World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

French police attacked in Guinea while expelling two immigrants

இரு புலம்பெயர்ந்தோரை வெளியேற்றியபோது கினியில் பிரெஞ்சுப் போலீசார் தாக்கப்பட்டனர்

By Françoise Thull
10 September 2007

Use this version to print | Send this link by email | Email the author

Diaby Soureba, Mohamed Lamine Diaby என்று அழைக்கப்படும் இரு வசிவிட அனுமதி இல்லாத புலம்பெயர்ந்தவர்கள் (ஆவணமற்றவர்கள் என அழைக்கப்படுபவர்கள்) ஆகஸ்ட் 16ம் தேதி கோடை விடுமுறை நாட்களுக்கு நடுவே, பிரான்சில் இருந்து வெளியேற்றப்பட்டு அவர்களுடைய நாட்டிற்கு சென்ற ஒரு மொரோக்கோ ரோயல் ஏயர் விமானத்தில் முன்னாள் பிரெஞ்சு காலனியான Guinea-Conakry க்கு அனுப்பப்பட்டனர்.

கணக்கிலடங்கா முந்தைய பொதுமக்களுக்கு தெரியப்படுத்தாத வெளியேற்றங்களுக்கு மாறாக, Souareba மற்றும் Diaby வெளியேற்றப்பட்டது கினியாவிற்கும் பிரான்ஸிற்கும் இடையே ஒரு தூதரக நிகழ்வை தூண்டிவிட்டதால், இது பொது மக்களுடைய கவனத்தை ஈர்த்தது. இந்நிகழ்வு இத்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சூழ்நிலையையும் பிரான்சில் புலம்பெயர்ந்தோர் மீது அதிகரித்த வகையில் நடத்தப்படும் தாக்குதலையும் உயர்த்திக் காட்டுகிறது.

இரு ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரும் இரண்டு மாதங்களுக்கு முன்பு பிரான்சின் வடக்குப் பகுதியில் உள்ள Lille என்னும் இடத்தில் பிரான்சில் தாங்கள் வாழும் உரிமையை பெறும் கடின முயற்சிக்காக ஒரு பட்டினிப் போராட்டத்தை நடத்தியிருந்தனர். வெளியேற்றப்பட நேரிடும் என்ற அச்சத்தை எதிர்கொண்ட அவர்கள் Lille ல் உள்ள உள்ளூர் தொழிற்சங்கக் கட்டிடத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கு கொண்டனர்.

அந்தக் கட்டிட ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டபின், இரு தொழிலாளர்களும் எல்லைப் பாதுகாப்பு படை (றிஷீறீவீநீமீ கிuஜ் திக்ஷீஷீஸீtவீகக்ஷீமீsறிகிதி) என்னும் போலீசின் சிறப்புப் படையில் இருந்த ஆறு உறுப்பினர்களால் கினியாவிற்கு திருப்பி அழைத்துச் செல்லப்பட்டனர். கினிய தலைநகரான கோனாக்ரிக்கு வந்து சேர்ந்தவுடன் போலீசார் அவர்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியதாக குற்றம் சாட்டினர். அவர்களுடைய கருத்துக்களுக்கு பல பயணிகளுடைய ஆதரவு கிடைத்தது.

ஆகஸ்ட் 16ம் தேதி அவர்கள் விமானத்தில் இருந்து கோனாக்ரியில் இறங்கிய பின், அவர்களுக்கு ஆதரவு கொடுக்க திரண்டிருந்த கூட்டத்தைத்தவிர, கினிய போலிசாரும் அவர்களுக்கு ஆதரவாக தலையிட்டனர். Nouvel Observasteur Internet site கொடுத்துள் தகவலின்படி, "PAF கையெழுத்திட்டிருந்த விசாரணை அறிக்கை", "சம்பந்தப்பட்ட ஆறு போலீஸ் அதிகாரிகள் வரவேற்பு குழுவினால் கோனாக்ரியில் இறங்கியதும் எதிர்கொள்ளப்பட்டபோது, அக்குழுவில் இரு கினிய போலீஸ் அதிகாரிகளும் இருந்தனர்" என்று கூறப்பட்டது. அவர்களில் ஒருவர் "பிரெஞ்சுப் போலீசார் ஒருவரை தாக்கினார்" என்று அறிக்கை தொடர்ந்து கூறியது. "போலீசார்கள் தாக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டார்கள்... பல அவமதிப்புச் சொற்களை கேட்க நேரிட்டது.", "பல உதைகளையும், அடிகளையும் வாங்க நேரிட்டது". ஒரு போலீஸ் தலைமை அதிகாரி முன்பாகவே கினியப் போலீசார் அவர்களை அவமதித்தனர். "இந்த ஆவணத்தின்படி ஒரு கினிய பெண் போலீஸ் அதிகாரி 'காலனித்துவம் ஒழிந்து விட்டது" என்றும் சத்தமிட்டார்."

இரு வெளியேற்றப்பட்ட நபர்கள் கோனாக்ரி விமான நிலையத்திற்கு வரவிருந்தது முன்கூட்டியே அறியப்பட்டிருந்தது; "The Undocumented Immigrants Committee in the North [of France] என்ற அமைப்பின் செயல்பாடுதான் இதற்கு ஓரளவு காரணமாக இருந்தது. (CSP-59). இக்குழுவின் செய்தித் தொடர்பாளர்களுள் ஒருவரான Said Bouamama ஐரோப்பா 1 வானொலியிடம், "தங்கள் தாய்நாடு திரும்பும் நேரத்திலும் இங்கு அவர்களுக்காக பாடுபட்ட நாங்கள், அங்கும் கைவிடப்பட மாட்டார்கள் என்ற கொள்கையை கொண்டிருக்கிறோம். எனவே அக்குடும்பங்களுடன் தொடர்பு கொள்ளுகிறோம்; ஏனெனில் அவர்கள் [பிரான்சிற்கு] மீண்டும் வரவேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். வெளியேற்றப்படும் நபர்களின் கினியாவில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வரவேற்புக்குழு அமைக்கப்படுகிறது மற்றும் அவர்கள் திரும்பி வருவதற்கான போராட்டத்தை ஒழுங்கமைக்கிறார்கள்; இதையொட்டி அவர்கள் மீண்டும் திரும்பி வரமுடியும்; நாங்களும் அவ்விதத்தில் செயல்புரிவோம்" என்று கூறினார்.

இந்த நடவடிக்கையும் கோனாக்ரியில் கினிய போலிசாரின் போக்கையும் பிரெஞ்சு அரசாங்கம் கண்டித்துள்ளது. கினிய அரசாங்கத்திடம் இருந்து இதுபோன்ற நடவடிக்கைகள் மீண்டும் வராது என்ற உறுதிமொழியை பிரான்ஸ் விளக்கமாகக் கேட்டுள்ளது.

இந்நிகழ்விற்கு பின்னர் போலீசாரின் தொழிற்சங்கங்களும் குறுக்கிட்டன. வெளியேற்றத்திற்கு பொறுப்பாக இருக்கும் அதிகாரிகளுக்கு தக்க பாதுகாப்பு வேண்டும் என்று அவை கோரியுள்ளன.

வெளியுறவு அமைச்சரகம், கினிய அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், அவர்கள் "இத்தகைய நிகழ்வுகள் இனி நடக்காமல் தவிர்க்கும் வகையில் தம் பிரதிநிதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தி, வரவேற்பு நிகழ்ச்சியை பார்த்துக் கொள்ளப் போவதாகவும்" முடிவெடுத்துள்ளதாக அறிவித்தது. உள்துறை மந்திரியான Michele Alliot-Marie (UMP), கினிய அரசாங்கம் "பிரான்சிற்கு தன்னுடைய மன்னிப்புக்களை தெரிவித்ததாக" கூறினார். ஆகஸ்ட் 24ம் தேதி Le Figaro வில் வந்துள்ள கட்டுரையின்படி, கினிய அரசாங்கம் இக்கூற்றை மறுத்ததுடன், "அதன் வருத்தங்களை" மட்டுமே வெளியிட்டதாகவும்; ஏனெனில் மற்ற நாட்டுக் குடிமக்களை அதிகாரிகளுக்கு முன்னறிவிப்பு கொடுக்காமல் வெளியேற்றும் ஒரே நாடு உலகத்தில் பிரான்ஸ்தான். எங்களுக்கு பிரான்ஸ் எச்சரிக்கை கொடுத்திருந்தால் இந்நிகழ்வைத் தடுக்கும் வகையில் கினியா நடவடிக்கைகள் எடுத்திருக்கும்." எனக்கூறியதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், பிரெஞ்சு அரசாங்கம், போலீஸ் நடவடிக்கைகளை நெறிப்படுத்தும் நோக்கத்துடனும் வெளியேற்றத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீது ஒரு ஆத்திரமூட்டல் செயற்பாடு போலவும் உடனடியான வெளியேற்றத்தை செயல்படுத்திய PAF ஐச் சேர்ந்த ஆறு போலீஸ் அதிகாரிகளையும் பகிரங்கமாக ஆதரித்தது. "தைரியமான செயல்களுக்காகவும், கடமை உணர்விற்காகவும் அவர்களுக்கு பதக்கம் வழங்கப்படும்" என்ற அறிவிப்பு வந்தது.

கினிய பிரதம மந்திரி Lansana Koyate மற்றும் ஜனாதிபதி Lansana Conte ஆகியோரது பதில் நடந்தவற்றைக் குறைத்துக் கூறும் வகையில் இருந்தது. "நிகழ்ச்சி நடந்ததை உறுதிப்படுத்தினாலும், கினிய போலீசார் பிரெஞ்சு போலீஸ் தரப்பில் ஒரு கோணத்தில் கொடுக்கப்பட்ட தொகுப்பை ஏற்காமல் "கினிய போலீசார் பிரெஞ்சு போலீசார்மீது தாக்குதல் நடத்தினர்" என்பதை மறுத்துள்ளனர்.

Gunea-Conakry என்பது 9 மில்லியன் மக்களையே கொண்ட ஒரு முன்னாள் பிரெஞ்சு காலனி ஆகும். ஐக்கிய நாடுகளில் 2006ம் ஆண்டு உலக மனித வளர்ச்சி அறிக்கையின்படி கினியா வளர்ச்சித் துறையின் குறியீட்டில் 177 நாடுகளில் 160 வது ஆக உள்ளது. கினியாவின் Solidarity இன் ஆசிரியர் ஐரோப்பா 1 வானொலிக்கு நாட்டின் நிலைமை பற்றிச் சுருக்கமாகக் கூறினார்: "நாங்கள் வளர்ச்சியுற்று வரும் நாடு; இங்குள்ள மக்களுக்கு நாள் ஒன்றுக்கு ஒரு டாலருக்கு மேல் வருமானம் கிடையாது. குடும்பங்கள் புலம்பெயர்ந்து சென்றிருப்பவர்களை நம்பியுள்ளன. எனவே அவர்கள் திரும்பி வருவதைப் பார்த்தல் பெரும் திகைப்பைக் கொடுக்கிறது; இது கடுமையான விஷயம் ஆகும்.":

தற்போது நாட்டை காலரா தொத்துவியாதி வேறு பீடித்துள்ளது; பொதுச் சுகாதாரத்துறை இயக்குநர் டாக்டர் மஹ்மத் மஹி பாரியின் கூற்றின்படி, ஜனவரி மாதத்தில் இருந்து 1,764 பேர் பாதிக்கப்பட்டு, 67 பேர் இதனால் இறந்துள்ளனர். மிகவும் பாதிக்கப்பட்ட நகரம் தலைநகரமாகும்; இங்கு 827 பேர் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 32 இறப்புக்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. "ஏழைகளின் வியாதி" என்று அழைக்கப்படும் காலரா நல்ல சுகாதார வசதி, சுகாதார உள்கட்டுமானம், போதுமான குடிநீர் ஆகியவை இல்லாத நிலையுடன் தொடர்பு கொண்டதாகும்.

ஆகஸ்ட் 24ம் தேதி ரொட்டி தயாரிப்பாளர்கள் நடத்திய ஒரு நாள் வேலை நிறுத்தத்தினால் கோனாக்ரியின் பெரும்பாலான மக்களுக்கு ரொட்டி இல்லாமற் போயிற்று. மாவின் விலை உயர்வை எதிர்த்து ரொட்டி தயாரிப்பாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். ஒரு ரொட்டித் துண்டின் விலை 1,200 ல் இருந்து 2,000 கினிய பிராங்குகள் என்ற முறையில் கிட்டத்தட்ட இரு மடங்காயிற்று.

கினியர்கள் தஞ்சம் கோரும் நிலை பெரிதும் அதிகமாகிவிட்டது; இது பொருளாதார காரணங்களை ஒட்டி அல்லாமல், அரசியல் காரணத்தையும் கொண்டுள்ளது. அரசாங்கத்திற்கு விரோதி எனக் கருதப்படுபவர்கள் அரசியலமைப்பின் தடையையும் மீறி, முறையாக கைதுசெய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுகின்றனர். இத்தகைய வாழும் நிலைமைகளுக்கு எதிராகப் போரிட வேண்டும் என்ற மக்களின் உறுதியைத்தான் ஆவணமற்ற இரு கினிய வெளியேற்றப்பட்டவர்கள் பற்றிய எதிர்ப்பு பிரதிபலிக்கிறது.

Guinea-Conakry இன் தற்போதைய அரசாங்கம் இவ்வாண்டு தொடக்கத்தில் ஒரு பொது வேலைநிறுத்தம், எழுச்சி என்று ஒரு மாத காலத்திற்கு அனைத்து மக்களாலும் மேற்கோள்ளப்பட்ட நிகழ்விற்குப் பின் அதிகாரத்திற்கு வந்துள்ளது. அமைதியான முறையில் ஜனவரி மாதம் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்று அரசாங்கத்தால் குருதி கொட்டிய முறையில் அடக்கப்பட்டது. புதிய அரசாங்கம் கடந்த மார்ச் மாதம் பாரிசின் உத்தியோகபூர்வ ஆதரவைப் பெற்றது. Kan-Kan site வானொலியின்படி, பிரான்சின் ஒத்துழைப்பு வளர்ச்சி, பிரெஞ்சு பேசும் நாடுகள் அமைச்சரக மந்திரியான Madam Brigitte Girardin, புதிய அரசாங்கத்தின் தலைவர் Lansana Kouyate பதவியேற்ற மறுநாள் அங்கு சென்று உடனடி உதவியாக 1.1 மில்லியன் யூரோக்களை அறிவித்திருந்தார்.

பிரான்சிற்கு இம்முன்னாள் குடியேற்றத்தின்பால் உள்ள அக்கறை, புதிய வலதுசாரி UMP யின் கோலிச பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி ஜூன் மாத நடுப்பகுதியில் முறையாக அவருடைய அரசாங்கம் அமைக்கப்படும் முன்னரே Kouyate ஐ ஆர்வத்துடன் வரவேற்றிருந்தார். கினிய பிரதம மந்திரிக்கு பட்ஜெட்டில் அளிக்கப்பட உள்ள 24 மில்லியன் யூரோக்கள் உறுதி மொழியாக கூறப்பட்டன.

குறிப்பாக ஆவணமற்ற தொழிலாளர்கள் அன்றாடம் தொந்திரவிற்கு ஆளாகுவதால் விளைகின்ற, செயற்கைக் கோள் தொலைக்காட்சிகள் மூலம் ஒளி பரப்பப்படுகின்ற; பிரான்சில் இருந்து புலம்பெயர்ந்தோர்ர்கள் வெளியேற்றப்படும் காட்சிகள், பிரான்சின் போலீஸ் தலையீடுகளில் அதிகரித்த முறையில் இருக்கும் வன்முறையையும் வெளிப்படுத்துகிறது. இது கினியா மற்றும் பிரான்சில் இருக்கும் மக்களுடைய சீற்றத்தை அதிகப்படுத்தத்தான் உதவியுள்ளது.

மே மாதம் சார்க்கோசி அதிகாரத்திற்கு வந்த பின்னர், சமூக விரோத மற்றும் மிருகத்தனமான புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகளை கடைபிடித்துள்ளார்; இவர் ஏற்கனவே UMP யின் முன்னாள் அரசாங்கத்தில் உள்துறை மந்திரியாக இருந்தபோது எடுத்த நடவடிக்கைகளின் தொடர்ச்சிதான் இவை. அமெரிக்காவிற்கு விடுமுறைக்குச் செல்லுமுன் அவசர அவசரமாக ஜூலை மாதத்தில் தன்னுடைய மந்திரிகளை தன் அரசாங்கத்தின் திட்டத்தை வலிமையாக கடைப்பிடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்; அதற்காக பல மந்திரிகளுக்கு பிரதம மந்திரி பிரான்சுவா பிய்யோனால் கையெழுத்திட்ட கடிதங்களும் அனுப்பப்பட்டன.

இவ்விதத்தில்தான் இவர், புலம்பெயர்தல்துறை மந்திரியான Brice Hortefeux க்கு பிரான்சில் குடியேறுபவர்களை வெளியேற்றும் அரசாங்கத்தின் இலக்குகளைப் பற்றி நினைவுறுத்தினார். 2007ம் ஆண்டு கிட்டத்தட்ட 25,000 வெளியேற்றங்களுக்கு திட்டமிடப்பட்டன. தன்னுடைய கடிதத்தில் பிரதம மந்திரி இந்த அளவு குறைக்கப்படக்கூடாது என்பதற்கான தன்னுடைய உறுதியை மீண்டும் தெரிவித்திருந்தார்; [புலம்பெயர்தல் மந்திரியாகிய] நீங்கள் ஒவ்வொரு ஆண்டும் குடியேறுபவர்களுக்கு ஒரு உச்ச வரம்பை, பிரான்சில் குடியேறுவதற்கான பல காரணங்களின் அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும்; அந்த இலக்கில் பிரான்சில் பொருளாதார வகையிலான புலம்பெயர்தல் மொத்தத்தில் 50 சதவிகிதம் என்ற நீண்ட கால தீர்வுக்குரிய குடியேறுபவர்களுடைய எண்ணிக்கையில் இருக்கும் வகையில் செயல்படுத்த வேண்டும்... உதாரணமாக எமது பங்காளிகளான கனடா அல்லது கிரேட் பிரட்டன் பயன்படுத்தும் முறைகளை குறிப்பிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்; அந்நாடுகள் ஒரு சில விதிமுறைகளுக்கு உட்பட்டு குடியேறுபவர்களின் விண்ணப்பங்களை ஆராய்கின்றனர்; அதில் எங்கிருந்து வருகின்றனர் என்பதும் அடங்கும்; இதையொட்டி அவர்களின் முன்னுரிமைகள் நிர்ணயிக்கப்படுகின்றன."

அக்டோபர் 28 அன்று இறுதியாக "குடியேற்றத்தை கட்டுப்படுத்தல், பிரான்சில் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் வசிப்பிடத்தை கட்டுப்படுத்தல், தேசிய இனத்தை நிர்ணயித்தல் தொடர்பான சட்டம்" மீதான மசோதாவை ஏற்றது, அரசாங்கம் அதை வன்முறை தலையீடுகளால் வலுப்படுத்தியுள்ளது.

இதன் விளைவாக குடியேற விருப்பம் உடைய பலரும், அதிகாரிகளுக்கு தங்களைப் பற்றிய விவரங்களை குறிப்பிட்டபின்னர், அன்றாடம் போலீசாரின் தொந்திரவைப் பொறுத்துக் கொள்ள வேண்டிய நிலை வந்துள்ளது. இந்த நடவடிக்கைகள் மீது கினிய மக்கள் பெரும் விரோதப் போக்கை கொண்டுள்ளனர்; ஏனெனில் இவற்றின் விளைவு முன்னாள் பிரெஞ்சு காலனியின் மீது பொருளாதார, சமூக, அரசியல் நிலைப்பாடுகளில் பேரழிவுத் தன்மையைக் கொடுக்கிறது.

உலகின் பல நாடுகளிலும் இருக்கும் நிலைமையை கணக்கில் எடுத்துக் கொண்டு பார்த்தால், கினியாவை சேர்ந்த இந்த இரு ஆவணமற்ற தொழிலாளர்களின் நிலைப்பாடு, வறுமையை அகற்றிக் கொண்டு கெளரவமான வாழ்க்கை வாழ்ந்து இன்னும் அதிக வளர்ச்சியுற்ற நாடுகளில் உழைத்துத் தங்கள் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து அதற்காக அங்கு குடியேற விரும்புபவர்களை முற்றிலும் எடுத்துக்காட்டாகவும் மற்றும் அவர்களின் பெரும் ஏமாற்றத் திகைப்பையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

ஆவணமற்ற குடியேறுபவர்களை வேட்டையாடுவதின் உண்மை நோக்கம் தொழிலாள வர்க்கத்தை இன, நாடுகள் வழியே பிரித்தலும், அதே நேரத்தில் உழைக்கும் மக்கள் திரளை அடக்குதலும் ஆகும். குடியேறுபவர்களுடைய உரிமைகள் மீதான தாக்குதல் என்பது முழு தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள், வாழ்க்கை நிலைமைகள் ஆகியவற்றின் மீதான பொதுத் தாக்குதலை சோதித்துப் பார்ப்பதற்கான களமாக உள்ளது.