World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Britain's Socialist Workers Party collaborates in union's betrayal of postal strikes

தபால்துறை போராட்டங்களை தொழிற்சங்கம் காட்டிக்கொடுப்பதில் பிரிட்டனின் சோசலிச தொழிலாளர் கட்சி உடந்தையாகிறது

By Paul Stuart
23 October 2007

Use this version to print | Send this link by email | Email the author

நடந்து வரும் தபால்த்துறை விவாதத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான முன்மொழியப்பட்ட ஒரு நிர்வாக உடன்பாட்டின் முதல் விரிவான விளக்க அறிக்கையை, அக்டோபர் 17ல், பிரிட்டன் சோசலிச தொழிலாளர் கட்சியின் வலைத் தளம் வெளியிட்டது. ரோயல் மெயிலில் (Royal Mail) பணிபுரியும் சோசலிச தொழிலாளர் கட்சி ஆதரவாளர்களிடம் இருந்து கிடைத்த ஒரு மறுமொழியாக வெளியிடப்பட்ட அவ்வறிக்கை, கட்சியின் செய்தித்தாள் பிரசுரிக்கப்பட்ட பின்னர் வெளியானதால் இணையத்தில் மட்டுமே காணப்படுகிறது.

இதில் குறிப்பிடத்தக்கதென்வென்றால், இந்த உடன்படிக்கை தான் கடந்த வாரம் தொலைத்தொடர்பு தொழிலாளர் சங்க பேச்சுவார்த்தை குழுவால் ஏற்று கொள்ளப்பட்டு, அக்டோபர் 15 மற்றும் 16ல் அதன் செயற்குழுவிலும் விவாதிக்கப்பட்டது. உத்தியோகபூர்வமான போராட்டங்களை நடத்த நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததால் அக்டோபர் 18, 19 மற்றும் அந்த வார நாட்களில் சங்கம் வேலைநிறுத்தத்தை ஒத்திவைக்கப்பட்டிருந்தபோது, உத்தியோகபூர்வமற்ற நடவடிக்கைகள் மூலம் லிவர்பூல், லண்டன் மற்றும் யோர்க்ஷெர் ஆகிய இடங்களில் தபால்துறை தொழிலாளர்களை மீண்டும் பணிகளுக்கு திரும்ப ஒன்று கூட்டுவதில் அது வெற்றி பெற்றது.

இந்நேரத்தில், பிரிட்டனின் 130,000 உறுப்பினர்களுக்கும் முன்மொழியப்பட்ட உடன்பாடு கிடைக்கவில்லை. இந்த உடன்படிக்கை மிகவும் மோசமானதாக இருப்பதாகவும், இதை அவர்களின் உறுப்பினர்களை ஏற்றுக்கொள்ள செய்யமுடியாது என்பதால் செயற்குழு மிகுந்த குழப்பத்தில் இருப்பதால் விவாதங்களை தாமதப்படுத்தி வருவதாக சோசலிச தொழிலாளர் கட்சி வட்டாரம் உறுதிபடுத்துகிறது. தொலைத்தொடர்பு தொழிலாளர்கள் தொழிற்சங்க (CWU) தலைவர் ஜேன் லோப்டஸ் உட்பட தொழிற்சங்கத்திற்குள் முன்னணி உறுப்பினர்களை அது கொண்டிருப்பதால், சோசலிச தொழிலாளர் கட்சி இதை நன்கு அறியும். சங்க தலைமையினால், மெளனமாக இருக்கும்படி திணிக்கப்பட்ட ஒழுங்கிற்கு கீழ்ப்படிந்து இதுவரை அது மெளனமாக இருந்தது. இவ்வாறு செய்ததன் மூலம், CWU வின் கட்டுப்பாட்டை மீறிவந்து பரந்த எதிர்ப்பை உருக்குலைக்க சங்கத்தலைமைக்கு ஒத்துழைத்ததில் சோசலிச தொழிலாளர் கட்சி நேரடியாக முக்கிய பங்கு வகித்தது. தற்போது தொழிலாளர்கள் CWU இனை இவ்உடன்பாட்டை நிராகரிக்க வலியுறுத்துகின்றனர்.

அதுமட்டுமின்றி, முன்னாள் தொழிலாளர் கட்சி பாராளுமன்ற உறுப்பினரான ஜோர்ஜ் கல்லோவேயின் தலைமையிலான Respect-Unity கூட்டணி கட்சியிலிருக்கும் பிரிட்டனின் பெரிய இடதுசாரி குழு (சோசலிச தொழிலாளர் கட்சி) அதனது அங்கத்தவர்கள் முற்றுமுழுதாக ஐக்கியப்பட்டுவிட்ட தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கடமை தவறாத பாதுகாவலர்கள் மற்றும் அரசியல் வக்காலத்து வாங்குபவர்கள் என்பதையும் உறுதிப்படுத்துகின்றது.

எவை விவாதித்தின் கீழ் உள்ளன என்பதற்கான அதன் சொந்த விளக்க அறிக்கையே, சோசலிச தொழிலாளர் கட்சியின் அரசியல் குற்ற நடவடிக்கைகளை குறிப்பிட்டு காட்டுவதாக உள்ளது. இந்த உடன்படிக்கை, "மிக அவசியமான உரிமைகளை அழித்துவிடும், நமது ஓய்வூதியங்களை பறித்துவிடும், பெரும் கொடுமைகளுக்கு வழி வகுக்கும், மேலும் நம்மை அதிகாரம் செய்ய அதிகாரிகளுக்கு பெரியளவிலான அதிகாரங்களை வழங்கும்" என இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. தொடர்ச்சியாக, "இது நம் அனைவருக்கும் மட்டுமின்றி பொது சேவைக்கும் ஒரு அச்சுறுத்தலாகும். முக்கியமாக, ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் தபால் நிலைய கதவடைப்புகள் மீது என்ன நடக்கிறது என்பது போன்ற முக்கிய பிரச்சனைகளில் இது மெளனமாக காக்கிறது." என்று குறிப்பிடுகிறது.

ஓய்வூதியங்கள் சார்ந்த விடயத்தில், ஓய்வு கால வயது 65 ஆக உயருகிறது. "தற்போதைய திட்டத்தின் கீழுள்ள உறுப்பினர்கள் தொடர்ந்து 60 வயதில் ஓய்வு பெறலாம், ஆனால் அவர்களின் ஓய்வூதியத்தில் சுமார் ஆயிரம் பவுண்டுகள் வரையிலான 'நிதி இழப்புகளை' ஏற்று கொள்ள வேண்டியிருக்கும். இரண்டடுக்கு தொழிலாளர்கள் முறைக்கு இட்டுச்செல்லப்படுவதற்காக, தற்போதைய திட்டம் புதிய உறுப்பினர்களுக்கு செல்லுபடியாகாது."

அருகில் உள்ள அலுவலகங்களுக்கு சென்று அவர்களின் அன்றாட பணிகளுக்கு அப்பாற்பட்டு பிற வேலைகளைச் செய்யவும், ஒவ்வொரு பிரிவிலும் மாற்றியமைக்ககூடிய வேலைசெய்யவதற்கு நாள் ஒன்றுக்கு ஒரு மணித்தியாலத்தில் இருந்து 30 நிமிடம் வித்தியாசப்படக்கூடிய பணிநேரத்தை பரீட்சிக்க ரோயல் மெயில் விரும்புகிறது. வினியோகம் தொடங்கும் நேரம் காலை 6.00 மணி முதல் 6.30 க்குள் இருக்க வேண்டும். 6.9 சதவீதம் என ஊடகங்களால் கூறப்படுவதுபோலல்லாது இரண்டு ஆண்டுகளுக்கு 5.4 சதவீதமான சம்பள உயர்வு வழங்கப்படுவதாக கூறப்படுகின்றது.

CWU தலைமையினுள் நடைபெற்ற விவாதங்களின் தெளிவற்ற அறிக்கையில், "தபால் உறுப்பினர்கள் பெரும்பான்மையினர் உடன்பாட்டில் திருத்தம் கொண்டு வர வாக்களித்துள்ளனர். திருத்தங்கள் கொண்டு வந்தாலும் கூட - நிராகரிக்க அவர்களுக்கு உரிமை உண்டு என்பதால் - சிலர் உடன்பாட்டை நிராகரித்து வாக்களித்துள்ளதாக" சோசலிச தொழிலாளர் கட்சி குறிப்பிடுகிறது.

CWUவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ள சிறிய மாற்றங்களை விசாரிக்க துணை பொது செயலாளர் டேவ் வார்டு ரோயல் மெயிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். உடன்படிக்கையை நிராகரிக்க கோரும்படி செயல்குழுவிற்கு ஓர் இரக்கமான கோரிக்கையை அனுப்பியதுடன் சோசலிச தொழிலாளர் கட்சி நிறுத்தி கொள்கிறது - அதாவது, அது ஒன்றையே அது விரும்பியிருந்தது. அதுபோன்ற எதுவும் நடக்காததால், அதற்கு பதிலாக வெளிப்படையாக மாற்றப்பட்ட உடன்பாட்டை அது தற்போது ஏற்று கொண்டிருக்கிறது.

கடந்த ஐந்து மாதங்களாக, கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த மற்றும் தபால்துறை ஊழியர்களின் ஐக்கியத்தை உடைக்க, CWU அதிகாரிகள் முடிந்த வரை அனைத்தையும் செய்திருக்கின்றனர். தொழிற்சங்கம் ரோயல் மெயிலுடன் பேச்சுவார்த்தைகளை நடத்துகையில், 'தொடரும் போராட்டங்கள்' தொழிலாளர்களை அவர்களுக்குள்ளேயே வேலைநிறுத்த எல்லைகளை தாண்ட செய்திருக்கிறதுடன் இடதுசாரி தபால்துறை தொழிலாளர்களை இருட்டில் கைவிட்டுவிட்டது. கடந்த வாரம் தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு வரவழைக்கவும் மற்றும் மாற்றங்களை செய்ய ஒருதலைப்பட்சமாக நிர்வாகம் செய்த முயற்சியால் தூண்டப்பட்ட உத்தியோகபூர்வமற்ற போராட்டங்களுக்கு உரிமைகோர CWU நிராகரித்துவிட்டது.

இந்த உடன்பாடு "துல்லியமாக தெளிவானது மற்றும் ஏற்று கொள்ளக் கூடியது" என கோர்டன் பிரெளனால் விளக்கப்பட்டிருந்த நிலையில், தொழிற்கட்சி அரசாங்கத்தினால் சொந்தமாக நியமிக்கப்பட்டிருந்த ரோயல் மெயிலின் தலைமை அதிகாரியான ஆடம் கிரோஜியரையும் மற்றும் தலைவரான அலன் லெய்டனை நீக்குவதற்கான அழைப்புவிடுவதன் மூலமாக பெருமளவில் அழுத்தம் கொடுத்ததைத் தவிர, தொழிற்சங்கத்தின் நடவடிக்கைகள் மீது சோசலிச தொழிலாளர் கட்சி வேறு எவ்வித விமர்சனங்களையும் முன்வைக்கவில்லை.

ஆகஸ்டு 9ல் CWU முதல்தொடர் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ்பெற்று கொண்டபோது, "தொழிலாளர்களுக்கு உண்மையான சலுகைகளை ரோயல் மெயில் வழங்கும்" முன்பாகவே போராட்டங்களை நிறுத்தி வைத்ததற்காக மென்மையாக CWU இனை கண்டனம் தெரிவிப்பதற்கு முன்னால், "ஒரு ஆணவம் பிடித்த ரோயல் மெயில் நிர்வாகத்தை பேச்சுவார்த்தை மேஜைக்கு" கொண்டு வர நெருக்கடி அளித்தமைக்காக CWU தலைவர்களை சோசலிச தொழிலாளர் கட்சியின் ஆகஸ்டு 18ம் தேதி பதிப்பு பாராட்டியது. உத்தியோகபூர்வமற்ற நடவடிக்கை தமது கட்டுப்பாட்டைவிட்டு செல்லும் அபாயத்தையும் மற்றும் தொழிற்கட்சி அரசாங்கத்துடனான மோதலுக்கு இட்டுச்செல்லும் என்பதை சோசலிச தொழிலாளர் கட்சியும் CWUம் நன்கு அறிந்திருந்தால் வேலைநிறுத்தத்தை கைவிட்டன.

ரோயல் மெயில் மற்றும் தொழிற்சங்கத்திற்கிடையே பேச்சுவார்த்தை முறிவு பெற்ற பின்னர், CWU தலைமையின் ஒரு பிரிவு போராட்டங்களை புதுப்பிக்க மறுத்ததாக சோசலிச தொழிலாளர் கட்சியின் செப்டம்பர் 18ம் தேதி பதிப்பு வெளியிட்டது. திரைக்குப் பின்னால் நடந்து வந்த சதிகளில் ஈடுபட்டடோரையும் மற்றும் அதன் பின்னால் உள்ள அபாயம் பற்றி தபால்துறை தொழிலாளர்களுக்கு எச்சரிப்பதற்கு பதிலாக, சோசலிச தொழிலாளர் கட்சி அதுவொரு பெரிய தவறு தான் என ஒப்புக்கொண்டு, ஆனால் CWU அதிகாரத்துவத்தின் இயல்பில் உள்ளார்ந்த ஒன்றல்ல என கூறி அந்த பிரச்சனையை கைவிட்டது.

CWU இன் ரோயல் மெயிலுடனான சமீபத்திய உடன்பாடு பற்றிய கருத்துரையில், அக்டோபர் 16ம் தேதி சோசலிச தொழிலாளர் பதிப்பு (செய்தித்தாளில் வெளியிடப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக உடன்படிக்கையின் தகவல்கள் இணையத்தளத்தில் வெளியாயின) இந்த வெற்றி ஜெயிக்கப்பட்டிருந்தால், என தெரிவித்து குறிப்பிடுவதாவது: "ரோயல் மெயில் மற்றும் தபால்துறை தொழிலாளர்களுக்கு இடையே நடக்கும் இந்த தீவிரமான போராட்டத்தில், ஒரு புதிய உடன்படிக்கையை முன்வைக்க இப்பிரச்சனை முழுவதிலும் 'உடன்பாடு என்பது உடன்பாடுதான்" என்று திரும்பதிரும்ப கூறிவருவதற்கு மத்தியிலும் நிர்வாகம் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதை CWU அறிந்திருக்கிறது''.

ரோயல் மெயிலுக்கு எதிராக ஒரு தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களை தொழிலாளர்களின் முதுகில் குத்தும் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு இணையாக காட்ட சோசலிச தொழிலாளர் கட்சி வேண்டுமென்றே முயற்சி செய்கிறது.

ரோயல் மெயிலுடான ஒரு பிரயோசனமற்ற சமரசத்தை பாதுகாக்கும் முயற்சிகளை பரப்பிவரும் ஒரு மனிதரான, டேவ் வார்டுக்கு உதவ இந்த கட்சி தொடர்ந்து நேரம் ஒதுக்கி வருகிறது.

போராட்டத்திற்கு முன்னதாக, ஒரு "நலன்கள் சார்ந்த பிரச்சனை" குறித்து தேசிய தொழிற்கட்சி செயற்குழு உறுப்பினர் பதவியில் இருந்து வார்டு வெளியேறினார். அக்டோபர் 9ம் தேதி CWU கூட்டத்தில் அரசாங்கத்தை பலமாக தாக்கி பேசியதற்காக சோசலிச தொழிலாளர் கட்சி அவரை பாராட்டுகையில் அவர் அந்த நேரத்திலும் உத்தியோகபூர்வமல்லாத நடவடிக்கைகளை தவிர்க்கும்படி தொழிலாளர்களுக்கு கட்டளை பிறப்பித்து கொண்டிருந்தார். அவரின் தாக்குதல் Leighton மற்றும் Crozier நியமனத்திற்காக அரசாங்கத்திற்கெதிரான ஒரு பரிதாபகரமான குற்றச்சாட்டை கொண்டிருந்ததுடன், "கோர்டன் பிரெளனோ அல்லது தொழிற்கட்சி அரசாங்கமோ நமது நலன்களை பகிர்ந்து கொள்ளாது என்று நான் நினைக்கிறேன்." என குறிப்பிட்டார்.

சோசலிச தொழிலாளர் கட்சி நேரத்திற்கு நேரம் தொழில் கட்சியுடனான CWU இணைப்பு குறித்த பிரச்சனையை எழுப்புகிறது. எப்போதும் பிற இடதுசாரி கட்சிகளான Respect மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சிக்கு தொழிற்சங்க நிதியை மறுவினியோகம் செய்வதற்கு ஆதரவளிப்பது என்ற என்ற ஒரு எல்லைக்குள் இருந்துதான் இப்பிரச்சனையை எழுப்புகின்றதே தவிர ஒரு போதும் CWU தொழில் கட்சியிலிருந்து பிரியவேண்டும் என்ற நோக்கத்தில் அல்ல. இதனாலான அரசியல் அறுவடை ''சாதகமானது'' ஏனெனில் தொழிற்கட்சி "ஒழுங்கமைக்கப்பட்ட" தொழிலாள வர்க்கத்திடம் ஏதோ உறவைத் தக்க வைத்திருப்பதை அது உறுதிபடுத்துகின்றது என சோசலிச தொழிலாளர் கட்சி குறிப்பிடுகிறது. 2004ல் ஜோர்ஜ் கலோவே இதை தெளிவுபடுத்தினார்: ''தொழிற்கட்சியில் இருந்து தொழிற்சங்ககளை பிரியுமாறு Respect அழைப்புவிடவில்லை என்று கூறிய அவர், அனைத்து சங்கங்களும் தொழிற்கட்சிக்கு சொந்தமான கிளைகளாக மாறி விட கூடாது." என்றார்.

நைன் எல்ம்ஸ் மத்திய அஞ்சலகத்தை உட்கொண்டிருக்கும் தென்மேற்கு லண்டனுக்கான CWU வின் கொள்கை பரப்பு பிரதிநிதி, பெளல் கோஸ் (கடந்த வார உத்தியோகபூர்வமற்ற ஒரு போராட்டம் குறித்து) தொழிற்கட்சி மீது தபால்துறை ஊழியர்களின் விரோத உணர்வுகள் பற்றிய சில குறிப்புகளை வெளியிட்டார். அவர் சோசலிச தொழிலாளர் பத்திரிகையிடம் கூறுகையில், "பிரெளன் மீதான எதிர்ப்பு உணர்வு அடிமட்டத்தில் மேலும் வலுவாக உள்ளது. தற்போது நைன் எல்ம்ஸ் அஞ்சலக மையத்தைப் பகுதியில், அரசியல் நிதி அளிப்பதை நான் நிறுத்தி கொண்டால், எனக்கு 95 சதவீத சலுகைகள் கிடைக்கும்." என்று தெரிவித்தார். எவ்வாறிருப்பினும், "நாம் நிதியளிப்பதை தொடர்ந்துசெய்ய வேண்டுமானால், தொழிற்கட்சிக்கு மட்டும் பிரத்தியேகமாக இருப்பதை தடுக்க வேண்டும். மேலும், அது நமது சங்க கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மற்றும் வேட்பாளர்களுக்கும் மட்டுமே நிதி அளிக்க பயன்படுத்தப்பட வேண்டும்." என்று தெரிவித்தார்.

கோஸ் மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சியால் பகிர்ந்து கொள்ளப்பட்ட இதுபோன்ற ஒரு நிலைப்பாட்டின் முக்கிய நோக்கம் என்னவென்றால், தொழிற்கட்சியுடன் ஒரு அரசியல் முறிவை தடுத்துவைப்பதாகும்.

2003ல் உருவான மற்றும் அப்போதைய பிரதம மந்திரி டோனி பிளேயரால் "பிரச்சனைக்குரிய குழுவாக" வரையறுக்கப்பட்ட, இடதுசாரி தொழிற்சங்க வார்த்தைஜாலவாதிகளின் ஒரு சிறிய குழு ஒன்றின் உறுப்பினரான CWU பொது செயலாளர் பெல்லி ஹேய்ஸுடன், கடந்த சில ஆண்டுகளாக சோசலிச தொழிலாளர் கட்சி சந்தர்ப்பவாத உறவுகளை மேம்படுத்தி இருக்கிறது. நாற்றமெடுத்த தொழிற்சங்க அலுவலகங்களுக்குள் ஒரு புத்துணர்வூட்டும் காற்று வீசுவதாக அதை அந்நேரத்தில் சோசலிச தொழிலாளர் கட்சி வர்ணித்திருந்ததுடன், இது தொழிற்சங்கங்கள் அடிப்படையில் ஆரோக்கியமாக இருப்பதற்கான சாட்சியமெனவும், அவர்களின் தலைவர்கள் புதிய தொழிற்கட்சிக்கு (New Labour) எதிராக ஒரு போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என அறிவித்தது.

யுத்த கூட்டணியை நிறுத்து என்ற அமைப்பின் கூட்டங்களிலும் மற்றும் கட்சியால் நடாத்தப்படும் "மார்க்சிசத்திற்கான" வருடாந்த கல்வி பள்ளியிலும் கலந்துகொண்டதற்கும் சோசலிச தொழிலாளர் கட்சியால் ஹேய்ஸ் பாராட்டப்பட்டு இருக்கிறார். இந்த ஆண்டு நிகழ்வில், தனியார்மயமாக்குதலுக்கு ஒரு போர்க்குணமிக்க எதிர்பாளர் போல அணி வகுத்த அவர், அதே நேரத்தில் ரோயல் மெயிலை பெருநிதி நிறுவனங்களிடம் ஒப்படைக்க அனுமதிக்கும் ஒரு கட்டமைப்புக்கும் தயார் செய்கின்றார். அக்கூட்டங்களில் கலந்து கொண்ட சில வாரங்களுக்குள், ஹேய்ஸ் Compass குழுவிலும் இணைந்தார். அதன் தலைவர்கள் புதிய தொழிற்கட்சி திட்டத்தில் முக்கிய பங்கு வகித்ததுடன், தற்போது அது சமூக சந்தையின் சிறந்த பண்புகள் பற்றி அறிவிக்கிறது.

2002TM CWU இன் தேசிய செயற்குழுவில் முதல் தொழிற்கட்சி அல்லாத உறுப்பினராக பொறுப்பேற்ற சோசலிச தொழிலாளர் கட்சியின் ஜேன் லோப்டஸ், ஜூன் 2007ல் CWU தலைவராக பொறுப்பேற்றார். தனியார்மயமாக்கலுக்கான CWU வின் கூட்டணியையும் மற்றும் பெருமளவிலான பணியாளர் குறைப்பை எதிர்ப்பதற்காக தபால்துறை ஊழியர்கள் இப்பெண்மணியை தேர்ந்தெடுத்தனர். அவர் வாக்களித்தது CWU செயற்குழுவில் இரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது, ஆனால் 2004ல் ரோயல் மெயில் மற்றும் CWUஇடையிலான ''பாரிய மாற்றத்திற்கான'' ஒப்பந்தத்திற்கு (இடது ஒற்றுமையை பாதுகாக்கும் நலன்களின் அடிப்படையில் என போலியாக கூறப்பட்டது) அவர் வாக்களித்தது மற்றும் 2006ல் சோசலிச தொழிலாளர் கட்சி மறுக்காத குற்றச்சாட்டான "வருங்கால வடிவமைப்பு" திட்ட ஆவணத்தை ஏற்க அவர் வருகை தராதது குறித்து அரசியல் எதிர்பாளர்கள் அவரை குற்றஞ்சாட்டி இருக்கிறார்கள்.

இந்த குற்றஞ்சாட்டுகள் 2002ல் சோசலிச தொழிலாளர் கட்சியின் சார்லி கிம்பர் மற்றும் ஹேய்ஸ் இடையேயான ஒரு பரிமாற்றத்தின் சாராம்சத்தை அளித்தது. சோசலிச தொழிலாளர் பத்திரிகை உத்தியோகபூர்வமற்ற அரசியல் வேலைநிறுத்தங்களை ஊக்கப்படுத்தியமைக்காக அதனை தாக்கி மற்றும் கட்டுப்பாடுள்ள சோசலிச தொழிலாளர் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் அதனது தீவிரவார வார்த்தைஜாலங்களை எதிர்த்ததுடன், சோசலிச தொழிலாளர் கட்சி இது போன்ற ஒரு கொள்கையை அதன் கிளைகளிலோ அல்லது தேசிய செயற்குழு அளவிலோ முன்வைக்கவில்லை" என ஹேய்ஸ் கூறினார். இருப்பினும், CWU ஆகஸ்ட் 9ம் தேதி போராட்டங்களை கைவிட்டதுடன், ரோயல் மெயிலுடனும் இரகசிய பேச்சுவார்த்தைக்கு சென்றது பற்றி சோசலிச தொழிலாளர் பத்திரிகையில் தொடர்ந்து எழுதிவரும் லோப்டுஸு போராட்டங்களை காட்டி கொடுப்பதற்கான CWUஇன் ஒன்றுபட்ட முயற்சி குறித்த ஒரு அறிக்கையை கூட இதுவரை வெளியிடவில்லை.

முன்னாள் பழைமைவாத மற்றும் தொழிற்கட்சி அரசாங்கங்களுடன் CWU இனதும் மற்றைய தொழிற்சங்கங்களினதும் கூட்டழைப்பு தொடர்பாக உள்ளடங்கி இருக்கும் பாடங்களை தொழிலாளர்கள் இன்னும் தெரிந்து கொள்ளவில்லை என சோசலிச தொழிலாளர் கட்சி கூறுகிறது. அதற்கு பதிலாக, சோசலிச தொழிலாளர் பத்திரிகை இவ் தொழிற்சங்க அதிகாரத்துவம் தமது சிறப்பு நலன்களுக்கும், தொழிற்கட்சி அரசாங்கத்துடனான கொள்கையற்ற அரசியல் உறவிற்கும் அச்சுறுத்தலான எந்தவொரு இயக்கத்தையும் அதன் பயங்கள் மற்றும் சுயநலங்கள் காரணமாக ஒடுக்கிவிடும் என்ற கருத்துக்களால் நிரம்பியுள்ளது. தொழிற்சங்க செயற்குழு உறுப்பினர்கள் சோசலிச தொழிலாளர் பத்திரிகையில் ஒரு நட்புரீதியான வரவேற்பை பெறுவதுடன் மற்றும் அவர்கள் தொடர்பாக எவ்வித விமர்சனமும் முன்வைக்கப்படுவதில்லை. சோசலிச தொழிலாளர் கட்சியின் அனைத்து கட்டுரைகளும், சங்க உறுப்பினர்களிடம் CWU வின் கொள்கைகளை எவ்வாறு தெளிவாக கொண்டு செல்லலாம் என்ற ஒரு அறிவுரைபோல் அமைந்துள்ளன.

1840ல் அனைத்து சங்கங்களும் உருவாக்கப்பட்டதில் இருந்து அடிப்படையில் எதுவும் மாறவில்லை எனவும், அவைகள் முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தின் தாக்குகளுக்கு எதிராக தொழிலாள வர்க்க மக்களுக்கு சிறந்த பாதுகாப்பு அமைப்பாக தொடர்ந்து இருப்பதாக சோசலிச தொழிலாளர் கட்சி வாதிடுகிறது. ரோயல் மெயிலின் கட்டவிழ்த்து விடப்பட்ட தாக்குதல்களுக்கு எதிரான போராட்டங்களை தபால்துறை ஊழியர்கள் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டுமானால், CWU தலைமை மற்றும் அதன் இடதுசாரி தூணாாக இருக்கும் சோசலிச தொழிலாளர் கட்சிக்கும் எதிராக ஒரு அரசியல் கிளர்ச்சியை செய்யவேண்டும். CWU வால் முன்னெடுக்கப்படும் எவ்வித உடன்படிக்கையையும் தொழிலாளர்கள் நிராகரிப்பதுடன், தொழிற்சங்கத்திடம் இருந்து போராட்டத்தை தமது கைகளில் எடுத்து, ஒரு சோசலிச முன்னோக்கின் அடிப்படையில் போராடும் அனைத்து தொழிலாளர்களையும் கொண்ட சுயாதீனமான குழுக்களை அமைக்க தொழிலாளர்கள் முன்வர வேண்டுமென சோசலிச சமத்துவக் கட்சி கேட்டுக்கொள்கிறது.