World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா

South Africa: Behind the ANC breakaway

தென் ஆபிரிக்கா: ஆபிரிக்க தேசிய காங்கிரசின் பிளவுக்கு பின்னால்

By Chris Talbot
19 November 2008

Use this version to print | Send this link by email | Email the author

ஆபிரிக்க தேசிய காங்கிரசிலிருந்து (ANC) பிரிந்து சென்று ஒரு புதிய கட்சியை உருவாக்குவதற்கான அதன் பல முன்னாள் தலைவர்களின் முடிவு, தென் ஆபிரிக்காவின் ஆளும் கட்சிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் மற்றும் உட்கட்சி பூசல்களின் சமீபத்திய வெளிப்பாடாக உள்ளது.

1955ல், ஆபிரிக்க தேசிய காங்கிரசின் சுதந்திர சாசனம் உருவாக்கப்பட்ட போது இருந்த, காங்கிரசின் மரபை தக்க வைப்பதற்கான பிரகடனத்தை வலியுறுத்தும் ஒரு புதிய கட்சி மக்கள் காங்கிரஸ் [Congress of People (Cope)] என அழைக்கப்பட உள்ளது.

.முன்னாள் பாதுகாப்பு மந்திரி மொசியா லெகோட்டா மற்றும் கெளடென்ங் மாகாண முன்னாள் பிரதமர் மெப்காஜிமா ஷிலோவா தலைமையில் இது அமைக்கப்பட உள்ளது. இவ்விருவரும் தென் ஆபிரிக்காவின் உத்தியோகபூர்வ முன்னாள் இனவாத கொள்கைக்கு (Apartheid) எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதற்கான நீண்டகால வரலாற்றை கொண்டுள்ளார்கள். தெற்கு ஆபிரிக்க தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் வில்லி மடிஷா மற்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரசின் தொலைத்தொடர்புகள் துறை முன்னாள் தலைவர் ஸ்முட்ஸ் நிகோன்யமாவும் கடந்த வாரம் இதில் இணைந்தனர்.

ஆபிரிக்க தேசிய காங்கிரசில் உள்ள பிரிவுகளில் முன்னாள் ஜனாதிபதி தபோ மெபிகியைச் சார்ந்த சில ஆதரவாளர்களும் இந்த புதிய கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளனர். தென் ஆபிரிக்க கம்யூனிஸ்ட் (SACP) கட்சி மற்றும் முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பான COSATU ஆகியவை உட்பட, ஆபிரிக்க தேசிய காங்கிரசின் தலைவர் ஜேகப் ஜூமாவிடமிருந்து பின்வாங்குபவர்களும் இந்த எதிர்தரப்பில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மெபிகியும், பிற ஆபிரிக்க தேசிய காங்கிரசின் தலைவர்களும், ஜூமா இதுவரை ஆபிரிக்க தேசிய காங்கிரசில் இருப்பதை எதிர்த்தனர். ஆபிரிக்க தேசிய காங்கிரசின் ஆட்சியில் தங்களைத்தாங்களே வளப்படுத்திக் கொண்ட கறுப்பினத்தவரை பிரதிநிதித்துவப்படுத்தும் கோடீஸ்வர தொழிலதிபரான சிரில் ரமாபோசா மற்றும் டோகியோ செஸ்வாலெ ஆகியோரும் இந்த கட்சியில் இடம் பெற்றுள்ளனர்.

செல்வவளம் மற்றும் அதிகாரத்தை விரும்பும் இந்த புதிய கட்சி தலைவர்கள், தற்போது ஆபிரிக்க தேசிய காங்கிரசின் அமைப்புகளால் தாங்கள் நிராகரிக்கப்பட்டு வருவதாக உணரும் கறுப்பின மக்கள் பிரிவுகளுக்கு சார்பாக தங்களைத்தாங்களே நிறுத்திக் கொள்கிறார்கள். The Economist பத்திரிகையின்படி, "திரு. மிபெகியின் கீழ் விரிவாக்கப்பட்ட மத்திய மற்றும் மேற்தட்டு கறுப்பின வர்க்கத்தின் பிரிவினர்தான், 'இந்த எதிர்ப்பாளர்களின்' முக்கிய ஆதரவாளர்களாக இருப்பதுடன், இந்த பிரிவினரே பெரும்பாலும் அவர்களுக்கான வாக்குகள் மற்றும் நிதி ஆதரவை அளிப்பதாகவும் இருப்பர்."

அதேநேரத்தில் புதிய கட்சி பெரும்பான்மை வாக்காளர் ஆதரவை பெற வேண்டியுள்ளது. இதனால் அவர்கள் பரந்த ஜனநாயகம் மற்றும் பொறுப்புணர்களுக்கும் அழைப்பு விடுவதுடன், பாரக் ஒபாமாவின் "மாற்றம்" என்ற கோஷத்தையும் எதிரொலிக்கிறார்கள். அதன் தலைவர்கள், ஜூமாவின் மீது கொள்கையளவில் நிலுவையில் உள்ள ஊழல் குற்றச்சாட்டுக்களைக் குறிப்பிட்டு, அவர் தலைவர் பதவிக்கு பொறுத்தமானவர் அல்லர் என்று வாதிடுகிறார்கள். அவர்கள், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அதன் "பழைய நிலைக்கு திரும்ப வேண்டும்" என்று கோருகின்றனர்.

இந்த ஜனநாயக ஆரவாரங்களுக்கு பின்னால், முதலாளிகளை நோக்கி ஒரு தெளிவான அழைப்பும் நடந்து வருகிறது. ஜூமாவின் தலைமையிலான ஆபிரிக்க தேசிய காங்கிரசில் தற்போது தென் ஆபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி (SACP) நிறைய செல்வாக்கு கொண்டிருப்பதாக லெகோட்டா தெரிவித்துள்ளார். "ஆபிரிக்கக தேசிய காங்கிரஸ் தென் ஆபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி ஆகாது." என்று எழுதிய லெகோட்டா, "தென் ஆபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆகாது" என்றார். உண்மையில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அதிகாரத்திற்கு வந்ததில் இருந்தே, தென் ஆபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி அதனுடன் இணைந்து செயலாற்றி உள்ளது. அவ்வாறே முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பான COSATUவும் செயல்பட்டுள்ளது.

ஜூமாவின் ஆதரவாளர்கள், "100 சதவீதம் Zulu நபர்" என்று அச்சிட்ட மேற்சட்டைகளை அணிந்து திரியும் அளவிற்கு நிறைய அதிகாரங்கள் ஒரு Zulu இனப்பிரிவினரான ஜூமாவிடம் சென்றுள்ளதாக குற்றஞ்சாட்டி, அவர்களுக்கும் பெரும்பான்மை Xhosa இனக்குழுவினரான மிபெகியின் தென் ஆபிரிக்க காங்கிரஸ் ஆதரவாளர்களுக்கிடையிலான பழங்குடிவாத பிளவுகளின் ஓர் போக்கினை விமர்சகர்கள் குறிப்பிட்டு காட்டினர்.

தென் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும் தென் ஆபிரிக்க ஜனநாயக காங்கிரஸ் என்ற இரண்டு பெயர்களை கைவிடப்பட்ட பின்னர் தான், புதிய கட்சிக்கான மக்கள் காங்கிரஸ் என்ற பெயர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. முதலாவது பெயர் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் உடன் மிக நெருக்கமாக இருந்ததால், அக்கட்சியினால் சட்டரீதியாக எதிர்க்கப்பட்டது; இரண்டாவது பெயர் ஏற்கனவே ஒரு தென் ஆபிரிக்கக அரசியல் கட்சியின் பெயராக உள்ளது.

உலக சந்தை நிலைமை சீரழிந்து வரும் நிலையில், ஆபிரிக்க தேசிய காங்கிரஸை மேலும் வலதுபக்கம் நகர்த்தி செல்ல புதிய கட்சியால் அதற்கு அழுத்தம் அளிக்க முடியும் என்று சர்வதேச மற்றும் தென் ஆபிரிக்கக ஆளும் வட்டாரங்களில் நம்பப்படுகிறது.

உறுப்பினர்கள் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்த போதினும், பெரும்பாலான ஏழை கறுப்பினமக்களிடமிருந்து பரந்த வாக்குகளைத் தற்போதும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸால் ஈர்க்க முடியும். எவ்வாறிருப்பினும், இந்த புதிய கட்சியின் தோற்றம், தென் ஆபிரிக்ககாவிலுள்ள சர்வதேச முதலீட்டாளர்களுக்கும், பெரிய முதலாளிகளுக்கும் ஒரு மதிப்புமிக்க அரசியல் நெம்புகோலாக செயல்படும்.

அது பிற சிறு எதிர்கட்சிகளுடன் இணைந்தும், ஓர் அரசாங்கத்தை அமைக்க முடியும். இதற்கிடையில், வெள்ளையினத்தவரின் சிறிய எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகளும் புதிய கட்சியுடன் கடந்த வாரம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஜனநாயக கூட்டணியின் (Democratic Alliance) தலைவர் ஹெலன் ஜில்லி, ஆபிரிக்க தேசிய காங்கிரஸிற்கு எதிரான ஒரு கூட்டணி தற்போது சாத்தியப்படக் கூடியதே என்று அறிவித்தார்.

வியாபார உலகிலிருந்து, முக்கிய பின்புல ஆதரவாளர்களை நியமிக்க ஷிலோவா திட்டமிடுகிறார் என்பதை உறுதிப்படுத்தும் வகையில், இந்த நிகழ்விற்கு $500,000 டாலருக்கும் மேலாக செலவாகும் என்று அவர் நியூயோர்க் டைம்சிடம் தெரிவித்தார். ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் மற்றும் மக்கள் காங்கிரஸ் இரண்டுமே தங்களின் மதிப்பை முதலாளித்துவத்திடம் நிரூபித்து காட்டுவதற்கான போராட்டத்தில் சிக்கி உள்ளன. இடதுசாரிகளின் ஆரவாரங்களில் ஜூமா சிறப்பு தகுதியைப் பெறலாம், ஆனால் அவரின் அரசியல் முன்னோக்கு உண்மையில் புதிய கட்சியினுடையது போன்றே உள்ளது.

இந்த விரிசலுக்குள் பெருமளவில் தனிப்பட்ட தன்முனைப்பு, ஆணவம், பேராசை போன்றவையும் உள்ளன. ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் தற்போது அதிகாரத்தில் இல்லாதவர்கள் தங்களைத்தாங்களே அவர்கள் செழுமைப்படுத்திக் கொள்வதற்கான வழிவகைகளை இழந்து நிற்கிறார்கள். அரசியல் அதிகாரத்திற்கான போராட்டம் என்பது பரந்த முறைமையில் தனிநபர் செல்வ செழிப்பிற்கான போராட்டமாக ஆகியுள்ளது.

மெபிகியின் முன்னாள் துணை மந்திரியாக இந்த ஜூமா, ஊழல் குற்றச்சாட்டுக்களை சந்தித்ததால் 2005 நீக்கப்பட்டார். கடந்த டிசம்பரில், ஜூமா ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார், ஆனால் உருவான இரண்டு பிரிவுகளுக்கு இடையிலான போட்டியில், மெபிகி அரசு தலைவராக தொடர்ந்து நீடித்தார். கடந்த மாதம் ஜூமாவிற்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களை நீதிமன்றம் திரும்ப பெற்று கொண்டதால், மெபிகி கட்டாயமாக பதவி விலக வேண்டியதாயிற்று. மேலும் நீதிமன்றங்கள் மூலம் ஜூமாவைக் கண்காணிக்க அரசு அமைப்புகளை பயன்படுத்தியதற்காகவும் மெபிக்கியை நீதிபதி குற்றஞ்சாட்டினார்.

தென் ஆபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியும், COSATUவின் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஒரு முக்கிய பிரிவும் ஜூமாவை ஆதரிக்கின்றன. இதுவரை இல்லாத அளவிற்கு வேலைவாய்ப்பின்மை மற்றும் வறுமை ஆகியவற்றுடன் வீடுகள் பற்றாக்குறை மற்றும் அடிப்படை வசதிகளின்மையை முகங்கொடுத்து வரும் பெருப்பாலான கறுப்பின மக்களின் சமூக நிலைமைகளை மேம்படுத்த உறுதியளித்ததன் மூலம் அவர் பரந்த ஆதரவை வென்றார்.

அவரின் இடதுசாரி வார்த்தைஜாலங்களுக்கு மத்தியிலும், தனியார் சொத்துடமைகளுக்கு எந்த சவால்களும் இருக்காது என்பதை உலக முதலாளிகளுக்கும், நிதியியல் தலைவர்களுக்கும் உறுதியளிப்பதில் மிகவும் கவனமாக இருந்தார். கடந்த மாதம் அமெரிக்கா சென்று வந்த அவர், ஜனாதிபதி புஷ் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் கொண்டலீசா ரைஸ் ஆகியோரையும் சந்தித்து பேசினார்.

வாஷிங்டன்னில் உள்ள வெளிநாட்டு உறவுகள் ஆணையத்தில் அவர் பேசுகையில், "நிலைமை இதேபோன்று தொடர்ந்து கொண்டு செல்லப்படும்" என்றார். COSATU மற்றும் தென் ஆபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் "சோசலிசத்திற்கான நோக்கிய நகர்விற்கான'' அழுத்தத்திற்கு ஈடுபட்டுள்ள இருந்து வரும் அழுத்தங்களுக்கு ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் சரணடைந்து விடாது என்று அங்கிருந்த கூட்டத்திற்கு அவர் உறுதியளித்தார். இவ்வாறு கூறும் போது முக்கியமாக அவர்களை "ஏழைகளின் குரலாக" அவர் கருதினார்.

புதிய ஜனாதிபதி Kgalema Motlanthe, கட்டுப்பாடற்ற சந்தை பொருளாதார கோட்பாட்டிற்காக அறியப்பட்ட நிதிமந்திரி டிரிவோர் மேனுவலைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டுள்ளார். சந்தைகளுக்கு மறுஉறுதி அளிப்பதில் இதுவொரு முக்கிய அறிகுறியாக உள்ளது.

ஜூமா, ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் தலைவராக இருந்தபோதும், அடுத்த பொதுதேர்தலில் ஒரு பாராளுமன்ற இடத்தை வெல்லும் வரை அவரால் நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்க முடியாது. ஆகவே அதுவரை, Motlanthe ஒரு காபாந்து ஜனாதிபதியாக இருந்து வருவார்.

அதிகமான கட்சியை விட்டோடியவர்களையும் மற்றும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸினுள் இன்னுமுள்ள முக்கியமானவர்களையும் தங்கள் பக்கம் ஈர்க்க மக்கள் காங்கிரஸ் தவறிவிட்டது. இருப்பினும் இந்த பிளவு, ஆபிரிக்க தேசிய காங்கிரஸில் ஏற்பட்டுள்ள ஒரு பெரிய அரசியல் நெருக்கடிக்கான அறிகுறியாக உள்ளது. சர்வதேச நிதி நெருக்கடி தென் ஆபிரிக்காவை பெருமளவில் பாதித்துள்ளதை இந்த அரசியல் நெருக்கடி அடிக்கோடிட்டு காட்டுகிறது.

சமீபத்திய ஆண்டுகளில் தென் ஆபிரிக்ககாவின் வளர்ச்சி விகிதம் சராசரியாக 5 சதவீதமாக உள்ளது. இது உத்தியோகபூர்வமாக 40 சதவீதமாக உள்ள வேலைவாய்ப்பின்மையின் வளர்ச்சியை தடுக்க போதுமானதில்லை. பொருளாதாரம் விரிவடைந்த காலகட்டத்தின்போது அனைவருக்கும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸால் வேலை வழங்குமுடியவில்லை என்றால், 1930களுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள மிக மோசமான இந்த மந்தநிலையில் அதனால் நிச்சயமாக அதை செய்ய முடியாது.

ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைமையுடன் இணைந்துள்ள ஒரு சிறு மேற்தட்டு, பங்கு பரிமாற்றங்கள் மற்றும் வெளிப்படையான ஊழல் மூலம் செழிப்படைந்திருக்கும் நிலையில், ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான இடைவெளி அங்கு அதிகரித்துள்ளது. சமூக நிலைமையில் முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற வாக்குறுதிகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பற்றி அவநம்பிக்கையும் ஆழமான தீவிரமான ஆத்திரமும் அங்கு காணப்படுகின்றது.

தொழிலாள வர்க்கத்தில் உருவாகி வரும் எதிர்ப்புகளுக்கு தலைமையேற்க தென் ஆபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் COSATU முயல்கின்றன. போராட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களுக்கு அழைப்பு விடுத்த அவை, ஜூமாவை ஒரு எதிர்ப்பாளர் போன்று காட்டிக்கொள்ளகூடியவராக உருவாக்கியுள்ளன. பரந்த மக்கள் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் உடன் இணைந்திருக்குமாறு செய்வதே அவற்றின் நோக்கமாகும்.

மிபெகி மற்றும் மேனுவலிடமிருந்து தென் ஆபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் COSATUவின் பொருளாதார கொள்கைகள் கூடியளவில் வேறுபடுகின்றன. ஏனென்றால், நாட்டின் உள்கட்டமைப்பில் அரசு கூடுதலான முதலீடு செய்யவும் மற்றும் சில தேசிய வியாபார பாதுகாப்புவாதத்திற்கு அவை அழைப்பு விடுத்துள்ளன. பல மூலதன பிரிவுகள் இந்த கொள்கைகளை வரவேற்கும். அரசாங்க முதலீடு குறைக்கப்பட்டதன் விளைவாக ஏற்பட்ட மின் வினியோக பாதிப்பால் சுரங்க நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டன. ஜவுளித்துறை உற்பத்தியாளர்கள் சீன இறக்குமதிகளுடன் போட்டியிட முடியாமல் திணறி வருகிறார்கள். ஆனால் உழைக்கும் மக்களின் தேவைகளுக்கு ஒரு பிரதிபலிப்பாக, தென் ஆபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் COSATU அவற்றின் தவறான பொருளாதார கொள்கையை முன்வைக்கின்றன.

பொருளாதார மந்தநிலையின் கீழ், இந்த கொள்கைகள் ஒரு நீண்ட கனவாகவே உள்ளது. கடந்த ஆண்டில் தென் ஆபிரிக்க செலாவணியான ரேண்ட் மூன்றில் ஒன்றாக வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும், மிக நேர்முகமான கணிப்புகள் கூட 3 சதவீத வளர்ச்சியை மட்டுமே எடுத்து காட்டுகின்றன. ரேண்டின் இந்த வீழ்ச்சியால், பட்டியலிடும் நிறுவனங்களான Fitch மற்றும் Standard & Poor ஆகியவை தென் ஆபிரிக்ககாவின் கடன் முறையை வீழ்ச்சியில் பட்டியலிட்டுள்ளன. இதனால் மின்சார வினியோக அபிவிருத்தி போன்ற உள்கட்டமைப்பு செலவுகளுக்கு கடன் பெறுவதில் பெருமளவில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

தென் ஆபிரிக்ககாவின் ஏற்றுமதி வருவாயில் தங்கம் மற்றும் பிற உலோகங்கள் குறைந்தபட்சம் 40 சதவீதம் இடம் பிடிக்கும் நிலையில், பொருட்களின் விலை உயர்ந்து விட்டதால், தற்போதைய வர்த்தக பற்றாக்குறை இந்த ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் 71,000 வேலையிழப்புகள் ஏற்படும் என்ற புள்ளிவிபரங்களுடன் உற்பத்தி மற்றும் சுரங்க துறைகள் ஏற்கனவே அதன் கருத்துக்களை வெளியிட்டு உள்ளன.

1990களில் மெபிகியின் ஆலோசகராக செயல்பட்ட பொருளாதார நிபுணர் ஐரஜ் அபீடியன், தற்போதைய பொருளாதார சூழலில் இடதுசாரி வார்த்தை ஜாலங்கள் கூட ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று Business Day பத்திரிகைக்கு சமீபத்தில் அளித்த செய்தியில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்களை எச்சரித்தார். "அரசியல்வாதிகள் இந்த நிலையில் மிகவும் அசட்டையான விளையாட்டு விளையாடி கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மூலதன சந்தையின் உண்மையான மொத்த அழுத்தத்தை உணர்ந்திருக்கவில்லை" என்று தெரிவித்த அவர், "நீங்கள் இடதுசாரியாக இருந்தால், நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்; அதிகம் குரல் எழுப்ப கூடாது." என்றார்.

மக்கள் காங்கிரஸ் (Cope) வலுவான தொடக்கத்துடன் களமிறங்கி உள்ளது. ஆனால் பின்புலத்தில் நிற்கும் பெரிய முதலாளிகளுக்கு தேவையான வேலைகளை ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தொடர்ந்து செய்ய முடியாவிட்டால், அவை மக்கள் காங்கிரசின் முன் தள்ளப்படும் என்பது தெளிவாக தெரிகிறது. மந்தநிலையின் விலையை தென் ஆபிரிக்கக தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மீது சுமத்தும் கட்சிகளில் ஒன்றாக மக்கள் காங்கிரஸ் உருவாவதற்கான வாய்ப்பிருப்பதை சர்வதேச முதலாளித்துவம் கண்டறிந்துள்ளது. ஒரு புதிய கட்சியை தோற்றுவிப்பதில் அவர்கள் வெற்றியடைந்தாலும், இல்லாவிட்டாலும், தெளிவாவது என்னவென்றால், தொழிலாள வர்க்கத்திற்கும், பரந்த மக்களுக்கும் அவர்களின் நலன்களை பாதுகாக்கும் ஒரு புதிய சோசலிச மற்றும் சர்வதேச கட்சி தேவைப்படுகிறது என்பது தான்.

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் நெல்சன் மண்டேலாவின் தலைமையிலான ஆபிரிக்க தேசிய காங்கிரஸ், தேசிய இயக்கங்கள் மற்றும் அபிவிருத்தியடையும் நாடுகள் பின்பற்றுவதற்கான ஒரு முக்கிய முன்னுதாரணமாக எடுத்துக்காட்டப்பட்டது. ஒரு புதிய கறுப்பின முதலாளித்துவத்தால் கொண்டு வரப்பட்ட தேசிய பொருளாதார திட்டங்கள், பெரும்பாலான கறுப்பின மக்களின் அதிருப்தியை மாற்றுவதற்கு ஏற்றதாகவும், அத்துடன் முதலாளித்துவ சமூக முறைக்கு சாவல் விடாத வகையில் வேலை வாய்ப்புக்களையும், பொருளாதார பாதுகாப்பையும் அளிக்கும் என்று நம்பப்பட்டது. எவ்வாறிருப்பினும், தனது முன்னெடுப்புகளுக்கு ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தற்புகழ்ச்சியுடன் ஆர்ப்பரித்தாலும், அது தற்போது முகங்கொடுத்து வரும் தப்பிக்க முடியாத நிலை, மக்கள் காங்கிரஸ் பிரிவின் பிளவில் வீசப்படும் கண்டனங்களால் மறைத்து விட முடியாது. கடந்த தசாப்தங்களின் எவ்வளவுதான் தியாகங்கள் மற்றும் போராட்டங்களை செய்திருந்தாலும், மக்கள் காங்கிரஸ் புதுப்பிப்பதாக கூறும் உயர்ந்த சுதந்திர சாஸசனத்தில் பொதிந்து வைக்கப்பட்ட முதலாளித்துவ தேசியவாதத்தின் இறுதி விளைவு தான் தற்போதைய நெருக்கடி.