World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Government fears crisis will spur political radicalisation

ஜேர்மனி: நெருக்கடி அரசியல் தீவிரமயமாதலைத் தூண்டும் என அரசாங்கம் அச்சம்

By Peter Schwarz
9 October 2008

Use this version to print | Send this link by email | Email the author

ஜேர்மனிய அரசாங்கம் அனைத்து சேமிப்புக்களுக்கும் உத்தரவாதம் அளிக்கும் என்று ஞாயிறன்று அதிபர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் நிதி மந்திரி பீர் ஸ்ரைன்புரூக் கூறியது, அதைச் சட்டமாக ஆக்கும் நோக்கத்தை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்ற அரசியல் உள்நோக்கத்தை வெளியிடும் அறிக்கை மாத்திரமே ஆகும்.

"இதுபற்றி சட்ட வழிவகை ஏதும் இருக்காது" என்று நிதி அமைச்சரக செய்தித் தொடர்பாளர் Torsten Albig திங்கள் காலை உறுதிப்படுத்தினார். மாறாக இந்த உறுதிமொழி "ஒரு தெளிவான அரசியல் அறிக்கை அதிபர் மற்றும் நிதிமந்திரியால் அளிக்கப்பட்டது என்பதை குறிக்கிறது."

சமூக ஜனநாயகக் கட்சி (SPD) யின் வரவு/செலவுத் திட்டம் பற்றிய செய்தித் தொடர்பாளர் Otto Fricke, சட்டபூர்வ அஸ்திவாரங்கள் இல்லாத அத்தகைய உறுதிமொழிகள் கிட்டத்தட்ட பயனற்றவை என்றார். "சேமிப்புக்கள் தொகுப்பிற்கு உத்தரவாதம் தரும் அறிக்கை அரசியல் விருப்ப அறிவிப்பு என்பதை தவிர வேறு எதுவும் இல்லை" என்றார். அவர். "முன்னாள் தொழில் மந்திரி Norbert Blüm ஓய்வூதியங்கள் பாதுகாப்பாக உள்ளன என்று கூறிய அறிக்கையை ஒத்துத்தான் இதுவும் உள்ளது." கிறிஸ்துவ ஜனநாயகவாதி Blüm 1980 களில் ஓய்வூதியங்கள் பற்றி கூறிய உறுதிமொழி இன்றளவும் நிறைவேறாத அரசியல் உறுதிமொழிக்கு சிறந்த உதாரணமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.

மேர்க்கெல் மற்றும் ஸ்ரைன்புரூக் சேமிப்புக்களுக்கு உத்தரவாதம் என உறுதி கூறியிருப்பது ஒரு தைரியமான பொருளாதாரக் கணக்கின் அடிப்படையில் உள்ளது -- அதாவது அவர்கள் அதை செயல்படுத்தும்படி ஒருபோதும் அழைக்கப்படப் போவதில்லை. இது சிறு முதலீட்டாளர்கள், சேமிப்பாளர்களை அமைதிப்படுத்தி, வங்கிகளை நோக்கி அனைவரும் ஓட்டம் பிடித்து பணத்தை திருப்பிக் கேட்காமல் அமைதிப்படுத்துவதை அர்த்தப்படுத்துகிறது, அப்படி நடந்தால் முழு நிதியமுறையும் சரிந்துவிடும்.

அவர்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அவர்கள் தங்கள் உறுதிமொழியை காப்பாற்றுமாறு கோரப்பட்டால் என்ன நடக்கும் என்பது பற்றி எவரும் கூறமுடியாது. தொடர்புடைய சொத்துக்களை காப்பதற்கு போதுமான நிதியங்களோ இருப்புக்களோ இல்லை; இதன் மொத்தமோ கிட்டத்தட்ட ஒரு டிரில்லியன் யூரோக்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஒரே விருப்புரிமை மகத்தான முறையில் அரசாங்க கடனை அதிகரிப்பதுதான் இதை கடந்த காலத்தில் ஸ்ரைன்புரூக் எப்பொழுதும் தீவிரமாக நிராகரித்துள்ளார்.

மேர்க்கெல் மற்றும் ஸ்ரைன்புரூக்கின் ஆபத்து நிறைந்த பொய் உறுதிமொழி ஒருபுறம் இருக்க, எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல் உந்துதல்கள் அடித்தளத்தில் உள்ளன. திவாலாகும் வங்கிகளை காப்பாற்ற தாங்கள் பல பில்லியன்களை கொடுத்தால் வெளிப்படையாக நிதிய மூலதனத்தின் கால்வருடிகள் என்று அவர்களை வெளிப்படுத்தி, அதையொட்டி மக்கள் தீவிரப்போக்கிற்கு நகர்ந்துவிடுவரோ, இடதிற்கான இயக்கம் வந்து விடுமோ என்று அவர்கள் அஞ்சுகின்றனர்.

எல்லாரையும்விட மேர்க்கெல்தான் இப்பொழுது வங்கிகள் மீது விரலை அசைத்துக் கொண்டிருக்கிறார் இடது கட்சி தலைவர் ஓஸ்கார் லாபொன்டைனிடம் இருந்து அலங்காரச் சொற்கள் பற்றி பாடம் படித்துள்ளது போல் இவர் பேசுகிறார். இதே மேர்க்கெல்தான் ஐந்து ஆண்டுகள் முன்பு மிக அழுத்தமாக ஒரு புதிய தாராள "சீர்திருத்தப் போக்கு" தேவை என்று CDU வின் லைப்சிக் கட்சி மாநாட்டில் பேசினார். ஒரு சமீபத்திய விஸ்பாடன் கட்சிக் கூட்டத்தில் இவர் பெரிதும் குரல் கொடுத்து ஒரு திறமையான அரசாங்கம் இப்பொழுது செயல்பட்டு, "உலகம் முழுவதும் பொறுப்பற்ற வங்கியாளர்கள் கொண்டுவந்துள்ள நிலைமையை" தடுக்க வேண்டும் என்றார். விதிகளுடனான சந்தைகள் தேவையே அன்றி பழக்கப்படுத்துவதற்கு இயலாத சந்தைகள் அல்ல, "இதுவும் இலாபம் ஒன்றுதான் குறி என்று இயங்குபவை" என்று அவர் கூறினார்.

பொதுநலச் செலவினங்களை குறைப்பதுதான் தன்னுடைய உயர்ந்த இலக்கு என்றும் பொதுநலம், தொழிலாளர்கள் உரிமைமீது தாக்குதல் என்று "செயற்பட்டியல் 2010" ல் உள்ளதிற்கு ஆதரவு தரும் ஸ்ரைன்புரூக் திடீரென சிறு சேமிப்பாளர்களின் வாரிவழங்கும் பாதுகாப்பாளர் ஆகிவிட்டார்.

செய்தி ஊடகத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற பல கருத்துக்கள், நிதிய நெருக்கடி அரசாங்கத்தின்மீது நம்பிக்கையை குறைமதிப்பிற்கு ஆளாக்கிவருகிறது என்று எச்சரிக்கின்றன. அரசாங்கம் பல ஆண்டுகளாக சந்தைக் கட்டுப்பாடின்மை மற்றும் சமூக நலன்களை தகர்த்தல் ஆகியவற்றை தன்னுடைய முக்கிய பணியாக கொண்ட நிலையில், இப்பொழுது அது நிதிய மூலதனத்தில் நலன்களில் இருந்து தன்னை ஒதுக்கிவைத்துக் கொண்டால்தான் ஓரளவு நம்பகத்தன்மையை மக்களிடம் பெற முடியும்.

Die Zeit வார ஏட்டின் ஆன்லைன் பதிப்பில் Ludwig Greven நிதிய நெருக்கடி "ஜனநாயக நெருக்கடியாக" வரக்கூடிய ஆபத்தைக் கொண்டுள்ளது என்ற அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளார். ஜேர்மனியை அரசாள்வது யார், அரசாங்கமா, நிதிய மூலதனத்தின் தலைவர்களா? என்று தானே எழுப்பிய வினாவிற்கு விடையிறுக்கையில் அவர் கூறுகிறார்: "அனைத்து நடைமுறையிலும் வங்கிகளும் நிதியச் சந்தைகளும்தான் அரசாங்கத்தை நடத்துகின்றன."

இப்பொழுது, ஜேர்மனியில் இருக்கும் அரசியல்வாதிகள் "நிதிய முறை உருகிவழிதலின் அச்சுறுத்தலை எதிர்த்து சமாளிக்க வேண்டியுள்ளது மட்டுமன்றி". இது அரசியலின் நெறி பற்றியும் கவலை கொண்டுள்ளனர். குறிப்பாக சமீபத்திய ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட சமூக சீர்திருத்தம் பற்றியும் கவலை கொண்டுள்ளனர், இவை முதலாளித்துவத்தின் இதே பேராசை பிடித்த விழுங்கும் தன்மையினால்தான் வந்தன" என்று க்ரெவன் கூறினார். இன்னும் கூடுதலான மக்கள், ஐயத்திற்கிடமில்லாத வகையில், வங்கிகளை காப்பாற்ற போதுமான பணம் இருக்கிறபொழுது "சமூகச் செலவினம் ஊதியம் ஆகியவற்றில் மகத்தான குறைப்புக்களை தாங்கள் ஏன் ஏற்க வேண்டும்" என்று கேட்கின்றனர்.

அரசியல் வாதிகள் இப்பொழுது தங்கள் பங்கை "அவசரகால உதவி கொடுப்பதுடன் நிறுத்தி, அரசியல் உணர்வுகளில் ஆபத்தான விளைவுகள் ஏற்படக் கூடியதை புறக்கணிக்கின்றனர். பின் உலக நிதிய நெருக்கடியும் எமது மேலை ஜனநாயகமுறைக்கு நெருக்கடியை ஏற்படுத்தக் கூடும். இதனால் இலாபம் அடைபவர்கள் இடதுசாரி மற்றும் வலதுசாரியில் ஜனரஞ்சக வகையில் பேசக் கூடிய ஆபத்தான தன்னல அரசியல்வாதிகள்தான்..." என்று கிரெவன் எழுதியுள்ளார்.

Heribert Prantl இதே போல் Süddeutsche Zeitung ல் வாதிட்டுள்ளார். உலக நிதியநெருக்கடி என்பது பணச் சந்தைகளின்மீது இருக்கும் நம்பிக்கை பற்றி மட்டும் அல்ல. "இது ஜனநாயகத்தின் இறைமை, திறமை இவற்றோடும் தொடர்பு கொண்டுள்ளது.... இது மகத்தான நிதிய ஓட்டைகளை அடைப்பது மட்டும் இல்லாமல், உலக முதலாளித்துவத்தின் நெருக்கடி ஜனநாயகத்தின் உலக நெருக்கடியாக ஆகிவிடக்கூடாது என்பதையும் காக்க வேண்டும்." என்று அவர் எழுதியுள்ளார்.

இதுவரை "பணச் சந்தைகளின் உயர்மட்ட மேலாளர்கள், ஜனநாயகம் என்பது சாதாரண குடிமக்களின் விளையாட்டுத் திடல் என்றுதான் நடந்து கொண்டு வந்துள்ளனர்; ஏனெனில் உண்மையான முடிவுகள் பங்குச் சந்தை தளத்தில்தான் எடுக்கப்படுகின்றன." நிதிய முறைகளின் உறுதிப்பாட்டிற்கு மகத்தான நிதியம் என்பது இப்பொழுது கட்டாயம் "ஜனநாயக உறுதித் தன்மைக்கு பங்களிப்புதரக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் பிணைக்கப்பட வேண்டும்; அதுதான் ஜனநாயகக் கட்டமைப்புக்களில் நம்பிக்கையை பெருக்கும்"

Süddeutsche Zeitung ல் எழுதும் Ulrich Schäfer ம் அதிபரும் அவருடைய நிதி மந்திரியும் "இணை இல்லாத கொடுமைப்படுத்தும் கும்பலினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் போல் நடந்து கொண்டுள்ளனர்; இதில் நிதிய சந்தைகள் முழு அரசாங்கத்தையும் ஒட்டுமொத்த தேசத்தையும் பிணைக்கைதியாக எடுத்துக் கொண்டுள்ளது." நிதிய சந்தைகளை, 1977 இலையுதிர்காலத்தில் ஹெல்மூட் ஷ்மித்தின் அரசாங்கத்தை அச்சுறுத்திய RAF என்னும் செம்படை பிரிவின் பயங்கரவாதிகளுடன் ஒப்பிடும் அளவிற்கு அவர் சென்றுள்ளார்.

இந்தக் கருத்துக்கள் எதுவும் வரிப்பணத்தில் பில்லியன்களை வங்கிகளும் ஊகவணிகர்களும் எடுத்துக் கொள்ளுவதை அனுமதிக்கும் அரசாங்கத்தை எதிர்க்கவில்லை. இவை தோற்றத்தை நிலைநிறுத்தத்தான் அதிகம் அக்கறைப்படுகின்றன. இப்படி நீதி வேண்டும் என்று உரத்துக் கூவும் கோபமானது எந்த புதியபாதையையும் எடுத்துவிடக்கூடாது, இதற்குப் பொறுப்பான முதலாளித்துவ முறைக்கு எதிராக திரும்பிவிடக்கூடாது என்று உறுதிப்படுத்த விரும்புகின்றனர்.

1920கள், 1930களின் நிதிய, வங்கி நெருக்கடிகள் பற்றிய நினைவு இன்னும் ஜேர்மனியில் பசுமையாக உள்ளது. 1923ல் பெருமளவு உயர்ந்த பணவீக்கம் மத்தியதர வர்க்கத்தின் சேமிப்புக்களை அழித்து மில்லியன் கணக்கான தொழிலாளர்களையும் பெரும் துன்பத்தில் ஆழ்த்தியது; அதே நேரத்தில் Hugo Stinnes போன்ற சில தொழில்துறை அதிபர்கள் மில்லியன் கணக்கில் பணம் ஆக்கிக்கொண்டனர். அந்த ஆண்டு இலையுதிர்காலத்தில் ஜேர்மனி ஒரு சோசலிசப் புரட்சியின் விளிம்பில் இருந்தது; அது தோல்வியடைந்தமைக்கு காரணம் கம்யூனிஸ்ட் கட்சி போதுமான தயாரிப்பைக் செய்திருக்கவில்லை.

1929 மற்றும் 1931 வங்கி நெருக்கடிகள் இறுதியாக வைமார் குடியரசின் விதியை முடித்தன. சமீபத்திய Der Spigel பதிப்பில் உள்துறை மந்திரி Wolfgang Schäuble (CDU) இந்த வரலாற்று தொடர்பை நினைவு கூருகிறார். "மந்த நிலையில் விளைவுகள் அடால்ப் ஹிட்லரும், மறைமுகமாக இரண்டாம் உலகப் போர் மற்றும் அவுஸ்விற்சும் ஆகும்" என்று அவர் எழுதியுள்ளார்.

Schäuble, ப்ரூனிங்கின் அடித்தடத்தில் நடக்கத் தயாராக உள்ளார். இவருடைய மிக முக்கியமான பங்களிப்பு இந்த நெருக்கடியில் உள்நாட்டு செயற்பாடுகளுக்கு இராணுவத்தை பயன்படுத்துவதை சட்டபூர்வமாக்கும் முயற்சியாக இருந்தது; இந்த இலக்கை அவர் 15 ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறார். இன்றுவரை Schäuble அத்தகைய நடவடிக்கையை அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் சட்டமாக்குவதற்கு தேவையான மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை பெறுவதில் தோல்வியுற்றுள்ளார்; ஆனால் சமூக ஜனநாயகக் கட்சி இப்பொழுது அதன் ஒப்புதலை அடையாளம் காட்டியுள்ளது.

இது ஒரு தீவிர எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். சர்வதேச நிதிய நெருக்கடி முதலாளித்துவ முறையின் திவால்தன்மையை வெளிப்படுத்தியுள்ளது, இது உற்பத்தி சக்திகளின் தனிச்சொத்துடைமையையும் ஒரு சிறிய சிறுபான்மை பெரும்பான்மையான மக்களின் இழப்பில் வளங்கொழிக்கச்செய்து கொள்வதையும் அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. அவ்வாறு செய்கின்றனர். ஆனால் ஆளும் உயரடுக்கு அதன் சலுகைகளை தானே முன்வந்து கைவிடாது. மக்களை தாலாட்டித் தூங்க வைக்கும் நோக்கத்தில் முதலாளித்துவம் கட்டுப்படுத்தப்பட முடியும் மற்றும் நெறிப்படுத்தப்பட முடியும் என்ற போலித்தோற்றத்தை ஏற்படுத்துகிறது; அதே நேரத்தில் அது சமூக, அரசியல் எதிர்ப்பு வெளிப்பட்டால் வன்முறையைக் கையாண்டு அதை அடக்குவதற்கும் தயாராக உள்ளது.

See Also:

ஐரோப்பா: ஐரோப்பிய பங்குச் சந்தைகள் பாரிஸ் நிதிய உச்சிமாநாட்டை எடுத்து பெரும் வீழ்ச்சியுற்றன