World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

German train drivers' strike affects large part of rail network

PSG leaflet provokes vital discussion

ஜேர்மனிய இரயில் டிரைவர்கள் வேலைநிறுத்தம் இரயில் போக்குவரத்தின் பெரும்பகுதியை பாதிக்கிறது

சோலிச சமத்துவக் கட்சியின் துண்டுப் பிரசுரம் முக்கிய விவாதத்தை தூண்டியது

By our reporters
13 October 2007

Use this version to print | Send this link by email | Email the author

வெள்ளியன்று இரயில் டிரைவர்கள் வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர்; இது ஜேர்மனிய வட்டார மற்றும் புறநகர இரயில் போக்குவரத்தின் பெரும்பகுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. GDL எனப்படும் இரயில் டிரைவர்கள் தொழிற்சங்கம் உயர்மட்ட தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் ஜேர்மனிய இரயில்வேக்களின் (ஞிமீutsநீலீமீ ஙிணீலீஸீஞிஙி) நிர்வாகிகள் பேச்சு வார்த்தைகள் தொடங்குவதற்கு முன்பு வியாழனன்று ஒரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்தது.

உயர்மட்ட மாநாடு பேர்லினில் DB யின் கண்காணிப்பு குழுவில் தலைவர் வெர்னர் முல்லரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முந்தைய ஹெகார்ட் ஷ்ரோடர் (சமூக ஜனநாயக கட்சி -SPD) கூட்டணி அரசாங்கத்தில் முல்லர் பொருளாதார மந்திரியாக இருந்தார்; தற்பொழுது Ruhr Coal AG இன் தலைமை நிர்வாகியாக உள்ளார்.

இரயில் டிரைவர்கள் தொழிற்சங்க தலைவரான மன்பிரட் ஷெல், DB யின் தலைவர் ஹார்ட்முட் மேடோர்ன் மற்றும் Transnet இரயில் தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவர் நோபேர்ட் ஹன்சன், அரசாங்கத்தின் சார்பாக போக்குவரத்துத்துறை உதவிச் செயலாளர் ஜோர்க் ஹெனக்கர்ஸ் (SPD) ஆகியோர் விவாதத்தில் பங்கு பெற்றனர். இக்கூட்டத்தின் விருப்பம் முந்தைய பல மாதங்கள் விவாதத்தின் தொடர்ச்சி அல்ல என்றும் "ஒரு நியாயமான தீர்வைக்" காண்பதுதான் அதன் நோக்கம் என்று முல்லர் அறிவித்தார்.

மூன்றரை மணி நேர விவாதத்திற்கு பின்னர் மேடோர்ன் "DB நிர்வாகக் குழு புதிய முடிவை திங்களன்று அளிக்கும்" என அறிவித்தார். ஆனால் திட்டம் பற்றித் தகவல்கள் ஏதும் கொடுக்கவில்லை. கொடுக்க இருக்கும் திட்டத்தில் இரயில் டிரைவர்கள் தொழிற்சங்கத்திற்கு தனியான ஒப்பந்தம் இருக்குமா என்பது பற்றியும் ஏதும் கூறவில்லை. இது தொழிற்சங்கத்தின் முக்கிய கோரிக்கைகளில் ஒன்றாகும். அத்துடன் தன்னுடைய உறுப்பினர்களுக்கு ஊதிய உயர்விற்கும் அது கோரியிருந்தது.

இரயில் டிரைவர்கள் தொழிற்சங்க தலைவர் ஷெல் திங்கள் கொடுக்கவிருக்கும் சலுகை அளிப்பு ஏற்கப்பட்டால், தொழிற்சங்கம் அக்டோபர் 31 வரை எந்த நடவடிக்கையையும் எடுக்காது என்றார். ஆனால் மாநாட்டின் முடிவுகள் தாமதமாக வந்ததால் தொழிற்சங்கம் வெள்ளியன்று வேலைநிறுத்தத்தை திருப்பப் பெற முடியவில்லை.

நீண்டதூரப் பயணங்கள், சரக்குப் போக்குவரத்தை வேலைநிறுத்தம் பாதித்தது என்றால் சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கும் விருப்பத்தை DB அறிவித்தது. ஒரு வாரம் முன்பு Chemnitz நகர தொழில் நீதிமன்றம், இரயில் டிரைவர்கள் தொழிற்சங்கத்தை நீண்டுதூர போக்குவரத்து பாதைகளில் வேலைநிறுத்தம் செய்வதற்கு தடைவிதித்து, அத்தகைய நடவடிக்கை "அளவிற்கு மீறியதாக இருக்கும்" எனக் கூறியது.

போக்குவரத்துத்துறை மந்திரி வொல்வ்காங் ரீவென்சே (SPD) உடைய, மற்றும் Transnet தொழிற்சங்கத்தின் உறுதியான ஆதரவும் DB இற்கு உள்ளது. இந்த விவகாரத்தில் சமரசம் செய்யவேண்டும் என்று இரயில் டிரைவர்கள் தொழிற்சங்கம் விடுத்த அழைப்பை ரீவென்சே நிராகரித்தார்

சோலிச சமத்துவ கட்சியின் துண்டுப் பிரச்சாரம் விவாதத்தைத் தூண்டுகிறது

வியாழன்று பிராங்கபேர்ட்/மைன் நகரத்தில் இரயில் டிரைவர்களுடன் WSWS நிருபர்கள் பேசினர். ஜேர்மனிய சோசலிச சமத்துவக் கட்சியின் (PSG) "DB க்கு எதிரான ஜேர்மனிய இரயில் டிரைவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு கொடுக்கவும்" என்ற அறிக்கை அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் அவர்கள் வழங்கினர். முழுத் தொழிலாள வர்க்கமும் இரயில் டிரைவர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்றும் ஜேர்மனிய அரசாங்கத்திற்கு எதிரான ஒரு அரசியல் எதிர்ப்புக்கு செல்ல இந்த வேலைநிறுத்தம் ஒரு தொடக்க கட்டமாக இருக்க வேண்டும் என்றும் அறிக்கை அழைப்பு விடுத்திருந்தது.

இரயில் டிரைவர்கள் அறிக்கை பற்றிக் கணிசமான ஆர்வத்தை காட்டினர்; அதை வாங்கிச் சென்ற பலரும் திரும்பி வந்து இன்னும் கூடுதலான பிரதிகளை தங்களுடைய சக ஊழியர்களுக்கு கொடுப்பதற்காக வாங்கிச் சென்றனர்.

இரயில் டிரைவர்களிடையே Transnet தொழிற்சங்க உறுப்பினர்களாக இருப்பவர்கள் தங்களுடைய தொழிற்சங்கம் கொண்டிருக்கும் பங்கு பற்றி பிராங்பேர்ட்டில் தங்கள் அதிருப்தியை தெரிவித்தனர். ஒரு உறுப்பினர் இராஜிநாமா செய்யலாம் என யோசிப்பதாகக் கூறினார். "Transnet ல் இருந்து இராஜிநாமா செய்யும் தறுவாயில் நான் உள்ளேன். 30 ஆண்டுகளாக நான் அங்கத்துவக்பணம் கட்டிவருகிறேன்; ஆனால் ஹன்சனும் தொழிற்சங்கத் தலைமையும் உறுப்பினர்களில் நலன்களை தங்கள் இதயத்தில் கொள்வில்லை என்ற கருத்துத்தான் எனக்கு இருக்கிறது."

ஒரு 4.5 சதவிகித ஊதிய அதிகரிப்பை Transnet ஏற்றுக் கொண்ட உடன்பாட்டிற்கு ஒரு இரயில் டிரைவர் ஆதரவு தெரிவித்து இரயில் டிரைவர்கள் தொழிற்சங்கம் (GDL) இரயில் தொழிலாளர்களுடைய ஐக்கியத்தை குலைப்பதாக குற்றம் சாட்டியபோது அவருடைய கருத்துக்கள் மற்ற இரயில் டிரைவர்களால் புறக்கணிக்கப்பட்டது; அவருடைய கருத்துக்கள் பொருளற்றவை என்றும் விஷயத்திற்கு முற்றிலும் பொருந்தாதவை என்றும் தள்ளப்பட்டன. "உண்மையில் Transnet தான் தொழிலாளர்களிடையே பிளவை மூட்டுகிறது. அவர்கள் செய்துகொண்டுள்ள ஒப்பந்தம் பணவீக்கத்திற்கு கூட தக்க ஈடு கொடுக்கவில்லை."

முன்பு இரயில் தொழிலாளர்கள் அனைவரும் ஒற்றை தொழிற்சங்கத்திற்குள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தனர். இரயில் டிரைவர்கள் தனியாக ஒழுங்கமைந்திருந்தாலும், ஊதிய பேச்சுவார்த்தைகள் எப்பொழுதம் கூட்டாகத்தான் நடத்தப்பட்டு வந்தன.

மற்றொரு இரயில் டிரைவர் அப்பொழுதுதான் இளவயது இரயில் டிரைவர்களுக்கு கொடுக்கப்படும் குறைந்த ஊதியம் பற்றி சக ஊழியர்களுடன் நடந்த விவாதத்தில் தான் அறிந்ததாக கூறினார்: "நான் ஒரு அரசாங்க ஊழியன்; ஆனால் பிராங்பேர்ட் நகரில் வாழ்வதும் மற்றும் ஒரு குடும்பத்தை இங்கு பராமரிப்பதும் இளம் சக ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் ஊதிய அடிப்படையில் முற்றிலும் இயலாத காரியம் ஆகும்." என்றார்.

ஒரு வாரத்திற்கு முன்பு இரயில் டிரைவர்கள் தொழிற்சங்கம் நடத்திய பகுதி வேலைநிறுத்தத்தின் போது ஒரு வழமையான டிரைவர் இடத்தில் பணி செய்யுமாறு தனக்கு ஒரு அழைப்பு விடுக்கப்பட்டது என்று அவர் தெரிவித்தார். "ஆனால் அதை நான் மறுத்துவிட்டேன்" என்றார். வேலைநிறுத்தத்தை உடைக்கும் வகையில் நடந்து கொள்ளும் ஊழியர் தான் ஒருவர் மட்டும் இல்லை என்பதை தெளிவுபடுத்தினார்.

Die Welt செய்தித்தாளின்படி, Deutsche Bahn கடந்த வெள்ளி இரயில் டிரைவர்களின் வேலைநிறுத்ததற்கு விடையிறுக்கும் வகையில் வேலை நீக்கம், தற்காலிகப் பணி நீக்கம் இவற்றை செய்வேன் என வாய்மூலம் தெரிவித்ததாக உள்ளது. இரயில் டிரைவர்கள் தொழிற்சங்கத்தின் சம்பள பேச்சுவார்த்தை ஆலோசகரான தோமஸ் ஷுற்ஸ "DBயின் துணைநிறுவனமான Regio வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தை தொடர்ந்து இரயில் டிரைவர்கள் சிலரை பணி நீக்கம் செய்ததை நாங்கள் அறிவோம்." என செய்தித்தாளிடம் கூறினார்.

இரயில் டிரைவர்கள் தொழிற்சங்கம் கருத்தின்படி, Regio Berlin Brandenburg மற்றும் Mecklenburg-Western Pomerania நியமித்த மூன்று இரயில் தொழிலாளர்கள் கடந்த வெள்ளியன்று வாய்மொழிமூலம் வேலைநீக்க முன்அறிவிப்பு கொடுக்கப்பட்டது என்றும் இதற்குக் காரணம் அவர்கள் நிறுவனத்தின் நெருக்கடி அட்டவணை சேவையின்படி, அதாவது வேலைநிறுத்தத்தை உடைப்பவர்கள் என்று நடந்த கொள்ள மறுத்ததால் என்று கூறப்படுகிறது. இரயில் டிரைவர்கள் தொழிற்சங்கம் மற்றொரு டிரைவர் பாடன்-வூர்டம்பேர்க்கில் தற்காலிக வேலைநிறுத்தத்திற்கு உட்பட்டார் என குறிப்பிட்டது.

சோலிச சமத்துவக் கட்சி அறிக்கை Alexanderplatz, Ostbahnhof என்னும் முக்கிய பேர்லின் இரயில் நிலையங்களில் வினியோகிக்கப்பட்டது. இரயில் டிரைவர்கள் தொழிற்சங்கத்தில் உள்ள ஒரு இளவயது டிரைவர் DB யின் இலக்கு "எவரையும் பாதிக்காத வகையில் ஒருவர் வேலைநிறுத்தங்களை மேற்கொள்ளலாம்" என்பதாகும் என்றார். ஒரு வேலைநிறுத்தத்தை தடை செய்வதற்கு பொருளாதாரக் காரணங்கள் கொடுக்கப்படும்போது "தொழிற்சங்கங்களை அகற்றி மூடிவிடலாம்" என்று அவர் கூறினார். தன்னுடைய உறுப்பினர்களுக்கு என்ன திட்டமிடப்பட்டுள்ளது என்பது பற்றிய தகவலைக் கொடுக்க இரயில் டிரைவர்கள் தொழிற்சங்கம் மறுத்துள்ளது பற்றி அவர் அதிருப்தியை தெரிவித்தார். செய்தி ஊடகத்தின் மூலம்தான் சில தகவல்கள் பகிரங்கமாகின்றன. இத்தொழிலாளரை பொறுத்தவரையில், மேலதிக நேரத்திற்கான ஊதியப் பிரச்சினை முக்கியமாகும். பல டிரைவர்களும் மேலதிக பணி மணித்தியாலங்களுக்கு ஊதியம் பெறாமல் வேலைசெய்கின்றனர்.

இருபது வயதின் ஆரம்பத்தில் இருக்கும் டினோ புளோசே, மமெலானி கொவால்ஸ்கி இருவரும் இதைத்தான் உறுதிபடுத்தினர். அவர்கள் ஒரு பயிற்சித் திட்டத்தில் பங்கு பெறுவதற்காக ஒரு உள்ளூர் வேலை மையத்திற்கு சென்று கொண்டிருந்தனர். டினோவின் மாமன் DB யில் ஒரு இரயில் டிரைவராக இருக்கிறார். "மிகுந்த அளவு ஊதியம் கொடுக்கப்படாத மேலதிக வேலைநேரப் பணி மற்றும் குறைந்த ஊதியங்கள்தான் உள்ளன" என்று அவர் தெரிவித்தார். "தொழிலாளருக்கு கடமைப்பட்டிருந்தாலும் கூட DB நிர்வாகம் பணம் கொடுப்பதில்லை. என்னுடைய மாமன் தனியார் இரயில் நிறுவனமான Inter-Connex க்கு மாறிவிடலாம் என்று யோசிக்கிறார்; அங்கு இதே குறைந்த ஊதியங்கள் இருந்தாலும் தொழிலாளர்கள் மேலதிகநேரப் பணி செய்ய வேண்டிய தேவை இல்லை."

அவ்விடம் வந்தவர்கள் பலரும் இரயில் டிரைவர்கள் எழுப்பியுள்ள கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். ஒரு சட்ட அலுவலகத்தில் பயிற்சி பெறும் இளைஞர் ஒருவர் இரயில் டிரைவர்கள் வேலை ஒரு பொறுப்பான வேலை என்றார். "அவர்கள் கடந்த காலத்தில் மிகவும் வெட்டுக்களை அனுபவித்துள்ளனர்; அவர்கள் வேலைநிறுத்தம் செய்வது முற்றிலும் நியாயமே." முந்தைய வேலைநிறுத்தங்கள் பற்றிய நீதிமன்றத் தடைகள் பற்றியும் இப்பெண்மணி தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்தார்; ஏனெனில் "அவை ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் இருக்கும் தன்னாட்சி உரிமையை மீறுபவை." என்றார் அவர்.

வழியே சென்றவர்களில் பலரும் இரயில்வே நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு கொடுக்கப்படும் மிகப் பெரிய சம்பளத்திற்கும் இரயில் டிரைவர்களுக்கு கொடுக்கப்படும் ஊதியத்திற்கும் இடையே இருக்கும் பெரும் பிளவை பற்றியும் கூறிப்பிட்டனர். 2006ம் ஆண்டு DB தலைவர் மேடோர்ன் 3.18 மில்லியன் யூரோக்களை, அதற்கு முந்தைய ஆண்டில் இருந்ததைவிட 100 சதவிகிதம் அதிகமாக பெற்றார். DB நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பயணிக்கும் ஆடம்பர கார்களை தான் பார்த்துள்ளதாக ஒரு பெண்மணி கூறினார். பெரும் பொறுப்பை கொண்டுள்ள இரயில் தொழிலாளர்களோ, "தங்கள் ஊதியம் அதிகரிக்காமல் இருப்பதையும், பொதுவாகவே 10 ஆண்டுகளாக ஊதியங்கள் அவ்வாறு இருப்பதையும் காண்கின்றனர்".

ஒரு வயதான வழிப்போக்கர் இறுதியில் சுருக்கிக் கூறினார்: "மேடோர்ன் கூடுதலான பணம் பெற்றுக் கொள்ளுகிறார்; மற்றவர்கள் மிகக் குறைவாகப் பெறுகின்றனர்."