World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Widening rift between major powers over Iran's nuclear programs

ஈரானின் அணுசக்தி திட்டங்கள் பற்றி பெரும் சக்திகளிடையே பிளவு பெருகுகிறது

By Peter Symonds
1 October 2007

Use this version to print | Send this link by email | Email the author

ஐ.நா.பாதுகாப்பு குழுவின் நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா மற்றும் சீனாவின் வெளியுறவு மந்திரிகள் மற்றும் ஜேர்மனியின் வெளியுறவு மந்திரி ஆகியோர் கடந்த வெள்ளியன்று ஈரானில் இருப்பதாக கூறப்படும் அணுவாயுதங்கள் திட்டத்திற்காக அந்நாட்டின் மீது புதிய பொருளாதாரத் தடைகளை உடனடியாக விதிக்க வேண்டும் என்று புஷ் நிர்வாகம் விடுத்த முறையீட்டை பரிசீலிப்பதற்காக நடத்திய கூட்டம் எந்த முடிவிற்கும் வராமல் கலைந்துவிட்டது. பாதுகாப்புக் குழுவில் தடுப்பதிகாரத்தை கொண்டுள்ள ரஷ்யா, சீனா இரு நாடுகளுமே அமெரிக்கக் கோரிக்கைகளை எதிர்த்தன.

ஒரு புதிய ஐ.நா. தீர்மானம் இயற்றப்படும் என்றும், ஆனால் இரு மாதங்களுக்குள் சர்வதேச அணுசக்தி அமைப்பு (IAEA) மற்றும் ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கை தலைவர் Javier Solana உடைய அறிக்கைகள் அளிக்கப்படும் வரையில், இது பாதுகாப்புக் குழுவில் கொண்டுவரப்பட மாட்டாது என்றும் ஒரு கூட்டு அறிக்கை தெரிவித்துள்ளது. பிரான்சின் வெளியுறவு மந்திரியான பேர்னார்ட் குஷ்நெர் இந்த முடிவை "ஒரு நல்ல சமரசம்" என்று விவரித்துள்ளார்; ஆனால் பெரிய சக்திகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடுகளை இந்த உடன்பாடு மறைக்கமுடியவில்லை; இது புதிய ஐ.நா. பொருளாதாரத் தடைகளை தவிர்க்கக்கூடும்.

அமெரிக்க துணை வெளியுறவு அமைச்சர் நிக்கோலஸ் பேர்ன்ஸ், இந்தக் கூட்டு அறிக்கையயில் பங்கு பெற்றவர்கள் அனைவரும் ஈரானில் இருந்து உடன்பாடான விடையிறுப்பு வரவில்லை என்றால் மூன்றாம் சுற்றுப் பொருளாதார தடைகளுக்கு ஆதரவு கொடுக்கும் கட்டாயத்தை கொடுக்கும் விளக்கமாக உள்ளது என்று செய்தி ஊடகத்திடம் குறிப்பிட்டார். "ஈரானுக்கு இது ஒரு கடுமையான, கடின தகவலை" கொடுத்துள்ளது. ஆனால் ரஷ்ய வெளியுறவு மந்திரியான சேர்ஜி லாவ்ரோவ் இந்த உடன்பாடு தானாகவே முன்வந்து நவம்பரில் புதிய தடைகளுக்கு வழி கொடுத்துவிடும் என்ற பொருளை கொடுத்துவிடவில்லை என்றார். "அறிக்கை மிகவும் தெளிவற்றதாகத்தான் உள்ளது. இன்று நாங்கள் விவாதித்தது பேச்சுவார்த்தைகள் வெற்றிபெறுவதற்கு அனைத்திலும் குவிப்புக் காட்ட வேண்டும் என்பதுதான்" என்று லாவ்ரோவ் கூறினார்.

IAEA உடன்பாடு ஒன்று ஈரானுடன் ஜூலை மாதம் மேற்கொள்ளப்பட்டதை கூட்ட அறிக்கை வரவேற்று, அது அணுசக்தித் திட்டங்கள் பற்றி எழுந்துள்ள அனைத்து வினாக்களுக்கும் முறையாக விடையளித்துள்ளது என்று அறிக்கை வரவேற்றுள்ளது. ஆனால் அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் உடன்பாடு பற்றி குறைகள் கண்டுள்ளன; IAEA இன் தலைவர் மகம்மது எல்பரேடி அவருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரத்தையும் மீறி ஈரானின் யூரேனிய செறிவுத் திட்டம் முற்றிலும் மூடப்படவேண்டும் என்று வலியுறுத்தாததற்காக முறையான எதிர்ப்பையும் தெரிவித்துள்ளன. "IAEA பணி ஒரு ராஜதந்திர முறையில் செயல்படுவதல்ல. அது ஒரு தொழில்நுட்ப அமைப்பு" என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் இம்மாத தொடக்கத்தில் கடுப்புடன் கூறியிருந்தார்.

IAEA உடன்படிக்கை ஈரானுக்கு எதிரான புஷ் நிர்வாகத்தின் கடுமையான அபராதங்களை தாமதப்படுத்துவதுடன், அமெரிக்க நிலைப்பாட்டின் பாசங்குத்தனத்தையும் உயர்த்திக் காட்டுகிறது. அணுவாயுத பரவல் தடுப்பு உடன்படிக்கையின்படி (Nuclear Non-Proliferation Treaty) ஈரான் சமாதானக் காரணங்களுக்காக அணுசக்தி எரிபொருள் சுழற்சியின் அனைத்துக் கூறுபாடுகளில் ஈடுபடவும் அனுமதிக்கப்பட்டுள்ளது; இதில் யூரேனிய செறிவூட்டுதலும் அடங்கும். தன்னுடைய திட்டங்களில் IAEA கூறுபாடுகள் அனைத்தையும் ஈரான் திருப்திபடுத்த தவறிவிட்டது என்ற ஒரு அடிப்படையை முன்வைத்து அமெரிக்கா ஈரானின் நாடன்சில் இருக்கும் யூரேனிய செறிவுட்டும் அனைத்து நிலையங்களையும் மூட வேண்டும் என்று கோருகிறது. தெஹ்ரானுடன் எல்பரேடி கொண்டுள்ள உடன்பாட்டிற்கு வாஷிங்டனின் எதிர்ப்பானது, ஈரானுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அணுசக்தி திட்டத்தை ஒரு போலிக் காரணமாக பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தைத்தான் உறுதி செய்கிறது.

தன்னுடைய அறிக்கையை IAEA வின் இயக்குனர் குழுவிற்கு நவம்பர் கடைசியில் எல்பரேடி கொடுக்க உள்ளார். மற்றொரு அறிக்கை ஐரோப்பிய ஒன்றியத்தின் Solana வினால் தயாரிக்கப்பட உள்ளது; அவரை யூரேனிய செறிவூட்டுதல் உட்பட குறிப்பான அணுசக்தி திட்டங்களை ஈரான் நிறுத்துவதற்கு புதிய பொருளாதார, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப ஊக்கங்களை ஈடாகக் கொடுக்குமாறு கோரப்பட்டுள்ளார். 2005 நடுப்பகுதியில் ஐரோப்பிய ஊக்கங்களை "ஈரானிய மக்களுக்கு ஒரு அவமதிப்பு" என்று கூறி தெஹ்ரான் சீற்றத்துடன் நிராகரித்து, அதன் யூரேனிய செறிவூட்டும் நிலையங்களில் பணியை தொடங்கியது.

கடந்த வெள்ளியன்று ஏற்பட்டுள்ள உடன்பாடு, இந்த அறிக்கைகளின் விளைவிற்காக காத்திருக்க வேண்டும் என்று கூறுவது, விரைவில் முறிக்கப்பட்டுவிடலாம். பிரெஞ்சு வெளியுறவு மந்திரியான குஷ்நெர் ஒரு தனியான ஐரோப்பிய பொருளாதார தடைகள் ஈரானுக்கு எதிராக கொண்டுவருவதற்கு அக்டோபர் 15 கூட்டத்தில் முயலப் போவதாக கூறியுள்ளார். "பொருளாதாரத் தடைகள் பற்றி நாங்கள் பேசுவோம். ஏற்கனவே மற்ற வெளியுறவு மந்திரிகளுக்கு நாங்கள் கடிதம் அனுப்பியுள்ளோம்." என்று அவர் செய்தி ஊடகத்திடம் கூறினார். பிரிட்டனும், நெதர்லாந்தும் அவற்றின் ஆதரவை தெரிவித்துள்ளன; ஆனால் மற்றைய ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் தங்கள் நிலைப்பாட்டைப் பற்றி இன்னமும் ஏதும் அறிவிக்கவில்லை. முந்தைய புஷ் நிர்வாகம் "விருப்பமுடையவர்களுடைய கூட்டணி" ஈரானுக்கு எதிரான ஒருதலைப்பட்ச அபராதங்களை விதிக்க வேண்டும் என்று கூறியதற்கு ஏற்பத்தான் குஷ்நெரின் நிலை உள்ளது.

ரஷ்ய வெளியுறவு மந்திரி லாவ்ரோவ் தனிப்பட்ட முறையில் ஐரோப்பிய ஒன்றியம் பொருளாதாரத் தடைகள் கொண்டுவருவது ஐ.நா. பாதுகாப்புக் குழு தீர்மானத்தை சேதத்திற்கு உட்படுத்தும் என்று எச்சரித்துள்ளார். கடந்த புதனன்று லாவ்ரோவும் ரைஸும் "மிகவும் அப்பட்டமான முறையில் கருத்துப் பரிமாற்றம் செய்து கொண்டார்கள்", "கடுமையாகப் பேசினர்" என்று உயர்தூதர்கள் பலவிதமாக விளக்கியுள்ளனர். ரஷ்யாவிற்கும் சீனாவிற்கும் இடையே பெருகியுள்ள இடைவெளி ஒரு புறத்திலும், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி மறு புறத்திலும் இருப்பது வெள்ளியன்று நன்கு வெளிப்படையாயிற்று. அறுவர் கூட்டம் முடிவடைந்த பின்னர், அமெரிக்காவும் ஐரோப்பிய சக்திகளும் தனித்தனியே கூடின.

இந்த கசப்பான பிளவுகளின் பின்னணியில் பெரும் சக்திகளின் போட்டியிடும் பொருளாதார, மூலோபாய நலன்கள் உள்ளன. 2003ம் ஆண்டு ஈராக் படையெடுப்பிற்கு முன்பு இருந்ததை போலவே, புஷ் நிர்வாகம் பொருளாதார தடைகளுக்கான கோரிக்கைகளையும், போர் அச்சுறுத்தலையும் தன்னுடைய ஐரோப்பிய, ஆசிய போட்டியாளர்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வழிவகையாகக் கையாள்கிறது; அவை அனைத்துமே ஈரானுடன் கணிசமான வணிகம் மற்றும் முதலீடுகளை கொண்டுள்ளன. தங்களுடைய பொருளாதார நிலைமையை காக்கும் வகையில், பிரான்ஸ், மற்றும் பிரிட்டன் இரண்டும் வாஷிங்டனின் ஆக்கிரோஷ நிலைப்பாட்டிற்கு ஆதரவு கொடுத்துள்ள நிலையில், ரஷ்யாவும் சீனாவும் ஐ.நா.வில் ராஜதந்திர வகையிலான பின்புறப் போராட்டத்திற்கு முயலுகின்றன.

ஐரோப்பிய சக்திகளுக்கு இடையேகூட, வேறுபாடுகள் இருப்பது போல் தோன்றுகிறது. கடந்த வாரம் பைனான்சியல் டைம்ஸில் வந்துள்ள கட்டுரை ஒன்று ஈரானுக்கு எதிரான தடைகளில் தயக்கத்தை ஜேர்மனி காட்டுகிறது என்னும் குறைகூறல்களுக்கு அதன் விடையிறுப்பை உயர்த்திக் காட்டும் வகையில் இருந்தது. வெள்ளியன்று நியூ யோர்க் கூட்டத்தில் மற்ற சக்திகள் நடவடிக்கை எடுக்கத் தவறியதில் தோல்வியுற்றது பற்றியதற்கான காரணங்கள் குறித்து கோப்புத் தொகுப்பு ஒன்றை தயாரிக்கும்படி வெளியுறவுத் துறையிடம் கூறியிருப்பதாக செய்தி ஊடகத்திடம் ஜேர்மனிய அதிகாரிகள் கூறியுள்ளனர். இதில் பிரெஞ்சு பெருநிறுவனங்களான Peugeot, Renault, Total, BNP Paribas என்று ஈரானில் தீவிரமாக இருக்கும் நிறுவனங்கள் மட்டும் அல்லாமல், ஈரானுடன் வணிக நடவடிக்கைகளில் தங்கள் தொடர்பை மறைக்கும் வகையில் துபாயில் இருக்கும் நிறுவனங்கள் மூலம் தொடர்பு கொண்டிருக்கும் அமெரிக்க வணிக நிறுவனமும் அடங்கும்.

இராணுவ அச்சுறுத்தல்

ரஷ்யா மற்றும் சீனா ஒரு புதிய ஐ.நா. தீர்மானத்திற்கு மறுப்பு தெரிவித்திருப்பது ஈரானுக்கு எதிராக புதிய பொருளாதார அபராதங்களை விதிக்க வேண்டும், அதைத் தொடர்ந்து இராணுவத் தாக்குதல் என்ற அச்சுறுத்தலும் உண்டு என்று புஷ் நிர்வாகம் வலியுறுத்துவதை நிறுத்திவிடாது. சமீபத்திய வாரங்களில் செய்தி ஊடகத்தில் பெருகிய முறையில் வந்துள்ள கசிவுகள் ஈரான்மீது அமெரிக்கத் தாக்குதல்களுக்கான தயாரிப்புக்கள் முன்னேறிவருவது பற்றிக் கூறியுள்ளன. அதே நேரத்தில், அமெரிக்காவில் அரசியல், செய்தி ஊடகத்தின் மிகத் தீவிர வலது பிரிவுகள் ஈரானுக்கு எதிரான தங்கள் பிரச்சாரத்தை அதிகரித்துள்ளதுடன் இராணுவ நடவடிக்கை வேண்டும் என்றும் கூறியுள்ளன.

வோல்ஸ்ட்ரீட் ஜேர்னலில் ஒரு தலையங்கம், "புஷ்ஷும் ஈரானும்" என்ற தலைப்பில் வெளிவந்தது, ஈரானை அது பெற்றுள்ளதாக கூறப்படும் அணுசக்தி ஆயுதங்கள் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க-எதிர்ப்பு எழுச்சியாளர்களுக்கு ஆதரவு கொடுப்பதாக கண்டித்தபின், எந்த நடவடிக்கையையும் எடுக்காததற்காக வெள்ளை மாளிகையை அப்பட்டமாக குறைகூறியுள்ளது. அமெரிக்க வெளிவிவகார அமைச்சரகத்தின் தூதரக முயற்சிகளை அது எள்ளி நகையாடி, ஐ.நா. பொருளாதாரத் தடைகளையும், குறிப்பாக "அவற்றின் பலவீனத்திற்காக" உதறித் தள்ளியுள்ளது. செய்தித்தாளின் கருத்து வெளியிடும் பக்கங்கள் தொடர்ச்சியாக புஷ் நிர்வாகத்தின் அதிக இராணுவ வலிமையை வலியுறுத்தும் பிரிவினரின் கருத்துக்களை வெளியிடும் பகுதியாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

ஈரானுக்கு எதிராக ஒரு அமெரிக்கப் போர் வேண்டும் என்பதுதான் தலையங்கத்தின் பிழைக்கு இடமில்லாத முடிவுரை ஆகும். "ஈரான் ஒரு அணுகுண்டை பெறுவதை தடுக்கும் நோக்கத்தை நிறுத்தவேண்டும் என்பதில் காலம் கடந்த வகையில் புஷ் நிர்வாகம் செயல்பட்டுவருகிறது. ஈராக்கில் GI கள் போராடி, உயிர்களைக் கொடுத்துவரும் நேரத்தில், விரோதப் போக்கு உடைய ஈரானில் இருந்து அவர்களுக்கு ஆயுதங்களோ, புகலிடமோ கிடைக்கா வகையில் நடந்து கொள்ள புஷ் கடமைப்பட்டுள்ளார். ஈரானின் நடத்தை பற்றி அவரும் அவருடைய நிர்வாகமும் கூறுவதில் பாதியையாவது ஜனாதிபதி நம்பும் பட்சத்தில், அதைத் தடுத்து நிறுத்துவதற்கு என்ன செய்ய முடியுமோ அதைச் செய்வதற்கு அவர் கடமைப்பட்டுள்ளார்."

ஐ.நா.விற்கு முன்னாள் அமெரிக்க தூதராக இருந்த ஜோன் போல்டன் இதே போன்ற கருத்துக்களைத்தான் கடந்த வார இறுதியில் பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினர்களுக்கு அனுப்பிய செய்தியில் தெரிவித்தார். புஷ் நிர்வாகத்தின் முந்தைய முக்கிய புதிய கன்சர்வேட்டிவ்களில் ஒருவரான ஜோன் போல்டன் இராணுவசக்தி "ஒரு கவர்ச்சிகரமான விருப்பம் அல்ல... ஆனால் இதற்கு மாற்றீடு என்ன என்பதை நான் அறியேன் என்று உங்களிடம் கூறவிரும்புகிறேன்... ஈரானை தாக்குவதற்கு நம்மிடையே திறன் இருக்குமென்றால் அங்கு ஆட்சி மாற்றம் வருவதற்கான முயற்சிகளை கொள்ள வேண்டும்... அமெரிக்கா முன்பு மறைமுகமாக அரசாங்கங்களை மாற்றும் முயற்சிகளை நடத்துவதற்கு திறனைக் கொண்டு இருந்தது."

Sunday Times க்கு கொடுத்த பேட்டி ஒன்றில், புதிய கன்சர்வேட்டிவ்கள் என்று அழைக்கப்படுபவர்களில் முக்கியமாக இருக்கும் Norman Podhoretz ஒரு தனிப்பட்ட உரையாடலில் தான் புஷ்ஷிடம் இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஈரானின் அணுசக்தி நிலையங்களுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியதாக விளக்கினார். "மற்றொரு இன அழிப்பை தடுக்கும் மகத்தான பொறுப்பு உங்களிடம் உள்ளது. அதைச் செய்வதற்கு உரிய உணர்வையும் நீங்கள் ஒருவர்தான் கொண்டுள்ளீர்கள்" என்று Podhoretz ஜனாதிபதியிடம் கூறினார். தன்னுடைய உடன்பாட்டை புஷ் தெரிவிக்கவில்லை என்றாலும், Podhoretz கூறுவதை ஜனாதிபதி கூர்மையாக கேட்டார் என்றும் ஐ.நா. பொருளாதாரத்தடைகள் பற்றி தான் எள்ளி நகையாடியபோது ஜனாதிபதி சிரித்தார் என்றும் கூறினார்.

Bolton, Podhoretz மற்றும் ேவால்ஸ்ட்ரீட் ஜேர்னல் ஆகியவை ஐயத்திற்கு இடமின்றி துணை ஜனாதிபதி டிக் செனியை சுற்றியுள்ள வெள்ளை மாளிகையில் உள்ளவர்களின் கருத்துக்களுக்கு குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இப்பிரிவை பொறுத்த வரையில், புதிய ஐ.நா.பொருளாதார தடைகளுக்கு அமெரிக்காவின் போட்டியாளர்கள் உடன்பட மறுத்துள்ளமை, ஈரானுக்கு எதிரான ஒருதலைப்பட்ச அமெரிக்க நடவடிக்கைக்கு மற்றும் ஒரு வாதமாகும்; ஏற்கனவே மத்திய கிழக்கில் நடந்துகொண்டிருக்கும் ஒரு புதிய இராணுவ சாகசத்துக்கான முன்னேற்றகரமான தயாரிப்புக்களை இன்னமும் துரிதப்படுத்த வேண்டும் என்று இவர்கள் விரும்புகின்றனர்.