும் ஒரு ரஷ்ய பெண்ணுக்கும் அவர் அணிந்திருந்த குறைந்த வெட்டு உடைய ஆடைக்கும் காட்டிய அவரது ஆட்சேபனைகளின் விளைவா? ஈராக்கிற்கான அமெரிக்க தூதர் மற்றும் ஈரானிய துணை அமைச்சர் இருவருக்கும் இடையே மூன்று நிமிடம் நடந்த மோதல்கள் உறவுகள் சீரடையும் என்பதைக் குறிக்கிறதா? இத்தகைய மற்ற கடுமையான வினாக்களும்தான் மிக அதிக அளவில் கூறுகூறாக ஆய்வுக்குட்பட்டிருந்தன.

கடந்த ஆறு மாதங்களில், வாஷிங்டன் தெஹ்ரானுடன் அதனுடைய மோதலை பாரசீக வளைகுடாவில் கடற்படைக் குவிப்பு மற்றும் அதிக நுட்பமற்ற முறையில் ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது இராணுவத் தாக்குதல் நடத்தப்படாலம் என்ற அதன் குறிப்பு ஆகியவற்றின் மூலம் தூண்டுதல் செய்யும் வகையில் உயர்த்திக் காட்டியுள்ளது. சர்ச்சைக்குரிய யூரேனிய செறிவூட்டல் நிலையங்கள் மூடப்பட்டுவிடும் என்று முன்கூட்டியே ஈரான் ஒப்புக் கொண்டால் அன்றி ஈரானுடைய அணுசக்தித்திட்டங்கள் பற்றி அமெரிக்கா உறுதியாக பேச்சுவார்த்தை நடத்த மறுத்துள்ளது. மாநாட்டிற்கு முன்பு, அவரது சரிநிகர் ஈரானிய அலுவருடன் பேச்சு வார்த்தை நடத்தினால் அது "ஈராக்கியப் பாதுகாப்பு" பிரச்சினை என்ற குறுகிய வட்டத்திற்குள்தான் என்று ரைஸ் கூறிவிட்டார்; அதாவது தெஹ்ரான் ஈராக்கிலுள்ள அமெரிக்க எதிர்ப்பு எழுச்சியாளர்களுக்கு ஆயுதங்களையும் பயிற்சியையும் அளித்து வருகிறது என்ற ஆதாரமற்ற வாஷிங்டனின் கூற்று பற்றித்தான் இருக்கும் என்று கூறினார்.

வாஷிங்டன் பக்கத்தில் சிறிதளவும் சமரசத்திற்கு இடமில்லை என்ற நிலையில், அமெரிக்கா உத்தியோகபூர்வமற்ற பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று கூறியதை ஈரான் ஏற்காதது வியப்பை அளிக்கவில்லை. ஈரானின் வெளியுறவு மந்திரி மொட்டாகி (Mottaki) செய்தி ஊடகத்திடம் விளக்கினார்: "நேரம், பேச்சுவார்த்தைகள் அல்லது திட்டங்கள் என்று எதுவும் குறிப்பிடப்படவில்லை. வெளியுறவு மந்திரிகளுக்கு இடையே பேச்சு வார்த்தைகள் என்பதற்கு அரசியல் விருப்பம் போன்ற தேவைகள் உண்டு; மேலும் எந்த அடிப்படையில் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்பதும் தெளிவாக இருக்க வேண்டும்." நன்னம்பிகையை காட்ட விரும்பியிருந்தால், புஷ் நிர்வாகம் ஜனவரி மாதம் வடக்கு ஈராக்கில் ஈரானிய தொடர்பு அலுவலகச்சோதனை ஒன்றில் அமெரிக்க இராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட ஐந்து ஈரானிய அதிகாரிகளை விடுவித்திருக்க வேண்டும்; ஆனால் தெஹ்ரான் கோரிய பின்னரும் அவ்வாறு செய்யப்படவில்லை.

சிரியாவில் வெளியுறவு மந்திரி மோவெல்லத்துடன் சிறு விவாதம் நடத்தப்பட்டது அமெரிக்க கொள்கையில் அடிப்படை மாற்றம் என்று மிகவும் அதிகமாக கூறப்பட்ட ரைஸின் கருத்துக்களுடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை என்பதைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டியது. முன்னாள் லெபனிய பிரதம மந்திரி ரபிக் அல்-ஹரில் பெப்ருவரி 2005ல் படுகொலை செய்யப்பட்ட பின் வாஷிங்டன் டமாஸ்கசுடன் தொடர்பை துண்டித்தது மேலும் ஐ.நா.வில் ஒரு சர்வதேச நீதிமன்றம் இவ்வழக்கு பற்றி விசாரிக்க வேண்டும் என்றும் முயன்று வருகிறது. கொலையை ஏற்பாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சிரியா இம்முயற்சிக்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது. ஈரானை போல் சிரியாவும் "பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடு" என்று புஷ் நிர்வாகம் முத்திரையிட்டுள்ளது; சிரியா, லெபனிய ஷியைட் அமைப்பான ஹெஸ்போல்லாவிற்கு ஆதரவு கொடுக்கிறது என்றும் பாலஸ்தீனிய கட்சியான ஹமாஸிற்கு ஆதரவு கொடுக்கிறது என்றும் அமெரிக்கா கூறுகிறது.

செய்தி ஊடகத் தகவல்களின்படி, ரைஸ் மற்றும் மோவெல்லம் ஆகியோருக்கு இடையே நடந்த பேச்சுக்கள் ஈராக்கினுள் அமெரிக்க-எதிர்ப்பு கிளர்ச்சியாளர்கள் ஊடுருவலை சிரியா நிறுத்த வேண்டும் என்பதில் குவிப்புக் காட்டியதாக கூறப்படுகிறது. இதை "மிகச் சீரான" விவாதம் என்று ரைஸ் விவரித்தார்; மோவெல்லம் "உறவுகளை மேம்படுத்திக் கொள்ளுவதில் சிரியா தீவிரமாக உள்ளது" என்று அறிவித்தார். ஆனால் எந்த முடிவுகளும் அறிவிக்கப்படவில்லை. ஹரிரி, லெபனான் போன்ற முக்கியமான பிரச்சினைகள் பற்றி விவாதம் இல்லை. மேலும் கடந்த மாதம்தான் சிரியாவிற்கு விஜயம் செய்ததற்காக மன்ற அவைத்தலைவர் நான்சி பெலோசியை குறைகூறிய வெள்ளை மாளிககை, Shasrm el-Sheikh ல் நடந்த இச்சந்திப்பை அதிக மதிப்புக் கொடுத்து பேசவில்லை.

சமீபத்திய மாதங்களில், புஷ் நிர்வாகம் மத்திய கிழக்கில் ஈரானிய எதிர்ப்பு கூட்டணி ஒன்றை கட்டமைக்க முற்பட்டுவருகிறது; இதற்கு கன்சர்வேடிவ் "சுன்னி" அரசாங்கங்கள் ஈராக்கில் தெஹ்ரான் பெருக்கி வரும் செல்வாக்கை கண்டு அஞ்சுவதை பயன்படுத்தியுள்ளது. குறிப்பாக செளதி அரேபியா லெபனானில் இன்னும் கூடுதலான வகையில் தூதரக முயற்சிகளில் ஈடுபட்டுள்து; பாலஸ்தீனிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது; பகுதியின் மற்ற இடங்களிலும் ஈரானை தனிமைப்படுத்தும் வகையில் இவ்வாறு செய்கிறது.

அமெரிக்காவை தளமாகக் கொண்டுள்ள Stratfor சிந்தனைக்குழாமின் கருத்தின்படி ரைஸிற்கும் மோவெல்லமுக்கும் இடையே நடந்த பேச்சுக்கள் நீண்ட காலமாக ஈரானுடன் சிரியா கொண்டிருக்கும் நட்பை முறிக்கும் முயற்சிகளின் ஒரு பகுதி ஆகும். "சிரியாவுடன் பேச்சு வார்த்தையை வாஷிங்டன் நடத்துவதற்கான முடிவின் பின்னணியில் செளதி அரேபியா முக்கிய உந்துதலை கொண்டுள்ளது; சிரியாவை ஈரானின் சுற்றுவட்டத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்ற கருத்தில் இது நடைபெறுகிறது. அரேபிய வட்டத்திற்குள் சிரியாவை கொண்டுவரவேண்டும் என்ற முயற்சியில் சிரிய பொருளாதாரத்திற்குள் வளைகுடா பெட்ரோல் டாலர்கள் வெள்ளமெனக் கொண்டுவரப்படுவது இதற்காகத்தான்" என்று கட்டுரை கூறுகிறது.

உறுதியில்லாத சர்வதேச உடன்பாடு

ஐந்து ஆண்டுகளாக இருக்கும் ஈராக் பற்றிய சர்வதேச உடன்பாடு -இத்தகைய சூழ்ச்சிக் கையாளல்களில்தான் நிறைந்துள்ளது. ஒன்றுகூடலின் உருப்படியான விளைவு இது ஒன்றுதான். $30 பில்லியன் கடன்சுமை குறைப்பிற்கு ஈடாக, ஈராக்கிய பிரதம மந்திரி நெளரி அல்-மாலிகியின் அரசாங்கம் புஷ் நிர்வாகத்தால் பெரும்பாலும் இயற்றப்பட்ட தொடர்ச்சியான பொருளாதார மற்றும் அரசியல் மட்டக்குறிகளுக்கு ஒப்புக் கொண்டுள்ளது.

இப்பட்டியலில் உயரிடத்தில் இருப்பது அமெரிக்க பெருநிறுவனங்கள் நாட்டின் மிகப் பெரும் இருப்புக்களை பயன்படுத்துவதற்கான சட்டங்களை இயற்றுவது ஆகும். உடன்பாடு ஒரு நாளைக்கு கச்சா எண்ணெய் உற்பத்தி 3.5 மில்லியன் பீப்பாய்கள் மட்டும்தான் என்று 2011 ஐ ஒட்டி இலக்கை நிர்ணயித்துள்ளது --இது தற்போதைய எண்ணிக்கையை போல் இருமடங்கு ஆகும்; இதற்கு ஈராக்கின் சிதைத்துள்ள, காலம் கடந்துவிட்ட உள்கட்டுமானத்தை செப்பனிட கணிசமான வெளிநாட்டு மூலதனம் தேவைப்படும். இது பொருளாதார வளர்ச்சி 2007ல் 15.4 சதவிகிதமாக இருக்க வேண்டும் என்ற இலக்கையும் கொண்டுள்ளது; 2006ல் இருந்து இது 3 சதவிகிதம் அளவே அதிகமாகும்.

எஞ்சியுள்ள பல முக்கிய அளவுகோல்களும் அண்டை நாடுகளின் கோரிக்கையான சதாம் ஹுசைனின் பாத்திச ஆட்சியின் சமூகத் தளமாக இருந்த சுன்னிக்கள் ஆட்சியில் சேர்த்துக் கொள்ளப்படவேண்டும், அரசாங்கம் மற்றும் அரச எந்திரத்தில் இடம் பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டவை ஆகும். "தேசிய சமரசம்" என்ற கோஷத்தில் இவை பாத்திஸ்ட் அகற்றப்படுவதற்கு முற்றுப்புள்ளி, புதிய மாநிலத் தேர்தல்கள் மற்றும் ஷியைட் போராளிகள் குழுக்கள் கலைக்கப்படுதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

ஈராக்கின் சுன்னி அண்டை நாடுகள் என்று அழைக்கப்படுபவை --செளதி அரேபியா, ஜோர்டான், எகிப்து, வளைகுடா நாடுகள்-- பாக்தாத்தில் இருக்கும் ஷியா மேலாதிக்கம் மிகுந்த அரசாங்கத்தை தெஹ்ரானுடன் மிக நெருக்கமாக இருப்பதாக உணர்கின்றன. பெயர்கூற விரும்பாத அரேபிய தூதர் ஒருவர் Time ஏட்டிற்கு கூறினார்: "அல்-மாலிகி ஈராக் மக்கள் அனைவரையும் பிரதிபலிக்கவில்லை. மிகவும் ஈரானிய சார்பு கொண்டிருக்கிறார். ஈரானின் நலன்களைத்தான் காக்கிறார்." இப்படி அடித்தளத்தில் உள்ள விரோதம் செளதி அரேபிய வெளியுறவு மந்திரி இளவரசர் செளத் அல்-பைசல் மாலிகை மாநாட்டில் சந்தித்துப் பேச மறுத்ததில் சுட்டிக்காட்டியது. செளதி அரசாரான அப்துல்லாவும் ஈராக்கிய பிரதமர் மாலிக் அண்டை நாடுகளுக்கு பயணித்தபோது பார்க்க மறுத்துவிட்டார்.

மாலிகி அரசாங்கத்திற்கு எதிரான இலக்கை கொண்டிருந்த விமர்சனங்களில், இளவரசர் செளத் New York Times இடம் கூறினார்: "செயற்பாடுகளில் ஈராக்கில் ஒன்றும் நடப்பதாக நாங்கள் காணவில்லை. எங்களுடைய அமெரிக்க நண்பர்கள் முன்னேற்றம் இருப்பதாகக் கூறுகின்றனர்; வன்முறையில் முன்னேற்றம், புரிந்து கொள்ளும் தரத்தில் முன்னேற்றம், குடிப்படை ஆயுதம் களையப்படுவதில் முன்னேற்றம் என்று. ஆனால் நாங்கள் அப்படி எதையும் பார்க்கவில்லை."

அமெரிக்காவில் முன்னாள் எகிப்திய தூதராக இருந்த அப்தெல் ராவூப் எல்-ரீடி International Heranld Tribune இடம் அரேபிய நாடுகள் வெற்றி இல்லாச் சூழலைத்தான் எதிர்கொண்டுள்ளதாக கூறினார். "ஈராக்கில் அமெரிக்கா நீடித்தால், இன்னும் ஆழ்ந்த, சிக்கல்கள் நிறைந்த வகையில் ஈராக் கூடுதலான பிரச்சினைகளை காணும். ஆனால் அமெரிக்கா ஈராக்கை நீங்கினால், ஒரு வெற்றிடம் வரும், யார் அந்த வெற்றிடத்தை நிரப்புவது? அந்த வெற்றிடத்தை இட்டு நிரப்ப மிகவும் தகுதியுடையது ஈரான்தான்."

வாஷிங்டனுடைய அழுத்தத்தில் ஈராக்கில் பெரும்பாலான அண்டை நாடுகள் முணுமுணுப்புடன் ஈராக்கிற்கு கடன் நிவாரணத்தை ஓரளவு வழங்குகையில் உடன்பாட்டில் காணப்படும் முக்கிய கருத்துக்கள் உறுதிமொழிகளை இரத்து செய்வதற்கு பல விதிகளைக் கொண்டுள்ளன. குவைத் உறுதியாக எதையும் கூறுவதை தவிர்த்து கடன் நிவாரணம் எதுவாயினும் நாட்டுப் பாராளுமன்றத்தின் ஒப்புதல் வேண்டும் என்று கூறிவிட்டது. Associated Press க்கு கூறிய கருத்துக்களில் மாலிகி அப்பட்டமாக எச்சரித்தார்: "இந்நாடுகள் இன்று கையெழுத்திட்டதற்கு எந்த அளவு தீவிர, அர்ப்பணிப்பைக் காட்டுகின்றன என்பதை பார்ப்போம். இந்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாவிட்டால், அதைக் கண்காணிப்போம்; மேலும் மாநாடுகள் நடத்துவது என்பதில் பயனில்லை."

வாஷிங்டனின் மாநாட்டில் இருந்த எந்த "சுன்னி" நட்பு நாடுகளும் ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தபோது எந்த எதிர்ப்பையும் கூறவில்லை; ஈராக்கிய மக்களை எதிர்கொண்டுள்ள சமூகப் பேரழிவு, அடிப்படை ஜனநாயக உரிமைகள் மிதிக்கப்பட்டுள்ளது பற்றியும் எதுவும் கூறவில்லை. புஷ் நிர்வாகத்தின் குற்றம் சார்ந்த கொள்கைகளுக்கு அவை அடிமைத்தனமான முறையில் ஆதரவு கொடுத்துள்ளது, ஈராக்கிற்குள்ளும் மத்திய கிழக்கு முழுவதும் பரந்த அளவில் மக்கள் எதிர்ப்பை தூண்டியுள்ளது; இதையொட்டி இந்த அரசாங்கங்கள் இன்னும் கூடுதலான முறையில் அமெரிக்காவிற்கு ஈரானின் மட்டுப்படுத்தப்பட்ட எதிர்ப்பிற்கு உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளன.

2003ல் உட்குறிப்பாக தன்னுடைய நீண்டகால பாக்தாத் போட்டியாளரை அகற்றியதற்கு ஆதரவு கொடுத்திருந்த ஈரான் இம்மாநாட்டில் வெளி துருப்புக்கள் வெளியேறுவதற்கான கால அட்டவணை வேண்டும் என்று கூறியுள்ளது. எழுச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் கொடுக்கப்படுகிறது என்ற குற்றச் சாட்டிற்கு விடையிறுக்கையில், ஈரானின் வெளியுறவு மந்திரி பிரதிநிதிகளிடம் கூறினார்: "ஈராக்கில் பயங்கரவாதச் செயல்கள் தொடர்வது மற்றும் பெருகுவது வெளி துருப்புக்களின் தவறான அணுகுமுறைகளில் தொடக்கத்தை கொண்டுள்ளன. எங்களுடைய கருத்தில் ஆக்கிரமிப்பு தொடர்வதில்தான் நெருக்கடியின் ஆரம்பம் உள்ளது. அமெரிக்கா, ஈராக்கிய ஆக்கிரமிப்பில் இருந்து விளைந்துள்ள நிகழ்வுகளுக்கு பொறுப்பு ஏற்க வேண்டும், மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவதோ அல்லது விரலை உயர்த்துவதோ கூடாது."

மாநாட்டின் உயர் சூழ்நிலைக்கு புறத்தே, மத்திய கிழக்கு செய்தி ஊடகம் ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு எதிரான பரந்த எதிர்ப்பை ஓரளவு பிரதிபலித்தது. எகிப்தின் அல் அக்பரின் வர்ணனையாளர் கூறினார்: "Sharm el-Sheikh மாநாடு அதன் நோக்கங்கள் பற்றி தெளிவான வெளிப்படையான விளக்கம் வேண்டும் என்றால், ஈராக்கில் நகர முடியா நிலை ஏற்பட்டுவிட்டது என்பதை தயக்கமின்றி கூறுவோம்; தன்னுடைய இலக்குகளிலும் சாதனைகளிலும் அமெரிக்கா முழுமையாக தோல்வி அடைந்துவிட்டது." அல் அரப் அல்-அலமியாவில் ஒரு தலையங்கம் இன்னும் அப்பட்டமாக அறிவித்தது: "Sharm el Sheikh மாநாடு ஈராக்கை சீர்திருத்த நடத்தப்படவில்லை; மாறாக அமெரிக்க நிர்வாகத்தை அதன் பல இக்கட்டான சூழ்நிலைகளில் இருந்து காப்பாற்றுவதற்கு, ஈராக்கில் பாதுகாப்பு சூழ்நிலை இடர்களில் இருந்தும் அமெரிக்காவிற்குள்ளேயே இருக்கும் அரசியல் இடர்களில் இருந்தும் காப்பாற்றுவதற்காக நடத்தப்பட்டது."

ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பை உறுதிப்படுத்தும் வழிவகையை காட்டுவதற்கு முற்றிலும் மாறாக, மாநாடு இன்னும் ஆழ்ந்த முறையில் புஷ் நிர்வாகத்தின் படையெடுப்பு மற்றும் ஈரானுக்கு எதிரான அதன் புதிய இராணுவ நடவடிக்கை தயாரிப்புக்கள் மூலம் ஆழப்படுத்தப்பட்டுள்ள வட்டார பதட்டங்கள் பற்றிய ஒரு நொடி நேர புகைப்பட தோற்றத்தைத்தான் காட்டியது.