World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :  மத்திய கிழக்கு

Israeli air raid in Syria heightens Middle East tensions

சிரியா மீது விமானத் தாக்குதலை நடத்தியது மத்திய கிழக்கில் பதட்டங்களை அதிகப்படுத்துகிறது

By Chris Talbot
17 September 2007

Use this version to print | Send this link by email | Email the author

செப்டம்பர் 6ம் தேதி இஸ்ரேலிய ஜெட் போர் விமானங்கள் சிரிய வான்வழியில் திடீர்த்தாக்குதல் நடத்தியது கடந்த கோடை காலத்தில் லெபனான் மீது ஓல்மெர்ட் ஆட்சி 34 நாட்கள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர் மிகத்தீவிர ஆத்திரமூட்டல் நடவடிக்கை ஆகும். விமானங்கள் சிரியாவில் அதிகம் உள்ளே சென்று துருக்கிய எல்லைக்கு அருகே உள்ள Tall al-Abyad ல் சிரிய விமானப் பாதுகாப்புப்படையுடன் சண்டை நடத்தியதாக கூறப்படுகிறது.

சரியாக என்ன நடந்தது என்பது பற்றி மாறுபட்ட விளக்கங்கள் வந்துள்ளன; கணிசமான இரகசியம் நிகழ்வைச் சுற்றி உள்ளது. ஆனால் இஸ்ரேலிய நடவடிக்கை அமெரிக்காவில் உள்ள புஷ் நிர்வாகத்தால் ஆதரிக்கப்பட்டுள்ளது என்பதுதான் தெளிவாக இருக்கிறது.

இந்நிகழ்வு மத்திய கிழக்கில் அமெரிக்க இராணுவ ஆக்கிரமிப்பின் பெருக்கத்தின் ஒரு பகுதி என்று காணப்பட வேண்டும். ஈரான்-ஈராக் எல்லையில் அமெரிக்கா ஒரு இராணுவ தளத்தை கட்டமைத்துக் கொண்டுவருகிறது, இன்னும் கூடுதலான பிரிட்டிஷ் துருப்புக்களை அதே எல்லையில் நிறுத்த முடிவெடுத்துள்ளது என்ற செய்திகளுடன் இணைந்து இத்தகவலும் வந்துள்ளது. (காண்க: "ஈராக்கில் உள்ள பிரிட்டிஷ் துருப்புக்கள் ஈரானிய எல்லையில் நிறுத்திவைப்பு").

ஈரானின் நட்பு நாடான சிரியாவின் மீது இத்தகைய சூழலில் தாக்குதல்கள் நடத்துவது என்பது மிகவும் தீமை பயக்கும் உட்குறிப்புக்களை கொண்டுள்ளது. நடவடிக்கையின் துல்லியமான தன்மை எதுவாயினும், அமெரிக்கா ஒரு பரந்த மத்திய கிழக்கு பெரும்பூயல்களுக்கு திட்டமிட்டுக் கொண்டுள்ளது என்பதும், அது நேரடியாக அமெரிக்காவிலோ அல்லது அதன் இஸ்ரேலிய நண்பர்களாலோ நல்ல முன்கூட்டிய தயாரிப்பாக இருக்கிறது என்பதும் தெரிய வருகிறது.

இஸ்ரேலிய நடவடிக்கை, ரஷ்யா சிரியர்களுக்கு அளித்துள்ள ஒரு புதிய வான் பாதுகாப்பு முறையை பற்றிய தகவலை அறிய மேற்கொண்ட முயற்சி என்று சில வல்லுனர்கள் கூறியுள்ளனர். மற்றவர்கள் இது ஈரானுக்கு எதிரான குண்டுவீச்சுத் தாக்குதல்களுக்கு ஒரு வடக்குப் பாதையை சோதித்து அறிவதற்கு இந்நடவடிக்கை நடத்தப்பட்டிருக்கலாம் என்று ஊகிக்கின்றனர். வேறு சிலர் இது லெபனானில் இருக்கும் ஹெஸ்பொல்லோவிற்கு சிரியா ஆயுதங்களை அளிப்பதை முடக்கும் முயற்சி என்று கூறுகின்றனர்.

ஆயினும், இஸ்ரேலிய ஊடுருவல் பற்றி கிட்டத்தட்ட எவ்வித தகவல்களையும் சிரியா கொடுக்கவில்லை மற்றும் ஓல்மெர்ட்டின் அரசாங்கம் இஸ்ரேலிய ஊடகத்தின்மீது திட்டவட்டமான பாதுகாப்பு இருட்டடிப்பையும் திணித்துள்ளது என்ற மேற்கு நாடுகளில் உள்ள செய்தி ஊடக ஊகங்கள், இஸ்ரேலிய ஜெட்டுக்கள் வட கொரியா அளித்திருந்த அணுசக்தி பொருட்கள் அடங்கிய நிலையம் ஒன்றை குண்டு போட்டுத் தாக்கின என்ற கூற்றை அதிகரித்த முறையில் உறுதிப்படுத்தியுள்ளன.

சிரியா, வட கொரியா இரண்டுமே எவ்வித அணுசக்திப் பரிமாற்றங்களையும் மறுத்துள்ளன.

நியூ யோர்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் இரண்டும் வட கொரியா சிரியாவிற்கு அணுசக்தி ஆயுதங்கள் பற்றிய தொழில்நுட்பத்தை கொடுத்துள்ளதாக அறிக்கைகளை விடுத்துள்ளன. அணுசக்தி பரவலை தடுக்கும் கொள்கை பற்றிய இடைக்கால துணை வெளிவிவகார செயலாளர் ஆண்ரூ செம்மெல், சிரியாவில் வட கொரியர்கள் உள்ளனர் என்று கூறியதாக வாஷிங்டன் போஸ்ட் மேற்கோளிட்டு கூறியுள்ளது; "அங்கு ஏதோ நடக்கிறது என்பதற்கு அடையாளக் குறிப்புக்கள் உள்ளன" என்று அவர் கூறியதாக தெரிகிறது.

ஒரு அனாமதேய அமெரிக்க வல்லுனர் இஸ்ரேலிய ஊடுருவல் வடக்கு சிரியாவில் துருக்கிய எல்லைக்கு அருகே இருக்கும் விவசாய நிலையத்தை இலக்கு கொண்டிருந்தது என்றும் அங்கு சிரியர்கள் பொஸ்பேட்டுக்களில் இருந்து யூரேனியம் எடுக்க முயற்சிப்பதாகவும் கூறியுள்ளார். செப்டம்பர் 3 ம் தேதி மத்தியதரைக் கடலில் சிரியத் துறைமுகமான Tartus ல் வட கொரியக் கப்பல் ஒன்று வந்ததுடன் இத்தாக்குதல் பிணைந்துள்ளது என்றும் வல்லுனர் கூறியுள்ளார்.

மத்திய கிழக்கு அரசியல், அணுவாயுதங்கள் தொழில்நுட்பத் துறை நிலை பற்றி ஏனைய வல்லுனர்கள் இக்குற்றச்சாட்டுக்களை பெரும் அவநம்பிக்கையுடன்தான் காண்கின்றனர். ஆனால் ஐக்கிய நாடுகளுக்கு, முன்னாள் அமெரிக்கத் தூதராக இருந்த ஜோன் போல்டன் இக்கதையை பரப்புவதில் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார். வட கொரியாவுடன் அமெரிக்க அணுசக்தி பேச்சு வார்த்தைகள் நடத்துவதை பகிரங்கமாக எதிர்க்கும் போல்டன், புஷ் நிர்வாகத்தின் உத்தியோகபூர்வமற்ற செய்தித் தொடர்பாளராகவும் இருக்கிறார்; இதற்கு துணைத் தலைவர் டிக் செனி தலைமை தாங்குகிறார்; அதாவது ஈரானுடன் போருக்கு வரிந்து கட்டிக் கொண்டு நிற்பதுடன் சிரியாவும், ஈரானும் கொரிய அணுசக்தி தொழில்நுட்பத்திற்கு "பாதுகாப்பான புகலிடங்களாக" உள்ளன என்றும் கூறியுள்ளார்.

கொரியா, அணுசக்தித் தொழில்நுட்பத்தை சிரியாவிற்கு ஏற்றமதி செய்துள்ளது என்பது ஈராக் படையெடுப்பிற்கு முன் பேரழிவு ஆயுதங்கள் பற்றிய கட்டுக் கதையின் அனைத்துக் கூறுபாடுகளையும் கொண்டுள்ளது. வட கொரியாவில் இருந்து நீர்மூலம் மத்தியதரைக் கடல் வழியே அமெரிக்க மற்றும் பிற நேட்டோ போர்க்கப்பல்கள் சூழ்ந்திருந்த நிலையில் அணுசக்தி பொருட்களை ஒரு கப்பல் கொண்டுவருவது என்பது நடக்கக் கூடியது அல்ல.

சிரிய-வட கொரிய அணுவாயுத தொடர்பை வளர்க்கும் மூன்று செய்தி ஊடகப் பிரிவுகளும் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அமெரிக்க ஆளும் உயரடுக்கின் பிரிவுகள் என்று அடையாளம் காட்டப்பெற்றுள்ளன. இஸ்ரேலிய தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் ஒரு கட்டுரையை வெளியிட்டது; அதில் பியோங்யாங், டமாஸ்கசிற்கு அணுசக்தி தொழில்நுட்பத்தை விற்றுக் கொண்டிருக்கிறது என்ற போல்டனின் கூற்றுக்கள் மேற்கோளிடப்பட்டிருந்தது. இதன் பின் Fox News Channel வட கொரியா இரகசியமாக தொழில்நுட்பம் மற்றும் கருவிகளை சிரியா யூரேனிய அடர்த்தி செய்வதற்காக அனுப்பிக் கொண்டிருக்கிறது என்ற அமெரிக்க சந்தேகங்களை பற்றி அறிவித்தது. இதன்பின் இஸ்ரேல், வட கொரியாவில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்பு வந்திருந்த பொருட்தொகுப்பை இஸ்ரேல் இலக்கு வைத்ததாக சர்வதேச வல்லுனர்கள் கூறியுள்ளனர் என்ற கருத்தை வாஷிங்டன் போஸ்ட் பின்னர் மேற்கோளிட்டது.

செப்டம்பர் 16ம் தேதி நியூ யோர்க் டைம்ஸ் துணை ஜனாதிபதி ஷெனியின் ஆதரவாளர்கள், "தனிப்பட்ட முறையில் அமெரிக்கா, இஸ்ரேலே ஈரானின் அணுசக்தி நிலையங்களை இராணுவத் தாக்குதல் நடத்துவதற்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என்று வாதிட்டதாக" தெரிவித்துள்ளது.

அக்கட்டுரை தொடர்ந்தது: "சிரியாவின் மீதான ஒரு வான்வழித் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டுள்ளது ஈரானிய செய்தி ஊடகத்தில் அமெரிக்காவுடன் சேர்ந்து கொண்டு இஸ்ரேல் உண்மையிலே ஈரானுக்கு தான் நினைத்தால் ஈரானிய அணுசக்தி நிலையங்களை தாக்க முடியும் என்ற தகவலை அனுப்ப முயற்சிப்பதாக ஊகத்தை கிளப்பியுள்ளது.

"நான் ஈரானியராக இருந்தால், மற்ற அரபு நாடுகள் எதிர்ப்புத் தெரிவிக்காதது பற்றி உரத்து முழங்கியிருப்பேன்" என்று Carnegie Endowment for International Peace உடைய உலகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சித்துறையின் துணைத் தலைவரான ஜோர்ஜ் பெர்கோவிச், கூறியுள்ளார். "அரபு உலகம் இதை எதிர்கொள்ளாதது அரேபியர்கள் ஈரானின் சக்தி, செல்வாக்கு இவை பற்றி களிப்படையவில்லை என்ற அடையாளம் ஆகும்; எனவே இஸ்ரேலியர்கள் ஈரானுடன் நட்புடைய மற்றொரு அரபு நாட்டின் வான்வழியை மீறி, மிரட்டினால், அரபு நாடுகள் ஒன்றும் செய்யாது."

இஸ்ரேலிய நடவடிக்கை அதன் அணுகுமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றமாகும். சமீபத்தில்தான் இஸ்ரேலும் சிரியாவும் ஒன்றுக்கொன்று ஆக்கிரோஷ விருப்புக்களை கொண்டிருக்கவில்லை என்றும் கோலான் குன்றுகள் பற்றி பேச்சு வார்த்தைகளை நடத்திக் கொண்டிருப்பதாகவும் வலியுறுத்தியிருந்தன.

இஸ்ரேலின் நடவடிக்கையை சிரியா எதிர்கொண்டவிதம் வினோதமான முறையில் மெளனம் சாதிப்பதாக உள்ளது. ஐக்கிய நாடுகளில் ஒரு பகிரங்க எதிர்ப்பை அது தெரிவித்தது; ஆனால் பாதுகாப்புக் குழு இந்த வான் வழியை மீறியதைக் கண்டிக்குமாறு கேட்டுக் கொள்ளவில்லை. எச்சரிக்கையுடன் சிரியா இதை அணுகும் முறை, நிலைமையை எரியூட்டுவதற்கு அசாத் ஆட்சி விரும்பவில்லை என்பதைத்தான் தெரிவிக்கிறது; இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் இணக்கமாக இருப்பதை அது விரும்புகிறது என்பதையும் காட்டுகிறது.

அல்-ஜசீராவில், ஓய்வு பெற்ற இஸ்ரேலிய தூதர் ஒருவர், சிரிய அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தைகள் நடத்திக் கொண்டிருப்பவர் இஸ்ரேலிய நடவடிக்கை பற்றித் தன்னுடைய கவலையை வெளிப்படுத்தினார். Alon Liel கூறியதாவது: "ஒரு ஆக்கிரோஷமான தகவலை இஸ்ரேல் கொடுத்திருப்பதை நான் காண்கிறேன்; இதையொட்டிக் கவலை அடைந்துள்ளேன்."

சிரியாவும் ஈரானைப் போல் இலக்கு கொள்ளப்பட்டாலும் படாவிட்டாலும், இஸ்ரேலிய நடவடிக்கை அது தாக்குதலுக்கு ஆளாகக்கூடியது, ஈரான்மீது ஒரு அமெரிக்கத் தாக்குதல் வந்தால் அதற்கு உதவக் கூடாது என்று தெளிவான தகவலை அனுப்பியுள்ளதாக அர்த்தப்படுத்தியது.